Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தரோடையில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஒன்றிணைய அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

06 MAY, 2023 | 04:27 PM
image

(எம்.நியூட்டன்)

கந்தரோடையின் வரலாற்றை சிங்கள பௌத்த வரலாறாகத் திரிபுபடுத்தும் நோக்குடன் திட்டமிட்ட பௌத்த விகாரை அமைப்பதற்கான முற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனை கண்டித்து வலிகாமம் தமிழ்த் தேசியப் பேரவை பல அமைப்புகளுடன் இணைந்து நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

சிங்கள பௌத்த பேரினாவாத அரசின் பூரண அனுசரணையுடன்  தமிழ்த் தேசத்தின் இருப்பை அழித்து வரலாற்றைத் திரிபுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் கட்டமைக்கப்பட்ட மரபுரிமைசார் இனவழிப்பு செயற்பாடிற்கு எதிரான இப் போராட்டத்திற்கு  தமிழர் வாழ்வுரிமை மையம் மற்றும் கந்தரோடை சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து  தமிழ்த் தேசியப் பேரவை முன்னெடுக்கும் இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய உணர்வாளர்களை கலந்துகொள்ளுமாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/154660

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மற்றுமொரு காணிக்கு பிக்குகளால் சிக்கல்: இன்று போராட்டத்துக்கு அழைப்பு

Screenshot-2023-05-07-at-10.48.13-AM.png

யாழ். கந்தரோடையில் தனியார் காணியைக் கொள்வனவு செய்துள்ள பிக்கு அதில் விகாரை அமைப்பதற்கு எடுத்துவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்றைய தினம் (07.05.2023) முன்னெடுக்கப்படவுள்ள இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசியப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “கந்தரோடையின் வரலாற்றைச் சிங்கள – பௌத்த வரலாறாகத் திரிபுபடுத்தும் நோக்குடன் திட்டமிட்ட விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சிங்கள – பௌத்த பேரினாவாத அரசின் பூரண அனுசரணையுடன் தமிழ்த் தேசத்தின் இருப்பை அழித்து வரலாற்றைத் திரிபுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் கட்டமைக்கப்பட்ட மரபுரிமைசார் இனவழிப்பு செயற்பாட்டுக்கு எதிராகக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

தமிழர் வாழ்வுரிமை மையம் மற்றும் கந்தரோடை சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து இன்றைய தினம் (07.05.2023)  காலை 10 மணிக்கு கந்தரோடையில் முன்னெடுக்கும் தமிழ்த் தேசியப் பேரவை முன்னெடுக்கும் இப்போராட்டத்துக்குத் தமிழ்த் தேசிய உணர்வாளர்களைக் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் ” எனக் கூறியுள்ளது.

https://akkinikkunchu.com/?p=245073

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின்... உழைப்பு, நேரம், காலம் எல்லாவற்றையும்
போராடுவதற்கு என்றே... சிங்களம் வில்லங்கமாக தள்ளி விட்டுள்ளது.

ஒன்று, இரண்டு என்றால்... மனிதன் சமாளிக்க முடியும்.
இது... கிழக்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு இடங்களிலும்...
தமிழ் மக்கள் சிங்களத்தின் அனாவசிய குடைச்சலை எதிர்த்து போராட வேண்டி உள்ளது. 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தமிழர் தேசத்தில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நிறுத்தக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Published By: VISHNU

07 MAY, 2023 | 07:20 PM
image

யாழ்ப்பாணம், கந்தரோடையின் வரலாற்றை சிங்கள பௌத்த வரலாறாகத் திரிபுபடுத்தும் நோக்குடன் திட்டமிட்ட பௌத்த விகாரை அமைப்பதற்கான முற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனை கண்டித்து வலிகாமம் தமிழ்த் தேசியப் பேரவை பல அமைப்புகளுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (07) கவனயீர்ப்பு போராட்டம் கொட்டும் மழையிலும்  இடம்பெற்றது.

FB_IMG_1683454324423.jpg

சிங்கள பௌத்த பேரினாவாத அரசின் பூரண அனுசரணையுடன் தமிழ்த் தேசத்தின் இருப்பை அழித்து வரலாற்றைத் திரிபுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் கட்டமைக்கப்பட்ட மரபுரிமைசார் இனவழிப்பு செயற்பாடிற்கு எதிரான இப் போராட்டத்திற்கு  தமிழர் வாழ்வுரிமை மையம் மற்றும் கந்தரோடை சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து  தமிழ்த் தேசியப் பேரவை முன்னெடுத்தது.

FB_IMG_1683454332070.jpg

இப்போராட்டத்தில் கந்தரோடையில் பௌத்தமயமாக்கலை நிறுத்து தமிழர் தேசத்தில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நிறுத்து, இனவாதத்தை கைவிடு, புத்த தர்மத்தை கடைப்பிடி, எங்கள் கிராமத்தில் விகாரை வேண்டாம் என்ற கோசங்களை தமிழ் சிங்கள ஆங்கில மொழிகளை தாங்கிய பதாதைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FB_IMG_1683454335110.jpg

இப்போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்ணி பாராளுமன்ற உறுப்பினர் செ. கயேந்திரன் சட்டதரணிகளான காண்டிபன், சுகாஸ் குறித்த கட்சியின் ஆதரவாளர்கள் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சே.கலை அமுதன் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

FB_IMG_1683454320632.jpg

FB_IMG_1683454317687.jpg

https://www.virakesari.lk/article/154728

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் மக்களின்... உழைப்பு, நேரம், காலம் எல்லாவற்றையும்
போராடுவதற்கு என்றே... சிங்களம் வில்லங்கமாக தள்ளி விட்டுள்ளது.

ஒன்று, இரண்டு என்றால்... மனிதன் சமாளிக்க முடியும்.
இது... கிழக்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு இடங்களிலும்...
தமிழ் மக்கள் சிங்களத்தின் அனாவசிய குடைச்சலை எதிர்த்து போராட வேண்டி உள்ளது. 

உண்மை. இருந்தாலும் சிங்களம் தமிழர் பிரதேசங்களை பவுத்த மயமாக்குவதட்கு ஒரு Road Map ஐயே போட்டு வைத்திருக்கிறார்கள். இது இன்று நேற்றல்ல எப்பவோ போடப்பட்ட்து. அதில் மாற்றமில்லை. எனவே எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் அந்த திடத்தில் மாற்றமில்லை. கச்சத்தீவில் இந்தியாவின் வேண்டுதளைக்கமைய புத்தர் சிலை அகற்றப்பட்ட்து. மற்றப்படி எல்லா இடங்களிலும் சிலைகள் முளைத்ததே ஒழிய , அகற்றப்படவில்லை. எனவே செல்வநாயகம் ஐயா சொன்னதுபோல தமிழர்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Cruso said:

இவ்வளவு பேரழிவுகளுக்கு பிறகும் கடவுள் காப்பாற்றவில்லை எனில் அவரும் கைவிட்டிட்டார் என்று தானே அர்த்தம்?

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2023 at 19:39, தமிழ் சிறி said:

தமிழ் மக்களின்... உழைப்பு, நேரம், காலம் எல்லாவற்றையும்
போராடுவதற்கு என்றே... சிங்களம் வில்லங்கமாக தள்ளி விட்டுள்ளது.

ஒன்று, இரண்டு என்றால்... மனிதன் சமாளிக்க முடியும்.
இது... கிழக்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு இடங்களிலும்...
தமிழ் மக்கள் சிங்களத்தின் அனாவசிய குடைச்சலை எதிர்த்து போராட வேண்டி உள்ளது. 

சிங்களத்தின் நோக்கமே, தமிழரை எப்போதும் ஒரு போராட்ட மன நிலையில் வைத்து, அதை அடக்கும் நோக்கில் இராணுவத்தை நிலைநிறுத்தி முழுநிலத்தையும் கபளீகரம் செய்வது. தமிழ்த்தலைவர்களை உறக்கத்தில் வைத்துக்கொண்டு தாமே இங்கு பிரதிநிதிகளை உருவாக்கி அவர்களின் கீழ் தமிழரை அடிபணிய வைப்பது, அதற்கு கூத்தாடிகளை பயன்படுத்துகிறார்களேயொழிய அவர்களை தம் திட்டம் நிறைவேறியதும் கடாசித்தள்ளிவிடும். எதிர்த்துகேட்கவா முடியும் இவர்களால்? அப்படி முடிந்தால் பொன்சேகாவின் நிலை. வாயை பொத்திக்கொண்டு ஆடிய ஆட்டத்துக்கு அனுபவிக்க வேண்டியதுதான். கூத்தாடி தனக்கு முதலமைச்சர் பதவி கிடைக்குமென ஆவலோடு காத்திருக்குது. இலவு காத்த கிளிதான். ஆனால் தமிழ்கட்சிகள் தங்களுக்குள் மோதுவதை தவிர்த்து ஒவ்வொரு கட்சிகள் ஒவ்வொரு பொறுப்பை எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, உரிய சர்வதேச அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு உடனுக்குடன் தகவல்களை வழங்கி இவர்களின் நகர்வை கட்டுப்படுத்தலாம், செய்வார்களா? சிறிதரன் தையிட்டியில் மக்களுடன் முரண்பட்ட விதத்தை பாக்க இவர்கள் எந்த நிலையிலும் கட்சி மோதலை விடப்போவதுமில்லை மக்களையும் கட்சி பிரித்துக்கொண்டே இருப்பார்கள் என்பது தெளிவாகிறது.    

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

சிறிதரன் தையிட்டியில் மக்களுடன் முரண்பட்ட விதத்தை பாக்க இவர்கள் எந்த நிலையிலும் கட்சி மோதலை விடப்போவதுமில்லை மக்களையும் கட்சி பிரித்துக்கொண்டே இருப்பார்கள் என்பது தெளிவாகிறது.    

சிறிதரன் ஏன் மக்களுடன், முரண் பட்டவர்.
இவர்களின் செயல் மேலும் மக்களிடம் இருந்து அந்நியப்  படுத்தும்.
தமிழ் மக்கள் இனியாவது நல்ல தலைவர்களை தெரிவு செய்ய முன் வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2023 at 11:39, தமிழ் சிறி said:

தமிழ் மக்களின்... உழைப்பு, நேரம், காலம் எல்லாவற்றையும்
போராடுவதற்கு என்றே... சிங்களம் வில்லங்கமாக தள்ளி விட்டுள்ளது.

ஒன்று, இரண்டு என்றால்... மனிதன் சமாளிக்க முடியும்.
இது... கிழக்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு இடங்களிலும்...
தமிழ் மக்கள் சிங்களத்தின் அனாவசிய குடைச்சலை எதிர்த்து போராட வேண்டி உள்ளது. 

தமிழ் சிறீ, நீங்கள் எழுதியது போல் தமிழ் மக்கள் தமது வேலைகள் எல்லாத்தையும் விட்டுவிட்டு இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடுவதாக தெரியவில்லை.

 நீங்கள் இணைத்த நிலாந்தனின் அரசியல் ஆய்வில் 50 பேர்வரை மட்டுமே தையிட்டி விகாரை எதிர்ப்பு ஆர்பபாட்டத்தில் கலந்து கொண்டதாகவும்  ஆனால் ஶ்ரீ நாக விகாரையில் வெசாக் அலங்கார விளக்குகளை பார்வையிட கூடிய கூட்டதால் போக்குவரத்து நெலிசல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

கந்தரோடை தையிட்டி மட்டுமா.. நாவற்குழி.. புங்குடுதீவு.. கிளிநோச்சி.. மாங்குளம்.. முல்லைத்தீவு.. வவுனியா.. மன்னார்..மட்டக்களப்பு.. திருமலை.. அம்பாறை.. என்று எங்கும் சிங்களப் படை ஆக்கிரமிப்பும்.. பெளத்த விரிவாக்கமும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. ரணிலின் வரவின் பின் அது மீண்டும் சூடு பிடித்திருக்குது. 

எம்மவர்கள் எப்போதுதான் சிங்கள ஆக்கிரமிப்பு படை வெளியேற்றம் குறித்து ஆணித்தமாக வேண்டுகோள் வைக்கவும் நிர்ப்பந்திக்கவும்.. போகிறார்களோ..?!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

தமிழ் சிறீ, நீங்கள் எழுதியது போல் தமிழ் மக்கள் தமது வேலைகள் எல்லாத்தையும் விட்டுவிட்டு இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடுவதாக தெரியவில்லை.

 நீங்கள் இணைத்த நிலாந்தனின் அரசியல் ஆய்வில் 50 பேர்வரை மட்டுமே தையிட்டி விகாரை எதிர்ப்பு ஆர்பபாட்டத்தில் கலந்து கொண்டதாகவும்  ஆனால் ஶ்ரீ நாக விகாரையில் வெசாக் அலங்கார விளக்குகளை பார்வையிட கூடிய கூட்டதால் போக்குவரத்து நெலிசல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 

ஐலண்ட், அந்தப் பதிவை பார்க்க... மக்களை எம் அரசியல்வாதிகள் 
வருடக் கணக்கில் ஏமாற்றிய கோபம் தெரிகிறது. 👇

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

இவ்வளவு பேரழிவுகளுக்கு பிறகும் கடவுள் காப்பாற்றவில்லை எனில் அவரும் கைவிட்டிட்டார் என்று தானே அர்த்தம்?

ஜூதர்களுடன் ஒப்பிடும்போது பேரழிவு என்று சொல்ல முடியாது. அந்த கடவுளை அவர்கள் தேடியபோது அவர்களுக்கு எல்லாம் அனுகூலமாகியது. அதேபோல தமிழனும் முட்காலத்தில் மற்றவனுக்கு அநியாயம் செய்து வந்த சாபக்கேடோ? அப்படி என்றால் உண்மையான கடவுளை தேடும்போது எமக்கும் விமோசனம் கிடைக்கலாம்.

சண்டைபிடிக்க ஒரு காலமுண்டு. சமாதானமாக ஒரு காலமுண்டு. அதை தவற விடும்பொழுது பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

சிறிதரன் ஏன் மக்களுடன், முரண் பட்டவர்.
இவர்களின் செயல் மேலும் மக்களிடம் இருந்து அந்நியப்  படுத்தும்.
தமிழ் மக்கள் இனியாவது நல்ல தலைவர்களை தெரிவு செய்ய முன் வரவேண்டும்.

சிறி அவர்களே, நல்ல தலைவர்கள் என்று யாரை சொல்லுகிறீர்கள்? படித்த, அரசியல் அறிவுள்ள , பண்புள்ளவர்களையா ? அல்லது ஆயுதம் தூக்கினோம் என்று சொல்லுபவர்களையா? இப்போதைக்கு மக்களுக்கு பெரிதாக தெரிவு என்று சொல்லுவதட்கு ஒன்றிரண்டு பேரை தவிர யாரும் அரசியலில் இல்லை. 

நல்ல தலைவர்கள் எழும்பும் வரைக்கும்,மக்கள் அறிவு பெறும் வரைக்கும்  அடைக்கலம், நிர்மலன், ஜனா, சிவசக்தி, மண்டையன், அம்மான், பிள்ளையான், போன்றவர்களின் காட்டில் மழைதான். விசேடமாக வன்னியில் தெரிவு செய்யப்படுவபர்கள்தான் அதிர்ஷ்ட சாலிகள். எந்த தகுதியும் தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, island said:

தமிழ் மக்கள் தமது வேலைகள் எல்லாத்தையும் விட்டுவிட்டு இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடுவதாக தெரியவில்லை.

அரசியல்வாதிகளின் பேச்சை நம்பினால் என்ன நடைபெறும் என்று சூடு வாங்கி கொண்ட மக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.