Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரிட்டன் உட்பட பல நாடுகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில்.உக்கிரைனுக்கு கொத்துக் குண்டுகளை அனுப்ப அமெரிக்கா தீர்மானம். 

 

https://www.bbc.co.uk/news/world-us-canada-66144153

  • Replies 552
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஸ்யாவுடன் செய்த உடன்படிக்கையை மீறி, ரஸ்யாவிடம் ஒரு தகவலும் சொல்லாமல், துருக்கி, அசோவ் போராளிகளை உக்ரேன் அதிபரிடம் கையளித்தமைக்கு பெஸ்கோ கண்டனம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு ஒரு உண்மை தெரிரிஞ்சாகணும். போpல் வென்று கொண்ருந்த உக்கிரைனுக்கு எதுக்கு இப்ப  கொத்துக் குண்டுகள் தேவைப்படுகுதாம்.வெடிகுண்டுகள் முடிந்து விட்டதால் கொத்துக்குண்டுகளை அனுப்ப அமெரிக்கா  தீர்மானித்துள்ளது. உக்கிரைன்  பெரும் அழிவைச்சந்திக்கப் போகின்றது;. கொம்பு சீவி விட்ட கூட்டாளி நாடுகள் இந்த விடயத்தைச் சாட்டாக வைத்து விலகப் போகின்றன.அரெpக்காவும் ஆப்கானிஜ்தானை திடீரென்று கைவிட்டது மாதிரி எப்ப கைவிடுவாங்களோ என்று தெரியாது. உக்கிரைன் கொத்துக் குண்டுகளைப் பாவிக்க  வெளிக்கிட்டால் புட்டீன் என்ன செய்வாரென்று எல்வலாருக்கும் தெரியும். யார் இடத்தில  வந்து யார் சீன் போடுறது. -புட்டீன் மைன்ட்  வொய்ஸ்>

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொத்துக்குண்டுகளை  சொந்த நாட்டு மக்கள் மீது பாவித்த சுண்டைக்காய் சிறிலங்காவையே ஒண்ணும் பண்ண முடியவில்லை. இவர்களை எப்படித்தடுப்பது? சும்மா ஒப்புக்கு கண்டனம் தெரிவிப்பார்கள். இருந்து பாருங்கள் சிறிலங்காவும் கண்டனம் தெரிவிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, புலவர் said:

கொத்துக்குண்டுகளை  சொந்த நாட்டு மக்கள் மீது பாவித்த சுண்டைக்காய் சிறிலங்காவையே ஒண்ணும் பண்ண முடியவில்லை. இவர்களை எப்படித்தடுப்பது? சும்மா ஒப்புக்கு கண்டனம் தெரிவிப்பார்கள். இருந்து பாருங்கள் சிறிலங்காவும் கண்டனம் தெரிவிக்கும்.

ரஸ்யா ஏலவே உக்ரேனில் கொத்து குண்டுகளை பாவித்தே வருகிறது.

இனி சில வேளை லிவிவ் போல மேற்கு உக்ரேன் நகரங்கள் மீதும் பாவிக்க கூடும்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted


https://twitter.com/ivan_8848/status/1677798756228505602?s=20 
 

உக்ரேன் நேட்டோவில் சேர்க்கப்பட வேண்டும்.

- துருக்கி அதிபர் எர்டோகன்-

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/7/2023 at 00:41, goshan_che said:

ஓம். ஆனால் - அப்போ இருந்தது செலன்ஸ்கியின் உக்ரேன் அல்ல.

ஆனால் அப்போதும், இப்போதும் இருப்பது புட்டினின் ரஸ்யா.

வெள்ளிடை மலையாக தெளிவாக விளங்கும் இந்த உண்மையை மட்டும் எத்தனை தரம் எடுத்து சொன்னாலும்   ஏனோ இங்குள்ள புட்டினின் காதலர்கள் காதில் வாங்க பிடிவாதமாக மறுப்பதேன்? 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஈழப்பிரியன் said:

 

இந்த புதைகுழி விடயத்தை உலகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல எம்மால் முடியாதா?

இங்கே ஆங்கிலப் புலமை உள்ளவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

யாராவது முன்வரலாமே.

பல நாடுகளிலும் இருந்து யாழில் இணைந்திருப்பதால் பத்திரிகைகள் அரசியல்வாதிகள் என்று பலருக்கும் இந்த செய்தியை சென்றடையச் செய்யலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:
7 hours ago, ஈழப்பிரியன் said:

 

இந்த புதைகுழி விடயத்தை உலகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல எம்மால் முடியாதா?

இங்கே ஆங்கிலப் புலமை உள்ளவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

யாராவது முன்வரலாமே.

பல நாடுகளிலும் இருந்து யாழில் இணைந்திருப்பதால் பத்திரிகைகள் அரசியல்வாதிகள் என்று பலருக்கும் இந்த செய்தியை சென்றடையச் செய்யலாமே.

நாங்க உக்ரேனுக்காக மட்டுமே ஒப்பாரி வைப்போமுங்க. ஏன்னா அதுதான் லேட்ரஸ் ட்ரண்ட். 

😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, Kapithan said:

நாங்க உக்ரேனுக்காக மட்டுமே ஒப்பாரி வைப்போமுங்க. ஏன்னா அதுதான் லேட்ரஸ் ட்ரண்ட். 

😁

வையுங்க வையுங்க 

பிறந்த நாட்டுக்காகவும் கொஞ்சம் குரல் கொடுங்க.பிளீஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரைனுக்கு கொத்துக்குண்டுகளை வழங்குவதற்கு அமெரிக்காவின் நேச நாடுகள் எதிர்ப்பு

Published By: RAJEEBAN

09 JUL, 2023 | 10:15 AM
image
 

உக்ரைனுக்கு கொத்துக்குண்டுகளை வழங்கும் அமெரிக்காவின் முடிவுக்கு அதன் நேச நாடுகள் பல கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

உக்ரைனுக்கு கொத்துக்குண்டுகளை வழங்கவுள்ளதை உறுதிசெய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி இதனை மிகவும் கடினமான முடிவு என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள கனடா பிரிட்டன் ஸ்பெயின் நியுசிலாந்து ஆகிய நாடுகள் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவதை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளன.

கொத்துக்குண்டை தடைசெய்யும் உடன்படிக்கையில் கைசாத்திட்டுள்ள 123 நாடுகளில் பிரிட்டனும் ஒன்று என்பதை பிரிட்டிஸ் பிரதமர் ரிசிசுனாக் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொத்துக்குண்டினை தடை செய்யும் உடன்படிக்கையை கொண்டுவருவதில் தீவிர  ஆர்வத்தை வெளிப்படுத்திய நியுசிலாந்து கடும் கருத்தினை வெளியிட்டுள்ளது.

கொத்துக்குண்டுகள் கண்மூடித்தனமானவை அவை பொதுமக்களிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என நியுசிலாந்து பிரதமர் கிறிஸ் கிப்ஹின்ஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனிற்கு கொத்துக்குண்டுகளை வழங்குவது குறித்த எதிர்ப்பை நியுசிலாந்து அமெரிக்காவிற்கு தெரியப்படுத்தியுள்ளது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சிலவகையான ஆயுதங்களை உக்ரைனிற்கு அனுப்பகூடாது என்பது குறித்து தனது நாடு உறுதியாக உள்ளது என ஸ்பெய்ன் பாதுகாப்பு அமைச்சர் மார்கரிட்டா ரொப்லெஸ் தெரிவித்துள்ளார்.

கொத்துக்குண்டினால் எற்படக்கூடிய தாக்கம் குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/159553

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஈழப்பிரியன் said:

வையுங்க வையுங்க 

பிறந்த நாட்டுக்காகவும் கொஞ்சம் குரல் கொடுங்க.பிளீஸ்.

அண்ணை ஆங்கிலத்தில் இது பற்றி செய்தி எழுதப்பட்டுகொண்டுதான் இருக்கிறது.

https://www.tamilguardian.com/content/human-remains-found-mullaitivu

https://www.tamilguardian.com/content/13-bodies-uncovered-mullaitivu-mass-grave


இதை உறவுகள், அவரவர் நாடுகளில் உள்ள அமைப்புகள், அரசியல்வாதிகளுக்கு அந்தந்த மொழிகளில் அனுப்பி கவனத்தில் எடுக்குமாறு கோரலாம்.

ஆங்கிலம் பேசும் நாட்டில் வசிப்பவர்கள், அல்லது அவர்களின் பிள்ளைகளை கேட்டால் 5 நிமிடத்தில் ஒரு covering letter அடித்து தருவார்கள். 

இல்லை என்றால் இங்கே சொன்னால் - ஒரு template letter அடித்துத்துதரலாம். பிரச்சனை இல்லை.

ஆனால் முன்னர் நெடுக்ஸ் இன்னொரு முயற்சியில் சொன்னது போல, எல்லாரும் ஒரே மாரி அடித்து அனுப்பினால் அது ஒருங்கிணைக்கப்பட்ட பிரச்சாரம் போல தெரியும். ஆகவே அவரவர் பாணியில் எழுதினால் நல்லது.

பிகு

யாழில் வந்து விட்டது என்றால் அது இந்தியன் உளவு அமைப்புக்கு கார் கதவு திறக்கும் ஆட்கள் பார்வையிலும் பட்டிருக்கும்.

ஆகவே இந்திய அதிகாரிகளுக்கு யாரும் கடிதம் அனுப்பி மினகெடவேண்டாம்🤣.

4 hours ago, ஈழப்பிரியன் said:

வையுங்க வையுங்க 

பிறந்த நாட்டுக்காகவும் கொஞ்சம் குரல் கொடுங்க.பிளீஸ்.

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/7/2023 at 07:28, Maruthankerny said:

 

கொத்து குண்டுகள் இரு பகுதியாலும் கொட்டப்படணும். அதை இவ்வுலகு பார்க்கணும் பேசணும்.

இதனூடாக எமது இனத்தின் வலியையும் அவர்கள் உணரணும் பேசணும்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, island said:

வெள்ளிடை மலையாக தெளிவாக விளங்கும் இந்த உண்மையை மட்டும் எத்தனை தரம் எடுத்து சொன்னாலும்   ஏனோ இங்குள்ள புட்டினின் காதலர்கள் காதில் வாங்க பிடிவாதமாக மறுப்பதேன்? 

புட்டினின் காதலர்களாக இருந்தும் பிரயோசனமில்லை
செலென்ஸ்கியின் காதலர்களாக இருந்தும் பிரயோசனமில்லை
நீதி,நேர்மை,நியாத்தின் காதலர்களாக இருந்தும் பிரயோசனமில்லை.

யார் பக்கம் நின்றால் என்ன விமோசனம் கிடைக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

கொத்து குண்டுகள் இரு பகுதியாலும் கொட்டப்படணும். அதை இவ்வுலகு பார்க்கணும் பேசணும்.

கோரமுக/ஆதிக்க வெறி கொண்ட நாட்டு அரசியல்வாதிகளுக்காக ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஆதரிக்கின்றீர்களா விசுகர்?

2 hours ago, விசுகு said:

இதனூடாக எமது இனத்தின் வலியையும் அவர்கள் உணரணும் பேசணும்

இந்த நவீன உலகிலும் உலக வரைபடத்தில் இலங்கை எங்கிருக்கின்றது என தேடும் மக்கள் தான் அதிகம். எமது இனத்தின் வலியை நம்மவர்களே உணரவில்லை அல்லது மறந்து விட்டார்கள்.

நிலமை இப்படியிருக்க!?!?!?!?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, குமாரசாமி said:

கோரமுக/ஆதிக்க வெறி கொண்ட நாட்டு அரசியல்வாதிகளுக்காக ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஆதரிக்கின்றீர்களா விசுகர்?

இந்த நவீன உலகிலும் உலக வரைபடத்தில் இலங்கை எங்கிருக்கின்றது என தேடும் மக்கள் தான் அதிகம். எமது இனத்தின் வலியை நம்மவர்களே உணரவில்லை அல்லது மறந்து விட்டார்கள்.

நிலமை இப்படியிருக்க!?!?!?!?!

வலியை வந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு என்பதே என் தலைவன் தத்துவம். வேற வழி தெரியலை. 😭

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

வலியை வந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு என்பதே என் தலைவன் தத்துவம். வேற வழி தெரியலை. 😭

வலியை தருபவர்கள் இனவாத அரசுகளும் அவை ஏவும்  கூலிப்படைகள் மட்டுமே. பொது மக்கள் அல்லவே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரேனில் உள்ள ரஸ்ய இராணுவத்தின் பிரதானி கேரிஸ்மோவ் அகற்றப்பட்டு அவர் இடத்துக்கு Teplinskiy நியமிக்கப்பட்டுள்ளாராம் என்கிறது டெய்லி மெயில்.

கேரிஸ்மோவ் அகற்றம், பிரிகோசனின் கோரிக்கையில் ஒன்று என்பது கவனிக்கத்தக்கது. 

 

உ.ப.ப.செ

இன்று மதியம் கிரைமியாவை, ரஸ்யாவோடு இணைக்கும் கேர்ச் பாலம் நோக்கி உக்ரேன் ஏவிய உள்ளூர் தயாரிப்பு ஏவுகணைகளை தாம் சுட்டு வீழ்த்தியதாக ரஸ்ய கணக்குகள் கோருகிறன.

முன்னதாக இந்த பாலத்தில் போக்குவரத்தை ரஸ்யா தற்காலிகமாக இடை நிறுத்தியதாக உக்ரேன் கணக்குகள் கூறின.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பைடன்:

உக்ரேன் இன்னும் நேட்டோ உறுப்புரிமைக்கு தயார் நிலைக்கு வரவில்லை. ரஸ்யாவோடு உக்ரேன் போரிடும் நிலையில் அதை நேட்டோவில் சேர்ப்பது, ரஸ்யா மீது நேட்ட்டோ போர் தொடுப்பதற்குச் சமன்.

எனவே ரஸ்ய-உக்ரேன் யுத்தம் முடியும் வரை உக்ரேன் நேட்டோவில் இணைவது சாத்தியமில்லை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துருக்கி மத்யஸ்தத்தில் உருவான உக்ரேன்-ரஸ்யா தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் ஜூலை 17 இல் முடிவுக்கு வருகிறது.

ரஸ்யா விலகி கொண்டாலும் துருக்கிய கடற்படை பாதுகாப்போடு உக்ரேனில் இருந்து தானிய ஏற்றுமதி கருங்கடலினூடு தொடரும் என எர்டோகன் அறிவித்துள்ளாராம்.

1. அசோவ் தளபதிகளை ரஸ்யாவை கேட்காமல் உக்ரேனிடம் கொடுத்தது 

2. உக்ரேனை நேட்டோ சீக்கிரமாக சேர்க்க வேண்டும் என நேற்று வலியுறுத்தியது

3. இன்று இது

நேட்டோவில் ஓரளவு ரஸ்ய நல்லுறவு நாடு என்ற நிலையில் இருந்து, மிக விரைவாக உக்ரேனின் அதி ஆதரவு நாடுகளில் ஒன்று என்ற நிலைக்கு துருக்கி வந்துள்ளது.

ஏன் இந்த திடீர் மாற்றம்?

இத்தனைக்கும் அண்மையில் நடந்த தேர்தலில் எனைய இருவரும் எர்டோகனை விட ரஸ்ய எதிர்ப்பாளர் என்பதால் - எர்டகோன் வெற்றிக்கு ரஸ்யா மறைமுகமாக உழைத்தது என்று எதிரணி வேட்பாளர் பொது வெளியில் குற்றம் சாட்டி உள்ளார்.

திடீரென எர்டோகன் நிலை மாறியதன் மர்மம்தான் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புட்டின் தலைமைக்கு ஆபத்தா? : மொஸ்கோவில் மீண்டும் நெருக்கடி!

Published By: VISHNU

09 JUL, 2023 | 03:59 PM
image
 

ஐங்கரன் விக்கினேஸ்வரா

புட்­டி­னுக்கு எதி­ரான விமர்­ச­னங்­களை கடு­மை­யாக அள்­ளி­வீசும் தீவிர தேசி­ய­வாதி ‘இகோர் கிர்­கினால்’ மீண்டும் மொஸ்­கோவில் நெருக்­கடி உரு­வா­கி­யுள்­ளது. புட்­டினின் அதி­காரம் பரி­மாற்­றப்­பட வேண்டும் என்ற தொனியில் இகோர் கிர்­கினால் மொஸ்­கோவில் மீண்டும் ஊட­கங்­களின் கழுகுப் பார்வை திரும்­பி­யுள்­ளது.

002.png

கடந்த வாரம் யெவ்­ஜெனி பிரி­கோசின் தலை­மையில் வாக்னர் குழு­வி­னரின் ஆயு­த­மேந்­திய கிளர்ச்­சியில் சில நாட்கள் சூடு­பி­டித்த மொஸ்கோ விவ­காரம், மற்­றொரு ரஷ்ய அதி தீவிர தேசி­ய­வா­தியின் உரையால் மீளவும் மேற்­கு­லக ஊட­கங்­க­ளுக்கு பெருந்தீனியை போட்­டுள்­ளது.

உக்­ரே­னிய போரில் வெற்­றி­பெற முடி­யா­விட்டால், புட்டின் தனது போர் அதி­கா­ரங்­களை 'பரி­மாற்றம்' செய்ய வேண்டும் என்று மற்­றொரு ரஷ்ய தீவிர தேசி­ய­வா­தி­யான முன்னாள் ரஷ்ய தள­பதி இகோர் கிர்கின்னின் உரையால் மீண்டும் மொஸ்­கோவில் சல­ச­லப்பு ஏற்­பட்­டுள்­ளது.

   மொஸ்கோ மீதான முற்­றுகை நடக்­கலாம் என ஐரோப்­பிய ஊட­கங்கள் பலவும் எதிர்­பார்த்­தி­ருந்தபோதும், அவர்­களின் கிளர்ச்சி இல­கு­வாக பிசுபிசுத்துப் போனது. இதன் பின் அதி தீவிர தேசி­ய­வா­திகள்   தலை­ந­கரில் கூடி அதிபர்  புட்­டினால் உக்ரேனில் வெற்றி பெற முடி­யா­விட்டால், "அவர் தனது அதி­கா­ரங்­களை சட்­டப்­பூர்­வ­மாக மாற்ற வேண்டும்" என்று வாதிட்­டனர்.

போர்க்­கால ரஷ்­யாவில் அசா­தா­ர­ண­மான விமர்­ச­னத்­திற்கு சம­மா­னதைப் பகிர்ந்து கொள்ள அல்ட்­ரா­ நே­ஷ­ன­லிஸ்­டுகள் குழு­வி­னர்கள்  ஒன்றுகூடினர். அவர்களின் பார்வை அப்­பட்­ட­மாக புட்­டினை நோக்கியே இருந்­தது. உக்ரேன் மீதான ரஷ்­யாவின் படை­யெ­டுப்பில் ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டினால் வெற்­றி  அடைய முடி­யா­விட்டால், அவர் அதி­கா­ரத்தை ஒப்­ப­டைக்க வேண்டும் என வாதிட்­டனர்.

தற்­போ­தைய அமைப்பு முழு­வதும் உய­ர­டுக்­கி­னரின் பொறுப்­பற்ற தன்­மையின் அடிப்­ப­டையில் கட்­ட­மைக்­கப்­பட்­டுள்­ளது என்று முன்னாள் ரஷ்ய தள­பதி இகோர் கிர்கின்  சில வாரங்­க­ளுக்கு முன்பு பேட்­ரியாட்ஸ் கிளப் கூட்­டத்தில் கூறியிருந்தார்.

ஜனா­தி­பதி போருக்குப் பொறுப்­பேற்கத் தயா­ராக இல்லை என்றால், அவர் தனது அதி­கா­ரங்­களை சட்­டபூர்­வ­மாக மாற்ற வேண்டும் என்றார் அவர்.

கிட்­டத்­தட்ட மூன்று மணி­நேரம் மொஸ்­கோவில் நடைபெற்ற  இந்த  சந்­திப்பு டெலி­கி­ராமில் ஒளி­ப­ரப்­பப்­பட்­டது.

புட்டின் இரண்டு தசாப்­தங்­க­ளுக்கு முன்னர் அதி­கா­ரத்­திற்கு வந்தார். ரஷ்­யாவில் ஸ்திரத்­தன்­மையை உறு­திப்­ப­டுத்த முழு­மை­யான சக்­தியைப் பயன்­ப­டுத்தத் தயா­ராக இருக்கும் ஒரு நப­ராக உரு­வா­கினார். 

ஆனால், அவ­ரது உக்ரேன் படை­யெ­டுப்­பிற்கு ஒன்­றரை வரு­டங்­களில் அந்த ஸ்திரத்­தன்­மைக்­கான அச்­சு­றுத்­தல்கள் பெருகி வரு­கின்­றன. பெரு­கி­வரும் போர் இழப்­புகள் மற்றும் இரா­ணுவத் திற­மை­யின்மை, எல்லை தாண்­டிய தாக்­கு­தல்கள் ரஷ்ய சமூ­கங்­களை பய­மு­றுத்­து­கின்­றன.

யார் இந்த இகோர் கிர்கின்?

முன்னர் ரஷ்­யாவின் ஃபெடரல் செக்­யூ­ரிட்டி சேர்­வீஸில்   அதி­கா­ரி­யாக இருந்­தவர், கிர்கின் ஸ்ட்ரெல்கோவ் என்றும் அழைக்­கப்­ப­டு­கிறார். மேலும் 2014 இல் கிரி­மி­யாவை மொஸ்கோ இணைத்­த­திலும், உக்ரேனின் டான்பாஸ் பிராந்­தி­யத்தில் ஏற்­பட்ட மோத­லிலும் முக்­கிய பங்கு வகித்தவர்

ரஷ்ய தேச­பக்­தர்கள் அமைப்­பா­ள­ரான கிர்கின், வாக்னர் குழு தலைவர் பிரி­கோ­சி­னுக்கு நண்பர் அல்ல. ஆனால், கிர்கின் - முன்னாள்  பாது­காப்புப் பணி­யாளர் ஆவார்.

வாக்னர் குழு புட்­டி­னுக்கு அச்­சு­றுத்­த­லாக இருக்­கலாம் என்று முன்பு எச்­ச­ரித்­தி­ருந்தார். பிரிகோ­சினைப் போலவே, அவரும்  சில சம­யங்­களில் புட்­டினை விமர்­சிப்பதற்கு  தயங்­க­வில்லை.

ரஷ்­யாவின் இந்தப் போரை எவ்­வ­ளவு சிறப்­பாக நடத்த முடியும் என்று அடிக்­கடி வாதிடும் இவர், புட்டின் இந்தப் போரை வெல்லப் போவ­தில்லை என்றும்   எச்­ச­ரித்­துள்ளார்.

முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரி­யான இகோர் கிர்கின், உக்ரேன் மீதான தனது முழு அள­வி­லான படை­யெ­டுப்பில் ரஷ்ய படை­க­ளுக்கு ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் தலைமை தாங்­கி­ய­தற்கு மேலும் கடு­மை­யான விமர்­ச­னங்­களை அளித்­துள்ளார்.

முன்னாள் தள­பதியான இவர்  சமூக ஊட­கங்­களில் மிகப் பெரிய    அளவில் செயற்பாட்டில் இருப்பவர். ரஷ்ய ஜனா­தி­பதி மற்றும் அவ­ரது தள­ப­தி­களின் போர்க்­கால நடத்தைகள் குறித்த அதி­ருப்திகளை பற்றி அடிக்­கடி கடு­மை­யான விமர்­ச­னங்­கள்  மூலம் கூறு­பவர்.

 தென்­கி­ழக்கு உக்ரேனின் வர­லாற்றுப் பெய­ரான நோவோ­ரோ­சி­யாவில் ஒரு வரு­டத்­திற்கு முன்பு "எதிரிகள் எங்கும் தாக்­க­வில்லை, ரஷ்­யாவின் இத­யத்தை அழிக்க முன்­மு­யற்சி செய்­கி­றது. இப்­போது நாம் என்ன செய்­கிறோம்  பாருங்கள் ’ என விமர்­சித்­தவர்.

எம்.ஹெச் 17 விமான வழக்கில் இகோர் கிர்கின்

கிழக்கு உக்­ரேனில் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் விழுந்து நொறுங்­கிய மலே­சிய விமா­னத்தை சுட்டு வீழ்த்­தி­ய­தாக நான்கு பேர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

 இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஷ்­யர்­களும் லியோனிட் கார்­சென்கோ என்னும் ஒரு உக்ரேன் நாட்­ட­வரும் விமா­னத்தை எரிகணை­கள் மூலம் சுட்டு வீழ்த்தி, பய­ணிகள் மற்றும் விமான ஊழி­யர்கள் 298 பேரை கொலை செய்­த­தாக நெதர்­லாந்து விசா­ர­ணை­யாளர் குற்றம் சாட்­டி­யிருந்தார். இது தொடர்­பான நீதி­மன்ற வழக்கு நெதர்­லாந்தில் 2020 மார்ச்சில் நடந்­தது.

இவ்­வி­மானம் ரஷ்ய, - உக்ரேன் எல்­லையில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வான்­வெ­ளியில் பறந்து கொண்­டி­ருந்­த­போது தொடர்பை இழந்­தது. அது உக்ரேன் அரசு மற்றும் ரஷ்ய ஆத­ரவு பெற்ற உக்ரேன் பிரி­வி­னை­வாத குழுக்கள் ஆகியோர் இடையே மோதல் நிலவி வந்த நேரம். அப்­போது உக்ரேன் இராணுவ விமா­னங்கள் பலவும் சுட்டு வீழ்த்­தப்­பட்­டி­ருந்­தன.

உக்­ரே­னிய கட்­டுப்­பாட்டில் இருந்த பகு­தி­களில் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டது. இவ்­வி­மானம் சுட்டு வீழ்த்­தப்­பட்­ட­தற்கு நான்கு பேருக்கு எதி­ராக சர்­வ­தேச கைது ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டது.

இந்த நால்­வரில் ஒருவரான இகோர் கிர்கின்   ரஷ்ய உள­வுத்­து­றையின் முன்னாள் கேர்னல் ஆவார். அவருக்கு கிழக்கு உக்ரேனின் கட்டுப்பாட்டில் இருந்த டோனெட்ஸ்க் என்ற நகரத்தின் பாதுகாப்பு அமைச்சர் எனும் அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.

ரஷ்ய கூட்டமைப்பின் உயரிய இராணுவ அதிகாரி என மதிக்கப்படுபவர் கிர்கின்.

இந்த முன்னாள் உயர் இராணுவ அதிகாரி கிர்கினே, அதிபர் புட்டினால் உக்ரேனில் வெற்றி பெற முடியாவிட்டால், அவர் தனது அதிகாரங்களை சட்டப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்று பகிரங்கமாக விமர்சித்துள்ளார். 

இவர் பின்னால் படை பல சக்திகள் இல்லாவிடினும், புட்டினுக்கு இன்னொரு பாரிய தலையிடியாக இவர்  உள்ளார் என்றே கருதலாம்.

https://www.virakesari.lk/article/159589

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜூன் 29ம் திகதி, பிரிகோசனையும் ஏனைய வாக்னர் கூலிப்படை தளபதிகளையும் புட்டின் மூன்றரை மணி நேரம் சந்தித்து பேசினார் என கிரெம்ளின் பேச்சாளர் பெஸ்கோ கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

உக்ரேனியர் மீது கலிபர் ஏவுகணைகளை ஏவிய நீர்மூழ்கியின் அப்போதைய தளபதியும், இப்போ ஆட்சேர்ப்பு பிரிவில் பிரதி தகைவராகவும் இருந்த Stanislav Rzhitsky, என்ற ரஸ்ய தளபதி காலை ஓட்ட பயிற்சியில் இனம் தெரியாத நபரால் சுட்டுக்கொலை.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

உக்ரேனியர் மீது கலிபர் ஏவுகணைகளை ஏவிய நீர்மூழ்கியின் அப்போதைய தளபதியும், இப்போ ஆட்சேர்ப்பு பிரிவில் பிரதி தகைவராகவும் இருந்த Stanislav Rzhitsky, என்ற ரஸ்ய தளபதி காலை ஓட்ட பயிற்சியில் இனம் தெரியாத நபரால் சுட்டுக்கொலை.

வடை போச்சே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

வடை போச்சே?

இங்கே வடை தன்னை சுடுவதற்கு தானே ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளது என்கிறனர்.

சுட்டு கொல்லப்பட்டவர் - தான் காலையில் ஓடும் ரூட்டை ஒரு அப்பில் தினமும் வெளியிடுவாராம்.

சில நாட்களுக்கு முன் இப்படி வெளியிட்ட ரூட்டை - உக்ரேனிய புலனாய்வு அமைப்பின் தலைவர் புடுனொவ் லைக் பண்ணினாராம்.

உ.ப.ப செய்திதான்.

 

 

  • Haha 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.