Jump to content

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் - நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி தலைமையிலான குழு இலங்கை சார்பில் பங்கேற்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: NANTHINI

19 JUN, 2023 | 08:52 AM
image
 

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (19) ஜெனிவாவில் ஆரம்பமாவதுடன், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கை புதன்கிழமை (21) வாசிக்கப்படும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமானதுடன், அன்றைய தினமே ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை வாசிக்கப்பட்டது. 

அதுமாத்திரமன்றி அக்கூட்டத்தொடரில் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் கொண்டுவரப்பட்ட 51/1 என்ற புதிய தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான விசேட தீர்மானங்களோ அல்லது விவாதங்களோ உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் ஜுலை மாதம் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடரில் நாளை மறுதினம் புதன்கிழமை ஜெனிவா நேரப்படி பி.ப 3 மணிக்கு (இலங்கை நேரப்படி மாலை 6.30 மணி) இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க்கின் வாய்மொழிமூல அறிக்கை வாசிக்கப்படவுள்ளது.

இவ்வறிக்கையில் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற 51/1 தீர்மானத்தின் பிரகாரம் நாட்டின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல் மோசடிகள் என்பன மனித உரிமைகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து உறுப்பு நாடுகள் தமது கரிசனைகளை வெளிப்படுத்துவதற்கு இடமளிக்கப்பட்டாலும், இம்முறை இலங்கை தொடர்பில் புதிய தீர்மானங்கள் எவையும் நிறைவேற்றப்படமாட்டாது.

அதேபோன்று கடந்த கூட்டத்தொடரில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை சார்பில் பங்கேற்றிருந்த நிலையில், இம்முறை அமர்வில் ஜெனிவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தலைமையிலான குழு பங்கேற்கும்.

அதன்படி, இம்முறை ஜெனிவா கூட்டத்தொடர் குறித்து கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, 'ஏற்கனவே கூறியதுபோல இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் மற்றும் அதனுடன் தொடர்புடைய மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றிவருகின்றோம். நாட்டில் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கைக்கு பேரவை அமர்வில் பங்கேற்கும் எமது பிரதிநிதிகள் பதிலளிப்பார்கள்' என்று தெரிவித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/157963

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை ஐநாவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும்- மனித உரிமை ஆணையாளர்

Published By: RAJEEBAN

19 JUN, 2023 | 07:30 PM
image
 

இலங்கை ஐநாவின்  பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர்கள் முன்வைத்துள்ள பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க்கர் டேர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள பொறுப்புக்கூறல் தொடர்பான அம்சங்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள போதிலும் மனித உரிமை பேரவையுடன் தொடர்ந்து ஈடுபாட்டை பேணுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஐநாவின் அறிக்கையாளர்கள் பலர் கடந்தகாலங்களில் விஜயம் மேற்கொண்டுள்ளனர், அவர்களின் பரிந்துரைகளை இலங்கை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/158102

  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, ஏராளன் said:

இலங்கை ஐநாவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும்- மனித உரிமை ஆணையாளர்

போன வருடமும் இதையே கூறினீர்கள்.
இந்த வருடமும் இதையே கூறுகின்றீர்கள்.
வருகின்ற வருடமும் இதையே கூறுவீர்கள்.

சும்மா… கூட்டம் போட்டு, உப்புச் சப்பில்லாத அறிக்கைகளை வெளியிடுவதிலும் பார்க்க
பாதிக்கப் பட்ட மக்களுக்கு, ஏதாவது உருப்படியாய் செய்யப் பாருங்கள்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

போன வருடமும் இதையே கூறினீர்கள்.
இந்த வருடமும் இதையே கூறுகின்றீர்கள்.
வருகின்ற வருடமும் இதையே கூறுவீர்கள்.

சும்மா… கூட்டம் போட்டு, உப்புச் சப்பில்லாத அறிக்கைகளை வெளியிடுவதிலும் பார்க்க
பாதிக்கப் பட்ட மக்களுக்கு, ஏதாவது உருப்படியாய் செய்யப் பாருங்கள்.

இப்படி சொல்வதை தவிர...அவர்கள் என்ன செய்யலாம்   ???..ஒரு   கதைக்கு. உங்களை  மனித உரிமை ஆணையாளர்   ஆக. தெரிவு செய்யப்பட்டுவிட்டீர்கள். என்று கற்பனை செய்வோம்’’  ....நீங்கள் என்ன செய்வீங்கள்.....? அல்லது இலங்கையை உங்களால் என்ன செய்ய முடியும் ?.  இலங்கைக்கு நன்கு தெரியும்   தங்கள் செய்யவிடில்.   யாருமே செய்யமுடியாது.....செய்ய ப்.போவதுமில்லை  🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Kandiah57 said:

இப்படி சொல்வதை தவிர...அவர்கள் என்ன செய்யலாம்   ???..ஒரு   கதைக்கு. உங்களை  மனித உரிமை ஆணையாளர்   ஆக. தெரிவு செய்யப்பட்டுவிட்டீர்கள். என்று கற்பனை செய்வோம்’’  ....நீங்கள் என்ன செய்வீங்கள்.....? அல்லது இலங்கையை உங்களால் என்ன செய்ய முடியும் ?.  இலங்கைக்கு நன்கு தெரியும்   தங்கள் செய்யவிடில்.   யாருமே செய்யமுடியாது.....செய்ய ப்.போவதுமில்லை  🤣

ஒரு கதைக்குத் தன்னும்…. என்னை, மனித உரிமை ஆணையாளராக தெரிவு செய்தால்…
இப்ப செய்யிற வேலையை என்ன செய்யிறது?
என்னாலை… இரண்டு வேலை செய்ய, உடம்பு இடம் குடுக்காதே…  😂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

ஒரு கதைக்குத் தன்னும்…. என்னை, மனித உரிமை ஆணையாளராக தெரிவு செய்தால்…
இப்ப செய்யிற வேலையை என்ன செய்யிறது?
என்னாலை… இரண்டு வேலை செய்ய, உடம்பு இடம் குடுக்காதே…  😂

நான் சொல்ல வந்தது  ஆணையாளரின். வேலை பற்றி.....எவர் அந்த பதவியில் இருந்தாலும்  அறிக்கை மட்டுமே விட முடியும்  ....பகை நாடுகள் இல்லாத இலங்கைக்கு...எதிராக ஒரு தீர்மானம் கொண்டுவருவதும்   ..ஆதரவு நாடுகள் அற்ற. இலங்கை தமிழருக்கு ஆதரவுவாகவும் ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றுவதும்.   ரொம்பவும் கஸ்டமான. செயல்.......தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதும்  ஆணையாளர் எமக்காக. தொடர்ந்தும் குரல் கொடுப்பதும்   பெரிய சாதனையானது....என்ன செய்ய    இலங்கை அடம் பிடிக்கிறதோ   ...

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, தமிழ் சிறி said:

போன வருடமும் இதையே கூறினீர்கள்.
இந்த வருடமும் இதையே கூறுகின்றீர்கள்.
வருகின்ற வருடமும் இதையே கூறுவீர்கள்.

சும்மா… கூட்டம் போட்டு, உப்புச் சப்பில்லாத அறிக்கைகளை வெளியிடுவதிலும் பார்க்க
பாதிக்கப் பட்ட மக்களுக்கு, ஏதாவது உருப்படியாய் செய்யப் பாருங்கள்.

இவர்களது வேலையே நோகாமல் அறிக்கையிடுவது அல்லது அறிக்கைவிடுவது.

2008லே தமிழினம் கெஞ்சிக்கூவியழுதபோது மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வாகனங்களோடு சாட்சியமற்றை இனக்கொலைக்கான சூழலைச் சிங்களத்துக்கு உருப்படியாக வழங்கிவிட்டு கிளம்பியவர்களிடம் நாம் இதைவிட அதிகம் எதிர்பார்த்தால் ஏமாற்றமே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த மனித உரிமை அமைப்புக்கள் செய்த சாதனையை யாராவது பட்டியலிட முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பயங்கரவாத தடைச்சட்டம் இலங்கையில் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்து ஜெனீவாவில் பிரிட்டன் கவலை-கருத்துசுதந்திரத்தையும் வலியுறுத்தியது

Published By: RAJEEBAN

21 JUN, 2023 | 06:15 AM
image
 

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் இலங்கையில் பயன்படுத்துவது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்த  நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன

கருத்துசுதந்திரம் ஓன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை அவை வலியுறுத்தியுள்ளன.

பிரிட்டனின் மனித உரிமைக்கான இராஜதந்திரி  ரிட்டா பிரென்ஞ் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

நிலங்களை விடுவித்தல் நீண்டகால தடுத்துவைப்பு மற்றும் ஊழல் ஆகியவை குறித்த கரிசனைகளிற்கு தீர்வை காண்பதற்காக இலங்கையின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை வரவேற்கின்றோம் இலங்கையின் அனைத்து இன மற்றும் மத சமூகத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அடிப்படையாக அமையலாம்

தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்து நாங்கள்  கரிசனை கொண்டுள்ளோம் பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவதற்கு தற்போது நடவடிக்கைகள் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்கின்றோம்,பயங்கரவாத சட்டம் சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப காணப்படவேண்டும் என இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகி;ன்றோம்.

கருத்துசுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தை பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

நல்லிணக்கத்திற்கான தனது அர்ப்பணிப்பை நோக்கி இலங்கை தனது முதல்கட்ட நடவடிக்கையை எடுக்கின்ற நிலையில் வெளிப்படைத்தன்மை பொறுப்புக்கூறல் அனைவரையும் உள்வாங்கல் போன்றவற்றின் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

நாட்டின் தேர்தல் முறைகள் மீதான மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து தக்கவைப்பதன் மூலம் அதன் ஸ்தாபனங்கள் ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தை பேணுவதன் மூலம் இலங்கை தனது பிரதிநிதித்துவ 

ஜனநாயகத்தை பேணுவது அவசியம் எனவும்  அவை தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/158194

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, ஏராளன் said:

நிலங்களை விடுவித்தல்

உப்பிடியெல்லாம் கேப்பியள் எண்டு தெரிஞ்சுதான் அந்த நிலங்களுக்குள்ள விகாரைகளை கட்டி வைச்சிருக்கிறோம். இப்ப என்ன செய்வியள்? அது தவிர்ந்த நிலங்களை விடுங்கள் என்பீர்களா? அதை பராமரிக்க நாங்கள் வேண்டாமோ? காசைத் தந்தோமா பாராட்டினோமா என்றில்லாமல்  சும்மா அறிக்கை கோரிக்கை எண்டுறதை விட்டிட்டு வேற வேலையை பாருங்கோ! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் நிலவுகின்ற வரை இலங்கையில் நல்லிணக்கம் சாத்தியம் இல்லை – மனித உரிமைகளிற்கான பிரதி ஆணையாளர்

Published By: RAJEEBAN

22 JUN, 2023 | 06:27 AM
image
 

இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் நிலவுகின்ற வரை உண்மையான நல்லிணக்கமோ அல்லது நீடித்த சமாதானமோ சாத்தியமில்லை என ஐக்கியநாடுகளின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல் நசீவ் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரநெருக்கடி தொடர்ந்தும் இலங்கை மக்களின் உரிமை மற்றும் நலன்களின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது, என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கான நிதிஉதவிக்கு இந்த வருட ஆரம்பத்தில் அனுமதி வழங்கியுள்ளபோதிலும் - இது முக்கியமான முதல் நடவடிக்கை - இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீர்திருத்தத்தின் சுமைகள் சமத்துவம் இன்மைகளை மேலும் அதிகரிக்காமலிருப்பதை உறுதி செய்வது மிகவும் அவசியம் என குறிப்பிட்டுள்ள ஐக்கியநாடுகளின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல் நசீவ் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் மிகவும் நலிந்த மக்களிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு வலையமைப்புகள் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்

துரதிஸ்டவசமாக மிகவும் ஆபத்தான சட்டங்கள் எதிரணியினரை கட்டுப்படுத்துவதற்கும்  சிவில் சமூகத்தின் செயற்பாடுகளை முடக்குவதற்கும் பயன்படுத்தப்படுவதை கடந்த மாதங்களில் பார்க்கமுடிந்துள்ளது என நடா அல் நசீவ் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்களிற்கு எதிராக அனேகமான தருணங்களில் கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளன ஆர்ப்பாட்ட தலைவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைதுசெய்வதற்கான பலவந்தமான முயற்சிகள் இடம்பெறுகின்றன  பொலிஸாரின் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக இராணுவத்தினர் பயன்படுத்தப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/158281

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி பல்வேறு நடவடிக்கைகள் - ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சுட்டிக்காட்டு

22 JUN, 2023 | 07:06 AM
image
 

(நா.தனுஜா)

 

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், நேற்று புதன்கிழமை கூடிய மூன்றாம் நாள் அமர்வில் இலங்கை நேரப்படி மாலை 6.30 மணிக்கு (ஜெனிவா நேரப்படி பி.ப 3.00 மணி) மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான தனது வாய்மொழிமூல அறிக்கையை வாசித்தார். அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மனித உரிமைகளை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்தும் வகையிலும் பதில் உரையாற்றியபோதே ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டினார்.

 

இலங்கை தீவிர சமூக, பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு எட்டப்பட்டமை உள்ளடங்கலாக பொருளாதார மீட்சியை முன்னிறுத்திய நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாகப் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

குறிப்பாக அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தமிழ் அரசியல் தரப்பினருடன் நடாத்தப்பட்ட சந்திப்பு குறித்தும், அதன்போது காணி விடுவிப்பு, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, அரசியல்கைதிகள் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை பற்றியும் பேரவையில் பிரஸ்தாபித்த ஹிமாலி அருணதிலக, உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

 

அதேபோன்று உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதை இலக்காகக்கொண்டு வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீதியமைச்சர் தலைமையிலான குழுவினர் தென்னாபிரிக்காவுக்குச்சென்று கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்ததாகவும், அதனை ஸ்தாபிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டிருப்பதாகவும், அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கையாக செயலகமொன்று நிறுவப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

மேலும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் 3000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகள் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாகவும், ஏனைய முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு, செலவுத்திட்டத்தில் இழப்பீட்டுக்கான அலுவலகத்துக்கென விசேட ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், படையினர் வசமிருந்த 92 சதவீத தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளுக்கு இலங்கை தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/158282

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதையேதான் இலங்கை தொடர்ந்து சொல்லி வருகிறது, சாதித்தது என்னவென்றால்; இன நல்லிணக்கத்தை இன்னும் சிக்கலாக்கி வருகிறது. இலங்கை  திருந்தப்போவதுமில்லை, இவர்கள் வருத்தம் தெரிவித்து கருத்திடுவதை  நிறுத்தப்போவதுமில்லை. இலங்கையை வழிக்கு கொண்டுவரவேண்டுமென்றால்; உதவிகளை நிறுத்த வேண்டும், கொடுக்கப்பட்ட உதவிகளுக்கு கணக்கு காட்ட கேட்க வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஏராளன் said:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளுக்கு இலங்கை தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

ஏன்  இவ்வாறு கூறுகிறார்கள்  ..?. இது   உலகளவில் ஒரு பெரிய அமைப்பு   ..இதனை எதிர்த்தால்.  இன்று    அல்லது  எப்போதாவது   அதன் பலனை அனுபவிக்க வேண்டி வரும்...ஆனால் நாங்கள்.....

 

1 hour ago, satan said:

இவர்கள் வருத்தம் தெரிவித்து கருத்திடுவதை  நிறுத்தப்போவதுமில்லை.

எதிர்போம்  .....இதன் விளைவுகளை  அனுபவிக்கவும் செய்வோம்’’   ...எது எப்படி இருப்பினும்   .ஐ.நா  சபையை  ...மனித உரிமை சபையை   குறை கூறுவதை நிறுத்துவோம்.      ...இப்படி குறை சொல்வதால்   எமக்கு எந்த நன்மையும். கிடைக்கவில்லை   .....எங்களுக்கு ஐ. .நா சபையை  அல்லது மனித உரிமை சபையை   பிடிக்கவில்லை என்றாலும்   உங்களுடன் சேர்த்து இயங்குவோம்.  என்று  அறிக்கை விடுவோம்   நன்மைகள்   அதிகம் உண்டு”   ...சிங்களவனை பார்த்து படியுங்கள்  🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடிக்கிறவன் சிரித்துக்கொண்டே அடிப்பான், அடிபட்டவன் வலியினால் கதறவே செய்வான். இது இயல்பானதே, அதை தாங்கள் அறியாததல்லவே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அறிக்கை அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கை - தமிழ்த் தலைவர்கள் வரவேற்பு

Published By: NANTHINI

25 JUN, 2023 | 05:00 PM
image
 

ஆர்.ராம்

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக பொறுப்புக்கூறலை தவிர்த்து வருகின்ற நிலையில், ஒரு சிவப்பு எச்சரிக்கையாக அமைந்துள்ள ஐ.நா. உயர்ஸ்தானிகரின் வாய்மூலமான அறிக்கையை தாம் வரவேற்பதாக தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூறச் செய்வதற்கான அழுத்தத்தினை ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச நாடுகள் வலுவாக பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை 53ஆவது கூட்டத் தொடரில் இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் தொடர்பிலான உயர்ஸ்தானிகர் வாய்மொழி மூலமான அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், அது குறித்து கருத்து வெளியிடும்போதே தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சி.வி.விக்னேஸ்வரன்

22-636bd446c18f8.jpg

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில்,

ஐ.நா. உயர்ஸ்தானிகரின் வாய்மூலமான அறிக்கையானது, பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை சந்தித்துள்ள மக்களை மேலும் துன்புறத்தாமல், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் கட்சிகளுடன் முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தையும் வரவேற்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜனாதிபதி எம்முடனான பேச்சுவார்த்தையின்போது, அரச திணைக்களங்களினால் அபகரிக்கப்படும் காணிகள் பற்றி கரிசனை செலுத்தியிருந்தார்.

விசேடமாக வனத் திணைக்களம் 1985ஆம் ஆண்டு இருந்தவாறான வரைபடத்துக்குரிய காணிகளையே பரிபாலனம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆகவே, ஐ.நா. உயர்ஸ்தானிகர் வரவேற்றுள்ள நிலையில் அந்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அடுத்து, பொறுப்புக்கூறல் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொறுப்புக்கூறல் செய்யப்படாமல் எவ்விதமான எதிர்கால முன்னேற்றங்களையும் காணமுடியாது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பொறுப்புக்கூறல் நீதியாக முன்னெடுக்கப்பட வேண்டுமாயின், சுயாதீனமான விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.

மேலும், பயங்கரவாத தடைச் சட்ட விடயத்தில் எனது நிலைப்பாட்டுக்கு அமைவான விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் காணப்படுகின்ற குற்றவியல் சட்டம் மட்டுமே போதுமானதாகும். ஆகவே, பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதோடு, புதிய சட்டமும் அவசியமில்லை என்பதை உயர்ஸ்தானிகர் ஆணித்தரமாக கூறியுள்ளமை வரவேற்கத்தக்கது.

அதேநேரம், இந்த வாய்மொழி அறிக்கையில் போர் நிறைவுக்கு வந்து 14 ஆண்டுகளாகின்றபோதும், வடக்கு, கிழக்கில் உள்ள படையினர் வெளியேற்றப்படவில்லை என்ற விடயத்தினை சுட்டிக்காட்டியிருக்கலாம். ஆனால், அந்த விடயம் உள்ளீர்க்கப்படவில்லை.

அதேபோன்று எஞ்சியுள்ள அரசியல் கைதிகளுக்கான விடுதலையையும் அழுத்தமாக கூறியிருக்கலாம். ஆனால், அவ்விடயங்கள் கூறப்படாமை மனவருத்தத்தினை தருவதாக உள்ளது.

சுமந்திரன்

sumanthiran-575-01.jpg

இலங்கை தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளரும், வெளி விவகாரங்களுக்கான செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,

ஐ.நா.உயர்ஸ்தானிகரின் வாய்மூலமான அறிக்கையானது, மிகக் காட்டமானதாக வெளிவந்துள்ள நிலையில் அதனை நாம் முழுமையாக வரவேற்கின்றோம்.

மிக முக்கியமாக இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக பொறுப்புக்கூறல் விடயத்தில் அசமந்தமான போக்கினை பிற்பற்றி வருகின்றமை பகிரங்கமாக உயர்ஸ்தானிகர் தனது வாய்மொழி மூலமான அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருப்பதையும், அது நீக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், புதிய பயங்கரவாத தடைச் சட்டம் சர்வதேச தரங்களைக் கொண்டதாக காண்பிக்கப்படுகின்றபோதும் அதில் பாரிய அடக்குமுறைகள் காணப்படுவதை வெளிப்படுத்தியுள்ளார். அது தற்காலிகமாக தாமதப்படுத்தப்பட்டுள்ள போதும் எதிர்காலத்திலும் அது நடைமுறைப்படுத்தப்படக் கூடாது என்பதை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பொருளாதார முன்னேற்றங்களை காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றபோதும், ஜனநாயகத்தை மீறும் வகையில் அடக்குமுறைகள் முன்னெடுக்கப்படுவதை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் கட்சிகளுடன் பேச்சுக்கள் நடைபெறுகின்றபோதும் அதில் திருப்திகரமான நிலைமைகளை அடைவதற்கு அரசாங்கம் போதியளவில் அர்ப்பணிப்பினை வெளிப்படுத்தவில்லை என்பதும், காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளபோதும், அவை திருப்திகரமான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் நடைபெற்ற விடயங்களுக்கு பொறுப்புக்கூறப்படாமல் நல்லிணக்கம் சாத்தியமில்லை என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆகவே, அரசாங்கம் பொறுப்புக்கூறலை செய்கின்ற தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பொருளாதார மீட்சியும் சாத்தியமில்லாத நிலைமையே ஏற்படும்.

அடுத்த கூட்டத்தொடரில் எழுத்துமூலமான அறிக்கையில் அதன் பிரதிபலிப்புக்களை அரசாங்கம் உணர்ந்துகொள்ளும். ஆகவே, உயர்ஸ்தானிகரின் வாய்மொழி மூலமான அறிக்கையை முன்னெச்சரிக்கையாகக் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.

கஜேந்திரகுமார்

CKKBiHnXYZP26pLxgUQd.jpg

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், 

53ஆவது கூட்டத்தொடரில்  சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஐ.நா உயர்ஸ்தானிகரின் வாய்மொழி மூலமான அறிக்கையில் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியமை தொடர்பிலான பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகி நிற்கிறது என்ற விடயம் மிகவும் அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தினை ஏமாற்றுவதற்கான உத்திகளில் ஒன்றாக ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தின் செயலற்ற தன்மையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பொறுப்புக்கூறலின்றி நல்லிணக்கம் சாத்தியமில்லை என்பதும் அரசாங்கத்தின் சமகால அடக்குமுறைகள் பற்றியும் குறித்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நாம் ஐ.நா. உயர்ஸ்தானிகரின் வாய்மொழி மூலமான அறிக்கையை வரவேற்கின்றோம். ஆனால், குறித்த அறிக்கையில், இலங்கை அரசாங்கத்தின் அனைத்து விதமான செயற்பாடுகளுக்கும் அடிப்படையாக இருப்பது, சிங்கள பௌத்த பேரினவாதம் தான் என்ற விடயம் வெளிப்படுத்தப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

அதுமட்டுமன்றி, தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என்பதும், அதிகாரங்களை பகிர்வதற்கு அரசாங்கம் பின்னடிக்கின்றது என்ற விடயத்தினையும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

எம்மை பொறுத்தவரையில், தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட மக்கள்; அவர்களுக்கு பொறுப்புக்கூறப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பது நிலைப்பாடாகும்.

அத்துடன், இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்பட வேண்டுமானால், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடியவாறான அரசியல் தீர்வு அவசியமாகிறது.

அதனை எதிர்வரும் காலத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மற்றும் அலுவலகம் கவனத்தில்கொண்டு தமது அறிக்கைகள் தீர்மானங்களில் உள்ளீர்க்க வேண்டும் என்பது கோரிக்கையாகவுள்ளது. அதற்கான அழுத்தங்களை எமது தரப்பிலிருந்து நாம் முழுமையாக வழங்குவோம் என்றார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன்

23-63bc1046b5c9d.jpg

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,

ஐ.நா. உயர்ஸ்தானிகர் தனது வாய்மூலமான அறிக்கையில், இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்துக்கான முயற்சிகளை முன்னெடுப்பதாக கூறிவந்தாலும், பொறுப்புக்கூறுவதற்கு தயாரில்லாத நிலையிலேயே உள்ளது என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி, போரின்போதும், அதன் பின்னரும் அரசாங்கம் ஜனநாயக விரோதமான செயற்பாடுகளை முன்னெடுத்து பொதுமக்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்கிறது என்பதையும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

உண்மையில், இலங்கை அரசாங்கத்தினை பொறுத்தவரையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்குவது தொடர்பில் கண்துடைப்புச் செயற்பாடுகளையே முன்னெடுக்கிறது. அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேசத்தினை ஏமாற்றும் வகையில் சில பேச்சுக்களை முன்னெடுத்து காலங்கடத்துகிறது.

இவ்விதமான பிற்போக்குச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அரசாங்கத்தினை இனங்கண்டு ஐ.நா. உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் அம்பலப்படுத்தியுள்ளார்.

எனினும், தற்போதைய சூழலில் ஐ.நா.வும்,  இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி தீர்மானத்தினை கொண்டுவந்து நிறைவேற்ற இணை அனுசரணை நாடுகளும், ஏனைய சர்வதேச சமூகமும் ஒன்றிணைந்து இலங்கை அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டியது அவசியமாகிறது.

இலங்கை பொருளாதார, அரசியல் ரீதியாக ஸ்திரமற்ற நிலையில் உள்ளது.

இதிலிருந்து மீள்வதாக இருந்தால் குறித்த செயற்பாடுகள் மிகவும் அவசியம் என்பதை தொடர்ந்தும் ஆணித்தரமாக வெளிப்படுத்துவதோடு நிற்காமல், அதற்கான செயல்வடிவங்களை முன்னெடுப்பதற்குரிய அழுத்தங்களை வலுவாக பிரயோகிக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/158563

Posted

வெறுமனே அறிக்கை மட்டுமென்றாலும் தொடர்ச்சியாக வெளியிலிருந்து சிங்கள அரசாங்கத்துக்கெதிரான அறிக்கைகள் வந்துகொண்டே இருக்கவேண்டும். சர்வதேசத்தில் இலங்ககை தொடர்ந்தும் சிறுபான்மை இனத்தவரை மதிக்காத அரசு என்ற விம்பம் வெளிக்காட்டப்பட வேண்டும். 

இறுதியான் செய்தியில் தமிழ் அரசியல்வாதிகள் ஐநா வின் தீர்மானங்களை வரவேற்கிறோம், இன்னும் அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கூறியுள்ளனர். இவர்களின் கருத்து வீரகேசரியோடு முடிந்ததா அல்லது சர்வதேச ஊடகங்களுக்கு அறிக்கையை அனுப்பியுள்ளனரா ? சிறுபான்மையினர் தரப்பில் அறிக்கையை வரவேற்று மனித உரிமைக்கான பிரதி ஆணையாளருக்கு அனுப்பியுள்ளனரா ?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21/6/2023 at 00:32, ஈழப்பிரியன் said:

இந்த மனித உரிமை அமைப்புக்கள் செய்த சாதனையை யாராவது பட்டியலிட முடியுமா?

சளைக்காமல் கூடி, ஒரே விடயத்தை திரும்ப திரும்ப பேசி, கவலை தெரிவித்து, அறிக்கை விட்டு இத்தனை ஆண்டுகளை கழித்தது சாதனையில்லையா?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, satan said:

சளைக்காமல் கூடி, ஒரே விடயத்தை திரும்ப திரும்ப பேசி, கவலை தெரிவித்து, அறிக்கை விட்டு இத்தனை ஆண்டுகளை கழித்தது சாதனையில்லையா?

இதுக்காக வறிய நாடுகள் மக்களின் பணத்தில் எத்தனையோ கோடி பணங்களை செலவு செய்து இவர்களின் கையை காலை பிடித்து ஏதோ திருப்தியுடன் திரும்புகிறார்கள்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான உத்தேச சட்டம் அரசாங்கத்தின் தன்னிச்சையான தலையீட்டை சட்டபூர்வமாக்குமா ? - தீவிர கரிசனை கொள்வதாக சிவில் சமூக அமைப்புக்கள்

Published By: DIGITAL DESK 3

11 JUL, 2023 | 05:23 PM
image
 

(நா.தனுஜா)

அண்மைய சில வருடங்களாக இலங்கையின் சிவில் சமூக இடைவெளியானது தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுவருவதாகவும், அதன் தொடர்ச்சியாக புதிதாகக் கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்படும் அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான சட்டம் சிவில் சமூக செயற்பாடுகளில் அரசாங்கத்தின் தலையீட்டை சட்டபூர்வமாக்கும் என்று தாம் கரிசனைகொள்வதாகவும் சிவில் சமூக அமைப்புக்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டியுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரில் திங்கட்கிழமை நடைபெற்ற அமர்வில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான உலகளாவிய காலாந்தர மீளாய்வு அறிக்கை (நான்காவது) தொடர்பில் சமூக மற்றும் சமய நிலையம், ஆசிய சட்டவள நிலையம் மற்றும் உலகளாவிய சிவில் சமூகக் கூட்டமைப்பு (சிவிக்கஸ்) ஆகிய மூன்று அமைப்புக்களும் கூட்டிணைந்து வாய்மொழிமூல அறிக்கையொன்றை வெளியிட்டன. இவ்வமைப்புக்களின் சார்பில் பேரவையில் உரையாற்றிய ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவினால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் வருமாறு:

இலங்கை தொடர்பான கடந்த (மூன்றாவது) உலகளாவிய காலாந்தர மீளாய்வின்போது சிவில் சமூக இடைவெளியுடன் தொடர்புபட்டதாக முன்வைக்கப்பட்ட 9 பரிந்துரைகளையும் இலங்கை நடைமுறைப்படுத்தவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் இம்முறை இடம்பெற்ற காலாந்தர மீளாய்வைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சிவில் சமூக இடைவெளி குறித்து முன்வைக்கப்பட்டுள்ள 31 பரிந்துரைகளில் 24 பரிந்துரைகளை இலங்கை ஏற்றுக்கொண்டிருக்கின்றது. 

அவை மனித உரிமைகள் பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கான பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தல், அரச சார்பற்ற அமைப்புக்களின்மீது மட்டுப்பாடுகளைப் பிரயோகிக்காதிருத்தல் ஆகிய பரிந்துரைகளையும் உள்ளடக்கியிருக்கின்றது.

இத்தகைய கடப்பாடுகளுக்கு மத்தியிலும் கூட, அண்மைய சில வருடங்களாக இலங்கையின் சிவில் சமூக இடைவெளியானது தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுவருகின்றது. அண்மையகாலங்களில் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தன்னிச்சையான கைதுகள், தடுத்துவைப்புக்கள், அத்துமீறல்கள் மற்றும் கண்காணிப்புக்கள் தொடர்பிலும், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை முடக்கும் வகையில் பயங்கரவாதத்தடைச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டம் என்பன தவறாகப் பயன்படுத்தப்பட்டமை குறித்தும் நாம் ஆவணப்படுத்தியிருக்கின்றோம்.

அதுமாத்திரமன்றி போராட்டங்களுக்கு எதிரான மட்டுப்பாடுகள் மற்றும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாகப் போராட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் பற்றியும் நாம் அறிக்கையிட்டுள்ளோம். மேலும் புதிதாகக் கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்படும் அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான சட்டம் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் என்பதுடன் சிவில் சமூக செயற்பாடுகளில் அரசாங்கத்தின் தலையீட்டை சட்டபூர்வமாக்கும் என்றும் நாம் கரிசனைகொள்கின்றோம்.

இந்நிலையில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் நகைச்சுவைப்பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய ஆகியோருக்கு எதிராகப் பதிவுசெய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/159766

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை அரசாங்கத்தின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மீது நம்பிக்கையில்லை- அரசசார்பற்ற அமைப்புகள் கூட்டாக தெரிவிப்பு

Published By: RAJEEBAN

12 JUL, 2023 | 04:04 PM
image
 

இலங்கை அரசாங்கத்தின் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மீது நம்பிக்கையில்லை என இலங்கையின் அரசசார்பற்ற அமைப்புகள் கூட்டாக தெரிவித்துள்ளன.

அறிக்கையொன்றில் அரசசார்பற்ற அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளன.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

mullivaikal.jpg

தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான அரசாங்கத்தின் திட்டம் குறித்து ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டு நாங்கள் இந்த  அறிக்கையை வெளியிடுகின்றோம்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற விடயங்களுக்கு தீர்வை காண்பதற்கும் சமூகங்கள் எதிர்கொண்ட  துயரங்களுக்கு தீர்வை காண்பதற்கும் உண்மையை கண்டறிதல் மிக முக்கியமான விடயம் என நாங்கள் கருதுகின்ற அதேவேளை குறிப்பாக நாட்டின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பின்வரும் காரணங்களுக்காக இந்த பொறிமுறைக்கு எங்களால் ஆதரவை வழங்க முடியாதுள்ளது.

இலங்கையில் உருவாக்கப்பட்ட எந்த உள்நாட்டு ஆணைக்குழு அல்லதுதீர்ப்பாயம் குறித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையில்லை.

இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட இவ்வாறான ஆணைக்குழுக்கள் உண்மையை கண்டறியும்- பாதிக்கப்பட்டவர்களின் பொறுப்புக்கூறலிற்கான தேடலை சிதைக்கும்  அரசாங்கங்களின் நோக்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில் காணப்பட்டுள்ளன.

முக்கிய செயற்பாட்டாளர்களும் அரசியல்வாதிகளும் காலத்திற்கு காலம்  அரசாங்கம் இராணுவத்தினருக்கும் தேசப்பற்றுள்ள சக்திகளுக்கும் துரோகமிழைக்காது என தெரிவித்துவந்துள்ளனர்.

நீதிப்பொறிமுறையொன்று இல்லாத நிலையிலேயே தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படுகின்றது - 2015 இல் அரசாங்கம் நான்கு நிலைமாற்று நீதிக்கால கட்டமைப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதியளித்தது. இதில் விசேட நீதிபதிகள் அடங்கிய நீதிப்பொறிமுறையும் ஒன்று ஆனால் 8 வருடத்திற்கு பின்னர் இன்றுவரை அது நடைமுறைக்கு வரவில்லை.

நீதிப்பொறிமுறையை உருவாக்குவதில் ஏற்பட்ட தோல்வி காரணமாக  நம்பகதன்மை மிக்க பொறிமுறை மூலம் நீதியை தேடுவதற்கு பாதிக்கப்பட்டவர்களிற்குவாய்ப்பை மறுக்கப்பட்டுள்ளது- அவர்கள் உள்நாட்டு பொறிமுறை குறித்து நம்பகதன்மையை இழந்துள்ளனர்.

கடந்தகால குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் இன்மை தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதலை மேலும் ஆழமாக்கியுள்ளது.

கடந்த 30 வருடங்களில் பல அரசாங்கங்கள் அமைத்துள்ள ஆணைக்குழுக்களில் ஒன்றே இந்த உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு.

ஒரு வகை உண்மை ஆணைக்குழுக்கள் காணப்பட்ட இந்த கட்டமைப்புகள் பரந்துபட்ட பரிந்துரைகளுடன் அறிக்கைகளை வெளியிட்டன, இந்த பரிந்துரைகள் பல இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஆகவே உண்மை மற்றும் நல்லிணக்க  ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம் ?

இவ்வாறான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை இன்னுமொரு ஆணைக்குழு முன்னிலையில்  ஆஜராகுமாறு  அழைப்பு விடுப்பது நியாயமானதா?

குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் மன உளைச்சலையும் உண்மையை தெரிவித்தமைக்காக அச்சுறுத்தலையும்  அனுபவிக்ககூடிய ஒரு சூழ்நிலையில் அவர்களை இன்னுமொரு ஆணைக்குழு முன்னிலையில்  ஆஜராகுமாறு  அழைப்பு விடுப்பது நியாயமானதா?

 

தேசிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் வெளிநாட்டு நிபுணர்களை இணைத்துக்கொள்வது குறித்து தகவல்கள் வெளியாகின்றன.

கடந்தகாலங்களில் இலங்கை வெளிநாட்டு நிபுணத்துவத்தை பயன்படுத்தியுள்ளது.

புகழ்பெற்ற நிபுணர்களின் சர்வதேச சுயாதீன குழுவிற்கு இந்தியாவின் முன்னாள்  பிரதமநீதிபதி பிஎன் பகவதி தலைமைவகித்தார், ஜப்பானின் பேராசிரியர் ஒருவரும் அதில்  இடம்பெற்றிருந்தார்.

எனினும் அரசாங்கத்தின் தலையீடுகள் காரணமாக  2008இல் அந்த குழுபதவி விலகியது.

இலங்கையில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுவது நாளாந்த நிகழ்வாகிவிட்டது ஆனால் அரசாங்கத்திற்கு இது குறித்து நம்பகதன்மை மிக்க விசாரணைகளை நடத்தும் நோக்கம் எதுவுமில்லை.

https://www.virakesari.lk/article/159848



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.