Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணம் முடித்த தமிழ்பெண்கள் தமது பெயருக்கு முன்னால் தமது கணவர் பெயரை இணைப்பது ஓர் தமிழ்பண்பாடா?

20 members have voted

  1. 1. திருமணம் செய்ததும் தமிழ்ப் பெண்கள் தமது பெயருடன் தமது கணவர் பெயரை இணைக்க வேண்டுமா?

    • ஆம்! நிச்சயமாக! ஆனால், கணவரும் இவ்வாறு செய்ய தேவையில்லை!
      9
    • ஆம்! ஆனால், கணவரும் இவ்வாறு தனது பெயருக்கு முன்னால் தனது மனைவி பெயரை இணைக்கவேண்டும்!
      3
    • இல்லை!
      7
    • தெரியாது!
      1

Please sign in or register to vote in this poll.

Featured Replies

வணக்கம்!

மீண்டும் ஒரு விவாதம், கருத்துக்கணிப்பு...

தமிழ்ப்பெண்கள் திருமணம் செய்ததும் தமது பெயருக்கு முன்னால் தமது கணவர் பெயரை போடுகின்றார்கள். இது ஓர் தமிழ்ப்பண்பாடா? அல்லது மேலைத்தேய வழக்கம் ஒன்றை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகின்றார்களா?

இவ்வாறு ஏன் ஆண்கள் திருமணம் செய்ததும் தமது பெயருக்கு முன்னால் தமது மனைவி பெயரை இணைப்பது இல்லை? ஏன் பெண்கள் மட்டும் இவ்வாறு செய்யவேண்டும்?

நான் அறிந்தவரையில் இப்படி திருமணம் செய்ததும் தமது பெயருக்கு முன்னால் தமது கணவன் பெயரை இணைக்கும் வழக்கம் புலத்தில் வாழும் தமிழ்ப்பெண்களிடம் குறைந்து வருகின்றதோ என எண்ணத் தோன்றுகின்றது. சில திருமணம் முடித்த தமிழ்ப்பெண்கள் தமது பெயரை எழுதும்போது தந்தையின் பெயரை மாத்திரமே இணைத்து எழுதுகின்றார்கள் அல்லது கணவர் பெயரை இணைத்து எழுதுவதற்கு கூடுதலான காலம் எடுக்கின்றார்கள். உடனடியாக பெயர் மாற்றம் செய்வதில்லை.

திருமணம் செய்து பெயர் மாற்றம் செய்ததும் விவாகரத்து எடுக்கும் பெண்களின் நிலமை என்ன? இவ்வாறு செய்வதால் அவர்களிற்கு கூடுதலான பாதிப்பு வராதா?

அடுத்தது இன்னொரு கேள்வி, பத்து மாதம் சுமந்து கஸ்டப்பட்டு பெற்ற தாயின் பெயரை ஏன் நாம் எமது பெயருடன் இணைப்பதில்லை? ஏன் தந்தையின் பெயரை மட்டுமே இணைக்கின்றோம்?

இவை எல்லாம் பெண் அடிமைத்தனத்தின், பெண்கள் மீதான அடக்குமுறையின் வடிவங்களா?

பெண்கள் திருமணம் செய்ததும் தமது பெயரை மாற்றவேண்டியதன் அவசியம்தான் என்ன? அப்படியான ஒரு அவசியம் ஆண்களுக்கும் இருப்பதாக ஏன் உணரப்படவில்லை? நல்ல ஒரு விடயமாக இருந்தால் அதை ஆண்களும் பின்பற்றலாம் தானே?

இதைப்பற்றி ஆண்கள் என்ன நினைக்கின்றீர்கள்? பெண்கள் என்ன நினைக்கின்றீர்கள்? யாராவது ஆண்கள் திருமணம் செய்ததும் உங்கள் பெயருக்கு முன்னால் உங்கள் மனைவி பெயரை இணைப்பதற்கு தயாராக இருக்கின்றீர்களா?

சட்டம் இதைப்பற்றி என்ன சொல்கின்றது? சட்டத்தில் எங்காவது இப்படி எழுதவேண்டும் என்று விதிகள், சரத்துக்கள் இருக்கின்றனவா?

உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்!!

நன்றி!

சில ஐரோப்பிய நாடுகளில் திருமணத்தின் பின்னரும் பெண்கள் விரும்பினால் தமது தந்தையின் பெயரை வைத்துக் கொள்ளலாம்.

இங்கு பிறக்கும் குழந்தைக்கு தாயின் பெயரை இணைக்கும் உரிமையும் உண்டு. எனது நண்பனின் பிள்ளை ஒன்றிற்கு தாயின் பெயரை இணைத்துள்ளார்.

Edited by இணையவன்

சைவத்தின் பரம்பொருள் என்னும் சிவன் பாதி உமை ஆனால் யாரும் சிவன் உமை எண்று சொல்வதில்லை.. உமாமகேஸ்வரன் எண்றுதான் சொல்கிறார்கள்... அல்லது உமையொருபாகன்..

அல்லது கங்காதரன்.. (கங்கையை தலையில் வைத்து இருப்பதால்...)

  • தொடங்கியவர்

ஏன் தயா பிறகு இன்னொரு இடியப்ப சிக்கலினுள் இந்த பிரச்சனையை கொண்டு போறீங்கள்? தமிழ் என்றதும் அதை நாம் சைவம் அல்லது இந்து மதத்துடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டுமா?

இணையவன் தகவலுக்கு நன்றி, உங்கள் நண்பனின் பிள்ளைக்கு தாயின் பெயர் இணைக்கப்பட்டு உள்ளது ஆச்சரியமாக உள்ளது. இப்படி நான் கேள்விப்படவில்லை. இந்தக் காலத்தில் பல Single Mothers வாழ்கின்றார்கள். இவர்களின் பிள்ளைகளின் பெயர் எவ்வாறு வைக்கப்பட்டு உள்ளது என்று யாருக்காவது தெரியுமா? இப்படிப்பட்ட நிலையில் உள்ள பிள்ளைகள் நிச்சயம் தமது பெயருக்கு முன்னால் தாயின் பெயரை இணைக்க வேண்டும் தானே? அவ்வாறு செய்வது நல்லது அல்லவா?

ஏன் தயா பிறகு இன்னொரு இடியப்ப சிக்கலினுள் இந்த பிரச்சனையை கொண்டு போறீங்கள்? தமிழ் என்றதும் அதை நாம் சைவம் அல்லது இந்து மதத்துடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டுமா?

லக்கிலுக் பாணியிலை சொன்னா... சும்மா டைம் பாஸ் மச்சி... ! :P :P :P

அனைத்து நாடுகளிலும் இந்த முறை பின்பற்றப்படுகின்றது இதில் அடக்குமுறை இருப்பதாக எனக்கு தெரியவில்லை அப்படி அடக்கு முறை என சிறு செயல்களையும் பார்கப்போனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆகாமல் போய்விடும் .

மேலை நாடுகளைப் பொறுத்தவரையில்,அவரவர்க்கெண்

சுவிஸிலும் கணவன் பெயரை அல்லது

மனைவி

தன் தந்தையின் பரம்பரையாக வரும் பெயரை

அல்லது

இருவரது பெயரையும் இணைக்கலாம்

கணவனது பரம்பரை பெயர் வேண்டாம்

தமது குடும்ப பெயர் போதும் என்றால்

அதை மட்டுமே தொடரவும் முடியும்.

அது திருமண பதிவின் போது நடைமுறையாகிறது.

உதாரணமாக

Gerry Kaufmann (ஆண்)

Rebecca Szumacher (பெண்)

திருமணத்துக்கு பின்னர்

மணமான பெண்

Rebecca Szumacher

அல்லது

Rebecca Kaufmann

அல்லது

Rebecca Szumacher Kaufmann

பெண்ணின் விருப்பதின் பெயரில் அழைக்கலாம்.

இவர்கள் அழைக்கும் பெயர்கள்

இவர்களது குலத் தொழிலை மையமாக தொடர்கிறது?

Szumacher : பாதரட்சைகள் செய்வோர்

Kaufmann : வியாபாரிகள்

ஜெனரல் அவர்களே!!

நீங்கள் அடுத்த ஆராய்ச்சிக்கும் போயிட்டீங்க நான் இப்ப தான் தங்களுடைய பழைய ஆராய்ச்சியை முடித்தனான் இதனை நாளைக்கு செய்யிறேன் ஜென்ரால் அவர்களே உங்கள் ஆராய்ச்சி வெற்றிபெற வாழ்த்துகள்!!

  • தொடங்கியவர்

ஈழவன், கலைநேசன், அஜீவன் அண்ணாவின் விரிவான தகவல்கள், கருத்துக்களிற்கு நன்றி!

ஜெனரலின் இதுபற்றிய பார்வையை அறிய ஆவலாக இருக்கின்றேன். :)

கலைஞன் சில நேரங்களில் உங்கள் வாக்கெடுப்புகளில் சொல்ல வரும் விடயங்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என தெரிவதில்லை. இங்கு நீங்கள் கேட்ட கேள்விகளும் அப்படி தான் பெயரை இணைக்கும் விடயம் தமிழர் கலாச்சாரமா? இல்லையா என்பதும்.

இந்த நடைமுறை தொன்று தொட்டு இருந்ததா என்பதை எங்கும் அறிய முடியாது. எப்போது திருமண பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டதோ அதில் இருந்து இந்த பழக்கமும் தொடங்கியிருக்கலாம். ஒல்லாந்தர்? அல்லது ஆங்கிலேயர் ஆட்சி.

பொதுவாக கணவனின் பெயரை/ கணவனின் குடும்ப பெயரை முதற் பெயராக்கும் வழக்கம் அவர்கள் அறிமுகப்படுத்தியதாக இருக்கலாம்.

அஜிவன் அண்ணா, மற்றும் பலர் சொன்னது போல் மேலைதேய நாடுகளில் கணவரின் குடும்ப பெயரை திருமணமான பெணகள் வைக்கும் வழக்கம் இருந்து வந்தாலும், பெண்ணின் குடும்ப பெயரையும் சேர்த்து இரண்டையும் பேணும் வழக்கமும் உண்டு.

ஏன் இலங்கையில் சந்திரிக்கா, முதலில் சந்திரிக்கா குமாரதுங்க எனும் கணவனின் பெயருடன் தான் முதலில் அடையாளப்படுத்தப்பட்டார். பின் தீவிர அரசியலுக்கு வந்த பின் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க என்றவாறாக மாற்றி கொண்ட்டார்.

கனடாவில் கூட அதே வழக்கம் தான் நிலவி வந்ததாகவும் ஆனால் தற்போது பல மானிலங்கள் பெண்கள் தமது பெயர்களை மாற்றுவதை அதாவது கணவனது குடும்ப பெயரை எடுத்துகொள்வதை அங்கிகரிப்பதில்லை எனவும் கேள்விப்பட்டேன், இது எந்த அளவு சரி என எனக்கு தெரியாது. என்னை விட உங்களுக்கு தான் அதிகம் தெரிந்திருக்க வேண்டும்.

இந்த நிலையில் இதை தமிழர் கலாச்சாரமா இல்லையா என வினா தொடுப்பதை நினைத்து அழுவதா சிரிப்பதா?

வழமை போலவே களத்தில் பெரும்பாலான வாக்கெடுப்புக்களில் வாக்களிப்பதிலை என்பதால் இங்கும் வாக்களிக்கவில்லை.

Edited by KULAKADDAN

  • தொடங்கியவர்

நன்றி குளக்காட்டன் உங்கள் கருத்திற்கு!

நான் கனடாவில் இருந்தாலும் இதுகள் பற்றி எனக்கு தெரியாது. நான் தமிழ் கலாச்சாரமா அல்லது இல்லையா என்று கேட்டதன் உள்நோக்கம், இங்கு பலர் தமிழ் கலாச்சாரம் என்று சொல்லி கூக்குரல் இடுகின்றார்கள். இவர்கள் இவைபற்றி எவ்வளவு தூரம் அறிந்துவைத்து இருக்கின்றார்கள், அக்கறை செலுத்துகின்றார்கள் என அறிய விரும்பினேன்.

இது யாரால் அமுலுக்கு கொண்டு வரப்பட்டாலும் புலத்தில் உள்ள எமது தமிழ்ப்பெண்கள், தாயகம், தமிழீழம் என்றவகையில் பார்க்கும் போது இது எவ்வாறு அணுக்கப்படவேண்டும் என்பதையும் சிந்தித்து பார்த்தேன்.

என்னைப் பொறுத்தவரையில் எனது மனைவி திருமணத்தின் பின் (நான் ஒருகாலத்தில் திருமணம் செய்தால் ;) ) எனது பெயரை அவளது பெயருக்கு முன் போடுவது அல்லது போடாமல் விடுவது அவள் சுதந்திரம். எனினும், அவள் ஆசைப்பட்டு விரும்பினால் நான் நிச்சயம் எனது பெயருடன் அவளது பெயரையும் இணைத்துக் கொள்வேன். :P

தனது கணவர் பெயரை தனது பெயருடன் இணைக்கும்போது ஒரு பெண்ணுக்கு சந்தோசம், பெருமை கிடைக்கின்றது என்றால், தனது மனைவி பெயரை தனது பெயருடன் இணைக்கும்போது ஒரு ஆணுக்கு சந்தோசம், பெருமை கிடைக்க வேண்டும் தானே? :)

Edited by கலைஞன்

//திருமணம் முடித்த தமிழ்பெண்கள் தமது பெயருக்கு முன்னால் தமது கணவர் பெயரை இணைப்பது ஓர் தமிழ்பண்பாடா?

அடக்குமுறையின் வடிவம்?//

தமிழர் பண்பாடா? இந்த கேள்விக்கு விடை பழைய தோம்புகளிலும், ஏடுகளிலும் இலக்கியங்களிலும் தேடினால் தான் உண்டு :P

இங்கு ஆமா இல்லையா என விடை சொல்லுவதை வைத்து தீர்மானிக்க போகிறீர்கள் போல. வாழ்க வளர்க :)

அடக்குமுறையின் வடிவம் ?

ஆண் மெலாதிக்கம், பெண்ணடிமை தனம் இந்த வர்த்தைகளுக்குள் எதையெல்லாம் கொண்டுவராலாம் இந்த வார்த்தைகளுக்கான வரைவிலக்கணம் எப்படி கொடுக்கலாம்? என்பதைப்பற்றிய புரிதலே பலருக்கு சரியா இல்லை. இதை பற்றி வலைப்பதிவில் மு. மயூரன் எங்கோ பினூட்டமாகவோ அல்லது தனிப்பதிவாகவோ எழுதியிருந்ததை வாசித்த நினைவு. ஆனால் எங்கு என ஞாபகம் இல்லை தேடும் பொறுமையும் இல்லை.

ஆனால் அடக்குமுறையின் வடிவம், அல்லது பெண்ணடிமை தனம் என வரையறைக்குள் இதை கோண்டு வந்தால் இது தமிழன் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் உள்ள அடக்குமுறை என்று தான் நீங்கள் கொள்ள வேண்டும். தமிழனுக்கு தனிமை படுத்த முடியாது.

எனவே உங்கள் தலைப்பு பொருட் பிழையுடையது. :lol: :P

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் மேலாதிக்கம் இயற்கையானது. பெண்ணினத்தின் கீழ்நிலைக்குக் காரணம் அவர்களிடையேயுள்ள பிளவுகளே. இன்றைய நிலைமாற இன்னும் எத்தனை யுகங்கள் செல்லுமொ தெரியாது. எல்லாவற்றையும் மாற்றக் கடவுள்தான் உதவி செய்யவேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் எனது மனைவி திருமணத்தின் பின் (நான் ஒருகாலத்தில் திருமணம் செய்தால் ;) ) எனது பெயரை அவளது பெயருக்கு முன் போடுவது அல்லது போடாமல் விடுவது அவள் சுதந்திரம். எனினும், அவள் ஆசைப்பட்டு விரும்பினால் நான் நிச்சயம் எனது பெயருடன் அவளது பெயரையும் இணைத்துக் கொள்வேன். :P

சுவிஸ் பெண்களை திருமணம் முடித்த பலரது முதல் பெயரை

சுவிஸ் பெண்கள் கொண்டிருக்கிறார்கள்.

தவிர

சுவிஸ் பெண்ணை திருமணம் செய்த ஒரு இலங்கையரது

ஊரின் பெயர்

அவருக்கு குடியுரிமை கிடைத்ததன் பின்னர்

அந்த பெண்ணின் ஊராக (இடமாக) பதியப்படுகிறது.

உதாரணமாக

யாழ்பாணத்தில் பிறந்த ஒருவருக்கு

சூரிக் என மாறி விடுகிறது :P

தவிரவும்

இலங்கை தமிழருக்கு பரம்பரை பெயர் என்று ஒன்று தொடர்வதில்லை.

உதாரணத்துக்கு:

கலைஞனது அப்பா பெயர் குலக்காடான் என்றால்

குலக்காடான் கலைஞன் என்றும்

கலைஞனது மகன் ஈழவன் என்றால்

கலைஞன் ஈழவன் என்றே மாறி வருகிறது.

ஈழவனுக்கு குலக்காடான் என்று தொடர்வதில்லை.

சிங்களவர்களிடம் குலப்பெயர் அல்லது குடும்ப பெயர்

அன்று தொட்டு தொடரும் வழக்கம் உண்டு.

பண்டாரநாயக்க

வன்னிநாயக்க

முதியான்சே

லொக்கு பண்டா

போன்ற உயர்குல பெயர்களும்

பிரேமதாஸ

அப்புகாமி

போன்ற கீழ் நிலை பெயர்களும்

கரையோர சிங்களவர் என அறிந்து கொள்ளும்

பெரேரா

பா்ணாந்து (பெணாண்டோ)

டிமெல்

சொய்சா

பெயர்களும் வழக்கத்தில் உள்ளன.

(இவை போர்த்துகேயரால் வழங்கப்பட்ட பெயர்கள்)

தமிழரிடம் சாதியை ஒழிக்க பெயர்கள் தடையாக இல்லை.

அதை பலர் புலத்திலும் கொண்டு செல்வது வேதனை?

சிங்களவரிடம்

அதை பிரிக்க முடியாது.

இருந்தாலும்

வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த சிங்களவர்கள் பலர்

தங்கள் பெயரை உயர்குல பெயராக பதிந்துள்ளார்கள்! :)

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் செய்ததும் தமிழ்ப் பெண்கள் தமது பெயருடன் தமது கணவர் பெயரை இணைக்க வேண்டுமா?

அதுதானே வழமையாக நடந்து கொண்டிருந்தது.

இப்போதுதாங்க மாற்றங்கள் எல்லாம்.

திருமணம் செய்ததும் தமிழ்ப் பெண்கள் தமது பெயருடன் தமது கணவரின் தகப்பனாரின் பெயரை இணைக்கிறார்கள் சில இடங்களில் .

இவ்வாறு ஏன் ஆண்கள் திருமணம் செய்ததும் தமது பெயருக்கு முன்னால் தமது மனைவி பெயரை இணைப்பது இல்லை? ஏன் பெண்கள் மட்டும் இவ்வாறு செய்யவேண்டும்?

இது எப்படிங்க சாத்தியமாகும் . ஆண் ஆதிக்கம் ஆண் ஆதிக்கம் தான் . அசைக்க முடியாதுங்க.

தென்னகத்து தமிழ் கவிஞர் ஒருவர் இருக்கின்றார். தன் தாயாரின் பெயர் பார்வதி. அதை பா. என்று இனிஷல் (இனிஷல் - தமிழ்சொல் தெரியவில்லை) உடன் வலம் வருகிறார்.

நான் அறிந்தவரை இது ஒரு அடக்கு முறையாகவே இருந்து வருகிறது .ஏனெனில் முன்பு ஆண்கள் தங்கள் மனைவியின் பெயரை மற்றவர்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே தங்களது பெயரை மனைவியரின் பெயருக்கு முன்னால் இட்டு அதனையே வளக்கமாக்கி கொண்டு விட்டார்கள் .அது இன்னமும் தொடர்ந்துட்டுதான் இருக்கு.

  • தொடங்கியவர்

அனைவரினதும் கருத்துக்கள், சிந்தனைகளிற்கு மிக்க நன்றி!

உண்மையில் தெரிந்தோ தெரியாமலோ பல விடயங்கள் பெண்கள் மீது திணிக்கப்பட்டு உள்ளன. இதுபோல் ஆண்கள் மீதும் திணிக்கப்பட்டு உள்ளன. இவை திட்டமிட்டு திணிக்கப்பட்டன என்று கூறுவதற்கு இல்லை.

எனினும், நாம் பின்பற்றும் தேவையற்ற பயனற்ற கண்மூடிப் பழக்க வழக்கங்களை அவை பயனற்றவை என்று அறியப்பட்டால் அவற்றை நாங்கள் கலைந்து கொள்வதே சிறந்தது.

மற்றவன் செய்கின்றான், செய்கின்றாள் என்பதற்காக நாம் ஒரு விசயத்தை கண்ணை மூடிக்கொண்டு செய்யக்கூடாது.

எதையும், சுயசிந்தனையுடன் என்ன, எதற்கு, எப்படி என்ற விளக்கங்களுடன் நாம் தெளிவுடன் செய்தால் துன்பங்கள், பிரச்சனைகளை வாழ்க்கையில் குறைத்து கொள்ளலாம்.

ஆண்களை வெறுப்பதன் மூலமோ அல்லது ஆண்கள் செய்வதற்கு எதிராக ஏதாவது செய்வதன் மூலமோ பெண்விடுதலையோ சுதந்திரமோ கிடைத்துவிட போவதில்லை. இதுபோல் பெண்களை கிண்டல் அடிப்பதன் மூலம், ஒதுக்கி வைப்பதன் மூலம் ஆண்களிற்கும் ஒன்றும் கிடைத்து விடப்போவதில்லை.

அன்பு, புரிந்துணர்வு மூலம் மட்டுமே ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி மனநிறைவுடன், சந்தோசமாக வாழமுடியும்.

யாழ் கள பெண்களில் ஆக இருவர் மாத்திரமே இதுபற்றி கருத்து கூறி உள்ளார்கள். மிகுதி ஆனோர் எங்கே ஒளிந்து கொண்டார்கள்?

கருத்துகணிப்பு முடிவு இப்போது 50:50 என்ற நிலையில் உள்ளது.

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலும் அஜூவன் அண்ணா கூறியது போல விரும்பிய பெயருக்கு மாற்றலாம்.

திருமணம் முடித்த பின் உங்களுக்கு விரும்பிய குடம்ப பெயருக்கு (family/sur name) மாத்தலாம். மாத்தாமலும் விடலாம். அனேகமான இனத்தவர் தங்கள் குடும்ப பெயரை தொடர்ந்து தங்கள் பரம்பரைக்கு சூட்டுவார்கள். நாங்கள், தமிழர்கள், தகப்பனின் பெயரை குடும்ப பெயராக வைப்போம். குடும்ப பெயரை வைத்துதான் இது அந்தக் குடும்பம், இது இந்தக்குடும்பம் என்று பார்பார்கள். உங்களுக்கு உங்கள் குடும்ப பெயரோ அல்லது உங்கள் பெற்றோர் சூட்டிய முதற்பெயரோ பிடிக்காவிடின் உங்களை பெயரை மாற்றலாம்(கனடாவில்) அதற்கு ஒரு 130$ செலவாகும்.

திருமணமான 90 நாட்களுக்குள் உங்கள் பெயரை மாற்றம் செய்தால் இலவச சலுகை. அதன் பின்னர் 130$. உங்கள் இருவருக்கும் குடும்ப பெயரை மாற்ற விரும்பினும் மாற்றலாம். நீங்கள் குப்பன், சுப்பன் என எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். City Hall or City office க்கு போனால் அதற்கான படிவம் கிடைக்கும். உங்களுக்கு பிள்ளைக்கு பெயர் பதியும்(பிறக்கும் குழந்தை) உங்களுக்கு விரும்பிய மாதிரி தாயின் குடும்ப பெயரையோ அல்லது தந்தையின் குடும்ப பெயரையோ பதிவு செய்யலாம்.

ஆகவே, உங்கள் மனைவி தன் தகப்பனின் பெயரை மாத்தாது தனது குடும்ப பெயராக கொண்டிருந்தால், உங்கள் பிள்ளைக்கு தாயின் குடும்ப பெயரை பதிய சொன்னீர்களேயாயின் உங்கள் பிள்ளையின் குடும்ப பெயர் உங்கள் மனைவியின் தகப்பனின் பெயராக இருக்கும். (இதில் எனக்கு உடன் பாடு இல்லை.).

அதே நேரம் உங்கள் குடும்ப பெயரை பிள்ளைக்கு பதிய சொன்னால்உங்கள் தகப்பனாரின் முதற் பெயர்(உங்களின் குடும்ப பெயர்) உங்கள் பிள்ளையின் குடும் பெயரக வரும். (இதுவம் எனக்கு உடன் பாடு இல்லை.)

எங்கள் முறைப்படி மனைவியின் குடும்ப் பெயரை உங்கள் முதற் பெயருக்கு மாத்தி இருந்தால், பிள்ளை பிறக்கும் போது பிள்ளையின் குடும்ப பெயரை உங்கள் மனைவியின் குடும்ப பெயருக்கு பதிய சொன்னீர்களாயின் இலகுவாக உங்கள் முதற்பெயரே உங்கள் குழந்தையின் குடும்ப பெயராக வரும்.

அதை விடுத்து விரும்பிய பெயரை உங்கள் குழந்தையின் குடும்ப பெயராக பதிந்த விட்டு, அந்த பத்திரங்களோடை நம்ம நாட்டுக்கு பேய் அங்கை இருக்க விரும்பி.... பாடசாலையிலோ, அரச அலுவலகங்களிலோ படிவங்களில் தகப்பனாரின் பெயர் (அங்கை குடும்ப பெயருக்கு பதில் அப்படி தான் இருக்கும்) எண்டு கேக்கிற இடங்களில நீங்கள் பகுத்தறிவு?விடுதலை எ;ணட பெயரிலை வைச்ச பேரை பதிய சனம் ஒருமாதிரி பாக்கும்.

இங்கு இன்னொரு பிரச்சனை என்னவென்றால்

உனக்கு ஒரு வாரிசு வேணாமா என்று

ஆண்களைத்தான் பார்த்து கேள்வி கேட்கிறார்கள்?

பெண்களை பார்த்து கேட்பதில்லை?

அப்படி கேட்டால்

அர்த்தமே வேறு?

இது தவிர சொத்து பிரச்சனைகளும்

நம் நாட்டில் உண்டு என்று நினைக்கிறேன்.

பெண் கொண்டு வருவதோடு சரி.

அதன் பின்

அப்பா சொத்துக்குத்தான் குழந்தைகள் சண்டையிடுகின்றன.

அம்மாவின் குடும்ப சொத்துக்கில்லையே?

வழக்கென்று போனால்

குழந்தைகளுக்கு தகப்பனாரின்

சொாத்துக்கள் இந்த பெயர் குளறுபடியால்

இல்லாமல் போனாலும் போகும்?

மேலைத்தேய நாடுகளில் அது பிரச்சசனையில்லை?

பெற்றோர் எழுதிக் கொடுத்தால்தான்.

இல்லாவிட்டால் யார் யாருக்கோ? :lol:

  • தொடங்கியவர்

சபேஸ், அஜீவன் அண்ணா இதுபற்றிய உங்கள் பார்வைக்கு, சிந்தனைக்கு நன்றி! :) இதற்கு ஆதரவாக விரிவான பார்வையுடன் ஒருவரும் கருத்து தரவில்லை. :lol: எனவே, இப்போதைக்கு இவ்வாறு கணவர் பெயரை மனைவி திருமணத்தின் பின் இணைப்பது நல்லது என்ற முடிவுக்கு வரலாமோ? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்!

மீண்டும் ஒரு விவாதம், கருத்துக்கணிப்பு...

வணக்கம் கலைஞா,,,

உங்கள் தலைப்புடன் தொடர்கின்றேன் இனி யாழோடு என்பாடு!

இணைத்துக்கொள்ள விருப்பம் என்பதே எனது வாக்கு!. அதில் கட்டாயம் என்றில்லை அது பண்பாடா என்பதும் தெரியவில்லை.

ஆனால் இந்தக் கனடா போன்ற நாடுகளில் இணைப்பதற்குரிய தயக்கம் என்ன தெரியுமா? அவர்கள் கணவருடைய தந்தையின் பெயரைத்தான் இணைத்துவிடுகின்றார்கள். அதனால் தான் எம் தமிழ் பெண்கள் அதைவிட எங்கட அப்பாவின் பெயரே இருக்கட்டும் என்று விட்டுவிடுகின்றார்கள்!!

அந்தப் பெயர் மாற்றுப் படிவம் நிரப்பி முடிப்பதற்கு ச்சீச்ச்சி என்று போய் விடும்! சலிப்பாக!!.

ஆனால் இங்கு திருமணம் ஆனாலும் கூட...திருமதி என்று போடுவதில்லையே!!..Ms. இப்படியே அழைக்கின்றார்கள் அல்லவா அதனாலும் இங்குள்ளவர்கள் அதில் ஈடுபாடு காட்டுவதில்லை என்று நினைக்கின்றேன்.

எங்கள் சமுதாயம் இப்படி வார்க்கப்பட்டிருக்கின்றதே அன்றி. தகப்பன் பெயரையோ கணவன் பெயரையோ போடுவது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் தான். அப்பனாக பெற்றெடுத்துவிட்டு மனைவியைக் கொடுமைப்படுத்தும் ஒருவனுடைய பெயரை கணவனாகவும் சரி அப்பனாகவும் சரி போட மறுக்கின்றவர்கள் இருக்கின்றார்கள் அதில் தப்பேதும் இல்லை!..

ஆனால் நீங்கள் கேட்ட கேள்வி மிக ஆழமானது! ஏன் தாயின் பெயரைப்போடுவதில்லை என்பது?!!

அப்படிப்போடுவது சட்டமாக்கப்பட்டால் நிம்மதியே :rolleyes: மனைவியை நட்டாற்றில் விட்டு விட்டுப்போகும் கணவனின் பெயரை பிள்ளைக்கு போட வேண்டுமா என்ன?!

சுமந்து அந்த சுமையைக் கூட சுகமாக எண்ணித் தன் சுகங்கள் அத்தனையும் அந்தக்காலத்தில் பிள்ளைக்காய் அர்பணித்து வாழும் தாயின் பெயரை போடுவதிலேயே எனக்கும் மகிழ்ச்சி!.

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெயர் மாற்றுப் படிவம் நிரப்பி முடிப்பதற்கு ச்சீச்ச்சி என்று போய் விடும்! சலிப்பாக!!.

எங்களுக்கு கொஞ்ச காலம் எடுத்தது. அத்துடன் ஒரு guarantor(சரியான தமிழ் தெரியாது) கையெப்பம் இடவேண்டும். Guarantor ஒருவர் இல்லையாயின் local MP கையொப்பம் இடலாம். நாங்கள் கவலையீனம் காரணமாக உடனே பதிவத்தை அனுப்பவில்லை மற்றபடி அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

1976ல் டச்சு தோம்புகளில் நம் முன்னோரின் பெயர்கள் பதியப் பட்ட முறைமை பற்றி ஆராய்ந்ததது ஒன்றும் நினைவில் இல்லை. இன்றைய பெயர் பதிவு முறைகள் ஐரோப்பியரால் புகுத்தப் பட்டவையே. போத்துக்கீசர் காலத்தில் நமது தெய்வ சிறுதெய்வ வழிபாடுகள் தடுக்கப் பட்டு எல்லோரும் கத்தோலிக்கராக கையாளப் பட்டனர். அரச வரிகளுக்கு மேலதிகமாக பிறப்பு திருமனம் இறப்பு என்று தேவாலயத்துக்கும் வரி கட்ட வேண்டியிருந்தது. அன்றும் கொடுங்கோன்மை தாங்காமல் நம் மூதாதையர்களில் சிலர் வன்னிக்கும் ராமேஸ்வரத்துக்கும் ஓடிப் போனார்கள் என்கிற சேதி போத்துக்கீச டச்சு ஆவணங்களில் காணப்படுகிறது.

தந்தைவழி குடும்பப் பெயர் ஐரோப்பியர் புகுத்தியதுதான். தமிழர் சமூகத்தில் தாய்வழி தன்மைகளே அதிகம். இது கிழக்கு நோக்கிச் செல்லும்போது அதிகரித்துக் காணப் படுகிறது. மட்டக் களப்பு அம்பாறையில் குடும்பப் பெயரை ஒத்த குடிப்பெயர்கள் தாய்வழி சார்ந்தது. நான் அறிய யாழ்பாணத்தில் கூட்டம் என்று தந்தைவழி சார்ந்த அடையாளங்கள் இருந்தபோதும் ஆண் பெண் சமூக உறவுகளில் தாய்வழித் தன்மையே அதிகம். 1850பதுகளில் யாழ்பானம் வந்த ஒரு ஐரொப்பியர் (ரெனன்ற் என நினைக்கிறேன் ) யாழ்பானத்து நிலத்தின் பெரும்பகுதி சீதண வழியில் பெண்களின் உடைமையாக இருப்பதாகப் பதிவு செய்துள்ளார். சொத்துடமை தவிர (தேச வளமை பார்க்க) திருமணத்தின் பின்னர் ஆண் பெண்வீடு சேர்தலே ஈழத் தமிழர்களது வளக்கமாக இருந்தது. சொத்துரிமையும் திருமண வீடும் பெண் உடைமையாக பெண் வழிச்சார்ந்ததாக இருந்தமை எமது பெண்களுக்கு பலமாக இருந்தது. என்னினும் பெண்ணின் ஆதிக்கம் அவளுடைய ஆண் சகோதரர்களாலேயே நடைமுறைப் படுத்தப் பட்டது. கற்ப்பு சாதி வெறியர்களின் ஆயுதமாக இருந்தது.

இத்தனை இருந்தும் யாழ்பானத்துக் கொடுரமான சாதி அமைப்பு பெண்களின் கருப்பைக்கு காவல் என்கிற அடிப்படையில் பெண்ணுக்கு காவலான பிற்போக்கு கலாச்சாரத்துக்கு வித்திட்டது. சாதி மைப்பு மாறுபட்டு இறுக்கமற்ற கிழக்குமாகானத்துப் பெண் ஒப்பீட்டு அடிப்படையில் சுதந்தரியாக இருந்தாள்.

புலம் பெயர்ந்த சூழல் சட்டரீதியில் பெண்ணின் கட்டுகளை தழர்த்தினாலும் நமது அடிப்படையில் இருந்த பெண்வழி சார்ந்த சமூக உறவுகளைத் தைலைகீழாக்கி விட்டது. முதல் தலை முறைப் பெண்கள் ஆண்களால் அழைக்கப் பட்டு ஆண்களின் வீட்டில் ஆண்களின் சமூகத்தில் வாழ நேர்ந்தது துரதிஸ்டம்தான்.

எனது தோழியர்கள் சிலர் திருமனத்தின் பின்னரும் கன்னிப் பெயர்களோடு தொடர்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.