Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரு பாடல்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் மறைந்திடுமோ அம்மா

பாலமு தூட்டடிட நீ காட்டிய வெண்நிலவு

பாட்டில் கதைகளில் நீ

பாங்குடன் ஊட்டிய சோற்றினிலே

நாற்றில் பயிரெனவே

நல்லறிவோடு நான் செழித்து விட்டேன்.

எத்தனை கற்பனைகள் அங்கே

எத்தனை சுடர்கின்ற நம்பிக்கைகள்

முத்தேன நெஞ்சில் வைத்தாய்

என் முழுமையின் வேரேன மறைந்து நின்றாய்.

ஒலிவடிவம்

http://tamil.sify.com/audio/fullstory.php?id=14465321

கண்ணம்மா இந்த

பனி கொட்டும் இரவினீலே

இலையற்ற தனி மரமாய்

உன்னையே நினைத்திருந்தேன்.

என்று உன் பூவிரல்கள்

தீண்டிடுமோ என்று

ஏங்கிடும் வீணையைப்போல்

துயருறுதே நெஞ்சம்.

பூத்திடும் கனவினில் கானகங்கள் எங்கும்

புலர்ந்திடும் வச்சந்ததின் கற்பனைககள்

தேற்றுமுன் காதலில் பாரதியின்

சிந்துக்கள் பாடிடும் ராத்திரிகள்

ஒலிவடிவம்

http://tamil.sify.com/audio/fullstory.php?id=14465321

என் முழுமையின் வேரேன மறைந்து நின்றாய்.

"அம்மா"

அற்புதமானவள் அவள். எந்த நிலையிலும் தன் பிள்ளைக்காக அக்கறைப்படுபவள் அம்மா. இறுக்கமான அழகான உறவுப் பிணைப்பு அம்மா.

பூத்திடும் கனவினில் கானகங்கள் எங்கும்

புலர்ந்திடும் வச்சந்ததின் கற்பனைககள்

தேற்றுமுன் காதலில் பாரதியின்

சிந்துக்கள் பாடிடும் ராத்திரிகள்

பாரதியின் கவிதை மெட்டு இதற்குள்ளும் இருக்கிறது. நல்ல அழகுநயம் பொதிந்த வரிகள். :D

காலத்தால் மறைந்திடுமோ அம்மா

பாலமு தூட்டடிட நீ காட்டிய வெண்நிலவு

காலத்தால் நாம் எத்தனை உறவுகளை பெற்றிடுனும் தாயிற்கு ஈடாகுமா........அருமையாக அதனை கவிதையில் சொல்லி இருந்தீர்கள்,முதல் வரியிலேயே அம்மாவை பற்றி அழகாக சொல்லிவிட்டீங்க மிகவும் நன்றாக இருந்தது......... :D

கண்ணம்மா இந்த

பனி கொட்டும் இரவினீலே

இலையற்ற தனி மரமாய்

உன்னையே நினைத்திருந்தேன்.

இளைஞன் அண்ணா சொன்னது போல பாரதியின் மெட்டை இதற்குள் சேர்த்து காதல் கவிதையை வடித்திருந்தீர்கள் மிகவும் நன்றாக இருந்தது......... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புகுரிய இளைஞனுக்கும் ஜமுனாவுக்கும் நல்வாழ்த்துக்கள்.

இந்த பாடல்களை எனது இல்லத் தோழி வாசுகி (http://vasukyjayapalan.blogspot.com/ ) பாடியிருக்கிறார். ஒலிவடிவம் இணைத்திருந்தேன்.

http://tamil.sify.com/audio/fullstory.php?id=14465321

இணைப்பின் அடியில் பாருங்கள். அதுபற்றி உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் ஆலோசனைகள் ஒன்றும் சொல்லவில்லையே. எதிர்பார்க்கிறேன்

குரல் இனிது.

பாடல் வரிகளின் இனிமையை, இசை மேலோங்கி மறைத்துவிட்டது என்று நினைக்கிறேன். வேறு ஏதும் மெட்டில் முயற்சித்திருக்கலாமோ? மெல்லிய இசையைப் பயன்படுத்தியிருக்கலாமோ? என்று தோன்றுகிறது. இது எனது தனிப்பட்ட இசை இரசனையின் அடிப்படையில் வெளிப்படும் கருத்து மட்டுமே.:huh: ஏனையவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை.

Edited by இளைஞன்

இதமான வரிகள். கனதியான உணர்வுகள். அழகான வெளிப்படுத்தல். அருமையாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்

http://tamil.sify.com/audio/fullstory.php?id=14465321

இணைப்பின் அடியில் பாருங்கள். அதுபற்றி உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் ஆலோசனைகள் ஒன்றும் சொல்லவில்லையே. எதிர்பார்க்கிறேன்

வணக்கம் அண்ணா,

முதல் பாட்டை எடுத்து கொண்டால் அந்த பாட்டிற்கு ஏற்றாற் போல வாசுகி ஜெயபாலனின் குரல் மிகவும் நன்றாக இருக்கிறது பிண்ணணி இசைக்கு ஏற்றாற் போல பாடல் செல்லும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது ஆனா என்னை பொறுத்தவரை முதலாவது பாடலிற்கு இசையை இன்னும் வேகமாக வழங்கினா நன்றாக இருக்கும் போல இருக்கு குறிப்பாக "திசை எங்கும் இசை வெள்ளம்" என்ற இசை தொகுப்பை கேட்டு இருபீர்கள் என்று நினைக்கிறேன் அதில் வரும் பிண்ணணி இசை அதாவது "ஜயனின் மாதோட்டம் கேதிஸ்வரம்" என்ற பாடலிற்கு வரும் இசையை இந்த பாட்டிற்கு வந்தா மிகவும் நன்றாக இருக்கும் நான் சொல்வது அதே இசை இல்லை அதை போல் உள்ள இசையமைப்பு நன்றாக இருக்கு..........இது என்னுடைய தனிபட்ட கருத்து ஒவ்வொருவரும் வித்தியாசமான கோணங்களின் அணுகுவார்கள் என்பதால் என்னுடைய கருத்தை மட்டும் கூறினேன்...... :huh:

இரண்டாவது பாடல்

குரல் வளம் மிகவும் நன்றாக இருக்கிறது இந்த பாடலிற்கு ஆனால் இந்த பாட்டின் பிண்ணணி இசைக்கும் பாடலும் சில இடங்களிள் ஒத்துபோகாமல் செல்வதை காணகூடியதாக இருக்கிறது அத்துடன் இந்த பாடலிற்கு இசை இன்னும் மெல்லிசையாக பயன்படுத்தி இருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.........ஆனால் மிகவும் நன்றாக இருகிறது வயலின் இசை பக்கபலமாக இருக்கிறது என்று கூறலாம் பாடலிற்கு.. :(

என்னுடைய பார்வைக்கு பட்டதை கூறினேன் மற்றவர்களின் இரசனை மட்டம் வேறுபடும் அண்ணா உங்களிற்கு இதில் அநுபவம் இருக்கும் என்று நினைக்கிறேன் ஆகவே உங்கள் தேர்வை செய்யுங்கோ ஏதாவது தவறாக சொல்லி இருப்பீன் மன்னிகவும். :blink:

ஜெயபாலன் ஒரு கவிஞர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் இருந்த பின்புலத்தை விட்டு இன்னும் வரமுடியாமால் இருக்கிறார். தான் ஒரு நடு நிலை கவிஞர் , தத்துவவாதி என்று தன்னை நினைக்க வேண்டும் என்று நினைப்பவர். இதுவரை எங்கள் மக்களது போர்ப்பரணி பாடியதில்லை. நான் சொல்வது இன்றைய போராட்ட மக்களை.

இவர் ஓர் பழைய போராளி என்பது எல்லாருக்கும் தெரியும். இன்று எந்த பக்கம் நிற்பது என்பதில் குழப்பமான ஒரு கவிஞராகவே இன்றுவரை இருக்கிறார்.

அவரது திருமதி ஜெயபாலன் மாவீரர் தினத்தில் தனது குரலால் மாவீர்களின் கீர்த்தனை பாடும் போது மிக அருமையாக இருக்கும்..... மனம் உருகி அழகாக பாடுவார்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேசன் எதுவும் தெரியாமலே பிறரைப் பற்றி எழுதுகிறவரா நீங்கள்? என்னுடைய எத்தனை கவிதைகள் வாசித்திருக்கிறீர்கள்? நான் என்ன செய்கிறேன் என்பதை உங்கள் கற்பனையிலோ வெளிப்புலத்தில் உங்கள் நண்பர்களிடமோ தெரிந்து கொள்ள முடியாது. நீங்கள் அதைக் களத்தில்தான் விசாரிக்கவேண்டும். அப்படிச் செய்யாமல் அபத்தமாக மின்கம்பங்களில் கட்ட மூனையாதீர்கள். போராளிகளின் இடித்துரைக்கும் நண்பன். உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமென்பதில்லை. யாழில் எழுதுவது பிடிக்காவிட்டால் சொல்லுங்கள் ஒதுங்கி விடுகிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜமுனா, வாசுகி பாடியது ஒரு தெரிவுதான். நீங்கள் சொல்வதுபோல மேலும் தெரிவுகள் உண்டு. உங்களுக்கு நல்ல கேழ்வி ஞானம் உள்ளது. நீங்களே முயன்று பார்ர்க்கலாமே. ஜமுனாவுக்கும் இளைஞனுக்கும், இப்பாடலை அடுத்து வரும் நூறு ஆண்டுகளில் பல மெட்டுகளில் பாடுவார்கள். இசையமைப்பாளர்களுடன் பேசும்போது உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வேன். கருத்துரைத்த சுகனுக்கும் நேசனுக்கும் எனது நன்றிகள்.

நேசன் எதுவும் தெரியாமலே பிறரைப் பற்றி எழுதுகிறவரா நீங்கள்? என்னுடைய எத்தனை கவிதைகள் வாசித்திருக்கிறீர்கள்? நான் என்ன செய்கிறேன் என்பதை உங்கள் கற்பனையிலோ வெளிப்புலத்தில் உங்கள் நண்பர்களிடமோ தெரிந்து கொள்ள முடியாது. நீங்கள் அதைக் களத்தில்தான் விசாரிக்கவேண்டும். அப்படிச் செய்யாமல் அபத்தமாக மின்கம்பங்களில் கட்ட மூனையாதீர்கள். போராளிகளின் இடித்துரைக்கும் நண்பன். உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமென்பதில்லை. யாழில் எழுதுவது பிடிக்காவிட்டால் சொல்லுங்கள் ஒதுங்கி விடுகிறேன்

புது கவிதையை பொறுத்தவரையில் ஈழ தமிழ் சூழலில் மட்டுமன்றி தமிழ் படைப்புக்கள் வரலாற்றில் கூட ஜெயபாலன், சேரன் போன்றவர்களுக்கு எப்பவும் ஒருதனி இடம் உண்டு. இன்றைய இளம் படைப்பாளிகள் இளைஞன், ஜமுனா போன்றவர்களுடன் கலந்து யாழ் களத்தில் உரையாடுவது பார்ப்பதற்க்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது.

இந்த களத்தில் ஆயிரம் பெயர் வந்து ஆயிரம் கதை சொல்லுவினம். உங்களை யாழ் கள நிர்வாகிகளை தவிர வேறொருவருக்கும் ஒதுங்க சொல்ல அதிகாரங்கள் இல்லை என எனது அறிவு எட்டியவரை சொல்லி கொள்ள விரும்புகிறேன். தொடர்ந்து யாழ் களத்தில் இணைந்திருங்கள் என தாழ்மையுடன் கேட்டு கொள்ளுகிறேன்

நேசன் எதுவும் தெரியாமலே பிறரைப் பற்றி எழுதுகிறவரா நீங்கள்? என்னுடைய எத்தனை கவிதைகள் வாசித்திருக்கிறீர்கள்? நான் என்ன செய்கிறேன் என்பதை உங்கள் கற்பனையிலோ வெளிப்புலத்தில் உங்கள் நண்பர்களிடமோ தெரிந்து கொள்ள முடியாது. நீங்கள் அதைக் களத்தில்தான் விசாரிக்கவேண்டும். அப்படிச் செய்யாமல் அபத்தமாக மின்கம்பங்களில் கட்ட மூனையாதீர்கள். போராளிகளின் இடித்துரைக்கும் நண்பன். உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமென்பதில்லை. யாழில் எழுதுவது பிடிக்காவிட்டால் சொல்லுங்கள் ஒதுங்கி விடுகிறேன்

நிச்சயமாக உங்களை 1986 ம் ஆண்டிலிருந்து பாசறைக்கவிஞனாக அறிவேன் நீங்கள் இருந்த இடத்தில் நானும் ஒரு போராளியாக இருந்தவன்.. இன்று நீங்கள் களத்தில் செய்யும் பணி பற்றி தெரியாது.இருந்தாலும் இன்றுவரை நீங்கள் புனை பெயரிலோ அல்லது உங்களது பெயரிலோ இன்றைய போராளிகளைப் பற்றி ஒரு கவிதை வந்ததில்லை, ஆனால் ஈழம், தமிழர் ,தாயகம் என் பல கவிதைகள் வந்துள்ளன. அதனால் தான் பழைய இடத்தில் இருந்து வரமறுக்கின்றீர்களோ என்று தோன்றுகிறது. இது பல புலம் பெயர் தமிழர்களின் கருத்தும் கூட

யாழில் யாரும் எழுதலாம். விமர்சனம் செய்யலாம் இணைய நிர்வாகத்தின் வரையறைக்குள்.

நேசன்... ஒவ்வொரு படைப்பாளியும் தமக்கெனத் தனியான வாழ்வனுபவங்களைக் கொண்டவர்கள். அவர்களின் படைப்பாளுமை, கருத்துத்தளம், கவித்துவ வீச்சு, கருக் கொள்ளும் இடம் என்பன வேறுபட்டவை. ஏன் நீங்கள் (தமிழ்ச் சமூகத்தில் உள்ள பலர்) ஒருவனிடம் இருந்து எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறீர்கள்? இந்த நிலை (எதிர்பார்ப்பு) கவிதைத் துறைக்குள் மட்டுமல்ல, எல்லாத் துறைகளுக்குள்ளும் இருக்கிறது. மக்களின் நாடித் துடிப்பறிந்து, மக்களின் எதிர்பார்ப்புகளுக்காய் ஒரு கவிஞன் கவிதை படைக்க முடியாது. அதற்கு இது commercial சினிமாவும் அல்ல. மக்களின் வாழ்க்கையை அவன் கொண்ட வாழ்வனுபங்களினூடாகவே படைக்க முடியும். அது தான் யதார்த்தமானதாக இருக்கவும் முடியும். புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து போராட்டக் களத்தின் நிலையை கற்பனை செய்து கவிதை படைக்கச் சொல்கிறீர்களா? இன்றைய போராளிகள் தங்கள் சூழலை, தங்கள் வாழ்வியலை தாங்களே கவிதைகளாகப் படைக்கிறார்களே? அவர்களை விட வேறு எவரால் அவர்களைப் பற்றி எழுதமுடியும்? போர்ப்பரணி பாட போர்க்களக் கவிஞர்களும் இருக்கிறார்களே. நாம் இங்கிருந்து கொண்டு...

ஆயுதம் எடு

போர்க்களம் புகு

எதிரியைச் சுடு

எல்லைகள் வகு

என்று வீரவசனம் பேசச் சொல்கிறீர்களா? ஒரு கவிஞன் தனது உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தவே கவிதை எனும் ஆயுதத்தை ஏந்துகிறான். அந்த உள்ளத்துணர்வு என்பது அந்தந்தச் சூழலைப் பொறுத்தே கருக்கொள்கிறது. கவிதைகள் வற்புறுத்தி வரவழைக்கப்பட்டால் அது போலியானவையாகத்தான் இருக்கும். அப்படியான கவிதைகளை (!) வெறும் வார்த்தைகளை மாற்றிப்போட்டு, வார்த்தை ஜாலங்கள் காட்டி "மசாலாச்" சினிமாக்கள் போன்று அடுக்கடுக்காய் வெளித்தள்ளலாம். ஆனால் அவை கவிதைப் பிரசவங்களாக, உயிர்வலி மிக்கதாக இருக்காது.

நீங்கள் ஏன் பழைய இடம் புதிய இடம் என்று குழப்பிக்கொள்கிறீர்கள். கவிஞனைக் கவிஞனாகப் பாருங்கள். அவனை அவனது படைப்புகளூடாக இரசியுங்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று யாரைச் சொல்கிறீர்கள்? வெளிநாடுகளில் வீட்டுக்குள் இருந்து வீர வசனம் பேசிக்கொண்டும், சினிமா சீரியல்கள் பார்த்துக்கொண்டும் பொழுதுகழிப்பவர்களையா? அங்கே எத்தனை போராளிகள் இறந்தார்கள், எத்தனை இராணுவத்தினர் இறந்தார்கள் என்று கணக்குப் பார்த்து சந்தோசப்படும் சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்கும் தமிழர்களையா? எங்களைப் பற்றி தென்னிந்தியா சினிமாப் பிரபலங்கள் பேசவேண்டும் என்று எதிர்பார்த்தும், எங்களைப் பற்றி தென்னிந்திய சினிமாவில் ஏதாவது ஒரு வசனம் வந்தாலும் (அதன் பின்னணி அறியாமலே) துள்ளிக் குதித்தும், தவங்கிடக்கும் தமிழர்களையா? :):

எங்கள் தமிழ்ச்சமூகத்தின் நிலையை எண்ணும்போது எனக்கு "வாத்தும் பொன்முட்டையும்" கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. :lol: சரி. கவிதை பற்றியதாகவும் கவிதைச் சூழல் பற்றியதாகவும் கருத்தாடலைத் தொடர்வதே பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். கருத்து திசைமாறி எங்கோ போகாமல், கவிதைக்குள்ளேயே நிப்போமே... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேசன், உண்மையிலேயே நீங்க்ள் சொல்வது எனக்குப் புரியவில்லை. இளைஞன் சொல்வதுடன் நான் உடன்படுகிறேன். ஆண் பெண் போராளிகளால் போராளிகளால் எனது கவிதைகள் பாரட்டப் பட்டுள்ளது. தமிழ் முஸ்லிம் உறவுகள் தொடர்பான மிகத் தீவிரமான விவாதங்கள் உண்டு. தலைபணிவதில்லை. என்னை கலகக் காரன் என்று சொனாலும் தேச பக்தன் என்று தோழர்கள் புதுவைக் கவிஞர் பாலா போன்றவர்கள் சொல்லுவார். . எனது கவிதைகள் பல குறிப்பாக ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் 1000 வருடத்துக்குப் பின்னும் ஈழத்து விடுதலைப் போராட்டத்தை நினைவுச் சின்னமாக இருக்கும். இந்திய சிறையில் இருந்தபோது மனசு உடையும் போதெல்லாம் எனது நெடுந்தீவு ஆச்சிக்கு கவிதையை வாசிப்பதாக ஈழத்து ஊடக முதல்வர் கவிஞர் ராதேயன் சொல்லுவார். நேசன் என்கவிதை பற்றி பேசுங்கள். எனது அரசியல் நிலைபாடு பற்றி பேசுங்கள். எங்கள் சமூக இயல். எங்கள் வளர்ச்சி. ஈழத்து வாழும் தமிழர் முஸ்லிம்கள் மட்டுமல்ல ஈழத்து சிங்கள மக்களது இன உறவுகளும் உரிமைகளும். இராணுவபுவி இயல் இவை தொடர்பான எனது அணுகுமுறைகளைத் தாராளமாக விமர்சியுங்கள். ஏனேனில் அந்த துறைகளில் முரண்படுவது வளர்ச்சிக்கு வழி வகுக்கும். எனது தேசபக்தியை உரைத்துப் பாராதீர்கள். தலை சாய்க்கமுன்னம் நெடுந்தூரம் போகவேணும். என்னை மினக்கெடுத்தாமல் தயவு செய்து இத்துடன் விடுங்கள்.

. கருத்து திசைமாறி எங்கோ போகாமல், கவிதைக்குள்ளேயே நிப்போமே... :lol:

மக்களின் நாடித் துடிப்பறிந்து, மக்களின் எதிர்பார்ப்புகளுக்காய் ஒரு கவிஞன் கவிதை படைக்க முடியாது.

உங்கள் கருத்து தவறு என நினைக்கிறேன் காணாமல் போன கவிஞர்கள் விட்ட பிழை இதுதான்.

ஒரு மக்கள் கூட்டம் உயிர் வாழ்வுக்காக போராடிக் கொண்டு இருக்கும் போது அவர்களிடம் ஒரு கவிஞன் போய் காதல் பற்றி கவிதை சொல்ல முடியாது.

மக்களின் வலியை கவிதை பிரசவிக்க வேண்டும்.

இன்று நாங்கள் அறிகின்ற புதுவை, காசி ஆனந்தன் அறிவுமதி மற்றும் பல போராளிகவிஞர்கள் இப்படிதான் வந்தவர்கள். சினிமா மூலம் தெரிந்தவர்கள் இல்லை

இதில் எழுதிய கருத்து இளைஞனுக்கான மறு பதிலே .

நன்றி நேசன் பதில் கருத்துக்கு. மக்களின் வலியை கவிதைகள் பிரசவிக்க வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்துக் கிடையாது. அது தான் ஒரு சமூகப் போராளியான கவிஞனின் கடமையும் கூட. ஆனால் மக்களின் வலியை கவிதைகளில் சொல்வதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்காய் கவிதை சொல்வதுவும் இரு வேறுபட்ட நிலைகள் என்று நினைக்கிறேன். முன்னையது யதார்த்தம், பின்னையது commercial. மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த கவிதைகள் நிலைத்து நிற்கும். நீங்கள் முன்னர் குறிப்பிட்டது போல் எண்பதுகளில் வெளிவந்த ஜெயபாலன் அண்ணாவின் கவிதைகள் இருக்கின்றனவே.

"உலகமெங்கும்

வாழ்வை இழந்து வசதி பொறுக்குகின்ற

மனிதச் சருகுகளாய்ப் புரள்கிறோம்.

என்ன நம் தாய்நாடு

ஓயாமல் இலை உதிர்க்கும்

உயிர்ப்பிழந்த முதுமரமா?"

என்ற வரிகளிலும்

"யாழ்நகரில் என் பையன்

கொழும்பில் என் பெண்டாட்டி

வன்னியில் என் தந்தை

தள்ளாத வயதினிலே

தமிழ்நாட்டில் என் அம்மா

சுற்றம் பிராங்போட்டில்

ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்

நானோ

வழி தவறி அலாஸ்கா வந்துவிட்ட ஒட்டகம்போல்

ஒஸ்லோவில்"

என்ற வரிகளிலும்

"தமிழர் உடைமையில்

கொள்ளை போனதும் எரிந்ததும் தவிர்த்து

எஞ்சிய நிலத்தில் எரிந்த சுவா}ல்

அரசுடைமை எனும் அறிக்கை கிடந்தது.

இப்படியாக, உயிர் பிழைத்தவர்கள்

பின்புற மண்ணையும் தட்டியபடிக்கு

எழுந்தோம்,

வெறுங்கைகளோடு -

உடைந்த கப்பலை விட்டு அகன்ற

ரொபின்சன் குரூசோவைப்போல!

குலைந்த கூட்டை விட்டு அகன்ற

காட்டுப் பறவையைப் போல.

நாம் வாழவே எழுந்தோம்.

சாவை உதைத்து,

மண்ணிலெம் காலை ஆழப் பதித்து

மரண தேவதை இயற்கையாய் வந்து

வருக என்னும் இறுதிக் கணம்வரை,

மூக்கும் முழியுமாய்

வாழவே எழுந்தோம்"

என்ற வரிகளிலும் மக்களின் வலி வெளிப்படவில்லையா. இவையெல்லாம் அந்தக் கவிஞன் தனது வாழ்வனுபவங்களூடாக வடித்த கவிதைகள். எவ்வளவு உயிர்ப்புமிக்கதாய் உள்ளது பாருங்கள். இன்றும் ஒவ்வொரு தமிழனும் தன்னை இந்த வரிகளினூடாக நிச்சயமாக அடையாளம் காணமுடியும். தமிழர்கள் மட்டுமல்ல பாதிக்கப்பட்ட ஒவ்வொரு இனமும், சொந்த மண்ணை விட்டு புலம்பெயர்ந்த ஒவ்வொரு இனமும், விடுதலைக்காகப் போராடுகிற ஒவ்வொரு இனமும், தம்மை இந்த வரிகளுக்குள் பொருத்திப் பார்க்கமுடியும்.

புதுவை களத்தில் நிற்கும் கவிஞன். களத்தில் நின்று களத்தைப் பாடுகிறான். புலத்தில் நின்று களத்தைப் பாடவில்லை. ஏனைய போராளிக் கவிஞர்களும் அப்படியே. அறிவுமதியாலும் ஓரு குறிப்பிட்ட எல்லை வரைக்குமே போர்க்களத்தைப் பாடமுடியும். அதற்கு மேற் சென்றால் அது மசாலாத்தனமாகவே இருக்கும். மக்களோடு மக்களாய், போராளிகளோடு போராளியாய் போர்க்களத்தில் வாழ்கிறபோது இயல்பாகவே கவிதைகளில் அந்த வாழ்வியல் வெளிப்படும்.

மற்றும்படி நீங்கள் குறிப்பிட்ட மக்களின் வலியை கவிதைகள் பிரசவிக்க வேண்டும் என்பதோடு நிச்சயமாக நானும் உடன்படுகிறேன். வலிகளை மட்டுமல்ல! மக்களின் சிரிப்பை, காதலை, வெற்றியை, வேட்கையை என்று எல்லா வாழ்வியல் தளங்களையும் கவிதைகள் வெளிப்படுத்தவேண்டும். நிலத்தில் மட்டுமல்ல களம்! புலத்திலும் கவிதைக்கான களமிருக்கிறது. எல்லாவற்றையும் ஒரு கவிஞன் செய்யவேண்டும் அல்லது வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. பொன்முட்டை இடும்வரை காத்திருப்போமே! :D

நன்றி கவிஞர் ஜெயபாலன், இளைஞன் அவர்களே.

இத்துடன் விமர்சனத்தை முடித்துக் கொள்கிறேன். நான் ஒரு சாதாரண கவிதை விரும்பி படிக்கும் வாசகன்.

தமிழ் கவிஞர்கள் எல்லோரும் இன்று வீரப்புலிப்பிள்ளைகள் நடாத்தும் விடுதலை வேள்வியை வாழ்த்த வேண்டும் பாட வேண்டும், பறை மேளம் கொட்டி மக்களை விடுதலையோடு இணைக்க வேண்டும்.

இன்னும் வெகு தூரம் போக வேண்டி உள்ளது.. போர்ப்பறை கொட்டினால் தான் மக்கள் விழிப்பார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள். உரையாடலை பயனுற முன்னெடுத்தமைக்காக சின்னக்குட்டிக்கும் இளைஞனுக்கும் முடித்து வைத்தமைக்காக நேசனுக்கும் எனது நன்றிகள்

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.