Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களிடை தேடி...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

crescent20moongf6.jpg

மின்னலிடை தேடி

பெண்களிடை நாடி

பொருத்தமதின்றி

பொறுமையிழந்தேன்..! (எதிர்பார்த்து.. சந்தித்த..முதலாவது பெருத்த ஏமாற்றம்)

பிறை நுதல் தேடி

வீதி வழி ஓடி

கண்டதில்லை

வானத்து மூன்றாம் பிறை..! (கிரமமான இயற்கை நிகழ்வைக் கூட ரசிக்க நேரமில்லாத தேடலின் தொடர்ச்சி)

காந்தளது தேடி

கரங்களது நாடி

களைத்தேன்

ஓவியமாய் காணும் வரை..! ( காந்தளைக் (அழகான மலர். அருகிய மலர்) காண வேண்டும் என்ற ஆசை.. ஓவியத்தில் நிறைவடைகிறது)

கொவ்வையிதழ் தேடி

கோதையிதழ் நாடி

கேவலம் கண்டேன்

மைப் பூச்சு..! (கொவ்வை தெரியும்.. கொவ்வை இதழ்.. தெரியாமல்.. தேடல் செய்து ஏமாற்றமடைதல்.. போலியை செயற்கையைக் கொண்டு.. மெரு கூட்டிய பெண்கள் வாழும் உலகு என்பது அர்த்தப்படுகிறது..!)

பருவமும் மாறி

பாலைவனம் ஆக

கார்முகில் தேடி

நான் அலைந்தேன்

கண்டேன்...

சிரசதில் வெண் முடி..! ( தேடித் தேடியே காலத்தைத் தொலைக்கிறது மட்டுமல்ல.. பூமியும் கால வோட்டத்தில் சூழல் மாற்றங்களால் உருமாறி விடுகிறது)

கவிஞர்கள் கனவதை..

நனவாக எண்ணி

பொழுததை வீணாக்கி

பொத்தாம் பொதுவாகி

கல்லறையில்

தூங்குகிறேன்..! :D :angry: ( கவிகளின் கற்பனையில் உதித்தது போல நிஜத்திலும் பெண்களைத் தேடி.. கடைசியில் எல்லாரும் போல.. கல்லறையில் கிடக்கிறான்..! வாழ்க்கைத் தொலைச்சு..! சினிமா பார்த்து நடிகைகளோடு.. பெண்களை ஒப்பிடுறதில்லையா... அதுபோல... இது.. இப்படி..)

Edited by nedukkalapoovan

மெல்லிடை ன்றது (மின்னலிடை) பெண்களுக்கு உவமை பொருந்தாதுங்கிறீங்க... பிறையும் .... மலரும் கூட அவர்கள் முகம் வாயிலாக உங்களுக்கு தெரியலை...ம்...... வீணாக கற்பனை பண்ணி காலத்தை ஓட்டமல்... எல்லாம் வெளிப்பூச்சு ...எனவே கிடைச்சதைக்கட்டி ஒழுங்கா குடும்பத்தை நடத்துங்கப்பா ..ஹி...ஹி...நீங்க கட்டி இரண்டு வருடத்தின் பின் ஞானோதையம் நல்லா இருக்குதுங்கோ.... :P

Edited by gowrybalan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெல்லிடை ன்றது (மின்னலிடை) பெண்களுக்கு உவமை பொருந்தாதுங்கிறீங்க... பிறையும் .... மலரும் கூட அவர்கள் முகம் வாயிலாக உங்களுக்கு தெரியலை...ம்...... வீணாக கற்பனை பண்ணி காலத்தை ஓட்டமல்... எல்லாம் வெளிப்பூச்சு ...எனவே கிடைச்சதைக்கட்டி ஒழுங்கா குடும்பத்தை நடத்துங்கப்பா ..ஹி...ஹி...நீங்க கட்டி இரண்டு வருடத்தின் பின் ஞானோதையம் நல்லா இருக்குதுங்கோ.... :P

உண்மையைச் சொல்லுறது ஞானோதயமா..???! உண்மை என்பது புலப்படும் போது சொல்லத்தானே வேணும். எத்தனை நாளைக்குத்தான் கற்பனைல எல்லாத்தையும் நாங்க ரசிக்கக் கூடியதாகக் கண்டு வாழுறது..! <_<:)

நெடுக்காலபோவான், ரொம்ப நொந்துபோய் இருக்கிறீங்கள் போல இருக்கு. உங்களுக்கு எனது அனுதாபங்கள்!! :) பெப்ஸி? ஜூஸ்?? கோக்? தாகத்துக்கு ஏதாவது தாறன் குடிக்கிறீங்களா? <_<

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக உள்ளது நிஜத்தை கூறுகிறது போல் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான், ரொம்ப நொந்துபோய் இருக்கிறீங்கள் போல இருக்கு. உங்களுக்கு எனது அனுதாபங்கள்!! :) பெப்ஸி? ஜூஸ்?? கோக்? தாகத்துக்கு ஏதாவது தாறன் குடிக்கிறீங்களா? <_<
பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள்.. நொந்தவனுக்குத்தான் தெரியும் இன்னொரு நொந்தவனின் வேதனை. அந்த வகையில் உங்கள் வார்த்தைகளே ரெம்ப தெம்பா இருக்கு. பிறகெதற்கு பிஸி றிங்க்ஸ்... வேணாம். :D

கவிதை நன்றாக உள்ளது நிஜத்தை கூறுகிறது போல் :)
புத்தனை விடவா... வாழ்க்கையை அனுபவிச்சி.. நொந்து.. போதிமரம் போனவனுக்கே .. போல இருக்கா. .?! :(

Edited by nedukkalapoovan

மின்னலிடை தேடி

பெண்களிடை நாடி

பொருத்தமதின்றி

பொறுமையிழந்தேன்..!

தாத்தா மின்னலிடையே ஏன் பெண்களிடை நாடுகிறார்கள் ஆண்கள் யாராவது பெண்கள் ஆண்கள் இடை தேடி வந்தவையோ......... :P

கடைசியாக எல்லாம் வெளிபூச்சு என்று வேற சொல்லிவிட்டீங்க அந்த வெளிபூச்சிற்காக அலைகிறவர்கள் எத்தனைபேர் :) ..............சரி தாத்தா சரியா பீல் பண்ணி கவிதையை எழுதி இருகிறீங்க போல இருக்கு ஆனாலும் கவிதை நல்லா இருக்கு தாத்தா.............. <_<

பெண்களிடை தேடி

சொந்த எடை குறைந்த

நெடுக்கால போவானிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

கனவு மெய்ப்பட வேண்டும்

உன் கானலும் நீராக வேண்டும்

நினைவு தெளிந்திட வேண்டும்

நீங்காமல் உன்னுடன் இணையவேண்டும்

பலதும் புரிந்திட வேண்டும்

உன் பாவையும் உன்னுடன் இணைந்திட வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு நீங்க இப்ப பேபி தானே.. இப்ப விளங்காது.. சில விடயங்கள்.. எல்லாம் போகப் போக விளங்கும்..! நானும் இப்படி பேபியாவே இருந்திட்டதாலதான்.. இப்ப உலகத்தில உண்மைகளைப் புரிஞ்சுக்கேக்க.. திக்குமுக்காடி வெளில வாறன்..! நீங்க அப்படி இருக்காம.. இப்பவே உலகைப் படியுங்க.. பின்னாடி.. உசாரா நிற்பீங்க.! சவாலை எதிர்கொள்வீங்க. உண்மைகளை கொண்டு உலகத்தைப் பாருங்க. கற்பனை நிஜமாகாது. நிழல் மட்டுமே...! <_<

பரணி... கானல் நீர் எப்படி மெய்ப்படும்.. ??! அது கற்பனை நீர் தானே..! :)

Edited by nedukkalapoovan

கவிதை ரொம்பவே நல்லா இருக்கு நெடுக்ஸ் , எல்லா விடயத்திலும் யதார்த்தமாகவும் அறிவு பூர்வமாகவும் கருத்து கூறுகிற நீங்கள் பெண்கள் விடயத்தில் மட்டும் ரொம்பவே கடுப்பாகிடுறிங்கள் ரொம்பவே பாதிக்க பட்டிருக்கிறிங்கள் போல :P :P

கற்பனைகள் எத்தனையோ நிஜமாக உலாவரும்போது கானல்நீர் மட்டும் எந்தவகையில் கற்பனையாகவே இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை ரொம்பவே நல்லா இருக்கு நெடுக்ஸ் , எல்லா விடயத்திலும் யதார்த்தமாகவும் அறிவு பூர்வமாகவும் கருத்து கூறுகிற நீங்கள் பெண்கள் விடயத்தில் மட்டும் ரொம்பவே கடுப்பாகிடுறிங்கள் ரொம்பவே பாதிக்க பட்டிருக்கிறிங்கள் போல :P :P

அது ஒன்றுமில்லை.. கற்பனையில் வடித்தது தந்த சுகம்.. நிஜத்தில் இல்லை எனும் போது.. கற்பனை மீது சற்று ஆத்திரம் வரத்தானே செய்யும். பெண்களைப் பற்றி உலகம் தந்த கற்பனைகளே அதிகம்.. யதார்த்தத்தை விடவும். அதுதான்.. ஆண்கள்.. வாழ்க்கையில் எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்கள். பிறகு பெண்களும் தானே என்றாதீங்க. அவங்க எதிர்பார்க்கிறதே.. எதுவும் தங்களுக்குப் பயன்படுமா என்றுதான்...! ஆண்கள் அப்படியன்று..! :)

கற்பனைகள் எத்தனையோ நிஜமாக உலாவரும்போது கானல்நீர் மட்டும் எந்தவகையில் கற்பனையாகவே இருக்கும்.

மெய்ப்படலாம்.. எப்ப என்றால் நல்ல மழை பெய்து நீர் நிரம்பி நிற்கும் போது.. கானல் நீர் (மாயைத் தோற்றம்) தோன்றிய இடத்தில்..! ஆனால் மனித வாழ்க்கையில்...???????! கண்ணீர்தான் நிரம்பி நிற்கும்..! <_<

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவான் உங்கள் கவிதை நல்லா இருக்கு. ரொம்பத்தான் நொந்துட்டீங்கள் போல

கவிஞர் மாருக்கு வேற வேலை இல்லை தங்க இஷ்டத்துக்கு கற்பனை பண்ணி எழுதி இருப்பார்கள்

நீங்கள் ஏன் அதை நிஜம் என்று தேடுறீங்கள் ஆனால் பெண்களை இப்படி வருணிச்சு எழுதுறதும் ஆண்கள் தான் அப்புறம் இல்லாத ஒண்டை தேடுற்ம் எண்டு புலம்புறதும் அவங்க தான். நமக்குத்தான் உந்தப்பிரச்சினையே இல்லை. ஆண்களை வர்ணிக்கிறதும் இல்லை அவைட்ட நிஜமா அது இருக்கா என்று தேடுறதும் இல்லை :)

கவிதை நல்லா இருக்கு நெடுக் அண்ணா

அட அட இதனால் தான் நெடுக் அண்ணாக்கு பொண்ணுக மீது வெறுப்போ??

கவிகளின் கற்பனையில் உதித்தது போல நிஜத்திலும் பெண்களைத் தேடி.. கடைசியில் எல்லாரும் போல.. கல்லறையில் கிடக்கிறான்..! வாழ்க்கைத் தொலைச்சு..

கண்ணீரை ஏன் வெறுக்கின்றீர்கள். விழிகளை சுத்தம் செய்பவiதானே அவை. . .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் உங்கள் கவிதை நல்லா இருக்கு. ரொம்பத்தான் நொந்துட்டீங்கள் போலகவிஞர் மாருக்கு வேற வேலை இல்லை தங்க இஷ்டத்துக்கு கற்பனை பண்ணி எழுதி இருப்பார்கள் நீங்கள் ஏன் அதை நிஜம் என்று தேடுறீங்கள் ஆனால் பெண்களை இப்படி வருணிச்சு எழுதுறதும் ஆண்கள் தான் அப்புறம் இல்லாத ஒண்டை தேடுற்ம் எண்டு புலம்புறதும் அவங்க தான். நமக்குத்தான் உந்தப்பிரச்சினையே இல்லை. ஆண்களை வர்ணிக்கிறதும் இல்லை அவைட்ட நிஜமா அது இருக்கா என்று தேடுறதும் இல்லை :)

எல்லாம் வளர்ந்து அனுபவப்படேக்க தானே தெரியுது. கற்பனையை நிஜமென்று நம்பியே வாழ்ந்து பழகிடுறார்கள் ஆண்கள். பெண்கள் அப்படியல்ல. முதல் சொன்னது போல.. எது தங்களுக்குப் பயன்படும் என்றுதான் பழகுவதும்.. சிந்திப்பதும். அது தான் அவர்களின் போக்கு. அதை சில ஆண்கள் நல்லாவே பாவிக்கிறாங்க. பல ஆண்கள்.. ஏமாந்திடுறாங்க..! காரணம்.. இந்தக் கற்பனை தேனருந்திய போதையேறிய வண்டுகளாகவே அதிக ஆண்கள் இருந்திடுறதால. அனுபவப்பட்ட பின்னும் வெளில சொல்லாததால.. தொடர்ந்து ஆண்கள்.. இப்படியே போதையேறும் வண்டுகளாகவே இருந்து ஏமாறுறாங்க. நாங்க.. அதை எங்களால இயன்றளவு தெரியப்படுத்துவம் என்று போட்டு எழுதிட்டம்.இப்பதானே உண்மை இன்னும் தெளிவாகுது.நன்றி உங்கள் கருத்துப் பகிர்வுக்கு. <_<

கண்ணீரை ஏன் வெறுக்கின்றீர்கள். விழிகளை சுத்தம் செய்பவiதானே அவை. . .

கண்ணீர் மருந்தாகும் ஒரு அளவோடு இருந்தா. அதுவே நோயாகும் அளவு மீறினா..! :(

Edited by nedukkalapoovan

பெண்கள் சுயநலம் என்று சொல்லுறிங்க :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நல்லா இருக்கு நெடுக் அண்ணாஅட அட இதனால் தான் நெடுக் அண்ணாக்கு பொண்ணுக மீது வெறுப்போ??

அதிகம் கற்பனை செய்தால்.. இப்படி அவஸ்தைப்பட வேணும் என்பதை உணரனும்.. அதுதான்..! <_<:)

பெண்கள் சுயநலம் என்று சொல்லுறிங்க :P

அதில மாற்றுக் கருத்துக்கே இடமில்லை..! சுயநலத்தின் உருவமே பெண்கள் தான்..! எப்பவும் தனக்கு என்ன கிடைக்கும் என்பதுதான் அவர்களின் சிந்தனையே..! :(

Edited by nedukkalapoovan

அதிகம் கற்பனை செய்தால்.. இப்படி அவஸ்தைப்பட வேணும் என்பதை உணரனும்.. அதுதான்..! :D<_<

அதில மாற்றுக் கருத்துக்கே இடமில்லை..! சுயநலத்தின் உருவமே பெண்கள் தான்..! எப்பவும் தனக்கு என்ன கிடைக்கும் என்பதுதான் அவர்களின் சிந்தனையே..! :)

அளவுக்கு மீறினால் கற்பனையும் நஞ்சாகிடும் என்கிறீங்க. :(

நெடுக் அண்ணா சுயநலவாதிகளாக ஆண்கள் இருப்பதில்லை என்கிறீங்களா? :)

நெடுக எழுதி இருந்தாலும்.. உங்கள் கரு சுருக்கமாக இருக்கிறது.. நெடுக்ஸ்..

ஏனிந்த விரக்தியும் வெறுப்பும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கு மீறினால் கற்பனையும் நஞ்சாகிடும் என்கிறீங்க. <_<

நெடுக் அண்ணா சுயநலவாதிகளாக ஆண்கள் இருப்பதில்லை என்கிறீங்களா? :)

ஆண்களுக்கு சுயநலமில்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் பெண்கள் அளவுக்கு இல்லை..! :D

நெடுக எழுதி இருந்தாலும்.. உங்கள் கரு சுருக்கமாக இருக்கிறது.. நெடுக்ஸ்..

ஏனிந்த விரக்தியும் வெறுப்பும்..

கற்பனை நிஜத்தில் இல்லை என்ற ஏக்கம் தானே விரக்தியாகி...! :(

(நீங்கள் உட்பட பலர் தினமும் கவிதை எழுதுபவர்கள். உங்களின் கவிதைகளுக்கு விமர்சனம் எழுத நேரம் கிடைப்பதில்லை. இன்று பகலில் ஓய்வாகையால்.. முடிகிறது இங்கு உடனுக்குடன் பதில் அளிக்க. ஒருவருக்கு எழுதி இன்னொருவருக்கு எழுதாமல் விடுவதும் ஏற்புடையதல்ல. அதனால் பொதுவாக விமர்சனங்களை வைப்பதில்லை. ஏனைய கவி வடிப்போரும் இதைக் கருத்தில் கொள்ளவும். குறை காணல் வேண்டாம்.) :)

Edited by nedukkalapoovan

கொவ்வையிதழ் தேடி

கோதையிதழ் நாடி

கேவலம் கண்டேன்

மைப் பூச்சு..! (கொவ்வை தெரியும்.. கொவ்வை இதழ்.. தெரியாமல்.. தேடல் செய்து ஏமாற்றமடைதல்.. போலியை செயற்கையைக் கொண்டு.. மெரு கூட்டிய பெண்கள் வாழும் உலகு என்பது அர்த்தப்படுகிறது..!)

சரி ஆண்களுக்கும் சுயநலம் இருக்கு ஆனால் குறைவு என்கிறீங்க. ஓகே

ஆனால் தற்போது மீடியாவில் அதாவது தொலைக்காட்சியில் தோன்றும் ஒரு அறிவிப்பாளன் கூட கண்ணிமை சீராக்கி உதட்டுக்கு சாயம் பூசி இவ்வாறாக தானே தோன்றுகின்றான். ஏன் பெண்களை கவிதையில் சாடுறீங்க? ;)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி ஆண்களுக்கும் சுயநலம் இருக்கு ஆனால் குறைவு என்கிறீங்க. ஓகே

ஆனால் தற்போது மீடியாவில் அதாவது தொலைக்காட்சியில் தோன்றும் ஒரு அறிவிப்பாளன் கூட கண்ணிமை சீராக்கி உதட்டுக்கு சாயம் பூசி இவ்வாறாக தானே தோன்றுகின்றான். ஏன் பெண்களை கவிதையில் சாடுறீங்க? ;)

நாங்க அந்த Gay கூட்டத்தைப் பற்றி கருத்தில் எடுக்கிறதில்ல..! Guys மட்டும்தான் கருத்தில் எடுக்கப்படுகிறார்கள்.. ஆண்கள் என்ற வகைக்குள்..! <_<:)

அபப்டியோ? சரி நெடுக் அண்ணா Gay ,Guys இரண்டுக்கும் விளக்கம் சொல்லுங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அபப்டியோ? சரி நெடுக் அண்ணா Gay ,Guys இரண்டுக்கும் விளக்கம் சொல்லுங்கோ

இந்தச் சின்னப்பிள்ளையோளட பெரிய தொந்தரவப்பா. எப்ப பார் பதில் கேள்வி கேட்டபடி.

ஊரில சொல்லுவாங்களே சில ஆண் போல் தோற்றமளிக்கிற ஆனா கொஞ்சம் ஒரு மாதிரியானதுகளை பெட்டைப்பசங்க என்று அதுதான்.. gays

ஆம்பிளைப் பிள்ளை என்பார்களே.. அதுதான் guys.

இதோட விளங்கனும். இதுக்குமேல கேட்டா.. அதுக்கு பதில் சொன்னா வலைஞன் சார் அடிப்பார். :)<_<

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.