Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ரஸ்யாவில் பெரும் குழப்பநிலை : வீதிகளில் இராணுவ வாகனங்கள் : கூலிப்படையினர் அரசாங்கத்திற்கு எதிராக கலகம்

Published By: RAJEEBAN

24 JUN, 2023 | 07:12 AM
image
 

ரஸ்ய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்த    கூலிப்படையினர் ரஸ்ய அரசாங்கத்திற்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து ரஸ்யாவில் திடீர் குழப்ப நிலையேற்பட்டுள்ளது

மொஸ்கோ உட்பட ரஸ்ய நகரங்களில் இராணுவ வாகனங்களை  அவதானிக்க முடிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன 

d25b350a-c5c6-463e-a3e7-02eabfca94d5.jpg

ரஸ்ய தொலைக்காட்சி வழமையான நிகழ்ச்சிகளை இடைநிறுத்தி அவசர செய்திகளை வெளியிடுகின்றது.

ரஸ்யாவில் உருவாகிவரும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்துவருவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவுடன் இணைந்து உக்ரைன் படையினருக்கு எதிராக செயற்பட்டுவந்த வோக்னர் ஆயுதகுழுவினர் ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் தங்கள்; முகாம்கள் மீது எறிகணை தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்ததை தொடர்ந்தே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

எங்கள் படைமுகாம் மீது ரஸ்ய படையினர் ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டனர் எங்கள் தோழர்கள் பலர் கொல்லப்பட்டனர் அவர்கள் எங்களை ஏமாற்ற முயல்கின்றனர் என வாக்னர் கூலி;ப்படையின் தலைவ பிரிகோஜின் தெரிவித்திருந்தார்.

எனினும் ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஹே சைய் இதனை மறுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து ரஸ்ய பாதுகாப்பு அமைச்சரை தனது படையினர் அகற்றுவார்கள் என எச்சரித்த வாக்னர் குழுவின் தலைவர் ரஸ்ய படையினரை தலையிடவேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

இது இராணுவசதிப்புரட்சியில்லை நீதிக்கான பயணம் என தெரிவித்த அவர் தனது குழுவினர் உக்ரைனிலிருந்து ரஸ்யாவிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவில் பெரும் குழப்பநிலை : வீதிகளில் இராணுவ வாகனங்கள் : கூலிப்படையினர் அரசாங்கத்திற்கு எதிராக கலகம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல  செய்தி

நடக்கட்டும் நடக்கட்டும்

போர் அங்கே  நடப்பதும்  முடிவு அங்கே  எட்டப்படுவதும்  தான்  எல்லோருக்கும் நல்லது

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்யாவை 24 மணிநேரம் பதற்றத்தில் வைத்திருந்த 'வாக்னர் படை' - யார் இவர்கள்?

ரஷ்யா, யுக்ரேன், போர்

பட மூலாதாரம்,REUTERS

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ரஷ்யா - யுக்ரேன் போரில் திடீர் திருப்பமாக ரஷ்ய ஆதரவு கூலிப்படையான ‘வாக்னர்’ அந்நாட்டுக்கு எதிராகவே திரும்பியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

யுக்ரேனில் இருந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த இந்த கூலிப்படையினர், தலைநகர் மாஸ்கோவை நோக்கி அணிவகுக்க இருப்பதாக அறிவித்தனர்.

மேலும், ரஷ்யாவின் முக்கிய நகரான ரோஸ்டோவ்-ஆன் - டானுக்குள் புகுந்து, அங்குள்ள ரஷ்யாவின் தெற்கு பிராந்திய ராணுவ தலைமை அலுவலகத்தையும் வாக்னர் குழுவினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர்.

வாக்னர் குழுவினரின் இந்த செயல்களை ரஷ்ய அதிபர் புதின், ‘முதுகில் குத்தும் செயல்’ என்று சாடியிருந்தார்.

 

"துரோகப் பாதையில் இறங்கி தீவிரவாதத்தைக் கையில் எடுத்தவர்கள், நிச்சயம் தண்டனையை அனுபவிப்பார்கள்,” என்றும் புதின் கூறியிருந்தார்.

ஆனால் அதேநேரம், “இது ஆட்சிக் கவிழ்ப்புக்கான ராணுவ சதி அல்ல, இது நீதிக்கான அணிவகுப்பு” என்று வாக்னர் கூலிப்படையினரின் தலைவர் ப்ரிகோஜின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மாஸ்கோவை நோக்கி அணிவகுத்து முன்னேறிக் கொண்டிருந்த வாக்னர் கூலிப்படையினர், தற்போது பின்வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின், தனது படைகளைப் பின்வாங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

தற்போது இருதரப்பும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தனது செயல்கள் மூலம் உலகளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த இந்த வாக்னர் கூலிப்படையினர் யார்? ரஷ்ய -யுக்ரேன் போரில் இவர்களின் பங்கு என்ன?

 

வாக்னர் கூலிப்படையினர் யார்?

வாக்னர் கூலிப்படை, தன்னை ஒரு ‘தனியார் ராணுவ நிறுவனம்’ என விவரிக்கிறது.

இந்தப் படையில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் இருக்கிறார்கள்.

யுக்ரேன் - ரஷ்யா இடையிலான போரில், ரஷ்யாவுக்கு ஆதரவாக நீண்டகாலமாகக் களத்தில் நின்று துணைபுரிகின்றனர்.

குறிப்பாக யுக்ரேனின் ’பாக்முத்’ என்ற நகரைக் கைப்பற்றுவதற்கு நடைபெற்ற யுத்தத்தில், வாக்னர் படையினர் பெரும் பங்கு வகித்தனர்.

தங்களைத் தனியார் ராணுவ நிறுவனம் என்று கூறி வரும் வாக்னர் படையை, ரஷ்ய அரசாங்கம் சமீபகாலமாகக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம், வாக்னர் குழுவினரின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் , “யுக்ரேனை நாஜிமயமாகாமல் தடுப்பதற்கோ, ராணுவமயமாக்கலை கட்டுப்படுத்துவதற்கோ இந்தப் போர் நடக்கவில்லை. ஒரு கூடுதல் நட்சத்திரத்திற்காகவே இந்தப் போர் தேவைப்பட்டது," என்று யுக்ரேன் - ரஷ்ய போர் குறித்துப் பேசியிருந்தார்.

‘யுக்ரேனுடன் போரில் ஈடுபடுவதற்கு ரஷ்யா கூறும் காரணங்கள் நியாயமற்றது’ என்றும் ப்ரிகோஜின் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷொய்குவே மீது ப்ரிகோஜின் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

வாக்னர் குழு அதிகாரப்பூர்வமாக பிஎம்சி வாக்னர் (PMC WAGNER) என்று அழைக்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு கிழக்கு யுக்ரேனில், இந்தக் குழு ரஷ்யாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தபோது, வாக்னர் குழு குறித்த தகவல்கள் முதன்முதலாக வெளியுலகிற்கு தெரிய வந்தன.

அதற்கு முன்பு வரை, இந்தக் குழு ஒரு ரகசிய அமைப்பாக இயங்கி வந்தது. பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில்தான் இந்தக் குழுவின் இயக்கம் இருந்துள்ளது. அப்போது இந்தக் குழுவில் வெறும் 5000 வீரர்கள் மட்டுமே இருந்ததாகக் கருதப்பட்டது. அவர்கள் ரஷ்யாவின் உயரடுக்கு படைப்பிரிவு மற்றும் சிறப்பு படைப்பிரிவு வீரர்களாக இருந்தனர்.

ஆனால் அதன்பின் இந்தக் குழுவினரின் எண்ணிக்கை கணிசமாக உயரத் தொடங்கியது.

”வாக்னர் இப்போது 50,000 வீரர்களைக் கொண்டுள்ளது. மேலும் அது யுக்ரேன் மீதான போரில் முக்கியப் பங்கு வகிக்கிறது,” என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஜனவரி மாதம் கூறியிருந்தது.

“2022ஆம் ஆண்டு, இந்தக் குழு தங்களுக்காக அதிகளவு ஆட்சேர்ப்பு பணிகளில் ஈடுபட்டது. அதற்கு முக்கியக் காரணம் ரஷ்ய அரசு தங்களுடைய சொந்த ராணுவத்திற்காக ஆட்களைச் சேர்ப்பதில் தடுமாறி வந்தது,” என்றும் பிரிட்டன் அமைச்சகம் குறிப்பிட்டது.

ரஷ்யா, யுக்ரேன், போர்

பட மூலாதாரம்,REUTERS

அதேபோல் வாக்னர் ராணுவ துருப்புகளில் உள்ள 80% வீரர்கள், சிறையிலிருந்து வந்தவர்கள் என அமெரிக்க தேசியப் பாதுகாப்பு கவுன்சில் இந்தாண்டு துவக்கத்தில் கூறியிருந்தது.

ரஷ்யாவில் கூலிப்படைகள் சட்டவிரோதமாகக் கருதப்படுகின்றன. ஆனாலும் வாக்னர் குழுமம் கடந்த 2022ஆம் ஆண்டு தன்னை ஒரு தனியார் நிறுவனமாகப் பதிவு செய்துகொண்டது. செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் புதிய தலைமையகத்தையும் திறந்தது.

"வாக்னர் குழு ரஷ்ய நகரங்களில், விளம்பரப் பலகைகளில் ஆட்சேர்ப்பு குறித்து வெளிப்படையாக விளம்பரம் செய்து வருவதாகவும், ரஷ்ய ஊடகங்களில் இது ஒரு தேசபக்தி அமைப்பு என்று பெயரிடப்பட்டு வருவதாகவும்” கூறுகிறார் ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் சிந்தனைக் குழுவில் உள்ள டாக்டர் சாமுவேல் ரமணி.

வாக்னர் குழு யுக்ரேனில் என்ன செய்கிறது?

கிழக்கு யுக்ரேனில் உள்ள பாக்முத் நகரைக் கைப்பற்றுவதில், ரஷ்யாவுக்கு பெரும் துணையாக நின்றது வாக்னர் குழு.

அப்போது நடைபெற்ற மோதலில், யுக்ரேனுடன் நேரடியாக மோதுவதற்கு வாக்னர் குழுவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டனர். இதன் விளைவாக அவர்களில் ஆயிரக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த மோதலில் வாக்னர் குழுவினர் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் முதலில் குறிப்பிடவில்லை.

ஆனாலும் அந்த மோதலில், தன்னலமற்ற முறையில், தைரியமாகப் பங்காற்றியதற்காக வாக்னர் குழுவினர் பின்னாளில் பாராட்டப்பட்டனர்.

வாக்னர் குழு எப்படி உருவானது?

ரஷ்யா, யுக்ரேன், போர்

வாக்னர் குழு குறித்து பிபிசி மேற்கொண்ட விசாரணையில், ரஷ்யாவின் முன்னாள் ராணுவ அதிகாரி டிமிட்ரி உட்கினுக்கு, வாக்னர் குழு உருவாக்கப்பட்டதில் முக்கியப் பங்கு இருப்பது தெரிய வந்தது.

செச்சினியாவில் நடைபெற்ற ரஷ்ய போரில், வாக்னர் குழுவும் பங்காற்றியது. இதில் ரஷ்யாவின் முன்னாள் ராணுவ அதிகாரியான டிமிட்ரி உட்கின்தான் ’வாக்னரின் முதல் கள தளபதியாக’ நின்று செயலாற்றினார் எனக் கூறப்படுகிறது.

ராணுவத்தில் ஒருவரையொருவர் தொடர்புகொள்ளும்போது புனைப்பெயர் சூட்டி அழைக்கப்படும் பழக்கம் உண்டு. டிமிட்ரி உட்கின் 'வாக்னர்' என்று அழைக்கப்பட்டார். அப்படி ரேடியோவில் அவர் அழைக்கப்பட்ட புனைப்பெயரே இந்த ராணுவ கூலிப்படையின்(வாக்னர் படை) பெயராகவும் சூட்டப்பட்டது.

தற்போது வாக்னர் குழுவின் தலைவராக யெவ்கெனி ப்ரிகோஜின் இருக்கிறார். இவர் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினின் சமையல் ஒப்பந்தங்களைப் பெற்றதன் மூலம் 'புதினின் சமையல்காரர்' என்று வர்ணிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"2014ஆம் ஆண்டு ரஷ்யா கிரைமியாவை இணைப்பதற்கு உதவியதுதான் வாக்னர் குழுவின் முதல் செயல்பாடாகப் பார்க்கப்படுகிறது” என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் மோதல் மற்றும் பாதுகாப்பு பேராசிரியரான (professor of conflict and security) டிரேசி ஜெர்மன் கூறுகிறார்.

ரஷ்ய ராணுவ தளபதிகளோடு ஏற்பட்ட மோதல்

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் ஷோய்கு மற்றும் யுக்ரேனில் உள்ள இராணுவத் தலைவர் வலேரி ஜெராசிமோவ் ஆகியோர் திறமையற்றவர்களாக இருக்கிறார்கள் என்று கூறும் பிரிகோஜின், அவர்கள் யுக்ரேனில் சண்டையிடும் வாக்னர் பிரிவுகளை வேண்டுமென்றே குறைவாகப் பேசுவதாகக் குற்றம் சாட்டி வருகிறார்.

யுக்ரேனில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்புகள், ஜூன் மாத இறுதிக்குள் தங்களுடைய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டுமென்று சமீபத்தில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

அந்த அறிவிப்பில் வாக்னர் குழுமத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை, ஆனாலும் இந்த நடவடிக்கை வாக்னர் குழு மீது அதிக கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

இதற்குப் பதிலளிக்கும் விதத்தில், தன்னுடைய வாக்னர் குழு இந்த ஒப்பந்தங்களைப் புறக்கணிக்கும் என்று ஆவேசமாக அறிவித்தார் யெவ்கெனி ப்ரிகோஜின்.

வாக்னர் குழு வேறு எங்கெல்லாம் இயங்குகிறது?

ரஷ்யா, யுக்ரேன், போர்

பட மூலாதாரம்,@RSOTMTELEGRAPH GROUP

கடந்த 2015 முதல் வாக்னர் குழுவின் கூலிப்படையினர் சிரியாவிலும் இயங்கி வருகின்றனர். அங்கு அரசு சார்பு படைகளுடன் இணைந்து, எண்ணெய் வயல்களைப் பாதுகாத்து வருகின்றனர்.

லிபியாவிலும் வாக்னர் குழுவின் கூலிப்படையினர் உள்ளனர். அங்கு ஜெனரல் கலீஃபா ஹப்தாருக்கு விசுவாசமான படைகளை ஆதரிக்கின்றனர்.

’மத்திய ஆப்பிரிக்க குடியரசு’ (CAR), வைரச் சுரங்கங்களைப் பாதுகாக்க வாக்னர் குழுவை அழைத்துள்ளது.

அதேபோல் மேற்கு ஆபிரிக்காவில் உள்ள மாலி அரசாங்கம், இஸ்லாமிய போராளிக் குழுக்களுக்கு எதிராக வாக்னர் குழுவைப் பயன்படுத்துகிறது.

இந்த வாக்னர் குழு நடவடிக்கைகளில் இருந்து அதன் தலைவர் ப்ரிகோஜின் பணம் சம்பாதிப்பதாகக் கருதப்படுகிறது.

‘தனக்குச் சொந்தமான சுரங்க நிறுவனங்களை வளப்படுத்துவதற்காக அவர் வாக்னர் குழுவை பயன்படுத்துகிறார்,” என அமெரிக்க கருவூலம் கூறுகிறது.

வாக்னர் குழு மீதான குற்றச்சாட்டுகள்

கடந்த ஜனவரி மாதம், வாக்னர் குழுவை விட்டு வெளியேறிய ஒரு முன்னாள் தளபதி, நார்வேயில் தஞ்சம் கோரினார். யுக்ரேனில் நடந்த போர்க்குற்றங்களை நேரில் பார்த்ததாக அவர் கூறினார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், யுக்ரேனில் கீயவ் அருகே இருந்த பொதுமக்களை ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து வாக்னர் குழுவினர் கொன்று குவித்ததாக யுக்ரேன் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதேபோல், மார்ச் 2022இல் புச்சாவில் உள்ள பொதுமக்களை, வாக்னர் கூலிப்படையினர் படுகொலை செய்திருக்கலாம் என்று ஜெர்மன் உளவுத்துறை கூறுகிறது.

மேலும், மத்திய ஆப்பிரிக்க குடியரசில் இருக்கும் வாக்னர் குழுவினர், பலாத்காரம் மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் சபையும் பிரெஞ்சு அரசாங்கமும் குற்றம் சாட்டியுள்ளன.

https://www.bbc.com/tamil/articles/c3gzrkxlplko

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, விசுகு said:

நல்ல  செய்தி

நடக்கட்டும் நடக்கட்டும்

போர் அங்கே  நடப்பதும்  முடிவு அங்கே  எட்டப்படுவதும்  தான்  எல்லோருக்கும் நல்லது

இவளவு பலம் வாய்ந்த, அதாவது பல நாடுகளில் கூலிப்படையாகவும், ரஸ்யப்படைகளால் செய்ய முடியாத நில ஆக்கிரமிப்பையே உக்ரேனில் செய்த படை என்ற வகையில் இது உலகுக்கான நல்ல செய்தியல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, nochchi said:

இவளவு பலம் வாய்ந்த, அதாவது பல நாடுகளில் கூலிப்படையாகவும், ரஸ்யப்படைகளால் செய்ய முடியாத நில ஆக்கிரமிப்பையே உக்ரேனில் செய்த படை என்ற வகையில் இது உலகுக்கான நல்ல செய்தியல்ல. 

உண்மை

ஆனால் வினை விதைத்தவன் தான் அதை அறுவடை செய்யலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, விசுகு said:

உண்மை

ஆனால் வினை விதைத்தவன் தான் அதை அறுவடை செய்யலாம் 

எல்லாப் போர்களுக்கும், விதைத்தவனைக் காத்து அப்பாவிகளையே பலிகொண்டு வருகின்றன. எமது அனுபவத்திலேயே பல இனப்படுகொலையாளிகளைக் கண்டவர்கள். அவர்கள் இறுதிவரை சுகமாகவே வாழ்ந்து முடித்தார்கள். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nochchi said:

எல்லாப் போர்களுக்கும், விதைத்தவனைக் காத்து அப்பாவிகளையே பலிகொண்டு வருகின்றன. எமது அனுபவத்திலேயே பல இனப்படுகொலையாளிகளைக் கண்டவர்கள். அவர்கள் இறுதிவரை சுகமாகவே வாழ்ந்து முடித்தார்கள். 

சிறீலங்காவின் இன்றைய நிலையை பார்த்தபின்னுமா??

70 வீத தனிச்சிங்கள மக்கள் தன் பக்கம் என்றவர் அவர்களாலேயே விரட்டப்பட்டதை பார்த்த பின்னருமா???

Posted
3 hours ago, விசுகு said:

சிறீலங்காவின் இன்றைய நிலையை பார்த்தபின்னுமா??

70 வீத தனிச்சிங்கள மக்கள் தன் பக்கம் என்றவர் அவர்களாலேயே விரட்டப்பட்டதை பார்த்த பின்னருமா???

ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புதின் பலவீனம் அடைகிறாரா? கிளர்ச்சிகளை ஒடுக்கும் இயல்புக்கு மாறாக 'வாக்னர்' படைகளிடம் சமாதானம் பேசியது ஏன்?

புதின் பலவீனமாக உள்ளாரா? வாக்னர் படையின் கிளர்ச்சி நடவடிக்கை எதை காட்டுகிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

25 ஜூன் 2023, 10:16 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

புதினுக்கு ‘முதுகில் குத்துவது’ பிடிக்காது. அவர் துரோகத்தை அறவே வெறுப்பவர். ஆனாலும் தனது ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் பேசும் சூழலில் இருப்பது ஏன்? இது அவரது பலவீனத்தைக் காட்டுகிறதா?

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து விளாதிமிர் புதின் தனது அதிகாரத்திற்கு எதிராக மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டது இதுவே முதல்முறை.

அந்த வியக்கத்தக்க 24 மணிநேர கிளர்ச்சி முடிவு வந்துவிட்டது. அதிபர் மாளிகைக்கும் வாக்னர் கூலிப்படைக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் உருவாகியுள்ளது. ஆகையால் வாக்னர் படையினர் தளத்திற்குத் திரும்புகின்றனர். ஒப்பந்தத்தின்படி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால், அவர்களது தலைவர் எவ்கெனி ப்ரிகோஜின் ரஷ்யாவை விட்டு வெளியேறி பெலாரூஸுக்கு செல்ல வேண்டும்.

அதிபர் புதினை பொறுத்தவரை, இந்த 24 மணிநேர நிகழ்வுகளில் அவரது தோற்றம் வழக்கமான வலிமையுடன் வெளிப்படவில்லை என்று கூறுகிறார் பிபிசி ரஷ்ய சேவையின் ஆசிரியர் ஸ்டீவ் ரோசென்பெர்க்.

 

மேலும், “ரோஸ்டோ நகரில் என்ன நடந்தது என்பதை நாம் பார்க்க வேண்டும். வாக்னர் என்ற ஒரு ‘தனியார் ராணுவம்’ ஒரு பெரிய ரஷ்ய நகரத்தில் ராணுவ தலைமையகத்தை வெளிப்படையாகவும் எளிதாகவும் கைப்பற்ற முடிந்துள்ளது. அதைக் கைப்பற்றிய பிறகு மாஸ்கோவை நோக்கி முன்னேறத் தொடங்கியது.

அதுமட்டுமின்றி, கிளர்ச்சி முடிந்த பிறகு, அதன் அடிப்படையாக இருந்த ப்ரிகோஜினை எதுவும் செய்ய முடியாது. அவர் ஒரு சுதந்திர மனிதர். ரஷ்யாவின் ராணுவத் தலைமையைக் கவிழ்க்க முயன்ற போதிலும், அவர் மீதான ஆயுதக் கலகம் குற்றச்சாட்டு கைவிடப்பட்டுள்ளது,” என்று ஸ்டீவ் ரோசென்பெர்க் விவரிக்கிறார்.

ரஷ்யாவில் கிளர்ச்சியை ஏற்படுத்த வாக்னர் படை முடிவு செய்தது ஏன்?

“வாக்னர் குழுமத்தின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின் ரஷ்ய ராணுவத்தில் உள்ள குறைபாடுகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், அவரது சுய வாய்ப்புகளை மிகைப்படுத்திக் கொண்டுவிட்டதாக” போர் ஆய்வுக்கான நிறுவனம் (Institute for the Stude of War) கூறுகிறது.

ப்ரிகோஜினின் தோல்வியுற்ற கிளர்ச்சி அவரது கூலிப்படையின் சுதந்திரத்தை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சி என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். குறிப்பாக ரஷ்ய ராணுவ தலைவர்கள் வாக்னரை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு ஜூலை 1ஆம் தேதி காலக்கெடு விதித்தனர்.

புதின் பலவீனமாக உள்ளாரா? வாக்னர் படையின் கிளர்ச்சி நடவடிக்கை எதை காட்டுகிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES/REUTERS

பெலாரூஸ் அதிபர் அலெக்சாண்டர் லிகாஷென்கோவால் ஏற்படுத்தப்பட்ட கிளர்ச்சி நிறுத்தம், ப்ரிகோஜின் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகளைக் கைவிடுவதற்கு ஈடாக சாமர்த்தியமாக அவருக்கு வாக்னர் படை மீது இப்போது இருக்கும் கட்டுப்பாட்டை நீக்குகிறது.

“இருப்பினும் வாக்னர் படைகள் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ராணுவ ஒருங்கிணைப்புக்கு சுய விருப்பத்துடன் ஒத்துழைக்குமா அல்லது எதிர்காலத்தில் வாக்னர் குழுவின் பணியாளர்களுடன் ரஷ்ய ராணுவம் இணக்கத்துடன் பணியாற்றுமா என்பது தெளிவாகவில்லை,” என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வாக்னர் படை கிளர்ச்சியை கைவிட முடிவெடுத்தது ஏன்?

புதின் பலவீனமாக உள்ளாரா? வாக்னர் படையின் கிளர்ச்சி நடவடிக்கை எதை காட்டுகிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிளர்ச்சியால் ரஷ்யா முழுவதும் பதற்றம் நிலவிய சூழலில், பெலாரூஸ் அதிபர் தலையிட்டு, புதின் சம்மதத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்விளைவாக, ப்ரிகோஜின் பெலாரூஸ் செல்கிறார். அவரது படை ரஷ்ய ராணுவத்தின் கீழ் செயல்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. வாக்னர் மீதான அவரது கட்டுப்பாட்டை சாமர்த்தியமாக ரஷ்யா கைப்பற்றியுள்ளது.

நாள் முழுவதும் நீடித்த பேச்சுவார்த்தையின் விளைவாக, யெவ்ஜெனி ப்ரிகோஜின் நேற்று இரவு நேரத்தில் வாக்னர் படையின் கிளர்ச்சியை நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டார்.

புதினின் நெருங்கிய கூட்டாளியான பெலாரூஸின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, சனிக்கிழமையன்று ப்ரிகோஜினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ப்ரிகோஜின் பெலாரூஸ் செல்ல அனுமதிக்கப்பட்டார். மேலும், அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடுவதாக ரஷ்யா ஒப்புக்கொண்டது.

புதினின் சம்மதத்துடன் தான் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக லுகாஷென்கோவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

புதின் பலவீனமாக உள்ளாரா? வாக்னர் படையின் கிளர்ச்சி நடவடிக்கை எதை காட்டுகிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வாக்னர் குழுவின் தலைவருக்கு எதிரான வழக்கை கைவிட கிரெம்ளின் ஒப்புக்கொண்டது. அதோடு, வாக்னர் படையின் வீரர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ப்ரிகோஜின் மற்றும் அவரது படையினருக்கு வேறு என்னவெல்லாம் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

வாக்னர் படை கிளர்ச்சியைக் கைவிட ஏன் முடிவெடுத்தது என்று அலசுகிறார், பிபிசியின் கிழக்கு ஐரோப்பாவின் செய்தியாளர் சாரா ரெய்ன்ஸ்ஃபோர்ட். “பணமா? அது ஒருவேளை ப்ரிகோஜினிடம் நிறையவே இருக்கலாம். நேற்றைய சோதனையின்போது அவரது வளாகத்தி நிறையவே கண்டுபிடிக்கப்பட்டது.

அப்படியிருக்கும்போது, இனி வரவுள்ள காலகட்டத்தில் அவருடைய பங்கு குறித்த என்ன உத்தரவாதம் அவருக்கு அளிக்கப்பட்டது?

வாக்னர் படையின் தலைவர், அதிபர் புதினுக்கு ஒரு முக்கியமான நபராக, நீண்ட காலமாக அவரது நிழலில் செயல்படுகிறார்.

சிரியாவில் சண்டையிடுவது முதல் யுக்ரேனில் 2014ஆம் ஆண்டு கிரைமியாவை இணைத்தபோது சண்டையிட்டது வரை அதிபர் மாளிகைக்காக அதன் மோசமான வேலைகளைச் செய்து வருகிறார் ப்ரிகோஜின். கூடவே “ட்ரோல் ஃபார்ம்ஸ்” என்றழைக்கப்படும் தவறான தகவலை பரப்புவதில் அவர் ஈடுபட்டுள்ளார்.

கிளர்ச்சியைக் கைவிட்டு பெலாரூஸுக்கு செல்ல, அவருடன் என்ன ஒப்பந்தம் செய்யப்பட்டது. அங்கிருந்து அவர் என்ன செய்யப் போகிறார் எனத் தெரிந்துகொள்வது சுவாரஸ்யமானதாக இருக்கும்.

அவர் அமைதியாக ஓய்வு பெறுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதேவேளையில் அவர் அடுத்து என்ன செய்வார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ப்ரிகோஜிஜ்ன் இருளுக்குள் அமைதியாக மறைந்துவிடும் மனிதர் இல்லை.”

புதின் பலவீனமாக உள்ளாரா? வாக்னர் படையின் கிளர்ச்சி நடவடிக்கை எதை காட்டுகிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாக்னர் கூலிப்படையினர் அடுத்து என்ன செய்வார்கள்?

புதினுக்கு துரோகம் பிடிக்காது. அவர் அதை முற்றிலுமாக வெறுப்பவர். அப்படியிருந்தும் கிளர்ச்சியில் ஈடுபட்ட அனைத்து வாக்னர் துருப்புகளுக்கும் எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகள் கைவிடப்படுகின்றன என்று அதிபர் மாளிகை கூறுவதை வெளிப்படையாக நம்புவது மிகவும் கடினம்,” என்று கூறுகிறார் பிபிசி செய்தியாளர் சாரா ரெய்ன்ஸ்ஃபோர்ட்.

இதில் ஒரு முக்கிய வேறுபாடும் உள்ளது. வாக்னர் குழுமம் பாதுகாப்பு அமைச்சகத்தால் கையகப்படுத்தப்பட்டது. வாக்னர் ஒரு கூலிப்படை குழுவாக சுதந்திரமாகச் செயல்படும் நாட்கள் முடிவுக்கு வந்துவிட்டன.

அதன் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின் அமைச்சகத்துடன் நீண்ட காலமாக பகை நீடித்தது. தனது படைகள் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்படுவதை அவர் எதிர்த்து வந்தார்.

அதுதான் இத்தகைய தீவிர நடவடிக்கை எடுக்க ப்ரிகோஜினை தள்ளியிருக்க வேண்டும் என்கிறார் சாரா ரெய்ன்ஸ்ஃபோர்ட்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, வாக்னர் படையில் இருந்த வீரர்கள் ரஷ்ய ராணுவத்துடன் இணைவார்களா என்பது இன்னும் விடை கிடைக்காத வினாவாக உள்ளது.

புதினை பொறுத்தவரை இது இன்னும் முடியவில்லை. இது தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்ட ஒரு நெருக்கடி. இதை அவர் இன்னும் முழுமையாகச் சமாளிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

புதின் பலவீனமாக உள்ளாரா? வாக்னர் படையின் கிளர்ச்சி நடவடிக்கை எதை காட்டுகிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாக்னர் கிளர்ச்சியை முன்பே கணித்ததா அமெரிக்க உளவுத்துறை

வாக்னர் கிளர்ச்சி பற்றி வெள்ளை மாளிகைக்கு முன்பே தெரிய வந்ததாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. வாஷிங்டன் போஸ்ட்டிடம் பேசிய அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி., ஜூன் மாதத்தின் மத்தியிலேயே யெவ்கெனி ப்ரிகோஜின் ஏதோ திட்டமிட்டுக் கொண்டிருந்ததாக அமெரிக்காவுக்கு தெரிய வந்திருக்க வாய்ப்புள்ளது.

வாக்னர் படையின் தலைவர் ப்ரிகோஜின் நடத்திய கிளர்ச்சியின் நோக்கம் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினை, அது எதிர்பார்க்காத நேரத்தில் கைப்பற்றுவதுதான் எனத் தோன்றினாலும், அமெரிக்க உளவு அமைப்புகள் அவர் இப்படி ஏதோவொன்றைச் செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருந்ததற்கான அறிகுறிகளை ஏற்கெனவே அறிந்திருந்தன என்றும் இந்த வாரத் தொடக்கத்தில் முக்கிய காங்கிரஸ் தலைவர்களுடன் அதிபர் பைடனுக்கு இது பற்றித் தெரிவிக்கப்பட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அப்படி திட்டமிடுவதற்கான ஒரு முக்கியத் தூண்டுதலாக ஜூன் 10 ஆம் தேதியன்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வாக்னர் குழுவை போன்ற அனைத்து தன்னார்வ படைப் பிரிவினருக்கும், அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுமாறு உத்தரவிடப்பட்டது. இது ப்ரிகோஜினின் வாக்னர் கூலிப்படை துருப்புகளை சாமர்த்தியமாகக் கையகப்படுத்தும் முயற்சி.

“ஏதோ நடக்கப் போவதாக, தலைமைக்குத் தெரிவிப்பதற்கு ஏற்ற அளவு போதுமான சமிக்ஞைகள் இருந்தன...” என்று அதிகாரிகள் வாஷிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்தனர். ஆனால், கிளர்ச்சி தொடங்குவதற்கு சற்று முன்பு வரை ப்ரிகோஜினின் திட்டங்களுடைய சரியான தன்மை என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கும் ப்ரிகோஜின் ஏதோ சதி செய்கிறார் என்று அவரது சொந்த உளவுத்துறையே கூறியதாக அந்தப் பத்திரிகை செய்தி கூறுகிறது.

இது அவரிடம் எப்போது தெரியப்படுத்தப்பட்டது என்பது துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால், அது “நிச்சயமாக 24 மணிநேரத்திற்கு முன்பு” என்று சனிக்கிழமையன்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

கூலிப்படையின் தலைவர் ரஷ்யாவுடன் எல்லைக்கு அருகே ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற ஆயுதங்களைக் குவித்து வைத்திருப்பதை அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

ப்ரிகோஜினுக்கும் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்து வருவதை அமெரிக்க உளவுத்துறை தலைவர்கள் பல மாதங்களாகக் கண்காணித்து வந்தனர். மேலும் யுக்ரேன் போர், வாக்னர் படைப்பிரிவு, ரஷ்ய ராணுவம் என இரு தரப்புக்குமே மோசமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம் என்று உளவுத்துறை முடிவு செய்துள்ளதாக சி.என்.என் கூறுகிறது.

வெள்ளை மாளிகை என்ன சொல்கிறது?

புதின் பலவீனமாக உள்ளாரா? வாக்னர் படையின் கிளர்ச்சி நடவடிக்கை எதை காட்டுகிறது?

பட மூலாதாரம்,REUTERS

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து இதுவரை மௌனம் காத்து வந்தார்.

அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு மூத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நாள் முழுவதும் விளக்கமளிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை நேற்று கூறியது.

ஜோ பைடன் உயர்மட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனியின் தலைவர்களுடனும் பேசியதாகவும் எஙகளிடம் கூறப்பட்டது.

உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசகர்களுடனான காணொளி கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் திட்டமிட்டிருந்த பயணத்தைத் தாமதப்படுத்தியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.

ரஷ்யாவின் நிலைமையைக் கண்காணிப்பதற்காக கூடுதல் படைத் தலைவர் ஜெனரல் மார்க் ஏ மில்லி தனது அலுவல்பூர்வ பயணத்தை ரத்து செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/cj51v1rz44zo

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

ப்ரிகோஜின் பெலாரூஸ் செல்ல அனுமதிக்கப்பட்டார். மேலும், அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடுவதாக ரஷ்யா ஒப்புக்கொண்டது.

புதினின் சம்மதத்துடன் தான் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக லுகாஷென்கோவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இது ஒரு முடிவற்ற சமாதான ஒப்பந்தமாக இருக்கக்கூடும். நாடுகளுக்கிடையே, உள்நாட்டு அரச எதிர் ஆயுதப்போராளிகளிடையே என்ற நிலையிலிருந்து, தனது நாட்டின் படைத்துறைக் கட்டமைப்பின் நலனுக்காக உருவாக்கப்பட்ட படைப்பிரிவு கிளர்ச்சி செய்து அதனை சமாதானமாக அமைதிப்படுத்தியதோடு, அதனைத் தண்டிக்காது விட்டிருப்பது  பல தெளிவற்ற செய்திகளைத் தன்னகத்தே கொண்டிருப்பதாகவே கொள்ளமுடியும். காலம் வெளிக்கொணரும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, nochchi said:

இது ஒரு முடிவற்ற சமாதான ஒப்பந்தமாக இருக்கக்கூடும். நாடுகளுக்கிடையே, உள்நாட்டு அரச எதிர் ஆயுதப்போராளிகளிடையே என்ற நிலையிலிருந்து, தனது நாட்டின் படைத்துறைக் கட்டமைப்பின் நலனுக்காக உருவாக்கப்பட்ட படைப்பிரிவு கிளர்ச்சி செய்து அதனை சமாதானமாக அமைதிப்படுத்தியதோடு, அதனைத் தண்டிக்காது விட்டிருப்பது  பல தெளிவற்ற செய்திகளைத் தன்னகத்தே கொண்டிருப்பதாகவே கொள்ளமுடியும். காலம் வெளிக்கொணரும். 

மிகச் சரியான பார்வை 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாக்னர் பிரிகோஜின் - விளாடிமிர் புட்டின் - கலகத்திற்கு வழிவகுத்த கசப்பான போட்டிகள்

Published By: RAJEEBAN

26 JUN, 2023 | 11:55 AM
image
 

இறுதியில் வாக்னரின் கலகம் 24 மணிநேரமே நீடித்தது, ஆனால் பொறாமை போட்டி இலட்சியம் ஆகியவற்றின் நச்சுக்கலவை பலமாதங்களாக உருவாகி வந்த ஒன்று.

images__36_.jpg

இந்த இராணுவத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் வாக்னர் கூலிப்படையின் தலைவரான யெஜேனி பிரிகோஜின் மற்றும் ரஸ்யாவின் இராணுவத்தின் தளபதிகளான  சேர்ஜி செய்கு மற்றும் வலேரி செரேசிமோ.

வாக்னர் குழுவின் தலைவர் முன்னாள் குற்றவாளி திட்டமிட்ட குற்றங்களிற்காக 1980களில் சிறைகளில் இருந்தவர்- புட்டின் இவரை உருவாக்கினார்- புட்டினின் பெருமளவு சொத்துக்களிற்கு இவரே காரணம்.

2014 இல் கூலிப்படையை உருவாக்கியதிலிருந்து சர்வதேச அளவில் ரஸ்யாவின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் புட்டினின் முயற்சிகளின் முக்கிய கருவியாக வாக்னர் கூலிப்படையின் தளபதி மாறியுள்ளார்.

கண்ணிற்கு தென்படாத நிழல்படைகளாக காணப்பட்ட வாக்னர் குழுவினர்  ரஸ்யாவின் விசேட படையணியின் ஒரு பகுதியாக மாறியுள்ளனர், சிரியாவில் புட்டினின் சகா பசார் அல் அசாத்தை பலப்படுத்த உதவினர் மாலியில் பிரான்சின் செல்வாக்கை குறைப்பதற்கு உதவியவர்களும் இவர்களே.

கடந்தவருடம் தான் இந்த குழுவை இயக்குவதை பிரிகோஜின் நிராகரித்திருந்தார். பிரிட்டனின் பத்திரிகையாளர் எலியட் ஹிக்கின்ஸ் இவர்தனிப்பட்ட ஆயுதகுழுவை இயக்கினார் என செய்தி வெளியிட்டதை தொடர்ந்து அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த குழுவினரின் மறுக்க முடியாத நடவடிக்கைககள் அவர்களை புட்டின் மத்தியில் பிரபலமானவர்களாக மாற்றின, இதனை பயன்படுத்தி வாக்னர் குழுவின் தலைவர் தனது அதிகாரத்தை செல்வாக்கை வளர்த்துக்கொண்டார்.

கடந்த வருடம் இவர் ரஸ்யாவை ஆளும் இராணுவ பாதுகாப்பு உயர்வர்க்கத்தினருக்கு போட்டியாக மாறினார்.

வன்முறைகளில் சுலபமாக ஈடுபடக்கூடியவரான ஊழல் மிக்கவரான எதிர்கால இலட்சியங்கள் கொண்டவரான வாக்னர் குழுவின் தலைவரின் எழுச்சி கடந்த 24 வருடங்களாக ரஸ்ய ஜனாதிபதியினால் கட்டப்பட்ட நவீன அரசிற்கான ஒரு அடையாளம்.

im-660176.jpg

தனது அதிகாரம் அதிகரித்து வந்தபோதிலும் வாக்னர் குழுவின் தலைவர் புட்டினை சுற்றிக்காணப்படும் சிறிய குழுவினருக்கு வெளியே காணப்பட்டுள்ளார்.

அவர் ஊழல் சோம்பறித்தனம் மிக்க ரஸ்ய அதிகாரிகளை கண்டிக்கத்தவறியதில்லை.

ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் இராணுவதளபதி குறித்து அவர் அதிகளவு கசப்பினை கொண்டிருந்தார்.

யார் இந்த சேர்கே சொய்கு?

புட்டினின் ஆலோசகர்களில் அனேகமானவர்கள் சென்பீட்டர்ஸ்பேர்க்கை சேர்ந்தவர்கள் - சொய்கு ரஸ்ய மொங்கோலியா எல்லையில் உள்ள சிறிய கிராமத்தில்பிறந்தவர்.

ரஸ்ய இராணுவத்திற்கு பலவருடங்களாக தலைமை தாங்கியபோதிலும் அவர் இராணுவத்தில் பணியாற்றியதில்லை, கம்யுனிஸ்ட்கட்சியின் ஊடாக முன்னிலைக்கு வந்த அவர் 1990களில் ரஸ்யாவின் அவசரகால அமைச்சின் தலைமை பொறுப்பை ஏற்றார்.

வாக்னர் குழுவின் தலைவரின் மற்றைய எதிரியான கெரசிமோவ் இராணுவத்தை சேர்ந்தவர், 1990களில் செச்னிய கிளர்ச்சியை அடக்கிய அனுபவம் பெற்றவர்.

சோவியத்திற்கு பிந்தைய காலத்தில் மிக நீண்ட நாட்களாக இராணுவதளபதியாக பதவி வகிக்கும் ஒருவர்.

ரஸ்யாவின் வலுவை வெளிப்படுத்துவதில் பிரிகோஜினின் முக்கியத்துவமும் - இராணுவம் வேண்டுகோள் விடுக்கும் விசேட நடவடிக்கைகளை செய்து முடிப்பதில் அவருக்குள்ள திறமையும்(பெருமளவு ஊதியத்தை வழங்குவதன் மூலம்) பிரிகோஜினிற்கும் ரஸ்ய இராணுவத்தில் மிக முக்கிய பதவிகளில் உள்ளவர்களிற்கும் இடையில் கடந்த பல வருடங்களாக பதற்றத்தை உருவாக்கியிருந்தது.

எனினும் உக்ரைன் யுத்தத்திற்கு பின்னர்  பக்முத்தினை கைப்பற்றுவதற்கான இரத்தக்களறி மிகுந்த  மோதல்களிற்கு பின்னர் (ஆயிரக்கணக்கான வாக்னர் குழுவினர் கொல்லப்பட்டனர்) ரஸ்ய இராணுவத்தின் உயர்மட்டத்தினரிற்கு எதிரான பிரிகோஜினின் கசப்புணர்வு பகிரங்கமாக வெளி உலகிற்கு தெரியவந்தது.

valery-gerasimov-sergei-shoigu-vladimir-

bbc

https://www.virakesari.lk/article/158584

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்ய அதிபர் புதினின் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்கள் யார்?

ரஷ்ய அதிபர் புதினின் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்கள் யார்? யுக்ரேன் போரை யார் வழிநடத்துகிறார்கள்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பால் கிர்பி
  • பதவி,பிபிசி நியூஸ்
  • 24 நிமிடங்களுக்கு முன்னர்

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு வீச்சிலான படையெடுப்பு நீண்டுகொண்டே செல்கிறது.

தலைமைத் தளபதியாக, படையெடுப்புக்கான இறுதிப் பொறுப்பு புதினிடமே உள்ளது. ஆனால், அவர் தனக்கென ஒரு சிறிய வட்டத்தைச் சார்ந்திருக்கிறார். அவர்களில் பலர் ரஷ்யாவின் பாதுகாப்புத் துறைக்கான சேவைகளில் தங்களது தொழில்முறை வாழ்வைத் தொடங்கியவர்கள்.

வாக்னர் குழுமத்தின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின், ஒரு காலத்தில் புதினின் நெருங்கிய, சக்திவாய்ந்த கூட்டாளியாக இருந்தார். ஆனால், அவர் செய்த கிளர்ச்சியின் காரணமாகத் தற்போது அந்த நெருங்கிய வட்டத்தில் அவர் இல்லை. இப்போதைய நிலவரத்தில், போரின் இந்தத் தீர்க்கமான தருணத்தில் புதின் யார் சொல்வதைக் கேட்பார்?

 

செர்கேய் ஷோய்கு, பாதுகாப்புத் துறை அமைச்சர்

செர்கேய் ஷோய்கு, பாதுகாப்புத் துறை அமைச்சர்

பல மாதங்களாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷோய்கு, ராணுவத் தலைவர் வேலரி கெராசிமோவ் ஆகியோர் ப்ரிகோஜினுடன் மோதிக்கொண்டே இருந்தனர்.

 

யுக்ரேனில் நடந்த போரில் பல்லாயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் இறந்ததற்கு இவர்கள் இருவரும்தான் பொறுப்பு என்று ப்ரிகோஜின் குற்றம் சாட்டினார்.

அதிபருக்கு நெருக்கமாக யாராவது இருந்தால், அது அவரது பாதுகாப்புத்துறை அமைச்சர்தான். நீண்டகால நம்பிக்கைக்கு உரித்தானவர், கடந்த காலத்தில் அவருடன் சைபீரியாவிற்கு வேட்டையாடுதல் மீன்பிடித்தல் போன்ற பயணங்களுக்கு சென்றவர். ஒரு காலத்தில் புதினின் அரசியல் வாரிசு ஆவதற்கான சாத்தியக்கூறு இவருக்கு உண்டு என்றும் கருதப்பட்டது.

வேலரி கெராசிமோவ்(இடது) மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கேய் ஷோய்கு ஆகியோர் புதினின் மூலோபாய முடிவுகளில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

பட மூலாதாரம்,EPA/KREMLIN POOL

 
படக்குறிப்பு,

வேலரி கெராசிமோவ்(இடது) மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கேய் ஷோய்கு ஆகியோர் புதினின் மூலோபாய முடிவுகளில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

முதலில் ரஷ்யா யுக்ரேனை ராணுவமயமாக்குகிறது என்றும் பிறகு ‘மேற்கு’ நாடுகள்தான் போரைத் தொடக்கியது, ரஷ்யா இல்லை என்றும் புதின் கூறியதையே பின்பற்றினார்.

சில நேரங்களில், அதிபர் புதின் எந்த அளவுக்கு இவர் சொல்வதைக் கேட்பார் என்று தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்.

ரஷ்யாவின் ராணுவ பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை. அது எதிர்பாராத அளவுக்கு யுக்ரேனிடம் இருந்து வந்த எதிர்ப்பு, ராணுவத்தின் குறைந்த மன உறுதி ஆகியவற்றுடன் போராடிக் கொண்டிருந்தது.

“ஷோய்குதான் கீயவுக்கு அணிவகுத்துச் செல்ல வேண்டியிருந்தது; பாதுகாப்புத் துறை அமைச்சராக அவர் வெற்றியைக் கொடுத்தாக வேண்டியிருந்தது,” என்று ஆயுத மோதலில் நிபுணரான வேரா மிரோனோவா கூறினார்.

இன்னும் அவர் போரில் முக்கியப் பங்கு வகிக்கிறார். இருப்பினும், யுக்ரேனில் களத்திலுள்ள உண்மை குறித்து அவர் அதிபர் புதினிடம் பொய்யான தகவலைக் கூறியதாக ப்ரிகோஜின் குற்றம் சாட்டினார்.

இந்த அசாதாரண புகைப்படம், பிப்ரவரி 2022இல் படையெடுப்பு தொடங்க மூன்று நாட்கள் இருந்த நிலையில் எடுக்கப்பட்டது.

பட மூலாதாரம்,REUTERS/KREMLIN

 
படக்குறிப்பு,

இந்த அசாதாரண புகைப்படம், பிப்ரவரி 2022இல் படையெடுப்பு தொடங்க மூன்று நாட்கள் இருந்த நிலையில் எடுக்கப்பட்டது.

வலேரி 2014இல் கிரைமியாவை ராணுவம் கைப்பற்றியதன் பெருமையைப் பெற்றார். ரஷ்ய ராணுவத்தின் புலனாய்வு அமைப்பான க்ருவின் பொறுப்பாளராகவும் அவர் இருந்தார்.

பிரிட்டனில் உள்ள சால்ஸ்பரியில் 2018ஆம் ஆண்டில் நடந்த வேதிமத் தாக்குதல், 2020ஆம் ஆண்டு சைபீரியாவில் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவ்லனி மீதான வேதிமத் தாக்குதல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் அவர்மீது உள்ளன.

மேலும், ரஷ்ய பாதுகாப்பு வல்லுநரும் எழுத்தாளருமான ஆண்ட்ரி சோல்டடோவ், அதிபர் காதுகொடுத்துக் கேட்கும் மிகுந்த செல்வாக்கு மிக்க குரலாக பாதுகாப்பு அமைச்சரே இருப்பதாகப் தெரிவித்துள்ளார்.

“ஷோய்கு, ராணுவத்தின் பொறுப்பாளர் மட்டுமல்ல. அவர் ஓரளவுக்கு சித்தாந்ததிற்கான பொறுப்பாளராகவும் இருக்கிறார். ரஷ்யாவில் சித்தாந்தம் என்பது பெரும்பாலும் வரலாற்றைப் பற்றியது. ஷோய்கு அதை வடிவமைப்பவராக இருக்கிறார்.”

வேலரி கெராசிமோவ், முப்படைத் தளபதி

முப்படைத் தளபதி என்ற முறையில், யுக்ரேனை ஆக்கிரமிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டியது அவருடைய வேலை. ஆகவே, புதினின் நெருங்கிய வட்டத்தில் அவர் மிகவும் தேவையானவராக காணப்படுகிறார்.

ஆனால், சோவியத் காலகட்டத்திலிருந்து மிக நீண்ட காலம் பதவியில் இருந்த முப்படைத் தளபதியாக அவர் இருப்பதற்கு இன்னொரு காரணம் உள்ளது. விளாதிமிர் புதினுக்கு அவர்மீது நம்பிக்கை உள்ளதுதான் அந்தக் காரணம்.

வேலரி கெராசிமோவ், முப்படைத் தளபதி

1999 செச்சென் போரில் ராணுவத்தை வழிநடத்தியதில் இருந்தது, ரஷ்ய ராணுவ பிரசாரங்களில் முக்கியப் பங்கு வகித்தது, பெலாரூஸில் போருக்கு முந்தைய ராணுவப் பயிற்சிகளை மேற்பார்வையிட்டு யுக்ரேன் படையெடுப்புக்கான ராணுவ திட்டமிடலில் முன்னணியில் இருந்தது ஆகியவற்றில் வலேரி பெரும் பங்கு வகித்துள்ளார்.

ரஷ்ய நிபுணர் மார்க் கெலியோட்டி, “சிரிக்காத, கரடுமுரடான, சண்டையை விரும்பக்கூடிய” நபர் என்று ஜெனரல் கெராசிமோவ் குறித்து விவரிக்கிறார். ஜெனரல் கெராசிமோவ் கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான ராணுவ பிரசாரத்தில் முக்கியப் பங்கு வகித்தார்.

யுக்ரேன் மீதான படையெடுப்பின் மோசமான நிலை, துருப்புகள் மத்தியில் மன உறுதி குறைந்து வருவது ஆகியவை குறித்த செய்திகள் காரணமாக அவர் ஓரங்கட்டப்பட்டதாக ஆரம்பத்தில் பேசப்பட்டது.

அவர் மே 2022இல் வருடாந்திர மாஸ்கோ ராணுவ அணிவகுப்பில் தோன்றவில்லை. இருந்தும் கடந்த ஜனவரியில் அவர் யுக்ரேனில் ரஷ்ய படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டார். அவருக்கு முன்பு, இப்போது அவரது துணைத் தலைவராக இருக்கும் ஜெனரல் செர்கேய் சுரோவிகின் தளபதியாக இருந்தார்.

“ஒவ்வொரு சாலையையும் ஒவ்வொரு படையணியையும் புதினால் கட்டுப்படுத்த முடியாது. அதைச் செய்வதுதான் இவருடைய வேலை,” என்று ஆண்ட்ரி சோல்டடோவ் கூறினார்.

நிகோலாய் பட்ருஷேவ், பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர்

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் ரஷ்ய அரசியல் தொடர்பான இணை பேராசிரியராக இருக்கும் பென் நோபல், “பட்ருஷேவ் அமைதியான தீர்வுகளை ஆலோசித்து முடிவெடுப்பதைவிட, வலிமையைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தக்கூடியவர். பல ஆண்டுகளாக மேற்கு நாடுகள் ரஷ்யாவை கைப்பற்றத் துடிக்கின்றன என்று நினைக்கக்கூடியவர்,” என்று கூறுகிறார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் லெனின்கிராட் என்று அழைக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்தே, 1970களில் புதினுடன் பணியாற்றிய மூன்று விசுவாசிகளில் இவரும் ஒருவர்.

நிகோலாய் பட்ருஷேவ், பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர்

பாதுகாப்பு சேவை பிரிவின் தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ், வெளிநாட்டு உளவுத்துறையின் தலைவர் செர்கேய் நரிஷ்கின் ஆகியோர் புதினுடன் அப்போதிலிருந்து இருக்கும் மற்ற இரண்டு உறுதியான விசுவாசிகள்.

அதிபரின் இந்த நெருங்கிய வட்டம் மொத்தமும் சேர்த்து சிலோவிக்கி என்று அழைக்கப்படுகிறது. அப்படியென்றால் அமலாக்குபவர்கள் என்று பொருள்.

நிகோலாய் பட்ருஷேவ் போன்ற சிலரே அதிபரின்மீது அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளனர். கம்யூனிஸ்ட் காலத்தில் இருந்த உளவுத்துறை மற்றும் உள்துறை பாதுகாப்பு நிறுவனமான கேஜிபியில் புதினுடன் பணியாற்றியது மட்டுமின்றி, 1999 முதல் 2008 வரை கேஜிபியின் வாரிசு அமைப்பான எஃப்.எஸ்.பியின் தலைவராகவும் நிகோலாய் பட்ருஷேவ் புதினுக்கு பிறகு உருவானார்.

படையெடுப்புக்கு மூன்று நாட்களுக்கு முன்னர், ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தில், பட்ருஷேவ், அமெரிக்காவின் “உறுதியான இலக்கு” ரஷ்யாவை உடைப்பதுதான் என்ற கருத்தை முன்வைத்தார்.

அமெரிக்கா “உயிரி போருக்கு” தயாராவதாகவும், அமெரிக்காவும் பிரிட்டனும் ரஷ்யாவை தோற்கடிக்க வேண்டுமென்ற நம்பிக்கையோடு மேற்கு நாடுகளை வழிநடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு யுக்ரேனில் உள்ள ககோஃப்கா அணை தகர்க்கப்பட்டபோது, அமெரிக்கா, பிரிட்டன், நேட்டோ நட்பு நாடுகள் ஆதரவுடன் யுக்ரேன் அதைச் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

அலெக்சாண்டர் போர்ட்னிகோவ், மத்திய பாதுகாப்பு சேவையின் தலைவர்

அலெக்சாண்டர் போர்ட்னிகோவ், மத்திய பாதுகாப்பு சேவையின் தலைவர்

ரஷ்யாவை கூர்ந்து கவனித்து வரும் வல்லுநர்கள், வேறு வழிகளில் வரும் தகவல்களைவிட பாதுகாப்பு சேவைகளிடமிருந்து பெறும் தகவல்களை அதிபர் அதிகம் நம்புவதாகக் கூறுகின்றனர். அத்தகைய நெருக்கிய வட்டத்தில் ஒருவராக அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் காணப்படுகிறார்.

லெனின்கிராட் காலத்து கேஜிபியில் இருந்து வந்துள்ள மற்றுமொரு பழைய செல்வாக்கு மிக்க நபர் இவர். நிகோலாய் பட் ருஷேவுக்கு பிறகு மத்திய பாதுகாப்பு சேவையின் தலைமைக்கு இவர் வந்தார்.

மத்திய பாதுகாப்பு சேவை மற்ற சட்ட அமலாக்க சேவைகளின் மீது கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ளது. அதற்கென சொந்தமாக சிறப்புப் படைகளும் உள்ளன.

அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் முக்கியமானவர். ஆனால், அவர் மற்றவர்களைப் போல் ஆலோசனை வழங்கவதற்காக நெருங்கிய வட்டத்தில் இல்லை என்று ஆண்ட்ரி சோல்டடோவ் நம்புகிறார்.

செர்கேய் நரிஷ்கின், வெளிநாட்டு உளவுத்துறையின் இயக்குநர்

செர்கேய் நரிஷ்கின், வெளிநாட்டு உளவுத்துறையின் தலைவர்

லெனின்கிராட் காலத்தில் இருந்து புதினுக்கு நெருக்கமாக இருந்து வரும் அந்த மூன்று பேரில், இவர் மூன்றாவது நபர். செர்கேய் நரிஷ்கின் தனது தொழில்முறை வாழ்க்கையின் பெரும்பகுதியில் அதிபருடன் இணைந்தே இருந்தார்.

இருப்பினும், போருக்கு முந்தைய நிலைமையைப் பற்றி அவரிடம் தொலைக்காட்சியில் கேட்கப்பட்டபோது அவர் சரியாக விவரிக்காத நேரத்தில், அந்த நீண்டகால நட்பு அவர் மீது கோபம் கொள்வதில் இருந்து அதிபர் புதினை தடுக்கவில்லை.

அதுமட்டுமின்றி, “புதின் தனது நெருங்கிய வட்டத்திற்குள், (நரிஷ்கினை) ஒரு முட்டாளாகக் காட்டக்கூடிய வகையில் வேடிக்கை செய்வதை மிகவும் விரும்புவார்,” என்று ஆண்ட்ரே சோல்டடோவ் கூறினார்.

செர்கேய் நரிஷ்கின், 1990களில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், 2004இல் புதினின் அலுவலகத்தில் என்று நீண்டகாலமாக அவரது நிழலாக இருந்தவர். அப்படி இருந்தவர், பிறகு இறுதியாக நாடாளுமன்றத்தில் சபாநாயகரானார். அவர் ரஷ்ய வரலாற்று சங்கத்திற்குத் தலைமை தாங்குகிறார். இவர் அதிபரின் செயல்களுக்கான கருத்தியல் அடிப்படைகளை வழங்குவதில் முக்கியமானவர்.

செர்கேய் லாவ்ரோஃப், வெளியுறவுத்துறை அமைச்சர்

செர்கேய் லாவ்ரோஃப், வெளியுறவுத்துறை அமைச்சர்

கடந்த 19 ஆண்டுகளாக, ரஷ்யாவின் மூத்த ராஜதந்திரியாக இருந்துள்ளார். முடிவெடுப்பதில் அவருக்குப் பெரிய பங்கு இல்லை எனக் கருதப்பட்டாலும்கூட, ரஷ்யாவின் தரப்பு நியாயத்தை உலகுக்கு முன்வைப்பதில் இவர் பங்காற்றியுள்ளார்.

விளாதிமிர் புதின் தனது கடந்த கால நட்புகளைப் பெரிதும் நம்பியிருக்கிறார் என்பதற்கு, 73 வயதான செர்கேய் லாவ்ரோஃப் மிகப்பெரிய சான்று.

ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, அந்த முடிவைத் தற்காத்து அவர் பேசியபோது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பெரும்பகுதி வெளிநடப்பு செய்தது. ஆனால், அவர் அதைப் பொருட்படுத்திவே இல்லை.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

ஆரம்பத்திலிருந்தே புதினின் விசுவாசியாக இருந்தாலும், யுக்ரேன் விவகாரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் அவருக்கு எந்தவொரு பங்கும் இருப்பதாகக் கருதப்படவில்லை.

ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா மற்றும் பிற இடங்களில் ரஷ்யாவுக்கு ஆதரவைத் திரட்டி, தனது நாட்டை ஒரு காலனித்துவ நாடாக ஊக்குவிப்பதே அவரது பணி.

யுக்ரேனை ஒரு “நாஜி ஆட்சி” என்று சித்தரிக்கும் முயற்சியில் அவர் ரஷ்யாவின் போருக்கான சொல்லாட்சியை உச்சகட்டத்திற்குக் கொண்டு சென்றார். யுக்ரேனின் அதிபர் யூதர் என்பதெல்லாம் இங்கு ஒரு பொருட்டே இல்லை என்றுகூட அவர் வாதிட்டார். “நான் சொல்வது தவறாகக்கூட இருக்கலாம். ஆனால் ஹிட்லருக்கு கூட யூத ரத்தம் இருந்தது,” என்றுகூட அவர் வாதிட்டார்.

வாலென்டினா மாட்வியென்கோ, கூட்டமைப்பு கவுன்சிலின் தலைவர்

வாலென்டினா மாட்வியென்கோ, கூட்டமைப்பு கவுன்சிலின் தலைவர்

புதினுடைய பரிவாரங்களில் அரிதாக ஒரு பெண்ணின் முகம். இவர் மேல்சபையின் வாக்களிப்பை மேற்பார்வையிட்டவர். வெளிநாட்டில் ரஷ்ய படைகளை நிலைநிறுத்துவதை உறுதி செய்து, படையெடுப்பிற்கு வழி வகுத்தவர்.

வாலென்டினா மாட்வியென்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை சேர்ந்த மற்றொரு புதின் விசுவாசி. இவர் 2014இல் கிரைமியாவை இணைப்பதற்கு உதவினார்.

ஆனால், அவர் முதன்மையான முடிவுகளை எடுப்பவராகக் கருதப்படவில்லை.

விக்டோர் ஸோலோடாவ், தேசிய காவல்படையின் தலைவர்

விக்ட ஸோலோடாவ், தேசிய காவல்படையின் தலைவர்

அதிபரின் முன்னாள் மெய்க்காப்பாளரான இவர், இப்போது ரஷ்யாவின் தேசிய காவல்படையான ரோஸ்க்வார்டியாவை வழிநடத்துகிறார். இது 2016ஆம் ஆண்டு அதிபர் புதினால் உருவாக்கப்பட்ட ரோமானிய பேரரசை போன்ற பிரிட்டோரியன் காவலர்கள் பாணியில் அமைக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட ராணுவம்.

அதை உருவாக்குவதற்கு முன்பாக, அதற்கான தனது சொந்த பாதுகாப்புக் காவலரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், அவர் அந்தப் படையின் விசுவாசத்தை உறுதி செய்தார். மேலும் விக்ட்டோர் ஸோலோடாவ் அந்தப் படையின் எண்ணிக்கையை 400,000 ஆக உயர்த்தினார்.

அவருக்கு ராணுவப் பின்னணி இல்லையென்றாலும், யுக்ரேனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைக் கட்டுப்படுத்த தேசிய காவல் படைக்குப் பரந்த அளவிலான பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அதோடு, அதில் அவர் பெரும் இழப்பைச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

வாக்னர் குழுவின் தலைவர் ப்ரிகோஜின் ஏற்படுத்திய நெருக்கடி எப்படி முடியும் என்பதை முடிவு செய்வதில், ரஷ்யாவின் பாதுகாப்புப் படைகள் மற்றும் குறிப்பாக “தேசிய காவல் படை” முக்கியப் பங்கு வகிக்கும் என்று பிரிட்டனின் உளவுத்துறை கூறியது.

புதின் வேறு யார் சொல்வதையெல்லாம் கேட்பார்?

பிரதமர் மிகைல் மிஷூஸ்டினுக்கு பொருளாதாரத்தை மீட்கும் நம்ப முடியாத அளவுக்குப் பெரிய பணி உள்ளது.

மாஸ்கோ மேயர் செர்கேய் சோபியானின், ரோஸ்நேஃப்ட் மாகாண எண்ணெய் நிறுவனத் தலைவர் இகோர் செச்சின் ஆகியோரும் அதிபருக்கு நெருக்கமானவர்கள் என்று அரசியல் ஆய்வாளர் யெவ்கெனி மின்சென்கோ கூறுகிறார்.

அதிபரின் குழந்தைப்பருவ நண்பர்களாக இருந்த கோடீஸ்வர சகோதரர்கள் போரிஸ் மற்றும் ஆர்கடி ரோட்டன்பெர்க் ஆகியோர் நீண்டகாலமாக நெருங்கிய நட்புவட்டத்தில் உள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் பத்திரிகை அவர்களை ரஷ்யாவின் பணக்கார குடும்பமாக அறிவித்தது.

கூடுதல் செய்தி வழங்கியவர்கள்: ஓல்கா இவ்ஷினா, கேதரினா கிங்குலோவா, பிபிசி ரஷ்ய சேவை

https://www.bbc.com/tamil/articles/c8483vnlpn0o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாக்னர் தலைவர் பெலாரஸ் சென்றடைந்தார்

Published By: SETHU

28 JUN, 2023 | 10:08 AM
image
 

ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜின் பிரிகோஸின் பெலாரஸை சென்றடைந்துள்ளார்.

உக்ரேனுக்கு எதிரான யுத்தத்தில் ரஷ்யப் படையினருடன் இணைந்து போரிட்டு வந்த வாக்னர் கூலிப்படையினர், கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்ய இராணுவத் தலைமைக்கு எதிராக கிளர்ச்சியை ஆரமபித்தனர். 

கடந்த சனிக்கிழமை மொஸ்கோ நோக்கி வாக்னர் கூலிப்படையினர் அணிவகுத்துக் கொண்டிருந்த நிலையில், தனது படையினரை முகாம்களுக்குத் திரும்புமாறு பிரிகோஸின் உத்தரவிட்டார். இரத்தக்களரியைத் தடுப்பதற்காக தனது படையினரை திரும்பிச் செல்ல உத்தரவிட்டதாக பிரிகோஸின் கூறினார். 

பெலாஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவவின் மத்தியஸ்தத்தை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகியது. 

கடந்த சில தினங்களாக வாக்னர் தலைவர் பிரிகோஸின் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், பிரிகோஸின் நேற்று செவ்வாய்க்கிழமை பெலாரஸை சென்றடைந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி அவர் பெலாரஸில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதேவேளை, வாக்னர் படையினரை நிராயுதபாணியாக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. 

https://www.virakesari.lk/article/158741

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாக்னர் குழுவிற்கு நிதி வழங்கும் தங்க நிறுவனங்களிற்கு எதிராக தடை - அமெரிக்கா அறிவிப்பு

Published By: RAJEEBAN

28 JUN, 2023 | 10:51 AM
image
 

வாக்னர் குழுவிற்கு நிதி வழங்குவதற்காக சட்டவிரோத தங்கவர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது.

ரஸ்யா மத்திய ஆபிரிக்க குடியரசு ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள நான்கு தங்கநிறுவனங்களிற்கு எதிராக அமெரிக்க திறைசேரி தடைகளை அறிவித்துள்ளது.

இந்த நிறுவனங்களிற்கு வாக்னர் குழுவின் தலைவருடன் தொடர்புள்ளதாக அமெரிக்கதிறைசேரி அறிவித்துள்ளது.

வாக்னர் கூலிப்படையினர் தங்கள் அமைப்பிற்கு நிதிவழங்கி  அதனை விஸ்தரிப்பதற்கு இந்த சட்டவிரோத தங்க நிறுவனங்கள் உதவுகின்றன என அமெரிக்க திறைசேரி தெரிவித்துள்ளது.

மத்திய ஆபிரிக்க குடியரசு போன்ற நாடுகளின் வளத்தை தனது சுயநலத்திற்காக பயன்படுத்துவதன் மூலம்  வாக்னர் குழு தனது ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என பயங்கரவாதம் நிதி புலனாய்விற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் பிரையன் நெல்சன் தெரிவித்துள்ளார்.

வாக்னர் குழுவிற்கு நிதி கிடைக்கும் வழிகளை அமெரிக்கா தொடர்ந்தும்இலக்கு வைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/158743

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாக்னர் ‘கிளர்ச்சி’ – ரஷ்யா மீதான சீனாவின் நம்பிக்கை வலுவிழக்குமா?

ரஷ்யா, சீனா, இந்தியா, புதின், ஷி ஜின்பிங், இந்தியா, வாக்னர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

யுக்ரேன் போர் குறித்து சீனா இதுவரை ரஷ்யாவை விமர்சிக்கவில்லை

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஜுபைர் அகமது
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த வெள்ளிக்கிழமை, ரஷ்யாவின் தனியார் ராணுவப்படையான ‘வாக்னர்’ படையின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின், அதிபர் புதினுக்கு எதிராக 'கிளர்ச்சி'யொன்றை அறிவித்தார். தனது படையை மாஸ்கோ நோக்கிச் செலுத்தவும் செய்தார்.

ஆனால் ஒரே நாளில், தொடங்கிய வேகத்திலேயே பின்வாங்கினார்.

இருப்பினும் அந்த 24 மணி நேரங்கள் ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. சர்வதேச அரசியல் நிபுணர்கள் புதினின் ஆதிக்கம் பலவீனமடைந்து விட்டதாக கருதுகின்றனர்.

 

அனைத்திற்கும் மேலாக, இது ரஷ்யாவின் நெருங்கிய நண்பனான சீனாவையும் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. இருப்பினும் சீனா, புதினுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறது.

 

ஞாயிற்றுக்கிழமையன்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஷின் காங் பீய்ஜிங்கில் ரஷ்ய துணை வெளியுறவுத்திறை அமைச்சர் அந்த்ரேய் ருட்யென்கோவைச் சந்தித்துப் பேசினார். இதன்பிறகு இச்சம்பவத்தைச் சீனா ‘ரஷ்யாவின் உள்விவகாரம்’ என்று கூறியது. மேலும் தனது ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க ரஷ்யா எடுக்கும் முயற்சிகளுக்குத் தன் ஆதரவையும் தெரிவித்தது.

சீன-ரஷ்ய உறவு எவ்வளவு வலுவாக இருக்கிறது?

ரஷ்யா, சீனா, இந்தியா, புதின், ஷி ஜின்பிங், இந்தியா, வாக்னர்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

கடந்த வெள்ளிக்கிழமை, ரஷ்யாவின் தனியார் ராணுவப்படையான ‘வாக்னர்’ படையின் உரிமையாளர் யெவ்கெனி ப்ரிகோஜின், அதிபர் புதினுக்கு எதிராக 'கிளர்ச்சி' யொன்றை அறிவித்தார்

இரு பெரும் வல்லரசுகளான சீனாவும் ரஷ்யாவும் நெருங்கிய நண்பர்கள். இருநாட்டிற்குமான பொதுவான நலன்கள் கருதி சீனா - ரஷ்யா இடையே நட்பும் மூலோபாயக் கூட்டணியும் உருவாகியுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் துவங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன், சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதினுடன் நீண்ட சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார். அதன்பின் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், ரஷ்ய-சீன உறவை ‘எல்லைகள் கடந்த நட்பு’ என்று இரு நாடுகளும் வர்ணித்தன.

இதற்கு நான்கு நாட்களுக்கு பிறகு ரஷ்யா யுக்ரேன் மீது போர் தொடுத்தது. ஆனால் இன்றுவரை சீனா இதனை விமர்சிக்கவில்லை. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுப்பெற்றிருக்கிறதே தவிர அதில் எந்த உரசலும் இல்லை.

சீனா - ரஷ்யா உறவு குறித்து பேசிய, ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் சர்வதேச அரசியல் பேராசிரியர் ஸ்வரண் சிங், '"சீனா ரஷ்யாவுடன் மிகவும் நெருங்கி வந்துவிட்டது. இனிமேல் அதனால் விலக முடியாது," என்கிறார்.

வாக்னர் குழுவின் 'கிளர்ச்சி' சீனாவுக்கு எவ்வளவு பெரிய தலைவலியாக இருக்கும்?

“இது சீனாவுக்கு மிகப்பெரும் கவலையாக இருக்கும், ஏனெனில் புதினோடு சேர்ந்து சீனா சர்வதேச உறவுகளில் மாற்றம் கொண்டுவரப் பார்க்கிறது,” என்கிறார் ஸ்வரண் சிங்.

ஆனால், ஸ்வரண் சிங்கின் கூற்றுப்படி, இதைவிட சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், இக்கிளர்ச்சி புதினுக்கு எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியது என்பதுதான். “ஆனால் அதைப்பற்றிய தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை,” என்கிறார் அவர்.

வாக்னர் ‘கிளர்ச்சி’க்குப் பின் புதின் என்ன சொன்னார்?

ரஷ்யா, சீனா, இந்தியா, புதின், ஷி ஜின்பிங், இந்தியா, வாக்னர்

பட மூலாதாரம்,RIA NOVOSTI VIA REUTERS

 
படக்குறிப்பு,

இந்த கிளர்ச்சி புதினுடைய பிம்பத்தைச் சற்று பாதித்திருந்தாலும், ரஷ்யாவில் பெரியளவு தாக்கம் இருக்காது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்

இச்சம்பவத்துக்குப் பின் தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் புதின், அதனை “மிகப்பெரிய குற்றம், தேசத்துரோகம், மிரட்டல், தீவிரவாதம்,” என்று கடுமையாக எதிர்வினையாற்றினார்.

ஆனால் சில மணி நேரங்களுக்குப்பின், சமரசத்தின் ஒரு பகுதியாக, வாக்னர் குழுவின் தலைவர் ப்ரிகோஜினுக்கு எதிராக இருந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறப்படுவதக அறிவிக்கப்பட்டது.

இது புதினுடைய பிம்பத்தைச் சற்று பாதித்திருந்தாலும், ரஷ்யாவில் பெரியளவு தாக்கம் இருக்காது என்கிறார், சிங்கப்பூரைச் சேர்ந்த சீன வம்சாவழி அரசியல் விமர்சகரான சுன் ஷி.

“இதன்மூலம் புதினுடைய அதிகாரம் வேண்டுமானால் பலவீனமடைந்திருக்கலாம் ஆனால் ரஷ்யா என்ற நாடு பலவீனமடையவில்லை. ஏனெனில் இந்தக் கிளர்ச்சி 24 மணிநேரத்தில் சரிசெய்யப்பட்டுவிட்டது. இது ஒரு விரும்பத்தகாத நிகழ்வு மட்டுமே,” என்கிறார் அவர்.

சீன ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

சீன செய்தித்தாளான ‘குளோபல் டைம்ஸ்’, புதின் ஒரே நாளில் கிளர்ச்சிக்கான இந்த முயற்சியை அடக்கியதன் மூலம் தன்னை மேலும் வலுவான ஒருவராகக் காட்டியிருக்கிறார் என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

“என்னதான் மேற்கத்திய ஊடகங்கள் இக்கிளர்ச்சி புதினின் பலவீனத்தை வெளிப்படுத்தியிருக்கிறது என்று கூறினாலும், அவர் தீர்க்கமான நடவடிக்கை எடுத்து அதற்கு ஒரு முடிவு கட்டியிருக்கிறார். இது, உள்நாட்டுக் கிளர்ச்சிகளைச் சமாளிக்கும் ஆற்றல் ரஷ்யாவிற்கு உள்ளது என்பதைக் காட்டுகிறது,” என்று கூறியிருக்கிறது அப்பத்திரிகை.

சீனாவின் அரசியல் விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள்?

ரஷ்யா, சீனா, இந்தியா, புதின், ஷி ஜின்பிங், இந்தியா, வாக்னர்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

கிளர்ச்சிக்கு பிறகு ப்ரிகோஜின் பெலாரூசிற்குச் செல்ல அனுமதி தரப்பட்டது. அவர் மீதிருந்த குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்டன

கிளர்ச்சிக்கான இந்த முயற்சியைச் சமாளிக்க, புதின், தனது நண்பரும் பெலாரூசின் அதிபருமான லூகாஷென்கோவிடம் உதவிக்குச் செல்லவேண்டி இருந்தது.

லூகாஷென்கோ தலையிட்டுச் சமரசம் செய்தபின், புதின், வாக்னர் நிறுவனத்தின் தலைவரான யெவ்கெனி ப்ரிகோஜினுடைய கோரிக்கையை ஏற்றார். அதாவது ப்ரிகோஜொன் பெலாரூசிற்குச் செல்ல அனுமதி தரப்பட்டது. மேலும் அவர் மீதிருந்த குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.

சுன் ஷி, "சீனா, புதினின் உண்மையான அதிகாரத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும். இச்சம்பவத்தின் ஒரு நேர்மறையான விளைவு, யுக்ரேனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவை சீனா வலியுறுத்தக்கூடும். அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருக்கின்றன. ஆனால் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து,” என்கிறார் அவர்.

இது இந்தியாவை எப்படி பாதிக்கும்?

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவு நெடுங்காலமாகத் தொடர்கின்ற ஒன்று. இந்தியா ரஷ்யாவிடமிருந்து பல தசாப்தங்களாக ஆயுதங்கள் வாங்கி வருகிறது. மேலும் சென்ற வருடம் யுக்ரேன் போர் துவங்கியதிலிருந்து இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெயையும் வாங்கி வருகிறது.

சீனாவைப்போல் இந்தியாவும் யுக்ரேன் போருக்காக ரஷ்யாவை வெளிப்படையாக விமர்சிக்கவில்லை.

இதுகுறித்து பேசிய ஸ்வரண் சிங், இந்தியாவுக்கு ரஷ்யாவுடனான உறவு முக்கியம். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியா மற்ற நாடுகளுடனான உறவுகளையும் மேம்படுத்தி வந்திருக்கிறது.

கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரை, ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கும் ராணுவத் தளவாடங்களின் பங்கு 68%-லிருந்து 47% ஆகக் குறைந்திருக்கிறது. அதேசமயம் சமீபத்தில் எண்ணெய் இறக்குமதி மட்டும் 44 பில்லியன் டாலர்களாக அதிகரித்திருக்கிறது.

ஸ்வரண் சிங்கின் கருத்துப்படி, கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யாவின் மீது இந்தியாவின் சார்பு குறைந்து, சீனாவின் சார்பு அதிகரித்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/c519ezpdr09o

Posted
5 hours ago, ஏராளன் said:

வாக்னர் குழுவிற்கு நிதி வழங்குவதற்காக சட்டவிரோத தங்கவர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது.

 

ரஸ்யாவில் தங்க வயல்கள் பரந்து கிடக்கும்போது வக்னருக்கும் ஆபிரிக்க தங்க வர்த்தகர்களுக்கும் என்ன தொடர்பு ? 🤪

வக்னருக்கு ரஸ்ய அரசாங்கமே முழு நிதியையும் வழங்கியதாக புதின் இன்று அறிவித்துள்ளார்.

Posted
1 hour ago, ஏராளன் said:

இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெயையும் 

இந்தியா தவிச்ச முயல் அடிக்கிறது. ரஸ்யாவிடம் வாங்கிய எண்ணையை இந்தியா ஐரோப்பாவுக்கு விற்கிறது.
ஐரோப்பா 11 ம் கட்ட பொருளாதார தடையை ரஸ்யா மீது விதித்துள்ளது குறிப்பிடதக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, nunavilan said:

இந்தியா தவிச்ச முயல் அடிக்கிறது. ரஸ்யாவிடம் வாங்கிய எண்ணையை இந்தியா ஐரோப்பாவுக்கு விற்கிறது.
ஐரோப்பா 11 ம் கட்ட பொருளாதார தடையை ரஸ்யா மீது விதித்துள்ளது குறிப்பிடதக்கது.

இதெல்லாம் நம்ம தீர்க்கதரிசிகளுக்கு தெரியுமா? :beaming_face_with_smiling_eyes:

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, nunavilan said:

இந்தியா தவிச்ச முயல் அடிக்கிறது. ரஸ்யாவிடம் வாங்கிய எண்ணையை இந்தியா ஐரோப்பாவுக்கு விற்கிறது.
ஐரோப்பா 11 ம் கட்ட பொருளாதார தடையை ரஸ்யா மீது விதித்துள்ளது குறிப்பிடதக்கது.

இந்தியா ரஸ்யாவிடம் எண்ணையை வாங்கி அய்ரோப்பாவுக்கு விற்கின்றது என்று எதன் அடிப்படையில் கூறுகின்றீர்கள்? 

Posted
Just now, வாலி said:

இந்தியா ரஸ்யாவிடம் எண்ணையை வாங்கி அய்ரோப்பாவுக்கு விற்கின்றது என்று எதன் அடிப்படையில் கூறுகின்றீர்கள்? 

 

https://geopoliticaleconomy.com/2023/04/30/europe-russia-oil-india-wages/

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கைதிகளை வைத்து படையை திரட்டி ரஷ்யாவை அச்சுறுத்திய வாக்னர் குழு - உருவான வரலாறு

வாக்னர் குழு

பட மூலாதாரம்,GETTY IMAGES

27 நிமிடங்களுக்கு முன்னர்

ரஷ்ய அரசுக்கு மிகவும் நெருக்கடியான வாரமாக, கடந்த வாரம் அமைந்தது. ஓராண்டை கடந்து தொடர்ந்து வரும் யுக்ரேன் மீதான படையெடுப்பு ஒருபுறம் இருக்க, தங்களின் `விசுவாசிகள்` என்று நம்பிய வாக்னர் படையினர் ரஷ்ய அரசுக்கு எதிராக திரும்பியது புதினை அதிர்ச்சியடையச் செய்தது.

இந்தச் செயல் முதுகில் குத்துவதைப் போல் உள்ளது என்று வாக்னர் படையினரின் செயலை புதின் கடுமையாக விமர்சித்தார்.

வாக்னர் கமாண்டர் யெவ்கெனி ப்ரிகோஜின் 5,000 படை வீரர்களுடன் தலைநகர் மாஸ்கோ நோக்கி அணிவகுத்துச் சென்றார். ஆனால் தலைநகரில் இருந்து 200கிமீ தொலைவில் நிறுத்தப்பட்டார்.

தற்போது, நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், ரஷ்ய அரசாங்கம் வாக்னர் கூலிப்படையைக் கலைத்து வருவதாகத் தெரிகிறது.

 

தனியார் ராணுவப் படையான வாக்னர் படையின் கனரக ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களைத் திரும்ப எடுத்துக்கொள்வதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

 

வாக்னர் குழு என்றால் என்ன, அது எவ்வளவு பெரியது?

வாக்னர் குழு (அல்லது பிஎம்சி வாக்னர்) 2014இல் கிழக்கு யுக்ரேனில் ரஷ்ய சார்பு பிரிவினைவாத சக்திகளை ஆதரிக்கத் தொடங்கியது. அப்போதுதான் அந்தக் குழு வெளியே தெரியத் தொடங்கியது. அதே ஆண்டில் ரஷ்யாவுடன் கிரைமியாவை இணைப்பதில் இந்தக் குழு உதவியாக இருந்ததாகக் கருதப்படுகிறது.

ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் வாக்னர் படைகள் செயல்பட்டு வருகின்றன.

யுக்ரேனில் போருக்கு முன்பு, வாக்னர் படையில் 5,000 வீரர்கள் இருந்ததாகக் கருதப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் ரஷ்யாவின் உயரடுக்கு படைப்பிரிவுகள் மற்றும் சிறப்புப் படைகளின் வீரர்கள்.

பிறகு, வாக்னர் படையில் உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

மாஸ்கோவில் தனது "நீதிக்கான அணிவகுப்பை" அறிவித்தபோது, யெவ்கெனி ப்ரிகோஜின் 25,000 துருப்புகளுக்கு கட்டளையிட்டதாகக் கூறினார்.

கூலிப்படைகள் ரஷ்யாவில் தொழில்நுட்பரீதியாக சட்டவிரோதமாக இருந்தாலும், வாக்னர் 2022இல் ஒரு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது.

வாக்னர் குழுவை தேசிய குற்றவியல் அமைப்பாக வகைப்படுத்துவோம் என்று கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா தெரிவித்திருந்தது.

வாக்னர் குழு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ரோஸ்டோவ்-ஆன்-டானை ஆக்கிரமித்தபோது வாக்னர் குழுவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு

யுக்ரேனில் வாக்னர் குழு செய்தது என்ன?

ரஷ்யாவுக்காக கிழக்கு யுக்ரேனில் உள்ள பாக்முட் நகரைக் கைப்பற்றுவதில் வாக்னர் பெரிதும் ஈடுபட்டது. வாக்னர் படையினர் அதிகளவில் தாக்குதலுக்கு அனுப்பப்பட்டனர் என்றும் இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது என்றும் யுக்ரேனிய துருப்புகள் கூறுகின்றன.

வாக்னர் குழு இந்தச் சண்டையில் ஈடுபட்டதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. இது ரஷ்யாவின் ராணுவத் தலைவர்களுக்கு எதிராக யெவ்கெனி ப்ரிகோஜினை தூண்டியது.

வெடிமருந்துகளை இழந்துவிட்டதாகக் கூறி, வாக்னர் படைகளை பாக்முட்டில் இருந்து வெளியேற்றுவதாகவும் அச்சுறுத்தினார்.

ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு, கிரெம்ளின் மீது படையெடுப்பதற்கான சாக்குப்போக்கைக் கொடுப்பதற்காக வாக்னர் "பொய்க் கொடி" தாக்குதல்களை நடத்தினார் என்று கருதப்படுகிறது. ஒரு தரப்பினர் அரசியல் அல்லது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு, பிறகு மற்றொரு தரப்பு மீது அதற்குப் பழி கூறுவதைத் தான் இப்படி அழைக்கின்றனர்.

இந்தக் குழு யுக்ரேனில் வழக்கமான ரஷ்ய துருப்புகளையும் கட்டுப்படுத்தியது என லண்டனின் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் மெரினா மிரோன் கூறுகிறார்.

வாக்னர் குழு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

வாக்னர் குழு ரஷ்யாவில் ஒரு முக்கிய அமைப்பாக மாறியதை அதன் பிரமாண்ட புதிய தலைமை அலுவலகம் காட்டுகிறது

வாக்னர் குழு எப்போது தொடங்கப்பட்டது? வாக்னர் என பெயர் வந்தது எப்படி?

வாக்னர் குழுவை 2014இல் நிறுவியதாக யெவ்கெனி ப்ரிகோஜின் கூறுகிறார். பணக்கார தொழிலதிபர் மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளியான ப்ரிகோஜின் கிரெம்ளினுக்கு உணவு வழங்குவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக "புதினின் சமையல்காரர்" என்று செல்லமாக அவர் அழைக்கப்பட்டார்.

கடந்த 2021 பிபிசி விசாரணை, வாக்னர் குழுவின் உருவாக்கத்தில் ரஷ்ய முன்னாள் ராணுவ அதிகாரி டிமிட்ரி உட்கினுக்கு சந்தேகத்திற்குரிய தொடர்பு இருப்பதை எடுத்துக்காட்டியது.

செச்சினியாவில் ரஷ்யா நடத்திய போர்களில் டிமிட்ரி முக்கியப் பங்காற்றியவர். இவர் வாக்னரின் முதல் களத் தளபதியாக இருந்ததாகக் கருதப்படுகிறது. ரஷ்ய சிறைக் கைதிகளைத் தங்கள் படையில் இணைத்ததன் மூலம் வாக்னர் குழுவின் எண்ணிக்கையை பன்மடங்கு அதிகரித்தார் ப்ரிகோஜன்.

ப்ரிகோஜின் 2022இல் ரஷ்ய கைதிகளைத் தனது படையில் சேர்த்ததன் மூலம் வாக்னர் படையின் எண்ணிக்கையை உயர்த்தினார்.

யுக்ரேனில் உள்ள அதன் துருப்புகளில் சுமார் 80% சிறைகளில் இருந்து படையில் சேர்ந்தவர்கள் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

வாக்னர் குழு

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

யுக்ரேனில் தனது வாக்னர் படையினருடன் ப்ரிகோஜின்

ரஷ்யாவின் ராணுவத் தளபதிகளுடன் வாக்னர் குழு மோதியது எப்படி?

பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோய்கு, யுக்ரேனில் உள்ள ஆயுதப்படைகளின் தலைவர் வலேரி ஜெராசிமோவ் ஆகியோர் திறமையற்றவர்கள் என்று ப்ரிகோஜின் பலமுறை குற்றம் சாட்டியுள்ளார்.

வாக்னர் குழுவை நேரடியாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவையும் அவர் ஏற்க மறுத்தார். ஜூன் 23ஆம் தேதியன்று, யுக்ரேனில் உள்ள வாக்னர் துருப்புகள் மீது ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் குண்டுவீச்சு நடத்தியதாக ப்ரிகோஜின் குற்றம் சாட்டினார்.

ஒரு நாள் கழித்து, அவரது துருப்புகள் தெற்கு ரஷ்ய நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டானின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, ராணுவத் தலைமையை அகற்றும் குறிக்கோளுடன் மாஸ்கோவை நோக்கி தங்கள் அணிவகுப்பைத் தொடங்கினர்.

இருப்பினும், பெலாரூஸ் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் மத்தியஸ்தத்தில் ரஷ்ய அரசுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ப்ரிகோஜின் மாஸ்கோ நோக்கிய தனது அணிவகுப்பை நிறுத்தினார்.

தனக்கு விசுவாசமாக இருந்த வாக்னர் படையினருடன் சேர்ந்து பெலாரூஸுக்கு நாடு கடத்தப்படுவதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.

வாக்னர் படையின் மற்ற வீரர்கள் ரஷ்ய ராணுவத்துடன் இணைக்கப்படுவார்கள். கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் மீதான குற்ற வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன.

வாக்னர் குழு

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

மாஸ்கோவிற்கு அருகே நடைபெற்ற ஒரு விருந்தில் விளாதிமிர் புதினுடன் ப்ரிகோஜின் - நவம்பர் 2011இல் எடுக்கப்பட்ட புகைப்படம்

வாக்னர் குழு வேறு எங்கெல்லாம் செயல்படுகிறது?

கடந்த 2015 முதல், வாக்னர் கூலிப்படையினர் சிரியாவில் உள்ளனர், அரசு சார்பு படைகளுடன் சண்டையிட்டு எண்ணெய் வயல்களைப் பாதுகாத்து வருகின்றனர்.

லிபியாவிலும் வாக்னர் படையினர் உள்ளனர். ஜெனரல் கலீஃபா ஹஃப்தாருக்கு விசுவாசமான படைகளை அவர்கள் ஆதரிக்கின்றனர்.

இதேபோல், மத்திய ஆப்ரிக்க குடியரசு (CAR) வைரச் சுரங்கங்களைப் பாதுகாக்க வாக்னரை படையைப் பயன்படுத்துகிறது. இது சூடானில் உள்ள தங்கச் சுரங்கங்களைப் பாதுகாப்பதாகவும் நம்பப்படுகிறது.

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மாலி அரசாங்கம், இஸ்லாமிய போராளிக் குழுக்களுக்கு எதிராக வாக்னர் குழுவைப் பயன்படுத்துகிறது.

இந்தப் படைகளுக்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ப்ரிகோஜின் வெளிநாட்டில் தனது படைகளின் நடவடிக்கை மூலம் பணம் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.

தனக்குச் சொந்தமான சுரங்க நிறுவனங்களை வளப்படுத்த வாக்னர் குழுவை அவர் பயன்படுத்தியதாக அமெரிக்க கருவூலம் கூறுகிறது. தற்போது இவற்றின் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

வாக்னர் குழு
 
படக்குறிப்பு,

சிறையில் கைதிகளை வேலைக்கு எடுக்கும் ப்ரிகோஜன்

வாக்னர் குழு செய்த குற்றங்கள் என்ன?

வாக்னர் குழு மீது ஏராளமான குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஏப்ரல் 2022இல், வழக்கமான ரஷ்ய துருப்புகளுடன் சேர்ந்து, மூன்று வாக்னர் குழு கூலிப்படையினர் கீய்வ் அருகே பொதுமக்களைக் கொன்று சித்திரவதை செய்ததாக யுக்ரேனிய வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

மார்ச் 2022இல் புச்சாவில் வாக்னர் துருப்புகள் பொதுமக்களை படுகொலை செய்திருக்கலாம் என்று ஜெர்மன் உளவுத்துறை கூறுகிறது.

இதேபோல், மத்திய ஆப்ரிக்க குடியரசில் பொதுமக்களுக்கு எதிராக வாக்னர் உறுப்பினர்கள் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதாக ஐ.நா மற்றும் பிரெஞ்சு அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளன.

கடந்த 2020ஆம் ஆண்டில், வாக்னர் கூலிப்படையினர் லிபிய தலைநகர் திரிபோலியிலும் அதைச் சுற்றிலும் கண்ணிவெடிகள் மற்றும் பிற மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களைப் புதைத்ததாக அமெரிக்க ராணுவம் குற்றம் சாட்டுகிறது.

https://www.bbc.com/tamil/articles/c51jzlz8312o



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • டெலோ புலிகள் சண்டை உக்கிரமாக நடந்த இடத்தின் (கட்டைபிராய் டெலோ இன் முக்கிய இயங்கு தளம் ) அயலில் உள்ள இடத்தில். இது தான்  நான் அறிந்தது.  அனால், அது நடந்தது புளொட் என்ற சந்தேகத்தில் (டெலோ ஐ  தொடர்ந்து புளொட் தடைசெய்யப்பட்டது, குறுகிய காலத்தில்). குடும்பம் என்று சொல்லியது - தந்தை, சகோதரம் - கிட்டத்தட்ட பிணையாக அவர்களாகவே வந்து ஒப்படைக்கும் வரையும். (ஆயினும் அவர்களை ஏன் போட்டு தள்ள  வேண்டிய அவசியம் என்பது இப்போதும் நான் யோசிப்பது உண்டு. அவர்கள், எதோ நோட்டீஸ் பதிப்பித்து கொடுத்தவர்கள் என்பதே வெளியில் சொல்லப்டடது. அதாவது கைது செய்ய வந்தவர்கள் சொன்னதாக. ஆயினும், ஏன் பூதவுடல்கள்  கொடுக்கப்படவில்லை? சித்திரவதையில் சிதைந்து விட்டது என்றே சந்தேகம். இவர்கள் இளம் குடும்பஸ்தர்கள் அனா நேரத்தில்.) அனால், இது நடந்தது ஓர் பகிரங்க இடத்தில (இங்கே கேட்கிறீர்கள், அதாவது அந்த இடத்தில இருந்த குறித்த சிலரை தவிர  எவருக்கும் இது தெரியாது). அதனால் இப்படியான சம்பவங்கள் வேறு ஒதுக்கு புறத்திலும் நடந்து இருக்கலாம்.  ----------------------------------------------------------------------------------------------------------------------------------- அனால், இதை விட கொடுராமானது, தமிழ் நாடில்  புலிகள் செய்ததாக நான் அறிந்தது.
    • உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு குறிவைத்து 3ஆவது டெஸ்டை எதிகொள்ளும் இந்தியா - அவுஸ்திரேலியா Published By: VISHNU 13 DEC, 2024 | 11:24 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 5 போடடிகள் கொண்ட போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரின் 3ஆவது போட்டி பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் சனிக்கிழமை (14) ஆரம்பமாகவுள்ளது. பேர்த் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா 295 ஓட்டங்களாலும் அடிலெய்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா 10 விக்கெட்களாலும் வெற்றி பெற்றதை அடுத்து தொடர் 1 - 1 என சம நிலையில் இருக்கிறது. இரண்டு அணிகளும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஒன்றையொன்று வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில், போர்டர் - காவஸ்கர் தொடருக்கும் அப்பால், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற வேண்டும் என்பதை குறிவைத்து இரண்டு அணிகளும் விளையாடும் என்பது உறுதி. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நோக்கிய பயணம் பாதிக்கும் என்பதை இரண்டு அணிகளும் நன்கு அறிந்த நிலையிலேயே இந்த டெஸ்ட் போட்டியை எதிர்கொள்கின்றன. இதன் காரணமாக இந்த டெஸ்ட் போட்டி மற்றொரு பரபரப்பான போட்டியாக அமையும் என்பது நிச்சயம். எவ்வாறாயினும் இரண்டு அணிகளிலும் ஓரிரு துடுப்பாட்ட வீரர்களே பிரகாசித்துள்ளதுடன் சிரேஷ்ட வீரர்கள் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளதைக் கடந்த போட்டிகளில் காணமுடிந்தது. அவுஸ்திரேலிய அணியில் ட்ரவிஸ் ஹெட் மாத்திரமே துடுப்பாட்டத்தில் பிரகாசித்துள்ளதுடன் இந்திய அணியில் நிட்டிஷ் குமார் ரெட்டி, யஷஸ்வி ஜய்ஸ்வால் ஆகிய இருவரும் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். விராத் கோஹ்லி, கே. எல். ராகுல் ஆகியோரும் தொடர்ச்சியாக திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். ரோஹித் ஷார்மா 2ஆவது போட்டியின் மூலம் தொடரில் இணைந்துகொண்ட போதிலும் மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடிய அவரால் கணிசமான ஓட்டங்களைப் பெற முடியாமல் போனது. அவர் மீண்டும் ஆரம்ப வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சைப் பொறுத்த மட்டில் இரண்டு அணிகளிலும் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டுள்ளதை அவர்களது பந்துவீச்சுப் பெறுதிகள் எடுத்துக்காட்டுகின்றன. மிச்செல் ஸ்டார்க் 11 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 10 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர். இந்திய பந்துவீச்சிலும் வேகப்பந்துவீச்சாளர்களான ஜஸ்ப்ரிட் பும்ரா (12), மொஹமத் சிராஜ் (9) ஆகிய இருவரே முன்னிலையில் இருக்கின்றனர். அவுஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், மானுஸ் லபுஷேன் ஆகியோரும் இந்திய அணியில் விராத் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில் ஆகியோரும் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். பிறிஸ்பேன் கபா விளையாடரங்கில் அவுஸ்திரேலியா விளையாடியுள்ள 66 டெஸ்ட் போட்டிகளில் 42இல் வெற்றிபெற்றுள்ளதுடன் 10இல் மாத்திரமே தோல்வி அடைந்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த மைதானத்தில் இந்தியா விளையாடிய 7 போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. எவ்வாறாயினும் இரண்டு அணிகளுக்கும் இடையில் இந்த மைதானத்தில் கடைசியாக 2021இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா 3 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது. அணிகள் இந்தியா: யஷஸ்வி ஜய்ஸ்வால், ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட், கே.எல். ராகுல், நிட்டிஷ் குமார் ரெட்டி, வொஷிங்டன் சுந்தர் அல்லது ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப், மொஹமத் சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ரா. அவுஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, நேதன் மெக்ஸ்வீனி, மானுஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், ட்ரவிஸ் ஹெட், மிச்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பெட் கமின்ஸ் (தலைவர்), மிச்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஜொஷ் ஹேஸ்ல்வூட். https://www.virakesari.lk/article/201224
    • படைய மருத்துவமனை ஒன்றினுள் படைய மருத்துவர்கள்     
    • நாங்கள் டீல் பேசுவதற்கு வரவில்லை; அபிவிருத்தி செய்வதற்கே வந்தோம்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் 14 DEC, 2024 | 09:42 AM (எம்.நியூட்டன்) நாங்கள் டீல் பேசுவதற்கு வரவில்லை ஊழலற்ற ஆட்சி  நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே ஆட்சிக்கு வந்தோம் என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.   யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தலைமை உரை ஆற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.  அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,  “நாங்கள் டீல் பேசுவதற்கு வரவில்லை. ஊழல் அற்ற ஆட்சியில்  நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே ஆட்சிக்கு வந்தோம். இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் என்பது அதிகாரிகளை அச்சுறுத்துவதல்ல. மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதாகும். இதற்கு அனைவரது ஒத்துளைப்புகளும் தேவை.  அரசியல்வாதிகளால் மட்டும் இதனை செய்ய முடியாது. அரச அதிகாரிகளது ஒத்துழைப்பு பங்களிப்பு அவசியம். கடந்த காலங்களில் அரசியல் தலையிடு இருந்தமையால் வினைத்திறனாக செயற்படாதிருந்தமை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இனி அவ்வாறு தலையீடுகள் கிடையாது. சுதந்திரமாக செயல்பட்டு மாவட்டத்தை. நாட்டை முன்னேற்ற வேண்டும்.  தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். இந்த ஆணை என்பது இதுவரை காலமும் இடம்பெற்ற ஊழல் ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றுக்கு எதிராகவே இந்த மாற்றம் ஏற்பட்டது. மேலும் இந்த அரசாங்கம் கிராமங்களை நோக்கியே வேலைத் திட்டங்களை செயல்படவுள்ளது. எனவே கடந்த காலங்களை போல் அல்லாமல்  மக்களுக்கு உண்மையுடனும் விசுவாசத்துடனும்  சேவையாற்ற வேண்டும்“ என்றார். https://www.virakesari.lk/article/201231
    • ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு உடல்நலனை பேண உதவுகிறதா? மருத்துவர்கள் சொல்வது என்ன? பட மூலாதாரம்,OURA படக்குறிப்பு, ஸ்மார்ட் மோதிரங்களில் சென்சார்கள் உள்ளன, அவை அணிபவரின் இதயத் துடிப்பு மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளைக் கண்காணிக்கும் கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ கிளெய்ன்மன் பதவி, தொழில்நுட்ப ஆசிரியர் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் மோதிரம் போன்ற அணியக்கூடிய மின்னணு கருவிகளின் (Wearables) தொழில்நுட்பத்தில் தற்போது ஸ்மார்ட் வாட்ச்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. பல பில்லியன் டாலர்கள் புழங்கக்கூடிய இந்த தொழில்நுட்பத்துறை, மருத்துவ கண்காணிப்பு குறித்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. பல பிரீமியம் தயாரிப்புகள், உடற்பயிற்சி நடைமுறைகள், உடலின் வெப்பநிலை, இதயத் துடிப்பு, மாதவிடாய் சுழற்சி, தூக்கம் போன்றவற்றை அவை துல்லியமாகக் கண்காணிப்பதாகக் கூறுகின்றன. பிரிட்டனில் உள்ள தேசிய சுகாதார சேவை (NHS) எனப்படும் பொது சுகாதார அமைப்பின் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு அணியக்கூடிய மின்னணு கருவிகளை வழங்குவதற்கான ஒரு திட்டத்தைப் பற்றி சுகாதாரத்துறை செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங் பேசியுள்ளார். புற்றுநோய் சிகிச்சைக்கான எதிர்வினைகள் போன்ற அறிகுறிகளை வீட்டில் இருந்தவாறே கண்காணிக்க இவை உதவும். ஆனால் பல மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், அணியக்கூடிய மின்னணு கருவிகளால் சேகரிக்கப்படும் மருத்துவத் தரவுகளை எச்சரிக்கையுடனே அணுகுகிறார்கள். அணியக்கூடிய மின்னணு கருவிகளின் எச்சரிக்கைகள் நான் தற்போது அல்ட்ராஹியூமன் (Ultrahuman) எனும் நிறுவனத்தின் ஒரு ஸ்மார்ட் மோதிரத்தை அணிந்து வருகிறேன். எனது உடல்நிலை சரியில்லை என்பதை நான் கண்டறிவதற்கு முன்பே அந்த ஸ்மார்ட் மோதிரம் கண்டுபிடித்து விடுதாக நினைக்கிறேன். ஒரு வார இறுதியின்போது, என் உடலின் வெப்பநிலை சற்று அதிகரித்து இருப்பதாகவும், நான் சரியாகத் தூங்குவதில்லை என்றும் அது என்னை எச்சரித்தது. இது என் உடலில் ஏதாவது பிரச்னை ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்றும் அந்த ஸ்மார்ட் மோதிரம் என்னை எச்சரித்தது. பெரிமெனோபாஸ் (Perimenopause) அறிகுறிகளைப் பற்றி படித்த பிறகும் நான் அதைப் புறக்கணித்தேன். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, வயிற்று வலியால் ஓய்வெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். எனக்கு மருத்துவ உதவி தேவைப்படவில்லை, ஆனால் ஒருவேளை தேவைப்பட்டிருந்தால், நான் அணிந்திருந்த ஸ்மார்ட் மோதிரத்தின் தரவுகள், சிகிச்சைக்காக மருத்துவ நிபுணர்களுக்கு உதவியிருக்குமா? இதுபோன்ற பல 'அணியக்கூடிய மின்னணு கருவி' பிராண்டுகள் மருத்துவர்கள் அந்தத் தரவுகளைப் பயன்படுத்துவதைத் தீவிரமாக ஊக்குவிக்கின்றன. உதாரணத்திற்கு, ஓரா ஸ்மார்ட் மோதிரம், நோயாளிகள் தங்கள் உடல்நிலை குறித்த தரவுகளை மருத்துவருடன் பகிர்ந்துகொள்ள உதவும் வகையில், அவற்றை ஓர் அறிக்கை வடிவில் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது. புவிவெப்ப ஆற்றல்: பூமியை ஆழமாக தோண்டி எடுக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் சிறப்பு என்ன?11 டிசம்பர் 2024 நீலகிரியில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி - 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!12 டிசம்பர் 2024 ஆரோக்கியத்தை துல்லியமாக மதிப்பிட உதவுகிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அணியக்கூடிய மின்னணு கருவிகளின் தொழில்நுட்பத் துறையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் ஆதிக்கம் செலுத்துகிறது ஓரா நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கும் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் ஜேக் டாய்ச், அணியக்கூடிய மின்னணு கருவிகளின் தரவுகள் 'ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மிகவும் துல்லியமாக மதிப்பிடுவதற்கு உதவுவதாக' கூறுகிறார். ஆனால் இது எல்லா நேரத்திலும் உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும் என்பதை மருத்துவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வதில்லை. மருத்துவர் ஹெலன் சாலிஸ்பரி ஆக்ஸ்போர்டில் பணிபுரிகிறார். நோயாளிகள் இடையே 'அணியக்கூடிய மின்னணு கருவிகளின்' பயன்பாடு அதிகரித்திருப்பதை அவர் கவனித்துள்ளார். அது குறித்த கவலையையும் அவர் வெளிப்படுத்துகிறார். "இத்தகைய கருவிகள் அனைத்து முக்கியமான நேரங்களிலும் கை கொடுப்பதில்லை. உடல்நலன் குறித்து எப்போதும் கவலைப்படும், உடல்நிலையை அதிகமாகக் கண்காணிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குகிறோம் என்று நான் வருத்தப்படுகிறேன்," என்று அவர் கூறுகிறார். இதயத் துடிப்பு அதிகரிப்பது போன்ற அசாதாரண தரவுகள் கிடைப்பதற்குப் பின்னால், ஒரு தற்காலிக உடல்நிலை மாற்றமோ அல்லது அந்தக் கருவியில் ஏற்பட்ட பிழை என ஏராளமான காரணங்கள் இருக்கலாம் என்று மருத்துவர் சாலிஸ்பரி கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES "எப்போதுமே தங்கள் உடல்நிலையைக் கண்காணித்துக்கொண்டே இருக்கும் நிலைக்கு நாம் மக்களைத் தள்ளிவிடுவோமோ என்று நான் கவலைப்படுகிறேன். பிறகு தங்களின் உள்ளுணர்வைவிட மின்னணுக் கருவிகளையே சார்ந்திருக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு முறையும் அந்தக் கருவி அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் காட்டும்போது, அவர்கள் மருத்துவர்களைத் தேடி ஓட வேண்டியிருக்கும்" என்கிறார் சாலிஸ்பரி. எதிர்பாராத மருத்துவ நோயறிதலுக்கு எதிரான ஒரு வகை அரணாக, உளவியல் ரீதியில் இந்த மருத்துவத் தரவுகள் பயன்படுவதை அவர் விளக்குகிறார். உதாரணமாக, ஒரு ஸ்மார்ட் வாட்ச் அல்லது செயலி, ஒரு பயங்கரமான, வீரியம் மிக்க புற்றுநோய்க் கட்டியின் வளர்ச்சியை நிச்சயம் கண்டறியும் என உறுதியாகச் சொல்ல முடியாது என்கிறார் அவர். "நல்ல பழக்கங்களை ஊக்குவிப்பது, இத்தகைய அணியக்கூடிய மின்னணுக் கருவிகள் செய்யும் ஒரு நல்ல விஷயம். ஆனால் அவற்றிடம் இருந்து நாம் பெறக்கூடிய சிறந்த ஆலோசனைகள், ஏற்கெனவே பல ஆண்டுகளாக மருத்துவர்கள் வழங்கி வரும் அதே அறிவுரைகள்தான்" என்று கூறுகிறார் சாலிஸ்பரி. மேலும், "அதிகமாக நடப்பது, அதிகளவில் மது அருந்தாமல் இருப்பது, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க முயல்வது போன்றவைதான் நீங்கள் உண்மையில் செய்ய வேண்டியவை. இவையெல்லாம் ஒருபோதும் மாறாது," என்றும் அவர் தெரிவித்தார். தியாகராய நகர்: நூற்றாண்டை கொண்டாடும் சென்னை அங்காடித் தெருவின் கதை9 டிசம்பர் 2024 வரலாற்றாசிரியர்களின் பார்வையில் திப்பு சுல்தான் ஒரு ஹீரோவா அல்லது வில்லனா? - ஓர் ஆய்வு10 டிசம்பர் 2024 இதய கண்காணிப்பு செயல்பாடு பட மூலாதாரம்,HELEN SALISBURY படக்குறிப்பு, இந்தக் கருவிகள் வழங்கும் ஆலோசனைகள், பல ஆண்டுகளாக மருத்துவர்கள் வழங்கி வரும் அதே அறிவுரைகள்தான் என்கிறார் சாலிஸ்பரி. 'ஆப்பிள் வாட்ச்' தான் உலகின் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட் வாட்ச் என்று கூறப்படுகிறது, இருப்பினும் சமீபத்தில் அதன் விற்பனை குறைந்துள்ளது. ஆப்பிள் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் தங்களது ஸ்மார்ட் வாட்சில் உள்ள 'இதய கண்காணிப்பு செயல்பாடு' காரணமாக உயிர் பிழைத்த நபர்களின் அனுபவங்களை விளம்பரத்திற்காகப் பயன்படுத்துகிறது. அவற்றில் ஏராளமானவற்றை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். இருப்பினும், அவற்றில் எத்தனை தருணங்களில் பிழையான தரவுகள், பிழையான எச்சரிக்கைகள் காட்டப்பட்டன என்பது குறித்து நான் கேள்விப்படவில்லை. பல சந்தர்ப்பங்களில், நோயாளிகள் தாங்கள் 'அணியக்கூடிய மின்னணு கருவியின்' மூலம் கிடைத்த தரவை மருத்துவர்களுக்கு வழங்கும்போது, தங்கள் சொந்த உபகரணங்களைப் பயன்படுத்தி அதை மீண்டும் சோதித்துப் பார்க்கவே மருத்துவர்கள் விரும்புகிறார்கள். "இதற்குப் பல காரணங்கள் உள்ளன, அவை நடைமுறைக்கு ஏற்றவையும்கூட" என்று நாட்டிங்ஹாம் ட்ரெண்ட் பல்கலைக்கழகத்தின் 'அணியக்கூடிய மின்னணுக் கருவிகள்' தொழில்நுட்பங்களின் இணை பேராசிரியர் டாக்டர் யாங் வெய் கூறுகிறார். "நீங்கள் மருத்துவமனைக்குச் செல்லும்போது, உங்கள் ஈ.சி.ஜி (எலக்ட்ரோ கார்டியோகிராம், உங்கள் இதயத்தின் செயல்பாட்டைச் சரிபார்க்கும் ஒரு சோதனை) அளவிடும்போது, அந்த இயந்திரம் சுவரில் மாட்டப்பட்டு இருப்பதால் அதன் மின் நுகர்வு பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லை," என்று அவர் கூறுகிறார். "ஆனால் உங்கள் ஸ்மார்ட் வாட்ச்சை பொறுத்தவரை, அது தொடர்ந்து இயங்க சார்ஜ் தேவைப்படுகிறது. சார்ஜ் குறையும் என்பதால் நீங்கள் தொடர்ந்து உங்கள் ஈ.சி.ஜியை அளவிடப் போவதில்லை" என்கிறார். மலையாக குவிந்த காட்டெருமை மண்டை ஓடுகள்: பூர்வகுடிகளுக்கு எதிரான இருண்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படம்12 டிசம்பர் 2024 'சிறுபூச்சிகளை உண்டன, சொந்த பற்களை கூட விழுங்கின' - டைனோசர்கள் பற்றிய புதிரை அவிழ்க்கும் ஆய்வு முடிவுகள்5 டிசம்பர் 2024 தரவுகளின் துல்லியம் குறைவதற்கான வாய்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஸ்மார்ட் வாட்ச் போன்ற ஒரு கருவி எவ்வளவு சீராக அணியப்படுகிறதோ, அவ்வளவு துல்லியமாக அதன் தரவு இருக்கும் மருத்துவர் வெய் என் விரலில் இருக்கும் மோதிரத்தைச் சுட்டிக் காட்டினார். "இதயத் துடிப்பைப் பொறுத்தவரை, மணிக்கட்டில் இருந்து அல்லது இதயத்தில் இருந்து நேரடியாக அளவிடுவதுதான் சிறந்தது. இதுபோல விரலில் அளந்தால், அந்தத் தரவுகளின் துல்லியம் குறைய வாய்ப்புள்ளது" என்று அவர் கூறுகிறார். இதுபோன்ற தரவு இடைவெளிகளை நிரப்புவது மென்பொருளின் பங்கு. ஆனால் அணியக்கூடிய மின்னணு கருவிகளை இயக்கும் சென்சார்கள், மென்பொருள் அல்லது அதன் தரவு மற்றும் அது எந்த வடிவத்தில் சேகரிக்கப்படுகிறது என்பவை உள்பட, அந்தக் கருவிகளுக்கான சர்வதேச தரநிலை என எதுவும் இல்லை. ஒரு கருவி எவ்வளவு சீராக அணியப்படுகிறதோ, அவ்வளவு துல்லியமாக அதன் தரவு இருக்கும். ஆனால் இதில் எச்சரிக்கையாக அணுக வேண்டிய ஒரு விஷயமும் உள்ளது. பென் வுட் அன்றைய தினம் வெளியே சென்றிருந்தபோது, அவரது மனைவிக்கு, பென்னின் ஆப்பிள் வாட்சிலிருந்து தொடர்ச்சியான எச்சரிக்கை அறிவிப்புகள் வந்தன. பென் வுட், ஒரு கார் விபத்தில் சிக்கியதாக அந்த அறிவிப்புகள் தெரிவித்தன. அவசர சேவைகளுக்கு அழைப்பதற்கு கைப்பேசியைப் பயன்படுத்த வேண்டிய தேவையிருக்கும் என்பதால், நேரடியாக அழைப்பதைவிட கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்புமாறு அந்த அறிவிப்புகள் அறிவுறுத்தின. அந்த எச்சரிக்கை அறிவிப்புகள் உண்மையானவையாக இருந்தன. மேலும் பென் வுட்டின் கைப்பேசியில் அவசரக்கால தொடர்பு எண்ணாக அவரது மனைவியின் எண் இருந்ததால், அவை அனுப்பப்பட்டன. ஆனால் இந்த விஷயத்தில் தேவையற்றதாகவும் அவை இருந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES காரணம் அப்போது பென் ஒரு கார் பந்தய டிராக்கில் சில பந்தய கார்களை வேகமாக ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அத்தகைய கார்களை ஓட்டுவதில் தனக்கு அதிக திறமை இல்லையென்றாலும்கூட, எல்லா நேரங்களிலும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக பென் வுட் கூறுகிறார். "உண்மையில் ஒரு விபத்து நடப்பதற்கும், அதுகுறித்து முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் இடையிலான எல்லைகள் கவனமாக நிர்வகிக்கப்பட வேண்டும். மின்னணு கருவிகளின் உற்பத்தியாளர்கள், அவசர சேவை முகமைகள், அதற்கு முதலில் பதில் அளிப்பவர்கள் மற்றும் தனிநபர்கள் எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பத்தை எவ்வாறு அணுகுவார்கள் என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன்" என்று பென் வுட் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார். 'கிங்ஸ் ஃபண்ட்' அமைப்பின் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பிரிதேஷ் மிஸ்திரி, நோயாளிகள் குறித்த தரவுகளை மருத்துவ அமைப்புகளில் உள்ளிடுவதில் குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளன என்பதை ஒப்புக்கொள்கிறார். எந்தவொரு தெளிவான தீர்மானமும் இல்லாமல் பிரிட்டனில் பல ஆண்டுகளாக இதுகுறித்த விவாதம் நடந்து வருவதாக அவர் கூறுகிறார். மருத்துவமனைகளில் இருந்து சமூக அமைப்புகளை நோக்கி மருத்துவ கவனிப்புகளை நகர்த்துவதற்கான பிரிட்டன் அரசின் முயற்சியில், அணியக்கூடிய மின்னணு கருவிகள் முக்கிய பங்காற்றி இருக்கக்கூடும் என்று மிஸ்திரி நம்புகிறார். "எவ்வாறாயினும், தொழில்நுட்பத்தை ஆதரிக்கக்கூடிய மற்றும் பணியாளர்களுக்குத் தேவையான திறன்கள், அறிவு, ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கையைக் கொண்டிருக்க உதவும் வகையிலான உள்கட்டமைப்பு இல்லாமல் அது கடினமாகவே இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று மிஸ்திரி கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/c0mv940vpzro
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.