Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமர் மோடிஎட்டாம் திகதி சென்னை விஜயம் – ட்ரோன்கள் வான்வழி விமானங்கள் பறக்க தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மோடிஎட்டாம் திகதி சென்னை விஜயம் – ட்ரோன்கள் வான்வழி விமானங்கள் பறக்க தடை

Published By: Rajeeban

06 Apr, 2023 | 11:19 AM
image

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி வரும் 8 ஆம் திகதி சென்னை முழுவதும் டிரோன்கள் மற்றும் வான்வழி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கவும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கவும் பிரதமர் நரேந்திர மோடிதமிழ்நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் . 

இதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார். அவரை விமான நிலையத்தில் திமுக அமைச்சர்கள்

 பாரதிய ஜனதா கட்சி சார்பாக தமிழ்நாடு ஆளுநர் மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் வரவேற்க உள்ளனர். மேலும் விமான நிலையத்தில் இருந்து பாஜக தொண்டர்கள் மூலம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து சேலம் வரை செல்லும் ’வந்தே பாரத்’ ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்த பின்னர்

பல்லாவரம் பகுதியில் பொதுமக்களிடம் கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு

 மீண்டும் தனி விமானம் மூலம் கேரளாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்கிறார்.

பிரதமர் மோடியின் இந்த வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறை சார்பாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பும் முக்கிய வழித்தடங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை முழுவதும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

 

https://www.virakesari.lk/article/152233

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே, ஒரு ஜம்ப் பண்ணி, கச்சதீவில புத்தரை கும்பிட்டு, குருந்தூரில புத்தரின்ற புதுக் கோயிலையும் திறந்து, வெடுக்குநாறில புத்த கோயிலுக்கு கல்லையும் நட்டுட்டு போலாமே ஜீ!! 🤨

  • கருத்துக்கள உறவுகள்

விமானங்கள் வான்வழியாகத்தானே பறப்பன. வான்வழ் விமானங்களுக்குத் தடை என்றால் வேறு வழிகளிலும் விமானங்கள் பறப்பதுண்டா? 

அக்கினிக் குண்டன் ரேஞ்சுக்கு வீரகேசரியும் வளர்ந்துவிட்டது 🤨

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் நரேந்திரமோடி விமானநிலையத்தின் புதிய ஒருங்கிணைப்பு மையத்தை திறந்துவைத்தார்

Published By: RAJEEBAN

08 APR, 2023 | 04:08 PM
image

சென்னை: ரூ.1,260 கோடியில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

16809464403079.jpg

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். பின்னர், சாலை வழியாக சென்னை சர்வதேச சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். இதன்பிறகு, ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

https://www.virakesari.lk/article/152435

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழ்நாடு வளர்ந்தால், இந்தியாவும் வளரும்" - பிரதமர் மோதியின் உரையும் ஸ்டாலின் வைத்த கோரிக்கையும்

மோதி - ஸ்டாலின்

பட மூலாதாரம்,TWITTER/CMOTAMILNADU

8 ஏப்ரல் 2023, 13:00 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய விவேகானந்தரை, தமிழ்நாடு ஹீரோ போல வரவேற்றது என்றும் விவேகானந்தர் வலியுறுத்திய பெண்களின் முன்னேற்றத்தை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.

சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பேசிய அவர், விவேகானந்தர் கண்ட கனவு நனவாகும் வகையில் இந்தியாவிற்கான காலம் கனிந்துள்ளது என்று தெரிவித்தார்.

சென்னையில் விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையம் தொடங்கி வைப்பது, சென்னை- கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குப் பிறகு சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி பங்கெடுத்தார்.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "பிரதமர் முத்ரா கடன் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் ரூ.38 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது, அந்தத் திட்டத்தின் கீழ் இந்திய அளவில் அதிக எண்ணிக்கையில் பெண் தொழில் முனைவோர் கடன் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது," என்று குறிப்பிட்டார்.

 

மேலும், ''உயர்கல்வி, விளையாட்டுத்துறை எனப் பல துறைகளிலும் பெண்கள் தடைகளைத் தகர்த்து வருகின்றனர். பெண்களின் முன்னேற்றத்தை விவேகானந்தர் அதிகம் வலியுறுத்தினார். அதை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது,'' என்றார்.

தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பேசும்போது, திருக்குறள் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்வதைப் போல, இந்த நிகழ்ச்சியிலும் குறள் ஒன்றைச் சொல்லிவிட்டுப் பேசிய மோதி, சென்னை நகரத்தின் உத்வேகம் தனக்குப் பிடித்திருப்பதாகத் தெரிவித்தார்.

பிரதமருக்கு புத்தகம் பரிசளித்த ஸ்டாலின்

முன்னதாக, பிரதமர் மோதி சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தைத் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சிக்கு மோதியை வரவேற்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 'தமிழ்நாட்டில் காந்தியின் பயணம்' என்ற நூலை அளித்து, சால்வை அணிவித்து வரவேற்றார்.

நிகழ்ச்சியில் அவ்வப்போது, பிரதமரும் முதல்வரும் இணக்கமாகப் பேசிக்கொண்டனர். அதைத் தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், சென்னை-கோவை இடையிலான ரயில் சேவையைத் தொடங்கி வைத்து, பின்னர் ரயிலில் சிறிதுநேரம் பயணித்தார். ரயிலில் இருந்த மாணவர்களிடம் பிரதமர் உரையாடினார்.

பிரதமர் நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,TWITTER/CMOTAMILNADU

இரண்டு நிகழ்ச்சிகளிலும் பிரதமருடன் பங்குபெற்ற முதல்வர் ஸ்டாலின், அவருடன் கைகோர்த்தபடி சில நிமிடங்கள் நின்றிருந்தார். ராமகிருஷ்ண மடத்தின் ஆண்டு விழா நிகழ்வில் பிரதமர் மட்டும் பங்குபெற்றார்.

முதல்வர் ஸ்டாலின் பங்குபெறவில்லை. மூன்று நிகழ்வுகளிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்குபெறவில்லை. அவர் கர்நாடகாவில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவரது கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆனால் பாஜகவில் உள்ள உட்கட்சி பூசல் காரணமாக அவர் வருகை தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோதி - ஸ்டாலின்

பட மூலாதாரம்,TWITTER/ NARENDRAMODI

ஸ்டாலின் வைத்த கோரிக்கை

பல்லாவரம் கிரிக்கெட் மைதானத்தில், தமிழ்நாட்டில் ரூ.3,700கோடி மதிப்புள்ள சாலை மற்றும் ரயில் திட்டங்களை பிரதமர் மோதி தொடங்கி வைத்தார். பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் இவ்விழாவில் பேசிய, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை போலவே சென்னை-மதுரை பாதையிலும் வந்தே பாரத் ரயில் தேவை என்றும், வந்தே பாரத் ரயில் கட்டணம் குறைக்கப்படவேண்டும் என்றும் பிரதமர் மோதியிடம் கோரிக்கை வைத்தார். தனது உரையை தமிழில் பேசினாலும், முக்கிய கோரிக்கைகளை அவ்வப்போது முதல்வர் ஆங்கிலத்திலும் பேசினார்.

ரயில் சேவை குறித்து மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டிற்குத் தேவையான பல ரயில் திட்டங்கள் பல ஆண்டுகளாகக் கிடப்பில் இருப்பதாகவும், ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்குத் தேவையான புதிய ரயில் சேவை திட்டங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு போதிய நிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒதுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் பிரதமர் மோதி முன்னர் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார் என்பதால், மாநில சுயாட்சிக்கு உள்ள முக்கியத்துவம் என்ன என்பது அவருக்குத் தெரியும் என்றும் அதற்கு அவர் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

மோதி - ஸ்டாலின்

பட மூலாதாரம்,TWITTER/NARENDRA MODI

தமிழ்நாட்டுக்கு வருவது அருமையான அனுபவம்

இதை தொடர்ந்து பேசிய பிரதமர் மோதி, தமிழ்நாட்டுக்கு வருவது எப்போதுமே தனக்கு அருமையான அனுபவம் என்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி எப்போதுமே மத்திய அரசுக்கு முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.

''தமிழ்நாட்டில் ரயில் திட்டங்களுக்கு ரூ.6,000கோடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது இதுவரை வரலாறு காணாத அளவிலான ஒதுக்கீடு. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களைக் கொண்டுவருவதில் அதிக கவனம் எடுத்துவருகிறோம். வந்தே பாரத் ரயில் சென்னைக்கு வந்தபோது, இளம் நண்பர்கள் எவ்வளவு உற்சாகத்தோடு இருந்தார்கள் என்பது எனக்கு தெரியும்.

இந்த விரைவு ரயில் ஜவுளி மற்றும் பிற தொழில்களுக்குத் தேவையான ஆதாரங்களைக் கொண்டுசேர்க்கிறது. வந்தே பாரத் திட்டத்தில், இந்தியாவில் தயாரிப்போம் என்ற கொள்கையை வைத்திருக்கிறோம். அதில் மிகவும் பெருமிதம் கொண்டிருக்கிறோம். அதுவும் அந்த பெருமிதம் தமிழ்நாட்டில், வ.உ.சி.யின் பூமியில் இயல்பான விஷயம். இந்தியாவின் வளர்ச்சிக்கான என்ஜின்களில் தமிழ்நாடும் ஒன்று. அதனால், தமிழ்நாடு வளரும் போது, இந்தியா வளர்கிறது,'' என்றும் மோதி தெரிவித்தார்.

பெரியார் வாழ்க - மோதி வாழ்க கோஷம்

முன்னதாக நிகழ்ச்சியைக் காண நூற்றுக்கணக்கான திமுக, பாஜக தொண்டர்கள் வந்திருந்தனர். அங்கே இரண்டு கட்சி தொண்டர்களும் தங்களது தலைவர்களின் பெயர்களைச் சொல்லி கோஷமிட்டனர்.

திமுகவினர் 'பெரியார் வாழ்க' என்றும் 'ஸ்டாலின் வாழ்க' என்றும் ஒருபக்கம் கோஷமிட, பாஜகவினர் 'பிரதமர் மோதி வாழ்க' என்று கோஷமிட்டனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. உடனடியாக காவல்துறையினர் இரண்டு கட்சியினரையும் கட்டுப்படுத்தினர்.

https://www.bbc.com/tamil/articles/c0j72z37j07o

  • கருத்துக்கள உறவுகள்

தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மன், பெள்ளியை சந்தித்த பிரதமர் மோதி: ஆதிவாசி மக்களுக்காக பெள்ளி வைத்த கோரிக்கை

பொம்மன், பெள்ளி

பட மூலாதாரம்,@NARENDRAMODI/TWITTER

5 மணி நேரங்களுக்கு முன்னர்

முதுமலை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோதி ஆஸ்கர் விருது வென்ற எலிஃபன்ட் விஸ்பரரஸ் ஆவணப்படத்தின் கருப்பொருளாக இடம்பெற்ற பொம்மன் - பெள்ளி ஆகியோரை சந்தித்து இன்று உரையாடினார். அப்போது ஆதிவாசி மக்களின் தேவைகள் குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் பெள்ளி.

டெல்லிக்கு அழைத்தார் பிரதமர்

பிரதமரை சந்தித்தது குறித்து பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்ட பொம்மன், "பிரதமர் எங்களைப் பார்க்க வருகிறார் என தெரிவித்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. எங்களை பார்த்ததும். ஆவணப்படம் பற்றி வெகுவாக பாராட்டினார். பிரதமர்கள் யாருமே இதற்கு முன்பு இங்கு வந்ததில்லை. முதுமலைக்கே இது பெருமையாக உள்ளது.” என்று தெரிவித்தார்.

மேலும், பிரதமர் இந்தியில் தான் பேசினார். நாங்கள் தமிழில் தான் பேசினோம். அதிகாரிகள் எங்களுக்கு மொழிபெயர்த்து கூறினார்கள். யானையை எப்படி பராமரிப்போம், என்ன உணவு வழங்குவோம் உட்பட அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டார். பிரதமர் நாங்கள் கூறிய அனைத்தையும் முழுமையாக கேட்டறிந்தார். எங்களை அழைத்துக் கொண்டு ரகு மற்றும் பொம்மியைச் சென்று பார்த்து கரும்பு வழங்கினார்.

அதன் பின்னர் ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று எங்களின் குறைகள், தேவைகளை முழுமையாக கேட்டறிந்தார். எந்த தேவையாக இருந்தாலும் மாவட்ட ஆட்சியரை அணுகுங்கள். உங்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பார்கள் என உத்திரவாதம் அளித்தார்.

 

எங்களை டெல்லிக்கு வரச் சொல்லி அழைத்துள்ளார். இந்த ஒரு ஆவணப்படம் மூலம் ஆதிவாசி மக்களுக்கு தேவையானது கிடைத்தால் எனக்கு சந்தோஷம் தான்," என்றார்.

பொம்மன் மற்றும் பெள்ளி

பிரதமரிடம் பெள்ளி வைத்த கோரிக்கை

பிரதமரை சந்தித்து குறித்து பெள்ளி பேசுகையில், "பிரதமர் முதுமலைக்கு வந்து சென்றது எங்கள் ஊருக்கே பெருமை தான். உன்னைப் போல யானை வளர்ப்பதற்கு யாரும் இல்லை எனக் கூறினார். நான் இப்போது ரகு மற்றும் பொம்மியை வளர்க்கவில்லையா எனக் கேட்டார். நான் இல்லையென்றதும் உங்கள் குழந்தை மாதிரி தானே நீங்களே வளர்க்கலாமே எனக் கேட்டார். நாங்கள் கொடுத்துவிட்டோம் எனக் கூறினேன். என்ன தேவை உள்ளது என தனியாக கேட்டறிந்தார்.

நான் எனக்கென்று எதுவும் கேட்கவில்லை. ஆதிவாசி மக்களின் வீடுகள் மோசமான நிலையில் உள்ளன. சரியான சாலை வசதி இருக்காது. அதையெல்லாம் சரி செய்து தரக் கோரினேன். எங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு கணினி வசதி வேண்டும் எனக் கேட்டோம். எல்லா வசதிகளும் செய்து தரச் சொல்வதாகக் கூறினார்.

இந்த ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது வந்த பிறகு ஆதிவாசிகள் பற்றி அதிகம் வெளியே தெரிகிறது. ஆனால் பெரிய அளவில் மாற்றங்கள் இன்னும் நடக்கவில்லை. கூலி வேலை செய்யும் மக்கள் சம்பாதித்து சால்வை வாங்கி வந்து பாராட்டிச் செல்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது பெருமையாக தான் உள்ளது. இதனுடன் ஆதிவாசி மக்களின் தேவைகளும், கோரிக்கைகளும் நிறைவேறினால் எங்களுக்கு சந்தோஷம்," என்றார்.

பொம்மன் மற்றும் பெள்ளியுடன் பிரதமர்

பட மூலாதாரம்,@NARENDRAMODI/TWITTER

பிரதமரின் இரண்டு நாள் தமிழ்நாடு பயணம்

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோதி, சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை தொடங்கிவைத்து, சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்து, பல்வேறு அரசுத் திட்டங்களை தொடங்கிவைத்து, ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பங்கேற்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் மைசூரு கிளம்பினார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கர்நாடக மாநிலம் பந்திப்புரா புலிகள் காப்பகத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோதி, அங்கு ஜீப்பில் சென்று வனவிலங்குகளை பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்று யானைகளை பார்வையிட்டார். யானைகளுக்கு தடவிக்கொடுத்த பிரதமர் மோதி, அவற்றுக்கு உணவும் வழங்கினார். பின்னர் பொம்மன் - பெள்ளி தம்பதியினரை சந்தித்துப் பேசினார் நரேந்திர மோதி. இதைத்தொடர்ந்து தெப்பக்காட்டில் இருந்து மீண்டும் மைசூருக்கு புறப்பட்டு சென்ற மோதி, மசினக்குடியில் காரில் இருந்து இறங்கி பொதுமக்களை பார்த்து கையசைத்து சென்றார்.

பொம்மன் மற்றும் பெள்ளியுடன் பிரதமர்

பட மூலாதாரம்,@NARENDRAMODI/TWITTER

புகழின் உச்சத்துக்கு அழைத்துச் சென்ற ஆஸ்கர் விருது

முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியின் கதையை அடிப்படையாக கொண்ட தி எலிஃப்பென் ட் விஸ்பரரஸ் என்ற குறும் ஆவணப்படம் கடந்த மாதம் ஆஸ்கர் விருது வென்றது.

படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குணீத் மோங்கா ஆகியோர் விருதினைப் பெற்றுக்கொண்டனர். இந்த குறு ஆவணப்படம் ஆஸ்கர் விருதை பெற்றதைத் தொடர்ந்து பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவரையும் கௌரவப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 15ஆம் தேதி அவர்களை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். மேலும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் அவர்களிடம் வழங்கினார் முதல்வர்.

இது தொடர்பாக அப்போது பிபிசி தமிழிடம் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட பொம்மன் - பெள்ளி தம்பதி, ''நாங்கள் யானை குட்டியை வளர்த்த கதையை உலகம் முழுவதும் பலரும் பார்க்கிறார்கள். எங்களைப் பற்றிய படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது என்பது மிகவும் பெருமையாக உள்ளது. மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. சென்னை நகருக்கு முதல் முறையாக வந்திருக்கிறோம். முதல்வரை நேரில் சந்திப்போம் என்பதை நாங்கள் கனவில் கூட நினைத்ததில்லை,'' என்று கூறியிருந்தனர்.

https://www.bbc.com/tamil/articles/ck5ep38y3l2o

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் ஓடும் ரெயிலுக்குக்கூட தமிழில் பெயர்வைக்கமுடியாத திராவிட மாடல் ஆட்சி?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

தமிழ்நாட்டில் ஓடும் ரெயிலுக்குக்கூட தமிழில் பெயர்வைக்கமுடியாத திராவிட மாடல் ஆட்சி?

எப்போதும் தமிழன்  ஆட்சி செய்தாலும் அது முடியாது என்பதே ஜதார்ததம் அங்கு.   ரயில்வேத்துறை  மத்திய அரசு கட்டுப்பாட்டில். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில்  பல இடங்களில் தமிழ் இல்லாமல்  ஹிந்தி தான் என்று கேள்விபட்டுள்ளேன்.

செப்டம்பர் 15 இல் யாழ்தேவி யாழ்ப்பாணம் செல்லும்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

எப்போதும் தமிழன்  ஆட்சி செய்தாலும் அது முடியாது என்பதே ஜதார்ததம் அங்கு.   ரயில்வேத்துறை  மத்திய அரசு கட்டுப்பாட்டில். 

இருக்கட்டுமே. அதற்காக ஹிந்தியில் மட்டும்தான் பெயர் வைப்பார்களோ? ஹிந்தி ஒன்றும் தேசிய அரசகரும மொழியில்லைதானே!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Eppothum Thamizhan said:

இருக்கட்டுமே. அதற்காக ஹிந்தியில் மட்டும்தான் பெயர் வைப்பார்களோ? ஹிந்தி ஒன்றும் தேசிய அரசகரும மொழியில்லைதானே!

இந்திய அரசியலமைப்பின் படி, இந்தியும் ஆங்கிலமும் அரசகரும (official) மொழிகள். ஆனால், இந்தியாவுக்கு தேசிய (national) மொழி ஒன்று இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

இந்திய அரசியலமைப்பின் படி, இந்தியும் ஆங்கிலமும் அரசகரும (official) மொழிகள். ஆனால், இந்தியாவுக்கு தேசிய (national) மொழி ஒன்று இல்லை!

The Law of Official Language passed on 27.12. 1956 and published Tamil Nadu Government Gazette on 23rd January 1957. Accordingly, in the state confirmed that Tamil is official language in Tamil Nadu.

சென்னையில் ஓடும் ரயில்களுக்கு தமிழில் எழுதலாமே 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

The Law of Official Language passed on 27.12. 1956 and published Tamil Nadu Government Gazette on 23rd January 1957. Accordingly, in the state confirmed that Tamil is official language in Tamil Nadu.

சென்னையில் ஓடும் ரயில்களுக்கு தமிழில் எழுதலாமே 

👇

19 hours ago, island said:

எப்போதும் தமிழன்  ஆட்சி செய்தாலும் அது முடியாது என்பதே ஜதார்ததம் அங்கு.   ரயில்வேத்துறை  மத்திய அரசு கட்டுப்பாட்டில். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.