Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அனலைதீவு வைத்தியசாலைக்குள் பொலிஸாருடன் அத்துமீறி நுழைத்த புலம்பெயர் நாட்டவர் கைது!

500x300_1772797-arrested-300x180.pngயாழ்ப்பாணம் அனலைதீவு பிரதேச வைத்தியசாலைக்குள் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தருடன் புலம்பெயர் நாட்டவர் ஒருவர் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த வைத்தியர் மற்றும் பெண் ஊழியர்களுடன் முரண்பட்டு, வைத்தியசாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை அவருடன் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவருக்கும் எதிராக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

வெளிநாடொன்றில் இருந்து அனலைதீவு பகுதியில் வந்து தங்கி நின்ற நபர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர், இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சகிதம் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டு, அங்கு கடமையில் இருந்த பெண் வைத்தியர் மற்றும் பெண் தாதிய உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களுடன் முரண்பட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், வைத்தியசாலையில் இருந்த தளபாடங்களுக்கும் சேதம் விளைவித்த பின்னர் அங்கிருந்து சென்றிருந்தார்.

அதுதொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, வடமாகாண சுகாதார பணிமனை ஆகியோருக்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதேவேளை ஆதாரமாக வைத்தியசாலை கண்காணிப்பு கமராவின் காணொளியும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, கடமையில் இருந்த பெண் வைத்தியர், பெண் தாதிய உத்தியோகஸ்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து, அவர்களை அச்சுறுத்தியமை, வைத்தியசாலை சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் புலம்பெயர் நாட்டவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த நபருடன் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கும் எதிராக பொலிஸாரினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.அனலைதீவு வைத்தியசாலைக்குள் பொலிஸாருடன் அத்துமீறி நுழைத்த புலம்பெயர் நாட்டவர் கைது! – குறியீடு (kuriyeedu.com)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எந்த புலம் பெயர் நாட்டிருந்து, இவர் சென்றிருப்பார்?
இவரிடமிருந்து..  வைத்தியசாலைக்கு ஏற்பட்ட சேதத்தையும்,
ஊழியர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும்… பெரும் தொகைப் பணத்தை
அறவிட்டு கொடுப்பதுடன், ஆறு மாதமாவது சிறையில் போட்டு எடுக்க வேண்டும்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 minutes ago, தமிழ் சிறி said:

எந்த புலம் பெயர் நாட்டிருந்து, இவர் சென்றிருப்பார்?
இவரிடமிருந்து..  வைத்தியசாலைக்கு ஏற்பட்ட சேதத்தையும்,
ஊழியர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும்… பெரும் தொகைப் பணத்தை
அறவிட்டு கொடுப்பதுடன், ஆறு மாதமாவது சிறையில் போட்டு எடுக்க வேண்டும்.

அத்துடன் லஞ்சம் கொடுத்த வழக்கில் ஒரு பத்து சவுக்கடியையும் சிபாரிசு செய்கிறேன். 🤣

Edited by விசுகு
பிழை திருத்தம்
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, விசுகு said:

அத்துடன் லஞ்சம் கொடுத்த வழக்கில் ஒரு பத்து சவுக்கடி மையும் சிபாரிசு செய்கிறேன். 🤣

இவருடன் சென்ற பொலிஸ்காரருக்கு… பாரின் சரக்கு போத்தல் கொடுத்து,
சண்டித்தனத்துக்கு…  கூட்டிக் கொண்டு போயிருப்பார் என நினைக்கின்றேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, தமிழ் சிறி said:

எந்த புலம் பெயர் நாட்டிருந்து, இவர் சென்றிருப்பார்?
இவரிடமிருந்து..  வைத்தியசாலைக்கு ஏற்பட்ட சேதத்தையும்,
ஊழியர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும்… பெரும் தொகைப் பணத்தை
அறவிட்டு கொடுப்பதுடன், ஆறு மாதமாவது சிறையில் போட்டு எடுக்க வேண்டும்.

அனேகமாக ஐரோப்பாவாகவே இருக்கும்?(பிரான்ஸ்சோ)?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஞ்சை ஒரு கோயில் திருவிழாவிலை  பந்தா காட்டி தடக்குப்படுற மூண்டு அனலைதீவு குடும்பம் இந்த முறை மிஸ்சிங்........:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, ஈழப்பிரியன் said:

அனேகமாக ஐரோப்பாவாகவே இருக்கும்?(பிரான்ஸ்சோ)?

2 minutes ago, குமாரசாமி said:

இஞ்சை ஒரு கோயில் திருவிழாவிலை  பந்தா காட்டி தடக்குப்படுற மூண்டு அனலைதீவு குடும்பம் இந்த முறை மிஸ்சிங்........:cool:

அப்ப… ஜேர்மனி தான். 😂 🤣

அந்த புலம் பெயர் அங்கிளுக்கு, எங்கு போய்… சண்டித்தனம் காட்டுவது என்று,
வெளிநாட்டில் வாழ்ந்தும் தெரியவில்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, குமாரசாமி said:

இஞ்சை ஒரு கோயில் திருவிழாவிலை  பந்தா காட்டி தடக்குப்படுற மூண்டு அனலைதீவு குடும்பம் இந்த முறை மிஸ்சிங்........:cool:

ஐயா   சாமியார்   மூண்டு  என்பது   எத்தனை  ??. 🤣. குறிப்பு....படங்கள் இணைக்கப்படாது.   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/6/2023 at 22:20, Kandiah57 said:

ஐயா   சாமியார்   மூண்டு  என்பது   எத்தனை  ??. 🤣. குறிப்பு....படங்கள் இணைக்கப்படாது.   😂

உங்கடை வீட்டிலை  தானங்களை எப்பிடி சொல்லி கதைப்பியள்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, குமாரசாமி said:

உங்கடை வீட்டிலை  தானங்களை எப்பிடி சொல்லி கதைப்பியள்? :cool:

அயன், சுவை,[யாழ் கள சுவை இல்லை ],தீறை..............🤣.  உங்களுக்கு மூண்டு   சரி எனில்    எனக்கு எந்த பிரச்சனையில்லை.......ஆனால் எங்களுடைய புலம்பெயர் இளம்  சந்ததிகள்.  பிழையாக. கற்று விடுவார்கள்     அவ்வளவு தான்    

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, Kandiah57 said:

அயன், சுவை,[யாழ் கள சுவை இல்லை ],தீறை..............🤣.  உங்களுக்கு மூண்டு   சரி எனில்    எனக்கு எந்த பிரச்சனையில்லை.......ஆனால் எங்களுடைய புலம்பெயர் இளம்  சந்ததிகள்.  பிழையாக. கற்று விடுவார்கள்     அவ்வளவு தான்    

திறி,திறைய விட மூண்டு  பரவாயில்லை. மூண்டு பேச்சுத்தமிழ் கந்தையர். யாருமே பேச்சுத்தமிழில் ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு,ஐந்து என கதைப்பதில்லை.. வருங்கால சந்ததிக்கு பேச்சுத்தமிழும் தெரிய வேணும் கண்டியளோ😎

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.