Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அய்ரோப்பாவில் பெரியார் இயக்கம் - வரலாற்றுத் தேவை

Featured Replies

ஐரோப்பாவில் செய்ய வேண்டிய நிறையப் பணிகள் இருக்கின்றன. அதிலே தன்னால் இயன்றதை பெரியார் இயக்கம் செய்யும் என்று நம்புகிறேன்.

அதற்காக பெரியார் கையாண்ட அதே போராட்ட வடிவங்களைத்தான் அவர்களும் கையாள வேண்டும் என்று கட்டாயம் இல்லை.

உங்களின் இந்த மாற்றம் மகிழ்ச்சி அளிக்கின்றது.

  • Replies 76
  • Views 9.8k
  • Created
  • Last Reply

நான் நினைக்கவில்லை சபேசன். தென்னிந்தியாவில் தோன்றிய திராவிட இயக்கப் பரப்புரை + செயல் வடிவத்தைத்தான் பிரான்சில் உரூவாகியுள்ள பெரியார் இயக்கமும் கையாள்கிறது. இன்னமும், வெங்காயம், மந்தைகள் என்பதைத் தான் உச்சரிக்கிறார்கள். பெரியார் சொன்னார் சரி. பெரியாரை இமிரேற் செய்வது சுயசிந்தனையின் அடிப்படையிலான செயற்பாடா? ஒரு பிள்ளையை ஒருக்கா அடிச்சா அதுக்கு பயம் இருக்கும். இரண்டு தரம் அடிச்சால் அப்பவும் பயம் கொஞ்சம் இருக்கும். தொடர்ந்து அடிச்சுக்கொண்டிருந்தால் அது பழக்கப்பட்டுவிடும். சுரணையற்றுவிடும். அதற்காக ஐரோப்பிய புலம்பெயர் தமிழர்களுக்கு சுரணை இல்லையென்று நான் சொல்வதாக யாரும் கருதிவிடக்கூடாது. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதற்குப் பெரியாரைப் பற்றிய படங்களை எடுத்து சொறணை வரச் செய்வமா இளைஞன்?

அதற்குப் பெரியாரைப் பற்றிய படங்களை எடுத்து சொறணை வரச் செய்வமா இளைஞன்?

மதனராசாவுக்கு சுரணை இருக்கிறது :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதனராசாவிற்கு இருக்கின்றது சொறணை

அது தெரியாவிட்டால் நீ அறணை

சாமான் வைக்க பாவிக்கின்ற இடம் பறணை

நீ கொஞ்சம் மூடிக் கொண்டு இ(ரு)ரணை

என்ன டீஆர் மாதிரி வருதா?

புலம்பெயர்ந்த

இலங்கைத் தமிழரின்

பண்பாட்டுத் தனித்துவம் :

சில அவதானிப்புகள்

கலாநிதி. வி. நித்தியானந்தம்

மஸ்லி பல்கலைக்கழகம்

அல்பனி வளாகம்.

ஆக்லாந்து, நியூசிலாந்து.

கொழும்புத் தமிழ்;ச் சங்கம்

2002

//

பண்பாடு தொடர்பாக அமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் மதம்சார் அலுவல்கள், ஒப்பீட்டு ரீதியாகக் கூடியளவு வெற்றியளித்துள்ளன என்றே கொள்ளலாம். அதற்கான காரணங்கள் தெளிவானவை. சுருக்கமாகக் கூறுவதாயின் “மதம் ஓர் அபின்” என்ற மாக்சின் கூற்றையே நினைவு கூர வேண்டும். மரபு ரீதியாகவே தமிழ் மக்கள் தம் மதங்களின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்கள் என்பது மாத்திரமன்றி, அவசர கண்காணிப்புக்குட்பட வேண்டிய பல சமூக ரீதியான பிரச்சினைகளின் மத்தியிலும் மத அலுவல்களின் பால் அணிதிரண்டு அவற்றுக்கு மேலதிக முக்கியத்துவமளிக்கக் கூடியவர்களென்பதும் கருத்திற் கொள்ளத்தக்கது. புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் இந்தத் தன்மை மேலோங்கியுள்ளமை எவரது கவத்தையும் ஈர்க்கக் கூடியதொன்றாகும். அதனால், நாம் முன் கூறிய தமழ்மொழி பற்றிய வரையறையின் மத்தியிலும் மத வைபவங்களைக் கருவாகக் கொண்ட விழாக்களும். கொண்டாட்;டங்களும் அவற்றை இடப்படுத்தக் கூடியவகையில் ஆலயங்களை நிர்மாணிப்பதும் புலம் பெயர் தமிழரின் பண்பாட்டுத் தனித்துவத்தின் பிரதான அம்சங்களாகத் திகழ்கின்றன.//

//சமூக பெறுமானங்களைப் பாதிக்கக் கூடிய ஒரு முக்கிய அம்சமாகச் சுட்டப்படத்தக்கது பெறுமானங்களுக்கான அடிப்படைத் தர்க்க ரீதியான அணுகுமுறையாக அமைவதாகும். அதன் மூலம் தமிழர் பண்பாட்டிற் குறிப்பாக மதத்தின் வழி இடம் பிடித்துக் கொண்டிருக்கும் (மூட) நம்பிக்கை களின் பாற்பட்ட இயல்புகளைத் திரும்பவும் பரீட்சித்து அவற்றில் களையவேண்டியவற்றைக் களைந்து தக்கவைக்க வேண்டியவற்றைத் தக்க வைக்கும் ஒரு செய்முறை தானாகவே இயங்க முற்படுமெனலாம். அதன் வழி தமிழர் பண்பாட்டின் சாபக்கேடாக நீண்ட காலமாகவே இருந்து வரும் சாதி முறைமை படிப்படியாகப் பலமிழப்பதற்கு வாய்ப்புகள் பெருகுமென எதிர்பார்க்கலாம். இதே அலைவரிசையில் இன்னொரு முக்கிய மாற்றமாகக் கணிக்கப்படக் கூடியது (தமிழ்ப்) பெண்களின் நிலை பற்றியதாகும். புலம்பெயர் தமிழர் பண்பாட்டில் பெண்களின் நிலை ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாகவோ அதற்கும் மேலாகவோ கூடச் சென்றிருப்பதாகக் கூறலாம். எவ்வகையில் நோக்கினும் இது தனித்துவம் வாய்ந்தது மாத்திரமன்றிப் பெரிதும் புரட்சிகரத் தன்மை பொருந்தியதொன்றுமாகும். இதனோடு கூடவே சமூக ரீதியாகப் பெண்களைப் பிணைத்து வைத்துள்ள சீதன முறைமை போன்றனவும் படிப்படியாக அற்றுப் போகுமென எதிர்பார்க்கலாம். இவ்வாறு கூறுமிடத்துத் தமிழ்ப் பண்பாட்டின் இத்தகைய சில சாபக்கேடுகள் புலம்பெயர் களங்களுக்கும் பரவியுள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை. எனினும், புலம் பெயர் மட்டத்தில் இரண்டாவது தலைமுறையொன்று உருவெடுக்கும் போது இவை பெருமளவுக்கு வலுவிழந்து போய்விடு மெனலாம். அதே நேரத்தில் ஏனைய சமூகங்களுடனான கலப்புத் திருமணங்கள் அதிகரிப்பதற்கும் தமிழ்ச் சமூகங்களுடனான கலப்புத் திருமணங்கள் அதிகரிப்பதற்கும் தமிழ்ச் சமூகத்தின் து}ய்மை நிலை பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புண்டு. //

//இதேபோன்று கல்வி-தொழில்நுட்ப மட்டத்திலும் பல முன்னேற்றகரமான மாற்றங்களை அவதானிக்கலாம். இவையும் சமூகப் பெறுமானங்களின் மீது செல்வாக்குச் செலுத்துகின்றன. தமிழ்மக்களின் மரபு ரீதியாக அக்கறை கொள்ளும் மருத்துவம், பொறியியல் துறைகளுக்குச் சார்பாகவும் அவற்றுக்குப் புறம்பாகவும் இந்த மாற்றங்களை இனம் காணலாம். அவற்றுட் குறிப்பிட்டுக் கூறுவதாயின் கணினித் துறையில் நம்மவர் ஈட்டியுள்ள வியத்தகு முன்னேற்றங்களைச் சுட்டலாம். இவை வெகுசனத் தொடர்புச் சாதனங்களின் வழி தமிழர் பண்பாட்;டைச் செல்வாக்கினுக்குப்பட்டுத்த

அடக் கடவுளே! :D

யோனி அப்ப தமிழில்லையா? அதுவும் அப்ப கடன் வாங்கினதா? B)

அதேதான் எனது சந்தேகமும்... யாராவது சமஸ்கிருதம் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள சொல்கிறார்கள்...

இவை தொடர்பில் உலகில் மாறுபாடான கருத்து நிலைகள் இருக்கின்றன. அதை விளக்க முற்படுவது.. இந்தத் தலைப்புக்குப் பொருத்தமாக இருக்குமா என்ற கேள்வியை மட்டுமன்றி.. நாமிருவர் விளங்கிக் கொள்வதால்.. என்ன பயன்...??! பலர் படிப்பார்கள்.. ஆனால் விளங்கிக் கொள்ள முனைவரா..??! :rolleyes:

எனவே இந்த இணைப்பை கொஞ்சம் படித்து.. உங்களின் சிந்தனையோடு அது ஒருமிக்கும் இடங்களை சுட்டிக்காட்டுங்கள். மாறுபடும் இடங்களை ஏன் என்று விளக்குங்கள்..!

நெடுக்ஸ்...

தற்போது நாம் விவாதிக்கும் விடயம் "கடவுள்", "சமயம்" என்பதாகி அதில் "உண்மை" இருக்கிறதா என்று வந்துநிற்கிறோம். தலைப்பில் இருந்து வேறுபடவில்லை. ஆனாலும் இந்த பிரத்தியேகமான விவாத ஓட்டத்தினுள் மற்றவர்கள் இணைந்துகொள்ளவில்லை என்பதை காண்கிறேன். கடவுள், மதம் என்பவற்றை அவற்றின் மேற்பரப்பில் தூசுதட்டி ஒருமுறை பார்ப்பதும், மீண்டும் சிறிது காலத்தின் பின் அதையே திரும்பவும் செய்வதைத்தான் நான் விவாதங்களில் கண்டிருக்கிறேன். இந்த கடவுள், சமயம் என்பனவற்றில் எமது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால், "உண்மை" இருக்கிறதா என்பதை முழுமூச்சாக, அதன் ஆணிவேர் வரை சென்று பார்த்துவிட்டால் இவற்றை பற்றி திரும்பத் திரும்ப விவாதிக்க வேண்டிய தேவை எதுவும் இருக்கப் போவதில்லை. அல்லதுபோனால் இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு சந்ததி சந்ததியாக இந்த விவாதங்கள் தொடரும்.

மற்றவர்கள் நான் எழுதுவதை விளங்கிக் கொள்வதும், அதை விட்டெறிந்து விடுவதும் அவரவர் சார்ந்தது. அது எனக்கு சந்தோசத்தையோ அல்லது வருத்தத்தையோ தரப்போவதில்லை. ஆனால் எனது கேள்விகள் அவர்கள் மனதில் சலனத்தை ஏற்படுத்துமாக இருந்தால் தாங்களாகவே சிந்திக்க தொடங்குவார்கள். அதன்பின் எந்த எழுத்தும் தேவையிராது.

மற்றது, நீங்கள் தந்த இணைய பக்கத்தில் absolute truth என வரையறை செய்ய முனைவதாக தான் தெரிகிறது. "உண்மை" என்பதை வரையறுக்க முடியாது. வரையறை என்பதே பகுப்பாய்வுகளின் முடிவாக வருவது. பகுப்பாய்வு பிரிவுகளினூடு வருவது. எங்கு பிரிவுகள் தோன்றுமோ அங்கெல்லாம் முரண்களும் தோன்றும். எனவே வரையறைகளும், பகுப்பாய்வுகளும் உண்மையை தரிசிக்க செய்யா. பாருங்கள், "உண்மையை" காண வெளிக்கிட்ட எமது முன்னோர், அதற்காக "வழிமுறை"களை வகுத்த பயனே மதம் என்றாகிறது. எனவே அது முரண்களையும் கூடவே சேர்த்து வைத்திருப்பது தவிர்க்க முடியாதது. முரண்கள் இறுதியில் கோபம், பொறாமை, போர் என்பதில் முடிகிறது. மதங்கள் எவ்வளவுதான் அன்பை பற்றி போதித்தாலும் அதன் உள்ளார்ந்த பண்பு (intrinsic property) முரண்களாகவே இருக்கும். இதை விலக்க முடியாது.

Edited by Eelathirumagan

கடவுள் இருக்கின்றாரா இல்லையா? இந்த கேள்வியே அப்பாற்பட்ட ஒன்று. கடவுள். கட- உள். உள்ளே செல். அறிதல். அறிவைப்பெருக்குதல். என்றுதான் தொன்மையான மார்கம். இதையேதான் ஒரு அறிஞர் "அறிதலே கடந்து செல்லுதல்" என்று சொன்னார்.

இந்த அடிப்படையில் அகத்திலும் புறத்திலும் தேடல்களை செய்வது என்று பொருள். உடலில் உள்ளேயும் வெளியேயும் என்பது அகம் மற்றும் புறம்.

இது ஒரு ஆராய்ச்சி. தமிழரின் பூர்வீகம் ஒரு ஆராய்சி மார்கத்தை கொண்ட ஆன்மீகம். இதன் விரிவாக்கம் பல்கலைக்கழகங்களாக இருந்திருக்க வேண்டியது மதமாக மாறிவிட்டது தூரதிஷ்டம்.

தேடலின் விழைவால் உயிரே கடவுள் உடலே ஆலயம் என்று ஒரு முடிவுக்கு வந்து அதை பேணிப் பாதுகாப்பதற்கான செயல்பாடுகளில் நகர்வதே தொடர்ச்சியானது.

இயற்கை போற்றுதல்குரியதானது. நீர் நிலம் காற்று ஆகாயம் நெருப்பு. வாழ்வாதார சக்திகள்- பிற்பாடு இவைகள் முறையே பகவான்களாகவும் உருவங்களாகவும் மாறிவிட்டது.

இந்த இயற்கை சக்திகளை வணங்குதல்பண்பாடானது.

கடந்து உள்ளே செல்லும் போது உயிராகிய கடவுளை கண்டனர். அது எல்லோரிடமும் உள்ளதையும் கண்டனர்.

சைவத்தில் திழைத்த வள்ளலார் பின் சித்தர் மார்கத்தில் சென்று "தன்னுயிரைப்போல் பிற உயிரையும் நேசித்தல் கடவுள் மார்கம் என்று சன்மார்க சங்கத்தை உருவாக்கினார்" அப்போது நாவலர் உட்பட பலரும் அதை எதிர்த்தனர். காரணம் கடவுள் கரு மாறி உரு மாறி சாதியம் புகுந்து புராணங்கள் புகுந்து ரொம்பக்காலம் ஆகிவிட்டிருந்தது.

மனிதனை மனிதன் நேசிக்கும் கலையே எமது தொன்மையான ஆன்மீகம். அது வே உலகத்தில் மிகவும் புனிதமான ஆன்மீகம். தமிழரின் சொத்து.

மதம் என்ற மாயய்குள் தொன்மையான ஆன்மீகம் தனது சுயத்தை இழந்து மனிதனை மனிதன் ஒடுக்கும் கருவியாக மாறி தீண்டாமை என்னும் தீ பரவிய பின் பல நூறாண்டுகள் ஒடிவிட்டன.

பெரியரின் முன்னெடுப்புகளுக்கு இங்கே எதிர்பிருப்பதில் வியப்பெதுவும் இல்லை வள்ளலாரை கூட நாவலர் எதிர்தது வரலாறு. சிலர் நாவலரில் பழியை போட்டு தப்பித்து விடுகின்றனர். நாவலர் ஒரு சமூக இருப்பின் அடயாளம். அவரின் செயற்பாடுகள் ஒரு தனி மனித நடவடிக்கை இல்லை. அவர் வாழ்ந்த காலத்தின் சமூக இறுக்கம் அவரை சைவம் என்ற விசயத்தில் கடும்போக்கை கொடுக்க காரணமானது.

பெரியர் மத இறுக்கத்தில் இருந்து சமத்துவம் சுய மரியாதையை வேண்டி போராடினார். கடவுள் சிலை உடைத்தார். கடவுள் என்ற சொல் தாள்தப்பட்ட மக்கள் உளவியல் ரீதயாக ஒடுக்கு முறையை ஏற்றுக்கொள்ள வைத்தது. சிலை உடைப்பு அதற்கு ஒரு மாற்றீடு.

ஈழத்தில் சாதியம் தொழில் ரீதியான அடிப்படையை கொண்டது. இந்தியாவில் மனுதர்ம ரீதியான கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டது. ஈழத்தில் தொழில் மாறும் போது சாதியம் வலுவிளக்கும் இந்தியாவில் அப்படி இல்லை. இந்தியாவில் சாதி சான்றிதழ் நடைமுறை உண்டு. வகுப்பு பிரிவுகள் உண்டு. இவைகள் பற்றி அதிகம் எழுதவில்லை ஆனால் ஈழத்து பிரச்சனையுடன் இந்திய பிரச்சனையை கையாழ்வது சிக்கலானது என்பதை உணர வேண்டும்.

இந்துத்துவம் ஈழத்துச் சைவம் இரண்டுக்கும் பாரிய இடைவெளி உண்டு. கடவுள்கள் ஒன்று என்பதல்ல. மதத்தின் பேரிலான ஒடுக்கு முறை வித்தியாசமானது. அந்த அடிப்படையில் பெரியார் காலத்தின் தேவை ஆகின்றார். வள்ளலாரை நாவலர் கடுமையாக எதிர்க வேண்டியதும் ஈழத்து மனோ நிலையுடன் வள்ளலார் போதனைகளை அணுகியதே ஆகும்.

பெரியர் மதத்தின் பேரால் ஒடுக்கப்பட்ட மக்களை நேசித்தார். அதற்காக மதத்தை எதிர்தார். தொன்மையான கடவுள் என்ற பொருளில் பெரியார் குற்றவாளி அல்ல. வள்ளலார் குற்றவாளி அல்ல.

நாவலர் வள்ளலார் பெரியார் போன்றோரின் உயிரும் இந்த களத்தில் விவாதிப்பவர்களின் உயிரும் கடவுள்.

பெரியார் எதிப்பதும் அதை மத பற்று கொண்டவர்கள் எதிர்பதும் முடிவில் சில மாற்றங்களை தரலாம் ஆனால் விடுதலையை மதத்துக்கும் மத எதிர்பிற்கும் தராது.

எல்லோரும் முறண்பாடில்லாமல் ஒருவரை ஒருவர் நேசிக்க ஒரு வளி உண்டு அது தான் சித்தர் வழி. தொன்மையான தோற்றப்பட்டை கொண்டது. "கடவுள்"

விவாதங்களுக்கும் முறண்பாடுகளுக்கும் அப்பால் ரொம்ப தொலைவில் உண்மையான பொருள் இருப்பதாக தோன்றினாலும் உண்மையில் உனக்குள்ளேதான் உள்ளது.

சிவன் கைலாயத்தில் இல்லை உன்சீவன் தான் சிவன். இதை உணர மதம் தேவையில்லை. மத எதிர்பு தேவையில்லை.

நீ ஆலயமாக உன்னை பார்கின்றாய். ஆலயத்தினுள் உன் உயிரை பார்கின்றாய்.

இதை உணர்ந்தால் யார் சிலை உடைத்தால் என்ன யார் புரியாத பாசையில் புசை செய்தால் என்ன யார் ஒரு நாளில் குண்டலினியை எழுப்பி கூத்தாட வைத்தால் என்ன.

தௌ;ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்- திருமூலர்

கடவுள் விடை கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்...

தற்போது நாம் விவாதிக்கும் விடயம் "கடவுள்", "சமயம்" என்பதாகி அதில் "உண்மை" இருக்கிறதா என்று வந்துநிற்கிறோம். தலைப்பில் இருந்து வேறுபடவில்லை. ஆனாலும் இந்த பிரத்தியேகமான விவாத ஓட்டத்தினுள் மற்றவர்கள் இணைந்துகொள்ளவில்லை என்பதை காண்கிறேன். கடவுள், மதம் என்பவற்றை அவற்றின் மேற்பரப்பில் தூசுதட்டி ஒருமுறை பார்ப்பதும், மீண்டும் சிறிது காலத்தின் பின் அதையே திரும்பவும் செய்வதைத்தான் நான் விவாதங்களில் கண்டிருக்கிறேன். இந்த கடவுள், சமயம் என்பனவற்றில் எமது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால், "உண்மை" இருக்கிறதா என்பதை முழுமூச்சாக, அதன் ஆணிவேர் வரை சென்று பார்த்துவிட்டால் இவற்றை பற்றி திரும்பத் திரும்ப விவாதிக்க வேண்டிய தேவை எதுவும் இருக்கப் போவதில்லை. அல்லதுபோனால் இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு சந்ததி சந்ததியாக இந்த விவாதங்கள் தொடரும்.

மற்றவர்கள் நான் எழுதுவதை விளங்கிக் கொள்வதும், அதை விட்டெறிந்து விடுவதும் அவரவர் சார்ந்தது. அது எனக்கு சந்தோசத்தையோ அல்லது வருத்தத்தையோ தரப்போவதில்லை. ஆனால் எனது கேள்விகள் அவர்கள் மனதில் சலனத்தை ஏற்படுத்துமாக இருந்தால் தாங்களாகவே சிந்திக்க தொடங்குவார்கள். அதன்பின் எந்த எழுத்தும் தேவையிராது.

மற்றது, நீங்கள் தந்த இணைய பக்கத்தில் absolute truth என வரையறை செய்ய முனைவதாக தான் தெரிகிறது. "உண்மை" என்பதை வரையறுக்க முடியாது. வரையறை என்பதே பகுப்பாய்வுகளின் முடிவாக வருவது. பகுப்பாய்வு பிரிவுகளினூடு வருவது. எங்கு பிரிவுகள் தோன்றுமோ அங்கெல்லாம் முரண்களும் தோன்றும். எனவே வரையறைகளும், பகுப்பாய்வுகளும் உண்மையை தரிசிக்க செய்யா. பாருங்கள், "உண்மையை" காண வெளிக்கிட்ட எமது முன்னோர், அதற்காக "வழிமுறை"களை வகுத்த பயனே மதம் என்றாகிறது. எனவே அது முரண்களையும் கூடவே சேர்த்து வைத்திருப்பது தவிர்க்க முடியாதது. முரண்கள் இறுதியில் கோபம், பொறாமை, போர் என்பதில் முடிகிறது. மதங்கள் எவ்வளவுதான் அன்பை பற்றி போதித்தாலும் அதன் உள்ளார்ந்த பண்பு (intrinsic property) முரண்களாகவே இருக்கும். இதை விலக்க முடியாது.

உண்மை என்பதை நீங்கள் வரையறுக்காமல்.. எப்படி உண்மை என்பது இருக்கிறதா என்று காரணத் தேடல் செய்ய முடியும்..??! நீங்கள் வரையறுத்த நிலைகளூடுதானே அதை அடைய விளைகிறீர்கள். அந்த வரையறைகளுக்குள் உள்ள உண்மைகள்.. நேற்றைய உண்மை இன்றைய பொய்.. என்ற நிலைக்கு மாறாத தன்மையை.. அறுதிட்ட உண்மை ( absolute truth) என்று கூறலாம் அல்லவா..! அந்த அறுதியிட்ட உண்மையை.. முடிவிலிகள் நிறைந்த உலகில்.. அடைய முடியுமா..??! அது கடவுள் சார்ந்து இருக்கலாம்.. அறிவியல் சார்ந்து இருக்கலாம்...??!

நான் நினைக்கவில்லை.. கடவுள் என்பதன் ஆணிவேரை.. அறிவியல் பாவிக்கும் முடிவிலி (Infinity) என்ற வரையறை அற்ற நிலை உள்ள வரை அறுதியிட முடியும் என்று. பூச்சியம் என்பது எப்படி அர்த்தமற்றதோ அதேபோல் தான் உண்மைகள் என்பதும் ஒரு நிலைக்கு அப்பால் அர்த்தமற்றவை..! தற்காலிக உண்மைகள் என்பது நிரந்தரமல்ல.. நிரந்தர உண்மைகள் இருந்தால் கூட அவை.. அறுதியானவை அல்ல.. என்பதுதான் இன்றைய உலகில் அறியப்பட்டுள்ளது. இன்னும் அறியப்பட்ட பல இருக்கின்ற நிலையில்.. நாமும் எதையும் அறுதியிட முடியாது. வரையறை.. அறுதியிடலில் இருந்து மாறுபட்டது. வரையறை மாற்றக் கூடியது. அறுதியிடல் மாற்ற முடியாதது..!

மரணத்தை அடைந்த மனிதன் இயங்க முடியும் என்று எம்மால் அறுதியிட முடியுமா..??! ஆனால் வரையறுக்கலாம்..! இப்படித்தான்.. உண்மை (Truth) என்பதும்.. அறுதியிட்ட உண்மை (Absolute truth) என்பது இருக்கிறது என்பதாக நான் எண்ணுகிறேன்..! இந்த நிலையில்.. முடிவிலி உலகில்.. கடவுளை தேடும்.. உண்மை.. அறுதியிடப்பட முடியுமா...????! :D

Edited by nedukkalapoovan

அருமையான அலசல் சுகன்...

ஈழதிருமகன் நீங்கள் கடவுள் இல்லை என்கிறீர்கள்.. அப்படித்தானே...?? உங்களிடன் அன்பு இல்லை என்கிறேன்.. அதை காதல் எண்றும் சொல்லி கொள்ளலாம்... அன்பு இருக்கும் இடத்தில் கடவுள் இருக்கிறார்... அதை நாங்கள் அன்பே சிவம் என்கிறோம்... அன்பை நம்புபவர்களுக்கு அது இருப்பது போல தோண்றும் நீங்கள் நம்பவில்லை எண்றால் அது இருப்பது தெரியாது... அது போலதான் கடவுள்...

உங்கள் உடலில் உயிர் இருக்கிறதா..?? அதை விஞ்ஞான ரீதியில் எப்படி விபரிப்பீர்கள்..?? அது உடலில் எந்த பகுதியில் இருக்கிறது..?? இருதயத்திலா.? அல்லது மூளையிலா.? இல்லை நுரையீரலிலா.? அந்த உயிர் உங்களின் உடலில் இருக்கும் வரைதான் உங்களின் உணர்வுகள் உங்களோடு இருக்கும்... அதை நீங்கள் இளக்கும் போது உங்களின் தனித்துவம் அற்று போகிறது... உங்களின் உடலை எவரும் ஈழதிருமகன் எண்று அழைக்க போவதும் இல்லை.. அது வெறும் பிணம் அல்லது ஆங்கிலத்தில் Body என்பார்கள்... இதை நான் விபரணத்துக்காக மட்டும்தான் சொல்கிறேன்.... எனது வாதம் அல்ல..

உங்களின் ஆன்மா அதைதான் எல்லாரும் உயிர் என்கிறார்கள்... உயிர் எண்ற பதம் எல்லாருக்கும் பொதுவானது எண்றாலும் அதன் தன்மைகள் செயற்பாடுகள் வேறு படுகிறதே... மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் அந்த ஆன்மாவை கட்டுப்படுத்தும் பரம்பொருளைதான் நாங்கள் கடவுள் என்கிறோம்...

உங்களின் உடலை குளோனிங் (Cloning) செய்ய முடியும் என்கிறது விஞ்ஞானம்... அனால் அந்த உடலுக்குள் இருக்கும் உயிர் உங்களின் சிந்தனை நோக்கோடு இருக்கும் என்பதை விஞ்ஞானதால் சொல்ல முடியவில்லை அல்லது predict பண்ணமுடியவில்லை.... அது ஏன்..???

  • தொடங்கியவர்

தயா!

நீங்கள் உடல் உயிர் பற்றி பேசி அதைக் கடவுளுடன் ஒப்பிடுவது எனக்கு சரியான தர்க்கமாகப் படவில்லை.

நீங்கள் கல்லிலே ஒரு சிலையை செய்து அதற்கு பூசை எல்லாம் செய்து அதைக் கடவுள் என்கிறீர்கள்.

உடலுக்குள் இருக்கின்ற உயிர் எப்படிக் கண்ணுக்குத் தெரியாததோ, அதே போன்று கல்லுக்குள் இருக்கும் கடவுளும் கண்ணுக்குத் தெரியாது என்கிறீர்கள்.

ஆனால் என்னுடைய உடல் இயங்குவதன் மூலம் என்னுடைய உடலுக்குள் உயிர் இருப்பது நிரூபிக்கப்படுகிறது. உயிர் கண்ணுக்குத் தெரியவில்லையாயினும், உடல் இயங்குவதன் மூலம் உயிர் இருப்பது தெரிகிறது.

கல்லுக்குள் கடவுள் இருக்கிறது என்பது எதன் மூலம் தெரிகிறது? எதைக் கொண்டு அதை நிரூபிப்பீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

கல்லுக்கும் உடலுக்கும் என்ன வேறுபாடு..??!

இரண்டும் அணுக்களின் கூட்டத்தால் ஆனவைதான்..! உடல் தன்னியக்கமாக இயங்கக் கூடிய சமநிலையைப் பெற்றுள்ளது. கல்லுக்கு அது இல்லை. ஆனால் ஆக்கத்தில் இரண்டும்.. அணுக்களின் அடிப்படையில் இருந்து எழுகின்றன..! அந்த இடத்தில் கல்லும் உடலும்.. ஒரு நிலையை அடைகின்றன. அணுக்களின் வகைகள் வேறுபடலாம். அது வேறு விடயம். அடிப்படை அலகு அணு..!

அணுக்கள் எப்படி உருவாகின..??! அதற்குரிய கூறுகள் எப்படி உருவாகின..???! அந்தக் கூறுகளை உருவாக்கியது எப்படி..???! அதற்குள் உள்ள சக்தி எங்கணம் உருவானது...??! இப்படியே கேள்விகள் முடிவின்றி... முடிவிலி வரை நீளும். அவற்றிற்கெல்லாம் பதில் இருக்கா சபேசன் சார்..??! :D:D

Edited by nedukkalapoovan

இப்படியே கேள்விகள் முடிவின்றி... முடிவிலி வரை நீளும்.

பிறகேன் முடிவிலியை முடக்கி கடவுள் என்கிற தொடக்கத்தையும், முடிவையும் வைக்கவேண்டும்? :D

  • தொடங்கியவர்

நெடுக்காலபோவான்!

எனக்குத் தெரியும். நான் எதையோ கேட்டால் நீங்கள் எதையோ கேட்பீர்கள் என்று.

கல்லுக்குள் உள்ள அணுவை யார் உருவாக்கியது என்றோ அல்லது அது எப்படி உருவானது என்றோ நான் கேட்கவில்லை.

ஒன்றின் காரணத்தை, உருவாக்கத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அதற்கு காரணம் அறிவியல் இன்னமும் அவ்வளவு தூரம் வளரவில்லை என்பதுதான்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வானத்தில் தெரிகிற மின்னலைக் காட்டி, அதைக் கடவுளுக்கு ஆதாரமாக சொல்லியிருப்பான். கடலில் தோன்றும் அலைகளுக்கு காரணம் தெரியாமல் அதையும் கடவுள் செயல் என்று சொல்லி கடவுளை நிரூபிக்க முயன்றிருப்பான்.

சில அடி தோண்டியதும் நீர் வருவதைக் காட்டி, அதற்கு விளக்கம் கேட்டு அதையும் கடவுள் இருப்பதற்கான காரணம் என்று சொல்லியிருப்பான்.

மனிதனுக்கு விளங்க முடியாத, அடைய முடியாத அனைத்துமே கடவுள் இருப்பதற்கான காரணம் ஆகி விட்டன.

அன்றைக்கு நிலத்தடி நீரக்கும், வானிலே தெரிகின்ற மின்னலுக்கும் காரணம் கேட்டு கடவுள் இருக்கென்று சொன்னவனுக்கு தெரிந்திருக்காது, நாளை இந்தக் கேள்விக்கெல்லாம் அறிவியல் விடை கண்டுபிடிக்கப் போகிறது என்று.

ஒரு 200 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு விழுங்குகின்ற சந்திரனில் மனிதன் காலடி எடுத்து வைப்பான் என்று யாராவது சொல்லியிருந்தால் அன்றைய "நெடுக்காலபோவான்கள்" ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். சொன்னவனை கிண்டல் அடித்திருப்பார்கள்.

ஆகவே ஒன்றை அறிவியல் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பதற்காகவோ, அல்லது கண்டுபிடிப்பதற்கு நீண்ட காலம் செல்லும் என்பதற்காகவோ, அதைக் கொண்டு கடவுளை நிரூபிக்க முற்படுவது அறியாமை.

  • கருத்துக்கள உறவுகள்

பிறகேன் முடிவிலியை முடக்கி கடவுள் என்கிற தொடக்கத்தையும், முடிவையும் வைக்கவேண்டும்? :D

கடவுள் என்பது.. முடிவுலியை நிரப்பும் கூறல்ல. அது ஒரு நம்பிக்கை. இன்றைய நிலையில் முறியடிக்க காரணம் கூற முடியாத அளவுக்குள்ள ஒரு நம்பிக்கை அது. அது இன்று மனித சமூகத்தில் பல்வேறு வடிவங்களில் உருவெடுத்திருக்கிறது. கடவுள் என்பதை கண்டு அஞ்சும் அளவுக்கு அது..என்ன பயங்கரமானதா...??! ஒரு நம்பிக்கைக்குப் பயந்து அதை முறியடிக்க சாத்தியமற்ற சூழலில் அதை முறியடிக்க நிற்பது பலவீனம். அதிலும் அந்த நம்பிக்கையை சமூகத்தின் முன்னேற்றம் நோக்கி பாவிக்க முயல்வதே... புத்திசாலித்தனம். :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்!

எனக்குத் தெரியும். நான் எதையோ கேட்டால் நீங்கள் எதையோ கேட்பீர்கள் என்று.

கல்லுக்குள் உள்ள அணுவை யார் உருவாக்கியது என்றோ அல்லது அது எப்படி உருவானது என்றோ நான் கேட்கவில்லை.

ஒன்றின் காரணத்தை, உருவாக்கத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அதற்கு காரணம் அறிவியல் இன்னமும் அவ்வளவு தூரம் வளரவில்லை என்பதுதான்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வானத்தில் தெரிகிற மின்னலைக் காட்டி, அதைக் கடவுளுக்கு ஆதாரமாக சொல்லியிருப்பான். கடலில் தோன்றும் அலைகளுக்கு காரணம் தெரியாமல் அதையும் கடவுள் செயல் என்று சொல்லி கடவுளை நிரூபிக்க முயன்றிருப்பான்.

சில அடி தோண்டியதும் நீர் வருவதைக் காட்டி, அதற்கு விளக்கம் கேட்டு அதையும் கடவுள் இருப்பதற்கான காரணம் என்று சொல்லியிருப்பான்.

மனிதனுக்கு விளங்க முடியாத, அடைய முடியாத அனைத்துமே கடவுள் இருப்பதற்கான காரணம் ஆகி விட்டன.

அன்றைக்கு நிலத்தடி நீரக்கும், வானிலே தெரிகின்ற மின்னலுக்கும் காரணம் கேட்டு கடவுள் இருக்கென்று சொன்னவனுக்கு தெரிந்திருக்காது, நாளை இந்தக் கேள்விக்கெல்லாம் அறிவியல் விடை கண்டுபிடிக்கப் போகிறது என்று.

ஆகவே ஒன்றை அறிவியல் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பதற்காகவோ, அல்லது கண்டுபிடிப்பதற்கு நீண்ட காலம் செல்லும் என்பதற்காகவோ, அதைக் கொண்டு கடவுளை நிரூபிக்க முற்படுவது அறியாமை.

மனிதன் சந்திரனில் காலடி வைத்ததற்கும்.. பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து விளக்கம் பெறுவதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணர்ந்தா கதைக்கிறீர்கள் சபேசன்..???! நீராவியை புட்டவிக்கப் பாவிச்சதும்.. நீராவி மழையாகப் பொழிவதும்.. பிரபஞ்சத் தோற்றத்தை நிறுவுமா சபேசன் சார்..??!

அதுபோக.. நாம் கடவுளை நம்புவதை கொச்சைப்படுத்தவில்லை. காரணம்.. அதை முறியடிக்க எம்மிடம் இன்னும் அறிவியல் காரணங்கள் இல்லை என்பதால். உங்களைப் போல புராணங்களில் புரண்டு போலிக் காரணங்களோடு மக்களை அணுக முடியாது. பலமான அறிவியல் தளம் ஒன்றில் நின்று கொண்டுதான் இது விடயத்தில் மக்களை அணுக முடியும்..! அதுவரை மக்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியமாகிறது..! :D

கடவுள் என்பது.. முடிவுலியை நிரப்பும் கூறல்ல. அது ஒரு நம்பிக்கை. இன்றைய நிலையில் முறியடிக்க காரணம் கூற முடியாத அளவுக்குள்ள ஒரு நம்பிக்கை அது. அது இன்று மனித சமூகத்தில் பல்வேறு வடிவங்களில் உருவெடுத்திருக்கிறது. கடவுள் என்பதை கண்டு அஞ்சும் அளவுக்கு அது..என்ன பயங்கரமானதா...??! ஒரு நம்பிக்கைக்குப் பயந்து அதை முறியடிக்க சாத்தியமற்ற சூழலில் அதை முறியடிக்க நிற்பது பலவீனம். அதிலும் அந்த நம்பிக்கையை சமூகத்தின் முன்னேற்றம் நோக்கி பாவிக்க முயல்வதே... புத்திசாலித்தனம். :D

முடிவிலியை நிரப்பும் கூறல்ல என்பது உங்களின் கருத்து. ஆனால், மக்களின் மனநிலை அப்படியானதில்லை. மதங்களின் நிலைப்பாடும் அப்படியானதில்லை. ஆதியும் அந்தமுமாகவே கடவுள் சொல்லப்படுகிறது. கடவுள் நம்பிக்கையை சமூக முன்னேற்றத்துக்கு சாதகமாக பயன்படுத்துவது புத்திசாலித்தனமானதுதான். கடவுள் நம்பிக்கை என்பது சமூகப் பலவீனத்துக்கான காரணியாக மாறியிருக்கிற சூழலில், கடவுள் நம்பிக்கை என்பது சமூகப் பிளவுகளுக்கு சாதகமாகப் பயன்படுத்தப்படுகிற சூழலில், முன்னேற்றத்துக்கு சாதகமாக கடவுள் நம்பிக்கையைப் பயன்படுத்தலாம் என்பது புத்திசாலித்தனமாகப் படவில்லை. :D

அறிவியல் என்பதே தெரியாததைக் கண்டு பிடிக்க முயலும் செயற்பாடு.தெரியாத ஒன்றை அது இன்னது தான் என்று எதுவித ஆதரமோ கேள்வியோ இன்றி நம்புவதுதான் நீங்கள் சொல்லும் கடவுள் நம்பிக்கை.

இங்கே நாங்கள் எலோரும் சொல்வது தெரியாததை தெரியாது என்று ஏர்ருக்கொள்ளுங்கள்.அதற்க்கு கண்ணும் காலும் வாயும் வைத்து ருவக படுடகாதீர்கள்.அது யேசு என்றோ சிவன் என்றோ வியாக்கியானம் செய்யாதீர்கல் என்பதே.சமயத்திற்க்குப்போலிய

  • கருத்துக்கள உறவுகள்

முடிவிலியை நிரப்பும் கூறல்ல என்பது உங்களின் கருத்து. ஆனால், மக்களின் மனநிலை அப்படியானதில்லை. மதங்களின் நிலைப்பாடும் அப்படியானதில்லை. ஆதியும் அந்தமுமாகவே கடவுள் சொல்லப்படுகிறது. கடவுள் நம்பிக்கையை சமூக முன்னேற்றத்துக்கு சாதகமாக பயன்படுத்துவது புத்திசாலித்தனமானதுதான். கடவுள் நம்பிக்கை என்பது சமூகப் பலவீனத்துக்கான காரணியாக மாறியிருக்கிற சூழலில், கடவுள் நம்பிக்கை என்பது சமூகப் பிளவுகளுக்கு சாதகமாகப் பயன்படுத்தப்படுகிற சூழலில், முன்னேற்றத்துக்கு சாதகமாக கடவுள் நம்பிக்கையைப் பயன்படுத்தலாம் என்பது புத்திசாலித்தனமாகப் படவில்லை. :D

கடவுள் நம்பிக்கை என்பது பொதுவானது. அதை முறியடிக்க இன்னும் பலமான அறிவியல் தளம் தேவை.. அல்லது கண்டிபிடிப்புக்கள் அவசியம். ஆனால் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மதங்கள் சொல்லும் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு வெளியே.. மூடநம்பிக்கைகளின் மூலம் மனிதர்களைப் பிரித்தாள்வது.. மனித சிந்தனையே தவிர.. கடவுள் என்ற நம்பிக்கை அல்ல. மனிதன் நம்பினால் என்ன விட்டால் என்ன.. அந்த கடவுளுக்கான இடம் அறிவியலால் நிரப்பப்படாதவரை வெற்றிடமாகவே இருக்கும். ஆக பிளவுகள் என்பது மனிதன் உருவாக்கியது. அதை மனிதனே சீர்செய்ய வேண்டும். அதை செய்ய முடியாதது இயலாமையே திவிர.. புத்தியற்ற தன்மையல்ல..!

மக்களை அணுகும் முறையில்.. அவர்களைத் தெளிய வைக்கும் தன்மை இருக்கிறது. பிராமணனைக் கொழுத்து.. கடவுள் சிலைக்கு கல்லால் அடி.. கறுப்புத்துணியால் போர்த்து.. இவையெல்லாம்.. மனிதர்களிடை உள்ள பிளவுகளை எப்படிப் போக்கும்..???! கடவுள் என்ற நம்பிக்கைக்கான அந்த அறிவியல் வெற்றிடத்தை எப்படி நிரப்பும்..???! அர்த்தமற்ற வழிமுறைகள்.. மக்களைச் சீண்டுமே தவிர.. தெளிவுறுத்தாது. அதனால் தான்.. மக்கள் மனங்களை வெல்ல முடியவில்லை..! :lol::D

Edited by nedukkalapoovan

உண்மை என்பதை நீங்கள் வரையறுக்காமல்.. எப்படி உண்மை என்பது இருக்கிறதா என்று காரணத் தேடல் செய்ய முடியும்..??! நீங்கள் வரையறுத்த நிலைகளூடுதானே அதை அடைய விளைகிறீர்கள். அந்த வரையறைகளுக்குள் உள்ள உண்மைகள்.. நேற்றைய உண்மை இன்றைய பொய்.. என்ற நிலைக்கு மாறாத தன்மையை.. அறுதிட்ட உண்மை ( absolute truth) என்று கூறலாம் அல்லவா..! அந்த அறுதியிட்ட உண்மையை.. முடிவிலிகள் நிறைந்த உலகில்.. அடைய முடியுமா..??! அது கடவுள் சார்ந்து இருக்கலாம்.. அறிவியல் சார்ந்து இருக்கலாம்...??!

நான் நினைக்கவில்லை.. கடவுள் என்பதன் ஆணிவேரை.. அறிவியல் பாவிக்கும் முடிவிலி (Infinity) என்ற வரையறை அற்ற நிலை உள்ள வரை அறுதியிட முடியும் என்று. பூச்சியம் என்பது எப்படி அர்த்தமற்றதோ அதேபோல் தான் உண்மைகள் என்பதும் ஒரு நிலைக்கு அப்பால் அர்த்தமற்றவை..! தற்காலிக உண்மைகள் என்பது நிரந்தரமல்ல.. நிரந்தர உண்மைகள் இருந்தால் கூட அவை.. அறுதியானவை அல்ல.. என்பதுதான் இன்றைய உலகில் அறியப்பட்டுள்ளது. இன்னும் அறியப்பட்ட பல இருக்கின்ற நிலையில்.. நாமும் எதையும் அறுதியிட முடியாது. வரையறை.. அறுதியிடலில் இருந்து மாறுபட்டது. வரையறை மாற்றக் கூடியது. அறுதியிடல் மாற்ற முடியாதது..!

மரணத்தை அடைந்த மனிதன் இயங்க முடியும் என்று எம்மால் அறுதியிட முடியுமா..??! ஆனால் வரையறுக்கலாம்..! இப்படித்தான்.. உண்மை (Truth) என்பதும்.. அறுதியிட்ட உண்மை (Absolute truth) என்பது இருக்கிறது என்பதாக நான் எண்ணுகிறேன்..! இந்த நிலையில்.. முடிவிலி உலகில்.. கடவுளை தேடும்.. உண்மை.. அறுதியிடப்பட முடியுமா...????! :)

நல்லது நெடுக்ஸ்.

உண்மை என்பதை வரையறுத்த அந்தக் கணமே அது "தனிமனிதன் சார்ந்ததாகி" விடுகிறது. நீங்கள் எந்தப் பரிசோதனையையும் செய்யலாம். அவை அனைத்துமே முற்றுமுழுதாக உங்களில் சார்ந்திருக்கும். அப்படியானால் உண்மை தனிமனிதன் சார்ந்ததா? என்னுடைய உண்மை, உங்களுடைய உண்மை என்று. அப்படியில்லை என்றுதான் தெரிகிறது. உண்மை எங்கள் "எண்ணம்" என்னும் புலத்திற்கு அப்பாற்பட்டது. காலத்தில் தங்கியிருக்கவில்லை. அதாவது நேற்றிருந்த உண்மை இன்றும் இருக்கிறது. அப்படியானால் அது பழையதா? இல்லை. இன்றும் புதியதாகவே இருக்கிறது. என்றும் இருந்தவாறே புதியதாக இருப்பது எப்படி? ஒவ்வொரு கணத்திலும் இருகிறது. அதனால்தான் காலம் என்பதிலோ எண்ணம் (எண்ணம் கூட காலம்தான்) என்பதிலோ தங்கியிராமல், அந்த வெளிகளுக்கு அப்பால் உண்மை இருக்கிறது. எண்ணத்தில் தங்கியிராத ஒன்றை எண்ணங்களால் வரையறுப்பதெப்படி? அதனால் தான் உண்மையை வரையறுக்க முடியாது என எழுதினேன். உண்மையை வரையறுத்துவிட்டால் அது "ரியாலிட்டி" என்ற வெளியே ஆகும். விஞ்ஞானம் தொழிற்படுவது "ரியாலிட்டி" என்ற வெளியில். நாம் இயங்குவது "ரியாலிட்டி" என்ற வெளியில். அதனால்தான் நேற்றைய "உண்மை" இன்றைய "பொய்" என கூறுகிறீர்கள். "ரியாலிட்டி" காலம், எண்ணம் சார்ந்தது. விஞ்ஞானத்தின் எந்தவொரு பரிசோதனையும் உண்மையை கண்டறிய உதவாது. இது இரண்டையும் குழப்புபவர்கள் "ரியாலிட்டியில்" அந்தக் கணத்தில் மாறாதிருப்பவற்றை "உண்மை" என்றும் நான் ஏற்கெனவே எழுதிவரும் "உண்மை" என்ற தன்மையை absolute truth என்றும் குறிப்பிடுகின்றனர். ரியாலிட்டி என்பதில் உண்மையின் தாக்கம் இருந்தாலும் "உண்மையில்" ரியாலிட்டியின் தாக்கம் சிறிதும் இல்லை.

மற்றது, நான் முன்பே கேட்ட ஒரு கேள்வி இன்னமும் விடை தராமல் நிக்கிறது. "கடவுள் என்றதை எம் மனதில் உருவாக்கியவர் யார்?". அது எமது முன்னோராகட்டும் அல்லது நாமாகட்டும். இது எமது மனதில் நாமே உருவாக்கிக் கொண்ட ஒரு பிம்பம். எத்தனை மில்லியன் ஆண்டுகள் நீங்கள் பின்னோக்கி பார்த்தாலும் "கடவுள்" என்ற எண்ணம் உதித்தது மனித மனத்திலேயே. "இல்லை, கடவுள் வந்து சொன்னார்" என்று கூறுவதுகூட, பின்னாளில் இணைக்கப்பட்ட கற்பனை கதைகளின்மீதான தனிமனிதனின் எண்ணங்களே. இதைத்தான் "கடவுள் இருக்கிறது அல்லது இல்லை என்ற வாதம் அர்த்தமற்றது. இருக்கிறது என்று வாதிடுவதும் இல்லை என்று வாதிடுவதும் ஒரு கோலின் இருமுனைகளே" என முன்னொரு பதிவில் எழுதினேன். இந்த வெளியை விட்டு நீங்கி வெளிவராதவரை தெளிவும் வர சந்தர்ப்பமில்லை. எனது மனதில் நானே ஒரு எண்ணக் கருவை உருவாக்கிவிட்டு அது இருக்கிறதென்றோ அல்லது இல்லையென்றோ வாதிடுவதை போன்ற முட்டாள்தனம் வேறேதுமில்லை. ஜனங்கள் அந்த "வெளியில்" (space) இருந்து வெளிவராத வரை கடவுள் என்பதும் மதமென்பதும் மிகப் பெரும் காப்பு சக்தியாக பொய்த்தோற்றம் அளிக்கும். அதை விட்டு நீங்குவதென்பது நினைக்கவொண்ணாதது.

சரி. உண்மையை காண எந்த வழிமுறைகளோ இல்லை என ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். இதை வாசித்தவுடனேயே பலருக்கும் பொதுவாகவே எழும் கேள்வி "அப்படியானால் எப்படி உண்மையை தரிசிப்பது?" என்பதாக தானிருக்கும். எப்படி என்ற கேல்விகூட ஒரு "வழிமுறையை" வேண்டி நிற்பதை பாருங்கள். "உண்மையை" தரிசிக்க "பொய்மையை" பாருங்கள். பொய்மை என்று உறுதிபட தெரிந்த கணமே அது சருகாக உதிர்ந்து விடும். இறுதியில் நம் எவராலும் எண்ணங்களாலோ எழுத்துக்களாலோ விபரிக்க முடியாதபடி உண்மை இருப்பதை உணரலாம். (இதை நீங்கள் உங்கள் ஒவ்வொருவரிலும் பரீட்சித்து பார்க்கலாம். அப்படி உணரும் கணத்தில் எந்த எண்ணமும் எழ வாய்ப்பில்லை. எண்ணங்களின் குறுக்கீடு இராது. உங்கள் மனம் "தெரிந்த" என்ற பகுதியை நீங்கி "தெரியாத" என்ற பகுதியில் தொழிற்படுவதை உணர்வீர்கள். உண்மையான தியானமும் இதுதான்.) இதை எழுதிவிட்டு செல்வது மிகச் சுலபம். செயற்பாட்டு வடிவம் கொடுப்பதற்கு அதிக சக்தி தேவை. இதற்கு உங்கள் எண்ணங்களை நீங்கள் ஒவ்வோர் கணத்திலும் கூர்ந்து அவதானிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

தயா!!

நான் கடவுள் இருக்கிறது என்றோ, இல்லை என்றோ வாதிடவில்லை. அது அர்த்தமற்றது என்றே கூறுகிறேன்.

மற்றது உண்மை என்பதை எந்த விஞ்ஞான பரிசோதனைகளும் நிரூபிக்க முடியாது. விஞ்ஞானம் இயங்குவது "ரியாலிட்டியில்". ஏற்கெனவே மேலே எழுதிவிட்டேன்.

கேள்விகளை கேளுங்கள். பதில்களை உங்களுள்ளே தேடுங்கள். இதற்கு எந்த புத்தகமும் பதில்தரா.

வாழ்த்துக்கள்.

இப்ப இறுதியா என்னதான் சொல்ல வாறீங்கள்? ஐரோப்பாவில் பெரியார் இயக்கம் ஒரு வரலாற்றுத் தேவையா இல்லையா? தேவையென்றால் ஈழத் தமிழர்கள் சார்பாக "ஈழத் தமிழர் புரட்சிகர பெரியார் இயக்கம்" என்ற ஒரு அமைப்பை நிறுவலாம். அதன் செயலாளர் அல்லது பொறுப்பாளராக சபேசனை நியமிக்கலாம். அதன் செயல் திட்டங்களாக

1. இந்துக் கோயில்களை Discothek ஆக்குமாறு அந்தந்த நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்தி போராட்டம் நடாத்துதல்.

2. தீபாவளி, நவராத்திரி, சிவராத்திரி போன்ற இந்துமதப் பண்டிகைகள் வரும்போது தொலைக்காட்சியில் நமீதா, நயாந்தரா, ரகஸ்யா போன்றவர்கள் நடித்த படங்களை ஒளிபரப்புதல்

3. சாமத்தியச் சடங்குகளுக்குச் சென்று சாமத்தியப்பட்ட பெண்பிள்ளைக்கு Condom போன்ற பரிசுப் பொருட்களை அளித்தல் & காதல் விண்ணப்பம் கொடுத்தல் & தொலைக்காட்சி வானொலிகளில் வாழ்த்துச் செய்திகளை ஒளிபரப்பச் செய்தல்.

போன்றவற்றை இணைக்கலாம். கொள்கைப் பிரகடனமாக "இந்து மதத்தை" அழித்து "பெரியார் மதத்தை" வளர்ப்பதை அறிவிக்கலாம். ஒவ்வொருவர் வீட்டிலும் பெரியாரின் படம் தொங்கவேண்டும் என்பதை கட்டாயச் சட்டமாக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தைக் கேட்கலாம். காலை எழும்போதும், மாலை உறங்கும்போதும் "கடவுள் இல்லை கடவுள் இல்லை" என்ற பெரியாரின் நாத்தீக மந்திரங்களை உச்சரிப்பதே பகுத்தறிவை வளர்க்கும் என்று மக்களுக்கு அறிவுரை கூறலாம்.

"ஈழத் தமிழர் புரட்சிகர பெரியார் இயக்கத்துக்கு" இப்படி பல்வேறு புரட்சிகரப் பணிகள் ஐரோப்பாவில் காத்திருக்கின்றன. எனவே விரைவில் "ஐரோப்பாவில் பெரியார் இயக்கம் ஒரு வரலாற்றுத் தேவையா" என்பதற்கு பதிலளிக்கவும். பெரியார் ஐரோப்பாவில் மறு அவதாரம் எடுக்கும் நேரம் நெருங்கிவிட்டது. சமூகப் புரட்சீ ஒன்று விரைவில் நடக்க இருக்கிறது. :lol:

Edited by இளைஞன்

  • தொடங்கியவர்

நீங்கள் முன்மொழிந்த "ஈழத் தமிழர் புரட்சிகர பெரியார் இயக்கம்" என்ற பெயர் நன்றாக இருக்கிறது.

ஆனால் நீங்கள் சொன்ன விடயங்கள் சில ஏற்கனவே அப்படித்தான் இருக்கின்றன.

இந்துக் கோயில்களின் விழாக்கள் ஒரு கேளிக்கைக் கூத்தாகத்தான் நடக்கின்றன. இதை நான் ஐரோப்பிய பெரியார் இயக்கத்தவர்களுடன் பேசுகின்ற போது சொன்னேன்.

"ஒரு தேர் விழாவில் 80 வீதமானவர்கள் மத நம்பிக்கையின் காரணமாக வருவதில்லை. தெரிந்தவர்களை பார்க்கவும், சைட் அடிக்கவும், துணை ஒன்றை தேடவுமே வருகிறார்கள். இந்த 80 வீதமானவர்கள் ஒரு மத விழாவை கேளிக்கை விழாவாக மாற்றி அவர்களே உங்களுடைய வேலையை செய்கிறார்கள். நீங்கள் ஆஞ்சநேயர், லலிதா, பால்தினகரன் போன்ற விடயங்களில் கவனம் எடுங்கள், அங்குதான் பெரும்பாலானவர்கள் பக்தி முற்றிப் போய் வருகிறார்கள்" என்று அவர்களிடம் சொன்னேன்

தீபாவளி, நவராத்திரி போன்ற நாட்களில் தொலைக்காட்சிகள் நீங்கள் சொன்ன படங்களைத்தான் போடுகின்றன.

நீங்கள் சொன்ன மூன்றாவது திட்டம் அவ்வளவு நல்லாயில்லை. காரணம் 11, 12 வயதிலேயே சிறுமிகள் பூப்படைவதால், அவர்களுக்கு ஆணுறையோ, காதல் கடிதமோ கொடுப்பது தவறானது.

அத்துடன் சில ஆண்டுகள் கழித்து அந்தப் பெண்களே தேர்திருவிழாக்களில் வைத்து அனைத்தையும் பார்த்துக் கொள்வர்கள் என்பதால் நாம் அதைப் பற்றி அக்கறைப்படத் தேவையில்லை.

தயா!

நீங்கள் உடல் உயிர் பற்றி பேசி அதைக் கடவுளுடன் ஒப்பிடுவது எனக்கு சரியான தர்க்கமாகப் படவில்லை.

நீங்கள் கல்லிலே ஒரு சிலையை செய்து அதற்கு பூசை எல்லாம் செய்து அதைக் கடவுள் என்கிறீர்கள்.

உடலுக்குள் இருக்கின்ற உயிர் எப்படிக் கண்ணுக்குத் தெரியாததோ, அதே போன்று கல்லுக்குள் இருக்கும் கடவுளும் கண்ணுக்குத் தெரியாது என்கிறீர்கள்.

ஆனால் என்னுடைய உடல் இயங்குவதன் மூலம் என்னுடைய உடலுக்குள் உயிர் இருப்பது நிரூபிக்கப்படுகிறது. உயிர் கண்ணுக்குத் தெரியவில்லையாயினும், உடல் இயங்குவதன் மூலம் உயிர் இருப்பது தெரிகிறது.

கல்லுக்குள் கடவுள் இருக்கிறது என்பது எதன் மூலம் தெரிகிறது? எதைக் கொண்டு அதை நிரூபிப்பீர்கள்?

கல் என்பது வெறும் கல் அல்ல கருங்கல்... கருங்கல்லின் சிறப்பு குணம் விஞ்ஞான ரீதியாக நீங்கள் அறிந்து இருப்பீர்கள்... அந்த கருங்கற்களால் ஆக்கப்பட்ட கோயிலின் சிலைகளின் சிறப்பை கடைசியில் பார்க்கலாம்...

ஆனாலும் உடலை போல வேகமாக வளர்ந்து பின்னர் அழிந்து போகும் தன்மை இல்லாவிட்டாலும் கல்லுக்கும் வளர்ச்சி இருக்கிறது... இதே கல்லுக்குள் தேரை வாழ்கிறது என்பதையும் நீங்கள் கேள்வி பட்டாவது இருக்க வேண்டும்.. இதே கல்லில் இருந்துதான் அதிகமான நதிகள் உற்பத்தி யாகின்றன... அதுக்கு விஞ்ஞான ரீதியில் விளக்கமும் சொல்லி இருக்கிறார்கள்... அதாவது கல்லுக்கும் சக்தி இருக்கிறது...

இப்போ கேள்வியே உங்களின் ஆன்மாவுக்கும் அதுதான் உங்களுக்குள் எந்த பகுதியில் இருக்கிறது என்பதை நீங்களே அறியாத உயிர்... (இருதயம், மூளை, நுரையீரல் அல்லது குறி) இவற்றுள் எங்கு உங்களின் உயிர் நிலை இருக்கிறது... என்பதை உங்களால் உணர முடிகிறதா....??? அதுதான் கேள்வி...!

உலகின் நிலையை ஆட்டிப்படைக்கும் காந்த புலன்கள் எண்று எல்லாம் தியறிகளை சொல்கிறார்கள்.. உலகம் வெப்பமாதலுக்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் ஒருபுறம் எண்றால் இன்னும் ஒரு புறம்.. புவியின் சூரியனை சுற்றும் ஒழுக்கில் ஏற்படும் மாற்றங்கள்தான் எண்று இன்னும் ஒருசாரார் சொல்கிறார்கள்.. அதை தடுக்கும் திறன் அற்றதுதான் விஞ்ஞானம்...

அடுத்து கருங்கற்கள்... எப்போதாவது மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா போய் இருக்கிறீர்களா..??? மனதுக்கு இதமாக இருக்கும் எண்று இருதய நோயாளிகளை வைத்தியர்கள் அனுப்பி வைப்பார்கள்.... அதுக்கு முக்கிய காரணம், ஈரத்தை போல ஒலிகளை தெறிக்க செய்வதை குறைத்து அதை உள்வாங்கும் சக்தி கருங்கற்களுக்கு உண்டு... அதைதான் கோயில்களில் அடிப்படை நோக்கில் செய்தார்கள்...

Edited by தயா

எல்லாத்தையும் ஏற்கனவே எமது புரட்சிகர இந்து பக்தகோடிகளே செய்கிறார்கள் என்றால், ஐரோப்பாவில் பெரியார் இயக்கத்துக்கான வரலாற்றுத் தேவை என்ன? :lol:

நான் ஆணுறையைச் சொல்லவில்லை, பெண்ணுறையத் தான் சொன்னேன். Femidom எனப்படும் பெண்களுக்கான condom:

pdb__601050000_kondom_frauen_136.jpgfemidomdetail.jpg

சாமத்தியப்பட்ட சிறுமிகளுக்கு ஊர்சனத்த கூப்பிட்டு வைத்து சாமத்தியவீடு செய்வது சரியென்றால், அந்தப் சிறுமிகளுக்கு அவர்களின் பாதுகாப்புக் கருதி பயன்படும் வகையில் கொண்டோம்களை கொடுப்பதில் தவறில்லைத்தானே? இந்து மதத்தில் நாம் குழந்தைத் திருமணங்களை அனுமதித்திருக்கிறோம். பிறகெப்படி பூப்படைந்த சிறுமிகளுக்கு காதல் கடிதம் கொடுப்பது தவறாகும்.

எனக்கு இப்பொழுது ஒரு விடயம் நன்றாக விளங்குகிறது. பெரியாரை விடவும், பெரியார் இயக்கங்களை விடவும், பெரியாரிஸ்டுக்களை விடவும் இந்து மதமும், இந்துக்களும் புரட்சிகரமானவர்கள். முற்போக்கானவர்கள். :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.