Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விமானங்கள் இரத்துச் செய்யப்பட்ட விவகாரம் : ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அளித்த விளக்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டொலர் நெருக்கடியால் விமானங்களை மட்டுப்படுத்த தீர்மானம்

விமானங்கள் இரத்துச் செய்யப்பட்ட விவகாரம் : ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அளித்த விளக்கம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டமை மற்றும் விமான சேவையின் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்பாக தற்போது ஊடகங்களில் பரவி வரும் பல செய்திகள் குறித்து அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானங்கள் கடந்த இரண்டு மாதங்களில் 18 இலிருந்து 15 ஆக குறைந்துள்ளது. திட்டமிடப்பட்ட குத்தகைக் காலாவதியால் விமானப் பற்றாக்குறை ஏற்படுமென ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கணித்திருந்தது, எனினும், எதிர்பாராத நிகழ்வுகளால் நிலைமை மோசமடைந்தது.

உள்நாட்டில் உதிரிப்பாகங்கள் கிடைக்காமை காரணமாக இரண்டு விமானங்கள் சேவையிலிருந்து விலகியுள்ளன. அத்துடன், பொருளாதார நெருக்கடி காரணமாக புதிய குத்தகைகளுக்கான கொள்முதல் செயல்முறையும் தாமதமானது.

எனினும், எதிர்வரும் ஜூலை நடுப்பகுதியில் இந்த நிலைமை வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 57 விமானிகள் பணியிலிருந்து விலகியுள்ளனர். மேலும் சிலர் வெளியேறலாம் என எதிர்பார்க்கலாம்.

கொரோனா தொற்றுக்கு முன்னதாக, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸில் 27 விமானங்களுக்காக 320 விமானிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும், விமான நிறுவனத்தில் தற்போது 257 விமானிகளே உள்ளனர்.

இது விமான சேவையின் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், சராசரி பணியாளர்களின் விமானப் பயண நேரத்தை உலகளாவிய தரங்களுக்குள் வைத்திருக்கவும் போதுமானது.

திட்டமிடப்பட்ட பணியாளர்கள் மற்றும் மாற்று விமானிகள் கிடைக்காததால் தென் கொரியாவுக்கான விமானம் உட்பட சிறிய எண்ணிக்கையிலான விமானங்களை மட்டுமே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இரத்து செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1336309

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பிளேன் பறக்க அப்பிளிக்கேசன் போடேலுமா எண்டு யோசிச்சுக்கொண்டிருக்கிறன். 🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Nathamuni said:

நாங்கள் பிளேன் பறக்க அப்பிளிக்கேசன் போடேலுமா எண்டு யோசிச்சுக்கொண்டிருக்கிறன். 🤔

Pilot Premnath - Full Movie | Sivaji Ganesan, Sridevi, Thengai Srinivasan,  Major Sundararajan - YouTube

Ronnieliang Pilot GIF - Ronnieliang Pilot Aviation ...  

Pilot Premnath - Wikipedia

"பைலட்"  உத்தியோகத்துக்கு தானே... நல்லது.
அப்ளிகேஷனை உடனே நிரப்பி, அனுப்புங்க. 😂

லைசென்ஸ்  கிடைத்தவுடன்... உங்கள் கன்னி பறப்பு, 
"பலாலி சர்வதேச விமான நிலையத்துக்கு" வர வேண்டும் என்று  வேண்டுகின்றேன். 😎

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

லைக்க சுபாஸ்கரன் சிறி லங்கனைக் கொள்வனவு செய்வாரா? 

புலம்பெயர்ஸ் யாராவது இதில் முதலிடலாமே? 

6 minutes ago, Kapithan said:

லைக்க சுபாஸ்கரன் சிறி லங்கனைக் கொள்வனவு செய்வாரா? 

புலம்பெயர்ஸ் யாராவது இதில் முதலிடலாமே? 

இந்திய நிறுவனங்கள் பிரான்சிடமிருந்து 750 ஏர்பஸ் விமானங்களையும் 290 அமெரிக்க போயிங் விமானங்களையும் கொள்வனவு செய்கின்றன. விமானங்களின் தொகையைப் பன்மடங்கக்குவதன் நோக்கம் ஆசியாவில் விமானச் சேவையில் பெரும் இடத்தைப் பிடிப்பது. 18 விமானங்களை வைத்துக் கொண்டு இப் போட்டியில் சிறிலங்கன் எயர்லைன் ஓடுவது கடினம். 

கொள்வனவு செய்யப்பட்ட விமானங்கள் 2027 இலிருந்தே வழங்கப்பட ஆரம்பிக்கும். 2040 இல் தான் இந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட விமானங்கள் முழுச் சேவையில் ஈடுபடும்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் முதலீடு பயன் அளிக்கலாம். நீண்ட கால முதலீடாக இருக்க முடியாது.

சீனாவும் போட்டியாகத் தானே உள்நாட்டில் C919 விமானங்களை மலிவாகவும் விரைவாகவும் உற்பத்தி செய்து ஆயிரக்கணக்கில் ஆசிய சேவையில் ஈடுபடுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

லைக்க சுபாஸ்கரன் சிறி லங்கனைக் கொள்வனவு செய்வாரா? 

புலம்பெயர்ஸ் யாராவது இதில் முதலிடலாமே? 

என்ன?தாழ்ற கப்பலில் அந்தாளை ஏற்றவிட முயற்சியா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்சின் விசேட அறிவிப்பு!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்சின் விசேட அறிவிப்பு!

தமது சேவைகளை வினைத்திறனாக தற்போதுள்ள விமானிகளின் எண்ணிக்கையை கொண்டு முன்னெடுக்க முடியுமென ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது.

விமானங்கள் ரத்து செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானங்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு மாதங்களில் 18 இலிருந்து 15 ஆக குறைந்துள்ளன

இதேவேளை குத்தகை காலாவதியாவதால் விமான பற்றாக்குறை ஏற்படுமென ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் கணித்திருந்தது.

எனினும்,எதிர்பாராத நிகழ்வுகளால் எதிர்பார்த்ததை காட்டிலும் நிலைமை மோசமடைந்தன உள்நாட்டில் உதிரிபாகங்கள் கிடைக்காமை காரணமாக இரண்டு விமானங்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டன.

அத்துடன், பொருளாதார நெருக்கடி காரணமாக புதிய குத்தகைகளுக்கான கொள்முதல் செயல்முறையும் தாமதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் ஜூலை மாத நடுப்பகுதியில் இந்த நிலைமை வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

https://athavannews.com/2023/1336378

  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2023 at 21:04, ஈழப்பிரியன் said:

என்ன?தாழ்ற கப்பலில் அந்தாளை ஏற்றவிட முயற்சியா?

வியாபாரம் என்பது றிஸ்க் எடுப்பதுதானே, பங்குச்சந்தை இல்லையே. 

அப்படியா ? இதுவும் உங்கள் எழுமாற்றான கருத்து.

நான் பாவிக்கும் பங்குச்சந்தை மென்பொருளைத் திறக்கும்போது, 77 வீதமான தனிப்பட்ட முதலீட்டாளர்கள் தமது பணத்தைப் பங்குச் சந்தையில் இழக்கிறார்கள் என்று எச்சரிக்கை செய்கிறது.

வியாபாரத்தில் 77 வீதமானோர் முதலீட்டை இழப்பதில்லை.

10 hours ago, Kapithan said:

வியாபாரம் என்பது றிஸ்க் எடுப்பதுதானே, பங்குச்சந்தை இல்லையே. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.