Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொரளையில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இடையூறு – பொலிஸாரும் குவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொரளையில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இடையூறு – பொலிஸாரும் குவிப்பு

பொரளையில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இடையூறு – பொலிஸாரும் குவிப்பு

கொழும்பு – பொரளையில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை சீர்குலைக்க ஒரு குழு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு கிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில் பொரளை சுற்றுவட்டத்தில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஒரு சில தரப்பினர் இடையூறு விளைவித்து வருகின்றனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வினைக் குழப்பும் வகையில், பயங்கரவாதத்தை தோற்கடிப்போம், புலிகளை நினைவுக்கூர வேண்டாம் எனற பதாதைகளை ஏந்தி, போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்து அங்கு கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

அருட்தந்தை சத்திவேல், பிரபல சட்டத்தரணிகள், மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னலிகொட உள்ளிட்டக் குழுவினர் மிகவும் அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்டிருந்தனர்.

https://athavannews.com/2023/1332121

  • கருத்துக்கள உறவுகள்

வேறை யார் பின்னணியில் நிற்பது? அரசியல் லாபம் தேடும் இனவாத கும்பல் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இடையூறு விளைவித்த சிங்கள ராவய

image

(எம்.மனோசித்ரா)

உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் இடம்பெற்ற பேரலங்களில் ஒன்றான முள்ளி வாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு சிவில் சமூக அமைப்புக்களால் வியாழக்கிழமை (18) கொழும்பு - பொரளை கனத்தை மயான சந்தியில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது , சிங்கள ராவய அமைப்பை சேர்ந்த சிலர் அங்கு வந்து நினைவேந்தலை நிறுத்துமாறு ஏற்பாட்டாளர்களுடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

'புலிகளுக்கான நினைவேந்தல் எமக்கு வேண்டாம்' என்ற வசனம் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அங்கு சென்ற சிங்கள ராவய அமைப்பினர் , ஏற்பாடுகளை குழப்புவதற்கும் முயற்சித்தனர்.

இதனால் அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது. நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்க முன்னரே அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிங்கள ராவய அமைப்பினரால் அமைதியற்ற நிலைமை ஏற்பட்ட போது அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நினைவேந்தலை நிறுத்துமாறு ஏற்பாட்டளர்களை அறிவுறுத்தினர்.

எனினும் தாம் எவ்வித குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யவில்லை என்பதால் , நினைவேந்தலை நிறுத்த முடியாதென ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு தரப்பிடம் தெரிவித்ததாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் இவ்வாறான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அங்கு தீபம் ஏற்றப்பட்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டதோடு , கஞ்சி வழங்கப்பட்டது.

அத்தோடு எதிர்வரும் திங்களன்று (22) நீர்கொழும்பு - பால்தி சந்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு பிரிதொரு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் , எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் அங்கும் நினைவேந்தல் இடம்பெறும் என்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

 

IMG_4338.jpg

IMG_4374.jpg

IMG_4456.jpg

IMG_4511.jpg

IMG_4708.jpg

IMG_4456.jpg

IMG_4734.jpg

IMG_5006.jpg

IMG_5056.jpg

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இடையூறு விளைவித்த சிங்கள ராவய | Virakesari.lk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

May 18 A remembrance event for the Tamil people killed in Mullivaikkal in 2009, will be held at 10.30am at the Borella Cemetery roundabout in solidarity with the commemorations being held in the North and East. All are welcome. please bring white flowers along with you if joining...

 

மே 18 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு வடக்கு மற்றும் கிழக்கில் அனுஷ்டிக்கப்படும் நினைவேந்தல்களுக்கு ஒற்றுமையாக பொரளை மயானம் சுற்றுவட்டத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அனைவரும் வருக. சேரும் பட்சத்தில் தயவு செய்து வெள்ளை பூக்களை உடன் கொண்டு வாருங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : கொழும்பில் தமிழர்களுடன் வாக்குவாதம் செய்த சிங்கள அமைப்பினர்

முள்ளிவாய்க்கால் போராட்டம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் உயிர் நீத்தவர்களின் நினைவாக தலைநகர் கொழும்பில் அனுசரிக்கப்பட்ட மே 18 நினைவேந்தல் கூட்டத்தில் சிங்கள அமைப்பைச் சேர்ந்த சிலர் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து, இன்றுடன் 14 வருடங்கள் ஆகிறது.

இதையொட்டி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து நடைபெற்ற பிரதான நிகழ்வு, முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றது.

தலைநகர் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முதல் முறையாக கடந்த ஆண்டு காலி முகத்திடலில் நடத்தப்பட்டது.

அப்போது ஆளும் அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடிய 'கோட்டா கோ கம' போராட்டக்காரர்கள் இந்த போராட்டத்தை முதல் முறையாக நடத்தினர்.

முள்ளிவாய்க்கால் போராட்டம்

இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டும் கொழும்பில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையொட்டி, கொழும்பு - பொரள்ளை பொது மயானத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மூவின மக்கள், யுத்தத்தில் உயிர்நீத்த மக்களை நினைவு கூர்ந்து பொது சுடர் ஏற்றி தமது அஞ்சலியை செலுத்தினர்.

இலங்கை போராட்டம்

பட மூலாதாரம்,R SHANAKIYAN

அப்போது அந்த பகுதிக்கு வந்த சிலர், முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்விற்கு தமது எதிர்ப்பை தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விடுதலைப் புலிகளை நினைவு கூர்வது தமக்கு தேவையில்லை என்ற வாசகங்கள் இடம்பெற்ற காகிதங்களை அவர்கள் தூக்கிப் பிடித்திருந்தனர்.

இதையடுத்து போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த போலீஸார் அங்கு வந்தனர். இருந்தபோதும் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் சில நிமிடங்களுக்கு நீடித்ததால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவியது.

கொழும்பு போராட்டம்

வாக்குவாதம் முற்றியதால், நிலைமையை சமாளிக்க போலீஸார், கலவரத் தடுப்பு பிரிவினர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் சம்பவ பகுதிக்கு வந்தனர். இதையடுத்தே அங்கு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை கொழும்பில் உள்ள தமிழர்கள் அனுசரித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

முள்ளிவாய்க்காலில் என்ன நிலைமை?

முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் இன்று காலை வேளையில், யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளினால் சமய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சைவ ஆகம முறைப்படி, உயிர்நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தியை வேண்டி, பூஜைகள் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து, 10.30 அளவில் பிரதான நிகழ்வு நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வருகைத் தந்த ஆயிரக்கணக்கான மக்கள், தமது உறவுகளை நினைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த தென்னை கன்று மற்றும் விளக்குகளுக்கு அருகாமையில் நின்று தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர்.

இந்நிகழ்வின் ஆரம்பமாக மணி ஓசை எழுப்பப்பட்டது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி

பின்னர் முள்ளிவாய்க்கால் பொது சுடர் ஏற்றப்பட்டு, உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமது உறவுகளை எண்ணி கண்ணீர் மல்க தமது அஞ்சலியை உறவினர்கள் செலுத்தியிருந்தனர்.

"குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்"

முள்ளிவாய்க்கால் கஞ்சி
 
படக்குறிப்பு,

அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங்

இன்றைய நிகழ்வு தொடர்பில் வடகிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுகட்டமைப்பின் இணைத் தலைவர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங், பிபிசி தமிழிடம் பேசினார்.

''இது தனியாக நடக்கும் நினைவுக்கூரல் நிகழ்ச்சி அல்ல. எமது மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுக்கும் நிகழ்வாகவும், இந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற குரலாகவும் இந்த நிகழ்வு அமைந்திருக்கின்றது. ஆகவே இந்த மண்ணிலே படுகொலை செய்யப்பட்ட ஒவ்வொரு எமது தமிழ் உறவுகளையும் நாங்கள் நினைவு கூர்கின்றோம்," என்றார்.

உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்திக்காக வேண்டுகின்றோம். அவர்களின் மனங்களில் இருந்த எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என விரும்பி இந்த இடத்திலே ஒன்று கூடியிருக்கின்றோம். இந்த அநீதிக்கு துணை போனவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது எம்முடைய கோரிக்கைது. எமது மக்களை படுகொலை செய்ய காரணமாக இருந்தவர்கள், நீதிமன்றங்களின் முன் கொண்டு வரப்பட்டு சர்வதேச சட்டங்களின்படி தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டும். ஆகவே இது நினைவேந்தலுடன் நின்று விடும் நிகழ்ச்சி அல்ல. இது எமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒரு அக ரீதியான ஒரு அறவழி போராட்டமாக இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது" என அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங் தெரிவித்தார்.

அகத்தியர்
 
படக்குறிப்பு,

அகத்தியர் அடிகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் தென் கைலை ஆதினத்தின் தலைவரும், வடகிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுகட்டமைப்பின் இணைத் தலைவருமான அகத்தியர் அடிகள் கருத்து தெரிவித்தார்.

''இந்த நிகழ்வானது தமிழ் மக்களின் பேரவலங்கள், அவர்கள் சந்தித்த மரணங்கள், வடுக்களை நினைவு கூரும் நிகழ்வாகவும், என்றுமே அழியாது எமது அடுத்த சந்ததிக்கு கொடுக்கும் முகமாகவும் நடைபெறுகிறது. எங்களுக்கான விடுதலையை வேண்டி நிற்கின்ற சமூகமாக நாங்கள் நிற்கின்றோம். அந்த விடுதலையை அடையும் வரை இந்த முள்ளிவாய்க்காலின் ஊடாக எங்களுடைய அடிமை தனத்தை நீக்குகின்ற, எங்களுக்கான சுதந்திரத்தை வழிவகுக்கின்ற செயல்களை நாங்கள் எல்லோரும் சேர்ந்து செய்வதற்கான பாதையாக இது அமையும் என்ற நம்பிக்கை இருக்கின்றது." என கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cn01pe9qq9eo

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கோ டிசேயின் முகநூல் பதிவு..

 

பொரளையில் முள்ளிவாய்க்கால் நினைவுகூர்தலை, சிங்கள நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ள சிங்கள நண்பனை அங்கு நான் செல்வதற்காகத் தொடர்பு கொண்டேன். அவர் ஏற்கனவே முள்ளிவாய்க்காலில் யுத்தத்தின் பின் எஞ்சிய பொருட்களைக் கொண்டு திறந்தவெளிக் கண்காட்சிகளை பொரளை உள்ளிட்ட இடங்களில் காட்சிப்படுத்தியவர். அப்போதுதான் கோத்தபயா ராஜபக்‌ஷே ஜனாதிபதியாயிருந்தார். அந்த அச்சம்/நெருக்கடிக்குள்ளும் அவர் இந்தப் படுகொலையின் வீரியம் தெரிய தம்மின மக்களிடையே அன்று உரையாடலைச் செய்து கொண்டிருந்தார்.  இந்நினைவு கூர்தலில் நிகழ்வொன்றுடன் கலந்துகொள்ள இருந்த என் நண்பன் ஒருங்கிணைப்பாளர்களுடன் ஏற்பட்ட முரண்களினால் இன்று கலந்துகொள்ளவில்லை என்றார். ஆகவே தனித்தே அங்கே சென்றேன். சாணக்கியன், ஸ்வாதிக்கா,ரஜீவ்காந்த் போன்ற தெரிந்த சில தமிழ் முகங்களைக் கண்டேன். 

சிங்கள இனவாதிகள்,  "இராணுவம் - போர்  வெற்றி நாயகர்கள்" என்ற பதாதையுடன் வந்திறங்கி குழப்பினார்கள். ஒரு சிறு நினைவுகூர்தலுக்கு சாதாரண பொலிஸ், ஆர்ப்பாட்டங்களை அடக்கும் சிறப்பு பொலிஸ் (கறுப்பு உடை), அதிரடிப்படையினர் (STF) எனப் பெரும் படையே வந்திருந்தது.  நிச்சயம் சாதாரண உடைகளில் உளவுத்துறையும் அங்கு மக்களுடன் கலந்து நின்றிருக்கும். கூடவே கண்ணீர்ப்புகை/தண்ணீர் பீச்சும் பாரிய வாகனம் உள்ளிட்ட  இராணுவ வாகனங்களும் அணிவகுத்து நின்றன.

அமைதியான நினைவு கூர்தலுக்கு வழிகோலாது,  வன்மமும், வன்முறையும் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்காது, நினைவுகூர வந்தவர்களையே ஆர்ப்பாட்டங்களை அடக்கும் பொலிஸும், அதிரடிப்படையினரும் "பொக்ஸ்" அடைத்து அடைத்து வீதியின் ஒரு கரைக்குக் கொண்டு வந்து அவ்விடத்தில் இருந்து அகற்றினர். கடந்த வருடம் அரகலியாப் போராட்டம் நடந்தபோது  காலி முகப் போராட்டக்களத்தில்,    
முள்ளிவாய்க்கால் நினைவு கூரப்பட்டபோது இனவாதம் வாலைச் சுருட்டிக் கொஞ்சம் இருந்தது. இம்முறை அவ்வாறில்லை என்று தன் அசல் முகத்தை பல்லிளித்துக் காட்டியது. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை அமைதியாக நினைவுகூர முடியாதுவிட்டாலும், இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு நாம் செல்லவேண்டிய பாதை நெடியது என்பதை இனவாதிகள் தெளிவாக இராணுவ/பொலிஸ் துணையுடன் நமக்குச் சொல்லியிருக்கின்றார்கள்.

நான் ஓட்டோவில் நினைவுகூர்தலுக்காய் சென்று கொண்டிருந்தபோது, எதிரே இன்னொரு ஓட்டோவில் ஒருவர் வெள்ளைச் சட்டை, வெள்ளைக் காற்சட்டை அணிந்து, கையில் வெள்ளைப் பூக்களுடன் இருந்தார். வாகன நெருக்கடியால் நிகழ்விற்கு நேரமாகிவிட்டதென்று ஓட்டோவில் இருந்து அவர் இறங்கி ஓடிப் போகத் தொடங்கினார். அவர் ஓர் உண்மையான மனிதாபிமானிக்குரிய அடையாளம். அவரைப் பின்னர் நிகழ்வில் அடையாளங்கண்டு என்னை அறிமுகப்படுத்தி, நினைவுகூரலுக்கு வந்தமைக்கு நன்றி சொன்னேன்.

இனவாதிகள் இருக்கத் தான் செய்கின்றார்கள். ஆனால் என் சிங்கள நண்பனைப் போல, இந்த வெள்ளைச் சட்டை இளைஞன் போலத்தான் நிறையப் பேர் நிகழ்ந்தவற்றுக்காக வருந்தவும்,  இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முயன்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களிடையே எவ்வகையான அதிகாரமும் இல்லை. எனவே மலையிடுக்குகளில் அடங்கிப் போகும் குரல்களாக இவை இருக்கின்றது.

இன்றைப் போல அல்லாது, என்றோ ஒருநாள் அவர்களின் குரல்கள் பல இலட்சக்கணக்கான கூட்டுக்குரல்களாக வலிமையாக ஒலிக்கக் கூடும். அப்போது இந்த நாடு தனக்கான நிரந்தர அமைதியை அடையக் கூடும். அன்று ஒவ்வொரு சிறுபான்மையினமும் இது தனக்குரிய நாடென்றும் சொல்லி இறும்பூதெய்யவும் கூடும்.

ஆனால் அதுவரை...?

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வருடம் இன்னும் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்ப்போம், அங்கு மாற்றங்கள் வந்தாலும், ஏற்றுக்கொள்ளாமல் சிங்களம் செய்வதை நிஞாயப்படுத்தவும் நம்மில் உள்ளோம். அவர்களும் வாயடைத்து ஒதுங்கும் நாள் ஏற்படும். மரணித்தபோனவர்களை நினைவு கூர்வதை பயங்கரமான செயலாக வர்ணிப்பவர்கள், விகாரை கட்டி ஒற்றுமை, நல்லிணக்கம் வளர்க்கினமாம்! 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொல்லப்பட்ட இந்துக்களுக்கு அஞ்சலி செலுத்த சச்சியரை காணோம், மதம் மாற்றும் கிறிஸ்தவ பாதிரி தான் இங்கேயும் கத்தவேண்டும் போல ...?
கூத்தமைப்பானுகள் மெதுவாக சாணக்கியனை தள்ளிவிட்டுப்போட்டு மத்தவனுகள் எல்லாம் போனை அணைத்துவிட்டு இந்தியாவுக்கு ஓடிட்டானுகள் போல  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்ன கொல்லப்பட்ட இந்துக்களுக்கு அஞ்சலி செலுத்த சச்சியரை காணோம், மதம் மாற்றும் கிறிஸ்தவ பாதிரி தான் இங்கேயும் கத்தவேண்டும் போல ...?
கூத்தமைப்பானுகள் மெதுவாக சாணக்கியனை தள்ளிவிட்டுப்போட்டு மத்தவனுகள் எல்லாம் போனை அணைத்துவிட்டு இந்தியாவுக்கு ஓடிட்டானுகள் போல  

இருக்கிறதையும் அறிக்கை விட்டு கெடுக்கவோ அவரை தேடுகிறீர்கள்? சைவர் வழிபடுவதற்கு கோயில்கள் தேவையில்லை என்று எழுதிக்கொடுத்தவர், சைவர் இறந்தவர்களை நினைவு கூரத்தேவையில்லை, அவர்கள் புல்லாகிப்பூவாகி மரமாகி மீண்டும் பிறப்பர் என்று அறிக்கை விடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் பகுதியில் வழக்கம்போல் அமைதியான முறையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு, தலைநகர் கொழும்பில் கூச்சல் குழப்பத்துடன் நடந்து முடிந்துள்ளது. என்ன நடந்தது? விரிவாகப் பார்க்கலாம்…

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.