Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சைவமும் தமிழும் ஈழமும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போத்துக்கேயர் 1505ம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கைக்கு வந்து படிப்படியாக கரையோரப் பகுதிகளையும் பின்னர் கொழும்பையும் கைப்பற்றி ஆட்சி புரிந்த போது தமது கத்தோலிக்க மதத்தினைப் பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். 1623ம் ஆண்டு யாழ்ப்பாணத் திலும், திருகோணமலையிலும் இருந்த பாரிய சைவக் கோயில்களை இடித்து தரைமட்டம் ஆக்கி கத்தோலிக்க ஆலயங்களை கட்டினார்கள். 1658ம் ஆண்டு இலங்கையின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றிய டச்சுக்காரர் தமது கிறீஸ்த்தவ மதத்தினைப் பரப்பும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். மதமாற்றத்துக்கு பாடசாலைகளை முக்கியகளமாக இவர்கள் பயன்படுத்தினார்கள். பிரித்தானியர்கள் 1795ம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றினர். இவர்களும் டச்சுக்காரர்களைப் போன்று மதமாற்றத்துக்கு பாட சாலைகளை களமாகப் பயன்படுத்தினார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் கொழும்பிலும் ஆங்கிலக் கல்லூரிகளை நிறுவி ஆங்கில மொழியினையும் கிறீஸ்த்தவ மதத்தினையும் போதித்தார்கள். ஆங்கில கிறீஸ்த்தவ மிசனரிகளைச் சேர்ந்த பாதிரிமார்கள் இலங்கைக்குப் படையெடுத்து சைவர்களை கிறீஸ்த்தவர்களாக மாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆங்கில அறிவற்ற தமிழ் மக்கள் மத்தியில் மதப் பிரச்சாரங்களைச் செய்து அவர்களை மதமாற்றம் செய்வதற்காக தாங்களே தமிழ் மொழியினைக் கற்றார்கள்.

சைவசமயத்துக்கு ஒரு சோதனைக் காலமாக இருந்த இக்கட்டான காலகட்டத்திலேயே வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூரிலே சைவாசாரக் குடும்பத்தினரான கந்தர், சிவகாமி தம்பதியினரின் தவக்குமாரனாக 1822ம்ஆண்டு அவதரித்தார் அறநெறிக் காவலர் ஆறுமுக நாவலர் அவர்கள். இளவயதில் சைவம், தமிழ், சமஸ்கிருதம் ஆகியவற்றினை இவரது தந்தையார் போதித்து சமயாசாரப் புதல்வராக வளர்த்தெடுத்தார். பின்னர் யாழ்ப்பாணம் வெஸ்லியன் மிசன் பாடசாலையில் இணைந்து கல்வி கற்ற நாவலர் ஆங்கிலத்திலும் ஏனைய பாடங்களிலும் திறமை சாலியாகத் திகழ்ந்தார். பேச் சாற்றலும் எழுத்தாற்றலும் கொண்டிருந்த இவரது திறமையினை ஆங்கிலேயர்களே பாராட்டினர். அதுமாத்திர மன்றி பீற்றர் பேர்சிவல் என்ற பாதிரியார் கிறீஸ்த்து மதத்தினைப் பரப்புவதற்கு வசதியாக தனக்கு தமிழ்மொழியினைப் போதிக்குமாறு நாவலரைக் கேட்டுக் கொண்டார். அத்துடன் ஆறுமுக நாவலரைக் கொண்டு பைபிளையும் தமிழில் மொழிபெயர்ப்பித்தனர். ஆனால் பின்னர் தமது சொந்த மதமான சைவ சமயத்தை தமிழ் மக்கள் புறக்க ணித்து வருவதைக் கண்டு வேதனையுற்ற ஆறுமுகநாவலர் சைவத்தினைக் காக்கும் பணியில் ஈடுபட்டார். ஏடுகளில் எழுதப்பட்டு அழிந்து போகும் நிலையிலிருந்த சைவசமய நூல்களைத் தேடியெடுத்து அவற்றினை நூலுருவில் வெளியிட்டார். பால பாடம், சைவ வினாவிடை, இலக்கணச் சுருக்கம் போன்ற பல்வேறு நூல்களையும் மிக எளிய நடையில் எழுதி வெளியி ட்டார். 1848ம் ஆண்டு வண்ணார்பண்ணையில் சைவப் பாடாலை ஒன்றினையும், இந்தியாவில் சிதம்பரத்தில் ஒரு சைவ மடத்தினையும் அமை த்து இருநாடுகளிலும் சைவத்தினையும் தமிழையும் வளர்த்து வந்தார். இதனால் இவரை இந்திய தமிழ் அறிஞர்களும் போற்றிக் கௌர வித்தனர். சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் பணியில் அயராது ஈடுபட்டு வந்த நாவலர் 1871ம் ஆண்டு சைவ பரிபாலன சபையினையும் ஏற்படுத்தினார். அத்துடன் தனக்குப் பின்னரும் தன்பணியை தொடர்ந்து மேற்கொள்வதற்கான ஒரு குரு பரம் பரையையே தோற்றுவித்தார். இதன் மூலம் இவர் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு காலம் சைவத்தையும் தமிழையும் பொறுத்தவரை ஒரு பொற் காலமாகும். இவரிடம் கல்வி பயின்ற மாணாக்கர்களுள் கரம்பொன் மேற்கினைச் சேர்ந்த முத்துக்குமாரசாமியும் ஒருவராவார்.

தொடர்ந்து வாசிக்க...

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%...%AE%AE%E0%AF%8D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் ஐயாவின் பார்வையில் தமிழும் சைவமும்..

தமிழ்நாட்டில் உள்ள சைவ மடங்கள் தொன்மையும் பாரம்பரியமும் மிக்கவையாகும். சைவமும் - தமிழும் வளர்க்கத் தோற்றுவிக்கப்பட்டவை.

""இறைவன் என்னைப் படைத்தனன் - தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே'' என்ற வாக்கிற்கு இணங்க இறைத்தொண்டும் தமிழ்த்தொண்டும் செய்யப் பிறந்தவை. மூவர் தேவாரங்கள், தேனினுமினிய திருவாசகம், இவற்றிற்கான தமிழ்ப்பண்கள் ஆகியவற்றைப் பேணிக் காக்கும் கடமை சைவ மடங்களுக்கு உண்டு.

சேக்கிழார் பாடிய பெரியபுராணத்தில் சாதி வேறுபாடின்றி எல்லாச் சாதிகளையும் சேர்ந்த நாயன்மார்களும் போற்றிச் சிறப்பிக்கப்பட்டதைப் பின்பற்றிச் சாதிப்பாகுபாடு இல்லாத சைவ சமயத்தை வளர்க்கத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டியவை சைவ மடங்கள்.

தமிழ்நாட்டுச் சிற்பக் கலைக்கு உன்னதமான எடுத்துக்காட்டுக்களாகத் திகழும் கோயில்கள் சிதிலமடைந்தபோது உழவாரத் திருப்பணி செய்து அவற்றைப் பேணிக்காக்க வழிகாட்டிய திருநாவுக்கரசரைப் பின்பற்றித் தொண்டு புரிய வேண்டிய கடமை சைவ மடாதிபதிகளுக்கு உண்டு. ஆனால் தமிழகத்தில் உள்ள சைவ மடங்களில் பெரும்பாலானவை மேற்கண்ட கடமைகளைத் தவிர வேறுவேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அண்டைநாடான இலங்கையில் திரிகோணமலையில் உள்ள கோணேசுவரம் கோயில், மன்னாரில் உள்ள திருக்கேதீசுவரம் கோயில் ஆகியவற்றில் உள்ள இறைவர்களைப் பாடி வணங்கினார்கள் சம்பந்தர், சுந்தரர் ஆகியோர். ஆனால் பாடல்பெற்ற அந்தக் கோயில்களும், மற்றும் நூற்றுக்கணக்கான சைவக் கோயில்களும் சிங்கள இனவெறியர்களால் இடித்துத் தகர்க்கப்பட்டபோது சைவமடாதிபதிகள் யோக நித்திரையில் ஆழ்ந்திருந்தனர்.

சைவ சமயத்தைப் பின்பற்றிய ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோதும் சைவ மடாதிபதிகள் வாயிருந்தும் ஊமையராக விளங்கினார்கள். சைவம் தமிழும் தழைக்க வேண்டுமானால் ஈழத் தமிழர்கள் உயிரோடு இருக்க வேண்டும். ஈழத் தமிழினமே அழியுமானால் சைவம் தழைப்பது எப்படி? தமிழ் வளர்வது எப்படி?

தமிழ் மன்னர்களின் ஆணையின் வண்ணம் தமிழ்நாட்டுச் சிற்பிகளால் எழுதப்பட்ட கோயில்களில் தமிழ் நுழையத் தமிழ்ப் பகைவர்கள் தடை விதித்தனர். கோயில்களில் இறைவனைப்பாடி வழிபாடு செய்வதற்காகவே எழுதப்பட்ட தேவார, திருவாசகங்களைத் தீட்டு மொழி எனப் புறந்தள்ளிவிட்டுத் தமிழர்களுக்குப் புரியாத வடமொழியில் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. சைவ மடங்களுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான கோயில்களிலும் இதே நிலைதான்.

இவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வராத சைவ மடாதிபதிகள் தங்களின் நீண்ட தூக்கத்தில் இருந்து விழிப்புப் பெற்று அவசர அறிக்கையொன்றைக் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழிலேயே வழிபாடு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் அறிக்கையா? அல்ல! அல்ல! அல்லவே அல்ல!

இலங்கையில் இடிக்கப்பட்ட சைவக் கோயில்களைப் புதுப்பித்துக்கட்ட உழவாரப் பணியை மேற்கொண்டு அங்குச் செல்லப் போவதாகக் கூறும் அறிக்கையா?

அல்ல! அல்ல! அல்லவே அல்ல!

பித்தா! பிறை சூடிப் பெருமானே! என நாள்தோறும் சிவனை வழிபட்டு உருகும் நமது மடாதிபதிகள் இப்படியெல்லாம் செய்யப் பித்தர்களா? இறைவன் வேண்டுமானால் பித்தனாக இருக்கலாம். இவர்கள் ஒரு போதும் பித்தர்களாக மாட்டார்கள். அதிர்ச்சியுடனும், அளவிலாத துயரத்துடனும் அவர்கள் கடந்த 17-11-04 அன்று கீழ்க்கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.

தமிழகச் சைவ ஆதினத் திருமடங்களான திருவாவடுதுறை, தருமபுரம், குன்றக்குடி, திருப்பனந்தாள், பேரூர் மற்றும் கவுமார திருமடங்களின் தலைவர்கள் சார்பாகக் குன்றக்குடிப் பொன்னம்பலத் தேசிகர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மிகப் பெரிய இந்து சமயத்தலைவர் காஞ்சி ஜெயேந்திரரை முன்னறிவிப்பு இன்றி, வக்கீல் இல்லாமல் இரவில் கைது செய்திருப்பது இந்து சமுதாய மக்களுக்கும், இந்து சமயத் தலைவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. ஆயிரத்து 500 ஆண்டுக்கு மேற்பட்ட ஒரு பெரிய திருமடத்தின் தலைவரை, அவர்களுக்குரிய மரியாதையோடு விசாரிக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கப்படும் மரியாதை, வசதிகள் கூட அவருக்கு அளிக்கப்படாமல் கைது செய்திருப்பது முறையானதா என்பதைச் சிந்திக்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது உண்மை.

ஆனால், சட்டத்தைப் பிரயோகப்படுத்தும்போது அவர்களுக்குரிய தன்மையையும் இடத்தையும் பொறுத்துச் செயல்பட வேண்டியது மரபு. ஜெயேந்திரர் இந்து சமுதாயத்துக்காக அரும்பாடுபட்டு வருபவர். இந்து மக்களின் பெரும் மதிப்பைப் பெற்றவர். இவருக்கு இந்நிலை ஏற்பட்டது குறித்துப் பெரிதும் வருந்துகிறோம். உண்மையைக் கண்டறிந்து தடம் புரளாமல் நேர்மை தவறாமல் நன்கு சிந்தித்து விசாரணை செய்ய வேண்டும். (தினமணி 19.11.04)

ஆதிசங்கரரின் அத்வைத வேதாந்தத்தைச் சைவத் தமிழர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொண்டவர்களல்லர். சைவ சித்தாந்தத்திற்கு எதிரிடையானது எனக் கருதினார்கள். ஆதிசங்கரரின் தத்துவத்தை ""மிண்டிய மாயாவாதம் எனும் சண்டமாருதம் சுழித்து அடித்து ஆர்த்தது'' என மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.

சைவ சித்தாந்த சாத்திரங்களில் மிகச் சிறந்ததான ""சிவஞான சித்தியார்'' எழுதிய அருள்நந்தி சிவாச்சாரியர் ""பரபக்கத்தில் மாயாவாதம்'' என்று சங்கரரின் அத்வைதத்தைச் சாடியுள்ளார். மாயாவாதத்தைப் பின்பற்றும் சங்கராச்சாரிகள் சிவன் கோயில்களில் நுழைவதே தவறு என்பதே உண்மையான சைவர்களின் கருத்து.

ஆனால் சைவக் கோயில்கள் அனைத்தும் சங்கராச்சாரியின் கட்டுப்பாட்டுக்குள் போனபோது முணுமுணுப்புச் செய்யக்கூட முன்வராத சைவ மடாதிபதிகள் பரபரப்புடன் இப்போது அறிக்கை வெளியிடுகிறார்கள்.

""தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ்வழிபாடு கூடாது. வடமொழி வழிபாடே இருக்க வேண்டும்'' எனப் பிடிவாதமாகவும் ஆணவமாகவும் கூறிவரும் ஜெயேந்திரருக்கு ஆதரவாக அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர் சைவமும் - தமிழும் தழைக்க வந்த மடாதிபதிகள்.

அடடா! என்ன கவலை? எத்தகைய அக்கறை? இந்தக் கவலையும் இந்த அக்கறையும் இவர்களிலேயே ஒருவர் கைது செய்யப்பட்ட போது உருவாகாதது ஏன்? சைவமடங்களில் பெரியதும் தலையாயதுமான திருவாவடுதுறை ஆதின இளைய சன்னிதானம் மீது கடந்த ஆண்டு கொலை முயற்சி வழக்குத் தொடரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். சாதாரண கிரிமினல் குற்றவாளியைப் போலவே அவர் நடத்தப்பட்டார். அவருக்குப்பிணை கிடைக்கவே 8 மாதங்களுக்கு மேலாயிற்று. இவ்வளவுக்கும் கொலை முயற்சிச் சதிக்கு உடந்தையாக இருந்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.

ஆனால் கொலைக்குற்றத்திற்கு ஆளான ஜெயேந்திரரைக் கைது செய்ததன் மூலம் இந்து சமயத்திற்கு ஊறு விளைவிக்கப்பட்டுவிட்டதாக அங்கலாய்க்கும் சைவமடாதிபதிகள் திருவாவடுதுறை இளைய ஆதினம் கொலை முயற்சிக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டபோது வாய்மூடிக் கிடந்தது ஏன்? சிவமே எனச சும்மா கிடந்தது ஏன்?

""தமிழைப் பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்'' என முழங்கினார் புரட்சிக் கவிஞர். ஆனால் ""தமிழ் நீச பாஷை'' என வாய் கூசாமல் பழித்தவரும், கொடிய கொலைக் குற்றத்திற்கு ஆளானவருமான ஒருவருக்காகக் கண்ணீர் வடிக்கும் சைவ மடாதிபதிகள் தாங்கள் ""சற்சூத்திரர்களே'' என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளனர்.

(தென்செய்தி டிசம்பர் 01-15 இதழில் வெளியான கட்டுரை)

பழ.நெடுமாறனை ஆசிரியராகக் கொண்ட தென்செய்தி, மாதமிருமுறை இதழாக வெளிவருகிறது. சந்தா செலுத்த மற்றும் தொடர்பு கொள்ள விரும்பும் நண்பர்கள் பின்வரும் முகவரியில் முயலலாம்.

தென்செய்தி, 33, நரசிம்மபுரம், மயிலை, சென்னை - 600 004. தொலைபேசி : 91-44-2464-0575, தொலைநகலி : 91-44-2495-3916

- பழ. நெடுமாறன்(seide@md2.vsnl.net.in)

http://thatstamil.oneindia.in/specials/art...nedumaran1.html

நெடுக்காலபோவான்!

நீங்கள் ஐயா நெடுமாறன் அவர்களுடைய கட்டுரையுடன் ஒத்துப் போகிறீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா சபேசனிடம் ஒரு வேண்டுகோள்?நடந்து முடிந்தவற்றை பற்றி தொடர்ந்து விவாதிப்பதில் பயன் என்ன? நடக்க வேண்டியவை அல்லது எமது ஈழத்துக்கு தேவையான விவாதங்கள் வாதங்கள் எத்தனையோ இருக்கின்றன.அதை விட்டு நாத்தீகனைப்பற்றியோ அல்லது ஆத்தீகனைப்பற்றியோ இல்லாவிடில் பெரியய்யாவை பற்றிய விவாதங்கள் நமக்கு தேவையா?ஏனெனில் நம் நாடு இதுபற்றி விவாதிக்கக்கூடிய நிலைமையிலா உள்ளது???

குமாரசாமி ஐயா!

எதை நடந்து முடிந்தது என்று சொல்கிறீர்கள். நான் அதிகமாக இன்று நடப்பவைகளைப் பற்றித்தான் விவாதிப்பதாக நினைக்கிறேன்.

அத்துடன் இந்தக் களத்தில் என்னுடைய கருத்துக்களை கவனித்தீர்கள் என்றால், நான் பெரியார் பற்றி ஆரம்பித்தது வெகு குறைவாகத்தான் இருக்கும். (ஐரோப்பிய பெரியார் இயக்கம் பற்றிய விடயத்தை இணைத்தது ஒன்றுதான் நானாக பெரியார் பற்றி ஆரம்பித்து வைத்த விவாதம் என்று நினைக்கிறேன்)

ஆனால் இன்றைக்கு பெரும்பான்மையான தமிழர்கள் பின்பற்றுகின்ற மதத்தில் உள்ள சீர்கேடுகளை பற்றி என்னுடைய கருத்துக்களை சொன்னால், இங்கே இருக்கின்ற சிலர் பதிலுக்கு பெரியார் பற்றிய வாதத்தை கிளப்புவார்கள். வாதத்தை திசை திருப்புவார்கள். இதுதான் இங்கு நடக்கிறது.

நான் இன்றைக்கும் சொன்னேன். பெரியாருக்கு வாக்குச் சேகரிப்பது என்னுடைய வேலை அல்ல. நான் சொல்ககின்ற கருத்தை பெரியாரும் சொல்லியிருக்கிறார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

மற்றையபடி பெரியார் பற்றிய தவறான தகவலை சொல்லகின்ற போது அது குறித்த விளக்கத்தை கொடுக்கிறேன். அவ்வளவுதான்.

எமது விடுதலைப் போராட்டம் பற்றியும் நான் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறேன். பல கட்டுரைகளை எழுதி இங்கு இணைத்திருக்கிறேன்.

அத்துடன் ஈழப் பிரச்சனை பற்றி பேசுவதற்கு இங்கு நிறையப் பேர் இருக்கிறீர்கள். ஆனால் தமிழ் மக்களை பிடித்திருக்கின்ற கண்ணுக்குத் தெரியாத அடக்குமுறை பற்றிப் பேசுவதற்கு எத்தனை பேர் இருக்கிறீர்கள்?

வெகு குறைவானவர்கள்தானே இவைகளைப் பற்றிப் பேசுகிறோம். நாமும் இதைப் பேசவில்லை என்றால் வேறு யார் பேசுவது

ஈழம் இருக்கின்ற நிலையில் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து தேர்திருவிழா நடத்துவதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் அல்லவா?

அதற்கு நீங்கள் கொஞ்சமும் தயங்காத போது, இவைகளை வேண்டாம் என்று சொல்வதற்கு நாம் மட்டும் தயங்க வேண்டுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துகின்றேன் என்கின்றீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழ் எழுத்தாளர் எஸ்.பொ "தமிழர் தேசியம்: வரலாற்றுத் தேடல்" என்ற தலைப்பில் படித்துறை என்னும் சிற்றிதழின் (சித்திரை 2004) முதல் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரையின் முக்கியப் பகுதி இலங்கை என்னும் இன்றைய நாட்டின் நிலப்பரப்பில் தமிழர் தேசியக் கோட்பாட்டின் வரலாறு மற்றும் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தமிழர் தேசியம் எவ்வாறு தடம்புரண்டுள்ளது ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது.

என் பதிவுகளைப் பொறுத்தமட்டில் நான் வரிசையை சிறிது மாற்றியமைத்துள்ளேன். முதலில் எஸ்.பொ தேசியத்தையும், (ஈழத்)தமிழ்த் தேசியத்தையும் எவ்வாறு வரையறுக்கிறார் என்று அவரது வார்த்தைகளிலேயே காண்போம்.

தமிழ்த்தேசியம் என்றால் என்ன? 'தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா' என்று தொண்டை வரளக் கோஷிப்பது அல்ல தேசியம்.

அலங்கார மேடைப் பேச்சுகளினாலே, தமிழ்த் தேசியத்தை வனைந்தெடுக்க முடியாது. அடிப்படையில், அது நிபந்தனையற்ற தமிழர் சுயாதீனத்தை வலியுறுத்துவது. தமிழ்மொழி மூலம் தமிழருடைய வாழ்வையும், வளத்தையும் அரண் செய்வது; அணி செய்வது. கலை-இலக்கிய வாழ்க்கையிலே தமிழ்ப்படைப்புகள் மூலம் சுகம் பெறுவது. தமிழின் வளத்தையும் ஞானத்தையும் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல உதவும் அந்த மகத்தான உந்துதலுக்கும் உணர்ச்சிக்கும் பெயர்தான் தமிழ்த்தேசியம்.

அது தமிழர் சமூகத்தை ஊழல்களிலிருந்து மீட்கும் மந்திர சக்தி பெற்றது. அது தமிழர் சமூகத்திற்கு உயிர்த்துவம் அளித்து, புதிய பொற்பங்கள் சாதிக்கப் புதிய திசையும் திறனும் அருளுவது. பிறரைக் காலில் விழுந்து வணங்காத வீரத்தை அளிப்பது. தமிழ் விரோதச் செயல்களை வேருடன் அறுக்கும் மறத்தை அருள்வது. அதுவே வாழ்வின் அனைத்து அறங்களின் ஊற்றாய் நிற்பது.

இந்தத் தமிழ்த் தேசிய உணர்வு ஈழத்தமிழர் நிகழ்த்தும் விடுதலைப் போருடன் இணைக்கப் பட்டதினால், பூரண அர்த்தச் செறிவும் பெறலாயிற்று. ஓர் இனம் தன் அடையாளத்தினை எவ்வாறு முதன்மைப்படுத்த விரும்புகிறதோ அதுதான் அந்த இனத்தின் தேசியம்.

ஈழத் தமிழர்கள் இன்று தங்களை தமிழ்மொழி பேசும் ஓர் இனம் என்றே அடையாளப்படுகிறார்கள். அந்தத் தமிழ் மொழியைப் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்திற்கு இறைமை உள்ள ஓர் அரசை நிறுவப் போராடுகிறார்கள். போரின் பல்வேறு பட்ட இழப்புகளினாலும் இத்தேசியம் தனித்துவமான மூர்க்கம் பெற்றுள்ளது.

எஸ்.பொ இலங்கையில் தமிழ்த் தேசியத்தின் வரலாறாக கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடுகிறார்:

* 1505 ஆண்டு போர்த்துக்கீயர் வருகைக்கு முன்னர் வரை நல்லூரைத் தலைமையாகக் கொண்டு யாழ்ப்பாணத் தமிழரசு ஆட்சி செலுத்தி வந்தது.

* 17ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத் தமிழரசின் கடைசி மன்னன் சங்கிலியன் வீழ்ந்தான்.

* போர்த்துகீயர்களைத் தொடர்ந்து ஒல்லாந்தரும் (Hஒல்லன்டெர் - Dஉட்ச்), ஆங்கிலேயரும் இலங்கைக்கு வந்து கடலோரப் பகுதிகளில் ஆட்சி செலுத்தி வந்தனர். அப்பொழுதும் கண்டி பகுதிகளில் தமிழ் மன்னர்களின் தலைமையில் தமிழாட்சி இருந்து வந்தது.

* 1815இல்தான் இலங்கை முழுவதும் ஆங்கிலேயர் வசம் வந்தது. அப்பொழுதும் கூட தமிழ்ப்பகுதிகளும், சிங்களப் பகுதிகளும் தனித்தனி அலகுகளாகப் பிரிந்து இருந்ததால் தமிழ் மொழி, கலை மரபுகள் தனித்துவத்தோடே இருந்து வந்தன. அதனால் தமிழ்த் தேசியமும் தொடர்ந்து இருந்து வந்தது.

* 1832இல்தான் இலங்கை முழுவதும் ஒற்றை ஆட்சி முறையின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. இந்தியா பெரிதும் சொல்லிக்கொண்டிருக்கும் 'Tகெ சொவெரெஇக்ன்ட்ய் அன்ட் டெர்ரிடொரிஅல் இன்டெக்ரிட்ய்' என்னும் கருத்து ஆங்கிலேயர்களாலே சுதேசிகளான சிங்களர் மற்றும் தமிழர்கள் மீது 1832இல்தான் திணிக்கப்பட்டது.

* நிர்வாக வசதிக்காக இலங்கை அப்பொழுது வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு, மையம் என்று ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. இதனால் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பு தொலைந்து போனது. தமிழர், சிங்களர் இருவருமே தமது தேசியத்தினைத் தொலைக்க நேர்ந்தது.

* தமது தற்கால வரலாற்றை எழுதும் சிங்களவர் அநகாரிக தர்மபாலாவை (1864௧933) மையப்படுத்தி மேன்மைப்படுத்துவர். இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள அநர்த்தங்கள் அனைத்துக்குப் அதிபிதா இந்த தர்மபாலாவே. [எஸ்.பொவின் சொற்களை அப்படியே தருகிறேன் இங்கு]

* சிங்கள இனவாதக் கோட்பாட்டினை முன்வைத்து தர்மபாலா ஏற்றிவைத்த இனவாதத் தீ 1915இல் கண்டியிலும், கம்பளையிலும் துவங்கியது. முஸ்லிம் மக்களினி சங்காரத்துடன் துவங்கி இன்றுவரை புற்றுநோய் போன்று இலங்கையின் ஆரோக்கியமான அரசியலை அரித்து நிரந்தர நோயாளி ஆக்கிக் கொண்டே இருக்கின்றது.

* கைலாசபதி போன்ற சிலர் தர்மபாலாவுக்கு இணையாக ஆறுமுக நாவலர் தமிழர் தேசியத்தை முன்மொழிந்தார் என்கின்றனர். அது உண்மையன்று. ஆறுமுக நாவலர் தமிழ்த் தேசியம் பற்றிய பிரக்ஞை இன்றே வாழ்ந்து மறைந்தார். சைவமும் தமிழும் என்று பேசிய அவரது செய்கை கிறித்துவ மதப்பிரசாரத்துக்குமேதிராக இருந்ததுவே தவிர தமிழர் தேசியத்துக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆங்கிலேயருடைய ஆட்சியை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் அதன் நீட்சியையும் விரும்பினார். ஆங்கிலேயர் அதிகாரத்தில் கார்காத்த சைவ வேளாளரே ஆட்சி அதிகாரம் உடையோராய் இருக்க வேண்டும் என்று மனதார விரும்பினார்.

* தமிழ்த் தேசியம் சிங்கள் இன ஆதிக்கத்தின் எதிர்வினையாகவே ஈழத்தில் உருவானது. வரிசையாக நிகழ்ந்த இனப்படுகொலைகள், 1983 இலே முழு அளவில் தமிழர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்டபோதுதான் புத்துயிர் பெற்று வெளியானது தமிழ்த் தேசியம்.

http://www.tamilnation.org/diaspora

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்!

நீங்கள் ஐயா நெடுமாறன் அவர்களுடைய கட்டுரையுடன் ஒத்துப் போகிறீர்களா?

நெடுமாறன் ஐயாவின் கருத்துக்களில் பல வற்றில் எனக்கு உடன்பாடு உண்டு. சைவமும் தமிழும் ஒன்றுக்கொன்று.. தயவுடையவை என்பதிலும்.. அவற்றின் வளர்ச்சிகள் ஒன்றை ஒன்று வளர்க்கும் என்பதும்.. தமிழர்களின் இருப்பை காட்டும் என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியவை..!

இந்துமதம் சில தனிநபர்களின் ஆதிக்கத்துக்கு உள்ளாவதும்.. மதத்தின் பெயரால் மதப் பிரிவினைகளைத் தூண்டுவதும்.. சமூகப்பிரிவினைகளைத் தூண்டுவதும்.. வன்முறைகளைத் தூண்டுவதும்..இந்துத்துவவாதம் என்பதை தீவிரமாகக் கைக்கொள்வதையும்.. மூடநம்பிக்கைகளை மதத்தின் பெயரால் பரப்புவதையும்.. நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.

அதுபோல சைவமோ.. இந்துவோ இருக்கவே கூடாது.. மதமென்ற ஒன்றே இல்லை.. அது கற்பனை..கலந்த புளுகு மூட்டை.. மதமே சமூகப் பின்னடைவுக்கான முக்கிய காரணி என்பது போன்ற அபாண்டக் கருத்துக்களையும் புராண இயற்றுகைகளின் அடிப்படையில்.. சைவத்தின் தொன்மையை அதன் அடிப்படைக் கோட்பாடுகளை மறைத்து அரைகுறை விளக்கங்களால் கொச்சைப்படுத்துவதையும்.. மக்களை சைவத்தின் மீது தவறான பார்வையை வைக்கத் தூண்டுவதையும் நாம் எப்போதும் அங்கீகரிக்கவில்லை..! இவற்றை பகுத்தறிவு.. சுயமரியாதை என்றும் காணவில்லை..!

சைவம்.. தமிழ்.. தாயகம்.. இவை அனைத்தும் தமிழர்களின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தவை. அதற்காக கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் மக்களோ இஸ்லாமியத் தமிழர்களோ தமிழுக்கும் தமிழர் தாயகத்துக்கும் உரித்துடையவர்கள் அல்ல என்பதை நாம் இங்கு வலியுறுத்தவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். மத அடிப்படைகளுக்கு சம மதிப்பளிக்கும் அதேவேளை.. தமிழர் தாயகம் என்ற அந்த அலகில் அனைத்து மக்களும் தமிழர்கள் (இஸ்லாமியத் தமிழர்கள் உள்ளடங்க - வடக்குக் கிழக்கு முஸ்லீம்கள் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் இஸ்லாமியத் தமிழர்கள்) என்ற வகைக்குள் அடங்கி சம உரிமைகளை அனுபவிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. :D

Edited by nedukkalapoovan

நெடுமாறன் ஐயாவின் கருத்துக்களில் பல வற்றில் எனக்கு உடன்பாடு உண்டு. சைவமும் தமிழும் ஒன்றுக்கொன்று.. தயவுடையவை என்பதிலும்.. அவற்றின் வளர்ச்சிகள் ஒன்றை ஒன்று வளர்க்கும் என்பதும்.. தமிழர்களின் இருப்பை காட்டும் என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியவை..!

இந்துமதம் சில தனிநபர்களின் ஆதிக்கத்துக்கு உள்ளாவதும்.. மதத்தின் பெயரால் மதப் பிரிவினைகளைத் தூண்டுவதும்.. சமூகப்பிரிவினைகளைத் தூண்டுவதும்.. வன்முறைகளைத் தூண்டுவதும்..இந்துத்துவவாதம் என்பதை தீவிரமாகக் கைக்கொள்வதையும்.. மூடநம்பிக்கைகளை மதத்தின் பெயரால் பரப்புவதையும்.. நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.

அதுபோல சைவமோ.. இந்துவோ இருக்கவே கூடாது.. மதமென்ற ஒன்றே இல்லை.. அது கற்பனை..கலந்த புளுகு மூட்டை.. மதமே சமூகப் பின்னடைவுக்கான முக்கிய காரணி என்பது போன்ற அபாண்டக் கருத்துக்களையும் புராண இயற்றுகைகளின் அடிப்படையில்.. சைவத்தின் தொன்மையை அதன் அடிப்படைக் கோட்பாடுகளை மறைத்து அரைகுறை விளக்கங்களால் கொச்சைப்படுத்துவதையும்.. மக்களை சைவத்தின் மீது தவறான பார்வையை வைக்கத் தூண்டுவதையும் நாம் எப்போதும் அங்கீகரிக்கவில்லை..! இவற்றை பகுத்தறிவு.. சுயமரியாதை என்றும் காணவில்லை..!

சைவம்.. தமிழ்.. தாயகம்.. இவை அனைத்தும் தமிழர்களின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தவை. அதற்காக கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் மக்களோ இஸ்லாமியத் தமிழர்களோ தமிழுக்கும் தமிழர் தாயகத்துக்கும் உரித்துடையவர்கள் அல்ல என்பதை நாம் இங்கு வலியுறுத்தவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். மத அடிப்படைகளுக்கு சம மதிப்பளிக்கும் அதேவேளை.. தமிழர் தாயகம் என்ற அந்த அலகில் அனைத்து மக்களும் தமிழர்கள் (இஸ்லாமியத் தமிழர்கள் உள்ளடங்க - வடக்குக் கிழக்கு முஸ்லீம்கள் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் இஸ்லாமியத் தமிழர்கள்) என்ற வகைக்குள் அடங்கி சம உரிமைகளை அனுபவிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. :)

உங்கள் கருத்தே எனது கருத்தும்.

(ஒன்றைத்தவிர - வடக்கு கிழக்கில் வாழும் இஸ்லாமியர்கள் தங்களை மூஸ்லீம்கள் என்ற சொல்லின் கீழ் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினால் அவர்களை முஸ்லீம்கள் என்று அழைப்பது தான் சரி. நாமாக போய் நீ முஸ்லீம் அல்ல இஸ்லாமிய தமிழன் என்று அழைக்க முனைவது சரியல்ல என்றே நினைக்கிறேன். அதுவும் ஒரு வகை உரிமை மறுப்பு தான்)

வாழ்த்துக்கள்.

சாதிகள் அற்ற சமத்துவம் மலர வேண்டும் என்பதில் நேர்மையான எவருக்குமே மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அதையே சாக்காக வைத்துக்கொண்டு தமிழனின் கடவுள் நம்பிக்கைக்கு சமாதி கட்டி, ஆலயங்களை, கலை பண்பாட்டை அழித்துவிட்டு, தமிழன் கோவணத்தை கூட வடக்கே இருந்து கடனாக பெற்றுத்தான் அணிந்தான், என்று நிறுவ முனையும் சிலரின் பகுத்தறிவு(?!) கோமாளித்தனங்களை அனுமதிக்க முடியாது.

Edited by vettri-vel

(ஒன்றைத்தவிர - வடக்கு கிழக்கில் வாழும் இஸ்லாமியர்கள் தங்களை மூஸ்லீம்கள் என்ற சொல்லின் கீழ் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினால் அவர்களை முஸ்லீம்கள் என்று அழைப்பது தான் சரி. நாமாக போய் நீ முஸ்லீம் அல்ல இஸ்லாமிய தமிழன் என்று அழைக்க முனைவது சரியல்ல என்றே நினைக்கிறேன். அதுவும் ஒரு வகை உரிமை மறுப்பு தான்)

இஸ்லாம் என்பது மதம், தமிழர் என்பது இனம்.

இவர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள்?

தமிழினத்திலே இஸ்லாமியத் தமிழர்கள், கிறீஸ்தவ தமிழர்கள், இந்துத் தமிழர்கள் போன்றவற்றில் இவர்கள் ஒரு அங்கம்.

மதம் யாராலும் தனது கொள்கைக்கு ஏற்ப பின்பற்றக் கூடியது.

இசுலாமிய சீனர்கள், இசுலாமிய இரஷ்யர்கள், இசுலாமிய அராபியர்கள் இன்னும் பல

மதங்கள் பரப்பப் படும் போது, தங்கள் தேவைக்காக அந்தந்த இனங்களின் அடிப்படை அலகுகளில் பிரதானமான மொழியை தங்கள் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மை.

இஸ்லாம் என்பது மதம், தமிழர் என்பது இனம்.

இவர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள்?

தமிழினத்திலே இஸ்லாமியத் தமிழர்கள், கிறீஸ்தவ தமிழர்கள், இந்துத் தமிழர்கள் போன்றவற்றில் இவர்கள் ஒரு அங்கம்.

மதம் யாராலும் தனது கொள்கைக்கு ஏற்ப பின்பற்றக் கூடியது.

இசுலாமிய சீனர்கள், இசுலாமிய இரஷ்யர்கள், இசுலாமிய அராபியர்கள் இன்னும் பல

மதங்கள் பரப்பப் படும் போது, தங்கள் தேவைக்காக அந்தந்த இனங்களின் அடிப்படை அலகுகளில் பிரதானமான மொழியை தங்கள் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மை.

நீங்கள் விரும்புவது போல் தமிழீழத்தின் முஸ்லீம் சமுதாயமும் தங்களை "இஸ்லாமிய தமிழர்கள்" என்று அடையாளம் காண தயார் என்றால் தாராளமாக அப்படியே அழைக்கலாம். நாமாக திணிக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து. அவ்வளவுதான்.

சைவம் என்பது மதம் தமிழர் என்பது இனம் என்று நீங்கள் சொல்வது போல் இஸ்லாம் என்பது மதம் முஸ்லிம் என்பது இனம் என்று அவர்களும் சொல்லக்கூடும்.

எது எப்படியோ, ஒரு மக்கள் குழுமம் தனக்கென ஒரு தனி சமூக அடையாளம் வேண்டும் என கோரும் பட்சத்தில் அதை அங்கீகரிப்பது எதிர்கால தமிழீழத்தின் பல்லின சமுதாய கட்டமைப்புக்கு பலம் சேர்ப்பதோடு, அரசியல் பொருளாதார முன்னேற்றத்திற்கு துணை சேர்க்கும் என்றே நமது சிற்றறிவுக்கு படுகிறது. :)

Unity in diversity will bring prosperity

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.