Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி பெருமாள்......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பெருமாள் said:

இலவசத்தில் தான் இப்படியாக்கும் என்று நினைக்க கடந்த 15 திகதி chatgpt 4 வை அறிமுக படுத்த வழகமா நமது நட்பு முன்சூறு  2௦ டாலரை அழுது விட்டு நமக்கு ஆகா ஒகோ என்று பாட கடைசியில் நாமும் என்றர் ஆக நாங்க எதிர்பார்த்தது  அங்கு இல்லை .ஆனாலும் வேறு சில் பதில்கள் சூப்பராய் சொல்லுது .

நிச்சயம் காசு பார்ப்பதுதானே இவர்கள் நோக்கம். மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இலவச சேவையை வழங்குவார்கள். உதாரணமாக 2021 வரை உள்ள தகவல்களை மட்டும் வைத்து செயற்கை நுண்ணறிவு செயல்படுவது போல். 

நடப்பு, நேரடி தகவல்கள் அடிப்படையில் செயற்படும் செயற்கை நுண்ணறிவு பொறி பயன்பாட்டுக்கு தனிநபர்களிடமும், வர்த்தக தேவைகளுக்கு வெவ்வேறு தரங்களில் கட்டணங்கள் அறவீடு செய்வார்கள்.

கைத்தொலைபேசி நிறுவனங்கள் போல இவர்களும் ஒரு காலத்தில் வந்துவிடுவார்கள். இத்தனை நிமிடங்கள் பயன்பாட்டுக்கு, இத்தனை கேள்விகளுக்கு, என காசு நன்றாக பார்க்கும் வகையில் இந்த பொறிமுறையை நிர்வகிப்பார்கள். 

Edited by நியாயத்தை கதைப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நிச்சயம் காசு பார்ப்பதுதானே இவர்கள் நோக்கம். மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இலவச சேவையை வழங்குவார்கள். உதாரணமாக 2021 வரை உள்ள தகவல்களை மட்டும் வைத்து செயற்கை நுண்ணறிவு செயல்படுவது போல். 

நடப்பு, நேரடி தகவல்கள் அடிப்படையில் செயற்படும் செயற்கை நுண்ணறிவு பொறி பயன்பாட்டுக்கு தனிநபர்களிடமும், வர்த்தக தேவைகளுக்கு வெவ்வேறு தரங்களில் கட்டணங்கள் அறவீடு செய்வார்கள்.

கைத்தொலைபேசி நிறுவனங்கள் போல இவர்களும் ஒரு காலத்தில் வந்துவிடுவார்கள். இத்தனை நிமிடங்கள் பயன்பாட்டுக்கு, இத்தனை கேள்விகளுக்கு, என காசு நன்றாக பார்க்கும் வகையில் இந்த பொறிமுறையை நிர்வகிப்பார்கள். 

பொறுக்க முடியாமல் 20 டொலர் கட்டி பார்க்க பல கேள்விகளில்   இலவசமாய் உள்ளதிலும் தான் பணம் கட்டினாலும் ஒன்றாகவே உள்ளது.

   ஆனால் அதன்  தமிழ் மொழி பெயர்ப்பு  சில இடங்களில் கூகிள் தோத்து  போகுது அது ஒன்றுதான் +

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பெருமாள் said:

பொறுக்க முடியாமல் 20 டொலர் கட்டி பார்க்க பல கேள்விகளில்   இலவசமாய் உள்ளதிலும் தான் பணம் கட்டினாலும் ஒன்றாகவே உள்ளது.

   ஆனால் அதன்  தமிழ் மொழி பெயர்ப்பு  சில இடங்களில் கூகிள் தோத்து  போகுது அது ஒன்றுதான் +

சட் ஜிபிடி தமிழில் புலமை பெற காலம் எடுக்கும். அதன் பிறகு வெண்பா தொடக்கம் ஹைக்கூ வரை எல்லாமே அழகு தமிழில் எழுதி ஜமாய்க்கும் என எதிர்பார்க்கலாம். 

தமிழில் பாண்டித்தியம் பெற்றவர்கள் செயற்கை நுண்ணறிவு பொறிக்கு தமிழ் கற்பிக்க வேண்டும். விரைவில் நிச்சயம் தமிழ் ஆர்வலர்கள் இந்த விடயத்தில் அக்கறை எடுப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள் புதிது புதிதாக அறிமுகப்படுத்துவதை மொக்கை  மாதிரி பார்த்துக் கொண்டிருப்பதே வேலையாகிவிட்டது. ஒரு சொல்லைத் தேட வெளிக்கிட்டால் ஏகப்பட்டவை கொட்டுப்படுகின்றன. கணனி ஒரு உளவாளி. 😒

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வல்வை சகாறா said:

பிள்ளைகள் புதிது புதிதாக அறிமுகப்படுத்துவதை மொக்கை  மாதிரி பார்த்துக் கொண்டிருப்பதே வேலையாகிவிட்டது. ஒரு சொல்லைத் தேட வெளிக்கிட்டால் ஏகப்பட்டவை கொட்டுப்படுகின்றன. கணனி ஒரு உளவாளி. 😒

லண்டனில் கதை வேறு ஒரு sa எழுத இரண்டுமணி நேர மனித நேரத்தை chatgpt யை வைத்து 2௦ நிமிட நேரத்தில் முடித்து கொள்கிறார்கள் வாத்திமரே அரண்டு போய் உள்ளார்கள் .

ஒரு சிறிய சாம்பிள் 

write one argumentative essay sa
 
Certainly! Here's an example argumentative essay on the topic of social media and its effects on mental health:

Social Media: A Double-Edged Sword for Mental Health

Social media has become an integral part of our daily lives. It is a powerful tool that allows us to connect with people from all over the world, share our thoughts and experiences, and stay up-to-date with the latest news and trends. However, there is a growing concern that social media may have negative effects on our mental health. While social media has its benefits, it is a double-edged sword that can harm our mental health in several ways.

One of the primary concerns about social media is that it can be addictive. Studies have shown that people who spend more time on social media are more likely to experience symptoms of anxiety and depression. This is because social media creates a false sense of connection and validation that can be difficult to replicate in real life. When we rely too heavily on social media for our social needs, we may become isolated and lonely, which can have a negative impact on our mental health.

Another issue with social media is that it can create a distorted view of reality. Social media platforms are designed to showcase the best aspects of people's lives, such as their achievements, relationships, and experiences. This can lead to feelings of inadequacy and low self-esteem, as we compare ourselves to others and feel like we are not measuring up. This can be especially harmful to young people who are still developing their sense of self and may be more vulnerable to social pressure.

Finally, social media can also expose us to cyberbullying and harassment, which can have a significant impact on our mental health. Online harassment can take many forms, such as trolling, doxxing, and threats of violence. This can create a hostile and unsafe online environment, which can spill over into our offline lives and cause stress and anxiety.

Despite these concerns, social media is not all bad. It can be a valuable tool for staying connected with friends and family, sharing information and resources, and building supportive communities. However, we need to be aware of the potential negative effects of social media and take steps to mitigate them. This includes setting limits on our social media use, being mindful of our online interactions, and seeking help if we are experiencing mental health problems.

In conclusion, social media is a double-edged sword that can both help and harm our mental health. While social media has many benefits, we need to be aware of the potential negative effects and take steps to protect ourselves. By using social media responsibly and mindfully, we can harness its power to build connections, share knowledge, and support each other.

Regenerate response
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, வல்வை சகாறா said:

பிள்ளைகள் புதிது புதிதாக அறிமுகப்படுத்துவதை மொக்கை  மாதிரி பார்த்துக் கொண்டிருப்பதே வேலையாகிவிட்டது. ஒரு சொல்லைத் தேட வெளிக்கிட்டால் ஏகப்பட்டவை கொட்டுப்படுகின்றன. கணனி ஒரு உளவாளி. 😒

நான் ஆரம்பத்தில், வாஸ்கொட காமா குறித்து கேட்டேன். அவர் இந்தியாவை வந்தடைந்த நாள் எல்லாம் சொல்லியது.

ஆனால் இந்தியா என்ற நாடு அப்போது இருக்கவில்லையே என்று சொன்னால், நீ சொல்வது சரியானது, பிரிட்டிஷ்காரர் உருவாக்கும் வரை இந்தியா இல்லை. அநேகமாக இந்திய துணைக்கண்டம் என்பதே சரி என்கிறது.

ஆகவே, உரையாடலுக்கு, சரியான பதிலை தருகிறது என்பது வியப்புக்குரியது.

உங்கள் அடுத்த கதைக்கான கருவினையும், அது குறித்த உரையாடல்களையும் நீங்கள் செய்து கொள்ள முடியும் என்பதால் அதன் உபயோகம் நீங்கள் முயலும் போதே தெரியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட் ஜி பிடியை இத்தாலி நாட்டு அரசு இன்று தடை செய்துள்ளது என சொல்லப்படுகின்றது.  சட்ஜிபிடி தனிப்பட்ட/தனிநபர் தகவல்களை சேகரிப்பதும் பயன்படுத்துவதுமான விடயங்களில் உள்ள தெளிவின்மை காரணமாக கூறப்படுகின்றது. இத்தாலியை தொடர்ந்து வேறு நாடுகளும் சட்ஜிபிடிக்கு எதிராக இவ்வாறான கட்டுப்பாடுகளில் இறங்கக்கூடும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

சட் ஜி பிடியை இத்தாலி நாட்டு அரசு இன்று தடை செய்துள்ளது என சொல்லப்படுகின்றது.  சட்ஜிபிடி தனிப்பட்ட/தனிநபர் தகவல்களை சேகரிப்பதும் பயன்படுத்துவதுமான விடயங்களில் உள்ள தெளிவின்மை காரணமாக கூறப்படுகின்றது. இத்தாலியை தொடர்ந்து வேறு நாடுகளும் சட்ஜிபிடிக்கு எதிராக இவ்வாறான கட்டுப்பாடுகளில் இறங்கக்கூடும். 

இத்தாலியின் தரவுப் பாதுகாப்பு ஏஜென்சியின் நடவடிக்கை அது அரசு அல்ல தேவையில்லாமல் வாத்திகான் பற்றி கிண்டியதால் வந்த வினை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பெருமாள் said:

இத்தாலியின் தரவுப் பாதுகாப்பு ஏஜென்சியின் நடவடிக்கை அது அரசு அல்ல தேவையில்லாமல் வாத்திகான் பற்றி கிண்டியதால் வந்த வினை .

தகவல்/திருத்தத்திற்கு நன்றி பெருமாள். நான் செய்தியை மேலோட்டமாக பார்த்தேன். இத்தாலியில் தடை என காண்பித்தது. 

விஞ்ஞானம் & தொழில்நுட்பம், வர்த்தகம்/வியாபாரம், அரசியல், நடைமுறை தனிமனித/சமூக வாழ்வு: இவை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை. கால தேவதையின் கரங்களில் நாமும் நனைந்து/தழுவுண்டு செல்கின்றோம். 

மீண்டும் இவ்வுலகில் மனிதனாக பிறக்கும் வாய்ப்பு கிடைத்தால் வாழ்ந்து பார்க்கத்தான் வேண்டும். 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, உடையார் said:

சிக்கல் தான் உடையார். பல்வேறு புதிய பரிமாணங்களில் புதிய பிரச்சனைகள் உருவாகும். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் பிரயோகம் விடயத்தில் புதிய சட்டங்கள், விதிமுறைகள், ஒழுக்க கோவைகள் என பல உருவாக்கப்படும். அனைவரின் ஒத்துழைப்பும் கிடைத்தால் நன்மை. அல்லது மனித சமூகத்திற்கு தீமையே. 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

சிக்கல் தான் உடையார். பல்வேறு புதிய பரிமாணங்களில் புதிய பிரச்சனைகள் உருவாகும். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் பிரயோகம் விடயத்தில் புதிய சட்டங்கள், விதிமுறைகள், ஒழுக்க கோவைகள் என பல உருவாக்கப்படும். அனைவரின் ஒத்துழைப்பும் கிடைத்தால் நன்மை. அல்லது மனித சமூகத்திற்கு தீமையே. 

இறுதியில் இது ஒரு பணம் பார்க்கும் வியாபார உத்தியாகத் தான் பயன்படுமென நினைக்கிறேன். ஏவுகணை விற்கும் இஸ்றேல், ஏவுகணையை தடுக்கும் தொழில்நுட்பத்தை எதிர் தரப்பிற்கு விற்பது போல, இந்த வகையான தொழில்நுட்பத்தை கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் துஷ்பிரயோகம் செய்யாது தடுக்கும் நுட்பத்தையும் கல்வி நிலையங்களுக்கு விற்க ஒரு கம்பனி கிளம்பும்! லொக்டவுண் பிறவுசர் போல ஒரு தயாரிப்பு வரலாம் விரைவில்.

ஆனால், Open AI போன்ற செயற்கை அறிவுத் தயாரிப்புகளால், அறிவுச் சோம்பேறிகள் அதிகம் உருவாவர் என நினைக்கிறேன். ஏற்கனவே யூ ரியூப்பில் வருபவன்  சொன்னால் வேதமென்று இருக்கும் ஆட்களுக்கு, இனி இது தான் கைத்தடி. சமூகம் இன்னொரு 10 வருடத்தில் இதன் விளைவை உணரக் கூடும்! 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

ஏற்கனவே யூ ரியூப்பில் வருபவன்  சொன்னால் வேதமென்று இருக்கும் ஆட்களுக்கு, இனி இது தான் கைத்தடி. 

சிலருக்கு யூரிப்பின் மறுபக்கம் தெரியாவிட்டால் இப்படிதான் கருத்தெழுதுவார்கள், அன்னத்திற்கு தெரியும் பாலெது தண்ணியெது என, யூ ரியூப்பால் இந்தளவுக்கு பாதிப்படைந்துள்ளீர்களா????, அதனால் விளையும் நன்மைகள் உங்களுக்கு கண்ணுக்கு தெரியவில்லையா, ;நன்மைகளையும் பார்த்து கருத்தெழுதுங்கள், உங்களை போல் மற்றவர்களை நினைக்க வேண்டாம். மற்றவர்களுக்கு தெரியும் எது நல்லது கெட்டதுவென

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

சிலருக்கு யூரிப்பின் மறுபக்கம் தெரியாவிட்டால் இப்படிதான் கருத்தெழுதுவார்கள், அன்னத்திற்கு தெரியும் பாலெது தண்ணியெது என, யூ ரியூப்பால் இந்தளவுக்கு பாதிப்படைந்துள்ளீர்களா????, அதனால் விளையும் நன்மைகள் உங்களுக்கு கண்ணுக்கு தெரியவில்லையா, ;நன்மைகளையும் பார்த்து கருத்தெழுதுங்கள், உங்களை போல் மற்றவர்களை நினைக்க வேண்டாம். மற்றவர்களுக்கு தெரியும் எது நல்லது கெட்டதுவென

யூ ரியூப்பினால் எனக்கு நன்மை எப்பவாவது வீட்டில் சிறு திருத்த வேலைகள் செய்ய வேண்டியிருந்தால் அதை உரிய நிபுணர் எப்படி செய்கிறாரென்று பார்த்து விடுவது. மற்றது வடிவேல் பகிடி பார்ப்பது.

தீமை? எனக்கல்ல தனிப்பட, ஆனால் ஒட்டு மொத்தமாக சமுதாயத்திற்கு. உதாரணமாக நேற்று "ஜப்பானில் குறையாக உருவான மனித குழந்தைகளை உணவாகச் சாப்பிடுகிறார்கள்"😎 என ஒருவர் யூ ரியூபில் பார்த்த பின்னர் சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் நம்பும் ஆட்களை உருவாக்கி, இன்று எந்தக் குப்பையைப் போட்டாலும் நம்பும் ஒரு முட்டாப்பீஸ் சமுதாயத்தை உருவாக்கிய பெருமை யூ ரியுப்பிற்கே உரித்தானது!

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.