Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பெளத்த வரலாற்றை ஏற்றுக்கொண்டமைக்காக ஜனாதிபதி ரணிலை பாராட்டுகிறேன் - மனோ கணேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

13 JUN, 2023 | 11:49 AM
image
 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நான் பாராட்டுகிறேன். முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கை தீவின்“தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இலங்கையின் வரலாற்றில் தமிழ் பெளத்த வரலாற்றுக்கு உரிய இடத்தை ஏற்றால், அது இன்று நாம் எதிர்கொள்ளும் அநேக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் சாவியாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,  

தமிழரசு கட்சியினருடனான கலந்துரையாடலின் போது தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில பணிப்புரைகளை விடுத்துள்ளார். அதன்போது இலங்கை தீவின் “தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, ரணில் விக்கிரமசிங்க கருத்து கூறியுள்ளார்.

இப்படி ஒரு தமிழ் பெளத்த வரலாறு இருப்பதை சிங்கள தீவிரர்கள் எப்போதும் மறைக்க விரும்புகிறார்கள். அந்த விஜயன் வந்த இறங்கிய கதை பொய்யென்று என்னை தேடி வந்து வண. பிக்கு ஞானசாரர் சொன்னது போன்றும், இளவரசன் விஜயன் வரவை நினைவுகூர்ந்து, இலங்கை அஞ்சல் திணைக்களம் முத்திரை வெளியிட்டு, பின்னர் அதை இரண்டு வருடங்களில் வாபஸ் பெற்றதை போன்றும், வெறும் கைகளால் சூரியனை மறைப்பதை போன்றும், வரலாற்றில் தமிழர்களுக்கு உரிய இடத்தை இவர்கள் எப்போதும் மறைக்க முயன்று வருகிறார்கள்.

தமிழ் பெளத்த வரலாறு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், இன்று நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் என்ற பூட்டுக்கு அது சாவியாக அமையும் என நான் நம்புகிறேன்.  இந்நோக்கில், 2018ம் வருடம் நான் அமைச்சராக இருந்த போது ஒரு காரியம் செய்தேன்.

பிரபல சிங்கள வரலாற்றாசிரியர், சினிமா எழுத்தாளர் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, இலங்கையின் தமிழ் பெளத்த வரலாற்றை பற்றி சான்றுகளுடன் எழுதிய, “தமிழ் பெளத்தன்” (தமிழ பெளத்தயா) சிங்கள நூல் நாட்டில் பாவனையில்  இல்லாமல் இருந்தது. அந்த நூலை தேடி பிடித்து, பேசி, பேராசிரியரின் அனுமதியை பெற்று அதை எனது அமைச்சின் செலவில் மறுபிரசுரம் செய்து, நாட்டின் சிங்கள பாடசாலைகளுக்கும், விகாரைகளுக்கும் இலவசமாக அனுப்பி வைத்தேன்.

அதன்பின் பேராசிரியர் ஆரியரத்னவை அழைத்து சில வண. பிக்குகள் கண்டித்துள்ளார்கள், என அறிந்தேன். என்னுடன் முரண்பட எவரும் வரவில்லை. இப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை போட்டு கிழிப்பார்களோ தெரியவில்லை. அவரை அந்த கெளதம புத்தனும், கதிர்காம கந்தனும் காப்பாற்றட்டும்.

https://www.virakesari.lk/article/157593

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே முடிந்தால், மகாவம்சத்தையும் மொழிபெயர்த்து இணையத்தில் ஏற்றிவிடுங்கள். உங்களுக்கு புண்ணியமாய்ப்போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே....😉

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மைதான்.. தமிழின் அய்ம்பெரும் காப்பியங்களும் தமிழ் பெளத்தர்களால் எழுதப்படதுதான்.. உண்மை என்னவென்றால் தமிழர்களின் ஆதி இயற்கை வழிபாட்டின் பின்னர் தற்போதைய இந்து வழிபாட்டை பின்பற்றுவதற்கு முன்னர் சமணர்களாகவே இருந்தனர்.. பின்னர் திருஞானசம்பந்தர் போன்ற பார்ப்பணர்களின் சூழ்ச்சியால் பல்லாயிரம் பல்லாயிரம் தமிழ் சமணர்கள் கழுவேற்றி கொல்லப்பட்டது மட்டுமன்றி எஞ்சி இருந்த தமிழர்களும் இந்து சமயத்தை ஏற்று ஆகவேண்டும் இல்லை என்றால் உயிர் வாழ முடியாது என்ற நிலை சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டது.. உண்மையில் சமணப்பள்ளிகள் தமிழர்களிடையே மருத்துவம் வானியல் மொழி அறிவை வளர்த்ததுபோல் வேறு எந்த மதமும் தமிழர்களுக்கு செய்யவில்லை.. அதிலும் தமிழை வளர்த்த மிகப்பெரும் பங்கு சமணப்பள்ளிகளுக்கு உரியது…

2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

திட்டமிட்ட வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்ட களப்பிரர்களும் மதங்களைத் தாண்டி தமிழை வளர்த்தனர். தான் தமிழை வளர்ப்பதாகக் கூறிக்கொண்டு சைவம் இடையில் தமிழுக்குள் புகுந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, இணையவன் said:

திட்டமிட்ட வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்ட களப்பிரர்களும் மதங்களைத் தாண்டி தமிழை வளர்த்தனர்.

👍

8 hours ago, இணையவன் said:

தான் தமிழை வளர்ப்பதாகக் கூறிக்கொண்டு சைவம் இடையில் தமிழுக்குள் புகுந்தது.

மதங்களும் தங்கள் பங்கிற்கு தமிழர்கள் தலையில் ஏறி உட்காரலாம் என்று முயற்சிக்கின்றன.
பழைய பெரிய நாகரிகம்கொண்ட ஈரானிய மக்களும் மதத்தினால் சீரழிந்து போயுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

 பின்னர் திருஞானசம்பந்தர் போன்ற பார்ப்பணர்களின் சூழ்ச்சியால் பல்லாயிரம் பல்லாயிரம் தமிழ் சமணர்கள் கழுவேற்றி கொல்லப்பட்டது மட்டுமன்றி எஞ்சி இருந்த தமிழர்களும் இந்து சமயத்தை ஏற்று ஆகவேண்டும் இல்லை என்றால் உயிர் வாழ முடியாது என்ற நிலை சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டது.. 

நானும் இதனை கேள்விப்பட்டிருக்கிறேன். கழுவேற்றி கொலை செய்வது என்பது மிகவும் ஈவிரக்கமற்ற கொலை என்றும் கேள்விப்பட்டிருக்கின்ற்ன. இன்று எத்தனை பேருக்கு கழுவேற்றல் என்றால் என்ன என்று தெரியுமோ தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Cruso said:

இன்று எத்தனை பேருக்கு கழுவேற்றல் என்றால் என்ன என்று தெரியுமோ தெரியவில்லை. 

கேள்வி கேட்பதை விடுத்து, தாங்கள் தெரிந்துகொண்டதை, தெரியாதவர்களுக்காக தெரியப்படுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

கேள்வி கேட்பதை விடுத்து, தாங்கள் தெரிந்துகொண்டதை, தெரியாதவர்களுக்காக தெரியப்படுத்தலாம்.

அதை எப்படி எழுதுவதென்று தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

பழைய பெரிய நாகரிகம்கொண்ட ஈரானிய மக்களும் மதத்தினால் சீரழிந்து போயுள்ளனர்

நாங்களும் அங்கத்தைய ஆக்கள் தான். Eelamites தான் எங்கள் மூதாதையர். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

கேள்வி கேட்பதை விடுத்து, தாங்கள் தெரிந்துகொண்டதை, தெரியாதவர்களுக்காக தெரியப்படுத்தலாம்.

சாத் மாமாவுக்கு கோபம் வந்துவிட்டது...🤣

(ஏதோ ஒரு படத்தில் வந்த வசனம்.....அம்புட்டுதே...😉)

கழுவேற்றம் (impalement) என்பது ஒரு மரணதண்டனை முறையாகும். கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர்.

https://ta.wikipedia.org/wiki/கழுவேற்றம்

திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்ற 8000 சமணர்கள் தாமாகக் கழுவேறினார்கள் என்று எங்கள் சைவப் பாடப் புத்தகத்தில் உள்ளதைப் பயபக்தியுடன் சிறு வயதில் படித்தோம். இது பெரிய புராணத்திலும் உள்ளது. திருஞான சம்பந்தரே இந்தக் கழுவேற்றும் நிகழ்வை ஆரம்பித்து வைத்ததாக கோவில்களிலும் சான்றுகள் உள்ளன.

வாதத்தில் தோற்ற யாராவது இந்தக் கூரிய மரத்தில் தாங்களாகக் குத்திக் கொண்டு சாகுவார்களா ? ஒன்று இரண்டு அல்ல 8000 பேர். ஆளைக் கதறக் கதற குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்று இந்தக் கூர் மரத்தில் செருகுவார்கள்.

இப்போது கழுவேற்றம் என்றால் என்னவென்று அறிய முடிகிறபோது சமயத்தைக் காப்பாற்றும் நோக்கில் சிலர் அது இதுவல்ல இது அதுவல்ல என்று குத்தி முறிகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கழுவேற்றம் தொடர்பாக google ல் ஏராளமான சுவாரசியமான  தகவல்கள் உண்டு. 

அதன்படி கொல்லப்பட்ட சமணர்களின் எண்ணிக்கையில் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. 

மதம் மாறியதற்காக மன்னாரில் சங்கிலி மன்னனால் கொல்லப்பட்ட 700 கிறீத்துவர்களது சிரைச் சேதமும் இவ்வாறானதே. 

கடந்தகாலத் தவறுகளை ஏற்றுக்கொள்வதில் வெட்கப்பட ஏதுமில்லை.  தவறுகளை ஏற்றுக்கொள்வதுதான் சரியானது. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

ம்... குற்றவாளிகள் என கருதப்படுவோரின் கைகளையும், கால்களையும் கட்டி, கூர்மையாக்கப்பட்ட மரத்தின் மேல் உட்க்காரவைத்து கொல்வது. இதைகேட்கவே பயங்கரமாக, அவமானமாக இருக்கிறது. இது பெரும்பாலும் அந்தக்காலத்தில் தமது சமயத்தை கைவிட மறுத்தவர்களுக்காக நிறைவேற்றப்படுத்தப்பட்டதுபோல் தெரிகிறது. இதை தெரிந்தும் பார்த்தும் அஞ்சாமல் தமது சமயத்தை கட்டிக்காத்தவர்கள் அநேகர். இவர்களை இலகுவாக நாம் விமர்சித்துவிட முடியாது. எதனொன்றுக்காக எவ்வளவு கொடுமைகளை அனுபவிக்கிறார்களோ அவ்வளவுக்கு அது வீறு கொண்டு வளருமென்பது வரலாறு. கொடுமைகளினால் எதையும் தாமதப்படுத்தலாம், மௌனமாக்கலாம் முற்றாக அழித்து விட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

கழுவேற்றம் தொடர்பாக google ல் ஏராளமான சுவாரசியமான  தகவல்கள் உண்டு. 

அதன்படி கொல்லப்பட்ட சமணர்களின் எண்ணிக்கையில் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. 

மதம் மாறியதற்காக மன்னாரில் சங்கிலி மன்னனால் கொல்லப்பட்ட 700 கிறீத்துவர்களது சிரைச் சேதமும் இவ்வாறானதே. 

கடந்தகாலத் தவறுகளை ஏற்றுக்கொள்வதில் வெட்கப்பட ஏதுமில்லை.  தவறுகளை ஏற்றுக்கொள்வதுதான் சரியானது. 

நான் அறிந்த வரைக்கும் வாளால் வெட்டி சிரச்சேதம் செய்து கொல்லப்பட்ட்தாகவே கேள்விபட்டேன். சரித்திரத்தில் எப்படி எழுதி இருக்கிறதோ தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Cruso said:

நான் அறிந்த வரைக்கும் வாளால் வெட்டி சிரச்சேதம் செய்து கொல்லப்பட்ட்தாகவே கேள்விபட்டேன். சரித்திரத்தில் எப்படி எழுதி இருக்கிறதோ தெரியவில்லை. 

சிரைச்சேதம் எனக் கூறியுள்ளதைக் என்பதைக் கவனிக்கவில்லை என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2023 at 11:27, Cruso said:

நானும் இதனை கேள்விப்பட்டிருக்கிறேன். கழுவேற்றி கொலை செய்வது என்பது மிகவும் ஈவிரக்கமற்ற கொலை என்றும் கேள்விப்பட்டிருக்கின்ற்ன. இன்று எத்தனை பேருக்கு கழுவேற்றல் என்றால் என்ன என்று தெரியுமோ தெரியவில்லை. 

On 15/6/2023 at 00:35, Kapithan said:

கழுவேற்றம் தொடர்பாக google ல் ஏராளமான சுவாரசியமான  தகவல்கள் உண்டு. 

அதன்படி கொல்லப்பட்ட சமணர்களின் எண்ணிக்கையில் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. 

மதம் மாறியதற்காக மன்னாரில் சங்கிலி மன்னனால் கொல்லப்பட்ட 700 கிறீத்துவர்களது சிரைச் சேதமும் இவ்வாறானதே. 

கடந்தகாலத் தவறுகளை ஏற்றுக்கொள்வதில் வெட்கப்பட ஏதுமில்லை.  தவறுகளை ஏற்றுக்கொள்வதுதான் சரியானது. 

20 hours ago, Cruso said:

நான் அறிந்த வரைக்கும் வாளால் வெட்டி சிரச்சேதம் செய்து கொல்லப்பட்ட்தாகவே கேள்விபட்டேன். சரித்திரத்தில் எப்படி எழுதி இருக்கிறதோ தெரியவில்லை. 

On 13/6/2023 at 20:39, ஏராளன் said:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நான் பாராட்டுகிறேன். முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கை தீவின்“தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

 அவர் ஏற்றுக்கொண்டால் மட்டும் போதாது என்பதை எதிர்வரும் கருத்துக்களும் நிகழ்வுகளும் உங்களுக்கு நிரூபிக்கும். அதை எதிர் கொண்டு அவர்கள் வாதத்தை அடக்கி சிங்கள மக்களுக்கு  உண்மையை தெரியப்படுத்த நீங்கள் தயாராகுங்கள். நம்மவர்க்கு அவர்களது மொழி பரீட்சயமில்லாததால்;

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

சிரைச்சேதம் எனக் கூறியுள்ளதைக் என்பதைக் கவனிக்கவில்லை என நினைக்கிறேன். 

மன்னிக்கவும். அதை நான் கவனிக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Cruso said:

மன்னிக்கவும். அதை நான் கவனிக்கவில்லை. 

இதில்  மன்னிப்பதற்கு ஒன்றுமே இல்லை. 👍

2 hours ago, satan said:

 அவர் ஏற்றுக்கொண்டால் மட்டும் போதாது என்பதை எதிர்வரும் கருத்துக்களும் நிகழ்வுகளும் உங்களுக்கு நிரூபிக்கும். அதை எதிர் கொண்டு அவர்கள் வாதத்தை அடக்கி சிங்கள மக்களுக்கு  உண்மையை தெரியப்படுத்த நீங்கள் தயாராகுங்கள். நம்மவர்க்கு அவர்களது மொழி பரீட்சயமில்லாததால்;

நீங்கள் ஒருமுறை இலங்கை போய் வந்தால் உங்கள் நிலைப்பாடு நிச்சயம் மாறும். 

புலம்பெயர்ஸ் எங்கே நிற்கிறோம் என்பது உங்களுக்கு ஒருவேளை புரியக்கூடும். 

  • கருத்துக்கள உறவுகள்

என்னது.....! சிங்களவரெல்லோரும் தமிழ் பௌத்தம் இருந்தது என்பதை ஏற்றுக்கொண்டு விட்டார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.