Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘வெடியரசன் கோட்டை’ பௌத்த தூபியாகிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘வெடியரசன் கோட்டை’ பௌத்த தூபியாகிறதா?

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மேற்குப் பகுதியில் சிதைவடைந்த நிலையில் காணப்படும் புராதன வெடியரசன் கோட்டைப் பாகங்களை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சங்களாக நிறுவுவதற்கான நடவடிக்கைகள் நெடுந்தீவில் முனைப்புடன் இடம்பெற்று வருகின்றன.

இந்தக் கோட்டையின் வரலாற்றை திரிபுபடுத்தும் நோக்குடன் நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையிலும் கோட்டை காணப்படும் இடத்திலும் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தப் புராதன கோட்டையின் பாகங்கள் பௌத்த தாது கோபுரத்தின் எச்சங்கள் என திடீரென விளம்பரப் பலகைகள் முளைத்துள்ளன.

spacer.png

இந்த விளம்பரத்தில் ‘ பல்வேறு தொல்பொருள் கலைப்பொருட்கள் தீவில் உள்ளன. மற்றும் பழங்கால மதிப்புள்ள மூன்று ஸ்தூபிகள்(கோபுரம்) இங்கு காணப்படுகின்றன. இந்தத் ஸ்தூபிகள் வெவ்வேறு அளவுகளில் உள்ளன. மிகப் பெரிய ஸ்தூபியின் கல்லறையில் மூன்று கல்வெட்டுகள் காணப்பட்டன.’
‘பெரிய ஸ்தூபியின் விட்டம் 13.54 மீற்றர். அதன் சுற்றளவு 31.93 மீற்றர். கல்வெட்டுகளில் ஒன்று பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. பிராமி கல்வெட்டு கி.பி. 1-2 நூற்றாண்டுக்கு முற்பட்டது என்றும் சிங்கள பிராகிருதத்தில் எழுதப்பட்டது என்றும் கல்வெட்டு நிபுணர்கள் நம்புகின்றனர்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த விளப்பரப் பலகையில் ‘பௌத்த இடிபாடுகளைக் கொண்ட இந்தத் தளம் டெல்ஃப்ட் தீவின்(நெடுந்தீவு) புராதன பௌத்த தளம். இது கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. பெரிய ஸ்தூபி பவளக்கல்லால் ஆனது. ஏனைய இரு ஸ்தூபிகளும் கிழக்கு மேற்காக அமைந்துள்ளன.’ என குறிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் புராதன தளமானது வெடியரசன் மன்னனின் வரலாற்றுடன் தொடர்புடையது எனவும் இவை குறித்த வரலாற்றுப் பதிவுகள் பல்வேறு புராதன தமிழ் ஆவணங்களில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இந்த நடவடிக்கை திட்டமிட்ட வகையில் தமிழ் வரலாற்றை திரிபுபடுத்தும் பௌத்த ஆக்கிரமிப்பு எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் விளம்பரப்படுத்தலுக்காக பிரதேச சபை அனுமதி பெறப்பட்டதா? விளம்பரப் பலகைகள் நாட்டப்பட்டமை குறித்து உரிய அதிகாரிகள் இதுவரை கவனம் செலுத்தாது இருப்பது ஏன் எனவும் நெடுந்தீவு மக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தப் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை வடக்கில் உள்ள வரலாற்றுப் பேராசிரியர்கள், பல்கலைக்கழக சமூகம், புத்திஜீவிகள் விரைந்து தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என நெடுந்தீவு மக்கள் கோரியுள்ளனர்.

 

http://www.samakalam.com/வெடியரசன்-கோட்டை-பௌத்த/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறைபடியாத தமிழர் வரலாற்றுக்குள் பௌத்தத்தை திணிக்காதீர் - அங்கஜன் இராமநாதன்

Published By: T. Saranya

17 Mar, 2023 | 09:59 AM
image

தமிழர்களுடைய வரலாற்றை திரிவுபடுத்தி அதனூடாக மேற்கொள்ளப்படவுள்ள பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை உரிய அதிகாரிகள் உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டுமென யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்தமயமாக்கல் செயற்பாட்டினை கண்டித்து வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தனது அறிக்கையில்,

வெடியரச மன்னன் யாழ்ப்பாண இராசதானிகளின் கீழ் கி.மு 200ஆம் ஆண்டுகளில் நெடுந்தீவு மற்றும் காரைநகர் பகுதிகளை ஆட்சி செய்த சிற்றரசன் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.

இந்நிலையில் வெடியரசன் கோட்டையின் எச்சங்களை பௌத்த தாது கோபுர எச்சங்களாக சித்தரித்து மேற்கொள்ளப்படவுள்ள பௌத்தமயமாக்கல் செயற்பாட்டிற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

நெடுந்தீவு தமிழர்களுடைய வரலாற்றை பறைசாற்றும் தலைசிறந்த சுற்றுலாத்தளம்.

இந்நிலையில் அங்கு திட்டமிட்டு பௌத்தமயமாக்கல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.

கோட்டை மற்றும் மாவிலி இறங்குதுறைப் பகுதிகளில் பிரதேசசபையின் அனுமதி இன்றி சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் நாட்டப்பட்டுள்ள விளம்பர பலகையை அகற்றி கோட்டையின் பாரம்பரியத்தையும் - வரலாற்றையும் பேண உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கறைபடியாத வீரத் தமிழர் வரலாற்றுக்குள் பௌத்தத்தை திணிக்கும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.அதிகாரிகள் இனங்களுக்கிடையில் விரோதங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டு மக்களுக்குள் குரோதங்களை ஏற்படுத்திவிட்டு ஒருபோதும் பொருளாதார மீட்சியைப் பெற முடியாது என்பதனை உரிய தரப்பினர் உணர்ந்துகொள்ள வேண்டும்.

335666795_2073536482836055_4202977087718

  •  

 

 

https://www.virakesari.lk/article/150723

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சில சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் கந்தளாய் குளத்தை போய் பார்த்த பொழுது அங்கே உள்ள குளக்கோட்ட மன்னனின்  சிலையைப் பார்த்தேன் .அது குள க்கோட்டுவ மன்னன் என்றும் அவர் ஒரு சிங்கள மன்னன் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

பண்டார வன்னியனை வன்னி பண்டார என்று ஒரு வரலாறு  பல ஆண்டுகளுக்கு முன்பாக புனையப்பட்டதாக அறிந்தேன். அது எப்படி முடிந்தது அல்லது அதே பெயருடன் தொடருகிறதா தெரியவில்லை. இன்னும் பல ஆண்டுகள் போனால் நம்ம தேசியத்தலைவரையும் தமதாக்கி பெயர் மாற்றம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேய்ப்பன் இல்லா மந்தைகள்தானே நாங்கள். எங்களது வரலாறுகள் மாற்றப்பட்டு நிலமற்ற வந்தேறுகுடிகளாக காண்பிக்கப்படுகிறது. சிங்களவர் அதையே நம்புகின்றனர். நம்ம எதிர்கால சந்ததியும் அதை ஏற்றுக்கொள்வதை விட வேறு வழியில்லை அவர்களுக்கு. நாடு பிடிக்க வந்த ஆங்கிலேயர் நமக்குத் தந்துவிட்டுச் சென்ற பரிசு.     

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்தமயமாக்கல் செயற்பாட்டினை கண்டித்து வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

போற போக்கைப் பார்த்தால் அங்கஜன் கட்சியில் இருந்து இராஜினாமா செய்துடுவார் போல இருக்கே.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

போற போக்கைப் பார்த்தால் அங்கஜன் கட்சியில் இருந்து இராஜினாமா செய்துடுவார் போல இருக்கே.

இவர் ராஜினாமா செய்தா, நாமல் யாழ்ப்பாணம் வந்து யாரோடு ஊர் சுற்றுவது, படம் எடுத்துப்போடுவது? அவருக்கு அடுத்த தேர்தலில் வெல்லும் திட்டமாக இருக்கலாம், உண்மையான மனமாற்றமாக இருந்தால் வரவேற்கலாம். அரசியர்த்தீர்வை விட அபிவிருத்தியே பெரிது செய்து முடிக்கிறோம் என்றவர்களுக்கு இப்போ புரிந்திருக்கும் சிங்களத்தின் தந்திரம். அபிவிருத்தியுமில்லை, தீர்வுமில்லை, நில அபகரிப்பு செய்யும் சிங்களத்தால் தாம் நடுத்தெருவில் விடப்படுவோம் என்பது. தம் விகாரைகளை எழுப்ப நம் ஆலயங்கள் தகர்க்கப்படுகின்றன, தம்மை பெருமைப்படுத்துவதற்காக நம்மை சிறுமைப்படுத்துகின்றனர், தமக்கு புது வரலாறுகளை புனைவதற்காக நமது வரலாறுகளை அழிக்கின்றனர். தனது வீடும் ஒருநாள் இடித்து தகர்க்கப்படும் என்று பயந்திருப்பார். இதை மனித உரிமை பேசும் அமைப்புகளும் கைகட்டி வேடிக்கை பார்ப்பதோடு நம்மை குற்றம் சுமத்துகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெடியரசன் கோட்டை பற்றி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய சிறிதரன் எம்.பி

Published By: T. Saranya

18 Mar, 2023 | 12:22 PM
image

கி.மு.200 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நெடுந்தீவு, நயினாதீவு, ஊர்காவற்றுறை, காரைநகர், தொல்புரம், பூநகரி, மன்னார் போன்ற பகுதிகளை ஆட்சிசெய்த ஈழத்தமிழ் மன்னனான விஷ்ணுபுத்திர வெடியரசன் காலத்தில் அமைக்கப்பட்டதும், நெடுந்தீவு மண்ணின் கோட்டைக்காடு என அழைக்கப்படும் நெடுந்தீவு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் (J/01) இன்றும் தமிழர் தம் பண்பாட்டு, மரபியல் அடையாளமாகப் பேணப்பட்டு வருவதுமான விஷ்ணுபுத்திர வெடியரசன் கோட்டையை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சமாக நிறுவுவதற்காக தொல்பொருளியல் திணைக்களத்தினால் மிகத்துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முனைப்புகளை தடுத்துநிறுத்துமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

தொல்பொருள் என்ற போர்வையில் வடக்கு, கிழக்கில் நடைபெறும் பல்வேறு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி 2023.03.16 ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ள இக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

போருக்குப் பின்னரான கடந்த 13 ஆண்டுகளில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடைபெற்றுள்ள தமிழ்த்தேசிய இனம் மீதான மொழி, நில, பண்பாட்டு, அடையாள ஆக்கிரமிப்புக்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் மேலும் வீரியமாக மேற்கொள்ளப்படுவதென்பது தமிழ்பேசும் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் இடையிலான இன நல்லிணக்கத்தை அடியோடு சிதைக்கும் நடவடிக்கையாகவே அமையும் என்பதை தாங்களும் உணருவீர்கள் என நம்புகிறேன்.

ஏற்கனவே நீண்டதோர் போரின் நேரடி விளைவுகளை எதிர்கொண்டு, அதிலிருந்து மீண்டெழ முடியாது தவிக்கும் எமது மக்களது இன, மத, மொழி மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் அடியோடு அழிக்கப்பட்டு அல்லது அவ் அடையாளங்களின் முக்கியத்துவமும், தொன்மமும் வலிந்து மறைக்கப்பட்டு அத்தகைய தொல்லிடங்களில் சிங்கள பௌத்த அடையாளங்களான விகாரைகளையும், புத்தர் சிலைகளையும், துறவிமடங்களையும் அமைக்கும் நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் மிக முனைப்போடு செயலுருப்பெற்றுள்ளன.

வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை, நிலாவரை, நாவற்குழி, மயிலிட்டி, மண்ணித்தலை, உருத்திரபுரம், கச்சதீவு, கன்னியா வெந்நீரூற்று என நீளும் இவ் ஆக்கிரமிப்புப் பட்டியல் தற்போது நெடுந்தீவின் வெடியரசன் கோட்டை வரை தனது ஆக்கிரமிப்பின் கால்களை ஆழப் பதித்துள்ளமை, இலங்கைத்தீவிலுள்ள தமிழர்களின் இயல்புவாழ்வு குறித்த அச்சத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

பௌத்தம் என்பது ஓர் மத அடையாளமே அன்றி சிங்கள இனத்துக்கான அடையாளம் அல்ல என்பதை அடியோடு மறுத்து தமிழினத்தின் மீது கட்டமைக்கப்பட்ட பண்பாட்டுப் படுகொலையை நிகழ்த்துவதென்பது, இந்த நாட்டின் ஆட்சியாளரான தங்களின் தாராளவாதம் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

தொல்பொருள் கட்டளைச்சட்டத்தின் 33ஆம் பிரிவின் கீழ் விஷ்ணுபுத்திர வெடியரசன் கோட்டையை 'துறவிமடம்' என்னும் பெயரிலான தொல்லியல் ஒதுக்கிடமாக வெளிப்படுத்தி 2020.11.26ஆம் திகதிய, 2203/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை வெளியிடப்பட்டமை பற்றி துறைசார் இராஜாங்க அமைச்சர் கௌரவ.விதுர விக்ரமநாயக்க அவர்களுக்கு 2020.12.18 ஆம் திகதி நான் எழுத்துமூல கோரிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தும் அது கவனத்திற் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவின் மாவிலி இறங்குதுறையிலும், கோட்டைப் பகுதியிலும் புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிங்களம் மற்றும் ஆங்கில மொழியிலான விளம்பரப் பலகைகளில் தற்போதுள்ள கோட்டையின் பாகங்கள் பௌத்த தாதுகோபுரத்தின் எச்சங்கள் எனக் குறித்துரைக்கப் பட்டுள்ளதன் மூலம் மிகப்பாரதூரமான வரலாற்றுத் திரிபுக்கான முன்னகர்வுகள் தொல்பொருளியல் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நாட்டின் சுதேசிய இனமான தமிழ்த்தேசிய இனத்தின் தொன்மம்மிகு அடையாளங்களை சிதைத்தழித்து, தொல்பொருள் என்ற போர்வையில் அவற்றை சிங்கள பௌத்த அடையாளங்களாக மாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும், நெடுந்தீவு விஷ்ணுபுத்திர வெடியரசன் கோட்டையை தொடர்ந்தும் தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக பேணிப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு, மக்களின் கோரிக்கையாக இதனை தங்களுக்கு முன்னளிப்புச் செய்கிறேன் - என்றுள்ளது.

 

https://www.virakesari.lk/article/150833

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை அருகில் போராட்டம்

Published By: VISHNU

29 MAR, 2023 | 09:32 PM
image

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை அருகில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று போராட்டத்தில் ஈடுபட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

IMG-20230329-WA0053.jpg

போராட்டத்தையடுத்து அப்பகுதியில் பொலிஸாரும் புலனாய்வாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG-20230329-WA0048.jpg

நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பெளத்த விகாரையுடன் தொடர்புபடுத்தி கடற்படை அமைத்த பதாகையையடுத்து குழப்பம் ஏற்பட்டிருந்தது.

IMG-20230329-WA0050.jpg

இந்நிலையில் தொல்லியல் திணைக்களம், கடற்படை ஆகியவற்றினரின் செயற்பாட்டை கண்டித்தும் வெடியரசன் கோட்டை தமிழரின் சொத்து என வலியுறுத்தியும் போராட்டம் இடம்பெற்றது.

IMG-20230329-WA0045.jpg

IMG-20230329-WA0046.jpg

IMG-20230329-WA0044.jpg

IMG-20230329-WA0041.jpg

https://www.virakesari.lk/article/151706

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

உந்த பௌத்த கட்டுமானங்கள்; அந்த சதுரப்பீடத்திற்கு மேலிருக்கும் பௌத்த விகாரைக்கான மேற்றளமும், மற்ற இரண்டு பௌத்த விகாரை கூம்பிற்கான மேற்றளங்களும் 1990 ஆம் ஆண்டு கட்டப்பட்டு விகாரைக்கான கூம்புகள் கட்டப்பட ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது உள்ளூர் பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் அப்போதைய தொல்லியல் திணைக்களம் அம்முயற்சியைக் கைவிட்டு கொணர்ந்த சிலையோடு அவ்விடம் விட்டகன்றனர் என்பது வரலாறு என்று வெடியரசன் கோட்டையின் அயலிலுள்ள பொதுமக்கள் உதயன் செய்தியாளரிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்கள் போராடி நிலத்தை காப்பாற்றினால் மட்டுமே நிலத்தை காப்பாற்ற முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகளின் அடாவடி, அடாத்தாக காணி பிடித்து விகாரை எழுப்புதல் விவகாரம்; தட்டிக்கேட்க்கும் இளைஞரை பயங்கரவாதிகளாக்கி மீண்டும் தமிழரை ஒடுக்கவும் புதிய பயங்கரவாதச்சட்டத்தை தமிழர்மேல் ஏவி சிங்களத்தை அடக்கவும் முயற்சிக்கும் காரணிகளாக தோன்றுகிறது, இல்லாவிடின் இந்த போலிப்பிக்குகளை பிடித்து சிறையிலோ மனநல காப்பகத்திலோ அடைக்க வேண்டும், மகா சங்கத்தினர் இவர்களை தங்கள் சங்கத்திலிருந்து துரத்த வேண்டும், அப்போ தெரியும் இவர்கள் யார்? யாருக்காக இந்த அலுவல்களை செய்கிறார்கள் என்பது. தமிழரை அழித்த சிங்களத்தின் கூலிப்படை, இப்போ இந்த விதமாக தமிழரின் நிலங்களை ஆக்கிரமித்து மீண்டும் வன்முறையை தூண்டுகிறது. இதை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டியவர்கள் தூங்குகிறார்கள், எல்லாவற்றையும் களட்டிக்கொடுத்த ஓநாய்கள் வாயைப்பிளந்துகொண்டு சிங்களத்தின் பின்னால் அலைகின்றன மிகுதியையும் காவுகொடுக்க. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

பிக்குகளின் அடாவடி, அடாத்தாக காணி பிடித்து விகாரை எழுப்புதல் விவகாரம்; தட்டிக்கேட்க்கும் இளைஞரை பயங்கரவாதிகளாக்கி மீண்டும் தமிழரை ஒடுக்கவும் புதிய பயங்கரவாதச்சட்டத்தை தமிழர்மேல் ஏவி சிங்களத்தை அடக்கவும் முயற்சிக்கும் காரணிகளாக தோன்றுகிறது,

தமிழர்கள் ஒன்றுபடும் வரை இவர்களின் இந்த செயல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.