Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரம்பரை 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 பரம்பரை 

நம் அழகான தமிழில் பரம்பரை என்ற சொல் எப்படி வந்தது? தமிழைப் போல

அர்த்தம் நிறைந்த உறவு முறை எங்கும் காணவில்லை.

 

நாம் (முதலாவது தலைமுறை )

எமது பெற்றார்  2 வது  தலைமுறை )               அப்பா   அம்மா 

அவரது பெற்றார் ..3 ம் தலைமுறை (நமக்கு) பாடடன்   பாட்டி 

அவர்களது பெற்றார்  4 ஆம் தலைமுறை ..பூட்டன்  பூட்டி 

அவர்களதுபெற்றார் 5ஆம் தலைமுறை   ஒட்டன்  ஒட்டி 

அவர்களதுபெற்றார்  6ஆம் தலைமுறை   சேயோன்   சேயோள் 

அவர்களது  பெற்றோர் 7 ஆம் தலைமுறை   பரன்      பரை   

 

 இந்த ஏழு தலைமுறைகளும் பரன் பரை  என அழைக்க படும் .அவை  மருவி  பரம்பரை என்றானது. 
  

  • கருத்துக்கள உறவுகள்

கொப்பாட்டன், கொப்பாட்டி

கோந்துறு, மாந்துறு 

எங்கே? 

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, Kadancha said:

கோந்துறு, மாந்துறு 

இதன் பொருள் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, நன்னிச் சோழன் said:

இதன் பொருள் என்ன?

நான் அறிந்த வரையில், அதாவது நினைவி இருப்பதை இப்பொது சொல்கிறேன் (தெரிந்த முதியவரிடம் விசாரித்து ஏதாவது மாறி  இருந்த்த்தால் சொல்கிறேன்)
  
அப்பா, அம்மா 
அப்பு, ஆச்சி
பூட்டான், பூட்டி  
கொப்பாட்டன், கொப்பாட்டி
கோந்துறு, ---
மாந்துறு,   ---


நான் சிலகாலம் முன் நம்பியது, கோந்துறு, மாந்துறு, ஒரே தலைமுறை ஆனையும், பெண்ணையும், அப்பா-அம்மா போல குறிக்கும் என்று.

ஆனால், அவை அடுத்தடுத்த தலைமுறையை குறிப்பதாக அண்மையில் ஒரு கதையில் வந்தது.
 

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டன், ஒட்டி என்று ஒருபோதும் தலைமுறையை குறிப்பதற்கு வழங்கி இருக்காது இருக்காது என்று நினைக்கிறன்

சிலவேளைகளில், பேச்சு வழக்கில் சில இடங்களில் இருந்து இருக்கலாம்.  

ஒட்டன் (ஒட்டி) என்பது  மிகவும் தாழ்த்துவதாக முடியும், கருத்தை எடுத்தால்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 விக்கிப்பீடியாவிலிருந்து ...........

ஒருவருடைய தாய், தந்தை, பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி, ஓட்டன், ஓட்டி பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், சகோதரர் ஆகியோர் உயிரியல் முறையில் தொடர்பானவர்கள். இவர்களுடைய உறவுகள் இரத்த உறவு எனப்படுகின்றது. ஏற்கனவே இரத்த உறவினரல்லாத ஒருவரை மணம் செய்யும் போது அவருடைய கணவன் அல்லது மனைவியுடன் ஏற்படும் புதிய உறவு முறை மண உறவு ஆகும். அது மட்டுமன்றி மனைவி அல்லது கணவனுடைய உறவினர்களும் இவருக்கு உறவினராகின்றார்கள். இதுவும் மண உறவின் வகைப்பட்டதே. தவிர ஒருவரைத் தத்து எடுத்துக்கொள்வதன் மூலமும் உறவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இத்தகைய உறவுகள் புனைவியல் உறவு எனப்படும். நாம் முதல் தலைமுறை தந்தை/தாய்-இரண்டாம் தலைமுறை பாட்டன்/பாட்டி- முன்றாம் தலைமுறை பூட்டன்/பூட்டி- நான்காம் தலைமுறை ஒட்டன்/ஒட்டி- ஐந்தாம் தலைமுறை சேயோன்/சேயோள்-ஆறாம் தலைமுறை பரன்/பரை-ஏழாம் தலைமுறை 'தடித்த எழுத்துக்கள்'பரன்+பரை=பரம்பரை.

 ஓடடன் ஒட்டி   என்பது மருவி   கிராமிய வழக்கில்  கொப்பாடட ன்    கொப்பாட்டி  என அழைக்கப்பட்டிருக்கலாம்  .

 கொப்பாட்டன் Great_great Grandfather. .

  • கருத்துக்கள உறவுகள்

பர (para) என்பது சமஸ்கிருதம் என அறிகிறேன். 
அதே போல் பரம்பரா என்பதும் வட சொல் என்பதாகவே தெரிகிறது.

https://www.wisdomlib.org/definition/parampara#:~:text=Paramparā (परम्परा) refers to the,Sanskrit verses composed by Śubhacandra.

ஆனால் இந்த சொல் தமிழில் இருந்தே வட மொழிக்கு போனது என்போரும் உளர்.

https://m.facebook.com/watch/?v=316715630058473

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டன், பாட்டி - சம்ஸ்கிருத மயப்பட்டது, அதே போல கொப்பா ட்டான், கொப்பாட்டியும் (தமிழ் சொற்களை தொலைத்து விட்டோம், அப்பு, ஆச்சியை விட்டதால்)

 

அப்பு, ஆச்சி - சரியான தமிழ்.

 

அப்பு என்பதன் அர்த்தம் நீர் (போல் இன்றியமையாத) உறவை கொண்டவர்  அப்பு. கடல் போல் பெரியவர் அப்பு. கடன் - ஆம் இந்த தலைமுறை அப்புவிடம்  கடன் படுகிறது.

 

(அப்பு - வீட்டு வேலைக்காரன் என்பது  பின்பு  வந்தது. உண்மையில், அதன் அர்த்தம் ஆங்கிலத்தில் இருக்கும் breadwinner - தமிழில், வேளாவேளைக்கு குடும்பத்துக்கு உணவு அளிப்பவர்).  

 

ஆச்சி - ஆசானின் மனைவி - அப்பு,  அவரும், ஆச்சியும் சேர்ந்து  உருவாகும் தலைமுறைக்கு அப்பு ஆசான்.  

 

மற்றது - எல்லாவற்றிலும் அகரத்தில் தொடங்குவது. இது தமிழில் மிகவும் முக்கியம். 

மற்றது - எல்லாவற்றிலும் அகரத்தில் தொடங்குவது. இது தமிழில் மிகவும் முக்கியம். 

 

ஏனெனில், அகரத்தில் உகரம் இருப்பது, உகரம் அகரத்திற்கு,  தமிழுக்கு உயிர் கொடுப்பது. உகரத்தால் உயிர் கொடுக்கப்பட்ட அகரம் இறைவன் ஆகிறது (அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு).

 

ஆகவே அப்பா அம்மா,  அப்பு, ஆச்சி என்ற பதங்கள் இறைவனுக்கு சமானம் உள்ளவை. 

 

விக்கிபீடியா ஐ முதல் தரவாக எடுத்து விசாரித்து அறிவது நன்மை.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா, அம்மா
மகன்,  மகள்
அண்ணன், அக்கா
தம்பி, தங்கை
மருமகன் , மருமகள்
அத்தை, அத்திம்பேர்
தாத்தா, பாட்டி
சித்தப்பா, சின்னம்மா
பெரியப்பா, பெரியம்மா

*சில உறவுகளில் உறவு முறையும் அழைக்கும் பெயரும் மாறுபடும்,
உதாரணமாக மாமா, மாமி என்பதில் உறவுமுறையும் அழைக்கும் பெயரும் ஒன்றே
ஆனால் தந்தை, தாய் என்பது  அப்பா, அம்மா என்று வேறுபடும்.

  • கருத்துக்கள உறவுகள்

 இதை சொல்ல மறந்துவிட்டேன்.

 

கோந்துறுவிலும், மாந்துறுவிலும் - பெரிய தன்மை இருக்கிறது  (ஆங்கிலத்தில் great great ...)  


கோ - அரச தன்மை, நிலை  

மா - மிகப் பெரிய தன்மை, நிலை.

 

1 hour ago, நிலாமதி said:

ஓடடன் ஒட்டி   என்பது மருவி   கிராமிய வழக்கில்  கொப்பாடட ன்    கொப்பாட்டி  என அழைக்கப்பட்டிருக்கலாம்  .

 

ஒட்டன், ஒட்டி - பொதுவாக தாழ்ந்த நிலையை குறிப்பது.  ஒட்டி  இருப்பது ஒட்டுண்ணி போல அல்லது மிகவும் நலிந்த நிலை. இதை எவராவது, தலைமுறை வழி தாய், தந்தையை குறிக்க உபயோகித்து இருப்பார்களா?  

ஒட்டன், ஒட்டி - பொதுவாக தாழ்ந்த நிலையை குறிப்பது.  ஒட்டி  இருப்பது ஒட்டுண்ணி போல அல்லது மிகவும் நலிந்த நிலை. இதை எவராவது, தலைமுறை வழி தாய், தந்தையை குறிக்க உபயோகித்து இருப்பார்களா?  

(வரலாற்றின் ஒரு கட்டத்தில்,  ஒட்டன் ஒருவகை ஒப்பீட்டளவில் குறைந்ததாக கருதப்பட்ட சாதியையும் (நிலத்தோட்டி வேலை செய்தவர்கள்)  குறிக்க பயன்படுத்தப்பட்டது.  இதை  சொல்வது சொல்லின் (ஒட்டன்) வரலாற்று பிரோயகத்தை சுட்டுவதற்காக) 

 

எங்காவது வரலாற்று குறிப்புகள் இருந்தால் காட்டவும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

பரன்+பரை=பரம்பரை

இது சரியான புணர்ச்சி என்று உங்களுக்கு தெரியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடன்சா(kadancha )     வணங்கமுடி  கோசன் ... . ஆர்வத்துடன் கலந்து கொள்வது கண்டு   என் மகிழ்ச்சியும் என் நன்றிகளும். 

 

பரம்பரை - என்பது தமிழ் வேர்ச்சொல்லே!

பரனும் பரையும் இணைந்தே பரம்பரை என்ற பெயர் தோன்றியது. பரம்பரை - நம் மூதாதையர் வரிசையில் முதலான மேல்நிலை.

 

இதன் வேர்ச்சொல் விளக்கத்தைப் பார்ப்போம்.

பர் > பர, புர் > புர - ஆகிய மூலங்களில் இருந்து தோன்றிய சொற்கள் பொதுவாக - உயரிய, மேன்மையான, அனைத்திலும் சிறந்த பண்புகளுடன் தொடர்புடைய - பொருள்படுபவற்றினைக் குறித்து அமைந்தவையாகும்.

* பரன் - என்றால் எல்லாவற்றிலும் மேலானவன் ; கடவுள். ( சிவன்).

* பரம்பொருள் = இறைவனை - the Supreme Being, the Ultimate , the highest of highest - ஆகிய பொருள்பட குறிப்பிடும் தமிழ்ச்சொல்லே பரம்பொருள்.

* பரமம் - என்றால் சிறப்பு மிக்கது , மாண்பு மிகுந்த, மகத்துவம் மிக்க , தெய்வீக நிலையைக் குறித்தது. பரம்பொருள் , பரமசிவன் - ஆகியன இறைவனை - அவனின் உச்ச பண்புகளைப் பாராட்டியமைந்த அழகான தமிழ்ப்பெயர்கள்.

* பரம + ஆனந்தம் = பரமானந்தம். (Supreme bliss).

 தகவல்   ...quora   இலிருந்து .

 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

உறவுகள் இரத்த உறவு எனப்படுகின்றது.

இரத்த உறவுகள் என்பது  ஆண் வழித்தோன்றல்களை  தான் குறிக்கும்     இவர்கள் 7 தலைமுறைக்கு  ". உடக்கு. என்று "கடைப்பிடிப்பதுண்டு    பெண்ணின் மூலம்  வரும்  சந்ததிகளுக்கு இந்த உரிமைகள் இல்லை   

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான ஆய்வுகள்........!

ஈழத்தில் பொதுவாக தந்தையை "ஐயா" என்றுதான் அழைப்பது வழக்கம். அடுத்து அப்பப்பா + அம்மம்மா (அப்பா+ஆத்தை).......பின்பு அந்நேரம் லண்டன், சிங்கப்பூர்  போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்களின் பிள்ளைகள் தந்தையை அப்பா என்று அழைப்பதைப் பார்த்து நம்ம ஆட்களும் அப்படியே அழைக்க ஆரம்பித்து அதுவே வழக்கமாகி விட்டது ........தொடருங்கள்.......!   👍

Edited by suvy
சிறு திருத்தம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.