Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

சிங்களவன்களுக்கு எத்தியோப்பியா சோமாலியா பஞ்சம் வந்தாலும் திருந்த மாட்டானுகள். :face_with_tears_of_joy:

அப்படியொரு நிலை சிங்களத்துக்கு வர இந்தியாவோ, சர்வதேசமோ கைவிடாது இலங்கையிலிருந்து தமிழர் அழியும் வரை. ஆனா இதே நிலை அவர்களுக்கு வந்தால்; இலங்கை தனது முன்னேற்றத்தை பெருமையாக பேசி அவர்களுக்கு பாடம் எடுக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொரோனா

நீதி கிடைப்பதில் சந்தேகம் எழுந்துள்ளது : கஜேந்திரகுமார்!

பொலிஸாரினால் தனக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக, பொலிஸாரின் ஊடாகவே விசாரணைகள் இடம்பெறுவதால், இதற்கான நீதி கிடைப்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்ட விவகாரம் மற்றும் 3 ஆம் திகதி மருதங்கேனியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக இன்று நாடாளுமன்றில் சிறப்புரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற சிறப்புரிமையின் பிரகாரம், நேற்றைய தினம் நான் நாடாளுமன்றில் உரையாற்றிய பின்னர், பொலிஸார் என்னை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றிருக்கலாம்.

ஆனால், பொலிஸார் நேற்று என்னை கைது செய்வதில்தான் உறுதியாக இருந்தார்கள். இதுதொடர்பாக நான் சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகருக்கும் அறியப்படுத்தியிருந்தேன்.

இந்த நிலையில் சில பெரும்பான்மை ஊடகங்கள், பொலிஸாரின் சார்பாக மட்டும் செய்திகளை வெளியிட்டுள்ளமையை நான் அவதானித்தேன். இவை தவறானது.

நான் ஒழிந்துக் கொண்டதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எனது தந்தைக் கொல்லப்பட்டபோதும், வெள்ளை வா கலாசாரம் நாட்டில் இருந்தபோதும்கூட நானும் எனது குடும்பமும் எங்கும் ஓடி ஒழிந்துக் கொள்ளவில்லை.

இது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே கருதப்படுகிறது. இந்த விடயத்தில் பாரபட்சம் காண்பிக்கப்பட்டது.

பொலிஸாரின் இந்த செயற்பாடு தொடர்பாக பொலிஸாரே விசாரணை செய்வதால் இந்த விடயத்தில் நீதி கிடைக்குமா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1334039

  • கருத்துக்கள உறவுகள்

குணா கவியழகன் அவர்கள் அரை வேக்காட்டுத்தனமாக எதாவது சொல்லிவிடவேண்டுமென்பதற்காகக் சொலுகிறார் சிங்களத்துக்கு ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கு என்பது எல்லோரும் அறிந்ததே அதை யார் வந்தும் மாற்றியமைக்கமுடியாது என்பதே உண்மை.

தவிர கஜேதான் மீண்டும் தேர்தலில் வெல்லவேண்டும் எனச் சிங்களம் செயற்படுகுது என்பது கற்பனையின் உச்சம் செல்வராஜா கஜே இப்போதும் தேசியப்பட்டியலில் உள்ளதான் இருக்கிறார். எப்போது ஒரு சீட் வெல்ல வாய்ப்பிருக்கொ அதில் முன்னுக்கு நிற்பவர் கஜேதான் காரணம் அங்கு ராசாவும் அவர்தான் மந்திரியும் அவர்தான் பொருளாதார பலமும் மேட்டுக்குடித்தனமும் கஜேயிடம்தான் இருக்கு தவிர பேரன் அப்பன்  எனும் பாரம்பரியம் மிக்கவர்கள் எனும் விம்பமும் இருக்கு இப்போதும் சொல்வார்கள் மணிவண்ணன் தரப்புச் சொல்லுது அடுத்த தேர்தலில் மணி காங்கிரசை மண் கவ்வ வைப்பார் என அதெல்லாம் சாத்தியமானதல்ல.

என்ன சுமந்திரன் தரவளி வெளிநாடு வந்தால் குணா மதியழகனை ஒருவேளை சந்திக்கலாம் அதன் பின்பு அவருக்குப் பின்னால் ஒளிவட்டம் சுழரும்  யூ ரியூப்பில் அதன்பின்பு சுமந்திரன் அடிப்பொடிகள் லைக்குகள் அள்ளி விடுவினம் நான் தான் அடுத்த பிரபல அரசியல் ஆய்வாளர் மத்தைஅயள் எல்லாரையும் அடிச்சுத் தூக்குறன் எனக் கனவுப் பால் குடிக்கிறார் 

அனேகமாக அடுத்த புலம்பெயர் கல்வியாளர்கள் ஊடகவியளாளர்களுடனான சிறீலங்காத்தரப்புச் சந்திப்பு எனும் ஒன்று வரும்போது இவரும் உள்ளடக்கபடுவார்.

அப்பு குணா கவியளகன் காங்கிரசுக்கு ஒரு சீற்றும் கிடைக்குதோ தெரியாது அப்படிக்கிடைத்தால் அது பொன்னற்ர பேரனுக்குத்தான் என எப்போதோ உயில் எழுதியாச்சு. வேற எதையாவது சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Elugnajiru said:

குணா கவியழகன் அவர்கள் அரை வேக்காட்டுத்தனமாக எதாவது சொல்லிவிடவேண்டுமென்பதற்காகக் சொலுகிறார் சிங்களத்துக்கு ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கு என்பது எல்லோரும் அறிந்ததே அதை யார் வந்தும் மாற்றியமைக்கமுடியாது என்பதே உண்மை.

இதை கொஞ்சகாலம் முதலே தொடங்கிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சிங்களவன்களுக்கு எத்தியோப்பியா சோமாலியா பஞ்சம் வந்தாலும் திருந்த மாட்டானுகள். :face_with_tears_of_joy:

என்னதான் இல்லாவிடடாலும், தமிழனை இம்சிப்படுத்துவதிலும் அதனை ரசிப்பதிலும் அவர்களுக்கு அவ்வளவு  சந்தோசம். 

  • கருத்துக்கள உறவுகள்

குணாவுக்கு தான் ஏதோ சாமியார் போலவும், தனது வீடியோக்களைப் பார்ப்பவர்கள் சீடர்கள் போலவும் தெரிகிறது போல. அறிவியக்கம் அறிவியக்கம் என்று கூறிக்கொண்டு தனது கற்பனைகளை எடுத்து விடுகிறார். ஆரம்பத்தில் சம்பந்தனையும், சுமந்திரனையும் கழுவிக் கழுவி ஊற்றினார். இப்போது கஜேந்திரக்குமார் என்றால் பாவற்காய்க் கசப்பு அவருக்கு.

அண்மையில் வெளியிட்ட இவரது காணொளி பார்க்கும்போது, ரணிலால் இறக்கப்பட்டவர்தான் கஜேந்திரக்குமார் என்கிற ரேஞ்சிற்கு அள்ளி விட்டிருக்கிறார். மாகாணசபை முறைமையினை புலிகள் புறக்கணித்திருக்க, இந்தியா தமிழரின் கைகளை மடக்கியே கொண்டுவந்தது. ஆனால், இன்றுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. 13 ஆவதை ஏற்றுக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சமஷ்ட்டி நோக்கி நகர்ந்திருக்கலாம் என்று புலிகளை விமர்சிப்போர் நிற்கிற அதே சந்தியில் இப்ப குணாவும் வந்து நிற்கிறார். சுமந்திரன் கூறுவதுபோல, 13 இற்கு முற்றான ஆதரவென்று ஏற்றுக்கொண்டு படிப்படியாக முன்னேற வேண்டுமாம்.

  ரணிலுக்கும் 13 ஆம் திருத்தம் தேவையில்லையாம், கஜேந்திரனுக்கும் தேவையில்லையாம். ஆகவே, கஜேன் ரணிலினால் இறக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லவருகிறார். விட்டால், ரணிலின் அழுத்தத்தினாலேயே 1987 இல் புலிகளும் 13 இனை எதிர்த்தார்கள் என்று சொன்னாலும் சொல்லுவார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Cruso said:

என்னதான் இல்லாவிடடாலும், தமிழனை இம்சிப்படுத்துவதிலும் அதனை ரசிப்பதிலும் அவர்களுக்கு அவ்வளவு  சந்தோசம். 

ஈழத்தமிழனை அடக்கி வைப்பதில்  சிங்கள இனவாதத்திற்கு ரசிப்பும் இல்லை. இம்சையுமில்லை. சந்தோசமுமில்லை.

சிங்கள இனவாதிகளுக்கு ஈழத்தமிழனை நினைத்தால் அடி மூலம் வரைக்கும் பயம்.

ஆனால் ஈழத்தமிழர்கள்  மற்றவர்களையும் சகோதர பாசத்துடன் அரவணைப்பவர்கள் என்பதை செயல் முறையில் காட்டியும்.........???????

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Elugnajiru said:

கஜேதான் மீண்டும் தேர்தலில் வெல்லவேண்டும் எனச் சிங்களம் செயற்படுகுது என்பது கற்பனையின் உச்சம்

அப்போ.... த. தே. கூட்டமைப்பு சுமந்திரன், தாடியர் சிங்களத்தின் முகவர் இவர்களை சிங்களம் கைவிட்டுவிட்டதோ?  அவர்கள் தான் சிங்களத்துக்காக வாங்கு வாங்கென்று வாங்குகிறார்களே. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தையை போட்டுத்தள்ளியதும் சிங்களந்தானே!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழனை அடக்கி வைப்பதில்  சிங்கள இனவாதத்திற்கு ரசிப்பும் இல்லை. இம்சையுமில்லை. சந்தோசமுமில்லை.

சிங்கள இனவாதிகளுக்கு ஈழத்தமிழனை நினைத்தால் அடி மூலம் வரைக்கும் பயம்.

 

என்று நாங்கள் நினைக்கிறோம், சொல்லுகிறோம். ஆனால் நடைமுறையில்.......

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

13 ஆவதை ஏற்றுக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சமஷ்ட்டி நோக்கி நகர்ந்திருக்கலாம் என்று புலிகளை விமர்சிப்போர் நிற்கிற அதே சந்தியில் இப்ப குணாவும் வந்து நிற்கிறார். சுமந்திரன் கூறுவதுபோல, 13 இற்கு முற்றான ஆதரவென்று ஏற்றுக்கொண்டு படிப்படியாக முன்னேற வேண்டுமாம்.

அதை தாறோம் என்று எப்போ யாருக்கு சொன்னார்களாம்? அறிய ஆவல்! 

  • கருத்துக்கள உறவுகள்

https://tamilwin.com/article/congresswoman-summer-lee-gajendrakumar-ponnambalam-1686267578

Tweet

 
See new Tweets
 

Conversation

 
 
 
 
 
 
 
vag8RFOu_normal.jpg
 
While I welcome the release of MP , I am deeply concerned by his arrest — another example of the anti-democratic intimidation and harassment utilized by the Sri Lankan state to try and silence Tamil people’s demands for a political solution & accountability.
 
 
·
3,371
Views
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Cruso said:

என்று நாங்கள் நினைக்கிறோம், சொல்லுகிறோம். ஆனால் நடைமுறையில்.......

அதுதான் சட்டம் எனும் போர்வையில்  தமிழர் போராட்டங்களை அடக்குகின்றார்கள்.சிறை பிடிக்கின்றார்கள்.முன்னாள் போராளிகளை கண்காணித்து விசாரிக்கின்றார்கள்.தமிழர் பிரதேசங்களில் எல்லையில்லாத விகாரைகளை அமைத்து பௌத்த பிரதேசமாக்குகின்றார்கள்.அவசர சிங்கள குடியேற்றங்கள்...
விலை போன தமிழ் அரசியல்வாதிகளை வைத்து பிரச்சனைகளை தீர்க்கின்றோம் என கண்ணாமூச்சி விளையாட்டுகள்......இப்படி இன்னும் பல......


 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Cruso said:

என்று நாங்கள் நினைக்கிறோம், சொல்லுகிறோம். ஆனால் நடைமுறையில்.......

துணிந்தவர் எனில் ஏன் வடக்கு கிழக்கில் இராணுவத்தை குவித்து வைத்திருக்க வேண்டும்??

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/watch?v=560970182656676 👈

கஜேந்திரகுமார் கைதால்... சூடான பாரளுமன்றம்.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/100080678851063/videos/273827188509157/

எனது #தந்தையை அரசு #படுகொலை செய்தபோதோ அல்லது #வெள்ளைவான் கடத்தியபோதோ ஓடியொளியாத நானோ எனது குடும்பமோ இனி ஓடியொளியமாட்டோம்”
சிங்களத்தின் கோட்டைக்குள் வைத்து இனப்படுகொலை அரசுக்கு இராஜதந்திர வார்த்தைகளால் சாட்டையடி கொடுத்த #கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…

 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

துணிந்தவர் எனில் ஏன் வடக்கு கிழக்கில் இராணுவத்தை குவித்து வைத்திருக்க வேண்டும்??

ஒன்று மீண்டும் கையை சுட்டுக்கொள்ள விரும்ப மாடடார்கள். இரண்டாவதாக அவர்களது நோக்கம் இப்போதுதான் படிப்படியாக நிறைவேறிக்கொண்டு வருகின்றது.   

15 hours ago, குமாரசாமி said:

அதுதான் சட்டம் எனும் போர்வையில்  தமிழர் போராட்டங்களை அடக்குகின்றார்கள்.சிறை பிடிக்கின்றார்கள்.முன்னாள் போராளிகளை கண்காணித்து விசாரிக்கின்றார்கள்.தமிழர் பிரதேசங்களில் எல்லையில்லாத விகாரைகளை அமைத்து பௌத்த பிரதேசமாக்குகின்றார்கள்.அவசர சிங்கள குடியேற்றங்கள்...
விலை போன தமிழ் அரசியல்வாதிகளை வைத்து பிரச்சனைகளை தீர்க்கின்றோம் என கண்ணாமூச்சி விளையாட்டுகள்......இப்படி இன்னும் பல......


 

அதைத்தான் நானும் சொல்ல வருகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

’’வாயை மூடு’’ எனக்கூறும் உரிமை எவருக்கும் கிடையாது

 

 
 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி குறித்த வாதப் பிரதிவாதங்களை அடுத்து, அரச  தரப்பு உறுப்பினர்கள் சபையில் எழுந்து நின்று கூச்சலிட்ட நிலையில், சபைக்கு வருகை தந்த சபாநாயகர் இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்ததுடன், ஆகவே அதற்கு இடமளியுங்கள் என அறிவுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற நிதி,பொருளாதார உறுதிப்படுத்துகை மற்றும் தேசிய கொள்கைகள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின்  கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  எம்.பி. செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

மருதங்கேணி சம்பவம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. கைது தொடர்பான கஜேந்திரன் எம்.பி.யின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு  அமைச்சர் டிரான் அலஸ்,

“அந்த சம்பவம் தொடர்பில் நான் முதல் நாளே அறிக்கை கோரினேன். அது தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோக்களையும் பார்த்தேன். அதில் கஜேந்திரகுமார் எம்.பி ஒரு கௌரவ உறுப்பினராக நடந்து கொள்ள வில்லை. பொலிஸ் அதிகாரிகளை ''வாயை மூடு''என தரக்குறைவாக பேசியதை  அவதானித்தேன்” என்றார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. “சிவில் உடையில் வந்தவர்கள் பொலிஸ் என குறிப்பிட்டார்கள். நான் அதற்கான அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவில்லை. பொலிஸ் என்று குறிப்பிட்டுக் கொண்டு சிவிலுடையில் படுகொலையில் ஈடுபட்ட சம்பவங்கள் நாட்டில் பல உள்ளன” என்றார்.

இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், “அந்த காணியின் வேலிக்கு பின்னால் இருந்த பொலிஸ் அதிகாரியிடம் நீங்கள் முறையற்ற வகையில் கதைத்துள்ளீர்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?” எனக்கேட்டார். “இதற்கு பதிலளித்த கஜேந்திரகுமார் எம்.பி  சீருடையில் ஆயுதமேந்திய நிலையில் இருந்த பொலிஸ் அதிகாரியுடன் நான் அப்படிப் பேசவில்லை” என்றார்.

தொடர்ந்து  கூறிய  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், “பொலிஸாரை ''வாயை மூடு'' எனக்கூறும் உரிமை எவருக்கும் கிடையாது. பாராளுமன்ற உறுப்பினர் அல்ல எவர் கூறினாலும் நான் சகித்துக்கொண்டிருக்க மாட்டேன். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. விடயத்தில் பொலிஸாரின் பக்கம் எந்தத் தவறும் கிடையாது”  என்றார்.

எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.,  சம்பவம் இடம்பெற்ற தினத்தில் மாலை  3.30 மணிக்கு பரீட்சை முடிவடைந்து விட்டது. சிவில் உடையில் வந்தவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் தங்களை பொலிஸ் என குறிப்பிட்டுக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியுமா ? பாராளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறும் வாரத்தில் கஜேந்திரகுமார் கொழும்புக்கு வருகை தந்துள்ளார் ஆகவே அவரை அவசரமாக ஏன் கைது  செய்ய வேண்டும்“ என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பரீட்சை தொடர்பில் வீடியோவை பார்த்து   அறிவிக்கலாம்.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் கடந்த 5 ஆம் திகதி முதல் பாராளுமன்ற உறுப்பினரை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தொடர்பு  கொண்டார்கள். இறுதியில் சபாநாயகருக்கு அறிவித்ததன் பின்னரே கைது செய்யப்பட்டார் இவ்விடத்தில் அவசரப்படவில்லை” என்றார்.

இதன்போது எழுந்த  கஜேந்திரகுமார் எம்.பி இந்த சம்பவத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்னை குற்றவாளியாக்கி பொலிஸாரை பாதுகாப்பது தெளிவாக விளங்குகிறது” என்றார்.

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/வாயை-மூடு-எனக்கூறும்-உரிமை-எவருக்கும்-கிடையாது/150-318837

  • கருத்துக்கள உறவுகள்

தன்னை போலீசார் எனக்கூறிக்கொண்டவர் தனது பதவிக்கு ஏறறாற்போல செயற்படாமல் துப்பாக்கியை காட்டி மிரட்டுவதும், பின் தப்பி ஓடுவதும் சரியா? அவரை ஏன் நீதிமன்றம் விசாரிக்கவில்லை? பொதுமக்களை தவறாக வழிநடாத்தியமைக்காக. இந்தபொலிசு அவரை (விசாரணை செய்ய வந்தவரை) தான் அழைத்ததாக கூறுகிறார், பின் எதற்காக வேலிக்கு பின்னாலிருந்து தலையை நீட்டி தொலுக்கு பண்ணியவர்? அவர்கள் நேர்மையாக, சரியான விதத்தில் தம் கடமையை ஆற்றியிருந்தால்; பிரச்சனைகளுமில்லை, மரியாதைக்குறைவும் ஏற்பட்டிருக்காது. போலீசார் சர்வாதிகள்போல் நடந்துகொள்வது பிறகு எப்படி மரியாதையை எதிர்பார்ப்பது?

11 hours ago, nunavilan said:

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், “பொலிஸாரை ''வாயை மூடு'' எனக்கூறும் உரிமை எவருக்கும் கிடையாது. பாராளுமன்ற உறுப்பினர் அல்ல எவர் கூறினாலும் நான் சகித்துக்கொண்டிருக்க மாட்டேன்

இத்தனை அராஜகங்களையும் செய்துவிட்டு தமிழர் அதை வாய் மூடி அனுபவிக்க கடமைப்பட்டவர்கள், அவர்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும்,என  எப்படி நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? அதை யாரும் சுட்டிக்காட்டக்கூடாது. அதை நீங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்பது உலகறிந்த விடயந்தானே! முட்டாள்களின் கோவம் அப்படிப்பட்டதுதான்.      

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமாரின் கைது : அரசியல் தீர்வை வலியுறுத்தும் தமிழ் மக்கள் மீதான அரச ஒடுக்குமுறைக்கு மற்றொரு உதாரணம் - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் விசனம்

Published By: DIGITAL DESK 3

10 JUN, 2023 | 07:58 PM
image
 

(நா.தனுஜா)

அரசியல் தீர்வையும், பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் ஒடுக்கும் இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கான மற்றுமொரு உதாரணமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது அமைந்திருப்பதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த புதன்கிழமை கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கண்டனத்தையும், விசனத்தையும் வெளிப்படுத்தி தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவுகளிலேயே அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

டெபோரா ரோஸ்

இச்சம்பவம் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டெபோரா ரோஸ், அமைதியான முறையில் போராட்டமொன்றில் ஈடுபட்டமைக்காக தமிழ் அரசியல் தலைவரும் சிவில் உரிமைகள் செயற்பாட்டாளருமான கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டமை மிகுந்த விசனமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அத்தோடு அவர் விடுவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளித்தாலும், அவரது கைது கரிசனைக்குரிய விடயமாகவே காணப்படுவதாகவும் டெபோரா ரோஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

விலி நிக்கல்

'ஈடுபட்டமைக்காக தமிழ் அரசியல் தலைவரும் சிவில் உரிமைகள் செயற்பாட்டாளருமான கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டமை தீவிர கரிசனையைத் தோற்றுவித்துள்ளது. இந்நிலைவரம் குறித்து நான் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிப்பேன்' என்று காங்கிரஸ் உறுப்பினர் விலி நிக்கல் பதிவிட்டுள்ளார்.

சம்மர் லீ

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுவிக்கப்பட்டமையை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள காங்கிரஸ் உறுப்பினர் சம்மர் லீ, 'கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டமை மிகுந்த விசனத்தைத் தோற்றுவித்துள்ளது. அரசியல் தீர்வையும், பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் ஒடுக்கும் இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கான மற்றுமொரு உதாரணமாக இச்சம்பவம் அமைந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/157387

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.