Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தில் எமது கொண்டாட்டங்களில் நாம் பாவிக்கும் மணவறைகள் உண்மையில் தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றா?

Featured Replies

வணக்கம்!

ஆரியர்களின் பழக்க வழக்கங்கள் பண்பாடுகள் தமிழர் பண்பாட்டுடன் நீண்டகாலத்திற்கு முன் கலக்கப்பட்டு விட்டது என்று பலரும் கூறுவதால், ஆதாரங்களுடன் நிரூபிப்பதால் இப்போது தமிழர்களாகிய நாம் பின்பற்றுகின்ற அனைத்தையும் இவை தமிழ்பண்பாட்டின் எச்சங்களா என்று சந்தேகக் கண்கொண்டு பார்க்கவேண்டி வந்துவிட்டது. இந்தவகையில் இப்போது எனது சந்தேகம் புலத்தில் கொண்டாட்டங்களில் நாம் அதிகளவு பணம் செலுத்தி வாடகைக்கு பெறுகின்ற மணவறைகள் பற்றி செல்கின்றது.

புலத்தில் எமது கொண்டாட்டங்களில் பாவிக்கும் மணவறைகள் உண்மையில் தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றா?

சங்ககாலத்தில் மணவறைகள் பயன்படுத்தப்பட்டனவா? அவை எவ்வாறான தோற்றம், அமைப்பு கொண்டு இருந்தன? இப்போது எமது பாவனையில் உள்ள மணவறைகளில் ஆரியரின் பாணி வெளிக்காட்டப்படுகின்றதா? அவ்வாறாயின், சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டது போன்ற மணவறைகளை நாம் மீண்டும் புலத்தில் அறிமுகம் செய்யமுடியுமா?

மணவறை இந்துசமயத்தின் சின்னமே ஒழிய தமிழரின் பண்பாட்டுச்சின்னம் அல்லவா? :P

கேள்விகள் தொடர்கின்றன...

எனக்கு உண்மையில் இதுபற்றி தெரியாது. எனவே, உங்களிடம் வினவியுள்ளேன். பதில் தெரிந்தவர்கள் விரிவாக விளக்கம் கூறினால் நல்லது.

மணவறை என்றால் பள்ளியறை, மணமண்டபம் என்று நா. கதிரவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதியில் எழுதப்பட்டு உள்ளது. :)

இந்த கருத்தாடல் 2007 ம் ஆண்டு திருமணம் செய்த, செய்யப்போகும் யாழ்கள உறவுகள், வாசகர்களிற்கு சமர்ப்பணம். :)

நன்றி!

பி/கு: புலத்தில் மணவறைகள் வாடகைக்கு கொடுப்பவர்கள் கோவிக்ககூடாது. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் இஞ்சை வெள்ளை வேட்டி, நாலுமுழம்,சப்பறம், வெள்ளை

கட்டுறதெண்டு விவாதிச்சுக்கொண்டிருப்பம். அவனவன்

மேலைத்தேய கலாச்சாரத்திலும்,வட இந்திய கலாச்சாரத்திலும் திருமணங்களையும் , பூப்புனித நீராட்டு விழாக்களையும் தங்கு தடையின்றி நடாத்திக்கொண்டிருக்கின்றார

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்தேகப்படு தெளிவு பெறுவாய் -சந்தேகமே வாழ்வானால் வாழ்வு தெளிவற்று போகும் -யாரோ

திருமணங்களில் அனைத்து தமிழர்களும் மணவறை கட்டுவதில்லை அல்லது அமைப்பதில்லை. மணவறை என்பது இந்து மதத்துக்குரியதாக கருத முடியாது, ஏன் எனில் கிறிஸ்த்தவர்களும் மணவறையைiயே பாவிக்கின்றனர். நம்மவர்கள் மட்டுமன்றி, வேற்றினத்தவர்களும் கூட.

எமக்கான பாரம் பரிய மணவறை என்ற ஒன்றை தேட நீங்கள் முனையும் போது இது நகைப்புக்கிடமான விடயமோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. கால காலமாக நாம் அடக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு, சாவின் விளிம்பில் நின்று கொண்டு தான் தனித்துவத்தையும், அதன் மதிப்பையும் நாம் உணர்ந்தோம். உணர்ந்த நாம் எம் பண்பாட்டு விடயங்களை, குறிப்பாக புராதன காலத்தில் எமக்கு சார்பான விடயங்களை சேகரிக்காமல் வெற்று அரசியல் செய்து கொண்டிருந்தோம் எனலாம்.

இன்று உயர்ந்து நிற்க்கும் Nகோவில்களும், சில சுடு மண் கிணறுகளையும் தவிர பெரு வாரியான ஆதாரங்களை எம்மால் திரட்ட முடியவில்லை. அப்படியிருக்கையில் பாரம்பரிய மணவறை ஒன்று இருந்திருக்குமா? இல்லையா? என்பது பற்றி எப்படி அறிய முடியும்.? அதற்க்கு முன், 1796 ம் ஆண்டு தொடக்கம் 1948 ம் ஆண்டு வரை சிங்கள, தமிழ் வேறுபாடின்றி அனைவரும் அன்னிய நாடு ஒன்றிற்க்கு கீழ் இருந்த போது எமது பாரம்பரியங்கள் மாற்றம் பெற்று புதியனவாகியிருக்கின்றது. எனலாம். வெறும் 10 வருடம் புலம் பெயர்ந்து வாழும் எமக்குள் எத்துணை மாற்றங்கள் நிகழும் போது 3 நூற்றாண்டு காலமான அன்னிய ஆட்சியிலிருந்த தமிழ்ப்பண்பாடு அடியோடு hற்றப்பட்டிருக்கும் என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

இந்த மணவறை, பிறந்த தினத்தில் கேக். வெட்டுதல் போன்ற கலாசந்சாரங்கள் அவர்களிடமிருந்தே வந்ததாக கருதலாம். காரணம் இந்துக்கள் தங்கள் திருமணங்களை ஆலயத்தில் வைத்து செய்து வழமை. ஆகவே இந்துக்களுக்கும் மணவறைக்கும் இருக்கும் தொடர்புக்கான சந்தர்ப்பம் குறைவே.

புலத்திலோ, தாய் நிலத்திலோ, மணவறை என்பது மத ரீதியாகவோ, இன ரீதியாகவோ கட்டப்படுவதில்லை. மாறாக அழகு சம்பந்தமாக, அதாவது வெளிப்புற வடிவுக்காகவே அமைக்கப்படுகின்றது. ஒரு திருமண வீட்டுக்கு செல்லும் போது நாம் அதையே கண்கின்றோம். கனடாவில் மலர் மணவறை செய்கின்றனர். ( பிளாஸ்ரிக் பூ) அது ஒரு வாறு எம் கலாச்சாரத்துடன் ஒத்துப்போவதாக சிலர் எண்ணுகின்றனர். என்னைப்பொறுத்தவரை, மணவறைக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் தொடர்பே இல்லை. இது ஒரு திருமண மண்டபத்தை அழகு படுத்தும், நிழற்ப்டங்கள், வீடீயோக்களுக்கு அழகு படுத்தும் சாதனமானவே பயன்படுத்தப்படுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னர் வாழைமரங்கள் குலைகளுடனும்,தென்னைமரங்கள் குலைகளுடனும் பலாப்பழங்களினாலும் மற்றும் தோரணம் மாவிலைகளினால் திருமண விழாக்கள் அலங்கரிக்கப்பட்டதாக கேள்விப்பட்டுள்ளேன். :)

நிதர்சனின் விளக்கம் அருமை.

தவிர, இன்னொரு பக்கத்தில் ஆரியர் என்று ஒரு இனம் இல்லை என்று கூட வாதம் நடக்கிறது.

ஜெனரல்!!

எனக்கு பெரிதா ஒன்றும் இதை பற்றி தெரியா என்றாலும் மனதில பட்டதை சொல்லிட்டு போறேன் அதாவது மணவறை சில நேரம் பண்பாடாக இருந்திருக்கலாம் அல்லது கால ஓட்டதில் பண்பாடாக உரு பெற்றிருக்கலாம் ஆனா தற்போது திருமண மண்டபங்களில் நவீனமாக அலங்கரிக்கபடும் மணவறை எல்லாம் எங்கள் பண்பாடு என்று கூற முடியுமா இப்படி கால ஓட்டதில் பல மாற்றங்கள் நிகழும் அது எங்கள் கலாச்சாரமா போய்விடும் பிறகு அதை தூக்கி பிடித்து கொண்டு இருபோம் இது தான்..........எனவோ என்ட திருமணத்தில கட்டாயம் மணவறை இருக்கும் அதில எந்த சந்தேகமும் இல்லை குடு உங்க கல்யாணத்தில என்ன மாதிரி...... :P ;)

தமிழர் திருமண முறை-அன்று முதல் இன்று வரை

- ச.மாடசாமி

குடும்பமும் திருமணமும்

""இந்தியர்கள் எங்கே சென்றாலும் தங்கள் குடும்பப் பின்னணியை கூடவே எடுத்துப் போகிறார்கள். அதன் காரணமாய் எப்போதும் தங்கள் குடும்பத்துக்குள் இருப்பது போலவே உணர்கிறார்கள்''! என்பது உளவியல் அறிஞர் ஆலன் ரோலண்ட் கருத்து.

"வனத்தில மேஞ்சாலும் இனத்தில வந்து அடையணும்" என்ற தமிழ்ச் சிந்தனை அவர் கூற்றை நிரூபிக்கத்தான் செய்கிறது.

அவரவரினன் குடும்பம் அவரவருக்குள் ஒண்டிக் கிடக்கிறது.தூரங்களால்-நாகரிகங்களால்-சொந்தக்குடும்பத்திலிருந்து பிரிந்து கிடப்பவரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. குடும்பத்தின் பிடிமண் எல்லோருக்குள்ளும் கொஞ்சம் கிடக்கிறது. வீட்டுக்குள் பண்பாட்டுப் பிரச்சினை தோன்றும் போதெல்லாம், அந்தப்பிடிமண்ணில் இருந்து பழைய முனியப்பசாமிகளும், கருப்பசாமிகளும் முளைக்கத்தான் செய்கிறார்கள்.

சமூக வயமாக்கலும், பண்பாட்டு வயமாக்கலும் (enculturaration) குடும்பத்திலிருந்து தான் தொடங்குகின்றன (2). தொடக்கம் மிக வலுவாக இருக்கிறது.

தொடர்ந்து நிலைத்திருப்பது, உலகளாவி இருப்பது என்ற அம்சங்களில் குடும்பத்துக்கு இணையான இன்னொரு அமைப்பைக் காணமுடியாது. ஆனாலும் உலகெங்கிலும் இந்த அமைப்பு ஒரே வடிவத்தில் இல்லை. குடும்பத்தின் வடிவம் மிக இறுக்கமாக இருப்பதாக கருதப்படும் இந்தியாவிலேயே ஏராளமான நெகிழ்ந்த வடிவங்களைச் சமூகவியலாளர் கண்டறிந்திருக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக 1999இல் ஒரிசாவில் பெய்த கடும் மழையும், அதன் விளைவான பெருவெள்ளமும் குடும்பங்களைச் சிதறடித்தன. உயிர்ப்போராட்டத்தில் புதிய பிணைப்புகள் உண்டாயின. சம்பிரதாயமான பழைய துணைகளைக் கைவிட்டு, நம்பகமான புதிய துணைகளைக் கண்டறிந்தவர்கள் பலர்.

வெள்ளம் வடிந்த பின், நூற்றுக்கணக்கில் புதிய கணவன்-மனைவி உறவுகளும், புதிய குடும்பங்களும் ஏற்பட்டன. "" ஒரே கூரையால் பாதுகாக்கப்பட்ட இதயங்களின் இணைப்பு'' என்று குடும்பத்துக்கு விளக்கம் தருகிறது ஐக்கிய நாடுகள் அமைப்பு.

"குடும்பம் வழங்கும் கூரை' குறித்து யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் குடும்பம் கூரையோடு மட்டும் இல்லை. மறித்து எழுப்பப்பட்ட சுவர்களோடும், எல்லைகளைக் குறுக்கும் வேலிகளோடும் தான் அது இருக்கிறது.

குடும்ப அமைப்பின் அடிப்படையாக திருமணம் திகழ்கிறது.வரன்முறைப்படுத்த

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடி எல்லாம் பார்த்தா, ஆதிகாலத்தில எங்கள் முன்னோர்கள், நம்ம ஆதியப்போல, மரங்களுக்கு கீழும், குகைகளுக்குள்ளும் இலை குழைகளை ஆடையக உடுத்தி வாழ்ந்தார்கள் எண்டுதான் போகவேணும்.

  • தொடங்கியவர்

நன்றி எல்லாருடைய கருத்துக்களுக்கும்.. இப்பவாவது விளங்குதா நாம் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் எமக்கு என்று தனித்துவமாக இப்போது எதுவும் இல்லை என்பது? அவன் செய்யுறான், இவன் செய்யுறான் என்று நாமும் ஏதோ செய்யுறோம். அவ்வளவுதான். வேட்டி கிடைத்தால் வேட்டி, காற்சட்டை கிடைத்தால் காற்சட்டை, சாரம் கிடைத்தால் சாரம், துவாய் கிடைத்தால் துவாய் இப்படியே கையில் கிடைப்பதை கட்டிக்கொண்டு காலத்தை தள்ளவேண்டியதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.