Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2022 ஜனவரி முதல் 10 இற்கும் அதிகமான அமெரிக்க பலூன்கள் சீனாவில் பறந்துள்ளன: சீனா குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2022 ஜனவரி முதல் 10 இற்கும் அதிகமான அமெரிக்க பலூன்கள் சீனாவில் பறந்துள்ளன: சீனா குற்றச்சாட்டு

Published By: SETHU

13 FEB, 2023 | 04:27 PM
image

சீன வான்பரப்புக்குள் அமெரிக்காவின் பலூன்கள் பறந்துள்ளதாக சீனா இன்று கூறியுள்ளது. 

2022 ஜனவரி முதல் 10 இற்கும் அதிகமான தடவைகள் அமெரிக்காவின் பலூன்கள் சீனாவின் வான்பரப்பில் பறந்து என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் கூறினார். 

பெய்ஜிங் நகரில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். 

சீனாவின் பலூன் ஒன்றை அமெரிக்க சுட்டு வீழ்த்திய நிலையில், சீனா இவ்வாறு கூறியுள்ளது. 

'ஏனைய நாடுகளின் வான்பரப்பில் அமெரிக்கா சட்டவிரோதமாக நுழைவது அசாதாரணமானது அல்ல. கடந்த வருடத்தில் மாத்திரம் சீன அதிகாரிகளின் எந்தவொரு அனுமதியுமின்றி,  அமெரிக்காவின் பலூன்கள் 10 இற்கும் அதிகமான தடவைகள் சீன வான் பரப்பில் பறந்துள்ளன' என அவர் கூறினார்.

அத்தகைய சட்டவிரோத நுழைவுகளுக்கு சீனா எவ்வாறு பதிலளித்தது என கேட்கப்பட்டபோது, சீனா அவற்றை பொறுப்புடனும் தொழிற்சார் தன்மையுடனும் கையாண்டது என அவர பதிலளித்தார்.

கடந்த 8 நாட்களில் 4 பறக்கும்பொருட்களை  அமெரிக்கா சுட்டு வீழத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்குச் சொந்தமான 200 அடி உயரமான பாரிய பலூன் ஒன்றை கடந்த 4 ஆம் திகதி சௌத் கரோலினா மாநிலத்துக்கு அருகில் அமெரிக்கப் படையினர் சுட்டுவீழ்த்தினர். 

அதன்பின் அடையாளம் காணப்படாத மேலும் 3 பறக்கும் பொருட்களையும் அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி, அலாஸ்கா மாநில வான்பரப்பில் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருளொன்றை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியது.

அதற்கு அடுத்த நாள் 11 ஆம் திகதி,  கனடாவின் யுகோன் பிராந்தியத்தில், அமெரிக்க எல்லையிலிருந்து 160 கிலோமீற்றர் தூரத்தில் பறந்த பறக்கும் பொருளொன்று அமெரிக்க போர் விமானத்தின் மூலம் சுட்டுவீழ்த்தப்பட்டது.

4 ஆவது பறக்கும் பொருள் மிச்சிகன் மாநிலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/148123

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தனது வான்வெளியில் 10 முறைக்கு மேல் பலூன்களை பறக்கவிட்டதாக சீனா குற்றச்சாட்டு!

அமெரிக்கா தனது வான்வெளியில் 10 முறைக்கு மேல் பலூன்களை பறக்கவிட்டதாக சீனா குற்றச்சாட்டு!

கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து அமெரிக்கா தனது வான்வெளியில் 10 முறைக்கு மேல் சட்டவிரோதமாக அதிக உயரத்தில் பலூன்களை பறக்கவிட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்கப் போர் விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன பலூனினால் ஏற்பட்ட பதற்றங்களுக்கு மத்தியில் இந்த தகவல் வந்துள்ளது.

வழக்கமான ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இந்த கருத்தினை வெளியிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘அமெரிக்க பலூன்கள் மற்ற நாடுகளின் வான்வெளியில் சட்டவிரோதமாக நுழைவது பொதுவானது. கடந்த ஆண்டு முதல், அமெரிக்க உயரமான பலூன்கள், தொடர்புடைய சீன அதிகாரிகளின் அனுமதியின்றி, 10 முறைக்கு மேல் சீனாவின் வான்வெளியை சட்டவிரோதமாக கடந்துள்ளன.

சீனாவுக்கு எதிராக நெருங்கிய உளவுப் பணிகளை மேற்கொள்ள அமெரிக்கா அடிக்கடி போர்க்கப்பல்களையும் விமானங்களையும் அனுப்பி வருகின்றது. இது கடந்த ஆண்டு மொத்தம் 657 முறை மற்றும் இந்த ஜனவரியில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் தென் சீனக் கடலில் 64 முறை கடந்துள்ளது.

நீண்ட காலமாக, அமெரிக்கா தனது சொந்த தொழில்நுட்ப நன்மைகளை துஷ்பிரயோகம் செய்து பெரிய அளவிலான மற்றும் கண்மூடித்தனமான வயர்டேப்பிங் மற்றும் அதன் நட்பு நாடுகள் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து இரகசியங்களை திருடுகிறது’ என கூறினார்.

சீனா தனது கிழக்கு கடற்கரைக்கு அருகில் பறக்கும் அடையாளம் தெரியாத ஒரு பொருளை சுட்டு வீழ்த்துவதற்கு தயாராகி வருவதாக சீனா கூறிய ஒரு நாளுக்குள் இந்த செய்தி வந்துள்ளது.

இதற்கிடையில், சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள கடல்சார் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ரிசாவோ துறைமுக நகருக்கு அருகிலுள்ள நீரில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை கண்டதாகவும், அதை சுட்டு வீழ்த்துவதற்கு தயாராகி வருவதாகவும் அரசு நடத்தும் செய்தி நிறுவனமான தி பேப்பர் தெரிவித்துள்ளது.

அது என்ன வகையான பொருள், எங்கிருந்து வந்திருக்கலாம் அல்லது எந்த உயரத்தில் பறந்து கொண்டிருந்தது என்பதை அறிக்கை குறிப்பிடவில்லை.

உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை பிற்பகல் வரை, சீன அதிகாரிகள் மற்றும் அரசு ஊடகங்கள் எந்தப் புதுப்பிப்புகளையும் வழங்கவில்லை, மேலும் பொருள் ஏற்கனவே அகற்றப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

https://athavannews.com/2023/1324013

  • கருத்துக்கள உறவுகள்

உளவு பலூன் விவகாரம்: சீனாவின் குற்றச்சாட்டை மறுத்தது அமெரிக்கா!

உளவு பலூன் விவகாரம்: சீனாவின் குற்றச்சாட்டை மறுத்தது அமெரிக்கா!

கடந்த ஆண்டில் 10 முறைக்கு மேல் அமெரிக்கா தனது வான்வெளியில் பலூன்களை பறக்கவிட்டதாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் முன்வைத்த குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது.

‘அமெரிக்கா மற்ற நாடுகளின் வான்வெளியில் சட்டவிரோதமாக நுழைவது அசாதாரணமானது அல்ல’ என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறியிருந்தார்.

இந்தநிலையில், இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வெள்ளை மாளிகையில் இருந்து கருத்து தெரிவித்த செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, நாங்கள் சீனாவின் மீது கண்காணிப்பு பலூன்களை பறக்கவிடவில்லை எனவும் சீன வான்வெளியில் நாங்கள் பறக்கும் வேறு எந்த கைவினையும் பற்றி தனக்குத் தெரியாது எனவும் கூறினார்.

அதேவேளை, இந்த வார இறுதியில் வட அமெரிக்க வான்வெளியில் பறக்கும் மூன்று பொருட்களை சுட்டு வீழ்த்துவதற்கான அமெரிக்காவின் முடிவு மிகவும் எச்சரிக்கையாக இருந்தது என்றும் கூறினார்.

இந்த பொருட்கள் வணிக விமானங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது மற்றும் அமெரிக்க மக்களின் சிறந்த நலன்களுக்காக வீழ்த்தப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

சமீபத்தில் சீனாவில் இருந்து உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் பலூன் ஊடுருவியதில் இருந்து அமெரிக்கா தனது வான்வெளியை மிகவும் உன்னிப்பாக ஆய்வு செய்து வருகிறது.

இதனிடையே, சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூனின் சென்சார்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2023/1324078

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 14/2/2023 at 06:59, தமிழ் சிறி said:

அமெரிக்கா தனது வான்வெளியில் 10 முறைக்கு மேல் பலூன்களை பறக்கவிட்டதாக சீனா குற்றச்சாட்டு!

சீனா அமெரிக்கா......இவையள்  விட்ட பலூன்களை எண்ணிக்கொண்டிருக்க எங்கடை குண்டன் சத்தம் கித்தம் போடாமல் பலூன்லை அணுகுண்டை கட்டி அமெரிக்காவிலை இறக்கப்போறான்....:gutenmorgen: 

Kim Jong Un GIFs | GIFDB.com

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சீனா அமெரிக்கா......இவையள்  விட்ட பலூன்களை எண்ணிக்கொண்டிருக்க எங்கடை குண்டன் சத்தம் கித்தம் போடாமல் பலூன்லை அணுகுண்டை கட்டி அமெரிக்காவிலை இறக்கப்போறான்....:gutenmorgen: 

Kim Jong Un GIFs | GIFDB.com

அவரை குண்டன் என்று மரியாதை குறைவாக சொல்லாதீர்கள். 😎
ப்ளீஸ்...  குண்டர் என்று சொல்லுங்கள். 💖

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

கடந்த ஆண்டில் 10 முறைக்கு மேல் அமெரிக்கா தனது வான்வெளியில் பலூன்களை பறக்கவிட்டதாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் முன்வைத்த குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது.

ரம்பின் ஆட்சிக் காலத்திலும் இப்படி 3 பலூன்கள் பறந்ததாக சொல்கிறார்கள்.

14 minutes ago, தமிழ் சிறி said:

அவரை குண்டன் என்று மரியாதை குறைவாக சொல்லாதீர்கள். 😎
ப்ளீஸ்...  குண்டர் என்று சொல்லுங்கள். 💖

குண்டன் என்றால் ஒருவர்.

குண்டர் என்றால் பலர்.

சரி இப்ப எப்படி அழைக்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2023 at 00:59, தமிழ் சிறி said:

நீண்ட காலமாக, அமெரிக்கா தனது சொந்த தொழில்நுட்ப நன்மைகளை துஷ்பிரயோகம் செய்து பெரிய அளவிலான மற்றும் கண்மூடித்தனமான வயர்டேப்பிங் மற்றும் அதன் நட்பு நாடுகள் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து இரகசியங்களை திருடுகிறது’ என கூறினார்.

அங்கெலா மேக்கலை கேட்டால் சொல்வாரே சீனாவில் நம்பிக்கை இல்லை எனில்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

ரம்பின் ஆட்சிக் காலத்திலும் இப்படி 3 பலூன்கள் பறந்ததாக சொல்கிறார்கள்.

அப்போ... அதனை, சுட்டு விழுத்தவில்லையா?
ரம்பு சும்மா என்றாலே... துள்ளிக் குதிப்பார். 
இதை எப்படி இரகசியமாக கையாண்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

குண்டன் என்றால் ஒருவர்.

குண்டர் என்றால் பலர்.

சரி இப்ப எப்படி அழைக்கலாம்?

டன்  என்றே அழையுங்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

டன்  என்றே அழையுங்கள். 😂

அந்நாள் தன் துப்பாக்கியை யேர்மனிக்கு திரும்பப் போகுது 🤪

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அந்நாள் தன் துப்பாக்கியை யேர்மனிக்கு திரும்பப் போகுது 🤪

ஐயோ... ஜேர்மனியா. வேண்டாம்யா. 😂
உங்களுடைய குறி, அமெரிக்காவை நோக்கியே இருக்கட்டும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ஐயோ... ஜேர்மனியா. வேண்டாம்யா. 😂
உங்களுடைய குறி, அமெரிக்காவை நோக்கியே இருக்கட்டும். 🤣

அந்த பயம் இருக்கட்டும் 😂 இல்லையென்றால் அடுத்த முறை சந்திக்கும் போது Stuttgart க்கே அனுப்பும் படி சொல்லி விடுவேன் 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனா Vs அமெரிக்கா: பலூன்கள், செயற்கைக்கோள்கள், பறக்கும் சாதனங்கள் நம்மை உளவு பார்க்கின்றனவா?

  • பெட்ரா சிவிக்
  • பிபிசி உலக சேவை
4 மணி நேரங்களுக்கு முன்னர்
பலூனின் சுடப்பட்ட பாகங்களை தேடும் அமெரிக்க வீரர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பலூனின் சுடப்பட்ட பாகங்களை தேடும் அமெரிக்க வீரர்கள்

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

சுமார் ஒரு வார காலத்தில், அமெரிக்க வான் பரப்பில் பறந்த நான்கு 'பொருட்களை' அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது. அதில் முதலாவது உளவு பலூன் என்று கூறப்பட்டது. ஆனால் பிற மூன்று என்ன என்பது தெரியவில்லை. அவை நம்மை உளவு பார்க்க பயன்படுத்தப்பட்ட சாதனங்களா?

சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் மான்டானா மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நகரமான பில்லிங்க்ஸ் உள்ள மக்கள், வானில் ஏதோ வெள்ளை நிறத்தில் பெரிய வட்டத்தை பார்த்து ஆச்சரியமடைந்தனர். பின்னர் அது சீன உளவு பலூன் என்று சொல்லப்பட்டது. அதேபோல வானில் தென்பட்ட மூன்று 'பொருட்களை' அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.

ஆனால் அவை என்ன என்பது குறித்து தெளிவாக சொல்லப்படவில்லை. என அது என்ன என்ற ஊகங்கள் சமீப நாட்களில் அதிகரித்துள்ளது.

மிஷிகனில் ஹுரான் ஏரிக்கு மேல் அமெரிக்க - கனடா எல்லையில் ஒரு சாதனம் வீழ்த்தப்பட்டது. இதனை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் "எண்கோண அமைப்பில் உள்ள ஒன்று" என்று தெரிவித்தனர்.

 

"வாயுக்கள் நிறைந்த பலூன்" அல்லது "ஒருவகை உந்துவிசை அமைப்பு" 6 ஆயிரத்து 100 மீட்டர் உயரத்தில் பறந்தது. அது விமானப் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்திருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்தப் பொருட்கள் ஏதேனும் அந்நியப் பொருளாக இருக்கலாமா என்று கேட்டதற்கு இந்த தருணத்தில் நான் எதையும் நிராகரிக்கவில்லை என அமெரிக்க வடக்கு கமாண்ட் கமாண்டர் ஜெனரல் க்ளென் வேன்ஹெர்க் தெரிவித்தார்.

அதேபோல வேன்ஹெர்க் தற்போதைய நிலையில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் தெரிவித்தார்.

அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த 'மர்மப் பொருள்' என்ன?

அமெரிக்கா மற்றும் கனடா மீது பறந்த பிறகு சுட்டு வீழ்த்தப்பட்ட 'பொருட்களின்' எச்சங்களை அதிகாரிகள் கைப்பற்றி வருகின்றனர். அவை எங்கிருந்து வந்தன? அவற்றின் நோக்கம் என்ன என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தவில்லை.

சந்தேகத்திற்குரிய சீன பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு எடுத்த புகைப்படம்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

சந்தேகத்திற்குரிய சீன பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு எடுத்த புகைப்படம்

"இந்த பொருட்களால் ஏதேனும் தரவுகள் சேகரிக்கப்பட்டனவா என்றும், அதை மீட்க முடியுமா என்றும் அமெரிக்கர்கள் தற்போது ஆராய்ந்து கொண்டிருக்கலாம்," என பிராட்ஃபோட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் பாதுகாப்புத் துறை பேராசிரியர் கிறிஸ்டோஃப் ப்ளாத் பிபிசியிடம் தெரிவித்தார்.

வெள்ளியன்று அலாஸ்காவிலும், சனிக்கிழமையன்று வட மேற்கு கனடாவில் உள்ள யூகானிலும், 'இரு பொருட்கள்' சுட்டு வீழ்த்தப்பட்டன. அதேபோல ஞாயிறன்று மிஷிகனில் 'ஒரு பொருள்' சுட்டு வீழ்த்தப்பட்டது. இவை மூன்றும் உளவு பார்த்தலுக்காக பயன்படுத்தப்பட்டனவா என்பது தெரியவில்லை.

இந்த பொருட்கள் பலூனைப் போல இல்லை. இவை மிகவும் சிறியதாக உள்ளன. உடைந்த பாகங்களை கண்டறியும் வரை எதையும் தெளிவாக கூற இயலாது என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர் இங்கு பலூன் என்று சொல்வது, ஜனவரி 28ஆம் தேதி அலாஸ்காவின் அலூஷியன் தீவுக்கு மேல் கண்டறிந்த சீன உளவு பலூனைதான். அது எஃப் - 22 போர் விமானத்தால் பிப்ரவரி 4ஆம் தேதியன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

அது சீனாவிலிருந்து வந்தது என்றும், முக்கியமான வலைத்தளங்களை கண்காணிக்க அது பயன்படுத்தப்பட்டது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

உளவு பார்க்க பலூன்களை பயன்படுத்துவது ஏன்? அது எவ்வாறு தகவல்களை சேகரிக்கிறது?

சந்தேகத்திற்குரிய சீன பலூன், பிப்ரவரி மாதம் 2022

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சந்தேகத்திற்குரிய சீன பலூன், பிப்ரவரி மாதம் 2022

"இதற்கு முன்பும் இவ்வாறு நடந்துள்ளது. டிரம்ப் அதிபராக இருந்த சமயத்தில், அமெரிக்க வான்பரப்பில் மூன்று பலூன்கள் கண்டறியப்பட்டன. ஆனால் அது அமெரிக்க வான் பரப்பைவிட்டுச் செல்லும் வரை யாருக்கும் தெரியவில்லை" என்கிறார் ஆய்வாளர் ஜூலியானா சூயஸ்.

சந்தேகத்திற்குரிய அந்த சீன பலூன் பல நாட்களுக்கு அமெரிக்காவின் வான் பரப்பில் பறந்து கொண்டிருந்தது. அதன்பின் கனடாவின் வான்பரப்பில் நுழைந்து, அமெரிக்காவின் மேற்கத்திய மாகாணமான மான்டனாவின் வான்பரப்பில் நுழைந்தது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கே அணு ஆயுதத் தலம் ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பலூனில் மூன்று பேருந்துகளின் அளவு கொண்ட கொண்டாலாக்கள் (கூடை போன்ற அமைப்பு) இருந்தன என்றும், அதன் எடை ஒரு டன்னுக்கு மேல் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது. அதில் பல்வேறு ஆன்டனாக்கள் பொருத்தப்பட்டிருந்தன என்றும் பல்வேறு உளவுத் தகவலை சேகரிக்கும் சென்சார்களுக்கான ஆற்றலை வழங்க சூரிய தகடுகள் அதில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பலூன்கள் தற்போது மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் 18 ஆம் நூற்றாண்டிலிருந்து பலூன்கள் உளவு பார்த்தல் பணிக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பிரஞ்சுப் புரட்சிக் காலத்திலிருந்து பலூன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்கிறார் சூயஸ்.

இருப்பினும் தற்போது பயன்படுத்தப்படும் பலூன்களுக்கும் சில நூற்றாண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட பலூன்களுக்கும் வித்தியாசங்கள் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

"இன்று பலூன்களில் ஹைட்ரஜனுக்கு பதிலாக ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது. அது பகலில் விரிகிறது. இரவில் உயரச் சென்று காற்று வெளியேற்றப்படுகிறது. ஹீலியம் இருக்கும் வரை பலூன்கள் மிதந்து கொண்டு இருக்கும்" என விளக்குகிறார் சூயஸ்.

இம்மாதிரியான உளவு பலூன்களில், ரேடார் அல்லது தகவல்களை சேகரிக்கும் வசதி கொண்ட உபகரணங்கள், புகைப்படங்களை எடுக்க கேமராக்கள் ஆகியவை இருக்கும்.

பலூன்கள் எவ்வளவு தூரத்தில் உள்ளதோ அவ்வளவு தூரம் நீங்கள் படங்களை பார்த்து கொள்ளலாம். ஆனால் செயற்கைக்கோள்கள் பலூன்களைக் காட்டிலும் உயரத்தில் இருக்ககூடியவை. நீங்கள் எத்தனை குறைந்த தூரத்திலிருந்து புகைப்படங்களை எடுக்கிறீர்களோ அத்தனை தெளிவாக நீங்கள் பார்த்து கொள்ளலாம்.

உளவு சேகரிக்கப் பயன்படுத்தப்படும் பிற சாதனங்கள் என்னென்ன?

அமெரிக்க தரவுகளின்படி, சீனா 300 செயற்கைக்கோளுடன் விரிவான உளவு அமைப்பை கொண்டுள்ளது. ஆனால் சீன உளவு அமைப்பின் வலிமை, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாகத்தான் உள்ளது. ஆனால் பலூன்கள் சில நேரங்களில் அதிக பலனளிக்கும் என சூயஸ் தெரிவிக்கிறார்.

"பலூன்களுக்கு அதிக செலவு தேவையில்லை. அதை விரைவில் நிறுவ முடியும். செயற்கைக்கோள்கள் கணிக்கப்படும் சுற்று வட்டப் பாதையிலேயே சுழலும். அதேபோல ஒரு நாளில் ஒரே இடத்தில் பல முறை சுற்றி வரும். ஒரு இடத்தில் நிகழும் மாற்றங்களைக் கண்டறியும் அளவுக்கு நீண்ட காலத்திற்கு அந்த பகுதியை ஆராய முடியாது." என்கிறார் சூயஸ்

அதேபோல செயற்கைக்கோள்களும் இதற்கு முன்னர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

"ஆனால் நாடுகள் தங்களின் செயற்கைக்கோள்களை மட்டுமே சுட்டு வீழ்த்தியுள்ளன. சீனா அதனின் ஒரு செயற்கைக்கோளைச் சுட்டு வீழ்த்தியுள்ளது. ரஷ்யாவும் அவ்வாறு செய்துள்ளது. அதேபோல இதுவரை எந்த ஒரு நாடும் பிற நாட்டின் செயற்கைக்கோளைச் சுட்டு வீழ்த்தவில்லை" என்கிறார் அவர்.

அதேபோல உளவு பார்க்கும் பணியில் தற்போது ட்ரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் சூயஸ்.

"ஆனால் பனிப்போர் காலத்தின் தொடக்கத்தில் அமெரிக்கா தீயணைப்பு விமானங்களை உளவு விமானங்களாகப் பயன்படுத்தியது. சோவியத் ஒன்றியம் அதை சுட்டு வீழ்த்த நன்றாகப் பழகும் வரை அதைப் பயன்படுத்தியது" என்கிறா ப்ளத்.

அதேபோல உளவு பார்த்தலில் பனிப்போர் காலம் புதிய நடைமுறைகளை கொண்டுவந்தது.

"உளவு பார்க்கும் விமானங்கள் அந்த பிராந்தியங்களின் வரைமுறையை மீறுவதாகக் கருதப்பட்டது. மறுபுறம் கண்காணிப்பு செயற்கைக்கோள்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது." என்கிறார் ப்ளத்.

"ஆனால் உளவு பார்க்க பறக்கும் சாதனங்களை பயன்படுத்துவது என்பது புரிந்து கொள்ள சற்று கடினம்தான்" என்கிறார்.

இதில் சில விஷயங்களுக்கு அனுமதி உண்டு சில விஷயங்களுக்கு அனுமதி இல்லை. வெளிநாட்டு பலூன்களுக்கு பொதுவாக அமெரிக்கா அனுமதி அளிப்பதில்லை. இருப்பினும் உளவு விமானங்கள் இன்றளவும் பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் ப்ளாத்.

"அமெரிக்காவே உளவு பார்க்க பல விமானங்களை பயன்படுத்துகிறது. அது பிற நாடுகளின் எல்லையை ஒட்டி பறக்கும். விமானங்கள் தரையிறக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அமெரிக்க விமானம் ஒன்று சீனாவால் தரையிறக்கப்பட்டது. அது ஒரு ராஜீய சம்பவமாக கருதப்பட்டது. புஷ் ஆட்சிக் காலத்தில் இந்த சம்பவம் நடந்தேறியது" என்கிறார் ப்ளாத்.

இதன் விளைவுகள் என்ன?

சீன பலூன் தரையிறக்கப்பட்டப்பின்

பட மூலாதாரம்,REUTERS

மூன்று பறக்கும் சாதனங்கள் தரையிறக்கப்பட்டபின் அமெரிக்கா ராணுவ எச்சரிக்கையுடன் உள்ளது.

முதல் பலூன் சம்பவம் நடந்த பிறகு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆன்டனி பிளின்கன் சீனாவுக்கான தனது பயணத்தை ரத்து செய்தார்.

ஆனால் அது உளவு பலூன் இல்லை என்றும், வானிலையைக் கண்காணிக்கும் கருவி என்றும் சீனா கூறியது.

கடந்த வருடத்தில் 10க்கும் மேற்பட்ட பலூன்களை சீன வான் பரப்பில் அமெரிக்கா பறக்கவிட்டதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் திங்களன்று தெரிவித்திருந்தது.

சுட்டு வீழ்த்தப்பட்ட மூன்று 'பொருட்கள்' என்ன என்று அமெரிக்க அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

"அந்த சாதனங்கள் விமானத்திற்கு இடையூறு விளைவிப்பதால் அவை வீழ்த்தப்பட்டிருக்கலாம்," என்கிறார் ப்ளாத்

இருப்பினும் இந்த பலூன் சம்பவம் புதிய நடைமுறைகளுக்கு வித்திடலாம் என ப்ளாத் தெரிவிக்கிறார்.

"இந்த பிரச்னைக்கு தீர்வு காணவே அமெரிக்கா விரும்பும். இம்மாதிரியாக உளவு பலூன்களை அனுமதிக்காத வண்ணம் சில ஒப்பந்தங்கள் கொண்டு வரப்படும். வானிலையை கண்காணிக்கும் ஏதேனும் பலூன்கள் இருந்தால் அது அமெரிக்காவின் வான்பரப்பில் நுழைந்தவுடன் தகவல் வழங்க வேண்டும் என்று கோரப்படும்" என்கிறார் ப்ளாத்.

https://www.bbc.com/tamil/global-64641215

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

60 ஆயிரம் அடி உயரத்தில் எடுக்கப்பட்ட சீன உளவு பலூன் ‘செல்பி’ படம்

 

world-news-5.jpg

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள அந்த நாட்டின் இராணுவ தளங்களின் மீது சீன உளவு பலூன் பறக்க விடப்பட்டு, அது தெற்கு கரோலினாவில் ஏவுகணை தாக்குதல் நடத்தி அட்லாண்டிக் பெருங்கடலில் வீழ்த்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்துவதற்கு முன்பாக, 60 ஆயிரம் அடி உயரத்தில், அதைக் கண்காணித்த ‘எப்-2 ராப்டர்’ போர் விமானத்தின் விமானி எடுத்த ‘செல்பி’ படத்தை அமெரிக்க இராணுவ தலைமையகம் பென்டகன் வெளியிட்டுள்ளது.

அந்தப் படம் சீன உளவு பலூனின் மர்மமான வெள்ளை கோளத்தில் பேனல்கள் தொங்குவதைக் காட்டுகிறது. பலூனுக்கு எதிராக தாக்குதல் தொடுத்த அமெரிக்க விமானத்தின் நிழலின் ஒரு குறிப்பிடத்தக்க காட்சியையும் அது வெளிப்படுத்தியது. இந்த ‘செல்பி’ படம், அமெரிக்க கண்டத்துக்கு மேலே உள்ள வான்வெளியில் அதிக உயரத்தில் பலூன் நுழைந்தபோதே, விமானப்படை வீரரால் எடுக்கப்பட்டது என்று சி.என்.என். தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/241740

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.