Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, vasee said:

இன்று இலங்கை, இந்திய போட்டி மும்பாயில் நடைபெறுவதால், மைதான ஈரலிப்பு இருக்காது என கருதுகிறேன்.

நாளைய போட்டியில் இலங்கை வெல்ல வேண்டும்.

  • Replies 546
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, nedukkalapoovan said:

பெற்ற தாயோடு..  சொறீலங்காவை ஒப்பிடுவது மகா தவறு. சொந்த நாட்டுக்குள் வாழ்ந்த சகோதர மொழி பேசி சகோதர்கள் போல் வாழ்ந்த மக்களையே கலவரங்களாலும்.. இராணுவத்தை ஏவியும்...குண்டு வீசியும்... கொன்றொழித்த... கொலைகார நாட்டை தாயுடன் ஒப்பிடக் கூடாது. 

இங்கிலாந்தை விட மோசமான தோல்வி சொறீலங்காவினது. 

 

போட்டிகளின் நிறைவில் இலங்கை எத்தனையாம் இடம் பெறுகின்றது என பார்ப்போம்.

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே!

❤️❤️❤️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, vasee said:

இன்று இலங்கை, இந்திய போட்டி மும்பாயில் நடைபெறுவதால், மைதான ஈரலிப்பு இருக்காது என கருதுகிறேன்.

இலங்கை இடது கை வேகப்பந்துவீச்சாளர் மதுசங்க இந்திய வலது கை நட்சத்திர ஆட்டக்காரர்களுக்கு சவால் ஏற்படுத்தலாம், பொதுவாக இந்திய அணியின் ரோகித், கோலி போன்ற நட்சத்திர ஆட்டக்காரர்கள் விக்கெட்டிற்கு மேலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசும் போது அவர்கள் உருவாக்கும் கோணங்களினால் மிகுந்த சிரமத்தினை புதிய பந்துகளில் எதிர்கொள்வார்கள், இலங்கை அணி தாக்குதல் பாணியிலான களத்தடுப்பினையும் அதற்கு பயன்படுத்த வேண்டும்(2 slip fielders).

ஹிந்திய‌ர்க‌ள் இப்போது அசுர‌ ப‌ல‌த்துட‌ன் நிக்கின‌ம்

இல‌ங்கைய‌ இன்று ந‌ட‌க்கும் போட்டியில் சிம்பிலா வெல்லுவின‌ம்............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராகுல் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதிய இலங்கையுடனான தோல்வி

இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நிதின் ஸ்ரீவத்சவா
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 2 நவம்பர் 2023, 05:00 GMT
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி வலிமையாகக் களமிறங்கிய தருணங்களுள் முக்கியமானது 2007. அந்த எதிர்பார்ப்பு கொடூரமான தோல்விகளுடன் முடிவுக்கு வந்தது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் அதே உத்வேகத்துடன் களமிறங்கி இருக்கிறது இந்திய அணி.

2007ம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவிருந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அது ‘கனவு 11’ என்று கூறும் அளவுக்கு வலிமையாக இருந்தது.

அணியின் தலைவர் ராகுல் டிராவிட், முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, விரேந்திர சேவாக், மகேந்திர சிங் தோனி, யுவராஜ் சிங், இர்ஃபான் பதான், சஹீர் கான், ஹர்பஜன் சிங், அஜித் அகர்கர் அணியில் இடம்பெற்றிருந்தனர். சர்ச்சைகளுக்குள்ளான ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் க்ரெக் சாப்பெல் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார்.

இந்த போட்டி குறித்த செய்தி சேகரித்த பிபிசி செய்தியாளர் பங்கஜ் பிரியதர்ஷி சில நினைவுகளை பகிர்ந்து கொண்டார் . “இந்திய அணி முழுவதும் ஜாம்பவான்களாக இருந்தாலும், அணியில் ஒற்றுமை இல்லை. பெரிய ஆட்டக்காரர்களுக்கு இடையில் பீல்டிங், பேட்டிங் ஆகியவற்றில் இருந்த வித்தியாசங்கள் அப்பட்டமாக தெரிந்தது. இதனை சிலர் தங்கள் நூல்களில் கூட குறிப்பிட்டுள்ளனர். அணியின் தலைவராக இருந்த ராகுல் டிராவிடுக்கு இவற்றை எல்லாம் கையாள்வது கண்டிப்பாக கடினமாக இருந்திருக்கும்” என்கிறார்.

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

2007- உலகக் கோப்பையில் என்ன நடந்தது?

ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி கோப்பையை தூக்கி வரும் உத்வேகத்துடன்தான் மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணித்திருந்தது.

அந்த உலகக் கோப்பைத் தொடர் தர வரசையில் இரண்டாம் இடத்தில் இருந்த இலங்கையுடன் ஆறாம் இடத்தில் இருந்த இந்தியாவும் ஒரு குழுவில் இடம்பெற்றிருந்தன. பெர்முடாவையும், வங்கதேசத்தையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குச் செல்வதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு இருந்தது.

சச்சின், கங்குலி, யுவராஜ், சேவக், டிராவிட் என நட்சத்திரங்களைக் கொண்டிருந்தது இந்தியாவின் அணி. இளம் அதிரடி வீரராக தோனி நம்பிக்கையளித்திருந்தார்.

இந்தியாவுக்கு முதல் போட்டியே வங்கதேசத்துடன்தான். போர்ட் ஆஃப் ஸ்பெயினில் அந்தப் போட்டி நடந்தது.

பெரிய பேட்ஸ்மேன்களைக் கொண்டிருந்த இந்திய அணி அந்தப் போட்டியில் வெறும் 191 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. கங்குலி 66 ரன்களும், யுவராஜ் 47 ரன்களும் எடுத்தார்கள். மற்ற யாரும் குறிப்பிடத் தகுந்த ரன்களை எடுக்கவில்லை.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தோனி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அந்தப் போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சும் மிக மோசமாக இருந்தது. வீரேந்திர சேவக், யுவராஜ், சச்சின் உள்பட 7 பேர் இந்தியாவுக்காக பந்துவீசினார்கள். ஆனாலும் 191 ரன்களுக்குள் வங்கதேசத்தை முடக்க முடியவில்லை.

முஷ்ஃபிகுர் ரஹீமும், ஷாகிப் அல் ஹசனும் அரைச் சதம் அடித்து வங்கதேசத்தின் வெற்றியை உறுதி செய்தனர்

கொடுங்கனவாக முடிந்த இலங்கையுடனான ஆட்டம்

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

வங்கதேசத்துடனான போட்டி அதிர்ச்சியாக அமைந்தது என்றால், இலங்கையுடனான போட்டியும் அதே மாதிரியாகவே முடிவுக்கு வந்தது.

போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் இலங்கை அணி முதலில் களமிறங்கியது. உபுல் தரங்கா, சமர சில்வா ஆகியோரின் அரைச் சதத்தால் இந்திய அணி 254 ரன்களை எடுத்தது.

ஆனால் இந்த ஸ்கோரை இந்திய அணியால் நெருங்க முடியவில்லை. கேப்டன் ராகுல் டிராவிட் மட்டும் அதிகபட்சமாக 60 ரன்களை எடுத்தார். சச்சின் டெண்டுல்கரும், மகேந்திர சிங் தோனியும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனது இந்திய அணியை நெருக்கடியில் தள்ளியது. 185 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராகுல் டிராவிட்டின் ஒருநாள் போட்டி வரலாற்றில் இலங்கையுடனான இந்தப் போட்டி கொடுங்கனவாக இருந்தது. அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதப்பட்டதும் இந்தப் போட்டியில்தான். இந்தத் தொடருக்குப் பிறகு ராகுல் டிராவிட்டின் கேப்டன்சி மீதான கடுமையான விமர்சனங்கள் எழுந்து, படிப்படியாக அவரது கிரிக்கெட் அத்தியாயம் முடிவுக்கு வந்தது.

அதே நேரத்தில் டி20 அணிக்கான கேப்டன் பதவி தோனியிடம் வந்து, இந்தியக் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம் தொடங்குவதற்கும் இது காரணமானது.

உலகக் கோப்பை 2023- ராகுல் ட்ராவிடின் பதிலடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக கடந்த இரண்டு ஆண்டுகளாக ராகுல் ட்ராவிட் உள்ளார்.

2007 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு சில மாதங்களுக்கு பிறகு, 2007ம் ஆண்டில் , தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற டி-20 உலகக் கோப்பை போட்டியில் இளம் வீரர் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதே போன்று 2011 -ல் இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.

ஆனால் ராகுல் டிராவிட் அந்த அணியில் இடம் பெறவில்லை. அதே ஆண்டு அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் .

தற்போது ராகுல் ட்ராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பொறுப்பில் உள்ளார்.

 
உலகக் கோப்பை 2023- ராகுல் ட்ராவிடின் பதிலடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

2007ம் ஆண்டு ராகுல் ட்ராவிட் தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மோசமான தோல்வியை தழுவியது.

ராகுல் டிராவிட்டின் இலக்கு

ஒரு செய்தியாளர் சந்திப்பில் ராகுல் டிராவிட்டின் ஆட்டம் குறித்து பேசும் போது, எப்படி இலங்கை மற்றும் வங்க தேசத்திடம் 2007ம் ஆண்டில் சுருண்டு விழுந்தது என்பது குறிப்பிடப்பட்டது. அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த ராகுல் ட்ராவிட், “நான் கிரிக்கெட் வீரராக இருந்து பல காலம் ஆகி விட்டது. நான் விளையாடினேன் என்பது கூட எனக்கு நினைவு இல்லை என்பது தான் உண்மை. நான் அதை எல்லாம் விட்டு, தற்போது இந்திய அணி தனது கவனம் சிதறாமல் இருக்க உதவுகிறேன்” என்றார்.

ஆனால், ராகுல் டிராவிட் காலத்தில் ஆடிய இலங்கை ஆட்டக்காரர் சனத் ஜெய சூர்யா, “ராகுல் டிராவிட் போன்ற பெரிய வீரருக்கு 2007ம் ஆண்டு கொடுங்கனவாக இருந்திருக்கும்.” என்றார்.

“அதிக நேரம் விளையாடிய வீரர், டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர் என்ற சாதனை படைத்தவர் ராகுல் டிராவிட். அவரை போன்றவர்கள் இருப்பது வரலாற்றில் அரிதான ஒன்றே. தற்போது ராகுலின் பயிற்சியும் இந்திய அணியில் தெளிவாக பிரதிபலிக்கிறது. இந்தியா உலகக்கோப்பையை கைப்பற்றினால் ராகுலை விட திருப்திஅடையக் கூடியவர் யாரும் இருக்க முடியாது” என்று அவர் மேலும் கூறினார்.

உலகக் கோப்பை 2023- ராகுல் ட்ராவிடின் பதிலடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

2007ம் ஆண்டு தோல்வி ட்ராவிட் போன்ற பெரிய ஆட்டக்காரருக்கு கொடுங்கனவாக இருந்திருக்கும் என இலங்கை ஆட்டக்காரர் சனத் ஜெய சூர்யா கூறுகிறார்.

 

பயிற்சியில் கவனம்

ஆட்டக்காரராக இருந்த போது தனது பயிற்சியில் எவ்வளவு கவனம் செலுத்தினாரோ அதே அளவு கவனத்தை இன்றும் கூட ஒரு பயிற்றுநராக ராகுல் டிராவிட் தனது பயிற்சிகளின் மீது செலுத்தி வருகிறார்.

பயிற்சிக்கு முதல் ஆளாக வரும் டிராவிட், அனைத்து வீரர்களும் எப்படி ஆடுகிறார்கள் என உன்னிப்பாக கவனித்து தனது ஆலோசனைகளை வழங்குகிறார். பேட்டிங் பயிற்றுநர் விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்றுநர் பரஸ் மம்ப்ரே ஆகியோரை ஒவ்வொரு விஷயத்தில் இணைத்துக் கொள்கிறார் .

அணியின் பீல்டிங் பயிற்றுநர் டி திலிப் வழங்குவது போன்ற பயிற்சியை தற்போது வெகு சில அணிகளிலும் மட்டுமே காண முடிகிறது.

உலகக் கோப்பை 2023- ராகுல் ட்ராவிடின் பதிலடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ராகுல் ட்ராவிட், ஆடத்த்துக்கு முன் மைதானம் எப்படி உள்ளது என ஆராய்வதில் கவனம் செலுத்துகிறார்.

 

புதன்கிழமையன்று, இந்திய அணி மும்பையில் உள்ள வாங்க்டே மைதானத்துக்கு பயிற்சிக்காக வந்தது. டிராவிட் முதலில் மைதானம் எப்படி உள்ளது என கணித்தார். முந்தைய நாள் ஷுப்மன் கில், ஒன்றரை மணி நேரம் பேட்டிங் பயிற்சி செய்த போது கூட, மைதான ஊழியர்களிடம் ட்ராவிட் பேசிக் கொண்டிருப்பதை காண முடிந்தது.

வான்கடே மைதாம் செம்மண்ணால் ஆனது. இதனால் பந்துகள் லேசாக எகிறக் கூடும். எனவே பேட்ஸ்மேன்களை முதலில் வேகப்பந்து வீச்சு பயிற்சி பெற செய்தார்.

கடந்த சனிக்கிழமை, லக்னௌவில் ஏக்னா மைதானத்தில் இந்திய அணி பயிற்சி செய்துக் கொண்டிருந்த போதும் கூட, ராகுல் டிராவிட் , பந்தை மைதானத்தில் வீசிப் பார்த்து, பல முறை மைதானத்தின் தன்மையை ஆராய்ந்துக் கொண்டிருந்தார். அந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும் என டிராவிட் நினைத்தார். அதே போன்று, அந்தப் போட்டியில் குறைந்த ரன்களே எடுக்க முடிந்தது.

உலகக் கோப்பை 2023- ராகுல் ட்ராவிடின் பதிலடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்திய அணியின் பயிற்றுநராக இருக்கும் ராகுல் ட்ராவிட் பயிற்சிக்கு முதல் ஆளாக மைதானத்துக்கு வந்து விடுவார்.

 

ஆட்டத்தில் ஒழுக்கம்

2022ம் ஆண்டு நவம்பரில் டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெர்த் நகரத்திலிருந்து குவாண்டஸ் விமான சேவை அடிலெய்ட் செல்ல புறப்பட்டது. விமானம் முழுவதுமாக நிரம்பியிருந்தது.

இந்திய கிரிக்கெட் அணியும் அதே விமானத்தில் இருந்தது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த பிறகு, இந்திய அணி சோர்வாக இருந்தது. ஆனால், பயிற்றுநரான ராகுல் ட்ராவிட் விமானம் புறப்பட்ட உடனே தனது லேப்டாப்பை எடுத்து வைத்துக் கொண்டு அடுத்த ஆட்டத்துக்கு தயாரானார்.

ராகுல் டிராவிடுடன் விளையாடியுள்ள மேற்கு இந்திய தீவுகளின் முன்னாள் அணித் தலைவர் டாரென் சாமி, “ராகுல் தற்போது தயாராக உள்ளார்” என இந்த உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாக கூறியிருந்தார்.

உலகக் கோப்பை 2023- ராகுல் ட்ராவிடின் பதிலடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கிரிக்கெட் உலகத்தின் பெரிய வெற்றியாக உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றுவதிலேயே ராகுலின் கவனம் உள்ளது.

 

“டிராவிட் போன்று கடுமையாக உழைக்கும் வீரர்களை அரிதாகவே பார்த்துள்ளேன். முதலில் ஜூனியர் அணிக்கு பயிற்சி வழங்கினார். தற்போது பாதி பேர் நட்சத்திர ஆட்டக்காரர்களாக இருக்கும் இந்திய அணிக்கு பயிற்சி வழங்குகிறார். இது எளிதான காரியமே அல்ல” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த பெரும் ஆட்டக்காரரும் இந்திய அணியின் பயிற்றுநருமான ராகுல் டிராவிடின் கண்கள் தற்போது கிரிக்கெட் உலகில் பெரிதாக கருதப்படும் உலகக் கோப்பையின் மீது உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cv20g1dd73po

Posted

இவ்வளவு கேவலமாகவா சிங்கள அணி இந்தியாவுடன் தோற்க வேண்டும்..

இந்தியாவுடன் எவர் விளையாடினாலும் அதற்கு எதிரான அணிக்கு மட்டுமே ஆதரவு கொடுப்பதனால் இந்தியாவுடன் விளையாடும் போது மட்டுமே நான் சிங்கள அணிக்கு ஆதரவு கொடுப்பது. இன்று தோற்பார்கள் என்று தெரியும், ஆனால் இந்தளவுக்கு மோசமாக என நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, நிழலி said:

இவ்வளவு கேவலமாகவா சிங்கள அணி இந்தியாவுடன் தோற்க வேண்டும்..

இந்தியாவுடன் எவர் விளையாடினாலும் அதற்கு எதிரான அணிக்கு மட்டுமே ஆதரவு கொடுப்பதனால் இந்தியாவுடன் விளையாடும் போது மட்டுமே நான் சிங்கள அணிக்கு ஆதரவு கொடுப்பது. இன்று தோற்பார்கள் என்று தெரியும், ஆனால் இந்தளவுக்கு மோசமாக என நினைக்கவில்லை.

ஆசியா கோப்பையிலும் இந்தியா
இல‌ங்கைய‌ இதே ர‌ன்ஸ்சுக்கை ம‌ட‌க்கின‌து

இந்த‌ தோல்வி வெக்க‌க் கேடான‌ தோல்வி

எத்த‌ன‌ ஜ‌ம்ப‌வாங்க‌ள் விளையாடின‌ இல‌ங்கை அணியில் இப்ப‌டி குப்பை வீர‌ர்க‌ளா................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, நிழலி said:

இவ்வளவு கேவலமாகவா சிங்கள அணி இந்தியாவுடன் தோற்க வேண்டும்..

இந்தியாவுடன் எவர் விளையாடினாலும் அதற்கு எதிரான அணிக்கு மட்டுமே ஆதரவு கொடுப்பதனால் இந்தியாவுடன் விளையாடும் போது மட்டுமே நான் சிங்கள அணிக்கு ஆதரவு கொடுப்பது. இன்று தோற்பார்கள் என்று தெரியும், ஆனால் இந்தளவுக்கு மோசமாக என நினைக்கவில்லை.

 

2 minutes ago, பையன்26 said:

ஆசியா கோப்பையிலும் இந்தியா
இல‌ங்கைய‌ இதே ர‌ன்ஸ்சுக்கை ம‌ட‌க்கின‌து

இந்த‌ தோல்வி வெக்க‌க் கேடான‌ தோல்வி

எத்த‌ன‌ ஜ‌ம்ப‌வாங்க‌ள் விளையாடின‌ இல‌ங்கை அணியில் இப்ப‌டி குப்பை வீர‌ர்க‌ளா................

இன்று பல நல்ல செய்திகள் வருகின்றன.

இப்படி ஒரு தோல்வியை இந்த நேரத்தில் பார்க்க மிகமிக சந்தோசமாக உள்ளது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரையிறுதியில் இந்தியா: ஷமி, சிராஜ், பும்ரா புயல் வேகத்தில் இலங்கை சீட்டுக்கட்டாக சரிந்தது எப்படி?

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 நவம்பர் 2023, 08:25 GMT
புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர்

மும்பை வான்கடே மைதானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா ஆடிவரும் உலகக் கோப்பை ஆட்டத்தில், இந்திய பேட்ஸ்மேன்கள் ஷுப்மான் கில் மற்றும் விராட் கோலி இருவரும் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கின்றனர்.

கில் சதம் அடிப்பார் என்று தோன்றிய நிலையில் 92 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை அடித்தார்.

கில் ஆட்டமிழந்த பிறகு விராட் கோலி சதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார். ஆனால் அவரும் 94 பந்துகளில் 88 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அவர்கள் இருவரையும் இலங்கை பந்துவீச்சாளர் மதுஷங்கா ஆட்டமிழக்கச் செய்தார்.

 

முன்னதாக கேப்டன் ரோகித் சர்மாவும் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மதுஷங்கவின் பந்துவீச்சில்தான் ஆட்டமிழந்தார்.

கோலி சதம் அடித்திருந்தால், அது அவரது 49-வது சதமாக அமைந்திருக்கும். அதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்திருப்பார். அந்த வாய்ப்பை மீண்டும் ஒருமுறை அவர் தவறவிட்டிருக்கிறார்.

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்ரேயாஸ் அதிரடி

சுப்மன் கில், விராட் கோலி ஆகியோரை சதமடிக்க விடாமல் செய்த மதுஷங்கா, அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயரையும் 82 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து அதிர்ச்சி அளித்தார். அவர் 56 பந்துகளில் 6 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார்.

நடப்பு உலகக்கோப்பையில் தொடக்கத்தில் இருந்தே ஸ்ரேயாஸ் ஐயர் பெரிதாக சோபிக்காத நிலையில் கடந்த போட்டியில் சூர்யகுமார் அதிரடி காட்ட, ஸ்ரேயாஸின் இடம் பறிபோகக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த சூழலில் தான் இலங்கைக்கு எதிராக அவரது அதிரடி ஆட்டம் வெளிப்பட்டுள்ளது.

கடைசிக் கட்டத்தில் ரவீந்திர ஜடேஜாவின் அதிரடியால் இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்களைக் குவித்தது.

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கைக்கு தொடக்கமே அதிர்ச்சி

இந்தியா நிர்ணயித்த 358 என்ற இமாலய இலக்கை நோக்கி களம் புகுந்த இலங்கை அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி அளித்தார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. அவர் வீசிய முதல் பந்தில் நிசாங்காவை டக் அவுட்டாக்கினார். நடப்பு உலகக்கோப்பையில் இலங்கைக்கு மிகவும் வெற்றிகரமான பேட்ஸ்மேனாக திகழ்ந்த அவரை இழந்த அதிர்ச்சியில் இருந்து அந்த அணியால் கடைசி வரை மீளவே முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டனும், நம்பிக்கை நட்சத்திரமுமான குசால் மெண்டிஸ் களமிறங்கினார். அவரும் டக் அவுட்டாகியிருக்க வேண்டியது. அவர் தந்த கடினமான கேட்ச்சை, பந்துவீசிய பும்ராவால் பிடிக்க முடியவில்லை.

ஒரே ஓவரில் 2 பேரை அவுட்டாக்கிய சிராஜ்

பும்ராவைப் போலவே அவருக்கு தோள் கொடுத்து மற்றொரு முனையில் பந்துவீசிய முகமது சிராஜூம் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார். அவரது பந்தில் கருணாரத்னேவும் எல்.பி.டபிள்யூ முறையிலேயே ஆட்டமிழந்தார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை.

அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் சமரவீராவையும் சிராஜ் டக்அவுட்க்கினார். இந்த ஓவர் மெய்டனாக அமைந்தது இலங்கை அணி 2 ஓவர் முடிவில் 2 ரன் மட்டுமே எடுத்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அந்த இரு ரன்களும் முதல் ஓவரில் பும்ரா வைட் வீசியதால் கிடைத்தவை.

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மீண்டும் அட்டகாசப்படுத்திய சிராஜ்

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் தளர்ந்து போன இலங்கை அணி மூன்றாவது ஓவரில் ஒரு ரன்னை மட்டும் எடுத்தது. குசால் மெண்டிஸ் அந்த ரன்னை எடுத்தார். ஆனாலும், இலங்கை அணி தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் முன்பே அடுத்த விக்கெட்டையும் சிராஜ் காலி செய்தார். நான்காவது ஓவரை வீசிய அவர், குசால் மெண்டிசை கிளீன் போல்டாக்கினார்.

முதலில் அவுட்டான 3 பேட்ஸ்மேன்களும் டக் அவுட்டாக, மெண்டிஸ் மட்டும் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகுளை இழந்திருந்தது.

மிக மோசமான தொடக்கம்

ஒரு நாள் கிரிக்கெட்டில் மிக மோசமான தொடக்கங்களில் ஒன்றாக இது அமைந்தது. 2015-ம் ஆண்டு கிறைஸ்ட்சர்ச் நகரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 1 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்ததே இன்னும் மோசமான தொடக்கமாக திகழ்கிறது.

அதற்கு அடுத்தபடியாக, இலங்கை அணியின் இன்றைய தொடக்கம் அமைந்தது. அந்த அணி 3 ரன்களை எடுப்பதற்குள்ளாக 4 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது.

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை சாய்த்த முகமது ஷமி

பும்ரா, சிராஜ் வீசிய முதல் 9 ஓவர்களில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்களை எடுத்திருந்தது. அடுத்ததாக, 10-வது ஓவரை முகமது ஷமி வீச வந்தார். பும்ரா, சிராஜ் போலவே அவரும் முதல் பந்திலேயே விக்கெட் எடுப்பாரா என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அது நடக்கவில்லை.

ஆனால், அதற்குப் பரிகாரம் செய்வது போல் மூன்று மற்றும் நான்காவது பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை சாய்த்து, பரிதாப நிலையில் இருந்த இலங்கையின் நிலைமையை அவர் மேலும் மோசமாக்கிவிட்டார். அவரது பந்துவீச்சில் சரித் அசலங்கா, மேத்யூஸ் ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த ஓவர் மெய்டனாகவும் அமைந்தது. இதனால், இலங்கை அணி 14 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது.

 

55 ரன்களுக்கு ஆல் அவுட்

முதல் பந்தில் விழுந்த அடியில் இருந்து இலங்கை அணியால் கடைசி வரை எழவே முடியவில்லை. 20 ஓவர் கூட தாக்குப்பிடிக்க முடியாத இலங்கை அணி, 19.4 ஓவரில் 55 ரன்களை மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. இதனால் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது-

புதிய மைல்கல்லை எட்டிய ஷமி

இந்தியா vs இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி மீண்டும் ஒரு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 5 ஓவர் வீசிய அவர், 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடக்கம்.

நடப்பு உலகக்கோப்பையில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஷமி இதுவரை 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்த உலகக்கோப்பையில் இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக அவர் திகழ்கிறார்.

ஒருநாள் போட்டிகளில் இதுவரை நான்கு முறை அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது வேறு எந்த இந்திய பந்துவீச்சாளரையும் விட அதிகம் அதேபோல், உலகக்கோப்பையில் மூன்று முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கை அவர் சமன் செய்துள்ளார்.

முதல் அணியாக அரையிறுதியில் இந்தியா

நடப்பு உலகக்கோப்பையில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு வரும் இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக கம்பீரமாக அரையிறுதியில் நுழைந்துள்ளது. 7 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பெற்றுள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிரு இடங்களில் உள்ள இந்தியாவும் தென் ஆப்ரிக்காவும் வரும் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மூன்றாவது மற்றும நான்காவது இடங்களில் உள்ளன.

https://www.bbc.com/tamil/articles/cxrv2n4dkr6o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக்கிண்ண வரலாற்றில் இலங்கைக்கு மிக மோசமான தோல்வி : 302 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய இந்தியா அரை இறுதிக்கு முன்னேறியது

02 NOV, 2023 | 09:36 PM
image

(மும்பையிலிருந்து நெவில் அன்தனி)

மும்பை வான்கடே விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 55 ஓட்டங்களுக்கு சுருட்டிய இந்தியா 302 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.

உலகக் கிண்ண வரலாற்றில் ஈட்டப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய வெற்றி இதுவாகும்.

நெதர்லாந்துக்கு எதிராக இந்த வருடம் டெல்லியில்  நடைபெற்ற     போட்டியில்  அவுஸ்திரேலியா 309 ஓட்டங்களால் ஈட்டிய வெற்றியே மிகப் பெரிய உலகக் கிண்ண வெற்றியாகும்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையை இந்த வருட முற்பகுதியில் இந்தியா 317 ஓட்டங்களால் வெற்றிகொண்டு மிகப் பெரிய வெற்றியை பதிவுசெய்திருந்தது.

மும்பை வான்கடே விளையாட்டரங்கில் நடைபெற்ற 33ஆவது லீக் உலகக் கிண்ணப் போட்டியுடன் 7 வெற்றிகளை தொடர்ச்சியாக ஈட்டிய இந்தியா, முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டது.

ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், மொஹமத் ஷமி, மொஹமத் சிராஜ் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இந்தியாவை வெற்றி அடையச் செய்தன.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 358 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 55 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான தோல்வியைத் தழுவியது.

இலங்கை துடுப்பாட்டத்தில் 5 வீரர்கள் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர்.

நல்லவேளை 9ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த மஹீஷ் தீக்ஷனவும் கசுன் ராஜித்தவும் இலங்கையின் மொத்த எண்ணிக்கை 36 ஓட்டங்களைக் கடக்க உதவினர். உலகக் கிண்ண வரலாற்றில் இலங்கைக்கு எதிராக கனடா  2003இல்   பெற்ற 36 ஓட்டங்களே மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாகும்.

இலங்கையின் ஆரம்பம் எந்தவகையிலும் சிறப்பாக அமையவில்லை.

இந்தியாவுக்கு எதிராக இந்த வருடம் நடைபெற்ற ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் போன்றே இந்தப் போட்டியிலும் இலங்கை அதன் விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து மற்றொரு படுதோல்வியைத் தழுவியது.

ஜஸ்ப்ரிட் பும்ராவின் முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் பெத்தும் நிஸ்ஸன்க ஆட்டம் இழந்தார்.

அடுத்த ஓவரில் மொஹமத் சிராஜ் வீசிய முதலாவது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் திமுத் கருணாரட்ன ஆட்டம் இழந்தார்.

அவர்கள் இருவரும் மத்தியஸ்தர்களின் தீர்ப்புகளை மீளாய்வு செய்யுமாறு கோரிய போதிலும் மத்தியஸ்தர்களின் தீர்ப்புகளில் மாற்றம் ஏற்படவில்லை.

சிராஜின் அதே ஒவரில் ஸ்லிப் நிலையில் 3 வீரர்கள் நிறுத்தப்பட ஷ்ரேயாஸ் ஐயரிடம் பிடிகொடுத்த சதீர சமரவிக்ரமவும்  ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். (2 - 3 விக்.)

முதல் இரண்டு ஓட்டங்கள் வைட்கள் மூலம் கிடைத்ததுடன் 3ஆவது ஓவரிலேயே குசல் மெண்டிஸ் ஒரு ஓட்டத்தைப் பெற்றார்.

ஆனால், 4ஆவது ஓவரில் சிராஜின் பந்துவீச்சில் குசல் மெண்டிஸ் ஒரு ஓட்டத்துடன் போல்ட் ஆனார். (3 - 4 விக்.)

தொடர்ந்து ஜஸ்ப்ரிட் பும்ராவும் மொஹமத் சிராஜும் மிகத் துல்லியமாக பந்துவீசி சரித் அசலன்க, ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகிய இருவருக்கும் நெருக்கடியைக் கொடுத்தனர். பல தடவைகள் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் பந்துகளை கணிக்க முடியாமல் தடுமாறினர்.

10ஆவது ஓவரை வீச அழைக்கப்பட்ட மொஹமத் ஷமி 3ஆவது பந்தில் சரித் அசலன்கவை (01) ஆட்டம் இழக்கச்செய்தார். ஷமி வீசிய பந்தை சரித் அசலன்க விசுக்கி அடிக்க அது ஜடேஜாவின் கைகளில் தஞ்சம் புகுந்தது. (14 - 5 விக்.)

ஷமியின் அடுத்த பந்தில் விக்கெட் காப்பாளர் கே. எல். ராகுலிடம் பிடிகொடுத்த துஷான் ஹேமன்த ஓட்டம் பெறாமல் களம் விட்டு வெளியேறினார். (14 - 6 விக்.)

அவரைத் தொடர்ந்து மொஹமத் ஷமியின் பந்துவீச்சில் ராகுலிடம் பிடிகொடுத்த துஷ்மன்த சமீரவும் ஓட்டம் பெறாமல் வெளியேறினார். (22 - 7 விக்.)

இரண்டு ஓவர்கள் கழித்து மொஹமத் ஷமியினால் மெத்யூஸ் (12) போல்ட் செய்யப்பட்டார். (29 - 8 விக்.)

அதன் பின்னர் 9ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த மஹீஷ் தீக்ஷனவும் கசுன் ராஜித்தவும் துணிச்சலுடன் துடுப்பெடுத்தாடி பகிர்ந்த 20 ஓட்டங்களே இலங்கை இன்னிங்ஸில் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

மொத்த எண்ணிக்கை 49 ஓட்டங்களாக இருந்தபோது ஷமி வீசிய பந்தை அடிக்க முயற்சித்த கசுன் ராஜித்த ஸ்லிப் நிலையில் ஷுப்மான் கில்லிடம் பிடிகொடுத்து 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (49 - 9 விக்.)

கடைசி ஆட்டக்காரர் டில்ஷான் மதுஷன்க, ரவிந்த்ர ஜடேஜாவின் பந்தை சிக்ஸாக்க முயற்சித்து ஷ்ரேயாஸ் ஐயரிடம் பிடிகொடுத்து 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (55 - 10 விக்.)

மஹீஷ் தீக்ஷன 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் மொஹமத் ஷமி 18 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார். இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியிலும் இது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக பதிவானது.

அவருக்கு பக்கபலமாக பந்துவீசிய மொஹமத் சிராஜ் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 357 ஓட்டங்களைக் குவித்தது.

டில்ஸான் மதுஷன்கவின் முதலாவது பந்தில் ரோஹித் ஷர்மா பவுண்டறி அடித்து சிறப்பாக துடுப்பாட்டத்தை ஆரம்பித்தார்.

ஆனால், அடுத்த பந்தில் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை நேரடியாகப் பதம் பார்த்த டில்ஷான் மதுஷன்க உரிய பதிலடி கொடுத்தார். (4 - 1 விக்.)

துஷ்மன்த சமீரவின் 2ஆவது ஓவரில் 5ஆவது பந்தில் ஷுப்மான் கில் கொடுத்த சற்று கடினமான பிடியை உயரே தாவிப் பிடிக்க முயற்சித்த சரித் அசலன்க அதனைத் தவறவிட்டார். 6ஆவது ஓவரின் முதல் பந்தில் தனது சொந்த பந்துவீச்சில் விராத் கோஹ்லி கொடுத்த பிடியை சமீர இடது கையால் பிடிக்க முயற்சித்து தவறவிட்டார்.

இந்த இரண்டு கடினமான பிடிகள் தவறவிடப்பட்டதை நன்கு பயன்படுத்திக்கொண்ட ஷப்மான் கில்லும் விராத் கோஹ்லியும் ஆரம்பத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்து பின்னர் வேகத்தை அதிகரித்தவாறு துடுப்பெடுத்தாடினர்.

எவ்வாறாயினும் 28ஆவது ஓவரிலேயே இந்தியாவின் முதலாவது சிக்ஸ் அடிக்கப்பட்டது. துஷ்மன்த சமீர வீசிய பந்தை ஷுப்மான் கில் சிக்ஸ் ஆக்கினார்.

எனினும் கில் 92 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது டில்ஷான் மதுஷானின் பந்தை இலகுவாக அடிக்க முயற்சித்து குசல் மெண்டிஸிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். (193 - 2 விக்.)

92 பந்துகளை எதிர்கொண்ட கில் 11 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களை அடித்தார்.

ஷுப்மான் கில், விராத் கோஹ்லி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 179 பந்துகளில் 189 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 3 ஓட்டங்கள் மாத்திரம் சேர்ந்தபோது டில்ஷான் மதுஷன்க வீசிய பந்தை கவனக்குறைவாக விராத் கோஹ்லி அடிக்க பெத்தும் நிஸ்ஸன்க மிகவும் அருமையாக முன்னாள் தாவி பிடி எடுத்து விராத் கோஹ்லியை ஆட்டம் இழக்கச் செய்தார்.

94 பந்துகளை எதிர்கொண்ட விராத் கோஹ்லி 11 பவுண்டறிகளுடன் 88 ஓட்டங்களைப் பெற்றார்.

விராத் கோஹ்லியின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் இந்த உலகக் கிண்ணத்தில் தனது விக்கெட்களின் எண்ணிக்கையை டில்ஷான் மதுஷன்க 16 விக்கெட்களாக உயர்த்திக்கொண்டார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயரும் கே. எல். ராகுலும் துடுப்பாட்டத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி ஓட்ட வேகத்தை அதிகரிக்கச் செய்தனர்.

அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 47 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது துஷ்மன்த சமீரவின் பந்துவீச்சில் துஷான் ஹேமன்தவிடம் பிடிகொடுத்த ராகுல் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அடுத்து களம் புகுந்த சூரியகுமார் யாதவ் 12 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது டில்ஷான் மதுஷன்கவின் பந்துவீச்சில் குசல் மெண்டிஸிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். 276 - 5 விக்.)

இந் நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரும் ரவிந்தர ஜடேஜாவும் இணைந்து 6ஆவது விக்கெட்டில் 36 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது மதுஷானின் பந்துவீச்சில் தீக்ஷனவிடம் பிடிகொடுத்த ஐயர் ஆட்டம் இழந்தார்.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 56 பந்துகளை எதிர்கொண்டு 6 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 82 ஓட்டங்களைக் குவித்தார்.

மொஹமத் ஷமி 2 ஓட்டங்களுடனும் ரவிந்த்ர ஜடேஜா 35 ஓட்டங்களுடனும் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார்கள்.

பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 80 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக இது பதிவானது.

ஆட்டநாயகன்: மொஹமத் ஷமி.

https://www.virakesari.lk/article/168372

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, ஈழப்பிரியன் said:

 

இன்று பல நல்ல செய்திகள் வருகின்றன.

இப்படி ஒரு தோல்வியை இந்த நேரத்தில் பார்க்க மிகமிக சந்தோசமாக உள்ளது.

நீங்கள் ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்தீர்களா?

நான் ஓட்டவிபரத்தை இணையத்தில் அவ்வப்போது அவதானித்தேன். ஒரு கட்டத்தில் 20 ஓட்டங்களுக்குள் அணி சுருளப்போகின்றதோ என தோன்றியது. 

இலங்கை அணி மீள்கட்டமைப்புக்கு உள்ளாக வேண்டும். உண்மையான பிரச்சனைகள் உள்ளே வேலை செய்பவர்களுக்கு தெரியலாம். 

அணித்தலைவர் மாற்றப்பட்டார். ஆரம்பத்தில் அவரை தலைவராக போடக்கூடாது என சொல்லப்பட்டது. ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட/விளையாடிய வீரர்கள் நீங்கி புதியவர்கள் வந்தார்கள். மோசமான தோல்விக்கு பல விடயங்களை பட்டியல் இடலாம். 

மத்தியூஸ் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. தொடர்ந்து வரும் போட்டிகளில் ஏதாவது செய்வாரா பார்ப்போம். 

மற்றைய அணிகளில் நீண்டகால அனுபவம் கொண்ட, அதிக ஓட்டங்கள்/விக்கெற்றுக்கள் எடுத்த நான்கு ஐந்து பேராவது உள்ளார்கள். இங்கு அணித்தலைவர் உட்பட பெருன்பான்மையோர் அனுபவம் குறைந்தவர்கள். 

நட்டத்திர வீரர்கள் சங்ககார, மகேல போன்றோர் முதுகில் சவாரி செய்த அணி தூர நோக்கில் புதியவர்களை உருவாக்கவும், தயார்ப்படுத்தவும் தவறிவிட்டது. 

இந்தியாவை எடுத்தால் உலக தரத்தில் விளையாடக்கூடிய மூன்று அணிகளையாவது உருவாக்கக்கூடிய வீரர்கள் உள்ளார்கள். இலங்கை அணியில் இந்த விடயத்தில் வெற்றிடம் உள்ளது. 

Edited by நியாயம்
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, நியாயம் said:

நீங்கள் ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்தீர்களா?

 

https://crichd.tv/sky-sports-cricket-live-streaming-isi

மேலே உள்ள சுட்டியில் இடைக்கிடை பார்ப்பேன்.

7 1/2-8 மணிக்கு நித்திரையால் எழும்ப ஒரு அணி ஆட்டம் முடிக்கும் அளவுக்கு வந்துவிடும்.

இலங்கை அணி அரசியல் சகதிக்குள் சிக்கித் தவிக்கிறது.

தமிழர்களோடு தோற்கக் கூடாது மற்றும்படி எங்கு எப்படி தோற்றாலும் அவர்களுக்கு பரவாயில்லை.

மேலே உள்ள சுட்டி கவனமாகக் கையாளாவிட்டால் கணணிக்கு ஆபத்து வரலாம்.

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஷமியின் பந்துவீச்சு பற்றி பாகிஸ்தான் வீரர்கள் கூறியது என்ன?

ஷமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அபிஜித் ஸ்ரீவஸ்தவா
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தொடக்க ஆட்டங்களில் அணியில் சேர்க்கப்படாத வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இப்போது இந்தியாவின் தவிர்க்க முடியாத வீரராகி விட்டார்.

அவரது பந்துவீச்சு இந்திய அணியின் முக்கியமான வெற்றிகளுக்கு உதவியதுடன், வலிமையான வேகப்பந்து வீச்சு அணியைக் கட்டமைக்கவும் உதவியிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் அதிகமாக விவாதிக்கப்படும் ஷமி, பாகிஸ்தானிலும் பாராட்டுப் பெறுகிறார். பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள், அவரைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்திருக்கின்றனர்.

இந்திய அணியின் திறமையான பந்துவீச்சாளர்கள் குறித்து நன்கு அறிந்திருந்த கிறிஸ் சில்வர்வுட், “உண்மையாக சொல்ல வேண்டுமானால், உலகின் எந்தவொரு அணியும் இப்படியொரு அதிரடி பந்துவீச்சு வேண்டும் என விரும்புவார்கள்” என்று அவர்களை பாராட்டினார்.

   

சில நாட்களுக்கு முன்பு, வங்கதேசத்தின் தலைமை பயிற்றுநர், சந்திகா ஹதுருசிங்கேவும், “இந்திய அணி விளையாடுவதை பார்த்தால் அச்சமாக உள்ளது” என்று கூறியிருந்தார்.

இது போன்ற வார்த்தைகளால் இந்திய அணியை பாராட்டி பேசுவது கிரிக்கெட் வரலாற்றில் அரிதான ஒன்றே.

ஆம். 1970, 1980 களில் மேற்கு இந்திய தீவுகள் அணியும் பல்வேறு காலக் கட்டங்களில் ஆஸ்திரேலிய அணியும், இந்தியா தற்போது உலகக் கோப்பை போட்டியில் ஆடுவது போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

பாகிஸ்தானிலும் பேசப்படும் இந்தியாவின் வெற்றி

இந்தியாவின் அபாரமான இந்த ஆட்டம் குறித்து பாகிஸ்தானின் முன்னாள் பந்துவீச்சாளார் ஷோயப் அக்தர், “இந்தியா தற்போது வெறித்தனமாக ஆடும் அணியாக மாறியுள்ளது. உங்கள் பந்துவீச்சாளர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். ஏனென்றால், வான்கடே அரங்கில் ஒவ்வொரு பந்துக்கு அரங்கம் அதிர கரகோஷம் எழுப்பப்பட்டது. ஒவ்வொரு இந்தியனும் சந்தோஷமாக இருந்தார். நானும் மகிழ்ச்சிக் கொண்டேன், ஷமி நல்ல ஃபார்மில் வந்துவிட்டார் என்பதற்காக. மூன்று போட்டிகளில் பல விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பதினான்கு உலகக் கோப்பை போட்டிகளில் 45 விக்கெட்டுகளை அவர் எடுத்துள்ளார். சிராஜ் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் துவம்சம் செய்கிறார்” என்றார்.

பும்ரா குறித்து ஷோயப் அக்தர், “பும்ரா மிகவும் கொடியவர். பும்ரா தான் ஷமி மற்றும் சிராஜ் சிறப்பாக விளையாடுவதற்கான இடத்தை தந்துள்ளார். பும்ராவின் திறன்கள் ஆச்சர்யப்படும் படி உள்ளன” என்றார்.

அதே போன்று வாசிம் அக்ரம், “ஷமி 45 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அவர் ஆட்டத்தில் நுழைந்த உடனேயே சீம் பவுலிங் செய்ய தொடங்கி விடுகிறார். பந்தை உள்ளேயும் வெளியேயும் வேகமாக சுழற்றுவதில் கைதேர்ந்துள்ளார். அவரது பந்துவீச்சு பும்ராவின் பந்துவீச்சிலிருந்து வித்தியாசமானது. அவரது பந்துகளில் பேட்ஸ்மென்கள் அதிர்ந்து போய்விடுகின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.

 
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டம்

பட மூலாதாரம்,TWITTER/SHOAIB AKHTAR

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்ஸன், “இந்திய அணியை பார்க்கும் போது, 2003, 2007 உலகக் கோப்பை போட்டிகளில் ஆடிய ஆஸ்திரேலிய அணியை நினைவுப்படுத்துகிறது” என்று இந்தப் போட்டி தொடங்கும் முன் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய அணி இந்த தொடரில் தொடர்ந்து ஏழு வெற்றிகளை கண்டுள்ளது. உலகின் சிறந்த பினிஷர் விராட் கோலி, ஸ்டிரைக் பந்துவீச்சாளர்கள் மற்றும் பல ரன்களை குவித்த ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், ராகுல் போன்ற அதிரடி பேட்ஸ்மென்களை கொண்டுள்ளது.

இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், அனைத்து டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களும் அசத்தலான ஃபார்மில் உள்ளனர். காயம் ஏற்பட்டு திரும்பிய பும்ராவும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

இரு திசைகளிலும் பந்தை சுழற்றுவதில் கைதேர்ந்தவர் அவர். உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் அணிகளிலும் இவரை போல், தொடர்ந்து யார்க்கர் வீச யாராலும் முடியாது. எதிரணியில் இருப்பவர்கள் சராசரியாக இவரது பந்துகளில் நான்கு ரன்களுக்கும் குறைவாகவே எடுக்க முடிகிறது. இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் அதிக விக்கெட்டுகள் எடுத்ததும் இவர் தான்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா vs இலங்கை: போட்டியில் என்ன நடந்தது?

  • இந்தியா முதலில் பேட்டிங் செய்து 357 ரன்கள் குவித்தது.
  • விராட் கோலி (88 ரன்கள்), சுப்மன் கில் (92 ரன்கள்) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் (88 ரன்கள்) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
  • பும்ரா முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார்.
  • சிராஜ் ஏழு பந்துகளில் எந்த ரன்களும் கொடுக்காமல் மூன்று விக்கெட் எடுத்தார்.
  • ஷமி ஐந்து பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார்.
  • ஐந்து இலங்கை பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனார்கள்.
  • இலங்கை அணி 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
  • இந்தியா இலங்கையை 302 ரன்களுக்கு தோற்கடித்தது.
  • உலகக் கோப்பை 2023 இல் இந்தியாவின் தொடர்ச்சியான ஏழாவது வெற்றி.
 
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஷமி பற்றி பேசினால், இந்த உலகக் கோப்பையில் அவர் ஆடும் விதத்தில் வேறு எந்த இந்திய பந்துவீச்சாளரும் ஆடியிருக்க மாட்டார்கள்.

வெறும் மூன்று போட்டிகளில் 5, 4 மற்றும் 5 விக்கெட்டுகளை அதாவது மூன்று போட்டிகளில் மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் உலகக் கோப்பையில் விளையாடும் அனைத்து அணிகளிடையேயும் அதிகம் பேசப்படுகிறார்.

இந்த உலகக் கோப்பையின் முதல் நான்கு போட்டிகளில் வாய்ப்புக்காக காத்திருந்த அதே வீச்சாளர் தான் இவர். ஷமி ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கான சாதனையையும் படைத்தார்.

வெறும் 11 நாட்களுக்கு முன்பு இந்திய அணியில் அவர் இடம் பெற கூடவில்லை. இன்று அவர் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் நான்காவது இடத்திற்கு வந்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா காயமடைந்திருந்தால் வாய்ப்பு கிடைத்ததும், இனி அவர் அணியில் இருந்து நீக்க முடியாது என்பதைக் உணர்த்தியிருக்கிறார்.

சரித்திரம் படைத்த முகமது ஷமி

 
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் போட்டியிலேயே நியூசிலாந்து போன்ற வலுவான அணிக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியின் நான்கு பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார். இப்போது மீண்டும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஜஸ்பிரித் பும்ரா 15 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஜம்பா, ஜான்சன் மற்றும் ஆப்ரிடி ஆகியோர் தலா 16 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். தற்போது, இலங்கை வீரர் தில்ஷன் மதுஷங்கே இந்தப் பட்டியலில் 17 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஷமி, உலகக் கோப்பையில் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளராகவும் ஆகியுள்ளார். ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் வசம் இருந்த 44 விக்கெட்டுகளின் சாதனையை முறியடித்துள்ளார். ஷமி இதுவரை 14 உலகக் கோப்பை போட்டிகளில் 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

போட்டிக்குப் பிறகு ஷமி கூறுகையில், "எங்களின் கடின உழைப்பினாலும், நாங்கள் செல்லும் வேகத்தினாலும், நீங்கள் ஒரு புயலை காண்கிறீர்கள். நாங்கள் அனைவரும் பந்து வீசும் வேகத்தைப் பார்க்கும்போது, யாரும் அதை அனுபவிக்கக்கூடாது என்று தோன்றுகிறது. நாங்கள் ஒரே அணியாக இணைந்து பந்து வீசுகிறோம். அதன் விளைவுகளை நீங்கள் காண்கிறீர்கள்." என்றார்.

தனது பந்துவீச்சு பற்றி ஷமி கூறுகையில், "நான் என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறேன். நான் நல்ல வேகத்தில் இருக்க முயற்சிக்கிறேன். பெரிய தொடரில் வேகம் குறைந்தால், அதை மீண்டும் பெறுவது கடினம்."

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

கேப்டன் ரோஹித் என்ன சொன்னார்?

'ஆட்ட நாயகன்' முகமது ஷமி ஆக இருக்கலாம். ஆனால் போட்டிக்குப் பிறகு, முகமது சிராஜுக்கே கேப்டனிடமிருந்து அதிக பாராட்டுகள் கிடைத்தன.

தனது அணியின் பந்துவீச்சாளர்களின் அற்புதமான ஆட்டம் குறித்து பேச ரோஹித்துக்கு வார்த்தைகள் இல்லை. "பந்துவீச்சாளர்கள் பற்றி என்ன சொல்ல முடியும்" என்று மகிழ்ச்சியுடன் அவர் கூறினார்.

பின்னர் அவர், "சிராஜ் ஒரு சிறந்த பந்துவீச்சாளர். அவர் தனது வேலையைச் செய்யும்போது, அதன் பிறகு எங்களுக்கு மிகவும் எளிதாகிவிடுகிறது" என்று கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

சிராஜ் Vs இலங்கை

சிராஜைப் பொறுத்தவரை, அவரது பந்துவீச்சை பார்க்கும்போது இலங்கை அவருக்கு மிகவும் பிடித்தமான அணியாக மாறி வருகிறது என்று சொல்வது தவறில்லை.

ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான், தனது புல்லர், லெங்த் மற்றும் ஆங்கில்ட் பந்துகளுடன் தனது சிறந்த திறமைகளை அவர் காட்டியிருந்தார். அதன் மூலம் ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையை சுருண்டு விழ செய்திருந்தார்.

அவரது மொத்த விக்கெட்டுகளில் 19 விக்கெட்டுகள், அதாவது சுமார் 30 சதவீதம் விக்கெட்டுகள் இலங்கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளாகும்.

அவர் தனது சிறந்த ஃபார்மில் இருக்கும்போது, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அவர் ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கிறார். இந்தப் போட்டியிலும், சிராஜ் வெறும் 7 பந்துகளில் மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார்.

சிராஜ் இதுவரை 37 ஒருநாள் போட்டிகளில் 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவற்றில், அவர் தொடக்க வீரர்கள் மற்றும் மூன்றாவது பேட்ஸ்மேன்களை 36 முறை (57%) வெளியேற்றியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

ஸ்ரேயாஸ் ஐயரும் பங்களித்தார்

இந்திய அணி இந்தப் போட்டியில் 357 ரன்கள் எடுத்தபோது, விராட் கோலி, சுப்மன் கில் தவிர, ஸ்ரேயாஸ் ஐயரும் நன்றாக விளையாடினார்.

தனது சொந்த மைதானத்தில் விளையாடிய ஸ்ரேயாஸ், 56 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் அடித்தார்.

அவரது பேட்டிங்கைப் பார்க்கும்போது, கடந்த 6 போட்டிகளில் அவர் வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்ததாக ஒரு கணமும் தோன்றவில்லை.

போட்டிக்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மாவும் அவரைப் பாராட்டி, "ஸ்ரேயாஸ் மனரீதியாக மிகவும் வலுவானவர். இன்று அவர் எதிரணிக்கு தான் என்ன செய்ய முடியும் என்பதை நிரூபித்தார்" என்றார்.

அரையிறுதியை எட்டியதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரோஹித், "இதுதான் முதல் இலக்கு" என்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

இந்திய அணி ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்த போட்டி தென்னாப்பிரிக்காவுடன் உள்ளது. இதுவும் இந்த தொடரில் முதல் இடத்தைப் பிடிப்பதற்கான ஒரு முக்கியமான போட்டியாகும்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஷோயப் அக்தர், "இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யுமா அல்லது முதலில் பந்துவீசுமா என்பது முக்கியமே அல்ல. இப்போது இயற்கை மட்டுமே அவர்களை தோற்கடிக்க முடியும், வேறு யாரும் இல்லை. இப்போது ஒரு அணி மட்டுமே எஞ்சியுள்ளது, தென்னாப்பிரிக்கா. தென்னாப்பிரிக்காவையும் தோற்கடித்தால், உலகக் கோப்பை அன்றே முடிந்துவிட வேண்டும். இந்தியாவைப் பார்க்கும்போது, உலகக் கோப்பை நடப்பதாகவே தெரியவில்லை. ஏனென்றால், விளையாடுவது அவர்கள் மட்டுமே." என்று புகழ்ந்து பேசினார்.

https://www.bbc.com/tamil/articles/cz487z1qv1do

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுழலில் சிக்க வைத்த ஆப்கானிஸ்தான் வீரர்கள்: முதல் இன்னிங்ஸில் சிதைந்த நெதர்லாந்து

ஆப்கானிஸ்தான் vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

28 நிமிடங்களுக்கு முன்னர்

லக்னௌவில் நடந்து வரும் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் அணியின் முதல்தரமான சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், நெதர்லாந்து அணி 174 ரன்களில் ஆட்டமிழந்தது.

முஜிபுர் ரஹ்மான், முகமது நபி, ரஷித் கான், நூர் அகமது ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்களின் 4 முனைத் தாக்குதலை நெதர்லாந்து அணி தாங்க முடியாமல் நொந்துபோனது.

முதல்முறை

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் ஒரு அணியின் முதல் நான்கு பேட்டர்கள் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தது இதுவே முதல்முறை.

ஆப்கானிஸ்தான் அணியில் முகமது நபி, நூர் அகமது தலா 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினாலும், நெதர்லாந்தின் 4 விக்கெட்டுகள் ரன்-அவுட் மூலமே வீழ்த்தப்பட்டன.

நெதர்லாந்து அணியில் சைபிரன்ட்(58), மேக்ஸ்(42) ஆகியோர் சேர்த்த ஸ்கோர்தான் அதிகபட்சம். மற்ற பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 73 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த நெதர்லாந்து அணி, அடுத்த 106 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளையும் இழந்தது.

 

ஆப்கனுக்கு அருமையான வாய்ப்பு

ஆப்கானிஸ்தான் vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆப்கானிஸ்தான் அணியின் டாப்கிளாஸ் சுழற்பந்துவீச்சை சமாளித்து நெதர்லாந்து பேட்டர்களால் பேட் செய்ய முடியவில்லை. அது மட்டுமல்லாமல் விக்கெட்டுகளுக்கு இடையே ரன் எடுப்பதிலும் போதுமான புரிதல் இல்லாமல் ஓடியதால், தேவையற்று 4 ரன்அவுட்கள் செய்யப்பட்டன.

இந்த ஆடுகளத்தில் 200 ரன்களுக்கு மேல் சேர்த்திருந்தால் ஓரளவுக்கு ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கடி அளித்திருக்கலாம்.

விரைவாக 179 ரன்களை சேஸ் செய்து, 2 புள்ளிகளையும், நிகர ரன்ரேட்டையும் உயர்த்திக்கொள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு சரியான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஆடுகளம் எப்படி

டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ஆடுகளம் ஓரளவு பேட்டர்களுக்கு சாதகமானது என்பதால், நல்ல ஸ்கோரை முதலில் பேட் செய்யும் அணி அதிக ரன்களை சேர்த்தால், பந்துவீச்சு மூலம் டெபென்ட் செய்யலாம்.

இரவுநேரப் பனிப் பொழிவால் பந்துவீச்சு கடினமாகும் என்பதால், 250 ரன்களுக்கு மேல் சேர்த்தாலே சேஸிங் செய்வது கடினம் என்று கணிக்கப்பட்டது.

நான்கு ரன்-அவுட்கள்

நெதர்லாந்து பேட்டர்கள் வெஸ்லே, மேக்ஸ், ஆட்டத்தைத் தொடங்கினர். முஜிபுர் ரஹ்மான் வீசிய முதல் ஓவரின் கடைசிப் பந்தில் கால்காப்பில் வாங்கி வெஸ்லே ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டிகளில் முஜிபுர் ரஹ்மான் தனது 100வது விக்கெட்டை இதன்மூலம் வீழ்த்தினார்.

 
ஆப்கானிஸ்தான் vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரண்டாவது விக்கெட்டுக்கு வந்த ஆக்கர்மேன், மேக்ஸுடன் சேர்ந்து ரன்களை சேர்த்தார். இருவரும் பந்துகளை வீணடிக்காமல் ரன்களை சேர்த்தடடால், பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு நெதர்லாந்து 60 ரன்களை சேர்த்தது.

பன்னிரண்டாவது ஓவரில் மேக்ஸ் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்-அவுட் ஆனார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 72 ரன்கள் சேர்த்தனர். அடுத்த சில ஓவர்களில் ஆக்கர் மேன் 29 ரன்களில் விக்கெட் கீப்பர் இக்ரம் அலியால் ரன்-அவுட் செய்யப்பட்டார். அடுத்து வந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸும் ரன்-அவுட் முறையில் டக்-அவுட்டாகி வெளியேறினார்.

ஐந்தாவது விக்கெட்டுக்கு வந்த பாஸ்டே லீட் 3 ரன்னில் முகமது நபி பந்துவீச்சிலும், அடுத்து களமிறங்கிய ஜுல்பிகர் 3 ரன்னில் நூர் அகமது பந்துவீச்சிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

நெதர்லாந்து அணி 73 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. ஆனால், அதற்கு அடுத்த 40 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 92 ரன்களில் இருந்தபோது அடுத்த 5 ரன்களை சேர்ப்பதற்கு உள்ளாகவே 3 விக்கெட்டுகளை நெதர்லாந்து அணி இழந்தது.

 
ஆப்கானிஸ்தான் vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இருபது ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் சேர்த்த நெதர்லாந்து அணி, 30 ஓவர்கள் முடிவில், கூடுதலாக 33 ரன்கள் சேர்த்து மேலும் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

லோகன் வேன் பீக் 31வது ஓவரில், 2 ரன்கள் சேர்த்த நிலையில், முகமது நபி பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். இதனால் 134 ரன்களுக்கு 7வது விக்கெட்டை நெதர்லாந்து இழந்தது.

விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும், நிதானமாக பேட் செய்த சைபேண்ட் எஞ்சல்பிரெச்ட் அரை சதம் அடித்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கடைசி வரிசை பேட்டர்களான வென் டெர் மெர்வ் 11 ரன்களில் நூர் அகமது பந்துவீச்சிலும், மீக்ரன் 4 ரன்னில் முகமது நபி பந்துவீச்சிலும் விக்கெட்டை இழந்தனர்.

46.3 ஓவர்களில் நெதர்லாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 3 விக்கெட்டுகளையும், நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். 134 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நெதர்லாந்து, அடுத்த 35 ரன்களுக்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

https://www.bbc.com/tamil/articles/cgepjjpn8lzo

Posted

ஆப்கன் அணியின் இரண்டாவது விக்கெட்டும் போய் விட்டது.🥲

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, நிழலி said:

ஆப்கன் அணியின் இரண்டாவது விக்கெட்டும் போய் விட்டது.🥲

வழமையில் கிரிக்கட் திரி பக்கமே எட்டிப் பார்க்காத நிழலி இந்த போட்டிகளை உன்னிப்பாக கவனிப்பதும் கருத்தெழுதுவதும் சந்தோசமாக உள்ளது.

ஒருவேளை @கிருபன் போட்டியை வைத்திருந்தால் போட்டியில் கலந்து கொண்டிருப்பார் என எண்ணுகிறேன்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஈழப்பிரியன் said:

வழமையில் கிரிக்கட் திரி பக்கமே எட்டிப் பார்க்காத நிழலி இந்த போட்டிகளை உன்னிப்பாக கவனிப்பதும் கருத்தெழுதுவதும் சந்தோசமாக உள்ளது.

ஒருவேளை @கிருபன் போட்டியை வைத்திருந்தால் போட்டியில் கலந்து கொண்டிருப்பார் என எண்ணுகிறேன்.

2003உல‌க‌ கோப்பையில் கென்னியா அணி
சிம்மி பின‌லுக்கு வ‌ந்து இந்தியாவுட‌ன் தோத்து வெளி ஏறின‌வை இப்ப‌ கென்னியா அணி எங்கை என்று யாருக்கும் தெரியாது...........ப‌ல‌மா இருந்த‌ அணி கிரிக்கேட்டில் இருந்து அடி ம‌ட்ட‌த்துக்கு போய் மீண்டு வ‌ர‌ முடியாம‌ சின்ன‌ சின்ன‌ அணிக‌ளுட‌ன் விளையாடியும் புள்ளி ப‌ட்டியலில் மேல‌ வ‌ர‌ முடிய‌ல‌ 
 

உந்த‌ நிழ‌லிய‌ர் எங்க‌ளை விட‌ கிரிக்கேட் பையித்திய‌ம் பிடிச்ச‌வ‌ர் போல் தெரிகிற‌து
இவ‌ர் கள‌த்தில‌ குதிச்சா புள்ளி ப‌ட்டிய‌லில் நாங்க‌ள் கீழ‌ நின்று முக்க‌ ச‌ரி லொல் 

ந‌ல்ல‌ வேலை இந்த‌ முறை யாழ்க‌ள‌த்தில் போட்டி ந‌ட‌க்க‌ல‌ ந‌ட‌ந்து இருந்தா ஒரு த‌ரும் 50புள்ளிய‌ தாண்டி இருக்க‌ மாட்டின‌ம்😁🖐

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

 

ந‌ல்ல‌ வேலை இந்த‌ முறை யாழ்க‌ள‌த்தில் போட்டி ந‌ட‌க்க‌ல‌ ந‌ட‌ந்து இருந்தா ஒரு த‌ரும் 50புள்ளிய‌ தாண்டி இருக்க‌ மாட்டின‌ம்😁🖐

நானும் இதை நினைத்தேன் பையா.

யாருமே எதிர்பார்க்காத முடிவுகள்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

உந்த‌ நிழ‌லிய‌ர் எங்க‌ளை விட‌ கிரிக்கேட் பையித்திய‌ம் பிடிச்ச‌வ‌ர் போல் தெரிகிற‌து
இவ‌ர் கள‌த்தில‌ குதிச்சா புள்ளி ப‌ட்டிய‌லில் நாங்க‌ள் கீழ‌ நின்று முக்க‌ ச‌ரி லொல் 

ந‌ல்ல‌ வேலை இந்த‌ முறை யாழ்க‌ள‌த்தில் போட்டி ந‌ட‌க்க‌ல‌ ந‌ட‌ந்து இருந்தா ஒரு த‌ரும் 50புள்ளிய‌ தாண்டி இருக்க‌ மாட்டின‌ம்😁🖐

பையன் இந்த முறை உசார் கொடுக்காத காரணத்தால் கிருபனும் ஓய்வு எடுத்து விட்டார். அவரும் பாவம்தானே அடுத்தடுத்து போட்டிகள் வைச்சா எல்லாத்துக்கும் சநரம் இருக வேணடுமே. போடி;டி நடத்துறவங்களுக்கு பணம் கிடைக்கும். ஆனால் கிருபனுக்கு என்ன கிடைக்கும?.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஈழப்பிரியன் said:

ஒருவேளை @கிருபன் போட்டியை வைத்திருந்தால் போட்டியில் கலந்து கொண்டிருப்பார் என எண்ணுகிறேன்.

இந்தப் போட்டியில் இந்தியாதானே வெல்லும் (அவுஸ்திரேலியா நித்திரை கொள்ளாவிட்டால்!). அதுதான் போட்டி வைக்க மினக்கெடவில்லை!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, புலவர் said:

பையன் இந்த முறை உசார் கொடுக்காத காரணத்தால் கிருபனும் ஓய்வு எடுத்து விட்டார். அவரும் பாவம்தானே அடுத்தடுத்து போட்டிகள் வைச்சா எல்லாத்துக்கும் சநரம் இருக வேணடுமே. போடி;டி நடத்துறவங்களுக்கு பணம் கிடைக்கும். ஆனால் கிருபனுக்கு என்ன கிடைக்கும?.

இந்த முறை எனக்கு நேரம் இல்லை. இத்தாலியில் 4 நகரங்களுக்கு விடுமுறைப் பயணம்! இன்னமும் முடியவில்லை!

ஒரு மட்ச் மட்டும் பார்த்தேன். மற்றவை எல்லாம் தனியே ஸ்கோர் மட்டும்தான்!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, கிருபன் said:

இந்த முறை எனக்கு நேரம் இல்லை. இத்தாலியில் 4 நகரங்களுக்கு விடுமுறைப் பயணம்! இன்னமும் முடியவில்லை!

ஒரு மட்ச் மட்டும் பார்த்தேன். மற்றவை எல்லாம் தனியே ஸ்கோர் மட்டும்தான்!

ச‌ரி உங்களின் விடுமுறைய‌ ச‌ந்திஷ‌மாக‌ க‌ழியுங்கோ

9 minutes ago, கிருபன் said:

இந்தப் போட்டியில் இந்தியாதானே வெல்லும் (அவுஸ்திரேலியா நித்திரை கொள்ளாவிட்டால்!). அதுதான் போட்டி வைக்க மினக்கெடவில்லை!

கோப்பைய‌ இந்தியா தான் தூக்கும் 12 வ‌ருட‌மாய் கோப்பை தூக்காத‌ சோக‌ம் அத‌ற்கு இந்த‌ முறை கோப்பை 12 ஆண்டுக‌ள் க‌ழித்து இந்திய‌ர்க‌ளின் கையில் கோப்பை 
அவ‌ங்க‌ள் எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு வெறித்த‌ன‌மாய் விளையாடுகிறாங்க‌ள் 

1 hour ago, ஈழப்பிரியன் said:

நானும் இதை நினைத்தேன் பையா.

யாருமே எதிர்பார்க்காத முடிவுகள்.

யாழ்க‌ள‌த்தில் எல்லா போட்டிக‌ளை விட‌ 50ஓவ‌ர் போட்டிக்கு தான் விறுவிறுப்பு அதிக‌ம் 4வ‌ருட‌த்துக்கு ஒருக்கா ந‌ட‌ப்பதால் யாழ் உற‌வுக‌ள் ம‌த்தியில் 2006க‌ளில் இருந்து 2019 உல‌க‌ கோப்பை போட்டி நீங்க‌ள் ந‌ட‌த்தின‌தில் இருந்து ந‌ல்ல‌ மாதிரி ப‌ம்ப‌லுட‌ன் கூடிய‌ போட்டி ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா..........

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, புலவர் said:

பையன் இந்த முறை உசார் கொடுக்காத காரணத்தால் கிருபனும் ஓய்வு எடுத்து விட்டார். அவரும் பாவம்தானே அடுத்தடுத்து போட்டிகள் வைச்சா எல்லாத்துக்கும் சநரம் இருக வேணடுமே. போடி;டி நடத்துறவங்களுக்கு பணம் கிடைக்கும். ஆனால் கிருபனுக்கு என்ன கிடைக்கும?.

பெரிய‌ப்பாக்கு ஓய்வு கொடுப்ப‌து ந‌ல்ல‌ம்

அவ‌ர் கூக்கில போட்டி ப‌திவுக‌ள் செய்து வைப்ப‌தால் கூடுத‌ல் நேர‌ம் எடுக்காது என்று நினைக்கிறேன்

 

பெரிய‌ப்ப‌ர் ந‌ட‌த்தின‌ அனைத்து போட்டியும் சிற‌ப்பு புல‌வ‌ர் அண்ணா

 

இந்த முறை போட்டி ந‌ட‌த்தி இருந்தா தொட‌ர்ந்து முட்டைய‌ தான் யாழில் பார்க்க‌ வேண்டி வ‌ந்து இருக்கும்😁..................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

இந்த முறை எனக்கு நேரம் இல்லை

அட ஒரு சொல்லு சொல்லியிருக்கலாமே.

2 hours ago, கிருபன் said:

இந்தப் போட்டியில் இந்தியாதானே வெல்லும் (அவுஸ்திரேலியா நித்திரை கொள்ளாவிட்டால்!). அதுதான் போட்டி வைக்க மினக்கெடவில்லை!

No No No

தம்பி தென்னாபிரிக்கா கப் தூக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாகிஸ்தானை முந்திய ஆப்கானிஸ்தான்: நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு புதிய சவால்

உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 நவம்பர் 2023

ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து 3வது முறையாக சேஸிங் செய்து வென்று, புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சவாலாக மாறியுள்ளது.

லக்னௌவில் இன்று நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆப்கானிஸ்தான் அணி. முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் 179 ரன்கள் சேர்த்தது.

ஆப்கானிஸ்தான் அணி 180 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது. 31.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம், ஆப்கானிஸ்தான் அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆனால், நிகர ரன்ரேட் மட்டும் தொடர்ந்து மைனஸில்(-330) இருக்கிறது. இந்த ஆட்டத்தில் குறைந்த ஓவர்களில் சேஸிங் செய்திருந்தால், ஒருவேளை நிகர ரன்ரேட் நேர்மறையாக எழுந்திருக்கும்.

 

ஐந்தாவது இடத்தில் இருந்த பாகிஸ்தானை, இந்த வெற்றியின் மூலம், 6வது இடத்துக்கு துரத்தியுள்ளது ஆப்கானிஸ்தான். அடுத்து வரும் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான இரு போட்டிகளும் ஆப்கானிஸ்தானுக்கு சவால் நிறைந்தவை. இந்த ஆட்டங்களில் ஒன்றில் வென்றாலும் பிற அணிகளின் வெற்றி, தோல்வி அடிப்படையில் அரையிறுதிக்குக் கூட ஆப்கன் தகுதி பெற முடியும்.

 

கடைசி இடத்திற்கு நிலவும் கடுமையான போட்டி

உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

நெதர்லாந்து அணி, 7 போட்டிகளில் 2 வெற்றிகள், 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் நீடிக்கிறது. நெதர்லாந்தின் அரையிறுதிக் கனவு கலைந்துவிட்டதால், அடுத்து வரும் 2 ஆட்டங்களும் முறைக்காகவே இருக்கும்.

பாகிஸ்தான் அணி தற்போது 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது. இன்னும் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டங்கள் மட்டும் பாகிஸ்தானுக்கு உள்ளன. இதில் இரண்டிலும் பாகிஸ்தான் வென்றால்தான் அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இதில் ஏதாவது ஒன்றில் தோற்றாலும், பாகிஸ்தானின் நிலைமை பரிதாபம்தான்.

அதேநேரம், நியூசிலாந்து அணியும் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் வென்றால் 12 புள்ளிகளுடன் பாதுகாப்பாக அரையிறுதிக்குச் செல்லும். இல்லாவிட்டால், மற்ற அணிகளின் முடிவுகளுக்காகக் காத்திருக்க நேரும், இழுபறியில் முடியும்.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை அடுத்து வரும் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளை வென்றாலே 12 புள்ளிகளுடன் அரையிறுதி சென்றுவிடும். ஆனால், இப்போது கடைசி இடத்துக்காகத்தான் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

 

தொடரும் ஆப்கானிஸ்தானின் சேஸிங் வெற்றி

உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆப்கானிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சேஸிங் செய்து வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளை சேஸிங் செய்து ஆப்கானிஸ்தான் வென்று பேட்டிங் வலிமையை வெளிப்படுத்தியுள்ளது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றியபோதும், அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரஹ்மத் ஷா(52), கேப்டன் ஷாகிதி(56நாட்-அவுட்), ஓமர்ஜாய்(31) ஆகியோர் சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

நெதர்லாந்து அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்த சுழற்பந்துவீச்சாளர் முகமது நபிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஏற்கெனவே பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக ரஹ்மத் ஷா,ஷாகிதி இருவரும் அருமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி சேஸிங்கில் வெற்றி கண்டனர். இப்போது 3வது போட்டியிலும் அசத்தியுள்ளனர். மூன்றாவது விக்கெட்டுக்கு ரஹ்மத் ஷா, ஷாகிதி கூட்டணி 74 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டனர். இந்தத் தொடரில் ரஹ்மத் ஷா 3வது முறையாக அரைசதம் அடித்துள்ளார்.

 

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக மாறும் ஆப்கன் வீரர்கள்

உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் ஆகியவை இந்த உலகக்கோப்பைத் தொடரில் மாறுபட்ட கோணத்துடன் இருக்கிறது. அதிலும் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜெய் ஜடேஜா வந்த பிறகு ஆப்கானிஸ்தான் அணி ஒவ்வொரு போட்டிக்கும் வெற்றிக்கு கடைசி பந்துவரை முயல்வதை நிறுத்தவில்லை. அந்தப் போராட்டம்தான் சேஸிங்கிலும் சாதிக்க முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக 280 ரன்களுக்கு மேல் சென்னை ஆடுகளத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர். இலங்கைக்கு எதிராக சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சை எதிர்கொண்டு நிதானமாக, ஒரு போட்டிக்கான தாத்பரியத்தோடு ஆடி வெற்றி பெற்றனர்.

மோசமான பந்துகளில் மட்டும் பவுண்டரி அடித்து, ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ஒரு ரன், 2 ரன்களாக சேர்த்து வெற்றியை ஒவ்வொரு படிக்கட்டாக நெருங்கி, எதிரணிக்கு நெருக்கடி அளித்து வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் அணியின் விஸ்வரூப வளர்ச்சி, போராட்டம், விடாமுயற்சி ஆகியவை அடுத்து வரும் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் நிச்சயம் சவாலாக மாறும். ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக எடுக்க மாட்டார்கள்.

ஆப்கானிஸ்தான் அணியில் உள்ள உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்களான முகமது நபி, முஜிபுர் ரஹ்மான், நூர் அகமது, ரஷித் கான் ஆகியோரின் பந்துவீச்சு, நிச்சயம் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு நெருக்கடியாக அமையும். ஏற்கெனவே தென் ஆப்ரிக்கா அணி, நெதர்லாந்திடம் தோற்று கையைச் சுட்டுக்கொண்டதால், ஆப்கனை எளிதாக எடுக்கமாட்டார்கள்.

 

ஆப்கன் அணிக்கு சிக்கலாக மாறிய ரன்ரேட்

உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆப்கன் கேப்டன் ஷாகிதி கூறுகையில், “நாங்கள் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாகவே செயல்பட்டோம். மூன்றாவது முறையாக சேஸிங்கில் இலக்கை வெற்றிகரமாக அடைந்திருக்கிறோம். எந்த அணியுடன் மோதுகிறோம் என்பதைப் பார்த்து அதற்கு ஏற்றாற்போல் தயாராகிறோம், இலக்கை அடைகிறோம்.

முகமது நபி சிறப்பான வீரர், அவரின் திறமையை வெளிப்படுத்திவிட்டார். நாங்கள் இந்த உலகக்கோப்பையில் ஒருங்கிணைந்து இருக்கிறோம். ஒவ்வொரு வெற்றியையும் கொண்டாடுகிறோம், வெற்றியைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம்.

அரையிறுதிக்குச் செல்ல எங்களால் முடிந்த அளவு முயல்வோம். அவ்வாறு நடந்தால் எங்கள் தேசத்துக்கு அது மிகப்பெரிய சாதனையாக அமையும். என்னுடைய தாய் 3 மாதங்களுக்கு முன் காலமாகிவிட்டார், நாங்கள் அரையிறுதி சென்றால் அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமையும்,” எனத் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 180 ரன்களை சேஸிங் செய்யப் புறப்பட்டாலும், 10 ஓவர்களில் ஜாத்ரன்(20), குர்பாஸ்(10) இருவரின் விக்கெட்டுகளையும் விரைவாக இழந்தது. ஆனால், 3வது விக்கெட்டுக்கு ரஹ்மத் ஷா, கேப்டன் ஷாகிதி கூட்டணி நங்கூரமிட்டது. இருவரும் நிலைத்து ஆடி அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றனர். 19 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது ஆப்கானிஸ்தான்.

ஆனால் அடுத்த 50 ரன்களை எட்டுவதற்கு 9 ஓவர்களை எடுத்துக்கொண்டதால் ரன்ரேட் திடீரென மந்தமாகியது. ரன்ரேட்டை 6 என்ற ரீதியில் கொண்டு சென்றிருந்தால், குறைந்த ஓவர்களிலேயே சேஸ் செய்திருக்கலாம்.

 

நெதர்லாந்து அணியின் பலவீனம்

உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிரடியாக ஆடிய ரஹ்மத் ஷா 47 பந்துகளில் அரைசதம் அடித்து, 52 ரன்னில் ஜுல்பிகர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த, ஓமர்ஜாய், கேப்டன் ஷாகிதியுடன் இணைந்து நிதானமாக பேட் செய்தார். 59 பந்துகளில் ஷாகிதி அரைசதம் அடித்தார். 4வது விக்கெட்டுக்கு இருவரும் 52 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஷாகிதி 56 ரன்களுடனும், ஓமர்ஜாய் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நெதர்லாந்து அணியின் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவு ஆப்கானிஸ்தான் பேட்டர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் இல்லை. நடுப்பகுதி ஓவர்களில் மட்டும் ரன்ரேட்டை இறுக்கிப் பிடிக்க சுழற்பந்துவீச்சைப் பயன்படுத்தினர். மற்ற வகையில் நெதர்லாந்து பந்துவீச்சு ஸ்கோரை டிபெண்ட் செய்யும் விதத்தில் அமையவில்லை.

நெதர்லாந்து அணி பேட் செய்யும்போது, 4 ரன்-அவுட்கள் மூலம் பேட்டர்கள் ஆட்டமிழந்தது வேடிக்கையானது. பேட்டர்களுக்கு இடையே சரியான புரிதல் இல்லாமல் ஓடி விக்கெட்டுகளை இழந்தனர். பல உலகக்கோப்பைகளாக, பல பத்தாண்டுகளாக நெதர்லாந்து அணி கிரிக்கெட் விளையாடிய போதிலும், இன்னும் முதிர்ச்சியான கிரிக்கெட்டை ஆப்கானிஸ்தான் அணி வெளிப்படுத்திய அளவுக்கு வெளிப்படுத்த முடியவில்லை.

ஆடுகளம் எப்படி

உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ஆடுகளம் ஓரளவு பேட்டர்களுக்கு சாதகமானது என்பதால், நல்ல ஸ்கோரை முதலில் பேட் செய்யும் அணி அதிக ரன்களை சேர்த்தால், பந்துவீச்சு மூலம் டெபென்ட் செய்யலாம்.

இரவுநேரப் பனிப் பொழிவால் பந்துவீச்சு கடினமாகும் என்பதால், 250 ரன்களுக்கு மேல் சேர்த்தாலே சேஸிங் செய்வது கடினம் என்று கணிக்கப்பட்டது.

நெதர்லாந்து அணியின் ரன்-அவுட்கள்

நெதர்லாந்து பேட்டர்கள் வெஸ்லே, மேக்ஸ், ஆட்டத்தைத் தொடங்கினர். முஜிபுர் ரஹ்மான் வீசிய முதல் ஓவரின் கடைசிப் பந்தில் கால்காப்பில் வாங்கி வெஸ்லே ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டிகளில் முஜிபுர் ரஹ்மான் தனது 100வது விக்கெட்டை இதன்மூலம் வீழ்த்தினார்.

இரண்டாவது விக்கெட்டுக்கு வந்த ஆக்கர்மேன், மேக்ஸுடன் சேர்ந்து ரன்களை சேர்த்தார். இருவரும் பந்துகளை வீணடிக்காமல் ரன்களை சேர்த்தடடால், பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு நெதர்லாந்து 60 ரன்களை சேர்த்தது.

பன்னிரண்டாவது ஓவரில் மேக்ஸ் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்-அவுட் ஆனார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 72 ரன்கள் சேர்த்தனர். அடுத்த சில ஓவர்களில் ஆக்கர் மேன் 29 ரன்களில் விக்கெட் கீப்பர் இக்ரம் அலியால் ரன்-அவுட் செய்யப்பட்டார். அடுத்து வந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸும் ரன்-அவுட் முறையில் டக்-அவுட்டாகி வெளியேறினார்.

ஐந்தாவது விக்கெட்டுக்கு வந்த பாஸ்டே லீட் 3 ரன்னில் முகமது நபி பந்துவீச்சிலும், அடுத்து களமிறங்கிய ஜுல்பிகர் 3 ரன்னில் நூர் அகமது பந்துவீச்சிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

 
உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

நெதர்லாந்து அணி 73 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. ஆனால், அதற்கு அடுத்த 40 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 92 ரன்களில் இருந்தபோது அடுத்த 5 ரன்களை சேர்ப்பதற்கு உள்ளாகவே 3 விக்கெட்டுகளை நெதர்லாந்து அணி இழந்தது.

இருபது ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் சேர்த்த நெதர்லாந்து அணி, 30 ஓவர்கள் முடிவில், கூடுதலாக 33 ரன்கள் சேர்த்து மேலும் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

லோகன் வேன் பீக் 31வது ஓவரில், 2 ரன்கள் சேர்த்த நிலையில், முகமது நபி பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். இதனால் 134 ரன்களுக்கு 7வது விக்கெட்டை நெதர்லாந்து இழந்தது.

விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும், நிதானமாக பேட் செய்த சைபேண்ட் எஞ்சல்பிரெச்ட் அரை சதம் அடித்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கடைசி வரிசை பேட்டர்களான வென் டெர் மெர்வ் 11 ரன்களில் நூர் அகமது பந்துவீச்சிலும், மீக்ரன் 4 ரன்னில் முகமது நபி பந்துவீச்சிலும் விக்கெட்டை இழந்தனர்.

46.3 ஓவர்களில் நெதர்லாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 3 விக்கெட்டுகளையும், நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். 134 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நெதர்லாந்து, அடுத்த 35 ரன்களுக்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

வெற்றி பெற்றாலும் ஆப்கானிஸ்தானுக்கு சிக்கலா?

உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆப்கானிஸ்தான் அணி தற்போது 4 வெற்றிகள், 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் உள்ளது. ஆனால், நிகர ரன்ரேட் இன்னும் மைனஸில்தான் இருக்கிறது.

அடுத்து வரும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான ஆட்டங்களும் சவால் நிறைந்தவை. இதில் ஏதாவது ஒரு போட்டியில் வென்றால்கூட ஆப்கானிஸ்தான் 10 புள்ளிகள் பெறும், ரன்ரேட்டும் பிளசில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

அதேநேரம், நியூசிலாந்து அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள்தான் மீதம் உள்ளன. இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் இரண்டிலும் வென்றால் நியூசிலாந்து அரையிறுதி செல்வதில் சிக்கல் இருக்காது. ஆனால் பாகிஸ்தானிடம் தோற்று, இலங்கை அணியை வென்றாலோ அல்லது பாகிஸ்தானை வென்று இலங்கையிடம் தோற்றாலோ 10 புள்ளிகளுடன் நியூசிலாந்து நின்றுவிடும்.

ஆப்கானிஸ்தான் ஒருவேளை தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் தென் ஆப்ரிக்கா அல்லது ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளில் ஏதேனும் ஒன்றைச் சாய்த்தாலும் 10 புள்ளிகளுடன் நின்றுவிடும்.

உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் vs நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூசிலாந்தும், ஆப்கானிஸ்தானும் 10 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தால், நிகர ரன்ரேட் கணக்கில் எடுக்கப்படும். நியூசிலாந்து ரன்ரேட் தற்போது பிளசில் 0.484 ஆக இருக்கிறது, ஒரு வெற்றியைப் பெற்றால்கூட இன்னும் கூடுதல் புள்ளிகளைப் பெறும்.

அதன் நிகர ரன்ரேட் மோசமான தோல்வியை அடைந்தால்தான் மைனஸில் செல்லும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஒரு தோல்வி அடைந்தால்கூட நிகர ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஆப்கானிஸ்தான் நிகர ரன்ரேட் குறைவாக இருந்தால், 10 புள்ளிகள் பெற்றாலும் அரையிறுதிக்குள் நுழைய முடியாத நிலை வரலாம்.

பாகிஸ்தான் அணிக்கு 2 போட்டிகள் மீதம் உள்ளன. 6 புள்ளிகளுடன் இருக்கும் பாகிஸ்தான் அணி அடுத்து வரும் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் கண்டிப்பாக நல்ல ரன்ரேட்டில் வெல்ல வேண்டும். அவ்வாறு வென்றால்தான் அரையிறுதிக்குள் சிக்கலின்றி நுழைய முடியும். இதில் ஒன்றில் தோற்றாலும், திரும்பிச் செல்ல டிக்கெட் போட வேண்டியதுதான்.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக 3 ஆட்டங்கள் மீதம் உள்ளன. இதில் இங்கிலாந்துக்கு எதிராக தோற்றால்கூட, மற்ற இரு ஆட்டங்களில் வென்றாலும் 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் எளிதாகச் செல்லும். 4வது இடத்துக்கான போட்டியில்தான் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

https://www.bbc.com/tamil/articles/cnlp2dp0z9ko

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/11/2023 at 08:57, நியாயம் said:

நீங்கள் ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்தீர்களா?

நான் ஓட்டவிபரத்தை இணையத்தில் அவ்வப்போது அவதானித்தேன். ஒரு கட்டத்தில் 20 ஓட்டங்களுக்குள் அணி சுருளப்போகின்றதோ என தோன்றியது. 

இலங்கை அணி மீள்கட்டமைப்புக்கு உள்ளாக வேண்டும். உண்மையான பிரச்சனைகள் உள்ளே வேலை செய்பவர்களுக்கு தெரியலாம். 

அணித்தலைவர் மாற்றப்பட்டார். ஆரம்பத்தில் அவரை தலைவராக போடக்கூடாது என சொல்லப்பட்டது. ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட/விளையாடிய வீரர்கள் நீங்கி புதியவர்கள் வந்தார்கள். மோசமான தோல்விக்கு பல விடயங்களை பட்டியல் இடலாம். 

மத்தியூஸ் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. தொடர்ந்து வரும் போட்டிகளில் ஏதாவது செய்வாரா பார்ப்போம். 

மற்றைய அணிகளில் நீண்டகால அனுபவம் கொண்ட, அதிக ஓட்டங்கள்/விக்கெற்றுக்கள் எடுத்த நான்கு ஐந்து பேராவது உள்ளார்கள். இங்கு அணித்தலைவர் உட்பட பெருன்பான்மையோர் அனுபவம் குறைந்தவர்கள். 

நட்டத்திர வீரர்கள் சங்ககார, மகேல போன்றோர் முதுகில் சவாரி செய்த அணி தூர நோக்கில் புதியவர்களை உருவாக்கவும், தயார்ப்படுத்தவும் தவறிவிட்டது. 

இந்தியாவை எடுத்தால் உலக தரத்தில் விளையாடக்கூடிய மூன்று அணிகளையாவது உருவாக்கக்கூடிய வீரர்கள் உள்ளார்கள். இலங்கை அணியில் இந்த விடயத்தில் வெற்றிடம் உள்ளது. 

பொதுவாக போட்டிகளை பார்ப்பதில்லை, ஆனால் மறுநாள்  யூரியூப்பில் ஆட்ட தொகுப்பு பார்ப்பதுண்டு ஆனால் இலங்கை ஆட்ட தொகுப்பு பார்க்கமுடியவில்லை, ஒரு குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் அந்த காணொளிகள் நீக்கப்பட்டு வேறு ஒரு தேவையில்லா கணொளி மட்டும் காணப்படும்(மேலே நான் இணைத்த காணொளியினை பார்த்தால் புரியும்).

ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சு ஆபாரமாக உள்ளது அத்துடன் இந்த போட்டியில் இந்திய வேகபந்துவீச்சாளர்களின் சீம் பந்து வீச்சு பற்றி ஏராளன் இணைத்துள்ள இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் விளையாடும்  போது (2 ஆவதாக துடுப்பாடும் போது) மின் விளக்கு வெளிச்சத்தில் பந்தினை கணிப்பது இவ்வாறான சிறப்பான பந்துவீச்சில் சிரமாக இருக்கும் என கூறுவார்கள்.

சுயுங் பந்து வீச்சு போலில்லாமல் சீம் பந்து வீச்சு கணிப்பது சற்று சிரமாக இருக்கும், வேகமாக பந்து வீசும் போது என கூறப்படுகிறது.

சீம் பந்து வீச்சு 3 வகையாக கூறுகிறார்கள்
1. பந்தின் கட்டினை நேராக வீசுவது
2. பந்தின் கட்டினை குறுக்காக வீசுவது
3. பந்தின் கட்டினை தளம்பலாக வீசுவது

முதலாம் வகை பந்து கட்டினை நேராக வீசும்போது துடுப்பாட்ட வீரரின் பார்வையில் பந்து தரையில் படும்போது பந்தின் கட்டு 5 மணி வடிவில் பட்டால் பந்து உள்ளே வரும், அதுவே 6 மணி வடிவில் தரையில் பட்டால் பந்து நேரெ செல்லும், அதுவே  7 மணி வடிவில் பட்டால் பந்து வெளியே செல்லும்.

இதனை இரண்டு விதமாக எதிர்கொள்வார்கள் என கூறுவார்கள்.
1. கிறீஸிற்கு வெளியே நின்று பந்து திரும்பும் ஆரம்ப கட்டத்தில் எதிர்கொள்வது(முன் காலில்)இதனை தடுப்பதற்காக விக்கட் காப்பாளர்கள் சுழல் பந்து வீச்சாளருக்கு நிற்பதனை போலநிற்பார்கள்.
2. பந்து திரும்பிய பின் பின் காலில் சென்று விளையாடுவது.

புதிய பந்தில், பந்தின் கட்டு உறுதியாக இருக்கும் இதனால் ஆரம்ப ஆட்டகாரகள் பந்தினை அடித்தாடுவதன் மூலம் பந்தினை வேகமாக, அதன் திரும்பு திறனை குறைப்பார்கள் என கூறுவார்கள், குறிப்பாக நியூசுலாந்தின் ஆட்டக்காரர் பின் ஆலன் (தற்காலத்தில்) இவ்வாறு ஆடுபவர்.

இரண்டாம் வகை பந்தினை குறுக்காக கட்டினை வீசும்போது பந்தில் கட்டுப்பாடும் பந்தின் துள்ளலிலும் மாற்றம் ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

மூன்றாவது வகை தளம்பல் பந்து வீச்சு பந்தின் கட்டு எந்த பக்கம் தரையில் படும் என்பதனை பந்து தரையில் விழும் வரை கணிக்க முடியாது என கூறப்படுகிறது.

இந்த விபரங்கள் உங்களுக்கு முன்னரே தெரிந்திருக்கும்.

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சிற்கான உரிய கெளரவமாக இலங்கை அணி எப்போதும் 50 ஒட்டங்களில் சுருண்டு போவதனை எடுத்துகொள்ளலாம் (அல்லது 50 ஓவர் போட்டி என்பதனை இலங்கை அணி 50 ஓட்ட போட்டி என தவறாக அர்த்தம் கொண்டிருக்கலாம்😄.

அத்துடன் இலங்கை அணியின் மோசமான துடுப்பாட்டமும் காரணம் என கூறுகிறார்கள்.

  • Like 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.