Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலி புலனாய்வாளர் படுகொலை: கண்டால் அறிவிக்கவும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image_e9da95e333.jpgலெப்டினன்ட் கேர்ணல் துவான் முத்தலிஃப் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான வர்த்தகர், பொரளையில் வைத்து 20.05.2023 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் அடையாளம் காணப்பட்ட நபரின் புகைப்படத்தை பொலிஸ் தலைமையகம் அனுப்பிவைத்துள்ளது.

இந்தப் படுகொலைக்கு ரி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டுள்ளது.

படத்தில் உள்ள மேற்படி நபர், தான் வசிக்கும் இடத்தில் இருந்து தலைமறைவாகி விட்டார். அவர் தொடர்பிலான தகவல் கிடைத்தால், 0718591733, 0718591735 அல்லது 0718596503 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சந்தேகநபரான லங்கா ஏக்கநாயக்க, 1989.03.19 அன்று பிறந்துள்ளார். 33 வயதான இந்த நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கம், 890790410 v என்பதுடன், இவர் கொதட்டுவ மற்றும் மருதானை  ஆகிய இரண்டு இடங்களை வசிப்பிடமாகக் கொண்டுள்ளார்.

இரவு விடுதியின் முகாமையாளரான இவர், தனது இடது கையின் மணிக்கட்டுக்கு மேல், பறவையொன்றின் இறக்கையை, கருப்பு நிறத்தில் பச்சைக்குத்தியுள்ளார் என்றும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொரளையில் படுகொலைச் செய்யப்பட்டவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் புலனாய்வாளர் ஆவார். அவரை படுகொலைச் செய்வதற்கு வந்த ஆயுததாரிகள் பயன்படுத்தி கெப் ரக வாகனம் இம்புல்கொடயில் வைத்து கொழும்பு குற்றப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


புலி புலனாய்வாளர் படுகொலை: துரும்பு சிக்கியது

லெப்டினன்ட் கேர்ணல் துவான் முத்தலிஃப் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான வர்த்தகர், பொரளையில் வைத்து அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் புலனாய்வாளர் ஆவார். அவரை படுகொலைச் செய்வதற்கு வந்த ஆயுததாரிகள் பயன்படுத்தி கெப் ரக வாகனம் இம்புல்கொடயில் வைத்து கொழும்பு குற்றப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த கெப் ரக வாகனத்தின் உரிமையாளர், இராணுவத்தின் மேஜர் ஆவார் என்று  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கெப் ரக வாகனத்தை இராணுவ மேஜர், கொள்ளுப்பிட்டியில் உள்ள வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

வர்த்தகரை படுகொலைச் செய்தவர்கள் இந்த வாகனத்தை வாடகைக்கு அமர்த்தியே இந்த குற்றச்செயலை புரிந்துள்ளனர் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கித்தாரிகள் இருவரும், அந்த கெப்ரக வாகனத்தில் பொரளை குறுக்கு வீதிக்கு வந்துள்ளனர். அதன்பின்னர் அவ்விடத்தில் இறங்கி மோட்டார் சைக்கிளில் பேஸ்லைன் ஊடாக லெஸ்லி ரணகல மாவத்தைக்குச் சென்று இந்தக் குற்றச்செயலை புரிந்துள்ளனர்.  

இந்த படுகொலைக்கு ஒத்துழைப்பு நல்கினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் நால்வர் கைது செய்யப்பட்டு, பொலிஸாரின் பொறுப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Tamilmirror Online || புலி புலனாய்வாளர் படுகொலை: துரும்பு சிக்கியது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வர்த்தகரை சுட்டுக் கொன்றுவிட்டு இல்லாத புலியின் முன்னாள் புலனாய்வாளர் என்ற பெயரில்.. அரங்கேறி இருக்கும் படுகொலை. இன்னும் எத்தனை தமிழ் உயிர்களை பலியெடுக்கும் இன்னொரு தொடக்கமாகக் கூட இது அமையலாம். 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்டவர் ஒரு சிங்களவர் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தன் said:

கொல்லப்பட்டவர் ஒரு சிங்களவர் என நினைக்கின்றேன்.

ஆமாம். சுட்டு கொல்லப்படடவர் சுத்த சிங்களவர். கடந்தவாரம் இந்த கொலை அரங்கேறியது. நெடுக்ஸ் கொஞ்சம் குழம்பிவிடடர்போல தெரியுது.  

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பிழம்பு said:

இவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் புலனாய்வாளர் ஆவார். அவரை படுகொலைச் செய்வதற்கு வந்த ஆயுததாரிகள் பயன்படுத்தி கெப் ரக வாகனம் இம்புல்கொடயில் வைத்து கொழும்பு குற்றப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

12 hours ago, பிழம்பு said:

லெப்டினன்ட் கேர்ணல் துவான் முத்தலிஃப் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான வர்த்தகர், பொரளையில் வைத்து 20.05.2023 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார்.

செய்தியில் குழப்பம் என நினைக்கிறன். லெப்டினன்ட் கேர்ணல் துவான் முத்தலிஃப், இவர் புலிகளுக்கெதிரான போரில் புலனாய்வாளராக செயற்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டவர் என வாசித்த ஞாபகம். எனக்கென்னவோ ஆமிதான் இதை செய்திருக்குமென தோன்றுகிறது!

9 minutes ago, satan said:

 

செய்தியில் குழப்பம் என நினைக்கிறன். லெப்டினன்ட் கேர்ணல் துவான் முத்தலிஃப், இவர் புலிகளுக்கெதிரான போரில் புலனாய்வாளராக செயற்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டவர் என வாசித்த ஞாபகம். எனக்கென்னவோ ஆமிதான் இதை செய்திருக்குமென தோன்றுகிறது!

வர்த்தகர் ஒரு சிங்களவர். முத்தலிப் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு கைதாகி பின்னர் பிணையில்(?) விடுக்கப்பட்டவர்.

அவரைச் சுட்டவர்களும் சிங்களவர்கள். அதில் தேடப்படுபவர் முக்கியமான சந்தேக நபர். அவர் தலைமறைவாகி விட்டார்.

இவ்வாறு தான் செய்தியை நான் விளங்கிக் கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அதற்குள் ஏன் தமிழீழ விடுதலைப்புலிகளை செருகுகிறார்கள்? பழக்க தோஷமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

அதற்குள் ஏன் தமிழீழ விடுதலைப்புலிகளை செருகுகிறார்கள்? பழக்க தோஷமா?

நீங்கள் சிங்களவர்களை சொருகும் போது அவர்கள் புலிகளை சொருகிறார்கள் 🤭

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் சிங்களவர்களை சொருகும் போது அவர்கள் புலிகளை சொருகிறார்கள் 🤭

ராசா! செய்தியை வடிவாய் வாசியுங்கோ. இதிலே எங்கே விடுதலைப்புலிகள்  வந்தார்கள்? பொறுப்பானவர்கள் தங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்கும்போது அதற்கு பொறுப்பானவர்களை சாடுகிறோம். எங்கள் மண்ணைப்பறித்து, ஆக்கிரமித்துள்ளவர்கள் அங்கு நடக்கும் அனிஞாயங்களுக்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டவர்களே!

13 hours ago, பிழம்பு said:

இரவு விடுதியின் முகாமையாளரான இவர்,

13 hours ago, பிழம்பு said:

சந்தேகநபரான லங்கா ஏக்கநாயக்க, 1989.03.19 அன்று பிறந்துள்ளார். 33 வயதான இந்த நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கம், 890790410 v என்பதுடன், இவர் கொதட்டுவ மற்றும் மருதானை  ஆகிய இரண்டு இடங்களை வசிப்பிடமாகக் கொண்டுள்ளார்.

 

13 hours ago, பிழம்பு said:

பொரளையில் படுகொலைச் செய்யப்பட்டவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் புலனாய்வாளர் ஆவார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தை அதிர வைத்த கரும்புலித் தாக்குதல் தோல்வியில் முடிந்தது எப்படி- வெளிவராத மர்மங்களின் இரண்டாம் பாகம்!

ஈழப் போரில் இதுவரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு.

முதலாவது பாகத்தினைப் படிக்க:

முதற் பாகத்தின் தொடர்ச்சியாக...

கொழும்பு மாவட்டத்தில் நிகழும் புலிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல், தமிழ் வணிகர்களின் வியாபரத் தகவல்களைத் திரட்டி இராணுவத்தினருக்கு வழங்குதல் முதலிய விடயங்களில் இராணுவத்திற்குச் சார்பாக ஜால்ராப் போட்டு வீணை வாசித்துக் கொண்டிருந்த ஒருவர்...அடிக்கடி இராணுவத்தின் கொழும்பு மாவட்டப் புலனாய்வுப் பிரிவில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த இஸ்லாமிய அதிகாரியினைத் தனது கட்சி அமைவிடத்திற்கு அழைத்துச் சந்திப்புக்களை மேற்கொண்டு இரசியத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார். நாற்று
நாற்றிலிருந்து அனுமதியின்றி காப்பி செய்த பதிவு
இனி..........யார் மீது? எத்தனை பேரின் உதவியோடு, புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித வெடி குண்டுத் தாக்குதல் எனப்படும் கரும்புலித் தாக்குதல் தோல்வியடைந்தது? அது எப்படித் திசை திருப்பட்டது எனும் தகவல்கள் அடுத்த பாகத்தில் பார்ப்போமா.............

நிஷாம் முத்தலிப் என்ற பெயரை அறியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். இலங்கை அரசின் இராணுவ புலனாய்வுத் துறையில் 1995-2005ம் ஆண்டு வரையான காலத்தில் புலனாய்வுத் துறையின் வழி நடத்துனராக இருந்தவர் தான் இந்த நிஷாம் முத்தலிப். கொழும்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் பல அப்பாவி வட கிழக்குத் தமிழர்களைக் கைது செய்து, அவர்களை நாலாம் மாடி, போகம்பரை முதலிய வதை முகாம்களுக்கு அனுப்புவதற்கு முன்பதாக தந்திரமாக விசாரணை செய்து புலிகள் பற்றிய சிறு துரும்புத் தகவலைக் கூட இலாவகமாகப் பெற்றுக் கொள்வதில் வல்லவராக விளங்கினார் நிஷாம் முத்தலிப்.

 

கொழும்பு மாவட்டத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காரணமின்றிக் கைது செய்யப்பட்டு நாலாம் மாடி எனும் சித்திரவதைக் கூடத்திற்கு அனுப்பப்பட்ட பல தமிழ் உறவுகளிற்கு நிஷாமின் வலது கையின் ஐந்து விரல்களும் கன்னத்தில் அச்சுப் போல் பதிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இதே வேளை பல தமிழர்களை இலகுவில் மயக்கி, விலை பேசி தன் வசப்படுத்திப் புலிகளால் கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் தாக்குதல் பற்றிய தகவல்களை அறிந்து கொழும்பு மாவட்டத்தில் ரகசியமாகப் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தும் புலிகளின் நடமாட்டத்தினை வேரோடு கிள்ளி எறிவதிலும் முனைப்புக் காட்டியவர் தான் மேஜர் துவான் நிஷாம் முத்தலிப். தமிழை வழுவின்றித் தெளிவாகப் பேசுவதிலும் நிஷாம் முத்தலிப் தேர்ந்த ஒரு முஸ்லிம் தமிழராக வாழ்ந்திருக்கிறார். 

 

2004ம் ஆண்டு, ஜூலை மாதம், 07ம் திகதி. நிஷாம் அவர்கள் கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த அரசாங்கத்திற்கு விசுவாசமாக வாலாட்டுகின்ற அமைச்சரின் அலுவலகத்திற்கு வழமை போன்று வருகின்றார். வழமையாக (தொடர்ச்சியாக) குறிப்பிட்ட ஜால்ரா நபரைச் சந்தித்து தமிழர் தரப்பின் பல உளவுத் தகவல்களையும், கொழும்பு மாவட்ட தமிழ் வணிகர்களின் தகவல்களையும் பெற்றுக் கொள்வதற்காக நிஷாம் முத்தலிப் அவர்கள் வருவதனை புலிகள் அறிந்து வைத்திருந்தார்கள்.  நீண்ட நாட்களாக புலிகளின் அணிகளால் வலை வீசிக் கதை முடிக்க காத்திருக்கும் பட்டியலில் உள்ள நபராக நிஷாம் முத்தலிப் அவர்கள் இருந்தாலும், கொழும்பின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நிஷாமின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த காரணத்தினாலும் அவர் மீது தாக்குதல் நடாத்துவதற்கான சந்தர்ப்பம் புலிகளுக்கு இலகுவில் கிடைக்கவில்லை. 

 

சம்பவ தினம், நிஷாம் அமைச்சரைச் சந்தித்து உரையாடும் வேளை, மறு புறத்தில் கொழும்பில் இராணுவப் பாஸ் பெறுவதற்காக அமைச்சரின் காலடியில் விழுந்து கெஞ்சுவதற்காக ஒரு தொகுதி மக்களும், ஏனைய அலுவலகங்களில் தம் பதவியினைத் தக்க வைப்பதற்காக இன்னோர் பகுதி மக்களும் வாசலில் காத்திருக்கிறார்கள். நிஷாம் தன் அலுவலகத்திற்கு வருகை தந்ததை உணர்ந்த அமைச்சர் தனியாக அவரைச் சந்தித்து உரையாடத் தயாராகின்றார். இந் நிகழ்வுகள் அனைத்தையும் உற்று நோக்கியபடி, வாசலில் தற்கொலையாளிப் பெண் காத்திருக்கிறார்.

 

அமைச்சரைச் சூழ்ந்திருந்தோர் விலகும் சமயம் பார்த்து தன் கருமத்தில் கண்ணாக இருந்த அப் பெண் நிஷாமினை நோக்கிப் பாய்வதற்குத் தயாரான வேளை, நிஷாம் திடீரென்று உள்ளே போகின்றார். அமைச்சருக்கு அருகாக சந்தேகத்திற்கிடமான பெண் நிற்கிறாள் என்பதனை அறிந்த மெய்க் காவலர்கள், அப் பெண்ணினை நோக்கி விரைந்து செல்லும் சந்தர்ப்பத்தில் அப் பெண் தன்னால் இன்று தாக்குதலைச் சரியாகச் செய்து முடிக்க முடியாத சந்தர்ப்பம் உருவாகி விட்டதனை உணர்ந்து தான் உயிரோடு எதிரியிடம் அகப்படக் கூடாது எனும் நோக்கில் குண்டினை வெடிக்க வைக்கின்றாள்.

 

விடயத்தைப் புரிந்து கொண்ட நிஷாம் சமயோசிதமாக ஏனைய இராணுவப் பாதுகாப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பதாக வெளியேறுகின்றார். இராணுவத்தினர் வந்ததும், 10வது தடவையாகப் புலிகள் தன் மீது தற்கொலைத் தாக்குதல் என பதற்றதோடு செய்தி பரப்பி, அதனை ஊடகங்களிற்கும் அனுப்புகின்றார் அமைச்சர். இதன் பின்னர் நடந்தது என்ன? நிஷாம் முத்தலிப் அவர்கள், தீவிர விசாரணையினை மேற்கொண்டு, குறிப்பிட்ட அந்தப் பெண்ணும், ஏனைய ஒரு சில புலிகளின் உளவாளிகளும், தன்னை நோக்கித் தான் தாக்குதல் நடத்தும் நோக்கில் அமைச்சரின் அலுவலகத்திற்குத் தான் வரும் நாட்களை எதிர்பார்த்து வந்திருக்கிறார்கள் எனும் உண்மையினை அறிந்து கொள்கின்றார்.

 

சமயோசிதமாகச் செயற்பட்ட நிஷாம்; தன் மீதான தாக்குதலுக்கு புலிகளின் தலமையால் அனுப்பி வைக்கப்பட்ட கொழும்பில் உள்ள எஞ்சிய புலிகளின் நடவடிக்கைகளைத் திசை திருப்பி; புலிகளின் தலமைப் பீடத்திற்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டும் எனும் நோக்கில் தீவிரமாகச் செயற்படத் தொடங்கினார் நிஷாம் முத்தலில் பிரஸ்தாப அமைச்சரைச் சந்திப்பதில்லை என்றும், தமிழ் அமைச்சரின் அலுவலகத்திற்குப் போவதுமில்லை என்றும் ஒரு மாயையினை உருவாக்கினார். அவராகவே சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் என்று அமைச்சரின் அலுவலத்தில் விசுவாசிகளாகப் பணி புரிந்த இருவரை விசாரணைக்கு என அழைத்துச் சென்று நாடகமாடினார். புலிகளின் தலமைப் பீடம் தாம் அனுப்பிய போராளிகள் தவறான இலக்கினை எட்டி விட்டார்கள் என்று நம்பும் படியான நடவடிக்கைகளில் இறங்கித் தன் உயிரினைப் பாதுகாக்கும் விடா முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார் நிஷாம்.

 

மங்கை, அன்பரசன், நெடுங்குரலோன், செந்நிலா (இவை யாவும் புனை பெயர்கள்) எனப் புலிகளால் அனுப்பப்பட்ட போராளிகளில், மங்கை குறிப்பிட்ட தாக்குதலில் உயிரிழந்து கொள்ள, ஏனைய மூன்று போராளிகளும் தவறான வழியில் தாக்குதலை நடத்தியாக தலமைப் பீடத்திலிருந்து கண்டிப்புடன் கூடிய எச்சரிக்கை அறிவுப்பு நியூட்டன் அவர்கள் ஊடாக பரிமாறப்படுகின்றது. இவ் வேளையில் கொள்ளுப்பிட்டிக்கு அண்மையில் உளவு பார்த்தார் எனும் குற்றச் சாட்டில் அன்பரசன் அவர்கள் கைது செய்யப்படுகின்றார்.அன்பரசனின் கைது மூலம் நிஷாம் பற்றிய தாக்குதல் தகவல்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பெற்றுக் கொள்கின்றார்கள்.

 

நெடுங்குரலோனுக்கும் இலக்கில் சறுக்கல்கள் ஏற்படுவதற்குச் சான்றாக, இராணுவ வீரர்கள் வந்து போகும் விபச்சார நிலையத்திற்குச் சென்று தகவல் சேகரித்து வரும் காலப் பகுதியில் அங்கே உள்ள ஒரு பெண்ணோடு காதல் ஏற்பட்டுக் கொள்கிறது. இவ் விடயம் பொறுப்பாளரிற்குத் தெரிந்து கொள்ள கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றார் நெடுங்குரலோன். இக் காலப் பகுதியில் திடீரென நியூட்டன் இருக்கும் இடத்தினை இலங்கையின் புலனாய்வுப் பகுதி அதிகாரிகள் சூழ்ந்து கொள்ள, நிஷாம் மீதான தாக்குதல் தோல்வியில் முடிவடைகின்றது. ஆனாலும் புலிகளின் தலமை தன் மன உறுதியினை இழக்கவில்லை. 

 

செந்நிலாவினைப் பாதுகாப்பாக வன்னிக்கு அழைத்த புலிகளின் தாக்குதற் பிரிவினர், மீண்டும் புதிய மூன்று போராளிகளை அனுப்பி நிஷாம் முத்தலிப்பைக் கண்காணிக்கத் தொடங்குகிறார்கள்.

2005ம் ஆண்டு மே மாதம், 31ம் திகதி காலை 7.50 மணியளவில் நரஹேன்பிட்டி- பொல்ஹன்கொடச் சந்தியில் (கொழும்பிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள இடம்) வைத்து நிஷாம் முத்தலிப் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த புலிகளால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். 

 

"ஈழத்தை அதிர வைத்த தற்கொலைத் தாக்குதல் தோல்வியில் முடிவடைந்து கொள்ள, அதன் மூலம் இராணுவ புலனாய்வுத் துறையினைச் சேர்ந்த நிஷாம் அவர்கள் தன் நிலையினைப் பலப்படுத்திட முயற்சிகள் எடுக்கும் சந்தர்ப்பத்தில், பிரஸ்தாப அமைச்சரோ தன் சுய நலத்திற்குச் சாதகமாகத் தாக்குதலை காரணங் காட்டித் தன் பாதுகாப்பினை அதிகரித்துக் கொண்ட காலப் பகுதியில், புலிகள் மீண்டும் தாம் மன வலிமையில் எப்போதும் குறைந்தவர்கள் அல்ல என்பதனை நிரூபித்து சிறு சத்தம் ஏதுமின்றி வெற்றி கரமாக நிஷாம் முத்தலிப் மீதான தாக்குதலை நிறைவு செய்திருந்தார்கள்."

 

http://www.thamilnattu.com/2011/09/blog-post_27.html?m=1

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

2005ம் ஆண்டு மே மாதம், 31ம் திகதி காலை 7.50 மணியளவில் நரஹேன்பிட்டி- பொல்ஹன்கொடச் சந்தியில் (கொழும்பிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள இடம்) வைத்து நிஷாம் முத்தலிப் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த புலிகளால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். 

இருக்கலாம். நான் அறிந்தது, உயர் பாதுகாப்பாக இருந்த  முத்தலிப்பை சந்திக்க ஒருவர் அவரது இருப்பிடத்துக்கு போனபோது, காவலில் நின்ற படையினன் அவரை தடுத்து, முத்தலிபுக்கு செய்தி அனுப்பியுள்ளான். அதற்கு முத்தலிப் அவரை தடுக்க வேண்டாம் அனுப்பவும் என்று கூறியிருக்கிறார், அந்தளவு நெருக்கம் இருவருக்குமிடையில் இருந்துள்ளது. இருவரும் உரையாடிக்கொண்டிருக்கும்போது, வந்தவர் தான் வந்த வேலையை முடித்துவிட்டு சென்றதாக. எது எப்படியோ இவரால் பல விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டனர். இவரின் சாவு இலங்கை புலனாய்வுக்கு பெரிய இழப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

2005ம் ஆண்டு மே மாதம், 31ம் திகதி காலை 7.50 மணியளவில் நரஹேன்பிட்டி- பொல்ஹன்கொடச் சந்தியில் (கொழும்பிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள இடம்) வைத்து நிஷாம் முத்தலிப் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த புலிகளால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். 

சரியான தகவல்

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி நன்றி நந்தன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.