Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் அமைப்புகள் ஊடாக நல்லிணக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

1) என்னை பொறுத்த மட்டில். இலங்கை அரசு   தீர்வு இலங்கை வாழ் தமிழருக்கு ஒருபோதும் தரமாட்டார்கள்  என்பதை உறுதியாக நம்புகிறேன்  ......

2) எனவேதான் தமிழர்கள் தீர்வு திட்டங்கள் வைக்க வேண்டிய அவசியமில்லை........

3) உங்களுக்கு ஒரு விடயம் புரியவில்லை என்பது..உங்கள் கருத்துகளில்லிருந்து எனக்கு தெளிவாக விளங்கிறது....அதாவது   தீர்வு ஒன்றை  முன்வைத்து நடைமுறை படுத்த . இலங்கை விரும்பினால்      எந்தவொரு தமிழனின் உதவியும்   ஆலோசனையும் தேவையில்லை...மட்டுமல்ல எந்தவொரு வெளிநாடுகளும். உதவவேண்டியதில்லை.  

4) இது உங்களுக்கு புரியமாட்டேங்குது  .......

5) இன்றுவரை இலங்கை அரசு தீர்வு ஒன்றை வைத்து  தமிழ் மக்கள் அல்லது தமிழ் தலைவர்கள்   குழப்பினார்கள் என்பதை சுட்டி காட்டுங்கள் பார்ப்போம்....

6) மேலும்  பல தீர்வுகளை முன் மொழிய முடியும் ....உதாரணமாக   ஜேர்மன் மாதிரி...சுவிஸ்    மாதிரி   கனடா   மாதிரி  .........நாங்கள் வைக்கும் தீர்வை யார் தாருவார்கள்.?. 

1) அதனாலதான் ஆயுதப் போராட்டம் ஆரம்பமானது 

2) 🤣 பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும் 

3) இதற்கு இந்தியா ஒத்துழைக்குமா? 

4) 😉

5) எதை முன்வைத்தார்கள் என்பதைக் கூற முடியுமா ? SJV யை கூட்டிக்கொண்டு வராதீர்கள் 

6) Swiss ல் சமஸ்டி வந்தது என நினைக்கிறேன். 

  • Replies 77
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

ஊரில் மதில்மேல் குந்தியிருந்து பட்டப்பெயர் வைத்து விசிலடித்த பழக்கம் எனக்கில்லை. தாங்கள் எப்படியோ என்பதும் எனது கரிசனைக்குட்பட்டது அல்ல. 

அதுசரி , என்ன தீர்வு என்று வசிஸ்ரர் வாயால் சொன்னால் குறைந்தா போய்விடுவீர்கள்? 

😁

தீர்வு சொன்னால் சமாதானத்திடம் ..சொல்லிவிடுவியள்...அதில் கிடைக்கிற லாபத்திலையும் இரண்டு பேரும் பங்கும் போடுவியள்.... இது யாழில் தெரிந்த விடையம்தானே....இந்த யாழில் எப்பவாவது ...எமது பிரச்சினை  விடையமாக தமிழருக்கு ஆதரவாக யாராவது கருத்து எழுதினால்....நீங்கள் ஆதரித்தது உண்டா... முட்டையில் மயிர் புடுங்குவதுபோல...சொறிந்து கொண்டுதான் நிற்பியள்...  ஊடுருவிகள் உள்ள இடத்தில் உண்மை வெளிவராது....இதை உங்கடை எசமான்மார் படிப்பிக்கவில்லையோ..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

ஊரில் மதில்மேல் குந்தியிருந்து பட்டப்பெயர் வைத்து விசிலடித்த பழக்கம்

ஹாஹ்ஹா .....என்னடா! இவ்வளவு நேரமாக இந்த பொன்மொழி வரவில்லையே என்று எதிர்பார்த்து காத்திருந்தேன்... காத்திருந்தது வீண்போகவில்லை. முதலில் எனக்கருளினார், அடுத்து கிருபன், இப்போ மாட்டினார் பாருங்கோ இவர்! அடுத்து யாரோ? இதெல்லாம் தன்பழக்கமே அன்றி வேறொருவருடையதல்ல.

இருக்க..... ரணிலாரை தூயவராக, வல்லவராக, நல்லவராக காட்ட பலபேர் பிரயாசைப்படுகினம். ரணில் அரச கதிரையில் இருப்பது இதுதான் முதற்தடவையுமல்ல, தமிழரை பேச்சுக்கழைப்பது புதிதுமல்ல. அவர் தமிழருக்கு தீர்வு தர விரும்பியிருந்தால்; சட்டுப்புட்டென்று எப்பவோ தந்திருக்கலாம். அல்லது விட்ட இடத்திலிருந்து தொடர்ந்திருக்கலாம். ஒவ்வொருதடவையும் கூப்பிட்டு, தீர்வு தாறேன் பிரச்சனை செய்யாதீங்கோ என்று ஆறுதல் கூறுவார். இவர்களும் அவரை பாதுகாப்பார்கள். அவர் லண்டனுக்கு போய், பொய் வாக்குறுதி சொல்லிப்போட்டு வரும்போதே தெரியும். சுதந்திர தினத்துக்கு முன் தீர்வு என்றார், இவர்களை அழைக்கவேயில்லை, ஆனால் எந்த எதிர்ப்பையும் லண்டன்காரர் தெரிவிக்கவில்லை. அவர்கள் இதற்கு முதல் அப்படியான நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்திருந்தால் இங்கு  நான் அதை சுட்டிக்காட்ட வேண்டிய  அவசியம் வந்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

எதை முன்வைத்தார்கள் என்பதைக் கூற முடியுமா ? SJV யை கூட்டிக்கொண்டு வராதீர்கள் 

ஏன் SJV தமிழரில்லையோ? அல்லது அவர் வைத்த திட்டம் தமிழருக்கானதில்லையோ? என்னவென்று நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

இலங்கை டமிள்ஸிடம் + புலம்பெயர்ஸ் களிடம் இருக்கும் இனப்பிரச்சனைக்கான முன்மொழிவு என்ன? 

சரவணர் ஏதோ சொல்ல வந்து பாதியில விட்டுப் போட்டார், எதுக்கும்  அவரையும் ஒரு வார்த்தை கேட்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kandiah57 said:

என்னை பொறுத்த மட்டில். இலங்கை அரசு   தீர்வு இலங்கை வாழ் தமிழருக்கு ஒருபோதும் தரமாட்டார்கள்  என்பதை உறுதியாக நம்புகிறேன்  ......எனவேதான் தமிழர்கள் தீர்வு திட்டங்கள் வைக்க வேண்டிய அவசியமில்லை........

உங்களுக்கு ஒரு விடயம் புரியவில்லை என்பது..உங்கள் கருத்துகளில்லிருந்து எனக்கு தெளிவாக விளங்கிறது....அதாவது   தீர்வு ஒன்றை  முன்வைத்து நடைமுறை படுத்த . இலங்கை விரும்பினால்      எந்தவொரு தமிழனின் உதவியும்   ஆலோசனையும் தேவையில்லை...மட்டுமல்ல எந்தவொரு வெளிநாடுகளும். உதவவேண்டியதில்லை.  இது உங்களுக்கு புரியமாட்டேங்குது  .......

இன்றுவரை இலங்கை அரசு தீர்வு ஒன்றை வைத்து  தமிழ் மக்கள் அல்லது தமிழ் தலைவர்கள்   குழப்பினார்கள் என்பதை சுட்டி காட்டுங்கள் பார்ப்போம்....

மேலும்  பல தீர்வுகளை முன் மொழிய முடியும் ....உதாரணமாக   ஜேர்மன் மாதிரி...சுவிஸ்    மாதிரி   கனடா   மாதிரி  .........நாங்கள் வைக்கும் தீர்வை யார் தாருவார்கள்.?. 

இரத்திணச் சுருக்கம். நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

1) அதனாலதான் ஆயுதப் போராட்டம் ஆரம்பமானது 

இதனை சரி என்று அடையாளம் இட்டுள்ள நீங்கள்  .....மீண்டும் மீண்டும் தீர்வு வரைபை....திட்டத்தை வையுங்கள் எனக் கூறுவதன். மர்மம் என்ன?? அதாவது இலங்கை அரசாங்கம் இலங்கை தமிழ் மக்களுக்கு தீர்வு தரமாட்டாது  என்பதை பூரணமாக  ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்.   எனவே இதில் மேற்கொண்டு கருத்தாட. எதுவுமே இல்லை    நன்றி வணக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kandiah57 said:

இதனை சரி என்று அடையாளம் இட்டுள்ள நீங்கள்  .....மீண்டும் மீண்டும் தீர்வு வரைபை....திட்டத்தை வையுங்கள் எனக் கூறுவதன். மர்மம் என்ன?? அதாவது இலங்கை அரசாங்கம் இலங்கை தமிழ் மக்களுக்கு தீர்வு தரமாட்டாது  என்பதை பூரணமாக  ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்.   எனவே இதில் மேற்கொண்டு கருத்தாட. எதுவுமே இல்லை    நன்றி வணக்கம் 

கந்தையர் வர வர குழந்தைப் பிள்ளை மாதிரி  அடம்பிடிக்கிறீர்கள். 😀

எங்களுக்கு அது தேவையோ அதை நாம்தான் போராடிப் பெற வேண்டும். எங்களுக்கு எது தேவை என்று தெரியாதபோது எவ்வாறு, யாரிடம்  எதைக் கேட்பது ? 

10 hours ago, satan said:

ஏன் SJV தமிழரில்லையோ? அல்லது அவர் வைத்த திட்டம் தமிழருக்கானதில்லையோ? என்னவென்று நினைக்கிறீர்கள்?

கற்காலத்திலா இப்பவும் நிற்கிறீர்கள் ? 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, alvayan said:

தீர்வு சொன்னால் சமாதானத்திடம் ..சொல்லிவிடுவியள்...அதில் கிடைக்கிற லாபத்திலையும் இரண்டு பேரும் பங்கும் போடுவியள்.... இது யாழில் தெரிந்த விடையம்தானே....இந்த யாழில் எப்பவாவது ...எமது பிரச்சினை  விடையமாக தமிழருக்கு ஆதரவாக யாராவது கருத்து எழுதினால்....நீங்கள் ஆதரித்தது உண்டா... முட்டையில் மயிர் புடுங்குவதுபோல...சொறிந்து கொண்டுதான் நிற்பியள்...  ஊடுருவிகள் உள்ள இடத்தில் உண்மை வெளிவராது....இதை உங்கடை எசமான்மார் படிப்பிக்கவில்லையோ..

10 hours ago, satan said:

ஹாஹ்ஹா .....என்னடா! இவ்வளவு நேரமாக இந்த பொன்மொழி வரவில்லையே என்று எதிர்பார்த்து காத்திருந்தேன்... காத்திருந்தது வீண்போகவில்லை. முதலில் எனக்கருளினார், அடுத்து கிருபன், இப்போ மாட்டினார் பாருங்கோ இவர்! அடுத்து யாரோ? இதெல்லாம் தன்பழக்கமே அன்றி வேறொருவருடையதல்ல.

இருக்க..... ரணிலாரை தூயவராக, வல்லவராக, நல்லவராக காட்ட பலபேர் பிரயாசைப்படுகினம். ரணில் அரச கதிரையில் இருப்பது இதுதான் முதற்தடவையுமல்ல, தமிழரை பேச்சுக்கழைப்பது புதிதுமல்ல. அவர் தமிழருக்கு தீர்வு தர விரும்பியிருந்தால்; சட்டுப்புட்டென்று எப்பவோ தந்திருக்கலாம். அல்லது விட்ட இடத்திலிருந்து தொடர்ந்திருக்கலாம். ஒவ்வொருதடவையும் கூப்பிட்டு, தீர்வு தாறேன் பிரச்சனை செய்யாதீங்கோ என்று ஆறுதல் கூறுவார். இவர்களும் அவரை பாதுகாப்பார்கள். அவர் லண்டனுக்கு போய், பொய் வாக்குறுதி சொல்லிப்போட்டு வரும்போதே தெரியும். சுதந்திர தினத்துக்கு முன் தீர்வு என்றார், இவர்களை அழைக்கவேயில்லை, ஆனால் எந்த எதிர்ப்பையும் லண்டன்காரர் தெரிவிக்கவில்லை. அவர்கள் இதற்கு முதல் அப்படியான நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்திருந்தால் இங்கு  நான் அதை சுட்டிக்காட்ட வேண்டிய  அவசியம் வந்திருக்காது.

உங்களைத் துரோகியாகச் சித்தரிக்க எவ்வளவு நேரமாகும்?

அதனால் ஏற்படும்  விளைவு? 

முதலில் வருவது கோபம், பின்னர் மனஸ்தாபம், பழிவாங்கும் உணர்வு,. அதனடியாக எங்களிடையே பிளவு.

இதன் தொடர்ச்சியாக நாங்கள் ஒருவருமே எந்த ஒரு பொதுவான நன்மையான நோக்கங்களுக்காக ஒன்றுசேரப்போவதில்லை. 

இதுதான் இன்று எம்மினம் சந்தித்து நிற்கும் மிகப்பெரிய அவல நிலை. 

இது அப்படியே தொடர விரும்பினால் நீங்கள் தாராளமாக சேற்றை வாரி இறைக்கலாம். 

(ஆரம்பத்தில் யாழ்களத்தில் ஓரிருவர் என்னைத் துரோகியாகவும், RAW Agent ஆகவும் சித்தரித்தபோது எனது நிலை இப்படியாகத்தான் இருந்தது. ஆனால் சிறிது ஆளமாக யோசித்தபோது, முகமறியாத ஓரிருவரது முட்டாள்தனத்திற்காக நான் கோபமுறுவது முட்டாள்தனம் என புரிந்துகொண்டேன்.தற்போது அவ்வளவாகக் கோபம் வருவதில்லை. 😁 )

😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கந்தையர் வர வர குழந்தைப் பிள்ளை மாதிரி  அடம்பிடிக்கிறீர்கள். 😀

எங்களுக்கு அது தேவையோ அதை நாம்தான் போராடிப் பெற வேண்டும். எங்களுக்கு எது தேவை என்று தெரியாதபோது எவ்வாறு, யாரிடம்  எதைக் கேட்பது ? 

எங்களுக்கு ஏது தேவை என்பது நன்றாகவே தெரியும்.......எங்களுக்கு தெரியும் என்பது உங்களுக்கு அறவே தெரியாது...🤣.  கொடுப்பவனிடம் தான் கேட்க முடியும்....கேட்போம்.     மாறாக   கொல்பவனிடமில்லை       வாதம் செய்ய அற்றல். இல்லாவிடில்   குதர்க்கம்  பேசாமல்   அமைதியாக இருக்கவும்   🤣😂🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

பானையுள் ஒன்றுமே இல்லாமல் அதனுள் அகப்பையை விட்டால் வெறும் சத்தம் மட்டும்தான்  வரும்.

வெறும் பானையை மூடி, மூடி, மூடி.... வைத்துக் கூவுவதால்  ஒரு பயனும் இல்லை.  😀

😀

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kapithan said:

பானையுள் ஒன்றுமே இல்லாமல் அதனுள் அகப்பையை விட்டால் வெறும் சத்தம் மட்டும்தான்  வரும்.

வெறும் பானையை மூடி, மூடி, மூடி.... வைத்துக் கூவுவதால்  ஒரு பயனும் இல்லை.  😀

😀

பானையில்  இருப்பது உங்களுக்கு வாழ் நாள்  முழுவதும் போதும்  ......🤣 தயவுசெய்து ஓட்டைகள்  உள்ள அகப்பையை பயன்படுத்துவதை  நிறுத்தவும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kapithan said:

பானையுள் ஒன்றுமே இல்லாமல் அதனுள் அகப்பையை விட்டால் வெறும் சத்தம் மட்டும்தான்  வரும்.

வெறும் பானையை மூடி, மூடி, மூடி.... வைத்துக் கூவுவதால்  ஒரு பயனும் இல்லை.  😀

😀

வெறும்பானைதான் என்றால் ஏன் இதற்குள்..சுத்திச் சுத்தி வாறியள்...உங்கடை நோக்கம் கிண்டுவதும்  கிளறுவதும்..கிடைப்பதை காசாக்குவதும்தான்..இதில் யாருக்கும் ஐயுறவு இல்லை.. 30 வருசம் துன்பம் அனுபவித்தது...சும்மா அல்ல...புலுடாவிட்டு புதினம் புடுங்கலாம் என்பது...அந்தக்காலம்...போய் உங்கடை வேலையை பாருங்க..

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை செல்வாவின் அரசியல் கற்காலத்தைச் சேர்ந்தது. ஆகவே அதுகுறித்துப் பேசிப்பயனில்லை. 

ஆயுதப் போராட்டம் சரிவராது. ஏனென்றால், அது முற்றான தோல்வியை ஒருமுறை தழுவி விட்டது. இந்தியாவும் ஆயுதப் போராட்டம் மீண்டும் தலையெடுப்பதை அனுமதிக்காது.

தமிழர்கள் ஜனநாயக வழிகளில் போராடியும் பிரயோசனமில்லை, ஏனென்றால் சிங்கள அரசு எதையுமே எமக்குத் தரப்போவதில்லை.

அப்படியானால் எமக்கான தீர்வை அடைந்துகொள்ள நாம் என்ன செய்யவேண்டும்? ஆயுதப் போராட்டமும் இல்லாத, ஜனநாயகப் போராட்டமும் இல்லாத, இந்தியாவும் இலங்கையும் ஏற்றுக்கொள்கின்ற தீர்வுதான் என்ன?   ஆக, எமக்கு முன்னால் இருக்கும் ஒரே தீர்வும் முற்றான சரணாகதிதான் என்று சிலர் சொல்ல வருவது போலத் தெரிகிறது. 

15 minutes ago, ரஞ்சித் said:

தீர்வு என்றாவது ஒரு காலத்தில் ஏதோ ஒரு வடிவில் வரலாம். நாங்கள் தற்போது செய்யக் கூடியது தாயகத்தில் தமிழர்களை ஓரளவேனும் பொருளாதார அறிவியல் ரீதியாகத் தக்கவைப்பது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். 

வெளிநாடுகளில் முன்னெடுக்க வேண்டியது எமக்கான ஆதரவும் இலங்கை அரசின் மீது அழுத்தங்களும்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரஞ்சித் said:

.

   ஆக, எமக்கு முன்னால் இருக்கும் ஒரே தீர்வும் முற்றான சரணாகதிதான் என்று சிலர் சொல்ல வருவது போலத் தெரிகிறது. 

அதேதான்...இங்கல்ல எந்தத்திரியிலும் ..குறிப்பிட்ட ஒருவரின் ..கருத்து ..வலியுறுத்துவது...இதே

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

வெறும்பானைதான் என்றால் ஏன் இதற்குள்..சுத்திச் சுத்தி வாறியள்...உங்கடை நோக்கம் கிண்டுவதும்  கிளறுவதும்..கிடைப்பதை காசாக்குவதும்தான்..இதில் யாருக்கும் ஐயுறவு இல்லை.. 30 வருசம் துன்பம் அனுபவித்தது...சும்மா அல்ல...புலுடாவிட்டு புதினம் புடுங்கலாம் என்பது...அந்தக்காலம்...போய் உங்கடை வேலையை பாருங்க..

பானைக்குள் அரிசியை இட்டு சோறாக்குங்கள் என்கிறேன். 

இதைப் புரிந்துகொள்வது உங்களுக்குக் கடினமாக இருக்கிறதா? 

1 hour ago, Kandiah57 said:

பானையில்  இருப்பது உங்களுக்கு வாழ் நாள்  முழுவதும் போதும்  ......🤣 தயவுசெய்து ஓட்டைகள்  உள்ள அகப்பையை பயன்படுத்துவதை  நிறுத்தவும். 😂

கந்தையர் எப்பவுமே குழந்தைதான். 

😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

தந்தை செல்வாவின் அரசியல் கற்காலத்தைச் சேர்ந்தது. ஆகவே அதுகுறித்துப் பேசிப்பயனில்லை. 

ஆயுதப் போராட்டம் சரிவராது. ஏனென்றால், அது முற்றான தோல்வியை ஒருமுறை தழுவி விட்டது. இந்தியாவும் ஆயுதப் போராட்டம் மீண்டும் தலையெடுப்பதை அனுமதிக்காது.

தமிழர்கள் ஜனநாயக வழிகளில் போராடியும் பிரயோசனமில்லை, ஏனென்றால் சிங்கள அரசு எதையுமே எமக்குத் தரப்போவதில்லை.

அப்படியானால் எமக்கான தீர்வை அடைந்துகொள்ள நாம் என்ன செய்யவேண்டும்? ஆயுதப் போராட்டமும் இல்லாத, ஜனநாயகப் போராட்டமும் இல்லாத, இந்தியாவும் இலங்கையும் ஏற்றுக்கொள்கின்ற தீர்வுதான் என்ன?   ஆக, எமக்கு முன்னால் இருக்கும் ஒரே தீர்வும் முற்றான சரணாகதிதான் என்று சிலர் சொல்ல வருவது போலத் தெரிகிறது. 

தொடர்ந்து சனநாயக வழியில் போராடுவோம். அதற்கு ஒற்றுமை அவசியம். 

(முதலில் நேராகப் பேசுங்கள். அதுதான் நேர்மையாளனுக்கு அழகு. முதுகின் பின்னால் பேசுவது அழகல்ல)

52 minutes ago, இணையவன் said:

தீர்வு என்றாவது ஒரு காலத்தில் ஏதோ ஒரு வடிவில் வரலாம். நாங்கள் தற்போது செய்யக் கூடியது தாயகத்தில் தமிழர்களை ஓரளவேனும் பொருளாதார அறிவியல் ரீதியாகத் தக்கவைப்பது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். 

வெளிநாடுகளில் முன்னெடுக்க வேண்டியது எமக்கான ஆதரவும் இலங்கை அரசின் மீது அழுத்தங்களும்.

எமக்கு முதலில் தேவைப்படுவது ஒற்றுமையும் சிறந்த தலைமையும். 

நாம் எவ்வளவு பலமாய் இருக்கிறோம் என்பது பலருக்குப் புரிவதில்லை. அந்தப் பலத்தைச் சிதைப்பது ஒற்றுமையீனம். 

எங்கள் பலம் பலவீனம் எமக்குத் தெரியாதது எமது சாபக்கேடுகளில் ஒன்று. 

36 minutes ago, alvayan said:

அதேதான்...இங்கல்ல எந்தத்திரியிலும் ..குறிப்பிட்ட ஒருவரின் ..கருத்து ..வலியுறுத்துவது...இதே

இவற்றைப் புரிந்துகொள்ள நீங்கள் இன்னும் அதிக தூரம் பயணிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

கந்தையர் எப்பவுமே குழந்தைதான். 

அதில் என்ன சந்தேகம்  ? குழந்தை தான்....ஆனால்   உங்களை விட   பெரிய குழந்தை  .....நீங்கள்  இன்னும் பிறக்காத.  குழந்தை போன்றவர்     அனைத்து உடல் உறுப்புகளும்   வளர்ச்சி அடைய வேண்டும்   .....🤣🤣🙏

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

(முதலில் நேராகப் பேசுங்கள். அதுதான் நேர்மையாளனுக்கு அழகு. முதுகின் பின்னால் பேசுவது அழகல்ல)

நான் யாரைப்பற்றிக் குறிப்பிடுகிறேன் என்பது உங்களைத்தவிர இங்கு எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. 
 
6 minutes ago, Kapithan said:

தொடர்ந்து சனநாயக வழியில் போராடுவோம். அதற்கு ஒற்றுமை அவசியம். 

தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்ற ஈழத்தமிழினம் கண்ட பெரும் ஜனநாயகத் தலைவர்களின் 30 ஆண்டுகாலப் போராட்டங்களும் தோல்வியடைந்த பின்னரே ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது. அன்று இத்தலைவர்கள் செய்த ஜனநாயக வழிப்போராட்டங்களில் நூற்றிற்கு 5 வீதத்தையாவது இன்றைய தமிழ்த் தலைவர்கள் செய்யவில்லை. இந்த லட்சணத்தில் ஜனநாயகப் போராட்டம் மூலம் தீர்வு கிடைக்கும் என்கிறீர்கள். இதுவரை தமிழினம் செய்திறாத ஜனநாயக வழிப்போராட்டம் ஒன்று இருக்கிறதென்று நீங்கள் நம்பினால், அது எத்தகையது என்பதைக் குறிப்பிடலாம்.

இன்றிருக்கும் தலைமைகளிடத்தில் ஒற்றுமையில்லை என்பது உண்மையே. ஆனால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ அல்லது சமஷ்ட்டிக் கட்சியோ இருந்த காலத்தில் தமிழர்கள் ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள், ஒருசில கட்சி தாவிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர. ஒற்றுமையாகத்தான் ஜனநாயக வழியில் போராடினார்கள். ஆனால், அந்தப் போராட்டங்களுக்கெல்லாம் சிங்களப் பேரினவாதம் கொடுத்த பதில் அரச பயங்கரவாதம் மட்டும் தான். 

இதுவரை தமிழர்கள் முன்னெடுத்த போராட்டங்களில் தமிழருக்கு நம்பிக்கை தரக்கூடியதாக இருந்த போராட்டம் 29 - 30 வருடங்களாக நடைபெற்ற ஆயுதப் போராட்டம் தான். அதுவும் இந்தியாவின் சூழ்ச்சியால் அழிக்கப்பட்டு விட்டது. நாம் மீண்டும் கையாலாகாத, இந்திய - இலங்கை அரசுகளின் நலன்களுக்காக தமிழினத்தை விலைபேசத் துடிக்கும் போலி ஜனநாயக அரசியல்வாதிகளைத் தலைவர்களாக ஏற்று ஜனநாயக வழியில் போராட வேண்டும் என்கிறீர்கள். தந்தை செல்வாவுக்கும், அமிர்தலிங்கத்தின் ஆரம்பகால அரசியலுக்கும் பிறகு வேறு நேர்மையான ஜனநாயக அரசியல்த் தலைவர்கள் தமிழினத்தில் இன்றுவரை தோன்றவில்லை என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kandiah57 said:

அதில் என்ன சந்தேகம்  ? குழந்தை தான்....ஆனால்   உங்களை விட   பெரிய குழந்தை  .....நீங்கள்  இன்னும் பிறக்காத.  குழந்தை போன்றவர்     அனைத்து உடல் உறுப்புகளும்   வளர்ச்சி அடைய வேண்டும்   .....🤣🤣🙏

என்னை குழந்தை எனப் புரிந்துகொண்டீர்களே,  அதுவே போதும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

என்னை குழந்தை எனப் புரிந்துகொண்டீர்களே,  அதுவே போதும். 🤣

நீங்கள் வளர்த்து   பெரியவர் [பெரியார் ] ஆகும் வரை   உங்களுடன் கருத்துகள்   பகிர்ந்து கொள்ளவில்லை    🤣😂 நன்றி  வணக்கம்....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

நீங்கள் வளர்த்து   பெரியவர் [பெரியார் ] ஆகும் வரை   உங்களுடன் கருத்துகள்   பகிர்ந்து கொள்ளவில்லை    🤣😂 நன்றி  வணக்கம்....

சொல்லிச் செய்வோர் சிறியர்(யாழ் களச் சிறியர் அல்ல  🤣)

சொல்லாமற் செய்வோர் பெரியோர்.

சொல்லியும் செய்யார் கயவர். 

எனவே

(நீங்கள்)சொன்ன சொல்லைக் காப்பாற்றுங்கள். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

தொடர்ந்து சனநாயக வழியில் போராடுவோம். அதற்கு ஒற்றுமை அவசியம். 

ஆயுதப்போராட்டம் தோன்றுவதற்குமுன் எப்படி போராடினார்களாம் நம் முன்னோர்? அங்கு ஒற்றுமை இருக்கவில்லையா? அது கற்காலம் என்பது உங்கள் விளக்கமோ?  ஜனநாயகப்போராட்டம் தாக்கப்பட்டதும் தோற்றதும் ஏளனப்படுத்தப்பட்டதுமே ஆயுதம் தோன்றக்காரணம் என யாராவது இவருக்கு விளங்கப்படுத்தி விடுங்களப்பா! வரலாறு தெரியாமல், அதை  ஏற்றுக்கொள்ளாமல் விதண்டாவாதம் பண்ணுகிறார் இவர். இவரது நோக்கம் வேறன்னவோ போலிருக்கிறதே!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

ஆயுதப்போராட்டம் தோன்றுவதற்குமுன் எப்படி போராடினார்களாம் நம் முன்னோர்? அங்கு ஒற்றுமை இருக்கவில்லையா? அது கற்காலம் என்பது உங்கள் விளக்கமோ?  ஜனநாயகப்போராட்டம் தாக்கப்பட்டதும் தோற்றதும் ஏளனப்படுத்தப்பட்டதுமே ஆயுதம் தோன்றக்காரணம் என யாராவது இவருக்கு விளங்கப்படுத்தி விடுங்களப்பா! வரலாறு தெரியாமல், அதை  ஏற்றுக்கொள்ளாமல் விதண்டாவாதம் பண்ணுகிறார் இவர். இவரது நோக்கம் வேறன்னவோ போலிருக்கிறதே!

ப்யப்படாதீர்கள் சாத். 

உங்களுக்கு இருக்கும் ஒரே வழி, சனநாயகரீதியில் எல்லோரையும் ஒன்றுதிரட்டிப் போராடுவதே. இது பன்முகப்பட்டது. அதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள். 

பழிவாங்கும் உணர்ச்சியுடன் மட்டுமே  இருப்பது விடுதலையைப் பெற்றுத் தராது. புத்தியையும் கொஞ்சம் பாவிக்க வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.