Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் தமிழர் காணிகளை விழுங்க ‘ஜே’ வலயம் உருவாக்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் தமிழர் காணிகளை விழுங்க ‘ஜே’ வலயம் உருவாக்கம்!

IMG-20230520-111615.jpg

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ‘ஜே’ வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுகளும் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவும் உள்வாங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் ஏற்கனவே ‘எல்’ வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த 34 கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளன. அவற்றில் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 8 கிராம அலுவலர் பிரிவுகளை உடனடியாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒப்படைக்குமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ் அரசியல்வாதிகளின் தலையீட்டையடுத்து அது ஒத்திப்போடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் புதிதாக ‘ஜே’ வலயம் உருவாக்கப்பட்டு அதனுள் முல்லைத்தீவின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலிருந்து 15 கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்படுவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு உள்வாங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோதும் எத்தனை கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படவில்லை. மேலும் இதே ‘ஜே’ வலயத்தினுள் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவின் 15 கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

மகாவலி ‘ஜே’ வலயத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ள கிராமங்களிலுள்ள அரச மற்றும் தனியார் காணி விவரங்கள், வீதிகள், அங்குள்ள குளங்கள், வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகள், முன்னெடுக்க திட்டமிடப்பட்ட அபிவிருத்திப் பணிகள் உட்பட அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் கடந்த 2ஆம் திகதி தனிச் சிங்கள மொழியில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கில் ஏற்கனவே பல்வேறு அரச திணைக்களங்களாலும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே மகாவலி அபிவிருத்தி அதிகார சபை இந்த நகர்வை முன்னெடுத்துள்ளது.

https://vanakkamlondon.com/world/srilanka/2023/05/194414/

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் முன்னர் ஒரு தடவை நான் இங்கு குறிப்பிட்டிருந்தேன். இரணைமடு குள நீர் விநியோக திடடம் பற்றியது. இந்த குளமானது வடக்கு மாகாண சபையின் கீழ் இருந்தது. இதன் கொள்ளளவை அதிகரித்து யாழுக்கு நீர் விநியோகம் செய்வதட்கு பெரும் பண செலவில் திடடமிடப்பட்டிருந்தது. அரசியல்வாதிகளினதும், அதிகாரிகளினதும் சுயநலத்தினால் இந்த திடடம் கைவிடப்படடயது. இப்போது மகாவலி அபிவிருத்தி திடத்தின் கீழ் இரணைமடு குளம் கொண்டுவரப்பட்டு மகாவலி நீரும் கொண்டுவருவதட்கான திடடம் செயட்படுத்தப்படுகின்றது.

மகாவலி நீர்ப்பாசன திடடதுடன் இணைக்கப்பட்ட்டவுடன் இரணைமடுக்குளமானது மத்திய அரசின் கீழ் வந்துவிடும். எனவே , வலயங்களாக காணிகள் பிரிக்கப்பட்டு குடியேற்றங்கள் இனி தொடங்கப்படும். இனி குய்யோ , முய்யோ என்று சத்தம்போடுவதில் பயனில்லை. தொலை நோக்கற்ற, மற்றவர்கள் சொல்லும் ஆலோசனைகளை கேட்க மறுக்கும் அரசியல்வாதிகளை மக்கள் தெரிவு செய்யும் வரைக்கும் இதுதான் நிலைமை. வன்னி, கிளிநொச்சி அரசியல்வாதிகள்தான் இனி நடக்கப்போகும் சம்பவங்களுக்கு பதில் கூற 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Cruso said:

தொலை நோக்கற்ற, மற்றவர்கள் சொல்லும் ஆலோசனைகளை கேட்க மறுக்கும் அரசியல்வாதிகளை மக்கள் தெரிவு செய்யும் வரைக்கும் இதுதான் நிலைமை

அப்பட்டமான உண்மை ☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னறிவு இல்லாத தமிழ் அரசியல்வாதிகளாலும் விலை போன தமிழ் அரசியல்வாதிகளாலும் உலக மூத்த மொழி தமிழினம் அழிந்து போகின்றது.

நாய்கள் என திட்டி மனதை தேற்றிக்கொள்கின்றேன்.

On 20/5/2023 at 07:49, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வடக்கில் தமிழர் காணிகளை விழுங்க ‘ஜே’ வலயம் உருவாக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

முன்னறிவு இல்லாத தமிழ் அரசியல்வாதிகளாலும் விலை போன தமிழ் அரசியல்வாதிகளாலும் உலக மூத்த மொழி தமிழினம் அழிந்து போகின்றது.

நாய்கள் என திட்டி மனதை தேற்றிக்கொள்கின்றேன்.

உண்மை. ஈழத்திலும், தமிழகத்திலும் இதே நிலைமை. 

  • கருத்துக்கள உறவுகள்

நீரே வராத மகாவலி ஆற்றுத்திட்டத்திற்கு புதிய வலயம் எதற்கு ? - சுரேஷ் கேள்வி

Published By: DIGITAL DESK 3

23 MAY, 2023 | 06:51 PM
image

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவையும் முல்லைத்தீவு மாவட்டத்தையும் மையப்படுத்தி மகாவலி ஜெ வலயம் என்ற பெயரில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் புதிய வலயம் ஒன்றைத் தோற்றுவிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. 

ஏற்கனவே மகாவலி ஆற்றின் நீர் வடக்கு மாகாணத்திற்கு வருவதற்கு சாத்தியமேயில்லை என்று மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் தெரிவித்துள்ள நிலையில் புதிதாக உருவாக்கப்படும் ஜெ வலயத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை உருவாக்குவதற்கான முயற்சியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

நாடு சுதந்திரமடைந்த பின்பு, பல இலட்சம் மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக்கி, அவர்களை நாடுகடத்தினீர்கள். பின்னர் இனக்கலவரங்கள் என்ற பெயரில் தென்பகுதியில் இருந்த தமிழ் மக்களைக் கொன்று, அவர்களது வியாபாரம், சொத்துகளை அழித்து, அவர்களது பூர்வீகத் தாயகமான வடக்கு-கிழக்கிற்குத் துரத்தினீர்கள். 

பின்னர் யுத்தம் ஒன்றைத் தொடங்கி, வடக்கு-கிழக்குத் தமிழர்களை உலகெங்கும் அகதிகளாகத் துரத்தினீர்கள். அவர்களது காணிகளைப் பறிமுதல் செய்து சிங்கள மக்களைக் குடியேற்றினீர்கள்.

இன்று தமிழ் மக்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவு மணலாற்றை மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில், சிங்கள மக்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்து இதற்கு வெலிஓயா என்று பெயரையும் சூட்டியுள்ளீர்கள். 

மகாவலி எல் வலயம் என்று சொல்லப்படும் இந்தப் பிரதேசத்திற்கு இதுவரையில் மகாவலி நீர் எட்டிப்பார்த்ததும் கிடையாது. எட்டிப்பார்க்கப் போவதுமில்லை. மாறாக, அந்நிலங்களில் பூர்வீகமாக பயிர்செய்த தமிழ் மக்களின் காணிகள் பறிமுதல் செய்யப்பட்டு, சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

இன்று மகாவலி எல் வலயத்திற்கே அந்நதியின் நீர் வராத நிலையில், நெடுங்கேணி, மாங்குளம், வவுனிக்குளம், துணுக்காய் போன்ற பிரதேசங்களை உள்ளடக்கி மகாவலி ஜே என்னும் புதியதோர் வலயத்தை உருவாக்குகிறீர்கள். இதுவும் எல் வலயம் போன்று சிங்களக் குடியேற்றங்களுக்கே தவிர, இங்கு மகாவலி நீர் வரப்போவது கிடையாது. 

இந்த புதிய வலயம் தொடங்குவதற்கு முன்பாகவே, நெடுங்கேணியில் 1000ஏக்கர் நிலத்தை சீனக்கம்பெனியின் பினாமி நிறுவனமான தாய்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு, கரும்பு பயிருடுவதற்கு கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ள நிலங்கள் ஏற்கனவே மத்தியதர வகுப்பினருக்குப் பிரித்து வழங்கப்பட்ட நிலங்கள் ஆகும். யுத்தத்தின் காரணமாக அந்த நிலங்கள் காடுமண்டிப்போக, அவற்றை வன இலாகாவிற்குச் சொந்தமான காணிகள் எனக்கூறி, அவற்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கதும் கண்டனத்திற்குரியதுமாகும். 

இவ்வாறான கரும்பு பயிரிடுவதற்கு எத்தனையாயிரம் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்படும் என்பது யாருக்கும் தெரியாது. மணாலாற்றிற்கு நேர்ந்ததுதான் நெடுங்கேணி, மாங்குளம், வவுனிக்குளம் போன்றவற்றிற்கும் ஏற்படும் என்பதை தமிழ் மக்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் மனதில் கொள்ளவேண்டும். 

ஏற்கனவே திருகோணமலையைச் சுற்றிவளைத்து சிங்களக் குடியேற்றத்தின் மூலம், எவ்வாறு சேருவாவில என்ற சிங்கள தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டதோ, அதே போல வவுனியாவைச் சுற்றிவளைத்து, சிங்கள குடியேற்றங்களைக் கொண்டுவருவதற்கான ஒரு திட்டமாகவே இது இருக்கின்றது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், மகாவலி அபிவிருத்தி என்பது முழுக்க முழுக்க சிங்கள குடியேற்றங்களுக்கே என்பதை தமிழ்க் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். மிகப் பாரிய விவசாய நிலப்பரப்பைக் கொண்ட வன்னி மண்ணைப் பாதுகாப்பதன் ஊடாக தமிழ் மக்களின் விவசாயம், பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடியும். 

மாறாக இவற்றை வெளிநாட்டுக் கொம்பனிகளுக்கு விற்பதனூடாக அரசாங்கம் ஏதோவொரு வகையில் தான் நினைத்ததை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விவசாய நிலங்களைத் தாரை வார்ப்பதை தமிழ் மக்கள் முற்றுமுழுதாக நிராகரிப்பதுடன், வடக்கு மாகாண தமிழ் மக்களுக்கு மகாவலி அபிவிருத்தி சபை தேவையில்லை என்பதையும் அரசாங்கம் புரிந்துகொண்டு, அதனை வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோருகின்றோம்  என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/155972

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா.... இத்தனையும் நடந்திருக்கு, நம்ம அரசியல்வாதிகள் நாட்டிலேயேதான் இருந்திருக்கிறார்கள். ஒன்றுமே சொல்லவில்லை, வாக்கு சேகரிக்கும்போது; இழந்ததை மீட்கிறோம் என்றுதானே சொன்னார்கள்? இது எப்போ பறிபோனது? நீங்களும் சொல்லிக்கொண்டும் பட்டியலிட்டுக்கொண்டும் இருங்கள், அவர்களும் பறித்து   ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கட்டும். ஆக்கபூர்வமாய் ஆலோசித்து செயற்பட முயற்சியுங்கள் உங்கள் காணிகளும் பறிபோகும். கொழும்பில் வாழ்கிறோம் என்று வாழா இருக்காதீர்கள். அன்று இனக்கலவரங்கள் செய்து அங்கிருந்தும் துரத்தப்பட்டோம் உங்கள் ஊருக்கு போங்கள் என்று, இன்று இங்கிருந்தும் துரத்தப்பட்டுள்ளோம் இது தங்கள் நாடென்று, ஆதாரம் இருக்கு, அன்று கோத்தா இரவோடு இரவாக கொழும்பில் தங்கியிருந்த வடபகுதி தமிழரை வாகனங்களில் ஏற்றி வவுனியாவில் தள்ளிவிட்டதை, உலகமே பாத்து கண்டனம் தெரிவித்ததையடுத்து மீண்டும் கொழும்புக்கு அழைத்துச் கொண்டு  செல்லப்பட்டார்கள்  இருந்தும் நீங்கள் எதையும் தீவிரமாக எடுத்து தீர்வு காணவில்லையே? எந்த முயற்சியும் எடுக்காமல் இன அழிப்பு என சொல்வதற்கு ஆதாரம் போதாது என்கிறீர்கள். அவனோ நாளாந்தம் சொல்லாலும் செயலாலும் நிரூபிக்கிறான் தனது அடாவடியை உங்களது செயற்திறமையின்மையை பயன்படுத்தி.

6 hours ago, ஏராளன் said:

மாறாக இவற்றை வெளிநாட்டுக் கொம்பனிகளுக்கு விற்பதனூடாக அரசாங்கம் ஏதோவொரு வகையில் தான் நினைத்ததை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அவர்களோடு பேசுங்கள்.  

6 hours ago, ஏராளன் said:

ஏற்கனவே மகாவலி ஆற்றின் நீர் வடக்கு மாகாணத்திற்கு வருவதற்கு சாத்தியமேயில்லை என்று மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் தெரிவித்துள்ள நிலையில் புதிதாக உருவாக்கப்படும் ஜெ வலயத்தின் உண்மையான நோக்கம் என்ன

வழக்குத்தொடுங்கள், தீர்ப்பை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்துங்கள், இதற்க்கு நீதி கிடைக்காவிட்டாலும் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணையை தடுக்க உதவும். ஒவ்வொரு துரும்பையும் ஆதாரமாக பயன்படுத்துங்கள்.        

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

நீரே வராத மகாவலி ஆற்றுத்திட்டத்திற்கு புதிய வலயம் எதற்கு ? - சுரேஷ் கேள்வி

Published By: DIGITAL DESK 3

23 MAY, 2023 | 06:51 PM
image

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவையும் முல்லைத்தீவு மாவட்டத்தையும் மையப்படுத்தி மகாவலி ஜெ வலயம் என்ற பெயரில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் புதிய வலயம் ஒன்றைத் தோற்றுவிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. 

ஏற்கனவே மகாவலி ஆற்றின் நீர் வடக்கு மாகாணத்திற்கு வருவதற்கு சாத்தியமேயில்லை என்று மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் தெரிவித்துள்ள நிலையில் புதிதாக உருவாக்கப்படும் ஜெ வலயத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை உருவாக்குவதற்கான முயற்சியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

நாடு சுதந்திரமடைந்த பின்பு, பல இலட்சம் மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக்கி, அவர்களை நாடுகடத்தினீர்கள். பின்னர் இனக்கலவரங்கள் என்ற பெயரில் தென்பகுதியில் இருந்த தமிழ் மக்களைக் கொன்று, அவர்களது வியாபாரம், சொத்துகளை அழித்து, அவர்களது பூர்வீகத் தாயகமான வடக்கு-கிழக்கிற்குத் துரத்தினீர்கள். 

பின்னர் யுத்தம் ஒன்றைத் தொடங்கி, வடக்கு-கிழக்குத் தமிழர்களை உலகெங்கும் அகதிகளாகத் துரத்தினீர்கள். அவர்களது காணிகளைப் பறிமுதல் செய்து சிங்கள மக்களைக் குடியேற்றினீர்கள்.

இன்று தமிழ் மக்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவு மணலாற்றை மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில், சிங்கள மக்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்து இதற்கு வெலிஓயா என்று பெயரையும் சூட்டியுள்ளீர்கள். 

மகாவலி எல் வலயம் என்று சொல்லப்படும் இந்தப் பிரதேசத்திற்கு இதுவரையில் மகாவலி நீர் எட்டிப்பார்த்ததும் கிடையாது. எட்டிப்பார்க்கப் போவதுமில்லை. மாறாக, அந்நிலங்களில் பூர்வீகமாக பயிர்செய்த தமிழ் மக்களின் காணிகள் பறிமுதல் செய்யப்பட்டு, சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

இன்று மகாவலி எல் வலயத்திற்கே அந்நதியின் நீர் வராத நிலையில், நெடுங்கேணி, மாங்குளம், வவுனிக்குளம், துணுக்காய் போன்ற பிரதேசங்களை உள்ளடக்கி மகாவலி ஜே என்னும் புதியதோர் வலயத்தை உருவாக்குகிறீர்கள். இதுவும் எல் வலயம் போன்று சிங்களக் குடியேற்றங்களுக்கே தவிர, இங்கு மகாவலி நீர் வரப்போவது கிடையாது. 

இந்த புதிய வலயம் தொடங்குவதற்கு முன்பாகவே, நெடுங்கேணியில் 1000ஏக்கர் நிலத்தை சீனக்கம்பெனியின் பினாமி நிறுவனமான தாய்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு, கரும்பு பயிருடுவதற்கு கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ள நிலங்கள் ஏற்கனவே மத்தியதர வகுப்பினருக்குப் பிரித்து வழங்கப்பட்ட நிலங்கள் ஆகும். யுத்தத்தின் காரணமாக அந்த நிலங்கள் காடுமண்டிப்போக, அவற்றை வன இலாகாவிற்குச் சொந்தமான காணிகள் எனக்கூறி, அவற்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கதும் கண்டனத்திற்குரியதுமாகும். 

இவ்வாறான கரும்பு பயிரிடுவதற்கு எத்தனையாயிரம் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்படும் என்பது யாருக்கும் தெரியாது. மணாலாற்றிற்கு நேர்ந்ததுதான் நெடுங்கேணி, மாங்குளம், வவுனிக்குளம் போன்றவற்றிற்கும் ஏற்படும் என்பதை தமிழ் மக்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் மனதில் கொள்ளவேண்டும். 

ஏற்கனவே திருகோணமலையைச் சுற்றிவளைத்து சிங்களக் குடியேற்றத்தின் மூலம், எவ்வாறு சேருவாவில என்ற சிங்கள தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டதோ, அதே போல வவுனியாவைச் சுற்றிவளைத்து, சிங்கள குடியேற்றங்களைக் கொண்டுவருவதற்கான ஒரு திட்டமாகவே இது இருக்கின்றது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், மகாவலி அபிவிருத்தி என்பது முழுக்க முழுக்க சிங்கள குடியேற்றங்களுக்கே என்பதை தமிழ்க் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். மிகப் பாரிய விவசாய நிலப்பரப்பைக் கொண்ட வன்னி மண்ணைப் பாதுகாப்பதன் ஊடாக தமிழ் மக்களின் விவசாயம், பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடியும். 

மாறாக இவற்றை வெளிநாட்டுக் கொம்பனிகளுக்கு விற்பதனூடாக அரசாங்கம் ஏதோவொரு வகையில் தான் நினைத்ததை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விவசாய நிலங்களைத் தாரை வார்ப்பதை தமிழ் மக்கள் முற்றுமுழுதாக நிராகரிப்பதுடன், வடக்கு மாகாண தமிழ் மக்களுக்கு மகாவலி அபிவிருத்தி சபை தேவையில்லை என்பதையும் அரசாங்கம் புரிந்துகொண்டு, அதனை வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோருகின்றோம்  என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/155972

இந்த மண்டையன் இலங்கையில் இருக்கிறாரா இல்லை சந்திர மண்டலத்தில் இருக்கிறாரா? அறிக்கை விடுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.

இரணைமடு குளத்து நீரை யாழுக்கு கொண்டுபோவதட்கு சுய நலத்துடன் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு இப்போது அறிக்கை விடுகிறார். இவர்களுக்கெல்லாம் கிளிநொச்சியில் விவசாய நிலங்கள் இருக்கிறது.

மகாவலி நீரை இரணை மடுவுக்கு கொண்டு வருவதட்கு இரண்டு வருடங்களுக்கு முன்னரே பணம் ஒதுக்கி வேலையும் நடந்து கொண்டிருக்கிறது. இவர் இப்போது ஒன்றும் தெரியாதவர் போல பேசுகின்றார். தமிழனின் தலை எழுத்து.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/5/2023 at 21:54, Cruso said:

இதைத்தான் முன்னர் ஒரு தடவை நான் இங்கு குறிப்பிட்டிருந்தேன். இரணைமடு குள நீர் விநியோக திடடம் பற்றியது. இந்த குளமானது வடக்கு மாகாண சபையின் கீழ் இருந்தது. இதன் கொள்ளளவை அதிகரித்து யாழுக்கு நீர் விநியோகம் செய்வதட்கு பெரும் பண செலவில் திடடமிடப்பட்டிருந்தது. அரசியல்வாதிகளினதும், அதிகாரிகளினதும் சுயநலத்தினால் இந்த திடடம் கைவிடப்படடயது. இப்போது மகாவலி அபிவிருத்தி திடத்தின் கீழ் இரணைமடு குளம் கொண்டுவரப்பட்டு மகாவலி நீரும் கொண்டுவருவதட்கான திடடம் செயட்படுத்தப்படுகின்றது.

மகாவலி நீர்ப்பாசன திடடதுடன் இணைக்கப்பட்ட்டவுடன் இரணைமடுக்குளமானது மத்திய அரசின் கீழ் வந்துவிடும். எனவே , வலயங்களாக காணிகள் பிரிக்கப்பட்டு குடியேற்றங்கள் இனி தொடங்கப்படும். இனி குய்யோ , முய்யோ என்று சத்தம்போடுவதில் பயனில்லை. தொலை நோக்கற்ற, மற்றவர்கள் சொல்லும் ஆலோசனைகளை கேட்க மறுக்கும் அரசியல்வாதிகளை மக்கள் தெரிவு செய்யும் வரைக்கும் இதுதான் நிலைமை. வன்னி, கிளிநொச்சி அரசியல்வாதிகள்தான் இனி நடக்கப்போகும் சம்பவங்களுக்கு பதில் கூற 

உங்களின் கடந்தகால தற்போதைய பதிவுகளை பார்க்கும் போது நீங்கள் மகாவலி திட்டத்தில் பணியாற்றுகிறீர்கள் போலுள்ளது எனது கணிப்பு சரியாக இருந்தால் மகிழ்ச்சி. இதை தமிழராகிய நாம் எப்படி முறியடிப்பது என்று ஆலோசனை இரகசியமாக கொடுக்கலாம். யாருக்கு என்பதும் கேள்வி? இதற்காக உதவி செய்யும் நிறுவனங்களுக்கு அறிவிக்கலாம். ஒரு சின்ன உதவியும் சிங்களவனின் ஆக்கிரமிப்பை தடுத்தோ தாமதப்படுத்தியோ நமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள மாட்டோமா என்கிற நப்பாசை. தவறிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்!     

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, satan said:

இது இப்போது இலகுவான விடயமாக இருக்காது. இரணைமடு நீர் திடடம் வந்தபோது இந்த பிரச்சினைகள் எல்லாம் எல்லா அரசியல்வாதிகளுக்கும் அங்குள்ள மக்களுக்கும் விரிவாக எடுத்துக்கூறப்பட்ட்து. விசேடமாக, அப்போது முதலமைச்சராக இருந்த CV விக்னேஸ்வரன், மாவை, ஸ்ரீதரன் போன்றவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்ட்து.

இங்கு பிரச்சினை என்னவென்றால் சுயநலம். அங்கு வேலை செய்யும் அதிகாரிகள் , அரசியல்வாதிகள் எல்லோருக்கும் வேளாண்மை காணிகள் வைத்திருக்கிறார்கள். இங்கிருந்து நீர் யாழ்ப்பாணம் கொண்டுபோகப்படடாள் தங்களது விவசாயத்துக்கு பாதிப்பு உண்டாகும்  என்று கருதி மக்களை தூண்டி விடடார்கள்.

ஆனால் அப்படி நடப்பதட்கு சந்தர்ப்பம் இருக்கவில்லை. யாழுக்கு கொண்டுபோகும்  நீரின் அளவு கணக்கிடப்பட்டு , அதன் அணைக்கட்டு உயர்த்தப்படுவதட்கான திடடம் விரிவாக தீட்டிடப்பட்டிருந்தது. அந்த திடடம் கைவிடப்பட்டு வேறு திடடம் உருவாக்கப்பட்டு அடுத்த வருட ஆரம்பத்தில் யாழ் மாவடடம் முழுவது நீர் வழங்கப்படும்.

இதன் பின்னர் மகாவலி திடத்தின் கீழ் இது உள்வாங்கப்பட்டு அந்த திடடம் செயன்முறையில் இருக்கின்றது. இனிமேல் செய்வதட்கு ஒன்றுமே இல்லை. நாம் வேணாம் என்று கூறினாலும் சிங்களவர்கள் அதட்கு தயார் இல்லை. தூர நோக்கற்ற அரசியல்வாதிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Cruso said:

இவ்வளவு விடயங்களும்… நமது தமிழ் அரசியல் வாதிகளுக்கு எடுத்துக் கூறிய பின்பும்
அவர்கள் தமது சுய நலத்துக்காக பேசாமல் இருந்து விட்டு,
இப்போ காலம் கடந்த பின்… வாக்கு அரசியல் செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள். 

எமது பிரச்சினையை… மேலும் மோசமாக்கி, இடியப்ப சிக்கல் ஆக்கியதே…
இந்த கேடு கெட்ட தமிழ் அரசியல்வாதிகள் தான். 🙁

  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2023 at 02:53, ஏராளன் said:

ஏற்கனவே மகாவலி ஆற்றின் நீர் வடக்கு மாகாணத்திற்கு வருவதற்கு சாத்தியமேயில்லை என்று மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் தெரிவித்துள்ள நிலையில்

On 24/5/2023 at 11:00, Cruso said:

மகாவலி நீரை இரணை மடுவுக்கு கொண்டு வருவதட்கு இரண்டு வருடங்களுக்கு முன்னரே பணம் ஒதுக்கி வேலையும் நடந்து கொண்டிருக்கிறது.

On 25/5/2023 at 11:05, Cruso said:

இரணைமடு நீர் திடடம் வந்தபோது இந்த பிரச்சினைகள் எல்லாம் எல்லா அரசியல்வாதிகளுக்கும் அங்குள்ள மக்களுக்கும் விரிவாக எடுத்துக்கூறப்பட்ட்து. விசேடமாக, அப்போது முதலமைச்சராக இருந்த CV விக்னேஸ்வரன், மாவை, ஸ்ரீதரன் போன்றவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்ட்து.

நான் நினைக்கிறேன் முன்னாள் ஆளுநர் ஒரு சந்திப்பில் இது பற்றி தெரிவித்து, அந்த விசாரணையின் முடிவுகள் வந்ததும் நடவடிக்கை எடுப்பதாக. தமது பிழைகளை மறைக்க மற்றவர்மேல் பழியைப்போட்டு தாம் தப்பி விடுவர். இல்லை தெரியாதது போல் மவுனமாக இருப்பது. இதுதான் நம் தலைவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்தவருடம் அரிச்சல்முனை என்று நினைக்கிறன், ஒருபாதிரியார் தலைமையில் தமிழர் காணி அபகரிப்பிற்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போ அவர் குறிப்பிட்டது, இந்த திட்டம் யாரால், எப்போது, எதன் கீழ் எடுக்கப்பட்டது என்றும், தாம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். எங்கள் தலைமைகள்; நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரத்தில் அவர்களுக்கு அவகாசம் குடுத்து தூங்கி விட்டு, திடீரென்று எழும்பி எச்சரிப்பது, அறிக்கை விடுவதில் வல்லவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பறிபோகும் நிலையில் 37 தமிழ் கிராமங்கள் : இன அழிப்பின் நீண்டகால தந்திரமே மகாவலி அதிகார சபையின் செயல்பாடு - சார்ள்ஸ் நிர்மலநாதன்

Published By: VISHNU

28 MAY, 2023 | 03:28 PM
image
 
மகாவலி அதிகார சபையின் செயல்பாடு என்பது தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களின் இனப் பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை தமிழர் தாயகப் பகுதிகளுக்குள் கொண்டுவருவதற்கும் தமிழர்களை இன ரீதியாக இல்லாமல் செய்வதற்குமான இன அழிப்பின் நீண்ட கால தந்திரமான செயற்பாடு தான் இந்த மகாவலியின் செயல்பாடு என்றும் இதை முழுமையாக கண்டிப்பதாகவும் முழுமையாக எதிர்ப்பதாகவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் இன்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்,, 

மகாவலி அதிகார சபையால் முல்லைத்தீவு, வவுனியா, மாவட்டங்களில் 1988  ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் 14 கிராம அலுவலர் பிரிவுகள் அபகரிக்கப்பட்டு  யுத்தத்தில் மக்கள் இடம் பெயர்ந்த போது முழுமையாக அங்கு சிங்கள குடியேற்றங்களை நிறுவிவெலி ஓயா என்ற ஒரு புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

வடக்கு கிழக்கை பிரிக்கின்ற நோக்கத்துக்காக இந்த மகாவலி அதிகார சபை புதிய ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்கி பிற்பாடு கொக்கிளாய் முதல் செம்மலை வரை இருக்கின்ற 6 கிராம சேவகர் பிரிவுகளை அபகரிக்க முயற்சி எடுத்த போது எங்களுடைய தொடர் அழுத்தம் காரணமாக தற்காலிகமாக அந்த திட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது. 

மகாவலி என்பது தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களையும் சிங்கள இனப்பரம்பலையும் செய்வதற்காக அரசாங்கத்தால் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு செயல்பாடு

அந்த வகையில் தற்பொழுது  மகாவலி “J” வலயம் என்ற ஒன்றை புதிதாக உருவாக்குவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கும் 7 கிராம அலுவலர் பிரிவுகளும் ,மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் இருக்கின்ற 15 கிராம அலுவலர்கள் பிரிவுகளும், மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 15 கிராம அலுவலர் பிரிவுகளும் உள்ளடங்களாக மொத்தம் 37 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி மகாவலி அதிகார சபை  புதிய  வர்த்தமானி அறிவித்தல் செய்வதற்காக பிரதேச செயலகங்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது .

இவ்விடயத்தை எதிர்த்து நான் பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை முன் வைத்திருக்கிறேன். அதற்கு நீர்ப்பாசன அமைச்சர் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது பதில் அளிப்பதாக கூறியிருக்கிறார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில்  பாலியாறு, அந்தோனியார்புரம், ஆத்திமோட்டை, இலுப்பக்கடவை, கள்ளியடி ,கூராய், கோவில் குளம், காயா நகர் ,பெரிய மடு கிழக்கு, பெரிய மடு தெற்கு பள்ளமடு ,விடத்தல்தீவு கிழக்கு,விடத்தல் தீவு மேற்கு,விடத்தல் தீவு வடக்கு,விடத்தல்தீவு மத்தி ஆகிய கிராமங்களையும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவில்  அனிச்சங்குளம், பாரதி நகர் ,புகழேந்தி நகர் திருநகர் ,ஜோக புரம் மத்தி,ஜோக புரம் கிழக்கு,ஜோக புரம் மேற்கு கிராமங்களும் ,மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் அம்பாள் புரம், கரும்புள்ளையான் ,கொல்லி விலாங்குளம், மூன்று முறிப்பு,நெட்டாங்கண்டல்,கொட்டருத்த குளம், பாலிநகர், பாண்டியன் குளம், பொன் நகர், பூவரசங்குளம் ,செல்வபுரம் ,சீராட்டி குளம், சிவபுரம் வன்னி விளாங்குளம், விநாயகபுரம் ஆகிய 37 கிராம அலுவலர் பிரிவுகளையும் “J” வலயத்தின் ஊடாக   மகாவலி அதிகார சபையில் கீழ் கொண்டு வந்து இந்த நிலங்களில் இருக்கும் குளங்களின் கீழ் காணப்படுகின்ற வன இலாக திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் கீழ் உள்ள காணிகளை அபகரித்து அதன் மூலம் சிங்கள மக்களுக்கு அதை நீண்ட கால குத்தகை  வழங்குவதோ அல்லது அந்த பிரதேசத்தில் சிங்கள மக்களை குடியேற்றுவதுதான் மிக வேகமாக மகாவலி அதிகார சபை செய்யப்படுகின்றது.

 மகாவலி L வலயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1988 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நிர்ணயம் செய்யப்பட்டது. இன்றைக்கு 35 வருடங்கள் கடந்தும் மகா வலி தண்ணீர் இன்னும் வரவில்லை.

மகாவலி தண்ணீர் அங்கு  வராமல் இருக்கும் போது அங்கு புதிய சிங்கள பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டு சிங்கள மக்களும் குடியேற்றப்பட்டு மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள்.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் இந்த திட்டம் என்பது தமிழர்களுடைய இன பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை இங்கு கொண்டுவருவதற்கும் தமிழர்களை இனரீதியாக இல்லாமல் செய்வதற்கு  இன அழிப்பின் ஒரு நீண்ட கால தந்திரமான செயல்பாடுதான் இந்த மகாவலி அதிகார சபையின் செயல்பாடு.

 இதை முழுமையாக நாங்கள் கண்டிக்கின்றோம். முழுமையாக எதிர்க்கின்றோம். இதை நடைமுறைப்படுத்த விடாமல் செய்வதற்கு பல முயற்சி செய்துள்ளேன். பாராளுமன்றத்தில் பிரேரணையை முன் வைத்துள்ளேன். அதையும் மீறி ஜனாதிபதியை  சந்திப்பதற்காக நான் அனுமதி கேட்டிருக்கின்றேன். அவரிடம் குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்துவேன். 

அதையும் மீறி மகாவலி “J” வலயம் மகாவலி அதிகார சபையினால் வர்த்தமானி பிரசுரம் செய்யப்பட்டால் வெகுஜன போராட்டத்தின் ஊடாக மக்கள் போராட்டத்தின் ஊடாக முழுமையாக முல்லைத்தீவு , மன்னார் மக்கள் இணைந்ததை இத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/156371

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

நாங்கள் விரிவாக எடுத்து கூறியபோது மடையர்கள் போல இருந்துவிட்டு இப்போது மக்கள் போராட வேண்டுமென்று கூறி வருகிறார்கள்.

அப்போது நடந்த கூட்ட்ங்களில் பங்குபற்றிய இவரது தலைவர் மாவையிடம் கேள்வி கேட்கலாமே? இவர்களுக்கு எல்லாமே தெரியும். இருந்தும் தெரியாதவர்கள் போல நடிக்கிறார்கள்.

இவர்கள் மட்டும் ஒழுங்காக இருந்திருந்திருந்தால் , விடயம் தெரிந்தவர்களின் ஆலோசனைகளை கேட்டிருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்க சந்தர்ப்பமும் இல்லை, மக்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க தேவையுமில்லை.

அன்றாடம் உழைத்து வாழும் மக்களின் உழைப்புதான் வீணாகின்றது. அரசியல் வாதிகளிடம் பணம் இருக்கின்றது, வியாபாரம் இருக்கின்றது , கவலைப்பட தேவை இல்லை. சாதாரண மக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மகாவலி 'ஜே' வலயத்துக்கு தகவல்களை வழங்கவேண்டாம் ; முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம்

Published By: DIGITAL DESK 3

01 JUN, 2023 | 04:55 PM
image
 
மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் 'ஜே' வலயத்துக்கு கோரப்பட்டுள்ள தகவல்களை பிரதேச செயலர்கள், மாவட்டச் செயலர்கள் வழங்கக் கூடாது என்று முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் புதன்கிழமை (31)தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் ஊடாக 'ஜே' வலயத்தை முன்னெடுப்பதற்குரிய தரவுகள் அதன் கீழ் உள்ளடங்கும் பிரதேச செயலர்களிடம் கோரப்பட்டிருந்தன. 

37 கிராம அலுவலர் பிரிவுகள் இதன் கீழ் உள்ளடங்குகின்றன. இந்த விடயம் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

மகாவலி 'எல்' வலயத்துக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வலயத்துக்கு முல்லைத்தீவின் 34 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளடங்கியிருந்தன. இந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே மகாவலி 'ஜே' வலயத்துக்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியுடன் நேரடியாகக் கலந்துரையாடுவதாகவும் புதன்கிழமை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், வினோநோதராதலிங்கம், கு.திலீபன், ரிசாத் பதியுதீன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/156709

உங்கள் தீர்மானங்கள் , நடவடிக்கைகள் எல்லாம் அவர்களை ஒன்றுமே செய்யாது. அவர்கள் இதர்க்கென்று ஒரு road map ஐயே போட்டு வைத்திருக்கிறார்கள்.

உங்களுக்கு எத்தனைபேருக்கு ஞாபகம் இருக்குதோ தெரியவில்லை, யாழ் அலுவகத்தில் இருந்து எல்லா காணி சம்பந்தமான தகவல்களையும் அனுராதபுரம் கொண்டு போய் இருந்தார்கள். சில காலத்தில் திருப்பி கொடுத்து விடடாலும் எல்லா தகவலையும் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள்.

எனவே இரணைமடு குளத்துடன் இணைந்ததாக இந்த திடடம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மகாவலி கே, ஜே வலயங்களை கைவிடுங்கள் - சார்ள்ஸ் எம்.பி. ஜனாதிபதிக்கு கடிதம்

Published By: NANTHINI

10 JUN, 2023 | 07:51 PM
image
 
(ஆர்.ராம்)

மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழான கே மற்றும் ஜே வலயங்களை உருவாக்குவதற்கான திட்டத்தினை முழுமையாக கைவிடுமாறு கோரி இலங்கை தமிழரசு கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கடிதத்தினை கையளித்துள்ளார்.

அந்த கடிதத்தில் மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழான கே மற்றும் ஜே வலயங்களை உருவாக்குவதற்காக மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகங்களில் காணிகள் மற்றும் இதர விபரங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்த இரு வலயங்களையும் உருவாக்கி விஸ்தரிக்க முயல்வதால் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் பறிபோவதுடன் மக்கள் குடிப்பரம்பலில் மாற்றம் நிகழ்வதற்கான சூழல்களும் உள்ளன.

குறிப்பாக, ஜே வலயத்தினை முன்னெடுப்பதன் ஊடாக 37 கிராமங்களை இழக்கவேண்டிய நிலைமைகள் காணப்படுகின்றன. அத்துடன், குறித்த வலயங்களுக்கு மகாவலி கங்கையின் நீர் கொண்டுவரப்படுவதும் கேள்விக்குறியான விடயமாகும்.

எனவே, மக்களின் நன்மை கருதி மேற்படி இரு வலயங்களுக்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்காதிருக்குமாறு தீர்மானமொன்றை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/157424

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2023 at 11:53, Cruso said:

உங்களுக்கு எத்தனைபேருக்கு ஞாபகம் இருக்குதோ தெரியவில்லை, யாழ் அலுவகத்தில் இருந்து எல்லா காணி சம்பந்தமான தகவல்களையும் அனுராதபுரம் கொண்டு போய் இருந்தார்கள். சில காலத்தில் திருப்பி கொடுத்து விடடாலும் எல்லா தகவலையும் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள்.

ஆமாம் நடந்தது. எதிர்ப்பு கிளம்பியதால் திருப்பி கொண்டுவந்தாலும் எதற்காக எடுத்துச் சென்றார்களோ அதை அவர்கள் நிறைவேற்றியிருப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக் கொண்டு வருவதை சிறிதரன் கடுமையாக எதிர்த்தார். காரணம் அரசியல்.இப்போழுது இரணைமடுக்குளம்  மகாவலி அபிலிருத்தியுடன் இணைக்கப்பட்டு விட்டுது என்றால் சிங்களக் குடியேற்றங்கள் விரைவாக நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக் கொண்டு வருவதை சிறிதரன் கடுமையாக எதிர்த்தார். காரணம் அரசியல்.இப்போழுது இரணைமடுக்குளம்  மகாவலி அபிலிருத்தியுடன் இணைக்கப்பட்டு விட்டுது என்றால் சிங்களக் குடியேற்றங்கள் விரைவாக நடக்கும்.

ஸ்ரீதரன் மட்டுமல்ல அந்த கூடடத்தில் பங்கு பற்றிய அப்போதைய முதலமைச்சர் விக்கி அவர்களும், மாவை அவர்களும் எதிர்த்தார்கள். அங்கு வெள்ளாமை காணி வைத்திருந்த அதிகாரிகளும் எதிர்த்தார்கள். மக்களை தூண்டி விட்டு போராட்டமும் நடத்தினார்கள். இதன் எதிரொலியாக இந்த திட்ட்துக்கு ADB பணம் தர மறுத்து விட்ட்து. ADB இன் கொள்கைகளில் ஒன்று, மக்கள் எதிர்த்தால் அதட்கு நிதி உதவி செய்யாது. 

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி ....வாற வலயம் எல்லாம் வரட்டும், எல்லாம் முடிந்த பின் ஒரு ஆறேழு பேரோட போய் பற்றைக்குள் படுத்திருந்து போட்டோ எடுத்துப்போட்டால் வால்கள் எல்லாம் திரும்பவும் நம்மளை தேசிய வீரராக்கி அழகு பார்ப்பினம்.  

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, அக்னியஷ்த்ரா said:

சரி சரி ....வாற வலயம் எல்லாம் வரட்டும், எல்லாம் முடிந்த பின் ஒரு ஆறேழு பேரோட போய் பற்றைக்குள் படுத்திருந்து போட்டோ எடுத்துப்போட்டால் வால்கள் எல்லாம் திரும்பவும் நம்மளை தேசிய வீரராக்கி அழகு பார்ப்பினம்.  

அவர் பற்றைக்குள் படுத்திருந்ததை போட்டோ எடுத்தது, அந்தப்போராட்டத்தை கொச்சைப்படுத்த, அவர் கண்ணயரும்போது எடுக்கப்பட்டது. இது ஒரு கோழைத்தனமான செயல்!

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'Zulker Nayeem நான் ஏறாவரைச் சேர்ந்தவன் ஏறாவரை அண்மித்த குடியிருப்பு தமிழ்க் கிராமத்தை 75 வீதம் நல்ல விலை கொடுத்து வாங்கி விட்டோம். சவுக்கடி தமிழ்க்கிராமம் அதில் 80 வீதம் எங்களால் வாங்கப்பட்டு தளவாய் தமிழ்க் கிராமம் 70 % ஆன காணிகள் எங்களால் வாங்கப்பட்டு விட்டது நாலாம் குறிச்சி தமிழ்க் கிராமம் இரு கோயில்களையும் சில. வீடுகளையும் தவிர மற்ற அனைத்துக் காணிகளும் வாங்கப்பட்டு விட்டது தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பின்னாலுள்ள காணிகள் வாங்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் பத்து வருடங்களில் இந்தத் தமிழ்க்கீராமங்கள் அனைத்தும் முஸ்லிம் ஊர்களாக அபிவிருத்தி செய்யப் படும் உன்னால் முடிந்தால் தடுத்துப்பார்'

ஒரு பக்கம் சிங்களவர், மறு  பக்கம் முஸ்லீம் என்று... 
தமிழ் நிலம் பறி போய்க் கொண்டுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு பத்து வருடங்களில் வடக்கு கிழக்கு என்பது தமிழரின் பாரம்பரிய நிலங்கள் எனும் வரலாறு துடைத்தெறியப்பட்டிருக்கும். இனப்பிரச்சனைக்கான அடிப்படையே இந்தப் பாரம்பரிய நிலங்கள்  என்பதுதான். 

அதனை இல்லாதொழித்துவிட்டால் இனப்பிரச்சனைக்கான அடிப்படை இல்லாமல் செய்யப்பட்டுவிடும்.  

இதனைத் திட்டமிட்ட அடிப்படையில்  இந்திய + மேற்கின் அனுசரணையுடன் இலங்கை மேற்கொள்கிறதா எனும் சந்தேகம் எழுகிறது. 

இதுகூடப் புரியாத நிலையில்தான் எங்கள் புலம்பெயர்ஸ் டமில் டேசியவாதிகள் இருக்கிறார்கள். 

ஆத்திரக்காறனுக்கு புத்தி மட்டம் என்பார்கள்.

புலம்பெயர்ஸ் களிடம் ஆத்திரம் இருக்கும் அளவுக்கு புத்தி இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.