Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சரியான பாதையில் ஜே.வி.பி

Featured Replies

சரியான பாதையில் ஜே.வி.பி

இன்றைக்குச் சிறிலங்காவிலே இனவாதம் கக்குகின்ற கட்சிகள் என்றதுமே எம் நினைவில் வருவது ஜாதிக ஹெல உறுமயவும் ஜனதா விமுக்தி பெரமுன என்கின்ற ஜே.வி.பியும் தான்.

ஆனால் இலங்கையின் அரசியலையும் ஜெ.வி.பி.யின் கடந்த காலத்தையும் பின்நோக்கிப் பார்த்தால் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகச் சரியான பாதையிலே செல்லுகின்ற அரசியல் கட்சியாகவே ஜெ.வி.பியைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

முதலாவதாக மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜெ.வி.பியினர் ஜனநாயகத்திலே பாராளுமன்ற அரசியலிலோ எப்போதுமே நம்பிக்கை கொண்டவர்களல்ல.

ஒரு மருத்துவ பீட மாணவனாக ரஸ்யாவிலே கல்வி கற்றுக் கொண்டிருந்த றோஹண விஜேவீரா அவர்கள் மாக்சியத் தத்துவங்களால் கவரப்பட்டவராய் இருந்தார். கியுபப் புரட்சி அவரைப் பெரிதும் கவர்;ந்திருந்தது. குறிப்பாக புரட்சியாளர் சேகுவேராவின் வழியை அவர் பெரிதும் விரும்பினார்.

அவர் ரஸ்ய அரசு தொடர்பான விமர்சனங்களை முன்வைத்த காரணத்தால் தன்னுடைய கல்வியைத் ரஸ்யாவில் தொடரமுடியாமல் போனது. இதைத் தொடர்ந்து இலங்கை அரசியலில் நாட்டம் காட்டத் தொடங்கிய விஜேவீரா இலங்கையின் ஜனநாயக ஆட்சி முறையால் ஏழை மக்கள் எந்தப் பலனையும் பெறப் போவதில்லை, ஆயுதப் புரட்சி மூலமே மக்கள் விடிவு பெறலாம் என்ற பிரச்சாரத்தை இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக பின்தங்கிய கிராமப் பகுதிகளில் இரகசியமாக முன்னெடுத்தார்.

இதன் அடுத்த கட்டமாக 1971ம் ஆண்டிலே சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியைத் தூக்கியெறிவதற்காக ஒரு ஆயுதப் புரட்சிக்கு ஏற்பாடு செய்தார். சரியான திட்டமிடலில்லாத காரணத்தால் சிறிமாவோ அரசாங்கத்தால் அந்தப் புரட்சி ஒடுக்கப்பட்டது. கொடுங் கரங் கொண்டு ஒடுக்கப்பட்ட இந்தப் புரட்சியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். றோஹண விஜேவீரா உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

1977ம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்;டு வெளியில் வந்த விஜேவீராவின் மனதில் புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்றும் எண்ணம் கருகிவிடவில்லை.

ஆனால் பெரும்பாலான உறுப்பினர்கள் கொல்லப்பட்ட நிலையிலும் சுனந்த தேசப்பிரிய , விக்டர் ஐவன் உள்ளிட்ட பலர் கருத்து முரண்பாடுகளினால் வெளியேறிய நிலையிலும் உடனடியாக இன்னொரு புரட்சியை நடத்த முடியாதென்பதை உணர்ந்து காலங் கனியும் வரை ஜனநாயக அரசியல் என்ற முகமூடியைப் போட்டுக் கொண்டு காலங்தள்ள முடிவு செய்தார்.

தமது அரசால் கடடவிழ்த்து விடப்பட்ட 83ம் ஆண்டுக் கலவரத்திலிருந்து தமது முகத்தை சர்வதேச அரங்கில் காப்பாற்றிக் கொள்வதற்காக அந்தப் பழியை ஜே.வி.பி மற்றும் இடது சாரிக் கட்சிகளின் தலையில் போட்டு அவற்றைத் தடை செய்யும் கைங்காரியத்தை ஜே.ஆர்.

இந்த நிலையில் இரண்டாவது புரட்சியை தான் எதிர்பார்தததற்கு முன்னதாகவே ஆரம்பிக்க வேண்டிய நிலை ஜெ.வி.பிக்கு இருந்தது.

1980 களின் இறுதிப் பகுதியில் கிட்டத்தட்ட சிங்களப் பிரதேசத்தை ஒரு காகிதத் துண்டின் மூலம் கட்டுப்படுத்தும் அளவிற்கு அவர்கள் பலம் பெற்றிருந்தார்கள். ஆனால் உள்வீட்டுப் பிரச்சினைகள் காரணமாக அந்தப் போராட்டமும் நசுக்கப்பட்டதுடன் விஜேவீரா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். சிலர் நாட்டை விட்டுத் தப்பியோடினர்.

இந்த நிலையில் பழைய குருவி கதவைத் திறவடி பாணியில் மீண்டும் ஜனநாயகம் பேச வேண்டிய நிலை அவர்களுக்கு எற்பட்டது. அதனால் ஜனநாயக அரசியலில் கால் வைத்திருந்தாலும் அடுத்த புரட்சிக்கான காலம் கனியும் வரை காத்திருக்கும் ஒரு அமைப்பாகவே ஜெ.வி.பி இருக்கிறது.

இலங்கையின் போர்ச் சூழல் தமது திட்டத்ததை நிறைவேற்றுவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது, தொடர்ந்து இருக்கும் என்பதை நன்கு உணர்ந்து வைத்திருப்பதால் யுத்தம் நீடிக்க வேண்டும் என்ற எண்ணமும் மக்களிடம் யுத்த மனநிலை முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது.

அத்துடன் முதலிரு சந்தர்ப்பங்களைப் போலன்றி இம்முறை ஒரு குறிப்பிடத்தக்க மக்கள் செல்வாக்கைப் குறிப்பாக நகரப் பகுதிகளில் பெற்றுவிட வேண்டுமென்பதிலும் குறியாக இருக்கின்றனர்.

சிங்கள மக்களிடம் அரசியல் ரீதியாகக் குறுகிய காலத்தில் செல்வாக்குப் பெறுவதற்கான வழி இனவாத சிங்களக் கோசமே என்பதை அனைவரும் அறிந்ததே. பண்டாரநாயக்காவின் தனிச் சிங்களச் சட்டம் என்ற கோசம் கட்சியைத் தொடங்கி சில காலத்திலேயே அரசுக் கடடிலில் அமரும் அளவிற்கு அவர்களை உயர்த்தியதும் அனைவரும் அறிந்ததே.

எனவே ஜெ.வி.பியும் இனவாதத்தையே தன்னுடைய அரசியல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி வருகிறது. ஆதன் மூலம் கறிப்பிடத்தக்க மக்களின் செல்வாக்கையும் பெற்றிருக்கிறது.

அது மட்டுமன்றி சிறிலங்கா அரசாங்கம் போர்ச் சூழல் காரணமாக அவசர அவசரமாக பினபுலத்தை நோக்காது பலரையும் இராணுவத்தில் சேரத்து வருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பல ஜே.வி.பியினர் இன்றைக்கு சிறிலங்கா இராணுவத்திற்கள் நுழைந்து விட்டனர்.

அத்துடன் 80களின் இறுதிப்பகுதியில் பெருமளவு ஆயுதங்களைக் கொண்டிருந்த இவர்களின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட போதிலும் பெருமளவிலே ஆயுதங்கள் கைப்பற்றப்படவில்லை.

அந்த ஆயுதங்கள் எங்கே என்ற கேள்வியும் அவற்றை அரசிடம் கையளிக்காமல் எதற்காக வைத்திருக்கிறார்கள் என்ற கேள்வியும் நியாயமானதே. ஆனால் பதவிக் கதிரையில் அமர்ந்திருப்பதற்கு இவர்களின் ஆதரவு தேவையாயிருப்பதால் சிங்கள அரசாங்கங்கள் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை.

இவை எல்லாவற்றையும் கவனிக்கின்ற போது இம்முறை ஜனநாயகப் போர்வையில் ஆட்சியைக் கைப்பற்றிப் பின் தமது திட்டத்தை நிறைவேற்றுவது அல்லது முன்னரைப் போலல்லாது இராணுவம். அரச நிர்வாகம், தொழிற்சங்கங்கள் என்பவற்றுக்குள் பெருமளவில் ஊடுருவி சரியான திட்டமிடலுடன் ஆயுதப் புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவது என்ற இரட்டைத் திட்டத்துடன் சரியான பாதையில் ஜெ.வி.பி செயலாற்றிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

மணி அத்தான் தங்களது அரசியல் அலசல் நன்றாக இருந்தது அறியாத பல விசயங்களை இதன் மூலம் அறிந்து கொண்டேன்........ :lol:

அப்ப ரோகண விஜவீரவின் கனவை நிறைவேற்ற தற்போது அரசியல் கதைரையில் உள்ள ஜே.வி.பி உறுப்பினர்கள் செயற்பட்டு கொண்டிருகிறார்கள் என்று கூறுகிறீர்கள்..............ஆனால் தற்போது உள்ளவர்கள் பணத்திற்காக அரசியல் துறையில் வந்தவர்கள் போல் அல்லவா இருகிறார்கள் இவர்கள் புரட்ச்சி செய்வார்கள் என்று எண்ணுகிறீர்களா...............

மற்றும் நீங்கள் கொடுத்த விளக்கம் ஏற்று கொள்ளகூடியது இவர்களின் ஆயுதங்கள் எங்கே அதை ஏன் இன்னும் மறைவாகவே வைத்துள்ளார்கள் என்பது எல்லாம் ஆனால்..........இவர்களின் புரட்சி எல்லாம் காலத்தின் ஓட்டத்தில் கரைந்துவிட்டன என்று எடுகோள் எடுக்க முடியாதா மணி அத்தான்............

  • தொடங்கியவர்

தற்போதைய ஜே.வி.பியினர் மக்களுக்காகப் புரட்சி செய்யப் போவதில்லை என்பது உண்மை.

காரணம் அத்தகைய எண்ணத்துடன் 1971ம் ஆண்டுப் புரட்சியில் ஈடுபட்ட றோஹணவிஜேவீரா, உபதிஸ்ஸ கமநாயக்கா உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டு விட்டனர். சுனந்த தேசப்பிரிய, விகடர் ஐவன் உள்ளிட்ட பலர் வேறு பாதைகளில் செல்லத் தொடங்கி விட்டனர்.

ஆனால் அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்காக ஆயுதப் புரட்சி என்ற எண்ணம் இன்றைய தலைவர்களிடமும் இருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலங்களில் ஜேவிபி யினருடன் தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு இருந்த தொடர்புகள் எத்தகையது. ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடன் செயற்படக் கூடிய வாய்ப்புகள் அப்போது இருந்தனவா? தெற்கில் ஜேவிபி யினர் மக்கள் அல்லது ஆயுதப் புரட்சியினூடாக அரசாங்கத்தை கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டபோது, வடக்குக் கிழக்கில் தோன்றிய தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் அதற்கான ஆதரவையளித்தனவா? அப்படியான ஒரு ஆதரவை அளிப்பதனூடாக தெற்கில் ஒரு புரட்சி நடக்க, தமிழீழ விடுதலைக்கு எதிரான சிங்களப் பேரினவாத + முதலாளித்துவ அரசு பலமிழக்க தமிழீழ விடுதலை என்பது எளிதில் அடையக்கூடிய ஒன்றாக இருந்திருக்குமா? ஜேவிபி யினரின் ஆயுதப் போராட்டம் ஒடுக்கப்பட்டு விட்ட இன்றைய காலகட்டத்திலும் கூட தெற்கிலே பொதுவுடமையின் அடிப்படையிலான ஆயுதப் புரட்சியை ஊக்குவிப்பது தமிழர் தரப்புக்கு சாதகமான விடயமாக இருக்குமா? அது சாத்தியமா? தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் வகையில் ஒட்டுக்குழுக்களை உருவாக்கி வளர்த்துவிட்டது இலங்கை அரசு (பின்னணியில் வேறு நாடுகளும்). அதற்கான காரணங்களாக பிரதேசவாதம் போன்றவற்றை அது கண்டறிந்து செயற்பட்டது. இதேபோன்று தெற்கில் சிறு சிறு ஆயுதக் குழுக்களை அரசுக்கெதிராக உருவாக்குவனால் தமிழர் தரப்பு முயற்சி எப்படியாக அமையும்? இதற்கான காரணமாக கொமுயூனிசத்தையும், தெற்கின் பலவீனங்களையும் பயன்படுத்திக்கொள்ள முடியாதா?

இப்படியான எனது அப்பாவித்தனமான கேள்விகளுக்கு பதில்கள் உண்டா :) அல்லது இவை கற்பனைத்தனமான கேள்விகளா

  • கருத்துக்கள உறவுகள்

ஜே.வி.பி. ஆரம்பித்த வரலாறு பற்றி அழகாய் எழுதியிருக்கிறீர்கள் .

வாழ்த்துகள் மணிவாசகன்.

மேலும் தொடருங்கள்.

சரியான பாதையில் ஜே.வி.பி. என்ற தலைப்பை விட ஜே.வி.பி.யின் அரசியல் தந்திரம் என்று தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

  • தொடங்கியவர்

மிகவும் முக்கியமான கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள் இளைஞன்.தென்னிலங்கையில் இருக்கிற மாக்சிய வாதிகள் (உண்மையான) அதிகமான மக்கள் செல்வாகில்லாமல் இருப்பது துரதிஸ்டமே.அடுத்ததாக நாமும் ஒரு பெரிய தவறிழைப்பதாய் கருதுகிறேன். சிங்கள மக்களிடமிருக்கின்ற யதார்த்தத்தைப் புரிந்து கொண்ட தலைவர்களைக் கூட (விரல் விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையுடையவர்களாக இருந்தாலும்) நாம் எம்முடன் இணைத்துக் கொண்டு செல்லத் தயங்குகிறோம்.தமிழருக்கெதிரா? சர்வதேசப் பிரச்சாரங்களுக்கு அநியாய சங்கரி உள்ளிட்ட ஒட்டுக்குழுக்களை மிகச் சாதுரியமாகச் சிங்கள் அரசு பயன்படுத்துகின்ற அதே வேளை தமிழருக்கான உள்ளக சயநிர்ணய உரிமையை சிங்கள அரசு அங்கீகரிக்காவிட்டால் வெளியக சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்துகின்ற உரிமை அவர்களுக்கு உண்டு என்று துணிந்து சொல்லக் கூடிய விக்கிரமபாகு கருணாரட்ண போன்றவர்களை நாம் எந்த அளவிற்குப் பயன்படுத்தியுள்ளோம் என்று சிந்தித்தால் தவறு புரியும்.அது மட்டுமல்லாமல் தமிழருக்கு உரிமை வழங்க வேண்டும் என்று காலம் காலமாகச் சொல்லி வருவதால் சிங்கள மக்களின் ஆதரவைப் பெற முடியாமல் ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வி காணும் விக்கிரமபாகு கருணாரட்ணவிற்கு கொழும்பு வாழ் தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள். மாறாக ரணில் விக்கிரமசிங்க, மிலிந்த மொரகொட போன்றவர்களுக்கே வாக்களிப்பார்கள்

ஜே.வி.பி. ஆரம்பித்த வரலாறு பற்றி அழகாய் எழுதியிருக்கிறீர்கள் . வாழ்த்துகள் மணிவாசகன். மேலும் தொடருங்கள்.சரியான பாதையில் ஜே.வி.பி. என்ற தலைப்பை விட ஜே.வி.பி.யின் அரசியல் தந்திரம் என்று தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.
கறுப்பி,நாட்டின் ஆட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தை அடைவதற்கான 'சரியான பாதையில் ஜேவிபியினர் செல்கின்றார்கள்' என்ற அர்த்தத்தில் தான் அந்தத் தலைப்பை இட்டேன்.

Edited by Manivasahan

மணிவாசகனின் ஆக்கத்திற்கு எனது பாராட்டுக்கள்.

இலங்கையின் ஆட்சியானது இராணுவத்தால் கவிழ்க்க முடியாதது. அப்படி நடந்தால், இராணுவம் தனக்குத்தானே அழிவைத் தேடிக்கொள்வதாக முடியும். இராணுவம் பிளவுபட்டு புலிகளையும் சமாளிக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.

  • தொடங்கியவர்

நன்றி இணையவன்,

இலங்கையின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது இராணுவம் மிகப் பெரியது. அது மட்டுமன்றி அவசர காலச் சட்டத்தின் கீழ் பல காலமாக நாடு ஆளப்பட்டு வருவதால் இராணுவம் பல சலுகைகளைப் பெற்று வருகிறது.

வடக்கு கிழக்கில் உத்தியோகப்பற்றற்ற அரசாங்கமாக இராணுவமே செயல்பட்டு வருகிறது. கிழக்கு மாகாண ஆளுனர்களாக இராணுவத் தலைவர்களே உள்ளனர்.

இந்த நிலையில் தமது அதிகார மையம் தகர்க்கப்பட்டால் அல்லது ஆளும் அரசுகளுடன் கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டால் ராணுவ ஆட்சி உருவாகக் கூடிய கூ+ழல் சிறிலங்காவில் காணப்படுகிறது.

என்னைப் பொறுத்த வரையில் தெற்காசியாவில் அடுத்ததாக இராணுவ ஆட்சி எற்படக் கூடிய நாடென்றால் அது சிறிலங்காவாகத் தானிருக்கும்.

மணிவாசகன், நல்லதொரு கட்டுரை. மாறுபட்ட பார்வை. தொடர்ந்தும் இதுபோன்ற அலசல்களை எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஜே வி பியில் இருந்து விலகிய ஒரு முக்கிய புள்ளியின் பேட்டி (அல்லது ஜே வி பியினருக்கு மிக நெருக்கமானவர் ஜே வி பியினரின் தற்போதைய தலைவர் இயக்கத்தின் பணத்தை சூறையாடியதுடன்,முக்கிய உறுப்பினர்களை காட்டி கொடுத்ததுடன் அப்போதைய அரசின் முக்கிய அமைச்சரின் உதவியுடன் நாட்டை விட்டு லண்டனுக்கு ஓடியர்.இப்படியானவர் சரியான பாதையில் நாட்டை கொண்டுபோவார் என்பது சந்தேகமே.மிகுதி சிங்கள இளைஞர்களை காவு கொடுக்கவும் இவர் தயங்க மாட்டார்.சோமவன்ச அமரசிங்கவை பற்றி விக்டர் ஐவனை கேட்டால் எப்படியான துரோகி என கூறுவார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாறுபட்ட அலசலை தந்த மணிவாசகனுக்கு நன்றிகள்.

  • தொடங்கியவர்

உள் பூசல்கள் காரணமாகவே றோஹண வீஜேவீராவை கூட இலகுவில் கைது செய்யக் கூடியதாக இருந்தது. அந்த வகையில் சோமவன்ச மீது கூட உண்மையான ஜே.வி.பித் தொண்டர்களுக்கு ச்நதேகம் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான எனது அப்பாவித்தனமான கேள்விகளுக்கு பதில்கள் உண்டா அல்லது இவை கற்பனைத்தனமான கேள்விகளா

இது அப்பாவிதனமான கேள்வி அல்ல கற்பனைவாதமும் அல்ல 80 களிள் ஆரம்ப காலகட்டத்தில் ஆயுதம் ஏந்தி போராட வெளிகிட்ட சில ஆயுதகுழுக்கள் இந்த ஜே.வி.பி யுடன் தாங்களும் சேர்ந்து இலங்கை பூராகவும் ஒரு புரட்சியை வேண்டும் என்ற கொள்கையை வைத்திருந்தார்கள்,அவர்களுடன? தொடர்பும் வைத்திருந்தார்கள் அவர்களில் சிலர் இப்போதும் இருகின்றார்கள்,ஜே.வி.பி யினர் தலைமறைவாக வாழ்வதிற்கு இந்த தமிழ் குழுக்கள் உதவி புரிந்தும் இருக்கின்றன,

காலஓட்டத்தில் அவர்களின் பாதையும் வேறுபட இவர்கள் பாதையும் வேறுபட புரட்சியும் வெடிக்கவில்லை தமிழ் விடுதலைக்கும் அவர்களாள் ஆதரவு கொடுக்க முடியவில்லை.

மறைந்த மாமனிதர் சிவராம் கூட ஒரு இடத்தில் கூறி இருகிறார்,ஒரு கால கட்டத்தில் தமிழர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்ற இந்த சிவப்பு சட்டைகள் எப்படி இவ்வாறு மாறிவிட்டார்கள் என்று வியப்பாக கேட்டிருந்தார்,அதாவது தற்போது உல்ல சில ஜே.வி.பி தலைவர்களை பற்றி.

தெற்கில் ஜேவிபி யினர் மக்கள் அல்லது ஆயுதப் புரட்சியினூடாக அரசாங்கத்தை கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டபோது

ஜே.வி.பி யின் ஆயுத புரட்சி 1971 யில் நடந்தது அப்பொழுது எமது போராட்டம் வளர்ச்சியடையவில்லை அது போக சிறிமாவே யாழ்பாணத்தில் தான் பாதுகாப்பு காரணதிற்காக தங்கி இருந்ததாக கேள்வி,ரோகரணவிஜவீர யாழ்சிறைசாலையில் தான் வைத்தும் இருந்தவர்கள்..

அப்படியான ஒரு ஆதரவை அளிப்பதனூடாக தெற்கில் ஒரு புரட்சி நடக்க, தமிழீழ விடுதலைக்கு எதிரான சிங்களப் பேரினவாத + முதலாளித்துவ அரசு பலமிழக்க தமிழீழ விடுதலை என்பது எளிதில் அடையக்கூடிய ஒன்றாக இருந்திருக்குமா?

எமது போராட்டம் மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையில் உள்ளது இந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவு அளித்து எமது போராட்டத்தை வெல்ல கூடிய நிலை ஏற்படமாட்டாது,அவர்களுக்கு ஆதரவு அளிக்க வெளிகிட்டால் எமது போராட்டம் பின்னடைவுகளை சந்திக்கும் ஒழிய வெற்றியடைய முடியாது.

Edited by putthan

பொறுமையான மேலதிகமான தகவல்களுக்கு நன்றி புத்தன் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரையில் தெற்காசியாவில் அடுத்ததாக இராணுவ ஆட்சி எற்படக் கூடிய நாடென்றால் அது சிறிலங்காவாகத் தானிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.