Jump to content

அதிசயக்குதிரை


Recommended Posts

நல்ல ஜோக் வசம்பு. இணைப்புக்கு நன்றி. :lol:

சிம்புவிடம் கற்பனை பேட்டி

--------------------------------------------------------------------------------

லியோ - வணக்கம்.

சிம்பு - சொல்லமாட்டேன் வணக்கம். ஏன்னா நிருபருக்கும் எனக்கும் பிணக்கம்.

லியோ - ஐயோ என்னங்க நீங்க உங்க அப்பா மாதிரி ஆரம்பிச்சிட்டீங்க.

சிம்பு - உன் கண்ணு நொள்ளை. எங்க அப்பாவுக்கு நான் புள்ளை. கேளுடா கேள்விய இல்லாட்டா இடத்தை பண்ணு காலிய.

லியோ - உங்கள் அடுத்தப்படம்?

சிம்பு - லூசுப்பையா

லியோ - என்னங்க படம் பெயர் கேட்டா திட்டறீங்க.

சிம்பு - அதான்டா அடுத்த படம். புரிஞ்சுக்கடா நீ ஜடம்.

லியோ - உங்களுக்கு தனுஷூக்கும் ஆக மாட்டேங்குதாமே எதக்கு.

சிம்பு - அவன் கட்டிக்கிட்டா ஒரு பொண்ணே, அவ தான்டா என் கண்ணே

லியோ - அப்ப நயன்தாரா

சிம்பு - அது யாருடா நயன்தாரா, அவ தான் என் கால வார்ரா

லியோ - நீங்க படம் எடுக்கிற அளவுக்கு மெச்சூரிட்டி வர்லைன்னு பேசிக்கறாங்களே.

சிம்பு - எனக்கு தேவையில்லை மெச்சூரிட்டி, என் படம் பார்க்க வர்றவங்க லூஸு மெஜாரிட்டி

லியோ - இந்த வயசுல உங்கப்பா டூயட் பாடி ஆடினது சகிக்கலைன்னு சொல்றாங்களே. இதை தடுத்து தமிழ் திரை உலகத்தை காப்பத்தக் கூடாதா.

சிம்பு - அவர் தான்டா என் அப்பா, ஆடுவாருடா டான்சு டப்பா, இதெல்லாம் என்ன தப்பா, விஜயகாந்து ஆடினா பாக்குறியே நீ சுப்பா

லியோ - ஐயா ஆளை விடப்பா.

சிம்பு - போடங் ................... நீ என்ன பெரிய பிஸ்தா. நான் போய் சாப்பிடுவேன் பாஸ்தா.

Link to comment
Share on other sites

  • 4 months later...

ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நண்பர்கள் பலர் சூழ்ந்திருந்து உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது !

ராஜா : நான் இலங்கையில் இருந்தபோது மாதம் ஒருமுறை விமானத்தில் இந்தியா செல்வதுண்டு.ஒருமுறை நான் பயணித்துக் கொண்டிருந்த விமானம் முகிலுக்குள் இறுகி நின்றுவிட்ட‌து. விமானி திறமையுள்ளவர் என்றபடியால் அவருடைய முயற்சியால் முகிலைக் கிழித்து, விமானத்தைத் தொடர்ந்து செலுத்தி, எம்மை பத்திரமாக தரையில் இறக்கினார். அதில் பயணித்த எமக்கு அப்போதுதான் நிம்மதியே வந்தது.

‘ராஜா’ கூறுவது பொய் என்று உணர்ந்து கொண்ட குணா !

ராஜா, இப்படித்தான் நான் ஒருமுறை இந்தியா சென்று கொண்டிருந்த போது, 40000, அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென‌ நின்றுவிட்ட‌து.

உடனே விமானி எல்லோரையும் இறங்கி விமானத்தைத் தள்ளச் சொல்லிவிட்டார்.

நாங்கள் எல்லோரும் இறங்கித் தள்ளி விமானத்தை ஸ்ராட் பண்ணித்தான் தொடர்ந்து பயணம் செய்தனாங்கள் என்று கூறியதும்!

கேட்டுக் கொண்டிருந்தவர்களின் உதடுகளில் இருந்து புன்னகை ஒலி வெடித்துச் சிதறியது

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

சொர்க்க வாசலில் புஷ்

சொர்க்கத்திற்குள் நுழைபவர்களிடம் ‘அவர்கள் சரியான நபர்கள்தானா?’ என்ற சோதனை நடத்தப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். ஐன்ஸ்டீன் வந்தார். ‘அவர்தான் ஐன்ஸ்டீன்’ என்பதை நிரூபிக்குமாறு கேட்டார்கள். அவர் ஒரு கரும்பலகையைக் கொண்டு வரச் சொன்னார். அதில் ரிலேடிவிட்டி தியரியை விளக்க ஆரம்பித்தார். அவர் ஐன்ஸ்டீன்தான் என்பதை அறிந்துகொண்ட காவலாளிகள், உள்ளே போக அனுமதித்தார்கள்.

அடுத்து பிக்காசோ வந்தார். அவருக்கும் அதே சோதனை. பிக்காசோ, ஐன்ஸ்டீன் எழுதிய ரிலேட்டிவிட்டி தியரியை ஆங்காங்கே அழித்தும், இடையில் சில கோடுகள் போட்டும் ‘இதுதான் மாடர்ன் ஆர்ட்’ என்றார். அவரையும் உள்ளே அனுமதித்தார்கள்.

அடுத்து புஷ் வந்தார். அவரிடம் சொன்னார்கள்: ஐன்ஸ்டீனும், பிக்காசோவும் தங்களை நிரூபித்து விட்டு சொர்க்கத்திற்குள் போயிருக்கிறார்கள். அதேபோல் நீங்களும் உங்களை நிரூபித்துவிட்டு, உள்ளே போகலாம்.

ஐன்ஸ்டீன், பிக்காசோ? யார் அவர்கள்?

அப்ப கண்டிப்பா நீங்கதான் புஷ். நீங்க உள்ளே போகலாம்.

Link to comment
Share on other sites

அல்லைபிட்டியில் ஒரு சிறிய நீச்சல் தடாகம் மக்களின் நலன் கருதி கட்டப்பட்டது. ஊர்மக்கள் எல்லாரும் ஒன்று கூட திறப்பு விழா ஊர் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. அந்த நாளும் வந்தது. சிறியோர் முதல் பெரியோர் வரை திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். திறப்பு விழாவுக்கான சிறிய மேடையும் அமைக்கப்பட்டு ஊர் பெரியார் ஒருவர் நாடாவை வெட்ட தயார் செய்து கொண்டிருந்த போது தவறுதலாக குழந்தை ஒன்று நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து விட்டது. எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் உள்ளனரே ஒழிய குழந்தையை காப்பாற்ற ஒருவரும் எத்தனிக்கவில்லை. கடைசியில் வயோதிபர் ஒருவர் நீரில் குதித்து குழந்தையை காப்பாற்றி விடுகிறார். எல்லோரும் ஆச்சரியத்துடன் வயோதிபரை பார்க்கிறார்கள். விழா தலைவர் அவ்வயோதிபரை ஒலி வாங்கிக்கு கிட்ட அழைத்து அவரது தீரச்செயலை பாராட்டினார். உங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என விழா தலைவர் கேட்க அதற்கு வயோதிபரும் ஆம் என்பது போல் தலையை ஆட்டுகிறார்.

விழா தலைவர்: உங்கள் தீர செயலை நாங்கள் எல்லோரும் மெச்சுகிறோம். குறிப்பாக குழந்தையின் பெற்றோர் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள். அதாவது நீச்சல் தடாகத்துக்குள் குதிக்கும் முன் எப்படியான மன நிலையில் இருந்தீர்கள்?

வயோதிபர்: நான் குதிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. நான் விழாவை மட்டும் ரசித்து கொண்டிருந்தேன்.

விழா தலைவர்: அப்படியா? நல்லது . இப்போ என்ன நிலையில் உள்ளீர்கள் என்பதை மக்களுக்கு சொல்ல முடியுமா?

வயோதிபர்: நானா எங்கை குதிச்சனான். மவனே எனக்கு பின்னாலே நிண்டு என்னை தடாகத்துக்குள்ளே தள்ளினவனை மட்டும் இப்ப தெரிஞ்சிருந்தால் அவனுக்கு காதைப்பொத்தி குடுத்திருப்பன்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

அமெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் 'குட் வ்னிங் சார்..'சர்தார் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'. சர்தார் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சர்தாரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிடி நல்லாய் இருக்கு சரியான லைசன்ஸ் இல்லை .......குடிச்சிட்டு ஓடுறார் .....திருட்டு கார் வேற ....

.இதெல்லாம் விடுங்க ...........அந்த பத்தாயிரம் ஆருக்கு ..........?... :rolleyes:

Link to comment
Share on other sites

  • 1 month later...

பகிடி நல்லாய் இருக்கு சரியான லைசன்ஸ் இல்லை .......குடிச்சிட்டு ஓடுறார் .....திருட்டு கார் வேற ....

.இதெல்லாம் விடுங்க ...........அந்த பத்தாயிரம் ஆருக்கு ..........?... :)

பத்தாயிரம் பொலிசுக்கு. :unsure::lol:

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புரட்சித்தலைவியின் உடன்பிறவா சகோதரி சசிகலா அம்மையாருக்கு சொர்க்கத்துக்குச் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்ததாம். சொர்க்கத்துக்கு டூர் போனவர் அங்கே எமதர்மராஜனை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

எமதர்மராஜனின் அறை முழுவதும் கோடிக்கணக்கான வால்கிளாக் போன்ற கருவிகள் இருந்திருக்கிறது. அந்தக் கருவியில் ஒரே ஒரு முள் மட்டும் இருந்திருக்கிறது. “அது என்ன” என்று சசிகலா கேட்டிருக்கிறார்.

அதற்கு எமதர்மராஜன் “இந்த இயந்திரம் மூலம் பொய் பேசுபவர்கள் எவ்வளவு பொய் பேசுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்கலாம். ஒவ்வொரு மனிதரும் ஒரு பொய் பேசும் போது முள் ஒரு முறை சுற்றி வரும். கீழே இருக்கும் கவுண்டரில் முள் எத்தனை முறை சுற்றி வந்தது என பதிவாகும். இதன் மூலம் மனிதர்கள் எவ்வளவு பொய் பேசினார்கள் என்று அறிந்து அதற்கேற்ற தண்டனையைக் கொடுப்போம்” என்றிருக்கிறார்.

இந்த கான்செப்டில் மிகவும் கவரப்பட்ட சசிகலா சில பேரின் பொய் பேசும் இயந்திரங்களை சுற்றிப் பார்த்தார். கவுதம புத்தரின் இயந்திரத்தில் முள் ஒரு முறை கூட சுற்றாமல் கவுண்டர் ஜீரோவிலேயே இருந்திருக்கிறது. அடுத்ததாக மகாத்மாவின் இயந்திரத்தை சென்று பார்த்திருக்கிறார். முள் மூன்று முறை சுற்றியிருக்கிறது.

வேறு யாரோ ஒருவருடைய இயந்திரத்தை சசிகலா தேடிப் பார்த்திருக்கிறார். அது கிடைக்கவேயில்லை. சசிகலா மீண்டும் மீண்டும் தேடிப் பார்ப்பதைப் பார்த்த சித்திரகுப்தன், “மேடம். மே ஐ ஹெல்ப் யூ” என்று கேட்டார்.

உடனே சசிகலா, “அக்காவோட பொய்பேசும் இயந்திரம் இங்கே காணுமே? அது எங்கே” என்றார்.

“மேடம் இந்த அறையிலே உங்க தலைக்கு மேல ஓடிக்கிட்டிருக்கிற மின்விசிறி தான் உங்க அக்காவோட பொய் பேசுற இயந்திரம்” என்றாராம் சித்திரகுப்தன்.

Link to comment
Share on other sites

Letter to Bill Gates from Banta Singh of Punjab

Dear Mr Gates,

This is Banta Singh from Punjab. We have bought a computer for our home and we found problems, which I want to bring to your notice.

After connecting to internet we planned to open e-mail account and

whenever we fill the form in Hotmail in the p******word column,

only ****** appears, but in the rest of the fields whatever we typed appears, but we face this problem only in p******word field. We checked with hardware vendor Santa Singh and he said that there is no problem in keyboard.

Because of this we open the e-mail account with p******word *****. I request you to check this as we ourselves do not know what the

p******word is.

We are unable to enter anything after we click the shut down button.

There is a button 'start' but there is no stop button.

We request you to check this.

We find there is 'Run' in the menu. One of my friend clicked 'run' and ran upto Amritsar! So, we request you to change that to sit so that we can click that by sitting at one place.

One doubt is that any 're-scooter' available in system? As I find only 're-cycle', but I own a scooter at my home.

Also there is 'Find' button but it is not working properly. My wife

lost the door key and we tried a lot for tracing the key with

this 'find', but unable to trace. Is it a bug??

Thanks & Regards,

Banta Singh

Punjab

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வியாபாரத் தந்திரங்கள் தெரிந்துகொள்ள எம்.பி.ஏ. படித்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

உங்களில் பலருக்கும் இது நிகழ்ந்திருக்கலாம்.

துணிக் கடையில் பான்ட் துணி வாங்கப் போகும் போது, ரொம்ப சுமாரானவைகளையே கடைக்காரர் காட்டிக் கொண்டிருப்பார். அலமாரியில் காட்டி அதோ அதெல்லாம் நல்லா இருக்கே எடுங்க என்று சொன்னால்

அதெல்லாம் காஸ்ட்லி ஐட்டம் சார் என்று உங்கள் ஈகோவைப் பிராண்டுவார்.

இதிலிருக்கும் சூழ்ச்சி தெரியாதவர்கள் உடனே சிலிர்த்துக் கொண்டு

காஸ்ட்டைப் பத்திக் கவலை இல்ல என்பார்கள்.

அவ்வளவுதான். அதற்கப்புறம் யானை விலை ஐட்டம் முழுசையும் விற்று விடுவார் கடைக்காரர்.

எங்கள் ஊரில் ஒரு ஒய்வு பெற்ற தமிழாசிரியர் இருந்தார். மகா கஞ்சர். சுலபத்தில் எதுவும் வாங்கி விட மாட்டார். ஆனால் தமிழ் மேல் அலாதி பிரியம் கொண்டவர். தமிழ்த் திறமை எங்கே இருந்தாலும் மனம் திறந்து பாராட்டுவார். அவரை பொருள் வாங்க வைக்க மார்க்கெட்டில் இருப்பவர்கள் படாத பாடு படுவார்கள்.

கறிகாய்க் கடை பழனிக்கு அவர் குணம் ரொம்ப நன்றாகத் தெரியும். அவரை கவிழ்ப்பதற்கு புதுப் புது பொறிகள் வைப்பான்.

நன்றாகப் பழுத்து கும்ம் என்று வாசனை அடிக்கும் கொய்யாப் பழங்களைக் காட்டி

அய்யா, கொய்யாக்காய் வாங்கிக்கங்க என்பான்.

பழம்ன்னு சொல்லு. பக்கத்து ஊர் வரைக்கும் வாசனை வருது, இதைப் போய் காய்ங்கிறியே

உங்க கிட்டே படிச்சிட்டு எப்டிய்யா இலக்கணப் பிழையோட பேசறது?

எது இலக்கணப் பிழை?

அய்யா, இதெல்லாம் கொய்யா(மல் விடப்பட்ட) காய்கள். அப்படி விட்டதால் கனிகளா ஆனவை. இதையெல்லாம் கொய்யாக் காய்கள்ன்னும் சொல்லலாம், கொய்த கனிகள்ன்னும் சொல்லலாம்

கேட்க வேண்டுமா? ஆசிரியர் அகமகிழ்ந்து ஒரு டசன் வாங்கிக் கொண்டார்.

அடுத்த நாள் மார்கெட் பக்கம் வந்த ஆசிரியர்,

என்னப்பா.. இன்னிக்கு என்ன புதுசா? என்றார்.

இன்னைக்கு கல்கட்டாப் புடலங்காய்தான் ஐயா புதுசு

இங்கே பார், நீ நேத்து சொன்னது நல்ல தமிழ் விளக்கம். அதனாலே பழம் வாங்கினேன். கல்கத்தாவிலே புடலங்காய் விசேஷமா? சும்மா விக்கணும்ங்கிறதுக்காக பொய் பேசக்கூடாது

பொய்யெல்லாம் ஒண்ணுமில்லை. கல் கட்டாம வளர்த்த புடலங்காய் இதுன்னு சொன்னேன்

புடலங்காய்கள் பிஞ்சாக இருக்கும்போது வளையாமல் இருக்க கல்லைக் கட்டி விடுவார்கள்.

ஆசிரியரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

இரண்டு புடலங்காய்களை வாங்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.

Edited by nunavilan
Link to comment
Share on other sites

  • 3 months later...

இளம் துறவிகள் இரண்டு பேர் பிரயாணம் செய்யும் போது , வழியில் ஆற்றைக் கடக்கவேண்டியிருந்தது. ஆற்றில் நிறைய நீர் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது இளம்பெண் ஒருத்தி துறவிகளை நோக்கி ஓடிவந்தாள். "ஐயா எனது தாயாருக்கு ரொம்பவும் உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். அக்கரையில் உள்ள எனது வீட்டிற்கு ஆற்றைக்கடந்து எப்படிப் போவது என்று தெரியவில்லை. தயவுசெய்து என்னை அக்கரைக்கு அழைத்துப்போங்கள்" என துறவிகளிடம் அழுதவண்ணம் மன்றாடினாள். அதைக்கேட்டு முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார் ஒரு துறவி.

இன்னொரு துறவி சிறிது நேரம் யோசித்து விட்டு அந்தப்பெண்ணை அழைத்து தனது தோளில் உட்கார வைத்து ஆற்றைக்கடந்தார். அக்கரைக்கு வந்ததும் அப்பெண்ணைத் தோளிலிருந்து இறக்கிவிட்டார். அப்பெண் அந்தத் துறவிக்கு நன்றி கூறி அவரை வாழ்த்தி விட்டுச்சென்றாள்.

இரண்டு துறவிகளும் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்கள். பெண்ணைத் தோளில் சுமந்து வந்த துறவியிடம் மற்றய துறவி, "ஒரு துறவி இப்படி நடந்து கொள்ளலாமா? இது நியாயம்தானா?" என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு மற்றய துறவி பதில் கூறாமலேயே வந்தார். கேள்வி கேட்ட துறவிக்கோ கோபம் அதிகமாயிற்று.

"உங்களுக்கு துறவு நிலை மறந்துவிட்டதா? அப்பெண்ணை நீர் தோளில் சுமந்து வந்தது சரிதானா? நான் கேட்டதற்கு பதில் பேசாமல் வருவது ஏனொ?" என்று கடிந்தார். பொறுமையாக கேட்டுக்கொண்டு வந்த அந்தத் துறவி, "துறவியாரே.. நான் தோளில் சுமந்து வந்த பெண்ணை கரையிலேயே இறக்கி அனுப்பி விட்டேன்! நீங்கள் அவளை இன்னுமா சுமந்து கொண்டு வருகிறீர்கள்?" என்றார். கேட்ட துறவியோ வெட்கித் தலை குனிந்தார்.

Edited by nunavilan
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அது ஒரு வெள்ளிக்கிழமை, மாலை நேரம்.

டெல்லியின் சர்தார் தெருவில் வார விடுமுறைக்கு எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தனர். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நிறைந்த அந்தப் பகுதியில் பெயருக்கு ஒன்றிரண்டு சீக்கியர்கள் இருந்தனர். அதில் சரண்சிங்கும் ஒருவர். வெள்ளி மாலையை மசாலா கலந்த தந்தூரி சிக்கனுடன் கொண்டாடுவது அவரது வழக்கம். அன்றும் வழக்கம் போல் தன் சமையலை ஆரம்பித்தார். மசாலா வாசம் மூக்கைத் துளைத்தது.

திடீரென, படபடவென்று சிங்கின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. சிக்கனை பங்கு போட நண்பர்கள் யாரோ வந்துவிட்டார்கள் என நினைத்தவாறே கதவைத் திறக்க, அங்கே கிறிஸ்தவ பாதிரியார் நின்றிருந்தார்.

அவரை வரவேற்று விஷயம் என்னவென்று கேட்டார் சிங்.

சற்றே தயக்கத்துடன் பாதிரியார் சொல்ல ஆரம்பித்தார்,"கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வெள்ளிக்கிழமை சிக்கன் உண்ணக் கூடாது. உங்கள் தந்தூரி வாசம் எங்களை சிக்கன் பற்றி எண்ண வைக்கிறது"

ஏதோ உளறுகிறார் என நினைத்த சிங்கை, விதவிதமான கதைகள், பிரசங்கங்களைக் கூறி கிறிஸ்தவராக மாற கட்டாயப்படுத்தினார் பாதிரியார். சிக்கனை நினைத்தபடியே எல்லாவற்றுக்கும் 'சரி' என தலையாட்டிக் கொண்டிருந்த சிங், அதற்கும் தலையாட்டி விட்டார்.

உடனே புனித நீரை எடுத்த பாதர், "சீக்கியராக பிறந்து, சீக்கியராக வளர்ந்த நீங்கள், தேவலாயப் புனித நீர் உங்கள் மீது தெளிக்கப்படுவதன் மூலம் கிறிஸ்தவராகிறீர்கள்" எனக் கூறி நீரைத் தெளித்துவிட்டு கிளம்பினார்.

ரொம்ப நாட்களாய் சிங்கின் தந்தூரியை நினைத்துக் கொண்டு ஜெபம் சொல்லிக் கொண்டு இருந்த கிறிஸ்தவர்கள், இனி நிம்மதியாய் தேவனை ஆராதிக்கலாம் என நிம்மதிக் கொண்டனர்.

அடுத்த வெள்ளி மாலை.

மீண்டும் சிங்கின் தந்தூரி வாசம். கோபமடைந்த கிறிஸ்தவர்கள், பாதிரியாருடன் சிங்கின் வீட்டிற்கு வந்தனர்.

"கத்தோலிக்கராக மாறிவிட்ட நீங்கள், இன்று சிக்கன் சாப்பிடக் கூடாதல்லவா? ஏன் மரபை மீறுகிறீர்கள்?" என பாதிரியார் கேட்க, வந்திருந்த அனைவரையும் அமைதியாய் ஒரு முறை பார்த்த சரண் சிங், பாதிரியாரின் கையிலிருந்த புனித நீரை சிக்கன் மீது தெளித்து,"சிக்கனாகப் பிறந்து, சிக்கனாக வளர்ந்த இந்த ஆன்மா, தேவனின் புனித நீர் தெளிக்கப்படுவதன் மூலம் தக்காளியாகவும், உருளைக் கிழங்காகவும் மாற்றப்படுகிறது" என்று கூறிவிட்டு சிக்கனைக் கையிலெடுத்து சுவைக்கத் தொடங்கினார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிக்கனாய் பிறந்து .........சிக்கினாய் வளர்ந்த ஆன்மா.........நல்லாயிருக்கு.

Link to comment
Share on other sites

  • 3 months later...

பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க .. ..

எப்படி ?

கல்யாணம் முடிஞ்சதும் அவ படிச்சது கல்கி, குமுதம்-னு சொல்றாங்க .. .

******

எதுக்கு அந்த நடிகை அந்தப் பத்திரிகை மேல மானநஷ்ட வழக்கு போட்டிருக்காங்க .. .. ?

அவங்களுக்கு உடம்பு சரியில்லைங்கற நியூஸை தொழில் பக்கத்துல வெளியிட்டாங்களாம்

******

ரெண்டு பெண்கள் பேசிட்டு இருந்தாங்க. என் கணவர் தினமும் ராத்திரி லேட்டா தான் வீட்டுக்கு வர்றார். என்ன பண்றதுன்னே தெரியலே-னு சொன்னா முதல் பெண். அதுக்கு ரெண்டாவது பெண் என் கணவர் கூட லேட்டாதான் வந்திட்டிருந்தார். இப்பல்லாம் ஆபீஸ் அஞ்சு மணிக்கு விட்டா, டாண்ணு அஞ்சரைக்கு வீட்டில் இருக்கிறார்-னா முதல் பெண்ணுக்கு செம ஆச்சரியம் அப்படி என்னதான் பண்ணினே ?-னு கேட்டா.

ஒரு நாள் வழக்கம் போல அவர் லேட்டா வந்தார். நான் தூக்கக் கலக்கத்துல வேணும்னே, யாரு .. .. முரளியா?-னு கேட்டேன். அவளோ தான் என்னோட ட்ரீட்மெண்ட்னு சொன்னா ரெண்டாவது பெண்.

முதல் பெண் புரியலையே இதுல அப்படி என்ன இருக்கு?-னு கேட்டதுக்கு ரெண்டாவது பெண் சொன்னாள் வேறொண்ணும் இல்லை. என் கணவரோட பெயர் முரளி கிடையாது .. .கார்த்திக்

******

ஒரு வக்கீலிடம் நீங்க ரொம்ப காஸ்ட்லி வக்கீல் .. .. ஒரு கேள்விக்கு ஆயிரம் ரூபாய் வாங்குவீங்கன்னு கேள்விப்பட்டேன். நான் ரெண்டாயிரம் ரூபாய் தரேன். என்னோட ரெண்டு கேள்விகளுக்கு பதில் சொல்வீங்களா?-னு கேட்டான் ஒருத்தன்.

நிச்சயமா .. .. சரி .. .. உங்க ரெண்டாவது கேள்வி என்ன?-னு கேட்டார் வக்கீல்.

******

நர்ஸ் : டாக்டர், எதுக்கும் இவருக்கு தலையில் ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாமா?

டாக்டர் : ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் எதுக்கு ஸ்கேன்?

******

எங்க ஊர்ல பெரிய பெரிய அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் எல்லாம் பிறந்திருக்கிறாங்க.

எங்க ஊர்ல குழந்தைங்கதான் பிறக்கும்.

*******

பெண்ணின் அப்பா : பெண்ணைப் பிடிக்கலேன்னா, இப்பவே சொல்லிடுங்க.

மாப்பிள்ளை வீட்டார் : ஏன் அவசரப்படறீங்க?

பெண்ணின் அப்பா : தரகர், அடுத்த பார்ட்டியோட வெளியில காத்துக்கிட்டு இருக்கார்.

******

நடிகர் : என்னது, இந்த சீன்ல, நூறு அடி உயரத்திலிருந்து, நீச்சல் குளத்தில் குதிக்கணுமா? எனக்கு நீச்சல் தெரியாதே!

டைரக்டர் : பயப்படாதீங்க, அதுல ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை!

******

நோயாளி : டாக்டர், என்னால முந்தி மாதிரி நடக்கவோ ஓடவோ முடியலைங்க. உடம்பு பெருத்துக்கிட்டே போகுது.

டாக்டர் : நீங்க முதல்ல கோழி, மீன், ஆடு, மாடுன்னு கண்ணுல்ல பட்டதெல்லாம் சாப்பிடுறதை நிப்பாட்டினால்தான் உங்க உடம்பை காப்பாத்தமுடியும்..

நோயாளி : நான் சாப்பிடுறதையே என்னால கட்டுப்படுத்த முடியலை டாக்டர், ஆடு மாடு சாப்பிடுறதையெல்லாம் நான் எப்படி கட்டுப்படுத்துவது?

Link to comment
Share on other sites

உங்க பையன் அவங்க அம்மாவை மம்மின்னு கூப்பிடறான், சரி, உங்களை கம்மி-ன்னு கூப்பிடறானே, அது ஏன் சார் ?

வீட்ல எனக்கு பவர் ரொம்ப கம்மியாம், அதான் குத்திக்காட்டுறான்.

******

தலைவரே தொண்டர்கள் கூட்டமா இருக்கிறப்ப ஆட்டோகிராஃப் போடாதீங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா ?

ஏன் இப்ப என்னாச்சு ?

கூட்டத்தோடு கூட்டமா எவனோ ஒருத்தன் உங்க செக்புக்குல கையெழுத்து வாங்கிட்டான்.

******

கண்ணா உன்கூட விளையாட தம்பிப் பாப்பா, தங்கச்சிப் பாப்பா வேண்டாமாடா கண்ணா?

எனக்காக நீங்க கஷ்டப்பட வேண்டாம் டாடி .. .. நான் எதிர்வீட்டுப் பாப்பா கூட விளையாடிக்கிறேன்

******

என் பையன் மத்தப் பசங்களை மாதிரி ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி பாட்டெல்லாம் பாட மாட்டான், வெறும் பக்திப் பாட்டுதான் பாடுவான்.

ஆப்படியா ?

ஆமாம் ஆண்டாளு என் ஆண்டாளு .. .. திருப்பதி எழுமலை வெங்கடேசா., யப்பா யப்பா ஐயப்பா இந்த மாதிரிதான் பாடுவான்.

******

எதுக்க அவரை செருப்பால அடிச்சே ?

அவர்தாங்க, பேசிக்கிட்டிருக்கும்போதே, “அடிச்செருப்பாலே”ன்னு சொன்னார்.

******

“இது நல்லாயில்லைங்க.”

“என்னங்க நல்லாயில்ல?”

“உங்க நாய்க்குப் பிறந்த நாள் கொண்டாட வேண்டியதுதான் அதுக்காக எல்லோருக்கும் ஸ்வீட்டுக்குப் பதிலா நாய் பிஸ்கட் கொடுக்கறது அவ்வளவு நல்லா இல்லை”

******

இது பயங்கரமான திகில் படமா, எப்படிச் சொல்றே ?

‘விக்’ முடிகூட சிலுத்துக்குதே.

******

ஒரு கிராமத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானியிடம் பாமரன் ஒருவன் “என்ன சாமி செய்யறீங்க?” என்று கேட்டான்.

தாவர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கேன் என்றார் அந்த விஞ்ஞானி.

அப்படியா “அப்போ, ஒரு நாளைக்கு எத்தனை தடவை தாவுறீங்க .. .?” என்று மீண்டும் கேட்டான் அந்தப் பாமரன்.

Thanks:Piravakam@googlegroups.com

Link to comment
Share on other sites

மலைப் பாதையால் பஸ் இறங்கிக் கொண்டிருந்தது.

டிரைவர்: ஹா.. ஹஹ்ஹா...ஹஹ்ஹா...

கண்டக்டர்: சிரிப்பு பலமா இருக்கே, சொல்லீட்டு சிரிங்கண்ணே..

டிரைவ‌ர்: இடுக்க‌ண் வ‌ருங்கால் ந‌குக அப்பிடீன்னு வள்ளுவர் சொல்லீருக்கார்.

பஸ்ஸில பிறேக் அறுந்திடிச்சுப்பா..

**************

‍‍

கடவுள் ஒருவன் முன் தோன்றினார்.

ப‌க்த‌ன்: க‌ட‌வுளே உங்க‌ள் க‌ண‌க்கில் ஒரு கோடி வ‌ருட‌ம் எவ்வ‌ள‌வு கால‌ம்?

க‌ட‌வுள்: ஒரு செக்கன் பக்தா..

பக்தன்: ஒரு கோடி டாலர்.. ?

கடவுள்: ஒரு சதம் பக்தா..

பக்தன்: எனக்கு ஒரு சதம் உங்கள் கருணையால் தந்துதவக் கூடாதா?

கடவுள்: இதோ, ஒரு செக்கனில் தருகிறேன் பக்தா..

******************

ஒரு வாட்டசாட்டமான எருது ஒரு விலங்குக் காட்சி சாலைக்கு புதிதாகக் கொண்டுவரப்பட்டது. எல்லா மிருகங்களிடமும் அது சென்று உன் தொழில் என்ன என்று கேட்டு விசாரித்துக் கொண்டிருந்தது.

இதை எல்லாம் ஒரு வரிக்குதிரை பார்த்துக் கொண்டிருந்தது.அன்று அத‌ற்கு ச‌ற்றுக் க‌டுப்பு வேறு..

‌வரிக்குதிரையிடம் எருது வந்தது.. "உன் தொழில் என்ன‌ப்பா?"

வ‌ரிக்குதிரை எரிச்ச‌லுட‌ன், " எல்லாரிட‌மும் கேட்கிறாயே, முத‌லில் உன் தொழில் என்ன‌ என்று சொல்லேன்"

எருது சொல்லிற்று " உன் வ‌ரி வ‌ரி பைஜாமாவைக் க‌ழ‌ற்று என் தொழில் என்ன‌ என்று காட்டுகிறேன்"

Link to comment
Share on other sites

புதிதாகக் கல்லூரியில் சேர்ந்த மாணவன் ஒருவன் விலங்கியல் தேர்விற்காக இரவு முழுவதும் கண் விழித்துப் படித்தான்.

மறுநாள் தேர்வு எழுதுவதற்காக வகுப்பு அறைக்குள் நுழைந்தான். பேராசிரியரின் மேசையின் மேல் உடல் முழுவதும் போர்வையால் மூடிக் கட்டப்பட்டிருந்த பத்துப் பறவைகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்தப் பறவைகளின் கால்கள் மட்டுமே தெரிந்தன.

தேர்வு நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் முன் வரிசையில் அமர்ந்தான் அவன்.

பேராசிரியர் வகுப்பிற்கு வந்தார். மாணவர்களைப் பார்த்து, "நீங்கள் ஒவ்வொருவரும் மேசையின் அருகே வந்து பறவைகளின் கால்களைப் பார்க்க வேண்டும். அதைக் கொண்டே அவற்றின் பெயர், விலங்கியல் பெயர், பழக்க வழக்கங்கள், சிறப்பியல்புகள் எல்லாவற்றையும் எழுத வேண்டும். இதுதான் தேர்வு" என்றார்.

ஒவ்வொரு பறவையின் கால்களையும் உன்னிப்பாகப் பார்த்தான் அவன். அவனால் எந்தப் பறவையின் பெயரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இரவு கண் விழித்துப் படித்தது எல்லாம் வீணாயிற்றே என்று கோபம் கொண்டான் அவன்.

பேராசிரியரைப் பார்த்து, "இப்படியா தேர்வு வைப்பது? உங்களைப் போன்ற முட்டாளை நான் பார்த்ததே இல்லை" என்று கத்திவிட்டு வெளியே செல்லத் தொடங்கினான்.

அதிர்ச்சி அடைந்த அவர், அவனை மேலும் கீழும் பார்த்தார். வகுப்பில் நிறைய மாணவர்கள் இருந்ததால் அவன் பெயர் தெரியவில்லை. "உன் பெயர் என்ன?" என்று கேட்டார்.

"அப்படி வாருங்கள் வழிக்கு" என்ற அவன் தன் பேண்ட்டை கால் முட்டி வரை சுருட்டினான்.

தன் கால்களை அவரிடம் காட்டி, "இவற்றைப் பார்த்து என் பெயரைச் சொல்லுங்கள் பார்ப்போம்" என்றான்.

Link to comment
Share on other sites

.

" ஓடுற பஸ்ஸுக்குள்ள அந்தாளு எதுக்கு ஓடீட்டு இருக்கிறாரு ? "

" இன்றர்வியூக்கு லேட்டாம். அதான். "

*****************

" கண்ணாடி முன்னால கண்ண மூடீற்று நிக்கிறானே .... ? "

" தான் தூங்கும் போது எப்பிடி இருக்கான்னு பார்க்கவாம். "

Link to comment
Share on other sites

தேவையில்லா தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்க சில ஐடியாக்கள்

முன்னுரை :

உங்களில் பலருக்கு "டெலிமார்க்கெட்டிங்" எனப்படும் நம் அனுமதியில்லாமலேயெ தொலைபேசி வாயிலாக தங்கள் பொருட்களை விளம்பரம் செய்யும் மார்க்கெட்டிங் ரம்பங்களுடன் பேசிய (அறுபட்ட) அனுபவங்கள் வாய்த்திருக்கும்!

இப்பேர்ப்பட்டவர்களிடமிருந்து தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தப்புவது எப்படி?

இதோ சில ஐடியாக்கள் :

1. டெலிமார்க்கெட்டர் பேசி முடித்தவுடன் "ஒன்ஸ்மோர் பிளீஸ்" என பாந்தமாக, பவ்யமாகக் கேளுங்கள். நடுநடுவே "ஓ.. லவ்லி.. ஆஹா.. ஓ..அப்படியா.. ஃபேண்டாஸ்டிக்" எனப் போட்டுத்தாக்கிவிட்டு கடைசியில், மீண்டும் ஆரம்பியுங்கள், "ஒன்ஸ்மோர் பிளீஸ்."

2. பேசத் தொடங்கியவுடனேயே நீங்கள் வேலையாக இருப்பதாகவும், போன் நம்பர் கொடுத்தால் பிறகு தானே பேசுவதாகவும் கூறுங்கள். ஆனால் பேசாதீர்கள்.

3. பேசிக்கொண்டிருக்கும்போது நடு நடுவே ஹலோ.. ஹலோ.. என அலறுங்கள். சிக்னல் கிடைக்காததால் விட்டுவிட்டுக் கேட்பதாகக் கூறுங்கள். முடிந்தால் சத்தமாக, வெகு சத்தமாகப் பேசச் சொல்லுங்கள். அவர்கள் உச்சஸ்தாயில் பேசிக்கொண்டிருக்கும்போதே லைனைக் கட் செய்யுங்கள்.

4. விஷயத்தைக் கேட்டுவிட்டு, தற்போது சாப்பிட்டுக்கொண்டிருப்பதாகவும் சாப்பிட்டு முடிக்கும்வரை லைனிலேயே காத்திருக்கும்படியும் வேண்டுங்கள். எப்போது போன் செய்தாலும் சற்றுக் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளுங்கள்.

5. போனை எடுத்து விபரம் கேட்டுவிட்டு, அந்த மொபைலை தன் நண்பர் மறந்துபோய் டேபிளில் வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டதாகக் கூறி, உங்களுக்குப் பிடிக்காத நபர் யாருடைய போன் நம்பராவது, முக்கியமாக டென்ஷன் பார்ட்டியாக இருந்தால் நல்லது. அவருடைய எண்ணைக் கொடுத்துப் பேசச் சொல்லுங்கள்.

6. எந்தப்பொருள் வாங்குவதாக இருந்தாலும் தனது மேனேஜர்தான் முடிவு செய்யவேண்டும், அதனால் அவரிடம் பேசுங்கள் எனக் கூறிவிட்டு, மொபைலில் பேசத் துடித்துக்கொண்டிருக்கும் உங்கள் நான்கரை வயது மகனிடம் கொடுங்கள். :wub:

7. அவர்களுடைய பொருள் மிக அருமையாக இருப்பதால் அதைப் பற்றிய விளக்கத்தை ஒவ்வொரு வார்த்தையாக மெதுவாக சொல்லச் சொல்லவும். ஏனென்றால் அதை பேப்பரில் எழுதுவதுபோல் பாவ்லா காட்டப்போகிறீர்கள்.

8. அவர்கள் பேச ஆரம்பிக்கும்போது, "நல்லா இருக்கீங்களா?" எனக் கேட்டுத்தான் ஆரம்பிப்பார்கள். ஆரம்பத்திலேயே பிடித்துவிடுங்கள், "அதை ஏன் சார் கேட்குறீங்க…. எங்க தாத்தா காலத்திலேர்ந்து…. " (1947ல் ஆரம்பித்து எதில் முடிக்கவேண்டுமென்பது உங்கள் விருப்பம்)

9. பேச ஆரம்பித்தவுடன் "ராங் நம்பர் சார்" எனக் கூறி விட்டு வைத்துவிடுங்கள்.

10. பேச ஆரம்பித்தவுடனேயே மலையாளம், ஹிந்தி, ஒரியா, குஜராத்தி போன்ற மொழிகளை மிக்ஸர் அடித்து ஒரு மொழியை உருவாக்கிப் பேசுங்கள். :D

11. ஆச்சரியத்துடன் பேச ஆரம்பியுங்கள், "ஜோசப் நீயாடா பேசறே.. உங்கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு." எதிர்முனை சொல்லும், தான் ஜோசப் இல்லை என்று. நீங்கள் விடாதீர்கள், "ச்சும்மா ஜோக் அடிக்காதடா… எனக்குக் காது குத்தியாச்சு..." எதிர்முனை எதிர்பாலினத்தவராக இருந்தால் இன்னும் சுவாரசியம் கூடும். :wub:

12. HSBC பேங்கிலிருந்து தொடர்பு கொண்டால் உங்கள் ஆபிஸ் எண்ணைக் கொடுத்து அந்த எண்ணுக்குப் பேசச் சொல்லுங்கள். அந்த எண் ICICI பேங்கின் மேலாளர் எண்ணாகத்தான் இருக்க வேண்டும் என நாம் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும்.

13. அவர்கள் தமிழில் பேசினாலும் ஆங்கிலத்தில் பேசச் சொல்லுங்கள். உங்கள் பீட்டர் இங்க்லீஷையும் 'டவுட் கேட்கிறேன் பேர்வழி!' என அவிழ்த்து விடுங்கள். இண்டர்வியூ செல்லும்முன் ஆங்கிலத்தில் பயமில்லாமல் பேசி பிராக்டிஸ் செய்வதற்கு இதை விட தோதான ஆட்கள் கிடைப்பார்களா என்ன?!

முடிவுரை :

இதையெல்லாம் பரீட்சித்துப் பார்க்குமுன் நல்ல பிள்ளையாக தெளிவாக, தன்மையாக, பொறுமையாக எடுத்துக்கூறுங்கள், இது போன்ற அழைப்புகள் தயவு செய்து வேண்டாமென்று. அவர்கள் பாவம் இல்லையா! அதைமீறி அவர்கள் கேட்கவில்லையென்றால் அவர்கள் காதில் இரத்தத்தைப் வரவைத்துவிட வேண்டியதுதான். ஹ்ம்ம்…வேறுவழி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து வேலைநேரத்திலை மனிசிமார் ரெலிபோன் எடுக்கேக்கை எப்பிடி காய்வெட்டி விடுறதெண்டதையும் சொன்னியளெண்டால் நீங்கள் போற வழிக்கு புண்ணியமாய்ப்போகும் :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நலியாத நகைச்சுவை

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தான் வறுமையில் இருந்தபோதும் தனக்கே உரிய நகைச்சுவை குன்றாமல் பேசுவார் என்பதற்கான ஒரு நெகிழ்ச்சியான நிகழ்ச்சி

கடன் சுமையால் அவரது வீடு ஏலத்திற்கு வந்தது. அந்த கோர்ட்டின் attachment ஆர்டரை அவரிடம் கொடுக்க கோர்ட்டிலிருந்து ஒரு ஆள் வந்திருந்தார். அப்போது என்.எஸ்.கே.யை பார்க்க வந்திருந்த ஒரு நண்பர் கோர்ட்டிலிருந்து வந்திருந்தவரைப்பார்த்து “யார் இவர்?” என்று கேட்டார்.

வழக்கமான சிரிப்புடன் என்.எஸ்.கே சொன்னார். “அவர் எனக்கு வேண்டியவர். அவருக்கும் எனக்கும் ரொம்ப attachment”

கோர்ட்டிலிருந்து வந்தவருக்கு ஒரு வேதனையான சிரிப்பு..

யார் துறவி?

முந்தைய காலங்களில் வயது முதிர்ந்தவர்கள் ஒரு நிலையில் துறவு மனப்பான்மையுடன் காசிக்கு நடந்தே செல்வது வழக்கமாக இருந்தது. அப்படி ஒரு தம்பதியர் துறவு பூண நடந்தே சென்று கொண்டிருக்கையில் ஒரு இடத்தில் மண்ணின் கீழே ஒரு வைரக்கல் இருப்பதை கணவர் பார்த்தார். அந்த வைரத்தைப் பார்த்தவுடன் மனம் மாறி தன் மனைவி துறவு மனப்பான்மையை மறந்து விடுவாளோ என்று எண்ணி அதைத் தன் கால்களால் மறைக்க முயன்றார். அதைக் கவனித்த மனைவி சொன்னாள். “மண்ணுக்கும் வைரத்திற்கும் வித்தியாசம் தெரிந்த நீங்கள் எப்படித் துறவியாக முடியும்?” என்று கேட்டாள். நாணினார் கணவர்!

ஏன் இந்த மவுனம்?

ரஸ்ய அதிபர் குருஷ்சேவ் பதவியேற்றவுடன் ஒரு பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் இழைத்த கொடுமைகளைப் பற்றி அடுக்கிக் கொண்டே பேசினார்.

கூட்டத்தில் இருந்த ஒருவன் குரல் கொடுத்தான் “நீங்கள் ஸ்டாலினின் மந்திரிசபையில் இருந்தவர்தானே? ஏன் அப்போதெல்லாம் பேசாமல் இருந்தீர்கள்? அவரை எதிர்த்து பேசியிருக்கலாமே?”

கேள்வி கேட்டவன் யாரென்று தெரியாததால் “யார் அப்படிக் கேட்டது?” என்று அதிகாரமாகக் கேட்டார் குருஷ்சேவ். ஒருவர் கூட வாய் திறக்கவில்லை. கேள்வி கேட்டவனும் பதில் சொல்லவில்லை.

சிறிது நேரத்திற்குப் பின்பு குருஷேவ் “இப்போது புரிந்திருக்குமே.. நான் ஸ்டாலினை ஏன் எதிர்த்துப் பேசவில்லை என்று” என்று அமைதியான குரலில் சொன்னார்.

ஸ்டாலினை எதிர்த்துப் பேசுவதற்கு எல்லோருமே பயந்தார்கள் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார் குருஷேவ்.

ஒரு ஜென் கதை

ஒரு ஜென் துறவி மரத்தடியில் தன் சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கையில் அவ்வழியாக வந்த அந்த நாட்டின் சேனாதிபதி துறவியிடம் கேட்டார். “நரகம் எ‎ன்றால் எது? அது ‏இருப்பது உண்மையெ‎ன்றால் அதைக் காட்ட முடியுமா?

“அது சரி. நீ யார்?”என்று கேட்டார் துறவி.

மமதையுடன் சொன்னான் அவன். “நான்தா‎ன் இந்நாட்டின் சேனாதிபதி”

துறவி ஏளனமாகச் சிரித்தார். “நீயா.. சேனாதிபதியா? உன்னைப் பார்த்தால் ஆடு வெட்டும் கசாப்புக் கடைக்காரன் மாதிரியல்லவா இருக்கிறது?”

சேனாதிபதிக்கு வந்ததே கோபம்! வாளை எடுத்தான். ஆத்திரத்துடன் பல்லைக் கடித்தபடி அவரைக் கொல்ல வந்தான்.

ஜென் துறவி, கோபமும், ஆத்திரமும், அகங்காரமும் அடங்கிய அவனது முகத்தை நோக்கி சுட்டிக்காட்டி “இதுதான் நரகம்” என்றார்.

கோபத்தை விட பெரிய நரகம் எது?

எத்தனை நேரம்?

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்காக நீண்ட க்யூ நி‎ன்றிருந்தது. அதில் ஒரு வெள்ளையருக்கு முன் ஒரு கறுப்பு இனத்தவர் நின்று கொண்டிருந்தார். வெள்ளையர் நேச பாவத்துடன் முன்னால் இருந்த கறுப்பு இனத்தவரைக் கேட்டார். “வெகு நேரமாகக் காத்திருக்கிறீர்களா?”

அவர் சுருக்கென்று பதில் சொன்னார். “ஆமாம்.. இருநூறு வருஷங்களாக!”

முடிந்தால் சிரிக்கலாம் - எது நின்றது?

டாக்டர் ஒரு நோயாளியின் நாடியை ஒரு கையாலும், ஒரு வாட்சை இன்னொரு கையாலும் பிடித்தபடி மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தார்.

பக்கத்திலிருந்த நர்ஸ் எதுவும் புரியாமல் கேட்டாள் “என்ன டாக்டர் வாட்ச்சையும் பேஷண்டின் நாடியையும் மாறி மாறிப் பார்க்கிறீர்களே.. ஏன்?”

டாக்டர் சொன்னார். “இந்த இரண்டில் ஏதோ ஒன்று நின்று விட்டது. அது எது என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!”

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா! ஏதாவது பழையது இருந்தால் கொடுங்கள்!

அம்மா வீட்டில் இல்லை பிறகு வா!

எனக்கு அவ வேண்டாம் ஐயா! பழைய சோறு மட்டும் போதும்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

இரண்டு காதுகளும் கருகிய நிலையில் ஒரு சர்தார் டாக்டரிடம் வந்தார்

டாக்டர் - காது எப்படி கருகியது

சர்தார் - டெலிபோனும் இஸ்திரி பெட்டியும் பக்கத்தில் இருந்தது. அப்போது டெலிபோன் மணி அடித்தால் தவறுதலாக இஸ்திரி பெட்டியை காதில் வைத்து விட்டேன்.

டாக்டர் - அது சரி அடுத்த காது எப்படி கருகியது

சர்தார் - அந்த டெலிபோன் மணி மறுபடியும் அடித்ததே........

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

A male driver is pulled over by a cop and the following conversation takes place:

Man: What's the problem officer?

Cop: You were going at least 75 in a 55 zone.

Man: No sir, I was going 65.

Wife: Oh Harry. You were going 80.

(Man gives his wife a dirty look.)

Cop: I'm also going to give you a ticket for your broken tail light.

Man: Broken tail light? I didn't know about a broken tail light!

Wife: Oh Harry, you've known about that tail light for weeks.

(Man gives his wife a dirty look.)

Cop: I'm also going to give you a citation for not wearing your seat belt.

Man: Oh, I just took it off when you were walking up to the car.

Wife: Oh Harry, you never wear your seat belt.

Man: Shut your mouth, woman!

Cop: Ma'am, does your husband always talk to you this way?

Wife: No, only when he's drunk.

----------------------------------------------------------------------------------------------

சங்கீத கச்சேரி நடை பெற்றுகொண்டிருந்தது. பாகவதர் ஒரு பாடலை பாடிமுடித்ததும்

ரசிகர் ஒருவர் எழுந்து மீண்டும் மீண்டும் ஒன்ஸ் மோர் என்று கேட்டார் பாகவதரும் பாடினார் பாடி முடித்த பின், ரசிகரிடம்

பாகவதர்- என்ன பாட்டு அவ்வளவு பிடித்திருந்ததா?

ரசிகர் - இல்ல சரியா பாடற வரைக்கும் விடறதில்லை........

----------------------------------------------------------------------------------------------------------

ரயிலை தண்டவாளத்தை விட்டு இறக்கி ஓட்டிய குற்றத்திற்காக சர்தார் கோர்ட்டுக்கு போகநேர்ந்தது.

நீதிபதி சர்தாரை பார்த்து ஒரு ஆள் தண்டவாளத்தில் இருந்தான் என்பதற்காக ஏன் ரயிலை தடம் மாற்றி ஒட்டினாய் அதற்க்கு பதிலாக தண்டவாளதிளிருந்தவன் மீது வண்டியை ஏற்றியிருந்தால் 1000 பேரை காப்பற்றியிருக்கலாமே ?

சர்தார்: நானும் அப்படித்தான் சார் நினைத்தேன், ஆனால் அந்த மடயன் தண்டவாளத்தை விட்டு வேறு பக்கம் ஓட ஆரம்பித்து விட்டானே........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி பாடிக்கொண்டிருந்தாள். அங்கிருந்த ஒருத்தர் பக்கத்திலிருந்தவரிடம் இவ்வளவு மோசமாகப் பாடுகிறாளே யார் இவள் என்றார்!

மற்றவர் : அவள் என் சம்சாரம் என்றார்.

முதலாமவர்: ஓ, மன்னிக்கவும்! பாட்டு மோசமாய் இருந்தால் அவதான் என்ன செய்ய முடியும்!

மற்றவர் : அந்தப் பாட்டு எழுதியது நான்தான்! :lol:

Link to comment
Share on other sites

கவிஞன்:அன்பே............

காதலி :ம்ம்ம்........

கவி: என்னக்குள் எதோ ஒரு மற்றம்

காதலி:அது ஏமாற்றத்தின் எச்சரிக்கை

கவி: நீ என் இதயத்தை என்ன செய்தாய்

காதலி:அது பெரிய தங்க கட்டி செட்டு கடைல அடகு வச்சிருக்கேன்

கவி:என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை

காதலி:பகல் எல்லாம் வேலை வெட்டி இல்லாமல் நல்ல தூங்கினால் இப்படி தான்

கவி:சோறு இருக்கு சாப்பிட வில்லை,தலையணை இருக்கு உறங்க வில்லை

காதலி: சோப்பு இருக்கு ஆனால் குளிக்கவில்லை, இதையும் சொல்லுடா கப்பு தாங்கலை

கவி:உன்னை பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருக்கு

காத:அதான் டெய்லி நமீதா போஸ்டரை வாய பொளந்திட்டு பாக்குறியே

கவி:அன்பே உலகில் உன்னைவிட எனக்கு யாரும் முக்கியம் இல்லை

காதலி:எனக்கும் உன்னை விட்டால் வேற இழிச்ச வாயன் கிடைக்க மாட்டான்

கவி:வா நாம் அறத்துப்பால் பொருட்பால் மறந்து காமத்துப்பால் ரசிப்போம்

காதலி:செருப்பால் அடிப்பேன்

கவி:அது என்ன புது பால் இந்த செருப்பால்

காத:ஆண்பாலுக்கு பெண்பாலின் அன்பு பரிசு செருப்பால்!

Link to comment
Share on other sites

நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?

* நான் ஆபிசுக்கு லேட்’டா வந்தாலும் லேட்டஸ்ட் சாப்ட்வேரோடத்தான் வருவேன்...

* J to the A to the V to the A --- JAVA

* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.

* C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++

* நான் பாக்குறதுக்குதான் ஹார்ட்வேர் மாதிரி.. ஆனா என் மனசு சாப்ட்வேர் மாதிரி...

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் கேள்விக்கு உண்மையைக் கூறுங்கள் என்றே உறவுகள் அனேகர் பதில் பதிந்திருந்தார்கள், அதிலிருந்து யாழ்உறவுகளிடம் உறைந்துள்ள பொய்யற்ற உள்ளங்களும் வெளிப்படுகிறது, இருந்தும் உண்மை சுடும் என்பதால் என்பேரன் சூடுதாங்கும் பருவம்வந்தபின் அறிந்துகொள்ளட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.  ‘உண்மையில் நான் பொருள்தேடி வரவில்லை, காகித ஆலையில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த எனக்கு வழங்கப்பட்ட சம்பளமே வாழ்கை நடாத்தப் போதுமானது, சிங்ளப் பாடத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் என்பதவி உயர்வைத் தடுத்தது. தொழிலநுட்ப அறிவு குறைந்தவர்களாக மற்றவர்களால் நோக்கப்பட்ட, என் அதிகாரத்தின்கீழ் வேலைபார்த்த சில சிங்களரும், சிங்களமொழி தேர்ச்சி பெற்றவர்களும் என்னை அதிகாரம் செய்யும் நிலை ஏற்படுவதை யேர்மனியில் உள்ள என்நண்பனும் அறிந்து அங்கு வரும்படி அழைத்தார்.  இனக்கலவரம் என்ற பெயரில் தமிழினம் அழிக்கப்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் அகப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய அனுபவங்கள் மனதில் பயத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி புலம்பெயரும் முடிவை உறுதிப்படுத்தியது. அங்செல்வதற்கு எனக்கு அனுகூலமாகி உதவிய நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. சிறிது காலத்தில் பிறந்தமண் திரும்ப எண்ணிய வேளை 83 கலவரம் என் குடும்பத்தை புலம்பெயரவைத்து என்னுடன் வந்து இணையும்  நிலையை ஏற்படுத்தியது. சென்ற மாதம் எங்கள் மூத்த பேத்தியுடன் நானும் மனைவியும் பிறந்தமண் சென்றிருந்தோம், அங்குள்ள இயற்கை நிகழ்வுகளை பேத்தி வீடியோ படம்பிடித்து பதிவுசெய்திருந்தார், மரங்களில் தொங்கும் கனிகளை அணில்கள் இரு கைகள்போன்ற கால்களால்  ஏந்திக் கடிப்பதையும், பறவைகள் கொத்தி உண்பதையும் அவற்றைத் துரத்த அவை பயந்து ஓடிப் பறப்பதையும், காயப்போட்ட வத்தல்களை கொத்தவரும் கோழி மற்றும் அதன் குஞ்சுகளை பெரியம்மா விரட்டுவதையும், கடற்கரையில் அலைகள் வரும்போது சிறுவர்கள் ஓடுவதையும், அலைகள் பின்வாங்கும்போது அவர்கள் அவற்றைத் துரத்திச் செல்வதையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்துத் துள்ளி ரசித்தாராம். இங்கு இவைபோன்ற காட்சிகள் காண்பதற்கு இல்லையே என்ற ஆதங்கம் “சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்” என்ற கேள்வியை கேட்கவைத்துள்ளதுபோல் தெரிகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் சிறிசுகளின் கேள்விகளுக்குப் பதில்கூற முடியாது பெரிசுகள் முழிப்பது ஒன்றும் புதுமையல்ல.🤔😳  
    • 1980ம் ஆண்டுகளில் கூட சின்ன மேளம் என்று சொல்வது இலங்கையில் இருந்தது. 1980ம் ஆண்டுகளில் வருடம் தோறும் என்னுடைய ஊர் இந்திரவிழாவில் இப்படியான பெயரில் ஒரு குழுவினர் வந்து நடனம் ஆடுவார்கள். இருவர் தான் மேடையில் இருப்பார்கள், ஆனால் குழுவில் பலர் இருந்தனர். இந்தப் பெயரே ஏறக்குறைய ஒரு வசவுச்சொல் ஆகவே பிறநாட்களில் பயன்பட்டது. அசோகமித்ரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதையை எப்போது வாசித்தாலும், ஊரில் இடம்பெற்ற இந்த நடன நிகழ்வுகள் மனதில் வந்து வாட்டும். சமீபத்தில் 'ஜமா' என்றொரு திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பற்றிய எந்த தகவலும் தெரியாமலேயே தான் பார்த்தேன். கலைகளால் மீட்சியா அல்லது அதுவே சிலருக்கு ஒரு பெரும் துன்பமாக முடிகின்றதா என்ற குழப்பம் இன்னும் கூடியது.  
    • மிக்க மகிழ்ச்சி!   தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள். 
    • நாடு இருக்கும் நிலையில்... ஒரு வீட்டிற்கு சமைக்க,  16 சமையல்காரரை கேட்டால்... அப்படித்தானே நினைப்பார்கள். 😂
    • ஹன்ரர் பைடனுக்கு சீனியர் பைடன் மன்னிப்புக் கொடுக்க மாட்டார் என நம்புகிறேன். அவர் சிறை போகாமல் பாதுகாக்க பைடன் குடும்பத்திற்கு ஏனைய வழிகள் இருக்கின்றன. செனட்டர் மெனண்டெசுக்கு என்ன நடக்குமெனச் சொல்லக் கடினமாக இருக்கிறது. வன்முறைக் குற்றங்கள் அல்லாமல், ஊழல் மோசடிக் குற்றங்களால் தண்டனை பெற்ற அரசியல் பிரபலங்களுக்கு இரு கட்சிகளின் ஜனாதிபதிகளும் முன்னர் மன்னிப்பு வழங்கியிருக்கின்றனர். ஆனால், மெனெண்டஸ் தன் குற்றங்களுக்கு மன வருத்தம் கூட தெரிவிக்காமல் சமாளிக்கும் ஆளாக இருப்பது, மன்னிப்புப் பெற உதவாது.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.