Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சின்.. சிறந்த பாண் தயாரிப்புக்காக, பிரெஞ்சு அரசின் சிறப்பு விருதை வென்ற ஈழத்தமிழன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

 

5 - 6 வருடங்களுக்கு முன்னர் அடையார் கடை எனப்படும் இரவில் அதிக நேரம் திறந்திருக்கும் சிறு கடைகளை எம்மவர்கள் அல்ஜீரியர்களிடமிருந்து வாங்க வாங்கத் தொடங்கினார்கள். இன்று பரிசையும் பரிசைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பல நூற்றுக் கணக்கான கடைகளில் ஏறத்தாள முழுவதையும் வாங்கிவிட்டனர். 

தற்போது பாண் கடைகளைக் குறிவைத்து வருகின்றனர். இது சுலபமானது அல்ல. இங்கு வேலை செய்பவர்களில் சிலருக்காவது டிப்ளோமா தகுதி இருக்க வேண்டும். மற்றும் ஏராளமான தரக் கட்டுப்பாடுகளும் உண்டு. தமிழர்களின் இவ்வாறான முன்னேற்றம் பெருமைக்குரியது.

சந்தோஷமாக இருக்கு 🖐️

புறநகர் பிரான்சில் என் அத்தானும் மூன்று கடைகள் போட்டுவிட்டார், இன்னும் வளைப்பதிற்கு பார்த்துக்கொண்டிருக்கினம்😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

சந்தோஷமாக இருக்கு 🖐️

புறநகர் பிரான்சில் என் அத்தானும் மூன்று கடைகள் போட்டுவிட்டார், இன்னும் வளைப்பதிற்கு பார்த்துக்கொண்டிருக்கினம்😂

லாசப்பல் என்று ஒரு நாலு  தெருவுக்குள் ஆர்பாட்டமாய் யூதர்களுக்கு அதிகப்படியான  வாடகைகளை கொடுத்து கெட்டொழிந்தது தான் தற்போது நம்மவர்களுக்கு ஞானம் பிறந்துள்ளது .லண்டனில் நம்மவர்கள் ஆரம்பத்திலே சுதாகரித்து கொண்டார்கள் லண்டனை  சுற்றியுள்ள இடங்களில் தான் அநேக தமிழர்  வியாபாரம் கள் இருக்கும் சிற்றிக்குள் அல்ல .

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸில் மிகச் சிறந்த பாண் தயாரிப்புப் போட்டியில் முதலிடம் பெற்ற இலங்கையர் தர்ஷன் செல்வராஜா

Published By: SETHU

14 MAY, 2023 | 02:32 PM
image

 

 

பிரான்ஸில் நடைபெற்ற மிகச் சிறந்த பாண் தயாரிப்பாளருக்கான போட்டியில் பிரான்ஸை சேர்ந்த இலங்கையரான தர்ஷன் செல்வராஜா முதலிடம் பெற்றுள்ளார்.

பிரான்ஸின் பகெட்’ (Baguette)) எனும் நீளமான பாண் பிரசித்தமான ஓர் உணவாக விளங்குகிறது. 'பாரம்பரிய பகெட்' என அடையாளப் படுத்தப்படக்கூடிய பாண் எப்படி தயாரிக்கப்பட வேண்டும் என்பதற்கு 1993 ஆம்ஆண்டில் பிரெஞ்சு பாராளுமன்றம் சட்டமொன்றையே இயற்றியது.

பாரிஸில் இவ்வகையான மிகச் சிறந்த பாணை தயாரிப்பதற்கு வருடாந்தம் போட்டி நடத்தப்படுகிறது. 'பாரிஸின் மிகச் சிறந்த பாரம்பரிய பிரெஞ்சு பகெட் க்றோன் ப்றீ ' என அர்த்தப்படும் ((Grand Prix de la Baguette de Traditional Francaise de la Ville De Paris)   போட்டியில்  தர்சன் செல்வராஜா முதலிடம் பெற்றுள்ளார்.

best-baguette-in-Paris-competition-in-Pa

போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட பாண்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது...   (Photo AfP)

4,000 யூரோவுடன் (சுமார் 14 இலட்சம் ரூபா) பணப்பரிசுடன், பிரெஞ்சு ஜனாதிபதி மாளிகைக்கு ஒரு வருடகாலத்துக்கு பகெட் பாண் விநியோகிக்கும் உரிமையும் அவருக்குப் பரிசுகளாகக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வெற்றி மூலம் சர்வதேச ஊடகங்களின் செய்திகளில் தர்ஷன் செல்வராஜா இடம்பெற்றுள்ளார்.

 37 வயதான தர்ஷன் செல்வராஜா இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர். 15 வருடங்களாக பேக்கரி தொழில் ஈடுபட்டுள்ள அவர், பாரிஸின் 20 ஆம் வட்டாரத்தில் Au levain des Pyrénées எனும் பேக்கரியை நடத்தி வருகிறார்.

2023 ஆம் ஆண்டின் பாரிஸின் மிகச்சிறந்த பாண் தயாரிப்புப் போட்டி கடந்த புதன்கிழமை (10) நடைபெற்றது.

best-baguette-in-Paris-competition-in-Pa

 

போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட பாண்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது...   (Photo AfP)

இப்போட்டிக்குத் தகுதிபெற்றிருந்த ஏனைய 126 போட்டியாளர்களை வென்று தர்ஷன் செல்வராஜா முதலிடம் பெற்றுள்ளார். உண்மையில் 175 பேர் இதில் பங்குபற்றினர். ஆனால், 49 பேர் சமர்ப்பித்த பாணின் நீளம், எடை உரிய அளவில் இல்லாததால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

 இப்போட்டிக்கு ஒவ்வொரு போட்டியாளரும் 2 பகெட் வகை பாண்களை சமர்ப்பிக்க வேண்டும். 55 முதல் 70 சென்ரிமீற்றர் நீளமும், 250 முதல் 300 கிராம் நிறையும், ஒரு கிலோவுக்கு 18 கிராம் என்ற அளவிலான உப்பு சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

பேக்கரி தொழிற்துறையினர், ஊடகவியலாளர்கள், முன்னாள் வெற்றியாளர்கள், 6 பாரிஸ் பொதுமக்கள் முதலானோர் அடங்கிய குழுவொன்றினால், பாணின் தயாரிப்பு, தோற்றம், சுவை, மணம், உள்ளமைப்பு முதலியன பரீட்சிக்கப்பட்டு, வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

 best-baguette-in-Paris-competition-in-Pa

 

போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட பாண்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது...   (Photo AfP)

2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் தர்ஷன் செல்வராஜா 4 ஆம் இடம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வருட போட்டியில் முதலிடம் பெற்ற தகவல் அறிவிக்கப்பட்டவுடன் தர்ஷன் செல்வாராஜா அழுதே விட்டாராம்.

இது தொடர்பாக ஏஎவ்பிடம் அவர் பேசுகையில், 'நான் அழுதேன். ஏனெனில், நாம் வெளிநாட்டவர்கள். பாரிம்பரிய பிரெஞ்சு பாண் தயாரிப்பது எப்படி என்பதை நாம் இங்கு வந்து கற்றுக்கொண்டோம். இப்பரிசை வென்றமைக்காக நான் மிக மகிழ்ச்சியடைகிறேன். எனது பாணை பிரான்ஸின் ஜனாதிபதி உட்கொள்வார் என்பது மிக மகிழ்ச்சியளிக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.

best-baguette-in-Paris-competition-in-Pa

 தர்ஷன் செல்வாராஜா

1993 ஆம் ஆண்டு பிரெஞ்சு பாராளுமன்ற இயற்றிய 'பாரம்பரிய பகெட்' என அடையாளப்படுத்தப் படுத்தப்படும் பாண்கள்.  கோதுமை மா, தண்ணீர், உப்பு, ஈஸ்ட் ஆகியவற்றை மாத்திரமே பயன்படுத்தி கைகளால் தயாரிக்கப்பட வேண்டும். தயாரிக்கப்படும் இடத்திலேயே அவற்றை விற்பனை செய்ய வேண்டும்.

best-baguette-in-Paris-competition-in-Pa

போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட பாண்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது...   (Photo AfP)

பகெட் பாணுக்கு உலக மரபுரிமை அந்தஸ்தை யுனெஸ்கோ நிறுவனம் கடந்த வருடம் நவம்பரில் அளித்திருந்தது.

தனது பாண்களை எப்போதும் அன்புடனும், புன்னகைத்து, சிரித்து, பாடிக்கொண்டும் தயாரிப்பதாகவும் தர்ஷன் செல்வராஜா கூறியுள்ளார். (சேது)

https://www.virakesari.lk/article/155245

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஏராளன் said:

பிரான்ஸில் மிகச் சிறந்த பாண் தயாரிப்புப் போட்டியில் முதலிடம் பெற்ற இலங்கையர் தர்ஷன் செல்வராஜா

    ஓ....வீரகேசரி வரைக்கும் நியூஸ் போட்டுது...... கட்டாயம் சிங்கள பேப்பரிலையும் வந்திருக்கும். :gutenmorgen:

  • கருத்துக்கள உறவுகள்


 

நடுவர்களுக்கு முடிவு எடுக்க ஐந்து மணித்தியாலங்கள்  எடுத்ததாம்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nunavilan said:

 

 

நடுவர்களுக்கு முடிவு எடுக்க ஐந்து மணித்தியாலங்கள்  எடுத்ததாம்.

 

அடேயப்பா; பாராட்டுக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2023 at 00:52, இணையவன் said:

இங்கு வேலை செய்பவர்களில் சிலருக்காவது டிப்ளோமா தகுதி இருக்க வேண்டும். மற்றும் ஏராளமான தரக் கட்டுப்பாடுகளும் உண்டு. தமிழர்களின் இவ்வாறான முன்னேற்றம் பெருமைக்குரியது.

செய்யும் தொழிலே தெய்வம் - அதில்

திறமைதான் நமது செல்வம்”

தர்சனுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உணவுப் பிரியனால்தான் ரசித்து சமைக்க முடியும்.பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

    ஓ....வீரகேசரி வரைக்கும் நியூஸ் போட்டுது...... கட்டாயம் சிங்கள பேப்பரிலையும் வந்திருக்கும். :gutenmorgen:

ஓம் தமிழ்மிரர் ஆங்கில இணையத்தில தேடும்போது(7பேர் பிரான்ஸில ஓடிப்போன செய்தியை) சிறிலங்கன் தர்சன் வெற்றி பெற்றவர் என்று போட்டிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2023 at 01:27, nedukkalapoovan said:

பாஸ் இதுக்கெல்லாம் இலங்கையில் ஏங்கக் கூடாது. எல்லாமே இப்போ அங்கு விற்பனைக்கிருக்குது.

ஐரோப்பிய நாடுகளில் இல்லாத நல்ல பொருட்களும் அங்குண்டு. குறிப்பாக மலேசிய.. அவுஸி பொருட்களும் உண்டு.

ஐரோப்பாவை விட அங்கு நல்லா செய்கிறார்கள். அதுவும் சம்பலோடு சாப்பிட ருசி இருக்கே.. தனி. 

 

https://delifrance.lk/

No photo description available.

https://www.onegalleface.com/mall-overview/

கொழும்பில் இங்கு உள்ள பல்பொருள் அங்காடியிலும் உண்டு. 

சச்ச ஏங்கல பாஸ் பாண் ஐட்டம் என காட்டியதற்கு சொன்னன்.  

கொழும்பு பக்கம் இப்ப வருமான சிக்கலால் பலர் இடமபெயர தொடங்கியுள்ளனர் பாண் சாப்பிட்டவர்கள் கூட கோதுமையின் விலையை கண்டு ஏங்கி தவிக்கிறார்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

பரிஸில் 2023 சிறந்த Baguette (பாண்) தயாரிப்பாளர் விருது வென்ற ஈழத்தமிழர் தர்ஷன் செல்வராஜா!

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2023 at 07:50, பெருமாள் said:

லாசப்பல் என்று ஒரு நாலு  தெருவுக்குள் ஆர்பாட்டமாய் யூதர்களுக்கு அதிகப்படியான  வாடகைகளை கொடுத்து கெட்டொழிந்தது தான் தற்போது நம்மவர்களுக்கு ஞானம் பிறந்துள்ளது .லண்டனில் நம்மவர்கள் ஆரம்பத்திலே சுதாகரித்து கொண்டார்கள் லண்டனை  சுற்றியுள்ள இடங்களில் தான் அநேக தமிழர்  வியாபாரம் கள் இருக்கும் சிற்றிக்குள் அல்ல .

பெருமாள்…. நகரத்திற்குள் கடை வைத்திருப்பதற்கும்,
புறநகர்ப் பகுதியில் கடை வைத்திருப்பதற்கும்…. வாடகை ஏற்ற இறக்கத்தை தவிர,
வேறு பிரத்தியேகமான காரணங்கள் உண்டா?
இருந்தால் சொல்லுங்கள்… அறிய ஆவலாக உள்ளது. 🙂

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை வந்தடைந்தார் சாதனைத் தமிழன் தர்ஷன் செல்வராஜ்

Published By: DIGITAL DESK 3

28 JUL, 2023 | 01:23 PM
image
 

பிரான்சின் பாரிசில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் இந்த ஆண்டுக்கான விருதை வென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா இன்று வெள்ளிக்கிழமை (28) இலங்கையை வந்தடைந்தார்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளைப் பகுதியைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா அவரது 2 பிள்ளைகள் மற்றும் அவரது மனைவியுடன் இலங்கைக்கான மூன்று வார பயணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

364175368_712403614232728_36570414153809

பிரான்ஸில் - பாரிசில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில், இந்த ஆண்டுக்கான விருதை இலங்கையின் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்த 37 வயதான தர்ஷன் செல்வராஜா வென்றிருந்தார்.

“La meilleure baguette de Paris”என்பது இந்த போட்டியின் பெயராகும். இது தமிழில் ‘பாரிசின் சிறந்த பாண்’ என்று அர்த்தப்படும்.

30 ஆவது முறையாக இடம்பெறும் இந்தப் போட்டியில், இந்தமுறை 126 பேர், பிரான்சின் பாரம்பரியம்மிக்க baguette போட்டிக்கு பாணைத் தயாரித்து  அனுப்பியிருந்தனர்.

இதில், தர்ஷன் செல்வராஜா தயாரித்த பாணின் தரம் மற்றும் சுவை நடுவர்களைக் கவர்ந்து, முதலிடத்தைப் பிடித்திருந்ததுடன் வெற்றிப் பரிசாக 4,000 யூரோவை பணப்பரிசாகவும் பெற்றிருந்தார்.

363513993_1974296262963285_9151267977238

அத்துடன், பிரான்ஸின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்னின் எலிசே மாளிகையில், அடுத்துவரும் ஓர் ஆண்டுக்கு பாண் தயாரிக்கும் வாய்ப்பும் தர்ஷனுக்கு கிட்டியது.

இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்திறங்கிய பின் ஊடகவியலாளரிடம் கருத்து வெளியிட்ட தர்ஷன் செல்வராஜா,

நான் 2016 ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்றிருந்தேன். நான் போகும்போது எனக்கு பிரெஞ்சு மொழி தெரியாது. அதுமட்டுமல்ல, பேக்கரியில் வேலை செய்யக்கூடத் தெரியாது. ஆனால் நான் பிரான்சின் பாரிஸில் உள்ள " au Levain Des Pyrenees " பேக்கரியில் வேலைக்குச் சென்றேன்.

உரிமையாளர் மிகவும் நட்பானவர். அவர் எனக்கு பிரஞ்சு மொழியையும் பேக்கரி தொழிலையும் கற்றுக் கொடுத்தார். இப்போது அவருக்கு 70 வயதாகிறது. நான் வேலை செய்த பேக்கரியை 03 வருடங்களுக்கு முன் சொந்தமாக வாங்கினேன்.

பிரான்ஸின் பாரிஸில் 1,300 பேக்கரி உற்பத்தியாளர்கள் அரசால் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் போட்டியிட்டு 2023 இல் சிறந்த பிரெஞ்சு "பாகுட்" பாண் தயாரிப்பாளராக வெற்றி பெற முடிந்தது. அதனால்தான் பிரான்ஸ் ஜனாதிபதியின் இல்லத்திற்கு ஓராண்டுக்கு "பாகுட்"  பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களை தயாரித்து வழங்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதெனக் கூறினார்.

https://www.virakesari.lk/article/161131

  • கருத்துக்கள உறவுகள்
On 15/5/2023 at 02:09, குமாரசாமி said:

    ஓ....வீரகேசரி வரைக்கும் நியூஸ் போட்டுது...... கட்டாயம் சிங்கள பேப்பரிலையும் வந்திருக்கும். :gutenmorgen:

தம்பியர் இப்ப இலங்கைக்கு வந்திருக்கிறார் போல

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரெஞ்சுப் பாண் தயாரித்த இளைஞருக்கு யாழில் கௌரவிப்பு!

பிரெஞ்சுப் பாண் தயாரித்த இளைஞருக்கு யாழில் கௌரவிப்பு!

உலகின் மிகப்  பிரபலமான  உணவுகளில் ஒன்றாக  பிரெஞ்சுப் பாண் உள்ளது. அந்தவகையில்  பிரான்ஸில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரெஞ்சுப் பாண் (Baguette) தயாரிக்கும் போட்டியில் இவ்வாண்டு  வெற்றிபெற்ற இலங்கைத் தமிழரான தர்ஷன் செல்வராஜாவைக்  கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (14) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள, யாழ்ப்பாண மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் பணிமனையில் இக் கௌரவிப்பு நிகழ்வு  இடம்பெற்றது.

இதன்போது தர்சனுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிகௌரவிக்கப்பட்டது. இதில் யாழ்ப்பாண மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

வவுனியாவை பிறப்பிடமாக கொண்ட தர்ஷன் பரீஸில் உள்ள  பேக்கரி ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில் 126 போட்டியாளர்கள் பங்கு பற்றிய குறித்த போட்டியில் அவர் வெற்றி  வாகை சூடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, பிரான்ஸின் ஜனாதிபதி மாளிகையான எலிசேக்கு ஒரு வருடத்திற்கு தேவையான பாணை வழங்கும் வாய்ப்பும் தர்ஷனுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1345104

#################    #################   ################

யாழ்ப்பாண மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தினருக்கு... 
சொந்தமாக ஒரு கொடி,  தமக்கென வடிவமைக்க தெரியவில்லைப் போலுள்ளது.  

அவர்கள் மேசையில் வைத்துள்ள சிங்கக் கொடி, பிரான்சில் இருந்து சென்று  
பாராட்டுப் பெறுபவரின் முகத்தையே மறைத்து விட்டது.

ஹ்ம்ம்... சொந்த நாடு இல்லாவிடில்... எத்தனை அவமானங்களை கடந்து போக வேண்டி இருக்கு.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.