Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்

இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தக் கூடாது : விமல் வீரவன்ச!

நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைக்கு காரணமான தரப்பினரால், அதனை மீட்டெடுக்க ஒருபோதும் முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கடந்த நல்லாட்சி காலத்தில்தான் மத்திய வங்கி பிணை முறி மோசடி மேற்கொள்ளப்பட்டது.

இவர்தான் நாட்டின் பிரச்சினையை ஏற்படுத்திய பிரதான நபர். நாட்டில் இவரால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரப் பிரச்சினையானது, கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில் தீவிரமடைந்தது.

இதனை நாம் சுட்டிக்காட்டியபோதுதான், அரசாங்கத்திலிருந்து நாம் அன்று ஒதுக்கப்பட்டோம்.
இந்த நிலையில், நாட்டின் இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தி தங்கள் நாட்டு ரூபாயை இலங்கையில் பயன்பாட்டுக்கு விடுவதற்காக இந்தியா தற்போது முயற்சித்து வருகிறது.

இப்போதும் யாழில் சில கடைகளில் இந்தியா ரூபாய்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் ரூபாயை இங்கே பயன்படுத்தினால், அந்நாட்டின் சுங்கத்தையும் எமது நாட்டின் சுங்கத்தையும் ஒன்றாக இணைந்து விடுவார்கள்.

அப்படியானால், இந்திய பொருட்கள் எதற்கும் சுங்கவரி அறவிடப்பட மாட்டாது. இது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பாரிய நன்மையாக அமைந்துவிடும்.

இதற்கு தான் விக்கிரமசிங்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது. நாட்டில் பிரச்சினையொன்றை ஏற்படுத்திய இந்தத் தரப்பினரால் ஒருபோதும் அந்தப் பிரச்சினைகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2023/1335489

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீனாக்காசை பயன்படுத்த தாராளமாக அனுமதிப்பாராம்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தாள் எங்க தண்ணியப்போட்டுப் படுத்தெழும்பி வறாரே?

இந்திய ரூபாயை இலங்கையில் ஏற்றுக்கொள்ளலாம் எண்டு இலங்கை மத்திய வங்கி  சொல்லியே மூன்று மாதமாகிறது

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, தமிழ் சிறி said:

இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தக் கூடாது : விமல் வீரவன்ச!

அரசியல் என்பது ஒரு தொழில் அல்லது தொழில் சம்பந்தப்பட்டது. :face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Nathamuni said:

இந்தாள் எங்க தண்ணியப்போட்டுப் படுத்தெழும்பி வறாரே?

இந்திய ரூபாயை இலங்கையில் ஏற்றுக்கொள்ளலாம் எண்டு இலங்கை மத்திய வங்கி  சொல்லியே மூன்று மாதமாகிறது

இது சிங்களத்தின் நடிப்பு இன்னும் இந்தியாவிடம் இடம் இருந்து வறுகலாம் என்று நூல் விடுகிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலவசமாக கிடைக்கும் இந்திய பொருட்களை பயன்படுத்தலாம். சீன பணம் படுத்தும் பாடு. 
போலீசாரால் தேடப்படும் கேடி. இவருக்கு எதிராக பிடி வாராந்த பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21/6/2023 at 01:54, Nathamuni said:

இந்தாள் எங்க தண்ணியப்போட்டுப் படுத்தெழும்பி வறாரே?

இந்திய ரூபாயை இலங்கையில் ஏற்றுக்கொள்ளலாம் எண்டு இலங்கை மத்திய வங்கி  சொல்லியே மூன்று மாதமாகிறது

On 21/6/2023 at 00:53, தமிழ் சிறி said:

இப்போதும் யாழில் சில கடைகளில் இந்தியா ரூபாய்தான் பயன்படுத்தப்படுகிறது.

பிடிவிறாந்து கையில் கிடைத்தபின் தெரிவித்த நாட்டுப்பற்றாளர் கருத்து. அதற்கு சான்று யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத்தை பலி கொடுத்து, ஊழல்களை மறைத்து வாழ்ந்து பழகி விட்டது. அதிலிருந்து மாறுவது ரொம்ப கஸ்ரம். தமிழன் இல்லாதொழிந்தாலே அவர்களது மனநிலை திரும்பும் அந்தப்பக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, satan said:

யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ உளுந்து 350 ரூபா கொழும்பில் 800 ரூபா. இது எப்படி சாத்தியமாகிறது, யாழ்ப்பாணத்தில் விளைவிக்கிறார்களா, என்று கொழும்பில் கேட்டால், அட போங்க, இந்தியாவில் இருந்து கொண்டு வந்து இறக்கிறார்களாம். மீன் பிடித்தலிலும் பார்க்க, பெற்றோல், டீசல், மளிகை பொருட்கள் யாவாரம் அமோகமாம். இந்திய பணமே இதுக்கு உபயோகமாகிறது.

 இனி வேற கப்பல் ஓடுது. அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, Nathamuni said:

யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ உளுந்து 350 ரூபா கொழும்பில் 800 ரூபா. இது எப்படி சாத்தியமாகிறது, யாழ்ப்பாணத்தில் விளைவிக்கிறார்களா, என்று கொழும்பில் கேட்டால், அட போங்க, இந்தியாவில் இருந்து கொண்டு வந்து இறக்கிறார்களாம். மீன் பிடித்தலிலும் பார்க்க, பெற்றோல், டீசல், மளிகை பொருட்கள் யாவாரம் அமோகமாம். இந்திய பணமே இதுக்கு உபயோகமாகிறது.

 இனி வேற கப்பல் ஓடுது. அவ்வளவுதான்.

வியாபாரிகளிற்கு  வரப்பிரசாதம். விவசாயத்தை நம்பிவாழும் குடும்பங்களுக்கு ஆப்பு.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.