Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தில் ஈழத்தமிழர் வாழ்வதற்கு சிறந்த நாடு எது?

78 members have voted

  1. 1. புலத்தில் ஈழத்தமிழர் வாழ்வதற்கு சிறந்த நாடு எது?

    • ஒன்றும் இல்லை
      10
    • கனடா
      22
    • அமெரிக்கா
      1
    • அவுஸ்திரேலியா
      11
    • யூகே
      4
    • பிரான்ஸ்
      2
    • டென்மார்க்
      1
    • சுவிஸ்
      7
    • ஜேர்மனி
      4
    • நோர்வே
      4
    • சுவீடன்
      0
    • நெதர்லாந்து
      7
    • இத்தாலி
      0
    • நியூசிலாந்து
      1
    • சிங்கப்பூர், மலேசியா
      0
    • இந்தியா
      2
    • தென் அமெரிக்க நாடுகள்
      0
    • ஏனைய ஐரோப்பிய நாடுகள்
      0
    • ஏனைய ஆசிய நாடுகள்
      0
    • ஆபிரிக்க நாடுகள்
      2

Please sign in or register to vote in this poll.

Featured Replies

அழகான அமைதியான சுவிற்சலாந்தைப்பற்றி மேலும் விபரமறிய

Swiss

பயணுள்ள லிங் சின்னப்பு.

நன்றி!

  • Replies 124
  • Views 14.7k
  • Created
  • Last Reply

இந்தக் கோடைவிடுமுறைக்கு காரில் எனது குடும்பத்துடன் ஜேர்மனி சென்றிருந்தோம். திரும்பி வரும்போது எனது பிள்ளைகள் இருவம் பிரான்சு எல்லையைத் தொட்டதும் "கண்ணாடியைத் திறவுங்கோ.. நம்முடைய காற்றைச் சுவாசிக்க வேண்டும்..." என்று துடித்தார்கள். அதையே செய்தார்கள்!! அவர்களது துடிப்பின் இயல்பை இரசித்தேன். மானிடப் பிறப்பின் கள்ளமில்லாத இருப்பின் ஆழங்கள் புரிந்தன. ஏனோ மன்னார் வழியாக கப்பலேற்றி கதறக்கதற அனுப்பப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்களது நினைவு வந்தது.

எனது துணைவி ஏனோ எனது முகத்தை ஏக்கத்துடன் பார்த்தார். நானும்தான்! பெருமூச்சே வெளிப்பட்டது........

இது அனைத்து நாட்டுக் குழந்தைகளிடமும் மட்டுமல்ல

எம்மிடமும் இருக்கிறது.

குழந்தைகள் பிறந்து வளரும் இடம்

அவர்களது நாடு

தான் வாழும் நாடு எனும் மன நிலை.

வேற்று மொழி

வேறெருவர் வீடு

வேறொரு சூழல்

இவற்றை அவர்களால் நிச்சயம் ஜீரணிக்க முடியாது.

அதுவே நமக்கும் உள்ள பிரச்சனை?

நமது அடிமன எண்ணங்கள்

இன்றும் நம் தாயகத்தில்...............

வாழ்வு மட்டும்தான் இங்கு?

இப்போது அங்கு போனால் மட்டுமல்ல

எங்கு போனாலும் நிம்மதியாக இருக்க முடியாது.

ஒருவரின் படுக்கை மாறினாலே

தூக்கம் வராத போது

இது கூட அப்படித்தான்?

வந்த நாட்டை பரிச்சயப்படுத்திக் கொள்ள

மனது ஆரம்பத்தில் மிகவும் கஸ்டப்படும்.

பழகிய பின்னர் விட

அதை விட கஸ்டப்படும்

இது மனித மனோ நிலை!

இருக்கும் நாட்டில் பிரச்சனை இல்லாவிடில்

அங்கே தம்மை நிலைக்க வைப்பதற்கு

முயல வேண்டுமே தவிர

வேறு சிந்தனைகளை மனதில் வளர்ப்பது

இரண்டு தோணியில் கால் வைப்பதற்கு சமம்.

பல வருடங்களுக்கு முன்

இலங்கையருக்கு வதிவிட அனுமதி கொடுப்பதற்கு

சுவிஸ் முடிவெடுத்த காலத்தில்

ஜெனீவாவிலிருக்கும் இலங்கை தூதராலயத்தில்

அப்படி ஒரு சன நெருக்கடி

அதி காலையிலே பாண் கியு போல வரிசை

அது கடவுச் சீட்டு பெறுவதற்காக..............

கத்தல் : சண்டை: பிரச்சனை

இதையெல்லாம் பார்த்த ஒரு குழந்தை சொன்னது

"எங்க நாட்டில இப்படி இல்லை " என்று

நான் "உங்க நாடு எது?" என்று கேட்டேன்

"சுவிஸ்" என்று சொன்ன அந்தக் குழந்தைக்கு

அன்று சுவிஸ் பிரஜா உரிமை கூட இல்லை என்று தெரியாது.

அக் குழந்தை மனதால் சுவிஸில் ஊறிப்போய் இருந்தது.

காரணம்

அக் குழந்தையின் பெற்றோர் கூட

வதிவிட உரிமைக்காக கடவுச் சீட்டு பெற

அப்போதுதான் வந்திருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நகரத்தில இருந்து என்னொரு நகரத்துக்கு கார் ஓட்டினால்த்தான் அந்த நாட்டு பிரஜையோ? என்னய்யா கதைக்கிறியள்? சோமாலியாவில வயசு போனதுகளில இருந்து நேற்று பிறந்த குஞ்சு குருமனே நெவிக்கேசனோட திரிதுகள், அப்ப அதுகள் எல்லாம் எங்க சவுத் ஆபிரிக்கா காட்டுக்குள்ள இருந்தே வந்தவை?? :3d_039: :3d_019: :3d_019:

ஜமுனா அவுஸ்ரேலியா சொர்க்கமா அல்லது நரகமான்னு அங்கே வந்து பார்த்தா தானே சொல்லமுடியும்.எதுக்கும் வந்து பார்த பின் சொல்லுறேன் :Pஜமுனா அவுஸ்ரேலியா சொர்க்கமா அல்லது நரகமான்னு அங்கே வந்து பார்த்தா தானே சொல்லமுடியும்.எதுக்கும் வந்து பார்த பின் சொல்லுறேன்

சுபிதா அக்கா ஜம்மு பேபி என்று கூப்பிட வேண்டும் இல்லாட்டி அழுவன் :P ........அவுஸ்ரெலியா சொர்க்கம் நான் இருக்கிறேன் மற்றது சுன்டல் அண்ணா இருக்கிறார் இதை விட வேற என்ன வேண்டும் :) !!சரி எப்ப வாறீங்க அவுஸ்ரெலியாவிற்கு நான் பிரதமர் ஆகின பிறகோ அல்லது அதற்கு முதலோ.........ஏன் கேட்கிறேன் என்றா பிரதமர் ஆகினா பிறகு வந்தா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தான் சுபிதா அக்கா.. :P

(அது சரி ஒரு வசனத்தை ஏன் நீங்க இரண்டு தரம் எழுதி இருக்கிறீங்க அது தான் விளங்கவில்லை)

ஓய் ளொள்ளா யம்மு தம்பீ இருக்கிற இடம் சொர்க்கமா ளொள்ளா பிச்சுப்போடுவன் பிச்சு :)

சின்னா தாத்தா என்ன நக்கலா :angry: .............என்னை பற்றி நாலு வார்த்தை நல்லதா சொல்லாம புதுசா வந்திருகிற அக்காவிட்ட இப்படியா சொல்லுறது நல்லா இல்லை சொல்லிட்டேன்!! :P சின்னாச்சியிட்ட கேட்டா சொல்லுவா ஜம்மு டம்பி இருகிற இடம் எப்படி சொர்க்கம் என்று....... ;)

தங்களிற்கே "நம் நாடு" அதுவாகிப் போன பின்,

தங்கள் சந்ததிக்கு?

நானே என்னும் பேபி என்ட சந்ததியா!!ஒரு காலதிற்கு பிறகு சந்ததி வரக்க நிச்சயம் அவர்களுக்கும் "நம் நாடு" ஆகி போகலாம்..........சுண்டல் அண்ணா சொன்ன மாதிரி சத்தியபிரமாணம் செய்கிறோம் "நம்நாடு" என்று அதன் பின் அவ்வாறு சொல்லாவிடில் அதுவும் ஒரு வகை துரோகம் :) .............மற்றவர்களை பற்றி தெரியாது இங்கே எல்லாவற்றையும் அநுபவித்து கொண்டு "சொர்க்கமே ஆனாலும் தன்ட நாடு போல் வருமா" என்று பாடி கொண்டு இருப்பார்கள் :angry: ............இவர்களிடம் எத்தனை பேர் "தமீழிழம்" கிடைத்தா போவார்கள் என்பது கேள்விகுறி?? :) நான் நேரடியாக சொல்லுகிறேன்..........என்னை மனிதனாக்கி பல வழிகளிள் என்னை முன்னேற்றி இன்று உங்கள் முன் பயமின்றி எதையும் சுகந்திரமாக கதைத்து கொண்டிருக்கிறேன் என்றால் அது அவுஸ்ரெலியா எனக்கு இட்ட பிச்சை அதற்கு நான் என்றும் விசுவாசமாக இருபேன்!! :D

என்னை பின்பற்றி வரும் சந்தநியரும் அதே விசுவாதத்தோடு இருப்பதை நான் வெறுக்க போவதில்லை.......இதை பலரும் பலவாறு சொல்லலாம் அதை பற்றி கவலை எனக்கு இல்லை :) ........தாய் நாட்டின் மேல் மதிப்பு எனக்கு இருக்கும் ஆனா வாழவைத்த இந்த நாட்டுக்காக நான் எதையும் செய்ய தயார்...........

"அட கர்ணண் துரியோதனுடன் எதற்காக கூட்டு சேர்ந்தான் அந்த நன்றியை மறக்காம இருக்க அவன் சேர்ந்த கூட்டம் துரோகம் இழைக்கும் கூட்டமாகவும் இருந்தும் சேர்ந்தான் ஆனால் தாய் மீதும் அன்பு வைத்து தாய் கேட்டதிற்கிணங்க தனது கவச குண்டலத்தை கொடுத்தான்"

ஆனால் என்னை பொறுத்தவரை அவுஸ்ரெலியா தூரொகம் இழைக்கும் நாடு இல்லை ஆகவே நான் எவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டும் அந்த நன்றி கடனிற்கு..........கர்ணண் செய்தது சரி ஜம்மு பேபி செய்யிறது பிழையா நல்லா இல்லை சொல்லிட்டேன்!!!! :)

ஜம்மு பேபி சிட்டுவேசன் சோங்

"உள்ளத்திள் நல்ல உள்ளம் தூங்காது

நல்லவர் வகுத்தடா

ஜம்மு பேபி நீ வருவதை எதிர்கொள்ளடா"

(அப்பாடா ஒரு மாதிரி நானும் கர்ணண் லேவலுக்கு போயிட்டேன்)

---------------------------------------------------------------------------------------------------------

சுண்டல் அண்ணா,

நாட்டாமை நல்ல தீர்ப்பு நானும் சில பொயின்ட்ஸ் கொடுத்தனான் ஆனா நீங்க சொன்னா சரி,அட தலைவரை பற்றி ஒன்று சொன்னா காணுமே எங்கிருந்தாலும் வந்திடுவாங்க நம்ம பசங்க :lol: .........கீப் இட் அப்!!!

ஜம்மு பேபி பஞ்-

"வாழ்கையில நீங்க ஒரு பிகரை காதலித்து இருக்கலாம் ஆனா அது சக்சஸ் ஆகவில்லை கடைசியா வாற மனைவியை சொர்க்கம் என்று நினைத்து வாழ்க்கை நடத்தினா வாழ்க்கை இனிக்கும்!!அதே காதலி தான் சொர்க்கம் என்று மனைவியுடன் வாழ்க்கை நடத்தினா இதை நான் என்ட வாயால வேற சொல்ல வேண்டுமா!! :)

அப்ப நான் வரட்டா!! :lol:

நீங்க பிரதமர் ஆக முன்பே நான் வாறேன் .ஏனென்றால் அதுக்கு பிறகு அவுஸ்ரேலியா என்ற நாடு இருக்குமோ தெரியாது...... உங்க ஆட்சிக்கு பின்புன்னு சொல்ல வந்தேன்...... :)நீங்க பிரதமர் ஆக முன்பே நான் வாறேன் .ஏனென்றால் அதுக்கு பிறகு அவுஸ்ரேலியா என்ற நாடு இருக்குமோ தெரியாது...... உங்க ஆட்சிக்கு பின்புன்னு சொல்ல வந்தேன்...... :)நீங்க பிரதமர் ஆக முன்பே நான் வாறேன் .ஏனென்றால் அதுக்கு பிறகு அவுஸ்ரேலியா என்ற நாடு இருக்குமோ தெரியாது...... உங்க ஆட்சிக்கு பின்புன்னு சொல்ல வந்தேன்...... :D

குடியேற்ற சட்டத்தை இறுக்குகிறது பிரான்ஸ் 25,000 சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாடு கடத்த திட்டம்

19 - September - 2007

புதிய சட்டம் அமுலுக்கு வருகிறதுபாரிஸ்: பிரான்ஸில் வசிக்கும் குடியேற்றவாசிகளுடன் இணைய விரும்பும் அவர்களது உறவினர்கள் பிரான்ஸுக்குள் நுழைவதற்கான சட்டவிதிகளை இறுக்கமாக்கும் பிரேரணை அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

இப்புதிய சட்டமூலத்தின் கீழ் குடியேற்றவாசிகள் தங்கள் குடும்பங்களைத் தம்மோடு இணைக்க விரும்பினால் உறவினரைப் பராமரிப்பதற்கு போதுமான நிதிநிலைமையைக் கொண்டிருக்க வேண்டியுள்ளதுடன், குடியேற விரும்பும் உறவினரால் பிரெஞ்ச் பாஷை பேசமுடியும் என்பதனையும் நிரூபிக்க வேண்டும்.

சில வேளைகளில் குடியேற விரும்புபவர்களின் விண்ணப்பங்கள் உண்மையானது என்பதனை நிரூபிப்பதற்கு அவர்கள் மரபணுப் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இப்பிரேரணை மனிதாபிமானமற்றதென மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ள அதேவேளை, சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதென அரசாங்கம் உறுதியெடுத்துள்ளது.

இதேவேளை, இவ்வருடத்தில் மட்டும் 25,000 சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவர்களின் தாய்நாட்டிற்கு திருப்பியனுப்புவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி நிக்கோலஸ் சார்கோஸி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சட்டமூலம் குடியேற விரும்பும் 16 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பிரெஞ்ச் பாஷையில் புலமைத்துவம் பெற்றுள்ளதை நிரூபிப்பதற்கான பரீட்சையொன்றுக்குத் தோற்ற வேண்டுமெனக் கோரியுள்ளது.

அத்துடன் விண்ணப்பதாரிகள் பிரான்ஸில் வழங்கப்படும் ஆகக் குறைந்தளவு ஊதியத்தையாவது பெற்று அங்கு வசிக்கும் தமது குடும்பத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும் என்பதனையும் நிரூபிக்க வேண்டும்.

விண்ணப்பதாரி பிரான்ஸில் வசிப்பவரது உண்மையான உறவினரா என்பதில் குடிவரவு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால் விண்ணப்பிப்பவர்கள் மரபணு பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்படுவரென தெரிவிக்கப்படுகிறது.

தினக்குரல்

நீங்க பிரதமர் ஆக முன்பே நான் வாறேன் .ஏனென்றால் அதுக்கு பிறகு அவுஸ்ரேலியா என்ற நாடு இருக்குமோ தெரியாது...... உங்க ஆட்சிக்கு பின்புன்னு சொல்ல வந்தேன்...... :)நீங்க பிரதமர் ஆக முன்பே நான் வாறேன் .ஏனென்றால் அதுக்கு பிறகு அவுஸ்ரேலியா என்ற நாடு இருக்குமோ தெரியாது...... உங்க ஆட்சிக்கு பின்புன்னு சொல்ல வந்தேன்...... :Dநீங்க பிரதமர் ஆக முன்பே நான் வாறேன் .ஏனென்றால் அதுக்கு பிறகு அவுஸ்ரேலியா என்ற நாடு இருக்குமோ தெரியாது...... உங்க ஆட்சிக்கு பின்புன்னு சொல்ல வந்தேன்...... :lol:

சுபிதா அக்கா என்ன எல்லாத்தையும் இரண்டு இரண்டா அல்லது மூன்று முன்றா தான் எழுதுவீங்களோ!!நான் பிரதமர் ஆகின பின் அவுஸ்ரெலியா நாடு என்று சொல்ல முடியாது சொர்க்க பூமி என்று சொல்ல வாறீங்களா :P ..........அட........அட என்ன ஒரு அறிவாளி நீங்க சரி அப்ப அதற்கு முன்னமே வாங்கோ..........வரவேற்க விமானநிலையத்தில் சுண்டல் வருவார்!! :)

ஆம் அஜீவன் இன்று முதல் இச் சட்டம் நடைமுறைப் படுத்தப் படப்போவதாக அறிவித்துள்ளார்கள்

ஆம் அஜீவன் இன்று முதல் இச் சட்டம் நடைமுறைப் படுத்தப் படப்போவதாக அறிவித்துள்ளார்கள்

சுபிதா அக்கா இந்த 25,000 பேரில் நீங்கள் இல்லை தானே :P ............பிறகு நேக்கு அழுகை அழுகையா :) வரும் ஏனென்றா பிறகு நீங்க அவுஸ்ரெலியாவிற்கு வர ஏலாது நான் பிரதமர் ஆகும் கண்கொள்ளா காட்சியை பார்க்க முடியாது அல்லவா............. :) .

சுபிதா அக்கா இந்த 25,000 பேரில் நீங்கள் இல்லை தானே :P ............பிறகு நேக்கு அழுகை அழுகையா :) வரும் ஏனென்றா பிறகு நீங்க அவுஸ்ரெலியாவிற்கு வர ஏலாது நான் பிரதமர் ஆகும் கண்கொள்ளா காட்சியை பார்க்க முடியாது அல்லவா............. :) .

கவலை வேண்டாம் யமுனா பேபி .எனக்கு பிரான்ஸ் நாட்டு பிரஜாயுரிமை இருக்கு.அப்படி அப்படியிருந்தும் நாட்டை விட்டு வெளீயேற்றினா அவுஸ்ரேலியா வந்துட்டுதர்ன் போவேன்.நீங்க சொல்லுற சொர்க்க பூமிய பார்க்கனுமே .... ு

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் ஈழத்தமிழர் வாழ்வதற்கு சிறந்த நாடுகளில் , குளிரில்லாத நாடு எது எண்டும் யாராவது சொல்லுங்கப்பா

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிரான்ஸ்தான் பிடித்திருக்கு. வந்தது முதல் இங்கேயே இருப்பதும் ஒருகாரணம். நல்ல வேலையொன்று இருந்தால் போதும். என்ன குடும்பமும் இறையருளால் நன்றாக அமையவேண்டும். ஆத்துடன் தலைநகரைவிட்டு கொஞ்சம் தள்ளியிருந்தால் மிகநல்லது. இங்கிருந்து வேறுநாடுகளுக்குப் அவசரமாகப் போகவேண்டியிருந்தால் கடவுச்சீட்டையும் ரிக்கற்றையும் எடுத்துக்கொண்டு சுலபமாகப் போய்வர முடியும். சில நாடுகளில் இது போன்ற வசதி இருப்பதாகத் தெரியவில்லை.

பிள்ளைகளுக்கும் சகலவிதமான நவீன பாடங்கள் எல்லாம் இலகுவாகக் கற்கவும் சிறந்த இடம். :):)

புலத்தில் ஈழத்தமிழர் வாழ்வதற்கு சிறந்த நாடுகளில் , குளிரில்லாத நாடு எது எண்டும் யாராவது சொல்லுங்கப்பா

இரவில கூட குளிரக் கூடாதா? B)

  • கருத்துக்கள உறவுகள்

இரவில கூட குளிரக் கூடாதா? B)

குளிரக்கூடாதுங்க

  • கருத்துக்கள உறவுகள்

இரவில கூட குளிரக் கூடாதா? B)

அதற்காக ஆபிரிக்கா எண்டு சொல்லிடாதிங்க. பிறகு வித்தியாசம் இல்லாம போயிடும் .

அதற்காக ஆபிரிக்கா எண்டு சொல்லிடாதிங்க. பிறகு வித்தியாசம் இல்லாம போயிடும் .

ஆசிய நாடுகளை பாருங்க கறுப்பி.

சிங்கப்பூர் : மலேசியா : இந்தியா :P

புலத்தில் ஈழத்தமிழர் வாழ்வதற்கு சிறந்த நாடுகளில் , குளிரில்லாத நாடு எது எண்டும் யாராவது சொல்லுங்கப்பா

இந்தியா அதுவும் வடக்குப்பக்கம் போனா குளிரே இருக்காது

:rolleyes::lol::lol::lol::D:lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற வழியில் நாம் எல்லோரும் கருத்துக்களை இப்பகுதியில் முன் வைக்கின்றோம்.தற்போது புலம் பெயர்ந்தவர்கள் வாழ்க்கை நேற்று யேர்மனி இன்று இங்கிலாந்து நாளை கனடா என்று ஆரம்பித்து விட்டது.இப்போது தானே குமர்களும் குமரன்களும் நிறையப்பேர் வந்து விட்டார்கள் ;)

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் ஈழத்தமிழர் வாழ்வதற்கு சிறந்த நாடுகளில் , குளிரில்லாத நாடு எது எண்டும் யாராவது சொல்லுங்கப்பா

கறுப்பரும் நெடுக்கரும் எங்க இருக்கினமோ அந்த இடம் சூடா இருக்கும். அது எந்த நாடு?? :P

கவலை வேண்டாம் யமுனா பேபி .எனக்கு பிரான்ஸ் நாட்டு பிரஜாயுரிமை இருக்கு.அப்படி அப்படியிருந்தும் நாட்டை விட்டு வெளீயேற்றினா அவுஸ்ரேலியா வந்துட்டுதர்ன் போவேன்.நீங்க சொல்லுற சொர்க்க பூமிய பார்க்கனுமே .... ு

ஓ சுபிதா அக்காவிற்கு பிரான்ஸ் பிரஜாஉரிமை இருக்கோ அப்ப சரி!!ஓ வெளியேறும் போது கண்டிப்பாக வந்து பார்த்துவிட்டு போங்கள் எங்கள் சொர்க்கபூமியை :P பிறகு இங்கேயே நிற்கிற யோசனையில வரகூடாது :lol: .......... வந்தவுடனே என்னை பார்தீங்கள் அதாவது பேபியை பார்தீங்கள் என்றால் அதற்கு பிறகு மிச்ச சொர்க்கம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. :P .........என்ன சுண்டல் அண்ணா நான் சொல்லுறது சரி தானே :P ..............(எங்கே போயிட்டார் நாட்டாமை காணகிடைக்குதில்லை :rolleyes: )

அப்ப நான் வரட்டா!!

புலத்தில் ஈழத்தமிழர் வாழ்வதற்கு சிறந்த நாடுகளில் , குளிரில்லாத நாடு எது எண்டும் யாராவது சொல்லுங்கப்பா

அவுஸ்ரெலியா கறுப்பி அக்கா ;) .............பெரிசா குளிர் என்று இல்லை இலங்கையை போன்ற காலநிலை ஒரு ஜீன் மற்றும் ஜீலை காலபகுதியில் மட்டும் ஒரளவு குளிர் ஏனைய ஜரோப்பிய நாடுகள் மாதிரி குளிரும் இருக்காது தாங்ககூடிய குளிர் தான் கறுப்பி அக்கா எப்ப அவுஸ்ரெலியா வாறீங்க சொல்லுங்கோ :lol: !!இது சிட்னியை பற்றி சொன்னேன் ஏனைய பகுதிகள் குளிர் தான் ஆனாலும் ஏனைய ஜரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் சிறந்தது B) .........நோர்வேயில் இருந்து உறவினர்கள் வந்திருந்தார்கள் எங்களுடைய வின்டர் காலபகுதியில் நாங்கள் கீட்டர் எல்லாம் போட்டு குளிர் என்று இருந்தோம் அவர்களின் பிள்ளைகள் உடுப்பு போடாம இது தங்களின் சமர் என்று சொன்னார்கள் என்றா பாருங்கோ......... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் இருந்து உறவினர்கள் வந்திருந்தார்கள் எங்களுடைய வின்டர் காலபகுதியில் நாங்கள் கீட்டர் எல்லாம் போட்டு குளிர் என்று இருந்தோம் அவர்களின் பிள்ளைகள் உடுப்பு போடாம இது தங்களின் சமர் என்று சொன்னார்கள் என்றா பாருங்கோ......... :rolleyes:

அப்ப உறவினர்களும் ஒரு மாதிரி போல... :lol:

அப்ப உறவினர்களும் ஒரு மாதிரி போல... :rolleyes:

உங்களை பார்தே விளங்கி இருக்கும் தானே மாமா!! :P

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரெலியா கறுப்பி அக்கா ;) .............பெரிசா குளிர் என்று இல்லை இலங்கையை போன்ற காலநிலை ஒரு ஜீன் மற்றும் ஜீலை காலபகுதியில் மட்டும் ஒரளவு குளிர் ஏனைய ஜரோப்பிய நாடுகள் மாதிரி குளிரும் இருக்காது தாங்ககூடிய குளிர் தான் கறுப்பி அக்கா எப்ப அவுஸ்ரெலியா வாறீங்க சொல்லுங்கோ :lol: !!இது சிட்னியை பற்றி சொன்னேன் ஏனைய பகுதிகள் குளிர் தான் ஆனாலும் ஏனைய ஜரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் சிறந்தது B) .........நோர்வேயில் இருந்து உறவினர்கள் வந்திருந்தார்கள் எங்களுடைய வின்டர் காலபகுதியில் நாங்கள் கீட்டர் எல்லாம் போட்டு குளிர் என்று இருந்தோம் அவர்களின் பிள்ளைகள் உடுப்பு போடாம இது தங்களின் சமர் என்று சொன்னார்கள் என்றா பாருங்கோ......... :rolleyes:

அவுஸ்லேியா வில் ஒரு பகுதி வெப்பமான இடம் எண்டு அறிந்திருந்தேன் . அது சிட்னிதானா . விடுதலைக்கு ஒருக்கா போய் பார்க்க வேண்டியதுதான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.