Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

துணையானாள்
சித்தி கருணானந்தராஜா

இருளைக் கிழித்துக்கொண்டு, பொந்தில்; இருந்து சீறிவரும் பாம்பு போல அக்குழாய் ரயில் பிளாட்பாரத்தருகில் வந்து நின்றது.  கதவுகள் திறக்கப்பட்டதும் முதியவர் தட்டுத்தடுமாறி ஏறினார். அவருக்கு வழிவிட்டுக்கொடுத்த சாரா அவரைப் பின்தொடர்ந்தாள். காலியாக இருந்த இருக்கையில்; அமர்ந்த கிழவரின் முன்னால் அவள் இருந்து கொண்டாள்.

ஏனோ! அந்தக் குழாய் ரயில் நிலையப் பிளாட்பாரத்தில் அவரைப் பார்த்ததிலிருந்து சாராவுக்கு அவருடன் சீண்ட வேண்டும் போலிருந்தது. எப்படி அவருடன் கதைகொடுப்பது அல்லது வம்புக்கிழுப்பது என்று தெரியாமலிருந்தவளுக்கு முதியவரின் பக்கத்திற்கிடந்த லண்டன் மெட்ரோ பத்திரிகை கைகொடுத்தது.  

முதியவர் தனது பக்கத்திற்கிடந்த பத்திரிகையை வாசிக்க எடுக்கப் போனபோது எதிரிலிருந்தவள் பாய்ந்து அதைச் சட்டென்று எடுத்தாள். கிழவருக்கு முகம் சுருங்கிவிட்டது. அதுவோர் இலவசப் பத்திரிகை.  அதற்குப்போய் இந்தப் பாய்ச்சல் பாய்கிறாளேயென்று நினைத்துக்கொண்டார்.

பத்திரிகையை எடுத்த சாரா அதனைச் சற்றுப் புரட்டிப்பார்த்துவிட்டுத் தனக்குப் பக்கத்தில் வைத்தாள்.  முதியவரோ அந்தத் தருணத்தைப் பயன்படுத்திப் பத்திரிகையை மீண்டும் எடுக்கக் கைகளை நீட்டினார். அவளோ மீண்டும் சட்டென்று அதனையெடுத்துத் தனது மடியில் வைத்துக்கொண்டாள்.

அவருக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. முறைப்பபோடு அவளது முகத்தை உற்று நோக்கினார்.  ஒரு கணம்தான்! அவரால் அவளது குழந்தை முகத்தை அதற்குமேல் அப்படிக் கோபத்தோடு பார்க்க முடியவில்லை.  அவளோர் அழகு தேவதை. வேற்றினக் கலப்பாலேற்பட்ட ஹைபிரிட் மெருகினால்  கடைந்தெடுத்த தந்தச்சிலை போலிருந்தாள். அவளது குறுகுறுத்த கண்களில் தெரிந்த விஷமம் அவரை என்னவோ செய்தது. குளிரில் அப்பிள் பழத்தைப்போலச் கன்னஞ் சிவந்திருந்தாள்.  அவளது தெற்காசிய ஐரோப்பியக் கலப்பின முகவெட்டைப் பார்த்தபோது நெஞ்சில் ஒரு கிழுகிழுப்பு உண்டாகியது. ஆனாலும் தன்னைத் தனது வயதை மதியாமல் அப்படி அவள் செய்வதை எதிர்த்து ஒரு வார்த்தையாவது கூறிவிட வேண்டுமென்று அவர் உள்ளம் விரும்பியது. சே! வெறும் இலவசப் பத்திரிகைக்காக அவளுடன் ஏன் வாதிடவேண்டுமென்று இன்னொரு புறம் அவர் மனம் தடுத்தது. இருந்தாலும் அவளுடன் பேசிப்பார்க்கலாமென்று முடிவுசெய்தார். அவர்களது உரையாடல் ஆங்கிலத்திலேயே நடந்தது.

“அந்தப் பத்திரிகையைக் கொஞ்சம் தருகிறாயா?  சற்றுப் பார்த்துவிட்டுத் தருகிறேன்.” என்று கேட்டார்.  அவளுக்கு அதைக் கொடுக்க மனமில்லை.  கொடுத்தால் கிழவர் பத்திரிகையில் மூழ்கிவிடுவார். அதன்பிறகு  அவளால் அவரிடம் பேச்சுக்கொடுக்கவோ அவரை வம்புக்கிழுக்கவோ முடியாது போய்விடும்.   ஏன்தான் இந்தக் கிழவனோடு எனக்கு இப்படிக் கவர்ச்சியாயிருக்கிறதோ தெரியவில்லையென்று தனக்குள் அலுத்துக்கொண்டவள், தன் பிடிவாதத்தை விடாமல்  “இல்லை நான் தரமாட்டேன் அது எனக்கு வேண்டும்.” என்று பதிலளித்துவிட்டு, அவரை உற்றுப் பார்த்தாள்.  

நீ இறங்கும்போது நான் தந்து விடுகிறேன் அதைத்தா என்று கையை நீட்டியவரிடம் “இல்லை நான் தரமாட்டேன் என்னைத் தொல்லைப் படுத்தாதீர்கள்” என்று கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
சில கணங்கள் மௌனம். இருவரும் பேசவில்லை.  முகத்தைத் திருப்பி அவரைப் பார்த்தவள் தன் அழகு தவழும் முகத்தில் ஓர் விஷமப் புன்னகையை ஓடவிட்டாள்.  

பத்திரிகையைத் தராமல் என்னை ஏன் இவ்வளவு கொஞ்சலாகப் பார்க்கிறாள்?  என்று கிழவருக்குக் கோபமாக இருந்தது. இருந்தாலும் அவள்மீது கோபப் பார்வையை வீச அவரால் முடியவில்லை.  இவள் என்னைக் கிண்டலாகப் பார்க்கிறாளே என்ற ஆதங்கம் அவருள் கொழுந்துவிட்டு எரிந்தது.  அவளைப்பார்த்துச் சொன்னார்:

“மனேரம்மியமான உன் முகவழகு என்னை வெகுவாகக் கவர்கிறது.  மோனாலீஸாவின் மோகனப் புன்னகையை நீ உதிர்க்கிறாய். நீ திருமணம் செய்து விட்டாயா?”
சட்டென்று சற்றுத் தடுமாறியவள் “இன்னும் இல்லை. உங்களுக்கேன் அந்த விசாரணை?” என்று முகத்தைக் கடுமையாக வைத்தபடி வினவினாள். அந்தக் கோப முகமும் அழகாகத்தான் தோன்றியது. அதை ரசித்துச் சிரித்தபடி முதியவர் சொன்னார்:
“ஒன்றுமில்லை.  நான் எனக்கேற்றவொரு பெண்துணையைத் தேடிக்கொண்டிருக்கிறேன் அதற்குத்தான்.”

“ஓஹோ! அப்படியா! நல்லது.  நான் எனது நண்பனிடம் கேட்டுச் சொல்கிறேன். அவன் அனுமதித்தால் உங்களுக்குத் துணையாக வருகிறேன்.”
“அப்படியா! உனக்கு நண்பன் ஒருவன் இருக்கிறானா? நல்லது அவனை எனக்குப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.” - முதியவர் பதிலிறுத்தார்.  “ஏன் எதற்காக?” -  அவள் கேட்டாள்.
“அவனை நான் வாழ்த்த வேண்டும்.  தேவதையைப் போன்ற உன்னைத் தன் சினேகிதியாக அவன் பெற்றதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும்.”  
“சரி, பாங்க் ரயில் நிலையத்தில் நான் இறங்கி அடுத்த ரயிலை எடுக்கவேண்டும் அங்கே அவன் எனக்காகக் காத்திருப்பான்.  விரும்பினால் என்னுடன் நீங்களும் இறங்குங்கள் அவனை அறிமுகம் செய்கிறேன்.” என்ற அவளிடம்: “நானும் அங்குதான் இறங்கி அடுத்த ரயில் பிடிக்க வேண்டும். என்னை அறிமுகஞ்செய்.” என்றார் முதியவர். 

“இந்தக் கிழவன் சரியான துணிந்த கட்டை. என்று மனதில் நினைத்தபடி பாங்க் ரயில் நிலையத்தில் அவள் இறங்கியபோது முதியவரும்; பின்தொடர்ந்தார்.

ஹை! சாரா! என்று கூறியபடி அவளிடம் ஓடிவந்த அந்த மாற்றின இளைஞன் அவளைச் சட்டென்று கட்டியணைத்து அவளது உதட்டில் முத்தமிட்டான்.  கிழவரை வெட்கத்தோடு கடைக்கண்ணால் பார்த்த அவள் அங்கிள் வாருங்கள் என்று அவரை அழைத்தவாறு தனது காதலனையும் அணைத்துக்கொண்டு வடக்கு லைன் ரயில் பிடிக்க நகரும் படியில்; எறிச்சென்றாள்.  அவர்கள் போகவும் ரயில் வரவும் சரியாக இருந்தது. மூவரும் ஏறிக் கொண்டனர். முதியவர் அவர்களுக்கெதிரில் அமர்ந்து கொண்டார்.

“ஜானி! இந்த அங்கிள் என்னோடு ஸ்றட்போட்டிலிருந்து வருகிறார்.  தனக்கேற்றவோர் வாழ்க்கைத் துணையைத் தேடுகிறாராம்.  நான் அழகாயிருக்கிறேனாம். திருமணம் முடித்துவிட்டேனா எனக் கேட்கிறார்.” என்று தன் காதலனிடம் சொன்ன அவள் கிழவரைப் பார்த்துச் சிரித்தாள்.

“ஓ அப்படியா! மிகவும் நன்றி அங்கிள். விரும்பினால் கூட்டிக்கொண்டு போங்கள். எனக்கு இவளால் பெரிய தொல்லையாக இருக்கிறது” என்ற அவன் கிழவரைப் பார்த்துச் சிரித்தான். 

கிழவரும் பதிலுக்கு மிகவும் நன்றியென்றார்.  அவனை வாழ்த்தவில்லை எனெனில் அவனோ அவளிலிருந்து வேறுபட்ட நிறத்தவனாயும் இனத்தவனாயும் இருந்தான். அதை அவரால் சீரணிக்க முடியவில்லை. அவளுக்கு அவர் தன் காதலனை வாழ்த்தவில்லையேயென்று சற்றுக் கவலையாயிருந்தது.  சற்று ஏமாற்றமடைந்தவளாய்க் காணப்பட்டாள். முதியவர் அதனைக் கவனித்தார் ஆனால் அதற்காகவாவது அவளது வாடிய முகத்தை மாற்ற அவர் முயற்சிக்கவில்லை.

அவளால் “அங்கிள் உன்னைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க வேண்டுமென்று விரும்பினார்.” என்பதை ஜானியிடம் தெரிவிக்க முடியவில்லை.  அப்படிச் சொல்லியும் அந்தப் பாஸிஸ்டுக் கிழவன் தன் ஜானியை வாழ்;த்தாமல் விட்டுவிட்டால் ஜானி முகங் குழைந்து போவானே என்று கவலைப்பட்டாள்.  

மௌனத்தில் சில நிமிடங்கள் கழிந்தன.  முதியவர்தான் முதலில் பேச்சைத் தொடங்கினார்.

“இந்தப் பெண் பெரும் சுயநலக்காரி.  நான் எடுத்து வாசிக்க முற்பட்ட லண்டன் மெட்றோவைப் பாய்ந்து எடுத்துத் தன்னோடு வைத்துக் கொண்டு தானும் வாசிக்காமல் எனக்கும் பார்க்கத் தராமல் அடம்பிடித்தாள்.” என்று ஜானியிடம் முறையிட்டார்.  “அவள் என்னுடனும் அப்படித்தான் அங்கிள். அவள் முன்னால் நான் எதையாவது எடுத்து வாசிப்பது அவளுக்கு அறவே பிடிக்காது. கேட்டால்  “வாசிக்க வேண்டுமானால் லைப்ரரிக்குப் போ! அல்லது எங்காவது தனிமையில் சென்று வாசி.” என்று பறித்து வைத்துவிடுவாள்.  தனக்கு மிகவும் வேண்டியவர்களோடு இவ்வாறு உரிமையோடு நடப்பவள் இன்று ஏனோ கொஞ்சமும் பரிச்சயமில்லாத உங்களைச் சீண்டியிருக்கிறாள். அவளுக்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.” என்று மிக வினயமாக வேண்டிவிட்டுச் சாராவுக்குச் செல்லமாய் ஒரு தட்டுத்தட்டினான். பதிலுக்கு அவள் அவனைத் திருப்பி அடித்தாள். பின்னர் இருவரும் உதடுகளில் சிறிதாய் முத்தமிட்டுக் கொண்டார்கள்.  கிழவருக்குச் சற்றுக் கவலையாயிருந்தது. பார்த்துவிட்டுத் தனக்குள் ஒரு பெருமூச்சை விட்டார். அவருக்குத் தன் ஒரே மகளின் ஞாபகம் வந்தது:  

“பல வருடங்களுக்கு முன் ஜெர்மனியில் ஓர்நாள் அவளும் அப்படித்தான் அந்த வௌ;ளை இளைஞனுடன்; சல்லாபித்துக் கொண்டிருந்தாள். ரயில் நெரிசலில் தன்தந்தை தூரத்தில் நின்றதை அவள் கவனிக்கவில்லை. அவருக்கு உலகமே சுழன்றது.  ஒருவாறு சுதாரித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தவர் முதலில் மனைவியிடம்தான் தன் ஆத்திரத்தைக் கொட்டினார். அவளை அடிக்கவேறு செய்தார். வேலையில் நின்று சற்றுத் தாமதமாக வந்த மகளுக்கு  பேசக்கூடாத வார்த்தையெல்லாம் பேசி அடிக்கப் பாய்ந்தபோது, அவள் போலீஸைக் கூப்பிட்டுவிட்டாள். சைரன் ஓசையுடன் நீல வெளிச்சம் பளிச்பளிச்சென்று  அடிக்க வீட்டின்முன்; வந்து நின்ற பொலீஸ்; காரை பக்கத்து வீட்டுக்காரர்களும் தெருவில் போனவர்களும் பார்த்துவிட்டனர்.  தாயையும் தன்னையும் தூஷணை வார்த்தைகளால் ஏசி அடித்ததைப் பொலீஸாரிடம் மகள் முறையிட்டுவிட்டாள்.  தந்தைதானேயென்று   கொஞ்சமும் கவலைப்படாத மகளின் நடத்தை அவரைத் தாங்கமுடியாத ஆத்திரத்துக்கு உட்படுத்திவிட்டது.

அன்று போலீஸ் அவரைக் கையில் விலங்கிட்டுத்தான் கொண்டு சென்றது. பக்கத்து வீட்டார் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.  அவரால் அந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை.  போலீஸ் அவரைச் சிலமணிநேரம் வைத்திருந்துவிட்டு எச்சரிக்கை செய்து வெளியே அனுப்பிவிட்டது.  வீட்டுக்கு வரவே மனமில்லை.  மனைவியின் தம்பியின் வீட்டிற்போய் அன்றிரவைக் கழித்தார்.  காலையில் மனைவி போன் செய்தாள்.  இனி அவளது முகத்தை நான் பார்க்கப் போவதில்லை அவளை எங்காவது அனுப்பிவிடு என்று மகளைத் திட்டியவரிடம் தாய், அவள் தன்னோடும் கோபித்துக்கொண்டு அன்றிரவே வெளிக்கிட்டுவிட்டதைக் கூறினாள்.  வீடு வந்தவர் மகளைப்பற்றி அக்கறைப்படவேயில்லை.  நல்ல வேலையில் சுயமாய்ச் சம்பாதித்த அவளோ தன்காதலனுடன் சென்று ஒன்றாய் வாழத்தொடங்கிவிட்டாள்.  ஐரோப்பாவில்; திருமணம் செய்யாமலேயே லிவ் ருஹெதர் எனப்படும் ஒன்றாய் வாழ்தல் பொதுவான ஒரு விடயம்.  அவரது மனைவிக்கும் மகள்மீது வெறுப்பு ஏற்பட்டுப் போயிற்று அதனால் அவளுடனான தொடர்புகள் அடியோடு விடுபட்டுப் போய்விட்டன. அவர்கள் லண்டனுக்கு வந்துவிட்டார்கள்.” 

ரயில் ஓடிக்கொண்டிருந்தது. சிறிது நேரம் மௌனமாக அவரை இருக்கவிட்டு சிரித்துப் பேசியபடி அடிக்கடி முத்தமிட்டுக்கொண்டிருந்த இளசுகள் இருவரும் அதைச் சற்று நிறுத்திவிட்டு அவரிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார்கள். 

“அங்கிள் உங்களுக்குக் குடும்பம் இருக்கின்றதா?” என்று ஜான் கேட்டான்.  மெலிதான பெருமூச்சொன்றை விட்ட அவர் சற்று நிதானித்துவிட்டு இல்லையென்றார்.  “ஏன் நீங்கள் திருமணமே செய்துகொள்ள வில்லையா?” – மீண்டும் கேட்டான்.
“ஏனில்லை திருமணம் செய்தேன்.  என் மனைவி இறந்துவிட்டாள்.  அப்படியா மிகவும் மனம் வருந்துகிறேன்.  “அவ இறந்து நெடுநாட்களாய்விட்டதா?” 
“இல்லை  சமீபத்தில்த்தான்.  இன்னும் ஒரு வருடம்கூட முடியவில்லை.” அன்று இரவு நான் ரிவி பார்த்துவிட்டுச் சற்று வாசித்துவிட்டுத் தூங்கிவிட்டேன்.  எனக்கு முன்னரே தூங்கச் சென்றவள் காலையில் எழுந்திருக்கவில்லை.  இறந்துவிட்டாள்.  என்றவரின் குரல்; தழுதழுத்தது.  சாரா தன்னிடமிருந்த பக்கட்டிலிருந்து ரிஸ்யு ஒன்றையெடுத்து அவரிடம் நீட்டினாள். தாங்கஸ் என்று கூறி அதைவாங்கியவர் கண்களைத் துடைத்துக் கொண்டார்.  அது வரைக்கும் உற்சாகத்தோடு இருந்தவருக்குத் தன் மனைவியின் ஞாபகம் வந்ததும் துக்கம் வந்து தொண்டையை அடைத்துக்கொண்டது. 

இளசுகள் இருவருக்கும் அவரிடம் மேற்கொண்டு பேச்சுக்கொடுக்கத் தயக்கமாக இருந்தது.  அவரின் துயரங்களைக் கிளறி வேதனைக்குள்ளாக்க இருவரும் விரும்பவில்லை. இளமை வாழ்வில் அவர் எப்படியெல்லாம் தன் மனைவியுடன் வாழ்ந்திருப்பார். இப்போது அவருக்குமுன் நாமிருவரும் இருந்து காதல் செய்துகொண்டிருந்தால் தனது பழைய ஞாபகங்களை நினைத்துக் கவலைக்குள்ளாகி விடுவாரே என்ற சங்கடத்தில் அவர்கள் தங்கள் காதல் சேட்டைகளையே நிறுத்திவிட்டார்கள். வேலைவிட்டு வீடு செல்கின்ற பலர் தூங்கி வழிந்துகொண்டிருந்தார்கள்.  ஜானியும் தூங்கிவிட்டான். வழமையாக அவர்கள் இருவரும் அணைத்தபடிதான் ரயிலில் தூங்குவது வழக்கம்.  அன்று அந்த அமைதியிலும் அவள் அவனிடமிருந்து விலகியே இருந்தாள்.  இதைப் பயன்படுத்தி முதியவர் அவளிடம் பேச்சுக் கொடுத்தார்:

“அன்பே! நீ என்ன செய்கிறாய்?”  நான் ஓர் நர்ஸாகப் பணிபுரிகிறேன் அங்கிள்.  
“உனது காதலன்?”  “அவர் ஓர் ஆபீஸ் நிர்வாகி.  ஆனால் இருவருக்கும் வேறு வேறு இடங்கள்.  நாங்கள் ஒவ்வொரு நாளும் வீடு திரும்பும்போது பாங்க் ரயில் நிலையத்தில் சந்தித்துக் கொள்வோம்.
“நீ அவரை மணஞ் செய்யப் போகிறாயா?” “நாங்கள் இப்போதும் ஒன்றாய்த்தான் வாழ்கிறோம் இன்னும் திருமணத்தைப் பற்றிச் சிந்திக்கவில்லை, தேவையேற்படும் போது அதைச் செய்வோம்.”
“தேவையென்றால்? என்ன தேவை? எத்தகைய தேவை? எப்போது அது ஏற்படும்?” - முதியவர் கொஞ்சம் வரம்பு கடந்து கேட்டார்.  அவர்களின் தனிப்பட்ட விடயமது.  ஆனாலும் அவள் அதைப் பெரிதாக எடுக்கவில்லை.
வெளிப்படையாகவே சொன்னாள் - “எங்களுக்கு ஒரு குழந்தை தேவைப்படும்போது திருமணத்தைப் பற்றிச் சிந்திக்கலாமென்று இருக்கிறோம். அப்போதுகூட அது தேவையில்லை.  ஆனாலும் அதுதான் எங்கள் நோக்கம். இந்த வருடக் கோடை விடுமுறைக்கு எங்காவது சென்று வரவேண்டும். அதன்பிறகுதான் திருமணத்தைப்பற்றிச் சிந்திப்பது என்றிருக்கிறோம்.
“ஓஹோ அப்படியா?  உனது கோடை விடுமுறை மகிழ்ச்சியாயமையட்டும்.” – முதியவர் வாழ்த்தினார் அவள் நன்றி சொன்னாள்.

முதியவர் தன்னிடம் சற்றுத் தனிப்பட்ட விசாரணைகளைச் செய்ததை அவள் ஏனோ பெரிதாக எடுக்கவில்லை.  வேறு யாராகவும் இருந்திருந்தால் உடனே ஆத்திரமடைந்திருப்பாள்.  இவரது கேள்வி அவளை அப்படி ஆத்திரப்பட வைக்கவில்லை.  அதுபற்றி அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.  ஆனால். தன்னை அப்படி விசாரித்த கிழவரிடம்; அதேபோன்று தனிப்பட்ட விடயங்களைக் கேட்கத் தனக்கும் உரிமையிருக்கிறது என்ற துணிவு அவளுக்கு வந்துவிட்டது. 

“அங்கிள் உங்கள் மனைவி இறந்துவிட்டாளென்கிறீர்கள் அப்படியானால் உங்களுக்குப் பிள்ளைகள்  யாருமில்லையா?” என்ற அவளின் கேள்விக்குப் பெருமூச்சொன்றே கிழவரிடமிருந்து பதிலாக வந்தது. சற்று மௌனமாக இருந்த அவர் தான் மனம்வெறுத்து ஒதுக்கிய தன் மகளின் முகத்தை ஒருதடவை மனதில் நினைத்துப் பார்த்தார்.

அவள் இப்போது எங்கேயிருக்கிறாளோ! இறந்துவிட்டாளோ! என்று மனம் கலங்கியது.  சிறு வயதில் எத்தனையோ கற்பனைகளோடு அவளை வளர்த்தது, பள்ளிக்குக் கூட்டிச் சென்றது, என்று மறைந்துபோன ஞாபகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து அவரைக் குழப்பின.  அந்தப் பாழாய்ப்போன வௌ;ளைக்காரன் என்மகளை என்னிடமிருந்து பிரித்துவிட்டான் என்று தன் மாப்பிளையை மனதில் ஒருதரம் வெறுப்போடு எண்ணிக்கொண்டார்.  அவனை ஒருநாள் அவர் அந்த ரயிலில் சனநெரிசலில் பார்த்ததுதான்.  அதன்பிறகு காணவேயில்லை.  மகளும் அவனை வீட்டுக்குக் கூட்டிவந்தால் அப்பா காட்டுமிராண்டித்தனமாக நடந்து எல்லாவற்றையும் கெடுத்துவிடுவாரென்ற பயத்தில் கூட்டிவரவேயில்லை.  அதன் பிறகு தொடர்பு முற்றாக அறுந்துபோய்விட்டது.  மகள் எங்கோ வெளிநாடு போய்விட்டதாகக் கேள்விப்பட்டார்.  அவ்வளவுதான். மனைவியும் மகளைப் பிரிந்த ஏக்கத்தில் நோயாளியாகி இறந்தும் போய்விட்டாள்.

இதையெல்லாம் இந்தப் பெண்ணிடம் எப்படிக் கூறுவது என்று யோசித்த அவரைப் பார்த்து: “என்ன அங்கிள் பேசாமலிருக்கிறீர்கள்?” என்று சாரா கேட்டாள்.

சற்றுத் தயங்கிய அவர் “எனக்கு ஒரு மகள் இருந்தாள் அவள் இப்போது எங்கேயிருக்கிறாளென்று தெரியாது.” என்றார்.  

ஏன் அங்கிள்? அவளைப் பற்றிய விபரம் உங்களுக்குத் தெரியாமற்போனது? அவள் காணாமற் போய்விட்டாளா?  நீங்கள் தேடிப் பார்க்கவில்லையா என்ற சாரா கிழவரின் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள்.

“நான் அவளைத் தேடவில்லை. நான்தான் அவளை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டேன்.  அதன்பிறகு அவள் எங்களைத் தொடர்பு கொள்ளவேயில்லை.” என்றவர் அதுபற்றி மேலும் கதைக்க விரும்பாமல் முகத்தைத் திருப்பியபோது, சாரா: “ஏன், ஏன் துரத்தினீர்கள்?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.

கிழவருக்கோ பதில்கூறச் சங்கடமாயிருந்தது.  தனது மகளைப் போலவே ஓர் வேற்றின இளைஞனைக் காதலித்திருக்கும் இவளிடம் நான் அதுபற்றிக் கூறினால் என்னைப்பற்றி என்ன நினைப்பாள் என்று தடுமாறினார்.

சாராவோ அவரை விடுவதாயில்லை.  அவரை உற்றுப்பார்த்தபடியே மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள்.  கிழவருக்கோ இதற்குமேல் மறைக்க முடியாது, இவள் விடமாட்டாள் என்பது விளங்கிவிட்டது.  ஒன்றில் அவளிடம் தன்மகள் ஓர் ஜெர்மன்காரனைக் காதலித்ததையும் அதை அவர் வெறுத்ததையும்  கூறவேண்டும் அல்லது சாராவிடம் தனது தனிப்பட்ட பிரச்சனைகளைப்பற்றி விசாரிக்காதேயென்று ஒரேயடியாக அவளது முகத்திலடித்தாற்போல் பதில்கூறவேண்டும். 

முதலாவதிலும் இரண்டாவது அவருக்கக் கடினமானதாகவேயிருந்தது. சொன்னார்: “அவளும் உன்னைப் போலத்தான் ஒரு மாற்றின ஜெர்மன்காரனைத்  தன் காதலனாக்கிக்கொண்டு ரயிலில் முத்தமிட்டுக்கொண்டு திரிந்தாள் அதனை ஒருநாள் பார்த்த நான் அவளை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டேன்.”

சட்டென்று உஷாரான சாரா அவரிடம்: “உங்கள் பெயரென்ன?” என்றாள்.  அவர் “கணேஸ்”; என்றார்.
மறுகணம் இருக்கையிலிருந்து பாய்ந்த அவள் அவரைத் திடீரென்று கட்டியணைத்தாள்.  அவளது கண்களிலிருந்து பொல பொல வென்று கண்ணீர் வழிந்தோடியது.  “தாத்தா நானுங்கள் பேத்தி தாத்தா! நானுங்கள் பேத்தி!  இனி உங்களுக்கு நான் என்றென்றும் துணையாயிருப்பேன் தாத்தா” என்று கரைந்தவள் திடுக்கிட்டு விழித்த ஜானியிடம்,  “ஜானி! ஜானி! இவர் என் அம்மப்பா.  இவரின் இளமைக்காலப் படத்தை நான் பார்த்திருக்கிறேன். நான் தேடிக்கொண்டிருந்த என் தாத்தாவைக் கண்டுபிடித்துவிட்டேன்.” என்று குதூகலித்தாள்.

பக்கத்திலிருந்த இருக்கைகளிலிருந்தவர்கள் தங்கள் கட்டை விரல்களை நிமிர்த்திக் காட்டி குட்லக் குட்லக் என்று வாழ்த்தினார்கள்.  எழுந்து வந்த ஜானி தாத்தாவின் கன்னத்தில் செல்லமாய் ஒரு முத்தமிட்டான்.  கரைந்துபோன முதியவர் இருவரையும் அணைத்துக் கொண்டார்.  அவரது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிய ஜானியிடம் சொன்னார்:
நீ தேவதைபோன்ற என் பேத்தியைக் காதலியாகப் பெற்றிருக்கிறாய் உங்கள் இருவருக்கும் என் நல்வாழ்த்துக்கள். நீங்களிருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.”

அதற்கு ஜானி சொன்னான்: “அவள்தான் உங்களுக்கு வாழ்க்கைத் துணையாகிவிட்டாளே இனி நான் எதற்கு? சரி சரி பரவாயில்லை, பங்கு போட்டுக் கொள்வோம். அவள் நம் இருவருக்கும் துணையாயிருக்கட்டும்.”

ஜானியும் சாராவும்;; தம் இதழ்களை ஒரு கணம் ஒற்றிக் கொண்டனர்.

-முற்றும்-
 

  • Like 10
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடக்கத்தில் இருந்தே வயதானவருக்கும் பெண்ணுக்கும் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு .நல்ல முடிவு. பகிர்வுக்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரத்த உறவுகளுக்குள் ஒரு வித இனம்புரியாத ஈர்ப்பு இருப்பது உண்மை தான் போலுள்ளது..!

எனக்குத் தெரிந்தவர் ஒருவர் வெகு தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் ஒரு நாய்க்குட்டி வாங்கி வளர்த்து வந்தார். வேற ஒரு நாயையும் கண்ணில காட்ட இயலாத மாதிரி அதன் சுபாவம் அமைந்து விட்டது!

போகாத நாய்ப் பள்ளிக்கூடமில்லை!ம்...கும்..!

ஒரு முறை அந்த நாயின் சகோதரர்களை அந்த நாஇ எதிர் பாராத விதமாகச் சந்திக்க வேண்டி வந்தது..! எல்லா நாய்களும் மிகவும் அன்னியோன்னியமாக இணைந்து விளையாடுவதை அவதானிக்க முடிந்தது!

பிரபஞ்சம் எவ்வளவோ விடையங்களை இரகசியமாகவே தன்னுள் புதைத்து வைத்துள்ளது..! அவ்வாறு இருப்பதே நல்லது போலவும் உள்ளது!

மனிதன் மிகவும் கொடுயவன்...மிகுந்த சுயனலவாதியும் கூட..!

கதையும், சம்பவக் கோப்புக்களும் அருமை..கரு...!

Posted

அற்புதமான எழுத்து. கோர்வையாக எழுதி முடித்த விதம் அருமை. தொடர்ந்து எழுதுங்கள். உங்களை திருக்குறள் விளக்கம் எழுதிய நாளில் இருந்து (யாழில்) தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, nunavilan said:

அற்புதமான எழுத்து. கோர்வையாக எழுதி முடித்த விதம் அருமை. தொடர்ந்து எழுதுங்கள். உங்களை திருக்குறள் விளக்கம் எழுதிய நாளில் இருந்து (யாழில்) தெரியும்.

சரியாக சொன்னீர்கள் நுணா, அருமையான தொடக்க & முடிவு, வாசிக்க தொடங்கியவுடன் நிற்பாட்ட முடியவில்லை, முடிவுவரை வாசிக்க ஆவலை துண்டிய கதை, காட்சிகள் கண் முன்னே விரிகின்றான, அற்புதமான எழுத்து நடை, தொடர்ந்து எழுதுங்கள் யாழிற்காக

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதை வாசிக்க ஆர்வத்தைத் தூண்டும் வகையில் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. தெற்காசிய ஐரோப்பியக் கலப்பினத்தவள் என முதலில் அறிமுகப்படுத்தியபோதே ஒரு சம்சயம் வந்தது! 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காரணமில்லாமல் சிலர்மீது அன்பு தோன்றுவதும் அதேபோல் வெறுப்பு ஏற்படுவதும் இயல்பானதுதான்......!  😁

அருமையான ஒரு குறுங்கதையை இணைத்திருக்கிறீர்கள் karu , பாராட்டுக்கள்........!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/4/2023 at 02:44, nunavilan said:

அற்புதமான எழுத்து. கோர்வையாக எழுதி முடித்த விதம் அருமை. தொடர்ந்து எழுதுங்கள். உங்களை திருக்குறள் விளக்கம் எழுதிய நாளில் இருந்து (யாழில்) தெரியும்.

மிக்க நன்றி நுணாவிலான்.  நான் வள்ளுவரின் காமத்துப்பாலிலிருந்து சில குறள்களுக்குக் கற்பனைச் சம்பவ வடிவம் கொடுத்து அவற்றை வள்ளுவன் காதல் என்ற தலைப்பில் வெளியிட்டேன் அது புத்தகமாகவும் வந்திருக்கிறது. அதைச் சிலாகித்ததற்கு நன்றி.

On 22/4/2023 at 22:14, நிலாமதி said:

தொடக்கத்தில் இருந்தே வயதானவருக்கும் பெண்ணுக்கும் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு .நல்ல முடிவு. பகிர்வுக்கு நன்றி 

முடிவை வரவேற்றமைக்கு நன்றி நிலாமதி.

On 22/4/2023 at 23:37, புங்கையூரன் said:

இரத்த உறவுகளுக்குள் ஒரு வித இனம்புரியாத ஈர்ப்பு இருப்பது உண்மை தான் போலுள்ளது..!

எனக்குத் தெரிந்தவர் ஒருவர் வெகு தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் ஒரு நாய்க்குட்டி வாங்கி வளர்த்து வந்தார். வேற ஒரு நாயையும் கண்ணில காட்ட இயலாத மாதிரி அதன் சுபாவம் அமைந்து விட்டது!

போகாத நாய்ப் பள்ளிக்கூடமில்லை!ம்...கும்..!

ஒரு முறை அந்த நாயின் சகோதரர்களை அந்த நாஇ எதிர் பாராத விதமாகச் சந்திக்க வேண்டி வந்தது..! எல்லா நாய்களும் மிகவும் அன்னியோன்னியமாக இணைந்து விளையாடுவதை அவதானிக்க முடிந்தது!

பிரபஞ்சம் எவ்வளவோ விடையங்களை இரகசியமாகவே தன்னுள் புதைத்து வைத்துள்ளது..! அவ்வாறு இருப்பதே நல்லது போலவும் உள்ளது!

மனிதன் மிகவும் கொடுயவன்...மிகுந்த சுயனலவாதியும் கூட..!

கதையும், சம்பவக் கோப்புக்களும் அருமை..கரு...!

மிக்க நன்றி புங்கையூரான்.  இரத்த உறவுகளுக்கிடையேயுள்ள ஈர்ப்பை விலங்குகளின் மூலமாகப் பதிவிட்டுக் கதையைப் பாராட்டியமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/4/2023 at 03:34, உடையார் said:

சரியாக சொன்னீர்கள் நுணா, அருமையான தொடக்க & முடிவு, வாசிக்க தொடங்கியவுடன் நிற்பாட்ட முடியவில்லை, முடிவுவரை வாசிக்க ஆவலை துண்டிய கதை, காட்சிகள் கண் முன்னே விரிகின்றான, அற்புதமான எழுத்து நடை, தொடர்ந்து எழுதுங்கள் யாழிற்காக

மிக்க நன்றி உடையார்.  எழுத்து நடையைப் பாராட்டியமைக்கும் நன்றி.

On 23/4/2023 at 08:22, கிருபன் said:

கதை வாசிக்க ஆர்வத்தைத் தூண்டும் வகையில் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. தெற்காசிய ஐரோப்பியக் கலப்பினத்தவள் என முதலில் அறிமுகப்படுத்தியபோதே ஒரு சம்சயம் வந்தது! 

 

கதை நேர்த்தியாக எழுதப்பட்தெனப் பாராட்டியமைக்கு நன்றி கிருபன்.

On 23/4/2023 at 09:20, suvy said:

காரணமில்லாமல் சிலர்மீது அன்பு தோன்றுவதும் அதேபோல் வெறுப்பு ஏற்படுவதும் இயல்பானதுதான்......!  😁

அருமையான ஒரு குறுங்கதையை இணைத்திருக்கிறீர்கள் karu , பாராட்டுக்கள்........!

அருமையான குறுங்கதையெனப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி சுவி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் சிறுகதை எனக்கும் மிகப் பிடித்துள்ளது. தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை எழுதுங்கோ. நன்றி.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விதமாக கேள்வி கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை (Ramanathan Arjuna) வெளியேற்றுமாறு அரச அதிகாரிகள் கோரியதால் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமளி துமளி ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலையிட்ட நிலையில் நிலைமை சுமூகமானதாக எமது செய்தியானர் தெரிவித்துள்ளார். அர்ச்சுனா எம்.பியால் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமளி துமளி - ஐபிசி தமிழ்
    • "Person of the Year",  இதன் அர்த்தம் ஆண்டின் சிறந்த நபர் என்பதல்ல.
    • YouTube அமா்க்களங்கள்! டிசம்பர் 9, 2024 –பவித்ரா நந்தகுமார் கொரோனா பரவலுக்குப் பிறகு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போக்கு மக்களிடம் பன்மடங்கு பெருகிப் போனது நாம் அறிந்ததே. ஜூம், கூகுள் மீட் போன்ற இணைய சந்திப்புகள் பற்றிய அறிவு சாமானியருக்கும் தெரிய வந்தது, அதன் பிறகு தான். யூ டியூப் (YouTube) சேவை கூட அப்படித்தான். 2005 இலேயே தொடங்கப்பட்டிருந்தாலும் வேக வேகமாக ஓடிக் கொண்டிருந்த மக்கள், ஊரடங்கு நேரத்தில் கிடைத்த நீண்ட ஓய்வுகளில்தான் யூ டியூப் காணொளிகளை அதிகமாகப் பாா்க்கத் தொடங்கினா். கிடைத்த ஓய்வு நேரத்தில் பலரும் யூ டியூப் பக்கங்களை உருவாக்கி தங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டனா். 2019 இற்குப் பிறகே யூ டியூப் பன்மடங்கு வளா்ச்சி அடைந்தது எனச் சொல்லலாம். 2024, மாா்ச் மாத நிலவரப்படி யூ டியூபானது 200 கோடியே 49 இலட்சத்துக்கும் அதிகமான பயனாளா்களைக் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து மட்டும் 460 மில்லியனுக்கும் அதிகமான பயனாளா்களைக் கொண்டுள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருப்பதால் யூ டியூபின் மிகப் பெரிய சந்தையாகவும் மாறி உள்ளது. சந்தா தேவைப்படும் பெரும்பாலான காணொளித் தளங்களைப் போல் அல்லாமல், யூ டியூப் ஒரு கவா்ச்சிகரமான தளமாகும். சந்தாதாரா்கள் மற்றும் பாா்வைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு யூ டியூபின் தரமும் செயல் திறனும் மதிப்பீடு செய்யப்படுகிறது. யூ டியூப் தொடக்கத்தில் புதுப்புது செய்திகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கும் கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது என்பதை மறுக்க முடியாது. நம் தேவைக்கு ஏற்ற வேளையில் குறிப்பிட்ட நேர எல்லையில் நாம் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வசதி இருப்பதுதான் யூ டியூபின் சிறப்பு. நம் தினசரி வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கும் துறை வல்லுநா்களிடம் தகவல்களைப் பெற்று அதை பல்வேறு கோணங்களில் அலசி, அதற்கான விடைகளைச் சுடச்சுட பரிமாறி இருப்பாா்கள். பல்வேறு சூழல்களுக்கு ஏற்ப வெவ்வேறு படிநிலைகளில் காலப்போக்கில் தேடப்படும் அத்தனை கேள்விகளுக்கும் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஏதோ ஒரு யூ டியூபில் பதிலளித்துக் கொண்டே இருக்கிறாா்கள். காய்கறி நடவாகட்டும், சமையல் செய்முறையாகட்டும் பொருட்களின் பயன்பாட்டு விளக்கங்களாகட்டும், புதுப்புது தொழில்நுட்ப செய்திகளாகட்டும், நாட்டு நடப்பு சங்கதிகளாக இருக்கட்டும் எதைப்பற்றியும் தெரிந்து கொள்ள யூ டியூப் பக்கங்கள் உள்ளன. அத்துடன் கல்வி, வணிகம், விளையாட்டு, திரைப்படம், இசை, ஊா் சுற்றுதல், பொழுதுபோக்கு, நகைச்சுவை,கேளிக்கை, மொழி அறிவு, ஆன்மிகம், ராசி பலன், மருத்துவக் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், அழகு சாதனங்களை உபயோகிக்கும் முறை, பிரபலங்களுடன் கலந்துரையாடல், தனது அன்றாட நிகழ்வுகளைப் படம் பிடிப்பது, பொது அறிவு, இலக்கியம், போட்டித் தோ்வுகள், வரி மேலாண்மை, சட்ட ஆலோசனை என எக்கச்சக்கமான யூ டியூப் காணொளிகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இதில் என்ன ஒரு சௌகரியம் என்றால், நாம் நேரம் ஒதுக்கி இணையத்தில் தேடுபொறிகள் மூலம் தேடிப் பிடித்து படித்துப் பாா்த்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை நாம் இன்னொரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே ஓா் எளிய காணொளி மூலம் அறிந்து கொள்கிறோம். ஆரம்பத்தில் தனக்கு பிடித்தமான காணொளிகளைக் காண சந்தாதாரா்களாக இணைந்த மக்கள், அதிகப்படியான பாா்வையாளா்களைப் பெறுவதன் மூலம் பணம் ஈட்டவும் முடியும் என்பதைப் பரவலாக அறிந்து கொண்டு, படைப்பாற்றல் திறனை பக்கபலமாக்கி தினம் ஒரு காணொளியை பதிவிட்டு கலக்குகிறாா்கள். இன்றைய திகதி நிலவரப்படி யூ டியூப் மூலம் உலக அளவில் அதிகம் சம்பாதிப்பது அமெரிக்காவைச் சோ்ந்த ரயான் (Rayyan) என்னும் ஏழு வயதுச் சிறுவன் தான். ஃபோா்ப்ஸ் சஞ்சிகையின் கணக்கின்படி பொம்மை விமா்சகரான ரயான் யூ டியூப் மூலம் 22 மில்லியன் டொலா்களைச் சம்பாதித்து முதல் இடத்தைப் பிடித்துள்ளாா். யூ டியூப் வணிகம் என்றே ஒரு புது வணிக உலகம் புதிய திசையில் பயணிக்கிறது. வாடகைக்குக் கடை தேவை இல்லை, சரக்கு இருப்பு அவசியமில்லை, கையிருப்பை வைத்து ஒவ்வொன்றாக காணொளியில் காண்பித்தால் போதும். அதைப் பாா்த்த பின்பு வரும் எண்ணிக்கைகளை வைத்து , அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல இயலும். இப்படி பல யூ டியூப் பக்கங்களை உருவாக்கி வாழ்வில் மிகப்பெரிய உயரத்துக்கு சென்ற பலா், நம் முன் உதாரணங்களாக இருக்கிறாா்கள். மற்றொரு பக்கம், மக்களை மகிழ்விக்க தினம் புதுப் புது யுக்திகளைக் கையாண்டு ரசிப்புக்குரியதாக படம் எடுத்து அதைப் பதிவிட்டு பிரபலங்களாக வலம் வருகிறாா்கள். திரைப்பட கதாநாயக, கதாநாயகிகளுக்கு இருக்கும் புகழ் இவா்களுக்கும் உருவாகி இருக்கிறது. காணொளிகளாகப் பதிவிட்டு மக்களுக்கு அவா்கள் முகம் பழகி புகழ் வெளிச்சமும் அவா்கள் மீது விழுவதால் யூ டியூப் ஆளுமைகள், இன்றைய தேதியில் அதிகரித்துள்ளாா்கள். நவீன காலத்திற்கு இப்படி வரப்பிரசாதமாக வந்த இந்த யூ டியூப் அதற்கே உண்டான குறைகளையும் கொண்டுள்ளது. ஒருவரைத் தரக்குறைவாக விமா்சித்து அதன் மூலம் இலட்சக்கணக்கான பாா்வையாளா்களைக் கடந்து பெரும் புகழ் பெற வேண்டும் எனும் போக்கு சமீப காலமாக அதிகரித்துள்ளது. யூ டியூபில் தோன்றக் கூடிய நபரைப் பொறுத்து அவா் சொல்லும் செய்திகளின் நம்பகத்தன்மையை அளவிட வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பதிவிடப்படும் கருத்துகள் பாதிக்கும் மேல் பொய்யும் புரட்டுமாக இருப்பதால், அதன் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகி நிற்கிறது. யூ டியூப்பில் நேரலை என்ற ஒரு வசதி இருக்கிறது. அதில் மக்கள் ஆா்வமாக ஒன்று கூடி கண்டுகளிக்கிறாா்கள். புடவை விற்பனை, பொருட்கள் விற்பனை என களை கட்டும் அந்தப் பக்கத்தை எட்டிப் பாா்த்தால், சில நேரங்களில் முகம் சுளிக்கவும் நேரிடுகிறது. தனிப்பட்ட நபரின் மீது தாக்குதல் நிகழ்த்தும் வகையில் தரம் தாழ்ந்து விமா்சனங்களை முன்வைக்கிறாா்கள். குறிப்பாக நேரலைகளில் இது போன்ற அத்துமீறல்கள் அதிகம். அதே நேரத்தில் பாா்வையாளா்களைக் கலவரப்படுத்தக் கூடிய காணொளிகளை பல யூ டியூபா்கள் தொடா்ந்து பதிவிட்டு வருவதும் கவலையளிக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த வழித்தடத்தில் பணத்தை அள்ளி இறைத்து மக்கள் என்ன செய்கிறாா்கள் என்பதைக் காணொளியாக எடுத்துப் பதிவிடுவதும், மனைவியின் பிரசவத்தின்போது பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி ஆா்வத்தைக் கிளப்புவதும், ரயில் தண்டவாள தடம், மலையுச்சி போன்ற வில்லங்கமான இடங்களுக்கு அருகே நின்று ஆபத்தை விலைக்கு வாங்குவதும், கா்ப்பத்தின் போதே பாலினத்தை அறிவிப்பதும் என சில அரைவேக்காட்டுத்தனங்கள் அதிா்ச்சிக்குள்ளாக்குகின்றன. அதிகமான பாா்வைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தனிநபரின் அந்தரங்கத்தைப் பொதுவெளியில் பேசுவது, சம்பந்தப்பட்டவரிடம் பணம் பெற்றுக் கொண்டு தரமற்ற ஒன்றைப் பற்றி ‘ஆகா ஓகோ’ எனப் புகழ்வது, புதிய செய்திகளை முந்தித் தர வேண்டும் என்ற முனைப்பில் சரிவர ஆராயாது, தப்பும் தவறுமாக தகவல் உரைப்பது என இதன் மற்றொரு பக்கம் அடா்கருமையில் இருக்கிறது. அத்துடன், சமகாலத்தில் திரைப்படங்கள் குறித்தான அவதூறு செய்திகளைப் பரப்புவதாக யூ டியூபா்களை சில திரைப்படத் தயாரிப்பாளா்கள் குற்றம் சாட்டுகின்றனா். அதன்படி திரையரங்க வளாகத்தில் யூ டியூபா்கள் விமா்சனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளா்கள் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதன் மூலம் இதன் வீா்யத்தை நாம் அறியலாம். அவரவரின் தனிப்பட்ட விரோதத்தை பொதுவெளியில் வெளிப்படுத்த யூ டியூபை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் போக்கு கவலை அளிக்கிறது. ஒரு திரைப்படத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். அதைப் பிரதிபலிக்கும் விதமாக விமா்சனம் அமைந்தால் எல்லாருக்கும் நல்லது. அதே வேளையில் விமா்சனம் இல்லை என்றால் சிறிய பொருட்செலவில் எடுக்கக்கூடிய சில நல்ல திரைப்படங்கள் கூட கவனம் பெறாமல் போய்விடும் அபாயமும் உள்ளது. இந்திய ஊடகத்துறையில் கடந்த 46 ஆண்டுகளில் மிகப்பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (Press Council of India)- 1978 என்ற சட்டம் இந்த அமைப்புக்கான அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. தற்போதைய நிலவரப்படி பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு குறைந்த அதிகாரங்களே உள்ளன. எந்த ஒரு வழிமுறையையும் அல்லது விதிமுறைகளையும் பின்பற்றும்படி உத்தரவு போடும் அதிகாரம் அதற்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றங்களை ஏற்படுத்தி ‘பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு’ அதிகாரத்தை வழங்கியும் அனைத்து வகையான ஊடகங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து கண்காணிக்கும் வகையிலும் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் சொல்கின்றன. ஆக, இன்று இணையத்தில் கொட்டிக்கிடக்கும் பல்லாயிரக்கணக்கான தகவல்களும் காணொளிகளும் நம் வேலையைப் பன்மடங்காகக் குறைத்தாலும், அது உண்மைக்கு மிக நெருக்கமாகக் கூட இருக்குமா என்றால் கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. இது யூ டியூபிற்கும் பொருந்தும்.   https://chakkaram.com/2024/12/09/youtube-அமா்க்களங்கள்/
    • https://www.investopedia.com/terms/s/seigniorage.asp#:~:text=Seigniorage allows governments to earn,loss instead of a gain. சில எண்ணெய் வள  நாடுகள் பெற்றோ டொலரினை கைவிட முடிவெடுத்த பின்னணியில் அமெரிக்காவின்  பொருளாதாரம் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய அமெரிக்க ஏகாதிபத்திய நிலையில் இருந்து பல்துருவ உலக ஒழுங்கு மாற்றத்திற்கு மிக சிறந்த உதாரணமாக துருக்கி தனது உலக எண்ணெய் வழங்கலின் கேந்திரமாக மாறுவதற்கு (HUB) சிரியாவில் துருக்கியின் ஆதிக்கம் முக்கியமாக உள்ளது. இந்த நிலை அமெரிக்காவின் அதிக கடன் பொருளாதார சுமையில் அமெரிக்கா துருக்கியின் ஆதரவுடன் மீண்டும் பெட்ரோ டொலருக்கு சாதகமான சூழ்நிலையினை உருவாக்குவதற்கு விரும்பக்கூடும், அதே வேளை இரஸ்சியாவிற்கு மத்திய கிழக்கில் சிரியாவில் உள்ள தளங்கள் இராணுவ, பொருளாதார நலனை கொடுப்பதால் துருக்கியுடன் ஒரு உடன்பாட்டிற்கு வந்தாக வேண்டும், சிரியாவில் உள்ள அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கான ஆதரவினை அமெரிக்கா விலக்குவதற்கு துருக்கி கோரினால் அதனை அமெரிக்காவினால் தட்ட முடியாது எனும் நிலையிலேயே அமெரிக்காவின் தற்போதய சூழ்நிலை உள்ளது. உக்கிரேன் இரஸ்சிய போர் வருவதற்Kஉ முன்னர் இப்படி ஒரு நிலை வரும் என யாராவது நினைத்தாவது பார்த்திருபார்களா? தற்போதுள்ள நிலை பனிப்போர் காலத்திலும் நிலவாத  சிக்கலான நிலையாக மாறிவருகின்றது. இந்த உலக மாற்றத்தில் எவ்வாறு எமது  நலனை நிலை நிறுத்த முடியும் என ஆராய வேண்டும். ஆனால் இந்த துருக்கிய ஆதரவு கிளர்ச்சியாளர்களினால் சிரியாவில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவர்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலையினை இந்த அமெரிக்க மற்றும் இரஸ்சிய வல்லரசுகள் வேடிக்கை பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.
    • அமெரிக்க வரலாற்றில் முதல் முறை; ஒரே நாளில் 1,500 பேருக்கு தண்டனையை குறைத்த பைடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் பதவி விலக உள்ள நிலையில், ஒரே நாளில் சுமார் 1500 பேரின் தண்டனைகளை குறைத்துள்ளார். 19 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதன்படி கொரோனா பரவல் அதிகரித்தபோது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,500 தண்டனை கைதிகளின் தண்டனை குறைக்கப்படுகிறது, வன்முறையற்ற குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 39 நபர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் அதிக நபர்களுக்கு கருணை காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தண்டனை கைதிகள் திருந்தி வாழ இரண்டாவது வாய்ப்புகளை வழங்க முடியும். செய்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்து, சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவதற்காக விருப்பம் தெரிவித்தவர்களுக்கு மன்னிப்புகளும் தண்டனைக் குறைப்புகளும் வழங்கப்படுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார். பைடனின் கருணை நடவடிக்கையை மனித உரிமைக் குழுக்கள், ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தினர் பாராட்டியுள்ளனர். நீதி அமைப்பில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.   https://akkinikkunchu.com/?p=302980
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.