Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுதம் இல்லாத பொலிஸ் அதிகாரம்; ரணிலுக்கு சி.வி. ஆலோசனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் ஓரு அதிகாரமும் தரமாட்டார்கள். ரணில் அளப்பல் வேலை செய்து கொண்டிருக்கிறார்.மற்றவர்களைக்கதைக்க விடாமல் கதைத்துக் கொண்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதம் தாங்கிய சொறீலங்காப் படைகளையும் படைமுகாம்களையும் வைச்சுக் கொண்டு.. அவற்றின் துணை ஆயுதக் குழுக்களையும் கூட வைச்சுக்கொண்டு.. ஆயுதம் தாங்கிய குண்டர் குழுக்களையும்.. காடையர்களையும் வைச்சுக்கொண்டு.. எப்படி ஆயுதமற்ற பொலிஸ் அதிகாரம் மூலம் திறமையான நீதியான சிவில் நிர்வாகத்தை அமுல்படுத்த முடியும்.. ஒரு முன்னாள் தலைமை நீதிபதிக்கு இது கூடவா புரியவில்லை..??!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

அங்கேயும் தமிழ்ப்பொலிஸுக்கு ஒரு அதிகாரம், சிங்களபொலிஸுக்கு வேறொரு அதிகாரமா? அவர்களும் பொல்லை பாவிக்கட்டும் அப்போ நான் விமர்சகப்போவதில்லை.

பேரத்தில், (குறிப்பாக சிங்களத்துடன்),  ஒரு பக்கத்தால் கொடுத்து இன்னொருபக்கத்தால் எடுக்கவிடாது, அதை அடைத்து , பேர விலகல் வழியை அடைத்து,  தப்பவிடாது, அழுங்குப்பிடி போடும் ஒருவரை முதல் தடவை பார்க்கிறேன். 

இது தான் முதலாவது.  

நீங்கள் யதார்த்ததுடன், வரலாற்றையும் பாடமாக எடுத்து சிந்திக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அரச அதிகாரம் கிடைத்தால்; அவைகளை வெளியேற்ற முடியுமோ என்னோ....?.

3 hours ago, nedukkalapoovan said:

ஆயுதம் தாங்கிய சொறீலங்காப் படைகளையும் படைமுகாம்களையும் வைச்சுக் கொண்டு.. அவற்றின் துணை ஆயுதக் குழுக்களையும் கூட வைச்சுக்கொண்டு.. ஆயுதம் தாங்கிய குண்டர் குழுக்களையும்.. காடையர்களையும் வைச்சுக்கொண்டு.. எப்படி ஆயுதமற்ற பொலிஸ் அதிகாரம் மூலம் திறமையான நீதியான சிவில் நிர்வாகத்தை அமுல்படுத்த முடியும்.. ஒரு முன்னாள் தலைமை நீதிபதிக்கு இது கூடவா புரியவில்லை..??!

 இதைத்தான் நான் கருத்தில் எடுத்து பதிந்தேன், ஆனால் விளங்கப்படுத்த தெரியவில்லை. அப்படி அவைகளை வெளியேற்றவோ அல்லது அவர்களும் பொல்லு தாங்கவோ சிங்களம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. அவர்கள் நம்மை குற்றம் சொல்லி பேச்சு வார்த்தையை குழப்பமுதல் அவர்கள் வைத்த பொறியில் அவர்களை மாட்ட வைக்கும் செயலாக விக்கினேஸ்வரன் ஐயா அப்படி சொல்லியிருக்கலாமோ என்னவோ?

5 hours ago, புலவர் said:

மற்றவர்களைக்கதைக்க விடாமல் கதைத்துக் கொண்டிருக்கிறார்.

அவர்கள் காலங்காலமாக ஆடும் ஆட்டம் காலாவதிஆகிறது மாற்றம் தேவைப்படுகிறது. ஆனால் அதை ஏற்க அவர்கள் தயாரில்லை, ஆகவே தமிழரை கதைக்க விடாமல் தாம் நினைத்ததை திணித்தல் அல்லது அவர்களை குற்றம் சொல்லி கலைத்தல், அந்த பதட்டம், அலட்சியம், கிண்டல்  அவரில் தெரிகிறது. அண்மையில் லண்டன் சென்றிருந்தபோது, தமிழ் உறவுகளை சந்தித்திருந்தார். அங்கே ஒரு உறவு தம் பிரச்சனைகளை தெளிவு படுத்திக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட நரி, உங்களுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால் தமிழில் சொல்லுங்கள் நான் விளங்கிக்கொள்கிறேன் என்று கூறியதும், குறிப்பிட்ட நபர் அவரது வேண்டுகளுக்கிணங்கி தொடரும்போது, அணிலாரின் முகபாவனை அணிலேற விட்ட என்னவோ மாதிரி இருந்தது. அவருக்கு தமிழ் விளங்கவில்லை என்பதையே காட்டியது. மொத்தத்தில் அவரை ஏளனம் செய்ய வெளிக்கிட்டு தன்னை தான் ஏமாற்றிக்கொண்டார்,.ஒரு நாட்டின் தலைவர், பாதிக்கப்ட்ட மக்களை சந்திக்க போகிறார் இன்னொரு நாட்டில், அவர்களின் மொழித்திறமை, தனது புரியும் பிரச்சனை தெரிந்தவர், மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்திருக்க வேண்டுமோ இல்லையோ?தன்னோடு பேசுபவரை கவனிக்க, உற்றுக்கேட்க அவர் கவனம் செலுத்தவில்லை மாறாக அவரை கேலி பண்ணி, மற்றவர்களை சிரிக்க வைத்து, கைத்தட்டு வாங்கி,   தன்னை நகைச்சுவையாளனாகவோ, சிறந்த தலைவனாகவோ காட்ட முயற்சிக்கிறார். தன்னோடு பேசுகிறவருக்கு கவனம் கொடுப்பத்தைவிட்டு, சுற்றியிருப்போரை கவர்வதிலும் பாராட்டு பெறுவதிலுமே அவரது கவனம் செல்கிறது. அவர்களை மகிழ்விப்பதே கவனமாய் இருக்கிறார். இவர் ஒரு தலைவனாக மட்டுமல்ல ஒரு பகுத்தறிவுள்ள மனிதனாக கூட கொள்ள முடியவில்லை. அந்த மக்களின் பிரச்சனையை கேட்பதிலோ தீர்ப்பதிலோ அவர் முயற்சி செலுத்துவதில்லை, தன்னை ஒரு சிறந்த சிங்கள தலைவராக காட்டி, தமிழரை பேச்சுவார்த்தையிலிருந்து விரட்டுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளார். அதில், தான் வென்றுவிட பயமும் பதட்டமும் தட்டிக்கழித்தலும்  அதிகம் காட்டுகிறார். மஹிந்தா, ஆயுதத்தை முறியடித்தால் இவர் பேச்சுவார்த்தையில்தமிழரை முறியடித்து இலங்கையை சிங்கள பௌத்த பூமியாக்கி மாமனாரின் கனவை நனவாக்க முயற்சிக்கிறார். இறுதியில் ஜே .ஆரின் மரணம் அரசியல் தலைவருக்கான மரியாதை கூட செலுத்தப்படவில்லையாம், சந்திரிகாவின் காலத்தில் நடைபெற்றபடியால் தனது தாயாரின் குடியுரிமையை பறித்த பழிவாங்கலாக செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் தம்மை தலைவராக வரலாற்றில் இடம்பிடிக்க நினைத்து செய்வதெல்லாம் எதிரான நிலைப்பாட்டையே பிரதிபலிக்கப்போகுது. மக்கள் மாறுகிறார்கள், மனங்களும் மாறும்! 

6 hours ago, புலவர் said:

மற்றவர்களைக்கதைக்க விடாமல் கதைத்துக் கொண்டிருக்கிறார்.

டக்கியரின் பேட்டிகளை கவனித்தால் புரியும், மற்றவர்களை பேச விடவோ, அவர்கள் பேசுவதை கவனிக்கவோ மாட்டார். தான் பாடமாக்கிக்கொண்டு வந்ததை ஒப்புவிப்பதிலேயே கவனமாக இருப்பார். கேட்போருக்கு எரிச்சலை ஏற்படுத்தும், ஒரு, சபை இங்கிதம் கூடத்தெரியாதவர்கள்!      

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2023 at 18:29, புலவர் said:

May be an image of 1 person and text that says "துப்பாக்கி இல்லாத லத்தியுடன் கூடிய பொலிஸ் அதிகாரத்திற்கு பச்சைக்கொடி"

May be an image of 5 people

அதானே நம்ம கஜே கஜேஸ் F16 விமானம், லெபேர்ட் டாங்கி, கொத்து குண்டு சகிதம் ஒரு பொலீஸ் அதிகாரத்தை ரணிலை மிரட்டி வாங்கும் தறுவாயில், இப்படி இடையில் புகுந்து குட்டையை குழப்பலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2023 at 20:47, nedukkalapoovan said:

ஆயுதம் தாங்கிய சொறீலங்காப் படைகளையும் படைமுகாம்களையும் வைச்சுக் கொண்டு.. அவற்றின் துணை ஆயுதக் குழுக்களையும் கூட வைச்சுக்கொண்டு.. ஆயுதம் தாங்கிய குண்டர் குழுக்களையும்.. காடையர்களையும் வைச்சுக்கொண்டு.. எப்படி ஆயுதமற்ற பொலிஸ் அதிகாரம் மூலம் திறமையான நீதியான சிவில் நிர்வாகத்தை அமுல்படுத்த முடியும்.. ஒரு முன்னாள் தலைமை நீதிபதிக்கு இது கூடவா புரியவில்லை..??!

நியாயமான கேள்விதான்.

மாகாண பொலிஸ் படை அமைந்தவுடனேயே, சிவில் நிர்வாகத்தில் இராணுவ பிரசன்னம் முற்றாக ஒழிக்கபடல் வேண்டும்.

இராணுவம் வரையறைக்கப்பட்ட முகாம்களுக்குள் முடங்க வேண்டும். முதலமைச்சருடன் கலந்தாலோசித்த பின், அவசர கால நடைமுறை அதிகாரத்தின் கீழ் ஜனாதிபதி படைகளை மீள இறக்கலாம்.

மத்திய பொலிஸ் படை - குறித்த வழக்குகளில் (போதை கும்பல், சதி, பயங்கரவாதம்) முதன்மை வகிக்கும்/ தலையிடலாம். ஏனைய வழக்குகளில் தலையிட ஒன்றில் மாகாண பொலிஸ்/ முதல்வர் அனுமதிக்க வேண்டும், அல்லது ஒரு அரசமைப்பு குழுவின் இசைவு வேண்டும்.

இப்படி பலதை கேட்பதன், அடைவதன் மூலம் நாம் “சிங்கள பொலீஸ்”  எமது மக்களின் அன்றாட அலுவல்களில் தலையிடுவதை தவிர்க்கலாம்.

இங்கே நாம் அடைய விழைய வேண்டியது

எமது மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகாரம் செலுத்தும் பொலிஸ் அதிகாரத்தை நாம் கையில் எடுப்பது.

அதை அடைய சில விட்டு கொடுப்புகள், சில பேரம்பேசல்கள், சில காப்புறுதிகள் அவசியமாகிறன.

பிகு

சீவி - உச்ச நீதிமன்ற நீதிபதி. தலைமை நீதிபதியாக (chief justice) வரவில்லை.

On 30/7/2023 at 01:13, satan said:

தைத்தான் நான் கருத்தில் எடுத்து பதிந்தேன், ஆனால் விளங்கப்படுத்த தெரியவில்லை. அப்படி அவைகளை வெளியேற்றவோ அல்லது அவர்களும் பொல்லு தாங்கவோ சிங்களம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. அவர்கள் நம்மை குற்றம் சொல்லி பேச்சு வார்த்தையை குழப்பமுதல் அவர்கள் வைத்த பொறியில் அவர்களை மாட்ட வைக்கும் செயலாக விக்கினேஸ்வரன் ஐயா அப்படி சொல்லியிருக்கலாமோ என்னவோ?

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, goshan_che said:

பிகு

சீவி - உச்ச நீதிமன்ற நீதிபதி. தலைமை நீதிபதியாக (chief justice) வரவில்லை.

பிரதம நீதியரசர் என்பதை தான் தலைமை நீதிபதின்னு எழுதியது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகிய இருவரும் வாக்களிக்கவில்லை.

https://ibctamil.com/article/the-budget-was-completed-a-while-ago-1670506971

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

பிரதம நீதியரசர் என்பதை தான் தலைமை நீதிபதின்னு எழுதியது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகிய இருவரும் வாக்களிக்கவில்லை.

https://ibctamil.com/article/the-budget-was-completed-a-while-ago-1670506971

பிரதம நீதியரசர், தலைமை நீதிபதி இரெண்டும் ஒன்றேதான் - Chief Justice.

சீ வி - உச்சநீதிமன்ற நீதியரசராக இருந்தார். Justice of the Supreme Court.  அதுவும் puisne Justice of the Supreme Court ஆகவே இருந்தார் - இதை தமிழில் மூப்புரிமை (seniority) குறைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி என மொழிபெயர்க்கலாம்.

பிரதம/தலைமை நீதிபதி என்றால் அவர் நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் தலைவர். நாட்டின் அதியுச்ச நீதித்துறை பதவி.

இதுக்கும் திரிக்கும் சம்பந்தமில்லை - ஒரு தகவல் பிழையாக பதியப்படக்கூடாது என்பதால் எழுதினேன்.

பிகு

உங்கள் இணைப்பை பார்த்தால் ஐ பி சி உட்பட பல தமிழ் இணையதளங்கள் இப்படி பிழையாக எழுதுவது புரிகிறது.

தாமும் குழம்பி வாசிப்போரையும் குழப்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபைக்கு ஆயுதம் தாங்கிய பொலீஸ் அதிகாரத்தை ஏன் வழங்கக் கூடாது என்பதற்கு 1987 ஆம் ஆண்டில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்தே சிங்களவர்களால் ஒரு நியாயம் தொடர்ச்சியாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதனை நாம்தான் இதுவரை கண்டுகொள்ளவில்லை.

ஒப்பந்தத்தின்படி, ஒத்துக்கொள்ளப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தப்படும் தறுவாயில் அனைத்துப் போராளி அமைப்புக்களிடமிருந்தும் ஆயுதங்கள் களையப்படும் என்று கூறப்படுகிறது. இதன்பின்னர் சிவில் நிர்வாகம் கொண்டுவரப்பட்டு இராணுவம் 1987 ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த பகுதிகளுக்குள் முடங்கிவிட ஆயுதம் தரித்த பொலீஸார் சிவில் நிர்வாகத்திற்குத் துணையாக இருப்பார்கள் என்பதே ஒப்பந்தம் கூறும் செய்தி.

ஆனால், புலிகளின் ஆயுதங்களால் செய்யமுடியாததை, வடக்குக் கிழக்கு மாகாணசபைக்கு ஆயுத பலம் உள்ள தமிழ் பேசும் பொலீஸாரை வழங்குவதன் மூலம் இந்த மாகாணசபை முறை செய்துவிடுகிறது. அதாவது தமிழர்களின் தனிநாடாகிய "வடக்குக் கிழக்கு - ‍ ஈழத்திற்கு" தமிழ் பேசும் இராணுவத்தை (ஆயுதம் தரித்த தமிழ் பொலீசாரை) இலங்கையரசே அனுமதிப்பதாக இருக்கப்போகிறது என்பதே அவர்களின் வாதம். அவர்கள் இதனை நிச்சயம் செய்ய அனுமதிக்கப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

இந்த வாதத்தை நியாயப்படுத்த அவர்கள் எடுத்து காட்டும் உதாரணம்கள்:

1. வட கிழக்கு மாகாண சபை காலத்தில், அதன் ஆட்சியாளர் இந்திய அனுமதியிடன் உருவாக்கிய டி என் ஏ என்ற (கட்டாய ஆட்சேர்ப்பு) ஆயுதக்குழு

2. பெருமாளின் சுதந்திர பிரகடனம்.

இரெண்டுமே மகா மொக்கு வேலைகள்.

ஆனால் பார்த்தீர்களா? தமிழர் கொஞ்சம் இடம் கொடுத்தால் தனி நாடு என்ற மடத்தை கட்டி விடுவார்கள் என சிங்கள மக்களை மேலும் நம்ப வைக்கவும், சர்வதேசத்தை நம்ப வைக்கவும் இது நன்றாக உதவுகிறது.

ரஞ்சித்,

ஒரு கேள்வி - அது 2035ம் ஆண்டு. உங்களிடம் வடக்கு-மாகாண சபை அதிகாரம் தேர்தல் மூலம் வந்து விடுகிறது.

2035-2040 நீங்கள் நல்ல முறையில் ஆட்சி செய்துள்ளீர்கள். இலங்கை அரசுடன் முட்டல் மோதல் இருந்தாலும் உங்களால் அவர்கள் உதவியுடன் பலதை செய்ய முடிந்தது. வடக்கு-கிழக்கை இணைக்க முடிந்தத்து. கிட்டதட்ட ஒரு confederal state ற்கு உள்ள அதிகாரம் இலங்கயில் வடகிழக்கு மகாண அரசுக்கு வந்து விட்டது.

இப்போ 2042- சீனா எதிர் அமெரிக்க உலக போர் நடக்கிறது. இந்தியா என்ற நாட்டில் மேல் அரைவாசியை பாகிஸ்தான், சீனா பிடித்து பங்கு போட்ட்டுள்ளன. மீதி இந்தியா மொழிவாரியாக தனி நாடுகளாக பிரிந்து விட்டது.

இதில் சில சீனா ஆதரவு, சில அமெரிக்க ஆதரவு.

தமிழ்நாடு என்ற நாடு அமெரிக்கா பக்கம்.

இலங்கை சீனா பக்கம் சாய்ந்து விட்டது.

தமிழ்நாட்டு ஜாதிபதி, அமெரிக்க ஜனாதிபதி இருவரும் உங்களை சென்னையில் சந்தித்து ஒரு கோரிக்கை வைக்கிறார்கள்.

நாளைக்கு நீங்கள் வடகிழக்கை தமிழீழ தனிநாடு என அறிவியுங்கள். நாமும் எமது அணியில் உள்ள 150 நாடுகளும் உங்களை தனிநாடு என அங்கீகரிப்போம். எமது அணியில் சேருங்கள். நேட்டோ போல உங்களை நாம் பாதுகாப்போம். 

உங்கள் முடிவு என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அட கடவுளே!

சரி, இதனை சீரியஸாகவே எடுக்கலாம்.

முதலாவது. சுதந்திரமான, இறையாணமையுள்ள , எமது தாயகம் எமது முழுமையான கட்டுப்பாட்டில் வரக்கூடிய, எமது இருப்பைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய, எம்மை நாமே, வெளிச்சக்திகளின் அழுத்தங்கள் இன்றி, ஆக்கிரமிப்பு அச்சமின்றி ஆளக்கூடிய‌ தனிநாடே எனது முதலாவது தெரிவாக இருக்கும். குறிப்பாக, சிங்கள தேசம் சீனாவின் ஆதரவுடன் எல்லையில் நிற்கும்போது, எம்மைப் பாதுகாத்துக் கொள்ள எமக்கு ஆதரவு தேவை. ஆகவே அமெரிக்க ‍ இந்திய அணியில் சேர்ந்து தனிநாட்டு பிரகடணத்தைச் செய்வதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நீங்கள் தந்திருக்கும் நிபந்தனைகளைன்படி ஒரு முடிவினை எடுக்கவேண்டுமென்றால், எனக்கு இதனைத்தவிர வேறு வழிகள் தெரியவில்லை.

2 hours ago, goshan_che said:

1. வட கிழக்கு மாகாண சபை காலத்தில், அதன் ஆட்சியாளர் இந்திய அனுமதியிடன் உருவாக்கிய டி என் ஏ என்ற (கட்டாய ஆட்சேர்ப்பு) ஆயுதக்குழு

2. பெருமாளின் சுதந்திர பிரகடனம்.

உண்மை.

ஒரு வாதத்திற்காக, தமிழ் தேசிய இராணுவத்தை புலிகள் இயங்க அனுமதித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? இந்தியா தொடர்ந்தும் அதற்கான இராணுவ ஆதரவை வழங்கியிருக்குமா? அப்படியானால் வரதராஜப்பெருமாளின் அரசு இன்றுவரை இயங்கியிருக்குமா? 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

அட கடவுளே!

சரி, இதனை சீரியஸாகவே எடுக்கலாம்.

முதலாவது. சுதந்திரமான, இறையாணமையுள்ள , எமது தாயகம் எமது முழுமையான கட்டுப்பாட்டில் வரக்கூடிய, எமது இருப்பைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய, எம்மை நாமே, வெளிச்சக்திகளின் அழுத்தங்கள் இன்றி, ஆக்கிரமிப்பு அச்சமின்றி ஆளக்கூடிய‌ தனிநாடே எனது முதலாவது தெரிவாக இருக்கும். குறிப்பாக, சிங்கள தேசம் சீனாவின் ஆதரவுடன் எல்லையில் நிற்கும்போது, எம்மைப் பாதுகாத்துக் கொள்ள எமக்கு ஆதரவு தேவை. ஆகவே அமெரிக்க ‍ இந்திய அணியில் சேர்ந்து தனிநாட்டு பிரகடணத்தைச் செய்வதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நீங்கள் தந்திருக்கும் நிபந்தனைகளைன்படி ஒரு முடிவினை எடுக்கவேண்டுமென்றால், எனக்கு இதனைத்தவிர வேறு வழிகள் தெரியவில்லை.

இதைத்தான் நானும் செய்வேன். என் அனுமானத்தில் 9/10 ஈழத்தமிழர் இப்படித்தான் முடிவெடுப்பர்.

இதுதான் சிங்களவரின் கூட்டுப்பயம்.

இப்போ 2023 இல் நாம் ஒரு தீர்வை நோக்கி நகர வேண்டும் என்றால் - இந்த கூட்டுபயத்தை தாஜா செய்ய நாம் முயற்சிக்க வேண்டும்.

தீர்வு சிங்களவரை விட எமக்குத்தான் தேவைப்படுகிறது.

அவர்களுக்கு, இப்போ இருக்கும் நிலையை இழுத்தடித்தாலே அவர்கள் விரும்பும் தீர்வு 20 வருடத்தில் அடையப்பட்டுவிடும்.

6 hours ago, ரஞ்சித் said:

ஒரு வாதத்திற்காக, தமிழ் தேசிய இராணுவத்தை புலிகள் இயங்க அனுமதித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? இந்தியா தொடர்ந்தும் அதற்கான இராணுவ ஆதரவை வழங்கியிருக்குமா? அப்படியானால் வரதராஜப்பெருமாளின் அரசு இன்றுவரை இயங்கியிருக்குமா? 

இல்லை. பெருமாளின் அரசு எப்படியும் கடைசி இந்திய சிப்பாயோடு இறந்து விட்டிருக்கும். புலிகள் செய்திராவிட்டல் இலங்கை படைகள் செய்திருக்கும்.

விபி சிங் அரசு கைகழுவி இருக்கும்.

ஆனால் நாபாவின் இடத்தில் தலைவரும், பெருமாளின் இடத்தில் பாலா அண்ணையும் இருந்து, அதன் பின் டி என் ஏ யை கட்டி எழுப்பி இருந்தால் - அப்போ நிலமை வேறு மாதிரி இருந்திருக்கும்.

புலிகள்-இந்திய மோதல் வந்திராவிட்டால், கருணாநிதி கேட்டு, விபி சிங் அரசு படைகளை விலக்கும் நிலை வந்திராது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆனால் நாபாவின் இடத்தில் தலைவரும், பெருமாளின் இடத்தில் பாலா அண்ணையும் இருந்து, அதன் பின் டி என் ஏ யை கட்டி எழுப்பி இருந்தால் - அப்போ நிலமை வேறு மாதிரி இருந்திருக்கும்.

உண்மை. ஆனால் என்ன செய்வது, எல்லாமே தலைகீழாகிவிட்டது. இந்தியாவோடு மோதும் நிலையினை உருவாக்கிய லலித் அதுலத் முதலி இன்றுவரை எம்மை எதிரிகளாக இருக்க வழிசமைத்துவிட்டுச் சென்றிருக்கிறான். 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13ம் திருத்தம் பற்றி ஒரு விசேட அறிக்கையை பாராளுமன்றில் தாக்கல் செய்வார் என ஐதேக அறிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரம் இல்லையாம்.

https://www.dailymirror.lk/top_story/President-to-make-special-statement-on-13A/155-264344

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.