Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விபச்சாரிப் பெண்களுக்கு மரண தண்டனை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் விபச்சாரம் செய்த பெண்கள் இஸ்லாமிய மதவாதத் தீவிரவாதிகளால்.. மரண தண்டனைக்கு இலக்காக்கப்பட்டனர். இதில் இரண்டு பெண்கள் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

விபச்சாரம் ஒரு சமூகவிரோதச் செயலாக பாகிஸ்தானில் கணிக்கப்படுகிறது. பல இஸ்லாமிய நாடுகளிலும் சட்டப்படி அது தடை செய்யப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6983692.stm

Edited by nedukkalapoovan

விபசாரம் செய்த பெண்களில் மட்டுமா குற்றம் தாத்தா இதற்கு ஆண்கள் வராட்டி அவர்கள் ஏன் செய்ய போகிறார்கள்............. :)

விபசாரம் செய்த பெண்களில் மட்டுமா குற்றம் தாத்தா இதற்கு ஆண்கள் வராட்டி அவர்கள் ஏன் செய்ய போகிறார்கள்............. :)

ஆகவே இச்செய்தியினை இங்கே ஒட்டியவருக்கும் மலணதண்டனை கொடுக்கவேண்டும் என்ன நான் சொல்லுறது

ஆகவே இச்செய்தியினை இங்கே ஒட்டியவருக்கும் மலணதண்டனை கொடுக்கவேண்டும் என்ன நான் சொல்லுறது

சிவா அண்ணா நான் பேபி பெரியாட்களின்ட விளையாட்டுக்கு வரவில்லை..... :P :)

"விபச்சாரி" என்றால் அது பெண்கள் தானே? பிறகேன் "விபச்சாரிப் பெண்கள்" என்று சொல்லியிருக்கிறீர்கள்? மற்றது இப்போது பெரும்பாலும் "பாலியல் தொழிலாளிகள்" என்ற சொல்லே பயன்படுத்துப்படுகிறது. "பெண் பாலியல் தொழிலாளர்களுக்கு மரண தண்டனை" என்று தலைப்பிடுவதில் ஏதும் முரண்பாடு இருக்கிறதா? இல்லை ஏன் கேட்கிறேன் என்றால் "விபச்சாரிப் பெண்கள்" என்று நீங்கள் எழுதியிருப்பதற்கு காரணங்கள் இருக்கலாம். அப்படி ஒரு காரணம் இருந்தால் அதுபற்றி அறிந்துகொள்ள ஆவல்.

அண்ணா வணக்கம் :P

அது சரி எனக்கு ஒரு சந்தேகம் "விபசாரி" என்றா பெண்கள் எனின்,ஆண்களை எவ்வாறு சொல்லுவது :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"விபச்சாரி" என்றால் அது பெண்கள் தானே? பிறகேன் "விபச்சாரிப் பெண்கள்" என்று சொல்லியிருக்கிறீர்கள்? மற்றது இப்போது பெரும்பாலும் "பாலியல் தொழிலாளிகள்" என்ற சொல்லே பயன்படுத்துப்படுகிறது. "பெண் பாலியல் தொழிலாளர்களுக்கு மரண தண்டனை" என்று தலைப்பிடுவதில் ஏதும் முரண்பாடு இருக்கிறதா? இல்லை ஏன் கேட்கிறேன் என்றால் "விபச்சாரிப் பெண்கள்" என்று நீங்கள் எழுதியிருப்பதற்கு காரணங்கள் இருக்கலாம். அப்படி ஒரு காரணம் இருந்தால் அதுபற்றி அறிந்துகொள்ள ஆவல்.

விபச்சாரி என்பது.. பெண்பாலுக்குரியதாக பாவிக்கப்பட்டு வருகிறதே தவிர.. அது பெண்பால் சொல்லா அல்லது பொதுப்பால் சொல்லா என்பதில் எனக்கு ஐயம் உண்டு. காரணம் பிரமச்சாரி என்பது ஆண்களைக் குறிக்கப் பயன்படுத்தும் அதேவேளை சில சந்தர்ப்பங்களில் பெண்களையும் குறிக்க பயன்படுத்துகின்றனர். விபச்சாரி மட்டும் ஏன் பெண்பால் சொல்லாக மட்டும் கருதப்பட வேண்டும்..?!

அதனால் தான்.. விபச்சாரி பெண் என்று குறிப்பிட்டேன். விபச்சாரப் பெண் என்று குறிப்பிடுதல் சாலப் பொருந்தும் போல. ஏனெனில் விபச்சார ஆண் என்பதும் அங்கு இடம்பெற வாய்ப்பு ஏற்படும்.

பாலியலை வைத்து தொழில் என்பதை மனித சமூகத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது. பாலியல் என்பது உயிர்களுக்கெல்லாம் பொது. அப்படி இருக்க.. மனிதன் அதை வைத்துத் தொழில் செய்வதாக சொல்வதில் ஏது.. நியாயம்..??! அவரவர் தங்கள் பாலியல் இச்சைகளைத் தீர்க்க ஒருவரை இன்னொருவர் பயன்படுத்துவதை தொழிலாகக் கருதின்.. அடிமைகளை வைத்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதும்.. தொழிலாகுமா..??! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் மட்டுமா விபச்சாரம் சமூக விரோதச் செயலாகக் கணிக்கப்படுகின்றது? அநேகமாக எல்லா நாடுகளிலும் சட்டவிரோதமாகத்தானே உள்ளது.பாகிஸ்தானில் உள்ள விபச்சாரம் செய்யும் பெண்களிடம் போகும் ஆண்கள் இஸ்லாமிய மதத்தவராக இருந்தால் அவர்களுக்கு ஏன் தண்டனை வழங்கப்படுவதில்லை?

விபச்சாரத்தின் இன்னுமொரு பக்கத்தையும் அறிய புதுமைப்பித்தன் 1934 இல் எழுதிய "பொன்னகரம்" கதையைப் பார்க்கவும் (படிக்கவும்).

Edited by kirubans

விபச்சாரி என்பது.. பெண்பாலுக்குரியதாக பாவிக்கப்பட்டு வருகிறதே தவிர.. அது பெண்பால் சொல்லா அல்லது பொதுப்பால் சொல்லா என்பதில் எனக்கு ஐயம் உண்டு. காரணம் பிரமச்சாரி என்பது ஆண்களைக் குறிக்கப் பயன்படுத்தும் அதேவேளை சில சந்தர்ப்பங்களில் பெண்களையும் குறிக்க பயன்படுத்துகின்றனர். விபச்சாரி மட்டும் ஏன் பெண்பால் சொல்லாக மட்டும் கருதப்பட வேண்டும்..?!

அதனால் தான்.. விபச்சாரி பெண் என்று குறிப்பிட்டேன். விபச்சாரப் பெண் என்று குறிப்பிடுதல் சாலப் பொருந்தும் போல. ஏனெனில் விபச்சார ஆண் என்பதும் அங்கு இடம்பெற வாய்ப்பு ஏற்படும்.

பாலியலை வைத்து தொழில் என்பதை மனித சமூகத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது. பாலியல் என்பது உயிர்களுக்கெல்லாம் பொது. அப்படி இருக்க.. மனிதன் அதை வைத்துத் தொழில் செய்வதாக சொல்வதில் ஏது.. நியாயம்..??! அவரவர் தங்கள் பாலியல் இச்சைகளைத் தீர்க்க ஒருவரை இன்னொருவர் பயன்படுத்துவதை தொழிலாகக் கருதின்.. அடிமைகளை வைத்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதும்.. தொழிலாகுமா..??! :D

ம். பெண்களைக் குறிக்கவே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில். அதனால் பெண்பாலாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் பொதுப்பாற் சொல்லாகவே இருக்கவேண்டும். நீங்கள் குறிப்பிட்ட பிரமச்சாரி நல்ல உதாரணம். அதேபோல் "நாற்றம்" என்பதன் உண்மையான பொருள் "நறு மணம்" என்பதாகவே உள்ளது. ஆனால் இன்று அது துர்நாற்றம் என்கிற பொருள்படவே பயன்படுத்தப்படுகிறது. அதுபோலவே இதுவும் இருக்கலாம். அத்தோடு "விபச்சாரம்" என்பது தமிழ்ச்சொல்லா என்பதிலும் குழப்பமிருக்கிறது :lol:

ஒருவரின் பாலியல் இச்சைகளை தீர்த்துவைத்து, அதற்காய் பணம் வாங்கும்போது அது தொழிலாகிறது தானே? பணம் வாங்காவிட்டால் சமூக சேவை என்று சொல்லலாம் :lol:

அடிமைத் தொழில் என்கிற சொல்லும் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதை அவதானித்திருக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரின் பாலியல் இச்சைகளை தீர்த்துவைத்து, அதற்காய் பணம் வாங்கும்போது அது தொழிலாகிறது தானே? பணம் வாங்காவிட்டால் சமூக சேவை என்று சொல்லலாம்.

அப்படியென்றால் பணப்பரிமாற்றம் நிகழும் கையூட்டலும் தொழிலா..???! எல்லாரும் கிளம்பிடுவாங்க. மிக இலகுவான தொழில்..! :lol::lol:

காசுக்கு காசுமா போச்சு இன்பம் இலவசமாக கிடைக்கிறது. பொறாமை பிடித்த சிலரின் வேலைதான் மரணதண்டனை எல்லாம். B)

விபச்சாரம் செய்தவரை விட அதை செய்ய தூண்டியவருக்குத்தான் தண்டனை வழங்க வேண்டும் உதாரணத்திற்க்கு ஒரு ஆட்டை கொலை செய்தவனை விட அந்த இறைச்சியை சாப்பிட்டவன் தான் அதிக பாவம் பண்ணுறான் :P :)

அப்படியென்றால் பணப்பரிமாற்றம் நிகழும் கையூட்டலும் தொழிலா..???! எல்லாரும் கிளம்பிடுவாங்க. மிக இலகுவான தொழில்..! :):D

கையூட்டல் ஒரு துணைச் செயற்பாடாகத்தானே நடக்கிறது. ஒருவகையில அதுவும் ஒரு தொழிலாகத்தான் பல இடங்களில் செய்யப்படுகிறது. தென்னிந்தியத் திரைப்படங்களில் கூட இந்தியாவில் உள்ள இத்தகைய நிலைபற்றி அறிய முடிகிறது தானே. அது நல்லதா கெட்டதா என்பது அடுத்த விசயம். :)

புலம்பெயர்ந்த நாடுகளில நிகழ்த்தப்படுகிற திருமணம், பிறந்தநாள், பூப்புனிதநீராட்டு விழா போன்ற கொண்டாட்ட நிகழ்வுகளும் ஒரு வியாபாரத் தன்மையைத் தானே கொண்டிருக்கின்றன. பல தொழில் வாய்ப்புக்களைக் கொடுக்கிற, அதேநேரம் குறிப்பிட்டளவு வருமானத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய தொழில்த்துறையாகவே பார்க்கமுடிகிறது. ஆனால் இங்கு நிகழ்கிற பணப்பரிமாற்றங்கள் கூட (எடுத்துக்காட்டாக படப்பிடிப்பாளருக்கு கொடுக்கப்படும் பணம்) பெரும்பாலும் சட்டரீதியாக நிகழ்வதில்லைத்தானே. அதோடு அன்பளிப்பாக வழங்கப்படுபவை (பெரும்பாலும் பணமாகத்தான் கொடுக்கப்படுகிறது) கூட, அன்பளிப்பு என்பதையும் தாண்டி வியாபாரமாகவே நடைபெறுகிறது.

இதிலே பூப்புனித நீராட்டு விழாவை எடுத்துக்கொள்வோம். இது கிட்டத்தட்ட நீங்கள் இங்கு சுட்டிக்காட்டியுள்ள விபரச்சாரத் தொழிலுடன் ஒப்பிடக்கூடிய அளவு அண்மித்ததாகவே இருக்கிறது. ஒரு பெண்ணை மையமாக வைத்தே இந்த நிகழ்வு கொண்டாடப்படுகிறது. பெண்ணை குளிப்பாட்டுவதிலிருந்து அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்படுகிறது. பெண்ணை மேடையில் நிறுத்தி பல சம்பிரதாய சடங்கு நிகழ்வுகள் நடைபெறும். பலர் கூடியிருப்பார்கள். நடக்கிற விடயங்களை பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். இறுதியாக பணம் கொடுத்துவிட்டு படமும் எடுத்துவிட்டு வீடு திரும்பிவிடுவார்கள். என்ன, விபச்சார விடுதிக்கு செல்கிற போது குடும்பமாகப் போவதில்லை. ஆனால் இதற்கு குடும்பமாகவே பெரும்பாலும் போகிறார்கள். இந்த நிகழ்வின் மையப்பொருளான அல்லது காட்சிப்பொருளான அந்த சிறுமியும் கடைசி வரைக்கும் தனது களைப்புகளை யெல்லாம் ஓரங்கட்டி முகத்தில் புன்னகையுடன் (மிகவும் கஸ்ரப்பட்டு) தனது கடமையை நிறைவேற்றுவாள். என்ன விபச்சாரத் தொழிலின் போது ஈடுபடுகிற பெண்ணுக்கு விடயம் அறிந்து பணத்துக்காக செய்கிறாள். ஆனால் இந்த கொண்டாட்ட நிகழ்வின் போது சிறுமிக்கு போதியளவு விளக்கமிருக்காது, ஆனால் மையப்பொருளை வைத்து பெற்றோர்கள் பணத்துக்காக இந்த நிகழ்வை செய்கிறார்கள். விபச்சாரத் தொழில் ஆடை களையப்படும். பூப்புனித நீராட்டு விழாவில் ஆடைகள் அணியப்பட்டிருக்கும். ஆனால் என்ன, அங்கும் இன்பம் இங்கும் இன்பம். அங்கும் பணம் இங்கும் பணம். அங்கும் பெண் தான் மையப் பொருள் இங்கும் பெண்தான் மையப்பொருள். அதுவும் பாலியல் தொடர்பானது தான் இதுவும் பாலியல் தொடர்பானது தான். அதுவும் பெண்ணுடல் தொடர்பானது இதுவும் பெண்ணுடல் தொடர்பானது. மொத்தத்தில் இதுகூட ஒருவகையில் விபச்சாரமாக்கப்பட்டுள்ளது.

இன்று கோயிலில் பூசை செய்கிற பூசகர் கூட அதனைத் தொழிலாகத்தானே செய்கிறார். அவருக்கு மாதாமாதம் அதற்கான பணம் வழங்கப்படுகிறது. குறிப்பாக ஐரோப்பாவில் இப்படித்தான். ஏனைய நாடுகளில் எப்படியென்று எனக்குத் தெரியவில்லை.

வீதியில் சிலர் மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக உடலை அசைக்காமல் நிற்பார்கள். அவரால் மகிழ்ச்சியடைபவர்கள் பணம் கொடுத்துவிட்டு போகிறார்கள். அவர் அதனால் உழைக்கிறார். இதுவும் தொழில் தானே?

ஒவ்வொருவரும் தத்தமது உடல் உழைப்பைக் கொண்டு பணம் சம்பாதிக்கிறார்கள். விளையாட்டு வீரர்கள் விளையாடுவதால் பணம் சம்பாதிக்கிறார்கள். நடனக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் என்று கலைத்துறை சார்ந்தவர்களும் பிறரை மகிழ்வித்து பணம் சம்பாதிக்கிறார்கள்.இப்படி தொழில்களில் பலவகை. அதில் பாலியல் தொழிலும் ஒருவகை. ஏன் இங்கு ஏற்கனவே விவாதிக்கப்பட்ட விடயம் தானே தேவதாசிகள் விடயம். என்ன அங்கே குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மட்டும் இதற்காக கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி வந்தார்கள். மற்றும்படி பாதுகாப்பாகவும் சுத்தமான முறையிலும் சமூகச் சீர்கேடு இல்லாமல் நிகழ்ந்தால் எந்தப் பிரச்சனையும் ஏற்படப் போவதில்லையே. பாலியல் இச்சை என்பது மனித இயல்பு தானே. அது கண்ணியத்தோடு நிகழ்ந்தால் சமூகச் சீர்கேடு இடம்பெறப்போவதில்லை.

நம்மில் பலரது திருமண வாழ்க்கை கூட பாலியல் என்பதற்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுப் போய்விடுகிறது. அந்தவகையில் பார்க்கும் போது திருமணம் கூட விபச்சாரம் என்ற நிலைக்குள் வந்துவிடுகிறது. என்ன நீண்டகால ஒப்பந்தத்தில் செய்யப்படுகிற விபச்சாரமாகிவிடுகிறது. :) இப்ப எனக்கே குழுப்பமா இருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கையூட்டல் தொழில்... சொந்த உடலை பாலியல் இச்சையைத் தீர்க்க விற்கிறது தொழில்.. பூப்புனித நீராட்டு விழா விபச்சாரத் தொழில்.. இறுதியில்.. திருமணம் விபச்சாரம்...!

யாழ் களத்தின் பிரசித்தமான தலைப்புக்கள்.... கடந்த 10 ஆண்டுகளில்...

1. பூப்புனித நீராட்டு விழா

2. தாலி

3. பொட்டு

4. பெண்களும் அவர்களின் விடுதலையும்

5. கடவுள்

6. மதம்

7. பெரியார்

8. தீபாவளி/ வருடப்பிறப்பு.

9. இராமாயணம்.. மகாபாரதம்

10. திருமணம்/ காதல்.

இதை விட்டு யாழ் களம் அகட்டிப் பார்த்த விடயங்கள்... வெகு சில..!

திருமணத்தை விபச்சாரமா நடத்திறவை அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனா திருமணத்திற்குப் பின் ஆணா பெண்ணா விபச்சாரி என்பதில்.. எனக்கு பெரிய குழப்பமாவே இருக்கு. காரணம்.. இப்ப திருமணத்துக்குப் பின்னர் ஆண்கள் அடியோட அமைதியாகிட பெண்கள் மட்டும்... துள்ளிக் குதிக்கிறாங்க...??!

பூப்புனித நீராட்டு விழா.. திருமண விளம்பரம். தங்களட்ட வயசுக்கு வந்த ஒரு குமர் இருக்கு என்று உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிற செயல். பழைய காலத்தில் தேவதாசிகளிடம் இருந்து இவை.. இப்ப சாதாரணமானவர்களிடமும் பரவிட்டு. பரதநாட்டியம் கூட தேவதாசிகள்.. நடனம் என்பார்கள். ஆண்களை ஆடி மயக்கி.. அவர்களின் பாலியல் இச்சைக்கு தீனி போட்டு.. பணம் பார்ப்பதுடன் தங்கள் பாலியலையும் தீர்த்துக் கொள்வது இவ்வகைப் பெண்களின்.. சிறப்பு..!

ஆண்களுக்கு விபச்சாரத்தால்.. ஒரு நன்மை என்றால் பெண்களுக்கு இரட்டிப்பு நன்மை. ஒன்று பணம். அடுத்தது தீராத பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொள்ளுதல். இதில விபச்சாரத்தில பெண்களே அதிகம் விரும்பி ஈடுபட்டுள்ளமை.. வெளிப்படையாகின்ற போது.. நாம் ஆணாதிக்க சமூகம் பெண்களை வற்புறுத்தி விபச்சாரியாக்குகிறது என்று சொல்லிச் சொல்லி பெண்கள் பக்கமிருக்கிற நியாயங்களை மறைச்சுப் போடுறம்.

பெண்கள் பாவங்கள். பாலியல் இச்சையை தங்கள் சுதந்திரத்துக்கு தீர்க்க விபச்சாரமே.. ஒரே வழி என்று முன் மொழிகிறவர்களும் இல்லாமல் இல்லை. அதில் நியாயம் கற்பிக்க பெண்களும் உளர். இதை யாழிலும் பலர் முன்மொழிந்தனர். ஏன் பெண் விடுதலையின் முக்கிய விடயத்தில் அதுவும் அடங்கி.. அதை பாலியல் தொழில் என்று கெளரவப்படுத்தவும் பெண்கள் பிந்நிற்கவில்லை.! :)

ஆண்கள் வராட்டி நாங்கள் ஏன் விபச்சாரம் செய்யப் போறம் என்ற நிலை இன்று இல்லை. ஆண்கள் வராட்டி.. பெண்களே பெண்களை விபச்சாரிகளாக்கி பாலியல் இச்சைகளைத் தீர்ப்பதும் உலகில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மனிதன் அடிக்கடி தான் விலங்கு என்பதை நிரூபிக்க விளைகிறான். நாங்களும் இல்லையப்பா உனக்கென்று ஒரு நாகரிக வரம்பை இட்டால் சிறப்பு விலங்காவாய் என்றால்... எங்க...???! அதை அடிமைத்தனம்.. எங்கிறார்கள்..!

திரும்பத் திரும்ப.. சொல்லிச் சொல்லி.. களைச்சதுதான் மிச்சம். சுழியம் போல.. எல்லாம் சுற்றிச் சுற்றி தொடக்கப் புள்ளிக்குத்தான் வருகுது..! :):)

Edited by nedukkalapoovan

ஆண்கள் வராட்டி நாங்கள் ஏன் விபச்சாரம் செய்யப் போறம் என்ற நிலை இன்று இல்லை. ஆண்கள் வராட்டி.. பெண்களே பெண்களை விபச்சாரிகளாக்கி பாலியல் இச்சைகளைத் தீர்ப்பதும் உலகில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மனிதன் அடிக்கடி தான் விலங்கு என்பதை நிரூபிக்க விளைகிறான்.

:lol: ஒப்பீட்டளவில பார்க்கிறபோது தமது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ள ஆண்களே அதிகம் பெண்களை நாடுகிறார்கள். பாலியல் ஒழுக்கம் என்று கதைக்கப்படும் போது ஆண்களுடைய ஒழுக்கமே முதலில் கேள்விக்கு உள்ளாக்கப்படவேண்டும். ஆனால், அது இந்த ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் பின்தள்ளுப்பட்டுகிறது. பாலியல் என்றால் பெண்ணே முன்னிலைப் படுத்தப்படுகிறாள். பாலியல் கவர்ச்சி என்றால் அது பெண்ணையே முன் நிறுத்துகிறது. இதுவும் ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பின் வெளிப்பாடுதான். பெண்கள் தமது பாலியல் இச்சையைத் தீர்த்துக்கொள்ள பெரும்பாலும் ஆண்களை நாடாமல் இருப்பதற்கும் இந்த பெண் மீது வைக்கப்படும் பாலியல் ஒழுக்கக் கோட்பாடு தான் காரணம். (தமிழ்ச் சமூகத்தில்) பாலியலைப் பொறுத்தவரையிலும் பெரும்பாலும் பெண்கள் அனுபவிக்கப்படுகிறார்களே ஒழிய, அனுபவிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அந்த வகையில் பார்க்கும் போது நீங்கள் முன்வைக்கிற இரட்டிப்பு நன்மை எந்தவகையில் ஏற்புடையது என்று தெரியவில்லை. பெண்கள் தமது பாலியல் இச்சையைத் தீர்த்துக்கொள்ள பெண்களையே நாடுவதும் இதன் வெளிப்பாடுதானோ என்னவோ. :lol: அதைவிட பாலியல் இச்சையைத் தீர்த்துக்கொள்ள ஆணோ பெண்ணோ தேவையில்லைத்தானே. சுய இன்பம் அனுபவித்தலும் இருக்கிறதுதான். இதில் கூட (தமிழ்ப்) பெண்களுக்கு சுதந்திரம் இல்லை :lol: . நம்மில் சில ஆண்கள் பெண் துணையின்றி வாழலாம் என்கிற நம்பிக்கையில் இருப்பதும் கூட இந்த சுய இன்பத்தை நம்பித் தான் என்று நினைக்கிறேன். ஆனால், சுய இன்பம் என்பதும் ஒரு கட்டத்தில் அலுத்துவிடலாம். ஒன்று மட்டும் உறுதி... ஒரு ஆணோ பெண்ணோடு சேரும்போதே (இணையும்போதே) முழுமையடைகிறான். அதேபோல் பெண் ஆணோடு சேரும்போதே முழுமையடைகிறாள். :lol:

Edited by இளைஞன்

ஏங்க சீதனம் வாங்கி கல்யாணம் கட்டிற ஆண்கள் கூட ஒரு வகையில் விபச்சாரிகள் தானே அங்கே அவர்கள் தங்களை விற்க்கினமே இது எந்த வகையில் அடக்கம் :lol::lol:

செவ்வந்தி நீங்கள் சொல்வது போல் சீதனம் வாங்கிச் செய்கிற திருமணமும் விபச்சாரம் தான். விபச்சார விடுதிக்கு போனால் ஆண் காசு கொடுக்கவேண்டும். அது ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கான பணம். ஆனால் திருமணம் என்பதில் ஆணுக்கு நிறைய நன்மைகள். முதலாவது பணம் கிடைக்கிறது. இரண்டாவது அவனது பாலியல் இச்சை நிறைவேற்றப்படுகிறது நீண்டகாலத்துக்கு. மூன்றாவது வீட்டு வேலைகளுக்கான பணியாளர் கிடைக்கிறார். இந்த மூன்றுக்குமாக சில சலுகைகளையும் அவன் பெண்ணுக்கு செய்தும் கொடுக்கிறான் என்பதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும் :lol:

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அநாகரீக உலகிலும் நவநாகரீக உலகிலும் பாதிக்கப்படுவதும் தண்டிக்கப்படுவதும் பெண்தெய்வங்களே!நரம்பில்லா நாக்கால் இருபக்கமும் வாதாடுவது மிகச்சுலபம்.

ஆண்கள் வராட்டி நாங்கள் ஏன் விபச்சாரம் செய்யப் போறம் என்ற நிலை இன்று இல்லை. ஆண்கள் வராட்டி.. பெண்களே பெண்களை விபச்சாரிகளாக்கி பாலியல் இச்சைகளைத் தீர்ப்பதும் உலகில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மனிதன் அடிக்கடி தான் விலங்கு என்பதை நிரூபிக்க விளைகிறான். நாங்களும் இல்லையப்பா உனக்கென்று ஒரு நாகரிக வரம்பை இட்டால் சிறப்பு விலங்காவாய் என்றால்... எங்க...???! அதை அடிமைத்தனம்.. எங்கிறார்கள்..!- நெடுக்காலபோவான்

--------------------------------------------------------------------

மனிதன் ஒரு விலங்கு. அவன் சிறப்பு விலங்கு என்பதை நாகரீகம் நிறுவமுடியுமா என்பதில் குழப்பமாகவே உள்ளது.

மனிதன் விலங்கில்இருந்து நாகரீகத்தால் பிரிந்து விலங்குகளை விட மோசமான தன்மையை அடைந்து நிற்கின்றான். உலக மனிதக்குளுமங்கள் அணுகுண்டை வைத்திருப்பது சக மனிதரை கொல்வதை நோக்காக கொண்டே ஆகும்.

மனதனின் பரிணாம வளர்ச்சி என்பது விலங்குகளிடம் இருந்து மனிதரை சிறப்பு விலங்காக எவ்வளுவு தூரம் காட்டுகின்றதோ அவ்வளவு தூரம் விலங்கை விட மோசமானவன் என்ற செயற்பாடும் கூடவே வளர்கின்றது.

விலங்குள் உணவுத்தேவைக்காக மற்ற விலங்குகளை வேட்டை ஆடுகின்றது. மனிதன் உணவுத்தேவைக்காக இல்லாமல் நாகரீகம் தந்த இன மத மொழி பொருளாதாரம் போன்றவற்றிற்காக சக மனிதரை ஒடுக்கு முறை செய்யவும் கொல்லவும் செய்கின்றான்.

சிங்கம் சிங்கத்தை கொன்று சாப்பிடுவதில்லை. மனிதர் அப்படி அல்ல உணவு என்ற தேவைக்கு அப்பால் சக மனிதரை கொல்ல துணிகின்றான். செயற்படுகின்றான்.

நாடுகளின் எல்லைகள் ராணுவச்செலவுகள் நாசகார ஆயுதங்கள் எல்லாம் மனிதன் தவிர்ந்த ஏனைய விலங்குகளால் ஆபத்து என்று ஏற்படுத்தி வைக்கப்பட்டிருப்பவை அல்ல. சக மனிதனை இலக்கு வைத்து ஏற்படுத்தி வைக்கப்பட்டிருப்பவையே.

மனிதன் ஒரு சிறப்பு விலங்கு என்பது உண்மை. ஆனால் அந்த சிறப்பு ஒன்றும் போற்றுதற்குரியதல்ல என்று சிந்திக்கும் அளவுக்கு மனிதனின் செயற்பாடுகள் உள்ளது.

மனிதன் ஏனைய விலங்குகளில் இருந்து சிறப்பு விலங்கு ஆகி பின் இனம் மதம் சாதி வர்கம் நிறம் குணம் என்னும் எத்தனையோ வாக பிரிந்து பல நூறு விலங்குகளாகி ஒருவரை ஒருவர் குதறிக்கொண்டிருக்கின்றான் என்பதையே உண்மையாக காண்கின்றோம். ஆனால் என்ன நாகரீகமாக கடிபடுகின்றான். ஆனால் அது பழைய விலங்கு நிலைiயில் கடிபட்டதை விட மோசமாக உள்ளது. அமரிக்காவில் அழகான கார்கள் ஓடுகின்றது ஈராக்கில் இரத்தம் ஓடுகின்றது. இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குகின்றார்கள் அங்கே இரத்த ஆறு ஓடுகின்றது மனித உரிமை பற்றி ஆயுதத்தை வழங்கி விட்டு பேசுகின்றார்கள். எல்லாம் ஒரு பரிணாம வளர்ச்சி தான்.

விபச்சாரம் என்பதை பாலியல் தொழிலாக கையாள முற்படும் போது அந்த செயற்பாட்டில் தேவை சார்ந்த விடயங்களை அணுக முடிகின்றது. அவ்வாறு தேவைசார்ந்த விடயங்களை பரிசீலனை செய்து அவற்றை பூர்த்தி செய்ய ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கும் பொருட்டுதான் விபச்சாரம் என்கின்ற பாலியல் தொழிலுக்கு மாற்று தொழிலை உருவாக்க முடியும். விபச்சாரத்தில் இருந்து விடுபட முடியும்.

ஒரு தாய் தனது இரண்டு பிள்ளைகளின் பசித்தேவைக்கு தனது உடம்பை விற்றால் அவளை விபச்சாரி என்ற அளவு கோலால் அளப்பதை விடுத்து பாலியல் தொழிலாளி என்ற அளவுகோலால் அளப்பதே பிரச்சனைக்கு ஆக்க பூர்வமன தீர்வைத்தரும். இங்கே ஆண்களின் தேவைகள் என்னுமொருபக்கத்தில் உள்ளது வேறு விடயம். பாகிஸ்தானில் பாலியல் தொழிலாளர்களை கொன்றது மத விபச்சாரம் அல்லது அரசியல் விபச்சாரத்தில் அடங்குகின்றது. மனிதன் ஒரு நாகரீக விலங்கு இப்படி பல நடக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:lol: ஒப்பீட்டளவில பார்க்கிறபோது தமது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ள ஆண்களே அதிகம் பெண்களை நாடுகிறார்கள். பாலியல் ஒழுக்கம் என்று கதைக்கப்படும் போது ஆண்களுடைய ஒழுக்கமே முதலில் கேள்விக்கு உள்ளாக்கப்படவேண்டும். ஆனால், அது இந்த ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் பின்தள்ளுப்பட்டுகிறது. பாலியல் என்றால் பெண்ணே முன்னிலைப் படுத்தப்படுகிறாள். பாலியல் கவர்ச்சி என்றால் அது பெண்ணையே முன் நிறுத்துகிறது. இதுவும் ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பின் வெளிப்பாடுதான். பெண்கள் தமது பாலியல் இச்சையைத் தீர்த்துக்கொள்ள பெரும்பாலும் ஆண்களை நாடாமல் இருப்பதற்கும் இந்த பெண் மீது வைக்கப்படும் பாலியல் ஒழுக்கக் கோட்பாடு தான் காரணம். (தமிழ்ச் சமூகத்தில்) பாலியலைப் பொறுத்தவரையிலும் பெரும்பாலும் பெண்கள் அனுபவிக்கப்படுகிறார்களே ஒழிய, அனுபவிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அந்த வகையில் பார்க்கும் போது நீங்கள் முன்வைக்கிற இரட்டிப்பு நன்மை எந்தவகையில் ஏற்புடையது என்று தெரியவில்லை. பெண்கள் தமது பாலியல் இச்சையைத் தீர்த்துக்கொள்ள பெண்களையே நாடுவதும் இதன் வெளிப்பாடுதானோ என்னவோ. :lol: அதைவிட பாலியல் இச்சையைத் தீர்த்துக்கொள்ள ஆணோ பெண்ணோ தேவையில்லைத்தானே. சுய இன்பம் அனுபவித்தலும் இருக்கிறதுதான். இதில் கூட (தமிழ்ப்) பெண்களுக்கு சுதந்திரம் இல்லை :lol: . நம்மில் சில ஆண்கள் பெண் துணையின்றி வாழலாம் என்கிற நம்பிக்கையில் இருப்பதும் கூட இந்த சுய இன்பத்தை நம்பித் தான் என்று நினைக்கிறேன். ஆனால், சுய இன்பம் என்பதும் ஒரு கட்டத்தில் அலுத்துவிடலாம். ஒன்று மட்டும் உறுதி... ஒரு ஆணோ பெண்ணோடு சேரும்போதே (இணையும்போதே) முழுமையடைகிறான். அதேபோல் பெண் ஆணோடு சேரும்போதே முழுமையடைகிறாள். :lol:

ஆணாதிக்கம் என்ற பதப்பிரயோகத்தை கவனமாகக் கையாள வேண்டும் என்பதில் நான் உறுதியானவன். எடுத்ததுக்கெல்லாம் ஆணாதிக்க சமூகம் கட்டமைப்பு என்று கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

சுய இன்பம்...mastrubation என்பது ஆண் பெண் இருபாலாருக்கும் உரியது. அது இயற்கையானது. தூக்கத்தில் இருக்கும் போது இயற்கையாகவும் நடக்கலாம்.. சுய தூண்டலின் பெயரிலும் நடக்கலாம். அது அவரவரின் தனிப்பட்ட விருப்பம்.. சுதந்திரம். அது எவரின் சுதந்திரத்தையும் பறிக்கும் என்று நினைப்பதே தவறு. யாரும் சொல்லிக் கொடுத்து அது நடப்பதில்லை. இயற்கையாக நடக்கிறது. அவை உடல் நலனைப் பாதிக்கிற செயல்களும் அல்ல.

விபச்சாரம் அப்படியன்று. அது தனி மனித சுதந்திர எல்லைக்கு அப்பால் சமூகத்தை நோண்டிப் பார்கிறது. அதை அனுமதிக்க முடியாது. காரணம்.. அதன் பாதிப்பு சமூகம் ஒன்றின் இருப்பையே கேள்விக் குறியாக்கத் தக்க அளவுக்கு பாதிப்பைத் தரவல்லது. ஆபிரிக்க நாடுகளில் கட்டுப்பாடற்ற பாலியல் செயற்பாடுகளே அந்த நாடுகளில் 50% சனத்தொகை பாலியல் நோய்களால் பாதிக்கப்பட காரணமாகியுள்ளன. இது மனிதர்கள் பாலியல் ரீதியில் கடுமையான ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டியதை எடுத்துக் காட்டி நிற்கிறது. பிரித்தானியாவில் கூட தற்போது எயிட்ஸ் தொற்றல் அதிகரித்திருக்கிறது. இதற்குக் காரணம்.. கிழக்கு ஐரோப்பாவில் இருந்து விபச்சார நோக்கோடு பிரிட்டனுக்குள் பணம் பார்க்க வரும் பெண்கள். தூண்டல் இல்லாமல் ஆண்கள் துலங்கமாட்டார்கள்.

உங்கள் கருத்துப்படி..தமிழ் பெண்கள் என்ன 24 மணி நேரமும் தமிழ் ஆண்களால் கண்காணிக்கப்படுகினமா..??! அவையின்ர சுய இன்பச் சுதந்திரம் பறிபோறதற்கு. ஏன் கனவில கூட.... ஆண்கள் வந்து தடுக்கினமா..??! அவை விரும்பினதைச் செய்யுறதுக்கு ஏன் ஆண்களையும் ஆதிக்கத்தையும் இதற்குள் இழுக்கிறீர்களோ தெரியவில்லை.

திருமணம் செய்தவர்கள் சுய இன்பத்துக்கு ஆளாகாதவர்கள் எங்கிறீர்களா. இயற்கையான சுய இன்பம்.. ( Ejaculation) கனவிலேயே நிகழ்ந்துவிடுகிறது. இயற்கையே அதை ஒரு வழமையாக்கி உள்ள போது.. சுய இன்பத்தால் மனிதன் திருமணம் செய்யாமல் வாழ முடியும் என்று வரையறுப்பது.. வேடிக்கையானது. அப்படி நோக்கின் ஆண்களும் பெண்களும் திருமணமே செய்யாமல் வாழலாமே...??! ஏன் செய்கிறார்கள். :lol::lol:

எனது பார்வையில் திருமணம் என்பது பாலியல் இச்சைகளைத் தீர்க்கும் நிகழ்வுக்கானது என்பது தவறானது. ஆனால் நடைமுறை உலகில் அது ஆபாச நிகழ்வாகவே அதிகம் அமைகிறது. திருமணம் என்பது ஆண் - பெண் புரிந்துணர்வின் பால் இருவரும் ஒருங்கிணைதல். அதில் உணர்வு ரீதியான ஒருங்கிணைவில் இருந்து உடல்ரீதியானது வரை அமையலாம். அவரவர் அறிவுமட்டத்துக்கு உணர்வுமட்டத்துக்கு வாழ்க்கைத் தர மட்டத்திற்கு ஏற்ப அது மாறுபடும்.

ஆணாதிக்கம் என்ற பதப் பிரயோகம் சம காலத்தில் மிகப்படுத்திய ஒன்று என்றே நான் கருதுகின்றேன். இன்று அனைவருக்கும் அவர்கள் விரும்பியதை செய்ய உரிமையும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது உலகில். ஒரு ஆணைப் பிடிக்கவில்லை என்றால் கூட விட்டிட்டுப் போகலாம். இன்னொருவனோடு சேரலாம். என்ற நிலை வளர்ந்திருக்கிறது. அதேபோல் ஆண்களுக்கும். அதுமட்டுமன்றி பெண்கள் சமூகத்தின் பல மட்டங்களிலும் இயங்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்களை விட அவர்கள் பல அதிகார மையங்களை இன்று நிரப்பி நிற்கின்றனர். இது எல்லாம் பெண்ணாதிக்கம் என்பதாக அர்த்தப்படாது. பெண்களும் தங்கள் உரிமைகளை அனுபவிக்க விளைகின்றனர் என்பதாகவே பார்க்கப்படுகிறது. இவை விடுதலை என்றோ.. அடக்குமுறை என்றோ பார்பதில் எனக்கு உடன்பாடில்லை. உரிமைகளைப் பாவிக்க மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்கள் அதைப் பாவிக்கின்றனர் அதற்கான வழிவகைகள் இன்றைய உலகில் புரிந்துணர்வின் பால் எழுந்திருக்கிறது. உலகின் தேவை கருதி தொடர்கிறது.

ஆண் இயற்கையாகவே பெண்ணை விட உடல் ரீதியில் பலமானவன் என்பது தவிர்க்க முடியாதது. அதுவே ஆணாதிக்கம் என்று வரையறுக்கப்பட்டால்.. அதற்கு இயற்கையைத்தான் குறை சொல்ல வேண்டும். மனித உரிமைகள் என்ற அடிப்படையில் நோக்கின் ஆணும் பெண்ணும் மனிதர்கள் என்ற வகையில் சம உரிமை தான் அளிக்கப்பட்டிருக்கின்றனர். வேணும் என்றால் பெண்கள் ஒரு படி மேலே சலுகைகளையும் அனுபவிக்கின்றனர் என்று குறிப்பிடலாம். இன்று சிறுகச் சிறுக அந்த நிலை மாறி வருகிறது. அதற்கு ஆண்கள் தங்கள் சம உரிமைக்காக எழுப்பும் குரலும் ஒரு காரணம்.

விவாகரத்து வழக்குகளில் முன்னர் பெண்களுக்கு என்றிருந்த ஜீவனாம்சம் இப்போ ஆண்களுக்கும் என்று வருகிறது. இப்படி ஆண்கள் பறிகொடுத்த பல உரிமைகள் இருக்கின்றன. அதற்காக நாம் பெண்ணாதிக்கம் என்பதை உச்சரிக்க முடியாது. பெண்கள் தங்களின் பலவீனத்தால் இழப்பதை ஆணாதிக்கம் என்று வரையறுக்க முடியாது. பெண்களுக்கு சமூகத்தில் பிரச்சனை இருக்கென்றால்.. ஆண்களுக்கும் இருக்கிறது. ஆகவே.. ஆண்களின் பிரச்சனை பெண்ணாதிக்கக் கட்டமைப்பு வளர்ச்சியின் பிரதிபலன் என்று நாம் பதில் குரல் எழுப்புவதால் மனித முன்னேற்றம் தான் தடைப்படும். இங்கு புரிந்துணர்வுடனான ஒத்துழைப்பே வேண்டப்படுகிறது.

இன்று ஆணாதிக்க.. பெண்ணாதிக்க பதங்கள் செல்லுபடியற்றவையாகி உள்ளன. அந்தளவுக்கு மனித உரிமைகள் பேணப்பட ஆர்வம் காட்டப்படுகிறது. ஆண் பெண் என்ற நிலைகளுக்கு அப்பால். :)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.