Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துருக்கியை அடுத்தடுத்து உலுக்கும் நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 20ஆயிரத்தை எட்டுமென அச்சம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கியை அடுத்தடுத்து உலுக்கும் நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 20ஆயிரத்தை எட்டுமென அச்சம்!

துருக்கியை அடுத்தடுத்து உலுக்கும் நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 20ஆயிரத்தை எட்டுமென அச்சம்!

துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தை எட்டுமென சர்வதேச ஊடகங்கள் தலைப்பிட்டுள்ளன.

100 ஆண்டுகளுக்கும் மேலாக நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை தாக்கிய மிக வலிமையான நிலநடுக்கம், துருக்கியின் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில், 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

அத்துடன், தெற்கு துருக்கியில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருந்து 4.0 அல்லது அதற்கும் அதிகமான அளவில் 100 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது

இன்றைய தினம், சமீபத்திய புதுப்பிப்பில் மத்திய துருக்கி பிராந்தியத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் குறைந்தது 1,293 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3,411 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசாங்கமும் மீட்புப் பணியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் டார்டஸ் மாகாணங்களில் 593 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1,411 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிரியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வடமேற்கில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், குறைந்தது 700 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஒயிட் ஹெல்மெட்ஸ் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

இதேபோல, துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2,316 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 13,293 பேர் காயமடைந்துள்ளதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது.
இதுவரை 7,340 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அவசரகால சேவைகள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் ஏழு நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளார், இதன் போது நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அதன் தூதரகங்களில் துருக்கிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்கும்.

துருக்கியின் நிவாரண முயற்சிகளுக்கு உதவ சீனா முதல் தவணையாக 5.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசர உதவியாக வழங்கியுள்ளது. சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம் துருக்கி மற்றும் சிரியாவுக்கு தலா 200,000 டொலர்கள் அவசர உதவி அளிக்கும்.

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து தலைவர்கள் இணைந்து மொத்தம் 11.5 மில்லியன் டொலர்கள் உதவி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

இதுதவிர, துருக்கி மற்றும் சிரியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஈராக் மற்றும் ஈரானில் இருந்து உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மீட்பு பணிகளுக்காக, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலுள்ள பேரிடர் மீட்புக் குழுக்கள் துருக்கி விரைந்துள்ளன.
 
https://athavannews.com/2023/1323405

  • Replies 58
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே பணக்கார அரபு நாடுகள்????

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

எங்கே பணக்கார அரபு நாடுகள்????

சுவீடனில்  குர்ரான் எரித்ததிற்கு முதலில் துள்ளியது துருக்கி ,சிரியா...அப்ப அல்லாவும் பொய்யா குமாரு...

இப்ப நிறைசனம் அல்லாவிடம் போயிட்டினம் ..ஆழ்ந்த அனுதாபங்கள்...ஆனாலும் இவை அந்த நேரம் கதைத்த கதை வேறை லெவெல்..எந்த சயத்தைவிடவும் நாம்தான் பெரிது..அல்லாதான் பெரிது..இப்ப..கதை வேறை..

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விசுகு said:

எங்கே பணக்கார அரபு நாடுகள்????

நீங்கள் கேட்பது நியாயம்தான். ஆனாலும் ஆயுதங்களை மட்டும்தான் மேற்கு கொடுக்க வேண்டும் என்பதல்ல. உதவியும் செய்யலாம். 

சிரியாவுக்கு உதவ வேண்டுமானால் அந்த நாடு மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார தடையே போதுமானது. அனுதாபம் தெரிவிப்பது மட்டும் போதாது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித குலத்திற்கான அழிவுகளை நான் ஆதரிப்பதில்லை.மனித அழிவுகளை பார்த்து புழகாங்கிதம் அடைபவனும் அல்ல. ஆனாலும் துருக்கி அண்டை நாடுகளுக்கு செய்த  அழிவு அஜாரகங்களை கூட்டி கழித்து பார்க்கும் போது இதுவும் ஒருவகை இயற்கையின் சீற்றம் தான்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
50 minutes ago, Kapithan said:

நீங்கள் கேட்பது நியாயம்தான். ஆனாலும் ஆயுதங்களை மட்டும்தான் மேற்கு கொடுக்க வேண்டும் என்பதல்ல. உதவியும் செய்யலாம். 

சிரியாவுக்கு உதவ வேண்டுமானால் அந்த நாடு மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார தடையே போதுமானது. அனுதாபம் தெரிவிப்பது மட்டும் போதாது. 

மேற்குலகினர் மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வர்....அதில் தம் நலனின் மட்டுமே  கண்ணாய் இருப்பர் :face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

மேற்குலகினர் மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வர்....அதில் தம் நலனின் மட்டுமே  கண்ணாய் இருப்பர் :face_with_tears_of_joy:

அவர்களின் நலன் மட்டுமே. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அவர்களின் நலன் மட்டுமே. ☹️

இவ்வுலகில் யார் அவ்வாறு இல்லை சகோ. இதில் எமது நன்மைகளும் அடக்கம். அப்பனின் சொத்து வேண்டும் ஆனால் பழிபாவம் வேண்டாம் என்பது போல உள்ளது உங்கள் கருத்து. கருத்து தானே என்று கண்டவற்றை யும் கொட்டமுடியாது அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

இவ்வுலகில் யார் அவ்வாறு இல்லை சகோ. இதில் எமது நன்மைகளும் அடக்கம். அப்பனின் சொத்து வேண்டும் ஆனால் பழிபாவம் வேண்டாம் என்பது போல உள்ளது உங்கள் கருத்து. கருத்து தானே என்று கண்டவற்றை யும் கொட்டமுடியாது அல்லவா?

இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க என்றுதானே கூறுகிறோம்? 

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனுக்காக அழும் மனிதாபிமானக் காவலர்களில்  அனேகர் இங்கே கொல்லப்பட்ட மக்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீரையும் விடுவதைக்  காணக்கிடைக்கவில்லை. 

விரதமோ? 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

உக்ரேனுக்காக அழும் மனிதாபிமானக் காவலர்களில்  அனேகர் இங்கே கொல்லப்பட்ட மக்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீரையும் விடுவதைக்  காணக்கிடைக்கவில்லை. 

விரதமோ? 

இங்கே தான் நாம்  போருக்கும் இயற்கை  அழிவுக்குமான வித்தியாசத்தை  புரியாதவர்களாக  நடிக்கிறோம்?

முள்ளிவாய்க்காலை  நிறுத்தியிருக்கமுடியும் என்பது  தானே எமது கவலை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, Kapithan said:

உக்ரேனுக்காக அழும் மனிதாபிமானக் காவலர்களில்  அனேகர் இங்கே கொல்லப்பட்ட மக்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீரையும் விடுவதைக்  காணக்கிடைக்கவில்லை. 

விரதமோ? 

முள்ளிவாய்க்கால் அழிவை நிறுத்த முடியாதவர்கள் உக்ரேன் அழிவை நிறுத்துவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இங்கே தான் நாம்  போருக்கும் இயற்கை  அழிவுக்குமான வித்தியாசத்தை  புரியாதவர்களாக  நடிக்கிறோம்?

முள்ளிவாய்க்காலை  நிறுத்தியிருக்கமுடியும் என்பது  தானே எமது கவலை?

மரணங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கு மனிதாபிமானம் மட்டும் போதும். 

2 hours ago, குமாரசாமி said:

முள்ளிவாய்க்கால் அழிவை நிறுத்த முடியாதவர்கள் உக்ரேன் அழிவை நிறுத்துவார்களா?

அழிவை ஏற்படுத்தியவர்களே அதை நிறுத்துவார்களா ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kapithan said:

அழிவை ஏற்படுத்தியவர்களே அதை நிறுத்துவார்களா ??

இதே கேள்வியைத்தான் அன்று தொடக்கம்  பல திரிகளில்,பல அரசியல் மற்றும்  நாடுகள் மீதான அத்துமீறல்களில் கேட்கப்பட்டது.

ஆனால்.....

 :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இதே கேள்வியைத்தான் அன்று தொடக்கம்  பல திரிகளில்,பல அரசியல் மற்றும்  நாடுகள் மீதான அத்துமீறல்களில் கேட்கப்பட்டது.

ஆனால்.....

 :rolling_on_the_floor_laughing:

கண்ணை மூடிக் கொண்டு பாலை குடித்த பூனையின் நிலையில் பலர். ✍️🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

மரணங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கு மனிதாபிமானம் மட்டும் போதும். 

அழிவை ஏற்படுத்தியவர்களே அதை நிறுத்துவார்களா ??

ஒரு இறைமையுள்ள நாடு மீது போர் கொடுத்ததை கட்டுரைகள் சமர்ப்பித்து வாதாட்டும் நடாத்தும் உங்களுக்கு மனிதாபிமானத்தை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. வேசம் கலைந்து கனகாலமாச்சே. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூகம்பத்தால் கொல்லப்பட்டவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பார்த்து கவலைப்படாதவர்கள் எவரும் இல்லை.

அதற்க்காக எல்லோரும் கொடுக்கும் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்றும் இல்லையே. அனுதாபம் என்று எழுதிக்காட்டித்தான் மனிதாபிமானத்தைக் காட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பது வெறும் அற்ப புத்தி!

என்னுடன் பணிபுரியும் துருக்கி நண்பனின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியே ரென்ற்றுக்குள் படுத்துறங்குகின்றனர். பெரிய உதவிகள் இன்னும் கிட்டவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு மனித அழிவுகள் முக்கியமல்ல. அது எப்படிப்பட்ட அரசியல் மனித அழிவுகள் என்பதே முக்கியம்.
இயற்கை அனர்த்தங்களினால் வரும் மனித அழிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட மாட்டாது. அது ஐம்பதினாயிரத்தையும் தாண்டினாலும் பரவாயில்லை. அல்லது நாம் விரும்பாத நாடுகளில் நடந்தாலும் கண்டு கொள்ள மாட்டோம்.

உக்ரேன் என்றால் மட்டும் உள்ளமெல்லாம் கொதிக்கும்.

1 hour ago, தமிழ் சிறி said:

கண்ணை மூடிக் கொண்டு பாலை குடித்த பூனையின் நிலையில் பலர். ✍️🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஒரு இறைமையுள்ள நாடு மீது போர் கொடுத்ததை கட்டுரைகள் சமர்ப்பித்து வாதாட்டும் நடாத்தும் உங்களுக்கு மனிதாபிமானத்தை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. வேசம் கலைந்து கனகாலமாச்சே. 

இன்றுவரை கணை மூடிக்கொண்டா இருந்தீர்கள்?

உங்கள் கண்களுக்கு முன்னர்தான் ஈராக், லிபியா, சிரியா மீதான அமெரிக்க ஆக்கிரMப்பும் படையெடுப்பும் நிகழ்ந்தன, நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இப்போதும் சிரியா அமெரிக்கப் படையினரால் அதன் வளங்கள் சூறையாடப்படுகின்ற. ஈரான், கியூபா, வடகொரியா, வெனிசுவேலா, சிரியா போன்ற நாடுகளின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து அந்த நாடுகளை பட்டினிபோட்டு வைத்திருக்கின்றது. இந்த லட்சணத்தில் இறைமை பற்றியும் மனிதாபிமானம் தொடர்பாகவும் US +EU மனிதாபிமானிகள் பாடமெடுக்கின்றனர். 😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பூகம்பத்தால் கொல்லப்பட்டவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பார்த்து கவலைப்படாதவர்கள் எவரும் இல்லை.

அதற்க்காக எல்லோரும் கொடுக்கும் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்றும் இல்லையே. அனுதாபம் என்று எழுதிக்காட்டித்தான் மனிதாபிமானத்தைக் காட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பது வெறும் அற்ப புத்தி!

என்னுடன் பணிபுரியும் துருக்கி நண்பனின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியே ரென்ற்றுக்குள் படுத்துறங்குகின்றனர். பெரிய உதவிகள் இன்னும் கிட்டவில்லை.

மதகுகளின் மேலிருந்து விசிலடிக்கும் ஆட்களைப்போல இருக்கிறது உங்களின் எழுத்துக்கள். 🤣

எல்லோருக்கும் புதிய புதிய பெயர்கள்  வைக்கிறீர்களே முன்னர் மகப்பேற்று மருத்துவமனையில் தாதியாக வேலை பார்த்தீர்களோ 🤣

செலன்ஸ்க்கியோ மாமா என்கிறார், காகிதப்புலியோ துரோகி என்கிறார், விசுகரோ அரச பணத்தில் வாழ்ந்துகொண்டு வேலைக்குப் போவதில்லை என்கிறார. நீவீரோ அற்ப புத்தியுள்ளவர் என்கிறீர். 

 எல்லோரும் என்ன  ஊரில் பூவரசு மரத்திற்குக் கீழிருந்து போவோர் வருவோருக்கு பட்டப்பெயர் வைத்து கூக்காட்டியிருப்பீர்களோ, முற்பிறவியில் 🤣

எல்லோருக்கும் US + EU இராச(வெள்ளை) விசுவாசம் கூடிப்போச்சு 🤣

1 hour ago, குமாரசாமி said:

இங்கு மனித அழிவுகள் முக்கியமல்ல. அது எப்படிப்பட்ட அரசியல் மனித அழிவுகள் என்பதே முக்கியம்.
இயற்கை அனர்த்தங்களினால் வரும் மனித அழிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட மாட்டாது. அது ஐம்பதினாயிரத்தையும் தாண்டினாலும் பரவாயில்லை. அல்லது நாம் விரும்பாத நாடுகளில் நடந்தாலும் கண்டு கொள்ள மாட்டோம்.

உக்ரேன் என்றால் மட்டும் உள்ளமெல்லாம் கொதிக்கும்.

இராச விசுவாசமாக்கும் 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

மதகுகளின் மேலிருந்து விசிலடிக்கும் ஆட்களைப்போல இருக்கிறது உங்களின் எழுத்துக்கள். 🤣

@Kapithan, நீங்களும் இன்னும் சில புட்டின் விசுவாசிகளும் இந்தத் திரியில் வைத்த கருத்துக்களில் பாவித்த முகக்குறிகளில் இருந்தே தெரிகின்றது நீங்கள் எல்லாம் எவ்வளவு தூரம் மக்கள் அழிவுகளுக்காக கண்ணீர் சிந்துபவர்கள் என்று.

தகப்பனின் மரணச் செய்தி வரும் வேளையிலும் கஸ்தூரிபாயுடன் படுக்கப்போன காந்தி போலத்தான் நீங்களும். போய் துக்கத்தைக் கொண்டாடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, கிருபன் said:

@Kapithan, நீங்களும் இன்னும் சில புட்டின் விசுவாசிகளும் இந்தத் திரியில் வைத்த கருத்துக்களில் பாவித்த முகக்குறிகளில் இருந்தே தெரிகின்றது நீங்கள் எல்லாம் எவ்வளவு தூரம் மக்கள் அழிவுகளுக்காக கண்ணீர் சிந்துபவர்கள் என்று.

தகப்பனின் மரணச் செய்தி வரும் வேளையிலும் கஸ்தூரிபாயுடன் படுக்கப்போன காந்தி போலத்தான் நீங்களும். போய் துக்கத்தைக் கொண்டாடுங்கள்.

70 வருடங்களுக்கு மேலாக கண்ணீர் சிந்துபவர்களுக்கு யார் கண்ணீர் சிந்தினார்கள்?

அழுத கண்ணீரும் கடன் தான்...எனக்காக எவன் கவலைப்படுகின்றானோ அவனுக்காக மட்டுமே நான் கவலைப்பட முடியும்.

உக்ரேனுக்காக மட்டும் ஞானோதய கண்ணீர் வடிக்க எல்லோரும் கேணையர்கள் அல்ல...

  • கருத்துக்கள உறவுகள்

சிரியா 3000, துருக்கி 13000 இறப்புகள் இப்போ வரைக்கும். மேலும் இடிபாடுகளுக்குள் மக்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

இன்றுவரை கணை மூடிக்கொண்டா இருந்தீர்கள்?

உங்கள் கண்களுக்கு முன்னர்தான் ஈராக், லிபியா, சிரியா மீதான அமெரிக்க ஆக்கிரMப்பும் படையெடுப்பும் நிகழ்ந்தன, நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இப்போதும் சிரியா அமெரிக்கப் படையினரால் அதன் வளங்கள் சூறையாடப்படுகின்ற. ஈரான், கியூபா, வடகொரியா, வெனிசுவேலா, சிரியா போன்ற நாடுகளின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து அந்த நாடுகளை பட்டினிபோட்டு வைத்திருக்கின்றது. இந்த லட்சணத்தில் இறைமை பற்றியும் மனிதாபிமானம் தொடர்பாகவும் US +EU மனிதாபிமானிகள் பாடமெடுக்கின்றனர். 😀

அப்பாடா தப்பித்தேன்

உங்கள் முருகன் சூரனை வதை செய்து கொன்றபோது எங்கே போனது உங்கள் மனிதாபிமானம் என்று கேட்காமல் விட்டதால்???😷

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அப்பாடா தப்பித்தேன்

உங்கள் முருகன் சூரனை வதை செய்து கொன்றபோது எங்கே போனது உங்கள் மனிதாபிமானம் என்று கேட்காமல் விட்டதால்???😷

மேலே 👆சிரிப்புக் குறி எனது. 🤣

சிரியாவும், கியூபாவும், வெனிசுவேலா, வடகொரியா, ஈராக், ஈரான், லிபியா எல்லாமே உங்களுக்கு பழைய கதையாகிவிட்டதுபோல.. ☹️

உக்ரேனில் சண்டைக்காக மேற்குலகு பில்லியனில் அள்ளி அள்ளிக் கொடுக்கிறது. 

துருக்கிக்கும் சுரியாவுக்கும் கிள்ளியாவது கொடுத்தார்களா ? மனிதாபிமானத்துக்காக கண்ணீர் விடுபவர்கள் பதில் கூறுங்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.