Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பிரம்ம முகூர்த்தத்தில்' உதயமான 'கலைஞர் டிவி'!

Featured Replies

'பிரம்ம முகூர்த்தத்தில்' உதயமான 'கலைஞர் டிவி'!

சனிக்கிழமை, செப்டம்பர் 15, 2007

சென்னை:

திமுகவின் புதிய சானலான கலைஞர் தொலைக்காட்சி இன்று முதல் தனது ஒளிபரப்பை முழு அளவில் தொடங்கியுள்ளது. தமிழ்த் தாய் வாழ்த்தையே சேனலின் முகப்பு இசையாக கொண்டுள்ளது கலைஞர் டிவி.

சன் டிவியுடன் உறவு முறிந்ததும் உருவானது உருவானது கலைஞர் டிவி.

முதல்வர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் சேனலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கின. ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்தார் கருணாநிதி.

மத்திய அரசின் அனுமதி, சேட்டிலைட் டிரான்ஸ்பான்டர்கள், அலுவலகம், ஊழியர்கள், கருவிகள் ஆகியவை மின்னல் வேகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டன.

திட்டமிடப்பட்ட 3 வாரத்தில் வெற்றிகரமாக சோதனை ஒளிபரப்பை தொடங்கியது கலைஞர் டிவி. இது சோதனை ஒளிபரப்பு என்ற டிக்கருடன் ஒளிபரப்பு தொடங்கியது.

ஆனால், எடுத்தவுடனே சோதனை என்ற வார்த்தை வேண்டாம் என்று நினைத்தார்களோ என்னவோ, அதை முன்னோட்ட ஒளிபரப்பு என மாற்றினர்.

தமிழகம் முழுவதும் கலைஞர் டிவிக்கான விளம்பரங்களும் மிக பிரமாண்டமாக செய்யப்பட்டன.

மதுரையில் எங்கு நோக்கினும் அழகிரியின் படத்தோடு கலைஞர் டிவிக்கான விளம்பரங்கள் தான் காணப்படுகின்றன.

இந் நிலையில் கலைஞர் தொைலக்காட்சி இன்று முதல் தனது அதிகாரப்பூர்வ ஒளிபரப்பைத் தொடங்கியது.

இடது புறத்தில், கீழே மெல்லப் பளிச்சிடும் சூரியன், கீழே கலைஞர் என்ற தொலைக்காட்சியின் பெயருடன் இன்று முதல் பட்டொளி வீசிப் பறக்க ஆரம்பித்திருக்கிறது இந்தத் தொைலக்காட்சி.

நீராடும் கடலுடுத்த என்ற தமிழ்த் தாய் வாழ்த்தையே தொலைக்காட்சியின் முகப்பு இசையாக வடிவமைத்துள்ளனர்.

கலைஞர் டிவியில் இடம் பெற்றுள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பிற கலைஞர்கள் பெரும்பாலும் சன் டிவியிலிருந்து வந்தவர்கள்தான். சன் டிவி உருவானபோது முக்கிய பங்கு வகித்த சரத்குமார் என்பவர் தான் இந்த டிவியை உருவாக்கியதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

அவரையே இதன் நிர்வாக இயக்குநராகவும் நியமித்துள்ளனர். இயக்குநர் அமிர்தம், தலைமை நிதி அதிகாரியாக செயல்படுகிறார்.

இயக்குநர் ராம.நாராயணன் தலைமை செயல் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருக்கிறார்.

சன் டிவியின் அடையாளங்களில் ஒருவராக சன் டிவி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இருந்து வந்தவரான பெப்சி உமா, இப்போது கலைஞர் டிவியில் அடைக்கலம். ரமேஷ் பிரபாவும் கலைஞருக்கு வந்து விட்டார். வெண்ணிற ஆடை மூர்த்தியும் வந்துள்ளார். இன்னும் பல பிரபலங்கள் கலைஞர் டிவிக்கு வந்துள்ளனர்.

முதல் நாளான இன்று வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசியை திரையிடுகிறது கலைஞர் டிவி. அதேபோல மொழி படமும் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது.

பளிச்சிடும் நிகழ்ச்சிகள், துல்லியமான ஒளிபரப்பு, அனுபவம் வாய்ந்த அணி என பக்கவாக களம் இறங்கியுள்ளது கலைஞர்.

இதை சன் டிவி எப்படி கெளண்டர் செய்யப் போகிறது என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

பிரம்ம முகூர்த்தத்தில் உதயமான டிவி:

விநாயகர் சதுர்த்தி தினமான இன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் கலைஞர் டிவியின் முழு நேர ஒளிபரப்பு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாள் பார்த்து, நேரம் பார்த்து ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது கலைஞர் டிவி.

அண்ணா பிறந்த நாளில்...

ஆனால், இன்று அண்ணா பிறந்த நாள் என்பதால் இந்த தினத்தில் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பு கூறுகிறது.

http://thatstamil.oneindia.in/news/2007/09...v-launched.html

Edited by வலைஞன்
பொருத்தமான தலைப்பினை இடவும்!

அட நம்ம அண்ணாவின்ட புலிகேசி படத்தை தான் முதன் முதலா போடீனம் பிறகு அவை எங்கையோ போக போயீனம்.......... :huh::( :P

தமிழ்நாடு என்ற பெயருடன் ஒரு தேசத்தை வரைபடத்தில் தந்தவர் அறிஞர் அண்ணா.

அவரது பிறந்தநாளான இன்று தமிழ் தொலைக்காட்சியை தொடங்கியவர்கள் தமிழ் பெயரை சூட்டி தமிழை அழகு படுத்தி இருக்கலாம்.

அதில்லாமல் காழ்ப்புணர்ச்சியுடன் தனது பெயரையே சூட்டி தொலைக்காட்சி தொடங்கியது அருவருக்கத்தக்க செயல்.

ஜெயலலிதாவுக்கு ஜெயாஎன்ற பெயருடன் தொல்லைகாட்சி...

தானும் அதே சாக்கடை தான் என்பதை நிரூபிக்கும் வகையில் கருனாநிதிக்கு தனது பெயரில் கலைஞர் தொல்லைக்காட்சி......

'பிரம்ம முகூர்த்தத்தில்' உதயமான 'கலைஞர் டிவி'!

சனிக்கிழமை, செப்டம்பர் 15, 2007

kalaignartv_15092007.jpg

சென்னை:

திமுகவின் புதிய சானலான கலைஞர் தொலைக்காட்சி இன்று முதல் தனது ஒளிபரப்பை முழு அளவில் தொடங்கியுள்ளது. தமிழ்த் தாய் வாழ்த்தையே சேனலின் முகப்பு இசையாக கொண்டுள்ளது கலைஞர் டிவி.

சன் டிவியுடன் உறவு முறிந்ததும் உருவானது உருவானது கலைஞர் டிவி.

முதல்வர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் சேனலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கின. ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்தார் கருணாநிதி.

மத்திய அரசின் அனுமதி, சேட்டிலைட் டிரான்ஸ்பான்டர்கள், அலுவலகம், ஊழியர்கள், கருவிகள் ஆகியவை மின்னல் வேகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டன.

திட்டமிடப்பட்ட 3 வாரத்தில் வெற்றிகரமாக சோதனை ஒளிபரப்பை தொடங்கியது கலைஞர் டிவி. இது சோதனை ஒளிபரப்பு என்ற டிக்கருடன் ஒளிபரப்பு தொடங்கியது.

ஆனால், எடுத்தவுடனே சோதனை என்ற வார்த்தை வேண்டாம் என்று நினைத்தார்களோ என்னவோ, அதை முன்னோட்ட ஒளிபரப்பு என மாற்றினர்.

தமிழகம் முழுவதும் கலைஞர் டிவிக்கான விளம்பரங்களும் மிக பிரமாண்டமாக செய்யப்பட்டன.

மதுரையில் எங்கு நோக்கினும் அழகிரியின் படத்தோடு கலைஞர் டிவிக்கான விளம்பரங்கள் தான் காணப்படுகின்றன.

இந் நிலையில் கலைஞர் தொைலக்காட்சி இன்று முதல் தனது அதிகாரப்பூர்வ ஒளிபரப்பைத் தொடங்கியது.

இடது புறத்தில், கீழே மெல்லப் பளிச்சிடும் சூரியன், கீழே கலைஞர் என்ற தொலைக்காட்சியின் பெயருடன் இன்று முதல் பட்டொளி வீசிப் பறக்க ஆரம்பித்திருக்கிறது இந்தத் தொைலக்காட்சி.

நீராடும் கடலுடுத்த என்ற தமிழ்த் தாய் வாழ்த்தையே தொலைக்காட்சியின் முகப்பு இசையாக வடிவமைத்துள்ளனர்.

கலைஞர் டிவியில் இடம் பெற்றுள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பிற கலைஞர்கள் பெரும்பாலும் சன் டிவியிலிருந்து வந்தவர்கள்தான். சன் டிவி உருவானபோது முக்கிய பங்கு வகித்த சரத்குமார் என்பவர் தான் இந்த டிவியை உருவாக்கியதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

அவரையே இதன் நிர்வாக இயக்குநராகவும் நியமித்துள்ளனர். இயக்குநர் அமிர்தம், தலைமை நிதி அதிகாரியாக செயல்படுகிறார்.

இயக்குநர் ராம.நாராயணன் தலைமை செயல் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருக்கிறார்.

சன் டிவியின் அடையாளங்களில் ஒருவராக சன் டிவி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இருந்து வந்தவரான பெப்சி உமா, இப்போது கலைஞர் டிவியில் அடைக்கலம். ரமேஷ் பிரபாவும் கலைஞருக்கு வந்து விட்டார். வெண்ணிற ஆடை மூர்த்தியும் வந்துள்ளார். இன்னும் பல பிரபலங்கள் கலைஞர் டிவிக்கு வந்துள்ளனர்.

முதல் நாளான இன்று வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசியை திரையிடுகிறது கலைஞர் டிவி. அதேபோல மொழி படமும் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது.

பளிச்சிடும் நிகழ்ச்சிகள், துல்லியமான ஒளிபரப்பு, அனுபவம் வாய்ந்த அணி என பக்கவாக களம் இறங்கியுள்ளது கலைஞர்.

இதை சன் டிவி எப்படி கெளண்டர் செய்யப் போகிறது என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

பிரம்ம முகூர்த்தத்தில் உதயமான டிவி:

விநாயகர் சதுர்த்தி தினமான இன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் கலைஞர் டிவியின் முழு நேர ஒளிபரப்பு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாள் பார்த்து, நேரம் பார்த்து ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது கலைஞர் டிவி.

அண்ணா பிறந்த நாளில்...

ஆனால், இன்று அண்ணா பிறந்த நாள் என்பதால் இந்த தினத்தில் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பு கூறுகிறது.

கலைஞர் டிவிக்கு கருணாநிதி வாழ்த்து!:

கலைஞர் டிவிக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

எத்தனையோ புதிய தொலைக்காட்சிகள் எனது வாழ்த்தைக் கேட்டுப் பெற்றிருக்கின்றன. அப்படி ஆரம்பித்து வெற்றிக் கொடி நாட்டியவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

இப்போது என்னுடைய பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிற இந்த புதிய தொலைக்காட்சியையும் என்னையே வாழ்த்துமாறு கூறினார்கள்.

அதற்குக் காரணம், நான் ராசியானவன், நான் தொட்டது துலங்கும், என் வார்த்தைகள் பலிக்கும் என்ற நம்பிக்கைதான், அவர்களைக் கேட்குமாறு தூண்டியிருக்கிறது. அதற்கேற்ப எத்தனையோ முறை, நான் கூறிய வாழ்த்துக்கள் பலித்திருக்கின்றன, நல்லது நடந்திருக்கிறது.

அந்த வகையில், இந்த புதிய தொலைக்காட்சியும், பல வெற்றிகளைக் குவித்திட தமிழர் உள்ளங்களைக் குளிர்வித்திட என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் கலைஞர் தொலைக்காட்சிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2007/09...v-launched.html

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

'பிரம்ம முகூர்த்தத்தில்' உதயமான 'கலைஞர் டிவி'!

சனிக்கிழமை, செப்டம்பர் 15, 2007

விநாயகர் சதுர்த்தி தினமான இன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் கலைஞர் டிவியின் முழு நேர ஒளிபரப்பு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாள் பார்த்து, நேரம் பார்த்து ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது கலைஞர் டிவி.

சிரிப்பா இருக்கு.... :huh:

  • கருத்துக்கள உறவுகள்

'பிரம்ம முகூர்த்தத்தில்' இவையெல்லாம் குடும்ப வியாபார அரசியல் சுயமரியாதையின்..பகுத்தறிவின் உச்சவெளிப்பாடு. :mellow:

அதுபோகட்டும் சொல்லொன்று செயலொன்று என்றிருக்கிற போலி மனிதர்களைப் பற்றி பேசி என்ன பயன்.

அதுதான் பார்த்தேன் இப்ப எல்லாம் சன் ரிவில என்னடா வைகோ.. ஜெயலலிதா.. விஜய காந்த்.. சரத்குமார் எல்லாம் தலையைக் காட்டினம் என்று. இதுதான் சங்கதியோ...! :lol::lol:

அண்ணாவின் நினைவுதினம் என்று சொல்லி விநாயகர் சதுர்த்தி அன்று, நேரம் பார்த்து "பிரம்ம முகூர்த்தத்தில்" கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சண் ரிவி விநாயகர் சதுர்த்தியை கண்டுகொள்வதில்லை. ஆனால் அவர்களும் கலைஞர் ரிவி தொடங்கும் நாளில் மக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு "விநாயகர் சதுர்த்தி விசேட நிகழ்ச்சிகள்" என்று நிறைய நிகழ்ச்சிகள் போடுகிறார்கள்.

கலைஞர் தொலைக்காட்சியின் ஆரம்பமே ஏதோ ஒரு விதத்தில் மூடநம்பிக்கைகளுக்கு துணை போயிருக்கிறது.

கலைஞர் ஈழப் போராட்டத்திற்கு துணை நிற்பதற்கு அர்த்தமற்ற வகையில் அஞ்சுகிறார். அதே போன்று கடைசிக் காலத்தில் நிற்கின்ற அவர் "கடவுள்" குறித்தும் அர்த்தமற்ற வகையில் அஞ்சுகிறார் போல் தெரிகிறது.

சபேசன் அவர் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அஞ்சுகிறாரா அல்லது இந்தப் பிரச்சினையில் ஈழத்தமிழருக்கு உதவி செய்ய விரும்பவில்லையா என்பதே கேள்வி

நான் இரண்டாவது காரணமாக இருக்கும் என்றே நினைக்கிறேன். அதற்கு உலகத்தமிழ் தலைவர் என்று தானும் தன்னைச் சுற்றியுள்ள சிலர் சொல்லிக் கொண்டிருந்த பட்டம் வேறு இடத்திற்குப் போய்விட்டதே என்ற எரிச்சல் கூடக் காரணமாய் இருக்கலாம்

அண்ணாவின் நினைவுதினம் என்று சொல்லி விநாயகர் சதுர்த்தி அன்று, நேரம் பார்த்து "பிரம்ம முகூர்த்தத்தில்" கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சண் ரிவி விநாயகர் சதுர்த்தியை கண்டுகொள்வதில்லை. ஆனால் அவர்களும் கலைஞர் ரிவி தொடங்கும் நாளில் மக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு "விநாயகர் சதுர்த்தி விசேட நிகழ்ச்சிகள்" என்று நிறைய நிகழ்ச்சிகள் போடுகிறார்கள்.

கலைஞர் தொலைக்காட்சியின் ஆரம்பமே ஏதோ ஒரு விதத்தில் மூடநம்பிக்கைகளுக்கு துணை போயிருக்கிறது.

கலைஞர் ஈழப் போராட்டத்திற்கு துணை நிற்பதற்கு அர்த்தமற்ற வகையில் அஞ்சுகிறார். அதே போன்று கடைசிக் காலத்தில் நிற்கின்ற அவர் "கடவுள்" குறித்தும் அர்த்தமற்ற வகையில் அஞ்சுகிறார் போல் தெரிகிறது.

இயக்குநர் ராம.நாராயணன் தலைமை செயல் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருக்கிறார்.

செய்தி இப்படி இருக்கிறது... இராம நாராயணன் அனேகமாக பிராணிகளை வைத்து பக்தி படமாக எடுத்து களைத்தவர்... அவர் திராவிடர் இயக்க பிரச்சார தொலைக்காட்சியின் செயல் கட்டுப்பாட்டு அதிகாரியாம்... உருப்படுமா பெரியார் சிந்தனை..??

தமிழர் பெரும் தலைவர் பெரியாரின் உண்மை சீடன் எண்டு எல்லாம் சொல்லி கொண்ட கலைஞரின் நிலைமை எப்படி இருக்கிறது தெரியுமா..???

//"இப்போது என்னுடைய பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிற இந்த புதிய தொலைக்காட்சியையும் என்னையே வாழ்த்துமாறு கூறினார்கள்.

அதற்குக் காரணம், நான் ராசியானவன், நான் தொட்டது துலங்கும், என் வார்த்தைகள் பலிக்கும் என்ற நம்பிக்கைதான், அவர்களைக் கேட்குமாறு தூண்டியிருக்கிறது. அதற்கேற்ப எத்தனையோ முறை, நான் கூறிய வாழ்த்துக்கள் பலித்திருக்கின்றன, நல்லது நடந்திருக்கிறது"//

இதை எல்லாம் மூட நம்பிக்கை எண்டு திராவிடர் பெரியவர்கள் கண்டிக்க மாட்டீர்களா..?? குறி சொல்லுகிற கோடாங்கிகள் எல்லாம் இவரை பார்த்து கொண்டு எழுந்து ஆட மாட்டார்களா என்ன..?? அவர்களை குறை கூற பார்பணர் தூண்டினார்கள் எனும் கதையோடு மட்டும் வாருங்கள்...! :P :P :P

ஆனான பட்ட கலைஞரே இப்படி எண்டால் மற்றவர்கள் எப்படியோ..??

Edited by தயா

கலைஞரை பெரியாரின் சீடனாக நான் பார்க்கவில்லை.

பெரியாரின் பாதையில் இருந்த கலைஞா விலகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.

கலைஞரிடம் பகுத்தறிவுக் கொள்கை என்பது இடையிடையேதான் எட்டிப் பார்க்கும்.

ஆனால் அது கூட கலைஞருக்கு பின்பு ஆட்சி அமைக்கப் போகின்ற எவரிடமும் (ஜெயலலிதா, ஸ்டாலின், விஜயகாந்த்..) தென்படப் போவதில்லை.

அந்த வகையில் கலைஞர் மற்றையவர்களை விட சிறந்தவர் என்று சொல்லிக் கொள்ளலாம்.

அதற்காக அவர் பெரியாரின் பிரதம சீடர் ஆகிவிட முடியாது. இன்றைக்குள்ள முக்கிய அரசியல்வாதிகளில் அப்படி யாரும் இல்லை.

பெரியாரை இண்று வரை முன்னிறுத்தி வரும் கலைஞருக்கு இருக்கும் ஆதரவைத்தான் பெரியாரை பேணுவோர் இண்றும் பெருண்பாண்மையாக காட்டி கொள்ள உதவுகிறது... உங்களின் வரிகளை பார்த்தால் பெரியாரின் உண்மை சீடர்கள் சொற்பம் போல அல்லவா இருக்கு..!

மிக முக்கியமாக மூட நம்பிக்கைகளை புகுத்துகிறார்கள் எண்டு பார்ப்பணனை கண்டிப்பதை விடுத்து பெரியாரின் சீடன் எண்டு கொண்டே பகுத்தறிவை சிதைப்பவரை கண்டிக்க வேண்டும்... இல்லை கண்டு கொள்ளவாவது வேண்டும்... யாராவது ஒரு பார்ப்பான் பிழை செய்தால் ஓடி வந்து எதிராக குரல் கொடுக்கும் உங்களின் கடமையும் கூட

Edited by தயா

பகுத்தறிவாளர்களை கலைஞரை முன்னிறுத்துவதாக நான் நினைக்கவில்லை. அப்படி முன்னிறுத்துவது மிகப் பெரும் முரண்பாடாக இருக்கும்.

கலைஞர் ஒரு அரசியல்வாதி. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். அவரைக் கொண்டு இடஒதுக்கீடு, தமிழில் வழிபாடு போன்ற நோக்கங்களை அடைய முடியுமா என்றுதான் பெரியார் கட்சிகள் சிந்திக்கின்றன. அதில் சிலவற்றை கலைஞர் நிறைவேற்றித் தந்திருக்கிறார்.

ஆனால் அந்தச் சிலவற்றையும் பார்ப்பனர்கள் ஓடிவந்து தடுத்திருக்கிறார்கள்

பெரியார் சொன்னவற்றில் சிலவற்றை நிறை வேற்றி தந்த கலைஞர் பகுத்தறிவாதி கிடையாது.. ஆனால் அதை தடுத்ததால் அவர்கள் பார்ப்பான்கள் ... நல்லா இருக்கு நியாயம்...

கடவுளே இல்லை என்னும் போது எதுக்காக தமிழ் வளிபாட்டை கோருகிறார்கள்( தமிழில் வளிபடுவது பிழை எண்று நான் சொன்னதாக அர்த்தப்படுத்தி கொள்ள வேண்டாம்)...?? தமிழரின் சுயமரியாதை நிமிர்த்தமா..???

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரை பெரியாரின் சீடனாக நான் பார்க்கவில்லை.

பெரியாரின் பாதையில் இருந்த கலைஞா விலகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.

கலைஞரிடம் பகுத்தறிவுக் கொள்கை என்பது இடையிடையேதான் எட்டிப் பார்க்கும்.

ஆனால் அது கூட கலைஞருக்கு பின்பு ஆட்சி அமைக்கப் போகின்ற எவரிடமும் (ஜெயலலிதா, ஸ்டாலின், விஜயகாந்த்..) தென்படப் போவதில்லை.

அந்த வகையில் கலைஞர் மற்றையவர்களை விட சிறந்தவர் என்று சொல்லிக் கொள்ளலாம்.

அதற்காக அவர் பெரியாரின் பிரதம சீடர் ஆகிவிட முடியாது. இன்றைக்குள்ள முக்கிய அரசியல்வாதிகளில் அப்படி யாரும் இல்லை.

அப்படியென்றால் ராமசாமி மணியம்மையிடம் மண்டியிட்ட போது அவரிடம் இருந்து பிரிந்து போன அண்ணாவும் ராமசாமியின் சீடரா? ஏனென்றால் அவரும் புத்தரின் பக்தராக இருந்தாராமே

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவாளர்களை கலைஞரை முன்னிறுத்துவதாக நான் நினைக்கவில்லை. அப்படி முன்னிறுத்துவது மிகப் பெரும் முரண்பாடாக இருக்கும்.

கலைஞர் ஒரு அரசியல்வாதி. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். அவரைக் கொண்டு இடஒதுக்கீடு, தமிழில் வழிபாடு போன்ற நோக்கங்களை அடைய முடியுமா என்றுதான் பெரியார் கட்சிகள் சிந்திக்கின்றன. அதில் சிலவற்றை கலைஞர் நிறைவேற்றித் தந்திருக்கிறார்.

ஆனால் அந்தச் சிலவற்றையும் பார்ப்பனர்கள் ஓடிவந்து தடுத்திருக்கிறார்கள்

நன்றி. இப்போது சொல்லுங்கள். ராமசாமியின் உண்மையான சீடராக அல்லது வழிவந்தர்களாக யாரை நீங்கள் கருதுகின்றீர்கள். அவர்களைச் சொன்னார் அனைவரின் வண்டவாளங்களையும் கிழிக்க முடியும்.

ஈழத்திற்குச் சார்பான ஆட்களை மட்டும் சொல்லி தப்பித்துக் கொள்ள முனையமாட்டீர்கள் என நம்புகின்றேன். ஏன் முதலே சொல்க்கின்றேன் என்றால் வழமையாக அப்படிச் சொல்லித் தான் தப்பித் கொள்ளுவீர்கள். அப்படிச் சொன்னாலும் அதற்குப் பதிலளிக்கத் தயார். ஆனால் அதைத் தாங்கள் ஈழப் போராட்டச்சார்பாக மாற்றவிடின்.

உங்களின் இயலாமகைளை மறைக்க வழமை போலப் பார்ப்பானிகளின் மீது குற்றம் சாட்டுவதை இத்தலைப்பிலும் தொடர்வது தாங்களின் சிந்தனைகளில் மாற்றங்களைக் காணமுடியாமையை நியாயப்படுத்துத்துகின்றது.

தமிழ் வழிபாடு பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். தமிழில் வழிபடுவதை நாம் பக்தி சார்ந்த விடயமாகப் பார்க்கவில்லை. உரிமை சார்ந்த விடயமாகப் பார்க்கின்றோம்.

தமிழை நீச பாசை என்பதும், அதில் வழிபாடு செய்யக் கூடாது என்பதும், அனைத்து மக்களும் பூசகர் ஆக முடியாது என்பதும் மக்களின் உரிமைகளை மறுக்கின்ற விடயங்கள்.

இவ்வாறு உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்துத்தான் தமிழ் வழிபாடு, அனைவரும் பூசகர் ஆகுதல் போன்றவற்றிற்கு குரல் கொடுக்கின்றோம்.

அடுத்து பெரியாரின் சீடர்கள் குறித்த கேள்விக்கு வருகிறேன்.

வாக்குகளை பொறுக்குவதற்கு வந்த யாரும் பெரியாரின் கொள்கைகளை முற்று முழுதாக கடைப்பிடிக்க முடியாது. அறிஞர் அண்ணாவாக இருக்கட்டும் அல்லது கலைஞராக இருக்கட்டும் அரசியலுக்கு வந்த பின் கொள்கைகளில் சமரசம் செய்ய வேண்டி வந்து விடுகிறது. ஆகவே அவர்களில் பெரியாரின் வழித்தோன்றல்களை தேட முடியாது.

அத்துடன் காசி அண்ணன் சொன்னது போன்று "பெரியார் ஒருவர்தான் பெரியார்"

அதொப்படீப்பா..?? கடவுளே இல்லை அதில் உங்களுக்கு உரிமை மட்டும் வந்தது...??? அப்படி கடவுள் இருக்கிறார் என்பவர்கள் அல்லது கோயிலுக்கு போக நினைப்பவர்களுக்கு இல்லாத கௌரவம் எப்படி உங்களுக்கு வந்தது..??

கோயிலில் பூசை செய்யும் பிராமணர்களுக்கு வருமானம் எப்படி என்பது எல்லாருக்கும் தெரிந்தது.. நீங்கள் சாப்பிடும் சோற்றி நீச பாசையில் சாதம் என்பார்கள் அதுக்கு அர்த்தம் உருவாக்கி உண்பது... ஆனார் ஒரு பிராமணன் சாப்பிடுவதை பிரசாதம் என்பார்கள். அதுக்கு அர்த்தம் தானமாக பெற்ற சாதம் என்பதாகும்..

அப்படி ஒருவரின் வயிற்றில் அடித்துதான் நீங்கள் உரிமையை நிலை நாட்ட வேண்டுமா..???

Edited by தயா

அரோகரா பிரசாதம் சாப்பிடுறவை எல்லாம் பிராமணர் சாப்பிடுற சாதத்தை சாப்பிட்டு பிராமணரின்ரை வைத்திலை அடிக்கிறியள். இனியாவது பிரசாதத்திற்கு 2 கையும் நீட்டிற விளையாட்டை விடுங்கோ. சேர்க்கிற பாவமாவது குறையும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் மொத்தம் 27 மொழிகள் இருக்கின்றன என நினைக்கின்றேன். அந்த 27 மொழிகளுமே நீச பாசை ஆகாமல் தமிழ் மட்டும் எப்படி நீச பாசை ஆனது சபேசன்? அதை கூடப் பரவாயில்லை. திராவிடமொழிகள் என்று சொல்லிக் கொள்கின்ற இதர மொழிகளை விடத் தமிழ் எப்படி நீசபாசையானது? சொல்லப் போனால் சீண்டல்கள் மூலம் அவ்வாறன நிலையை வரவைத்து விட்டு, மற்றய சமுதாயங்களில் இருந்து தமிழரைப் பிரிக்க வைக்கக் காரணமானவர் யார் என்று உங்களுக்குத் தெரியும்.

நான் தமிழை மிகவும் நேசிக்கின்றேன். அதைத் அடுத்தபடியாகத் தான் இதர மொழிகளுக்கான கௌரவத்தை என்றைக்குமே வழங்குவேன். ஆனால் அதற்காக, வடமொழியைத் தமிழரின் தலையில் பிராமணர்கள் ஏற்றிவிட்டார்கள் என்ற வரலாற்றுப்பொய்யை ஏற்கத் தயாராக இல்லை.

ஆதிசங்கரர் என்ற தமிழர் இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களையும் ஒரே குடைக்குள் கொண்டு வர முயன்றதையும் புத்தம், சமணம் உற்பட அனைத்துக் கடவுள்களையும் இந்து மதத்தில் உள்வாங்கியதையும் இப்போதும் கூடக் காணமுடியும். அவர்களின் புலால் உண்ணாமைக் கொள்கை கூட இந்துக்களாகிய நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அந்த குடைக்குள் வருவதற்கு அவர்கள் விரும்பாமல் ஒதுங்கி அழிந்தும் போனார்கள்.

அங்கே ஒரே குடைக்குள் கொண்டு வரமுயன்றதால் ஏற்பட்ட விளைவு தான் சமஸ்கிரதம் கோவில் மந்திரமாக ஆக்கப்பட்டது. அக்காலத்தில் இதை வடஇந்தியர்களுக்கோ, தென்னிந்திர்களுக்கோ சொந்த மொழியாக அன்றும் இன்றும் இருந்ததில்லை. நமக்கும் வடமொழிக்கும் உள்ள தூரம் தான், இன்றும் கூட வடமொழிக்கும், வட இந்தியருக்குமுள்ள தூரமாகும்.

அன்னதானம் எண்று தமிழில் சொல்வார்கள் அதையே அந்தணர் பிரசாதம் என்கிறார்கள்...

அருமையாக ஒருத்தர் பிரசாதம் பற்றி பிடித்து கொண்டார்... அதேதான்.. இந்தளவுக்கு தெளிவு இருந்தால் தமிழர் முன்னேறிவிடுவர்... தமிழனை ஒடுக்கும் சிங்களன் எண்டு கொண்டே தங்களை ஒடுக்கும் பார்ப்பணன் எண்டு வேற குரல் கொடுக்க மாட்டார்கள்...

உண்மையிலேயே அந்தணர்களை ஒடுக்குவோம் என்னும் குரல்தான் இங்கை எனக்கு கேட்க்கிறது... ஏனெண்டால் முன்னர் இருந்தவங்கள் எங்களை விட அந்தணர் உயர் சாதி எண்டு போட்டாங்களாம்.. எங்களை விட உயர்வாய் யாராவாது இருக்க விடுவமா நாங்கள்...

கட்ட கோமணம் இல்லை எண்டாலும் நாங்கள் தலைப்பாகை கட்டுவதிலை வல்லவர் என்பதை காட்ட வேண்டாமா...?? பார்ப்பான் ஒளிக...

அடடா திர்த்தத்தை கூட பிரசாதம் எண்ணாது தமிழில் அன்னதானம் எண்ணலாம் போலிருக்கே :rolleyes:

பார்ப்பான் - பிராமணன் - அந்தணன் - ஜய்யர் - ஜய்யங்கர் இவற்றிற்கு மத்தியில் உள்ள ஒற்றுமைகள் வேற்றுமைகள் தெரிந்து தான் பாவிக்கப்படுதா இல்லை பல்லோலக் பல்லேலக்க பாணியில் நடக்குதோ? :o

எந்த நாட்டிலை தீர்த்ததை பிரசாதம் என்கிறார்கள்..?? என்ன கொடுமை சார் இது... !! :o:o:o

விளக்கம் அதிகமானதாலை வந்த வினையா இது... :o

ஏன் தீர்த்தத் தோடு சேர்த்து விபூதி சந்தணம் குங்குமம் பூ எல்லாத்தையும் பொதுவாக பிரசாதம் என்று தான் சொல்கிறார்கள்.

தனிய நக்கிறதுக்கும் தின்னிறதுக்கு தாறதைத்தான் பிரசாதம் என்றது இல்லை. :rolleyes:

அடுத்தமுறை கோயிலுக்கு போகும் பொழுது கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளவும். :P

யார் சொன்னது....?? பிரசாதம் என்பத்து கடவுளுக்கு படைத்த பண்ண்டங்களை.. அதுவும் தானமாக கொடுக்கும் போதுதான்.. அது பிரசாதம். புக்கை, பஞ்சாமிருதம். சுண்டல் எண்டு வாங்கி அடிச்சாப் போதாது அது என்ன எண்டும் தெரிய வேணும்...

தீர்த்தம் எண்டால் தண்ணீர்... பால் திரவமாக கொடுதாலும் அது தீர்த்தம்தான் ... குடித்தால் அது தீர்த்தம்..

இனிமேல் தீர்த்த கரை எண்டு சொல்ல வேண்டாம் பிரசாத கரை எண்டு சொல்லாம்... காசிக்கு திர்த்தம் (கங்கை கரையில் குளிப்பதுக்கு) ஆட போனால் பிரசாதம் ஆட போனார்கள் எண்டு கட்டுரைகள் எழுதுவமப்பா...

விளக்கம் இல்லாமலே கருத்து எழுதுறதிலை நம்மாளுங்க வில்லனுங்கப்பா....

Edited by தயா

கோயில்கள் இருக்கும் மட்டும் பூசகர்கள் தேவையாக இருக்கலாம். ஆனால் பார்ப்பனர்கள் என்பது தேவை இல்லை. பார்ப்பனர்கள் வேண்டும் என்றால் வேறு வேலைகள் பார்த்து சாப்பிடலாம்.

பாரதி சொன்னது போன்று இவர்கள் தண்டச் சோறு உண்பவர்களாக இருக்கிறார்கள். உழைத்து சுயமரியாதையோடு வாழட்டும்.

ஒரு சிறு கூட்டம் தமிழர்களின் இடங்களில் வந்து, தமிழர்களுக்கு பூசை செய்யும் உரிமையை மறுத்து, தமிழில் வழிபடும் உரிமையை மறுத்து, அத்துடன் இந்த அக்கிரமங்களுக்கு தமிழர்களே வக்காலத்து வாங்குவது மாதிரி தமிழர்களை முட்டாள்களும் ஆக்கி வைத்திருக்கின்ற போது, இது கடவுள் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று தன்மானம் உள்ள யாரும் பேசாது இருக்க மாட்டார்கள்.

இந்தியாவின் மற்றைய மொழிகள் நிலை எனக்குத் தெரியாது. ஆனால் தமிழை இந்து மதத்தின் பெயரால் கேவலப்படுத்துவது பற்றி எனக்கு தெரியும்.

கீர்த்தனைகள் என்று வருகின்ற போது தெலுங்கு புனித மொழியாகி விடுகிறது.

வழிபாடு என்று வருகின்ற போது சமஸ்கிருதம் புனித மொழியாகி விடுகிறது.

தமிழ்தான் எப்பொழுது நீச பாசையாகவே இருக்கிறது.

தமிழில் பாடினால், மேடையை கழுவிய பிறகுதான் பாடுவேன் என்று அடம்பிடிக்கும், அடம்பிடித்த பார்ப்பனியப் பாடகர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்படவில்லையா?

தமிழில் வாழிபாடு செய்தால் கோவில் தீட்டாகிவிடும் என்று அடம்பிடிப்பது யார் என்று உங்களுக்கு தெரியாதா?

சம்பந்தர் காலத்திற்கு முன்பே தமிழ் வழிபாட்டிற்கான போராட்டம் ஆரம்பம் ஆகி விட்டது.

ஏதோ இன்றைக்குத்தான் நாம் இதுபற்றி பேசுகிறோம் என்று தவறாக யாரும் நினைக்க வேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.