Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் சுயமரியாதை நடைபயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சுயமரியாதை நடைபயணம்

adminJune 10, 2023
 
01-2-2.jpg?fit=1170%2C878&ssl=1

சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகவும் LGBTQIA+ சமூகத்திற்கு எதிரான பாகுபாடுகளைப் பற்றி வலியுறுத்தியும் சுயமரியாதை நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் சனிக்கழமை இடம்பெற்றது.

சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு ‘யாழ். சுயமரியாதை வானவில் பெருமிதம் – 2023’ நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக, ‘ இச்சமூகத்தில் வாழும் அனைவருமே சமூக பொறுப்புடையவர்கள்’ என்பதை வலியுறுத்தும் முகமாகவும், LGBTIQA+ சமூகத்தினரையும் சக மனிதர்களாக கருதுவதுடன் அவர்கள் தமது வாழ்வை வாழ்வதற்கான உரிமைகளை மதிப்பதுடன் ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கிய பயணத்தின் ஓர் அங்கமாக சுயமரியாதை நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இந்த நடைபவனி, யாழ். பேருந்து நிலையம் முன்னாலிருந்து இன்று சனிக்கிழமை (10) காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி, சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து, பண்ணை வீதியூடாக , பொது நூலகத்தை அடைந்து வைத்தியசாலை வீதி ஊடாக நகர்ந்து, ஆரிய குளத்துக்கு முன்பாக நிறைவடைந்தது.

குறித்த நடைபவனியில் பலரும் தன்னார்வமாக பங்கேற்றதுடன் யாழ்ப்பாணம் கேகேபி இளைஞர் கழகமும் ஆதரவு வழங்கியிருந்தது.
spacer.png

spacer.png

spacer.png

https://globaltamilnews.net/2023/191763/

  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்...

 

  • கருத்துக்கள உறவுகள்

ஓரின சேர்க்கையாளர்களின் ஊர்வலத்துக்கு…
சுய மரியாதை நடைப் பயணம் என்று பெயர் வைத்து…. கம்பு சுற்றுகிறார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஓரின சேர்க்கையாளர்களின் ஊர்வலத்துக்கு…
சுய மரியாதை நடைப் பயணம் என்று பெயர் வைத்து…. கம்பு சுற்றுகிறார்கள். 😂

அப்படியென்று நினைக்கவில்லை,  திருநங்கைகளின் அங்கீகராத்துக்குதான், நல்ல தொடக்கம்👍

5 hours ago, கிருபன் said:

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

அப்படியென்று நினைக்கவில்லை,  திருநங்கைகளின் அங்கீகராத்துக்குதான், நல்ல தொடக்கம்👍

Gay Pride Flag Pictures

அந்த “வானவில் கொடி” ஓரின சேர்க்கையாளர்களின் கொடி.
திருநங்கைகள் இந்தக் கொடியை பாவிப்பதில்லை என்றே நினைக்கின்றேன்.
இருவருக்கும் உள்ள சமூக பிரச்சினைகள், வேறு வேறானவை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவகையில், இயற்கையால் வஞ்சிக்கப்பட்டு, தங்களால் இயற்கையாக வாழமுடியவில்லையே, தங்களை அங்கீகரிப்பார் யாருமில்லையே என ஏங்குவோரிடை. இயற்கை கொடுத்த அதிஸ்டத்தை வீணாக்கி அதற்கே சவால் விட்டு அங்கீகாரம் தேடும் கூட்டம். உலகம் பலவிதம், அதில் பல வேண்டாத கவலை. 

  • கருத்துக்கள உறவுகள்

எல்ஜிபிடிகியு சமூகத்தினருக்கு ஆதரவு - தமிழ் தேசிய மக்கள் முன்னணி

Published By: RAJEEBAN

11 JUN, 2023 | 12:54 PM
image
 

இலங்கையின் எல்ஜிபிடிகியு சமூகத்தினருக்கு உறுதியான ஆதரவை வழங்குவதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சுயமரியாதை பவனி குறித்து  தமிழ் தேசிய மக்கள் முன்னணயின் ஆதரவாளர் ஒருவர் சமூக ஊடகங்களில் வெளியிடடுள்ள கருத்து குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள  தமிழ் தேசிய மக்கள் இதனை தெரிவித்துள்ளது.

எங்கள் கட்சியின் உறுப்பினரான நபர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் நிச்சயமாக இந்த விடயத்தில் எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

எல்ஜிபிடிகியு சமூகத்தினருக்கு உறுதியான ஆதரவை வழங்குவதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

எல்ஜிபிடிகியு சமூகத்தினரின் நலன்களை அங்கீகரிக்கும் பாதுகாக்கும் மேம்படுத்தும் அனைத்துவகையான சட்டங்கள் மற்றும் மாற்றங்களிற்கு எங்கள் கட்சி ஆதரவளிக்கும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

சகல விதமான ஒடுக்குமுறைகள் மற்றும் LGBTQIA+ சமூகத்துக்கு எதிரான பாகுபாடுகளை எதிர்த்து சுயமரியாதை நடைபயணமொன்று யாழ்ப்பாணத்தில்  சனிக்கிழமை  இடம்பெற்றது.

சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு ‘யாழ். சுயமரியாதை வானவில் பெருமிதம் – 2023’ நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக ‘இச்சமூகத்தில் வாழும் அனைவருமே சமூக பொறுப்புடையவர்கள்’ என்பதை வலியுறுத்தும் முகமாகவும், LGBTIQA+ சமூகத்தினரையும் சக மனிதர்களாக கருதுவதுடன் அவர்கள் தமது வாழ்வை வாழ்வதற்கான உரிமைகளை மதிப்பதுடன் ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கிய பயணத்தின் முக்கிய நிகழ்வாக இந்த நடைபவனி அமைந்தது.

இந்த நடைபவனி இன்று காலை 9.30 மணியளவில் யாழ். பேருந்து நிலையம் முன்னால் இருந்து ஆரம்பமாகி, சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து, பண்ணை வீதியூடாக பொது நூலகத்தை அடைந்து, வைத்தியசாலை வீதியூடாக நகர்ந்து, ஆரிய குளத்துக்கு முன்பாக நிறைவடைந்தது. 

யாழ்ப்பாணம் கே.கே.பி. இளைஞர் கழகத்தின் ஆதரவில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடைபவனியில் பலரும் தன்னார்வத்தோடு கலந்துகொண்டனர். 

https://www.virakesari.lk/article/157444

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.