Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நைஜர் ஜனாதிபதியை கைது செய்தது அந்நாட்டு இராணுவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நைஜர் ஜனாதிபதியை கைது செய்தது அந்நாட்டு இராணுவம்!

நைஜர் ஜனாதிபதியை கைது செய்தது அந்நாட்டு இராணுவம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரை இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு கலைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நிறுவனங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நைஜர் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனை அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி ஊடாக பாதுகாப்பு தரப்பினர் மக்களுக்கு அறிவித்தியுள்ளது.

மேலும் நைஜர் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2023/1341810

  • கருத்துக்கள உறவுகள்

நைஜரின் அதிகாரத்தை அந்த நாட்டு இராணுவம் கைப்பற்றியது

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரின் ஆட்சியினை அந்த நாட்டு இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. நைஜரின் அரச தொலைக்காட்சி ஒன்றில், தோன்றி அந்த நாட்டு இராணுவம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

அரசியலமைப்பு கலைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நிறுவனங்களையும் இடைநிறுத்தியுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

நைஜர் ஜனாதிபதி மொஹமட் பாஸ_ம் பாதுகாப்பை உறுதி செய்வதை தவறியுள்ளதாகவும் கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் ஆட்சியில் தொடர்ந்ததாகவும் இராணுவத்தினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நைஜர் ஜனாதிபதி மொஹமட் பாஸ_ம் இராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, அமைச்சுக்களின் தலைவர் நாட்டின் நிறுவனங்களின் பொறுப்புக்களை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வர் என தெரிவிக்கப்படுகின்றது. நிலைமை வழமைக்கு திரும்பும் வரையில், நில மற்றும் வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

அத்துடன் மறு அறிவித்தல் வரையில் நைஜில் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

https://thinakkural.lk/article/265378

  • கருத்துக்கள உறவுகள்

நைஜரில் 'அமெரிக்க ஆதரவு' அதிபரை சிறைப்பிடித்து ஆட்சியைப் கைப்பற்றி ராணுவம்

நைஜர் ஆட்சிக் கவிழ்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நைஜர் அதிபர் மொஹமத் பாஸோம் அவரது பாதுகாப்பு படையினரால் சிறைவைக்கப்பட்டார்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், லாரன்ஸ் பீட்டர்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் அந்நாட்டு ராணுவத்தினர் அதிபரை சிறைப்பிடித்து, ஆட்சியைக் கைப்பற்றிவிட்டதாக தொலைக்காட்சியில் அறிவித்தனர். இது ஆப்பிரிக்க பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலமைப்பை கலைத்துவிட்டதாகவும், அனைத்து நிறுவனங்களையும் இடைநீக்கம் செய்து தேசத்தின் எல்லைகளை மூடிவிட்டதாகவும் ராணுவ வீரர்கள் அறிவித்துள்ளனர்.

புதன்கிழமை (ஜுலை 26) அன்று நைஜர் அதிபர் மொஹமத் பாஸோம் அவரது பாதுகாவலர்களால் சிறைவைக்கப்பட்ட அடுத்த நாளே அந்நாட்டின் ராணுவத்தினர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், நைஜர் அதிபருக்கு தங்களது ஆதரவை தெரிவித்தார். நைஜர் அதிபருடன் தொலைபேசி வாயிலாக பேசிய அவர், அமெரிக்கா அவருக்கு தடையற்ற ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளார்.

 

ஐ.நாவும் அமெரிக்காவும் ஆதரவு

மொஹமத் பாஸும்

பட மூலாதாரம்,MOHAMED BAZOUM/FACEBOOK

 
படக்குறிப்பு,

மேற்கு ஆப்பிரிக்காவில் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நைஜர் ஜனாதிபதி பாஸோம் முக்கிய பங்காற்றியுள்ளார்.

 

ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், அதிபருடன் பேசியதாகவும், நைஜர் நாட்டிற்கு ஐநாவின் முழு ஆதரவை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

மேற்கு ஆபிரிக்காவில் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் நைஜர் அதிபர் பாஸ் முக்கிய பங்காற்றியுள்ளார்.

அண்டை நாடுகளான மாலி மற்றும் புர்கினா பாசோ ஆகியவை சமீபத்திய ஆண்டுகளில் ஜிஹாதி கிளர்ச்சியாளர்களால் உள்நாட்டுப் போரைச் சந்தித்துள்ளன.

அதிபர் பாஸோம் எங்கிருக்கிறார் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவர் நலமாக இருப்பதாக பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் கேத்ரீன் கொலோன்னா வெள்ளியன்று தெரிவித்தார்.

 

எந்த நாடும் இதில் தலையிட வேண்டாம்: ராணுவம்

மக்கள் போராட்டம்

பட மூலாதாரம்,MOHAMED BAZOUM/ FACEBOOK

 
படக்குறிப்பு,

மறு அறிவிப்பு வரும் வரை உள்ளூர் நேரப்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என கர்னல் மேஜ் அப்த்ரமனே அறிவித்தார்.

புதனன்று தொலைக்காட்சி அறிவிப்பில், கர்னல் மேஜ் அமடூ கூறுகையில்: "நாங்கள் ராணுவம், பாதுகாப்புப் படையினர்... இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளோம்.

"பாதுகாப்பு நிலைமையின் தொடர்ச்சியான வீழ்ச்சி, மோசமான பொருளாதார மற்றும் சமூக நிர்வாகத்தின் விளைவு இது," என்றார்.

மேலும், நாட்டின் அனைத்து அமைப்புகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அமைச்சகத்தின் தலைமை அதிகாரிகள் அன்றாட வேலைகளை கவனிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

"அனைத்து நட்பு நாடுகளும் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என்று கூறிய அவர்,"நிலைமை சீராகும் வரை நில மற்றும் வான் எல்லைகள் மூடப்படும்." என்றும் அறிவித்தார்.

மறு அறிவிப்பு வரும் வரை உள்ளூர் நேரப்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

தாயகத்தின் பாதுகாப்புக்கான தேசிய கவுன்சிலுக்கு (சிஎன்எஸ்பி) பாதுகாப்பு படையினர் பணியாற்றுவதாக கூறினார், கர்னல் மேஜ் அப்த்ரமனே.

 

பிரான்ஸ், மேற்கத்திய நாடுகளுக்கு பின்னடைவு

மக்கள் போராட்டம்

பட மூலாதாரம்,MOHAMED BAZOUM/ FACEBOOK

 
படக்குறிப்பு,

இந்த ஆட்சிக்கவிழ்ப்பு, குறுகிய காலத்திற்கு இருந்தால் கூட, நைஜர் நிரந்தர பாதுகாப்பு தளமாக இருக்கும் என நம்ம முடியாது என்பதைக் காட்டுகிறது

சஹேல் என்று அழைக்கப்படும் மேற்கு ஆபிரிக்காவின் பகுதியில் இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கும் பிரெஞ்சு மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் முயற்சிகளுக்கு இந்த ஆட்சிக் கவிழ்ப்பு இன்னும் மோசமான செய்தியாகும்.

அண்டை நாடான மாலி, பிரான்ஸின் பதிலாக ரஷ்யாவின் வாக்னர் குழுமத்துடன் கூட்டுசேர்வதற்கு முடிவெடுத்தபோது, பிரான்ஸ் அதன் செயல்பாட்டு மையத்தை நைஜருக்கு மாற்றியது.

இந்த ஆட்சிக்கவிழ்ப்பு, குறுகிய காலத்திற்கு இருந்தால் கூட, நைஜர் நிரந்தர பாதுகாப்பு தளமாக இருக்கும் என நம்ப முடியாது என்பதைக் காட்டுகிறது. இப்பகுதியில் மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது.

புர்கினா பாசோ, மத்திய ஆபிரிக்க குடியரசு (CAR) மற்றும் மாலி ஆகிய நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் அனைத்துமே மேற்கத்திய படைகளை விட ரஷ்யாவின் மிருகத்தனமான வாக்னர் கூலிப்படைகளுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.

 

அல்-காய்தாவுக்கு என்ன லாபம் ?

மக்கள் போராட்டம்

பட மூலாதாரம்,MOHAMED BAZOUM/ FACEBOOK

 
படக்குறிப்பு,

பாதுகாப்பு படையினர் தொலைக்காட்சி வாயிலாக வெளியிட்ட அறிவிப்பிற்கு பிறகு, அதிபர் பாஸோமையை விடுவிக்குமாறு அமெரிக்கா கோரியிருந்தது.

சிறந்த நிர்வாகத்தை வளர்க்கும் மேற்கத்திய இலக்குகளைப் பின்பற்றுவதை விட, ஆப்பிரிக்காவில் வாக்னர் படையினர், தங்களை வளப்படுத்திக் கொள்ளவும், கிரெம்ளினின் செல்வாக்கை விரிவுபடுத்திக்கொள்ளவும் முடிவு செய்திருந்தனர்.

இப்பகுதியில் உள்ள இரண்டு பெரிய கிளர்ச்சிக் குழுக்களான, ஐ.எஸ். மற்றும் அல்-காய்தாவுக்கு இது ஒரு நல்ல செய்தி. அவர்கள், அரசின் உறுதியற்ற தன்மை, மோசமான நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தியில்தான் வளர்கிறார்கள். எனவே, நைஜரில் நடந்துள்ள மற்றுமொரு ஆட்சிக்கவிழ்ப்பு அவர்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.

பாதுகாப்பு படையினர் தொலைக்காட்சி வாயிலாக வெளியிட்ட அறிவிப்பிற்கு பிறகு, பிளிங்கன், ஜனாதிபதி பாஸூமையை விடுவிக்கக்கோரியிருந்தார்.

நியூசிலாந்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "அதிகாரத்தை வலுக்கட்டாயமாக கைப்பற்றி, அரசியலமைப்பை சீர்குலைக்கும் முயற்சி" என்று கூறினார்.

 

ஆப்ரிக்கப் பொருளாதாரக் கூட்டமைப்பு என்ன சொல்கிறது ?

அண்டை நாடான மாலியில், அதிக ஆயுதம் ஏந்திய ரஷ்ய வாக்னர் கூலிப்படையினர் ஜிஹாதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராடி ராணுவ ஆட்சிக்கு உதவுகிறார்கள்.

ஆப்பிரிக்காவில் ரஷ்ய செல்வாக்கை விரிவுபடுத்துவதில் ஆர்வமுள்ள அதிபர் விளாடிமிர் புதின், வியாழன் அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஆப்பிரிக்க தலைவர்களுக்கு விருந்தளித்தார்.

நைஜரில் "பலத்தால் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாக" மேற்கு ஆப்ரிக்கப் பொருளாதாரக் கூட்டமைப்பான் ஈகோவாஸ் கூறியுள்ளது.

மேற்கு ஆப்ரிக்க மாநிலங்களின் பொருளாதார குழுமத்தின் சார்பில் தலைவர் பட்ரிஸ் டாலன் பேச்சுவார்த்தைக்காக தலைநகர் நியாமே வந்துள்ளார்.

நைஜரில் அரசியலமைப்பு ஒழுங்கை மீட்டெடுக்க தேவையானா "எல்லா வழிகளும்" பயன்படுத்தப்படும் என்று டாலன் கூறினார்.

"எல்லாவற்றையும் அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் செய்யப்படுவதே சிறந்ததாக இருக்கும்".

 

நான்கு முறை ஆட்சிக் கவிழ்ப்பு

முன்னதாக புதன்கிழமை அன்று, நியாமி மக்கள் அதிபருக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கினர்.

ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட வீரர்கள் எதிர்ப்புகளை உடைக்க துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும், நகரம் பெரும்பாலும் அமைதியாக இருந்தது.

நைஜர் இரண்டு இஸ்லாமிய கிளர்ச்சிகளுடன் போராடி வருகிறது - ஒன்று தென்மேற்கில், 2015 இல் மாலியிலிருந்து பரவியது, மற்றொன்று தென்கிழக்கில், வடகிழக்கு நைஜீரியாவை தளமாகக் கொண்ட ஜிஹாதிகளை உள்ளடக்கியது.

2021 இல் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பாஸோம், பிரான்ஸ் மற்றும் பிற மேற்கத்திய நாடுகளுடன் நட்பாக இருந்தார்.

1960 இல் பிரான்ஸ் நாட்டிடமிருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து நைஜர் நாடு சுமார் நான்கு முறை ஆட்சிக் கவிழ்ப்பை சந்தித்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cyjgp83lmlno

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நைஜர் ஜனாதிபதி கைது செய்யப்பட்டமைக்கு ஐ. நா பொதுச்செயலாளர் கண்டனம்

நைஜர் ஜனாதிபதி கைது செய்யப்பட்டமைக்கு ஐ. நா பொதுச்செயலாளர் கண்டனம்

மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜர் நாட்டின் ஜனாதிபதி கைது செய்யப்பட்டுள்ளமைக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரெஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் ஜனநாயகத்துக்கு இடையூறு விளைவிக்கும் என்பதுடன் இது போன்ற ஜனாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை இராணுவத்தினர் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும நைஜர் ஜனாதிபதி Mohamed Bazoum யை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நைஜர் ஜனாதிபதி Mohamed Bazoum ; சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1342122

  • கருத்துக்கள உறவுகள்

2019 இல் ரஸ்ய-ஆபிரிக்க மநாட்டில் 48 சொச்சம் நாடுகள் கலந்து கொண்டன.  2023 இப்போ 17 ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களோடு நடக்கிறது.

மாநாட்டில் கலந்து கொள்ளாத தலைவர்களுக்கு வாக்னர் ஒரு செய்தியை அனுப்பியுள்ளது.

1 hour ago, goshan_che said:

 

மாநாட்டில் கலந்து கொள்ளாத தலைவர்களுக்கு வாக்னர் ஒரு செய்தியை அனுப்பியுள்ளது.

வாக்னர் படை இந்த சதி முயற்சியின் மூலம் தலைவராக வந்தவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளது.

மாலி, பர்கினோ பாசோ  (Burkina Faso)ஆகிய நைகரின் எல்லையில் உள்ள நாடுகளும் மொஸ்கோவிற்கு ஆதரவானவை,

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

வாக்னர் படை இந்த சதி முயற்சியின் மூலம் தலைவராக வந்தவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளது.

மாலி, பர்கினோ பாசோ  (Burkina Faso)ஆகிய நைகரின் எல்லையில் உள்ள நாடுகளும் மொஸ்கோவிற்கு ஆதரவானவை,

ஓம். நவ காலனியத்தில் அமெரிக்காவுக்கு தாமும் சளைத்தோர் அல்ல என ரஸ்யாவும் ஆபிரிக்காவில் நிறுவுகிறது.

ஆனால் இதை சீனா ரசிக்காது.

சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உள்ள பிரிகோசனின் ஹோட்டலில்தான் ஆபிரிக்க தலைவர்கள் தங்கியுள்ளார்களாம். சில அதிகாரிகளை பிரிகோஐன் சந்தித்த படமும் வெளியாகியுள்ளது.

சிங்கள மன்னர்கள் ஏட்டிக்கு போட்டியாக போர்த்துகேயரை நாட்டுக்குள் அழைத்த கதை போலத்தான் இது முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

நைஜர் இராணுவ சதிப்புரட்சி- இராணுவ ரீதியில் தலையிடுவதற்கு மேற்கு ஆபிரிக்க நாடுகள் தீர்மானம்

Published By: RAJEEBAN

05 AUG, 2023 | 11:31 AM
image
 

நைஜர் மீது இராணுவ ரீதியில் தலையிடுவதற்கு மேற்கு ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் திட்டமிடுகின்றனர்.

நைஜரில் கடந்த வாரம் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ள மேற்கு ஆபிரிக்க நாடுகளின் இராணுவ தலைவர்கள் எப்போது எங்கு படையினரை பயன்படுத்துவது என்பது குறித்தும் திட்டமிட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலையீட்டை மேற்கொள்வது குறித்த அனைத்து தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன தேவையான வளங்கள் எப்போது எங்கு பயன்படுத்துவது என்ற தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் என்ற அமைப்பே இது குறித்து தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே இந்த அமைப்பு நைஜெருக்கு எதிராக தடைகளை அறிவித்துள்ளது.

முன்னதாக இந்த நெருக்கடியை சமாதான முறையில் தீர்ப்பதற்கான முயற்சிகளை இந்த அமைப்பு மேற்கொண்டது எனினும் இது பலன் அளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/161664

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு ஆபிரிக்க நாடுகளின் காலக்கெடுவை உதாசீனம் செய்தது நைஜர் - வான்பரப்பை மூடியது

Published By: RAJEEBAN

07 AUG, 2023 | 09:56 AM
image
 

பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதியிடம் மீண்டும் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான  மேற்கு ஆபிரிக்க நாடுகளின் காலக்கெடுவை நிராகரித்துள்ள நைஜரின் இராணுவ தலைவர்கள் தங்கள் வான்பரப்பை மூடியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இந்த அறிவிப்பு வெளியாபகியுள்ளது.

மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்திடமிருந்து அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்துள்ள இராணுவ ஆட்சியாளர்களின் அதிகாரியொருவர் வான்வெளியை மூடுவது குறித்து அறிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/161767

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத வியாபாரிகளுக்கு வேலை வந்து விட்டது. 
இன்னொரு யூக்ரேனை ஆபிரிக்காவில் மேற்கு உருவாக்கி விடும்.
வறுமையில் வாடும் நைஜர் மக்களின் நிலை இன்னும் கவலைக்கு இடமாகப் போகிறது.
பிரான்சின் கனிம பங்கு பிரிப்பு  தொடருமா?

  • கருத்துக்கள உறவுகள்

நைஜரின் பலவீனத்தை பயன்படுத்தும் வாக்னர் கூலிப்படையினர் - ஆண்டனி பிளிங்கன்

9 மணி நேரம் முன்

 

நைஜரில் உள்ள உறுதியற்ற தன்மையை ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையினர் சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் பதவியில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் ஒரு இராணுவ ஆட்சி நடைபெற்று வருகின்றது.

அண்டைய நாடான மாலியில் இருப்பதாக அறியப்படும் வாக்னரிடம் சதித் தலைவர்கள் உதவி கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நைஜரின் ஆட்சிக்கவிழ்ப்பு

நைஜரின் ஆட்சிக்கவிழ்ப்பை ரஷ்யாவோ அல்லது வாக்னரோ தூண்டியதாக தான் நினைக்கவில்லை என்றும் எவ்வாறாயினும், சஹேல் பிராந்தியத்தின் சில பகுதிகளில் ஒருவேளை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் குழுவைப் பற்றி அமெரிக்கா கவலைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த வாக்னர் குழு சென்ற ஒவ்வொரு இடமும், மரணம், அழிவு மற்றும் சுரண்டல் ஆகியவை தொடர்ந்து வந்துள்ளன என்று பிளிங்கன் கூறியுள்ளார்.

நைஜரின் பலவீனத்தை பயன்படுத்தும் வாக்னர் கூலிப்படையினர் - ஆண்டனி பிளிங்கன் | Niger Wagner Advantage Instability Antony Blinken

அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் இரண்டும் நைஜரில் இராணுவ தளங்களை இயக்குகின்றன.

மாலியில் ஏற்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து பிரான்ஸ் துருப்புக்கள் மாலியை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்ட பின்னர் நைஜர் பிரதான தளமாக மாறியுள்ளது.

 ரஷ்யாவின் இராஜதந்திரம் 

மத்திய ஆப்பிரிக்க குடியரசு (CAR) மற்றும் மாலி உள்ளிட்ட நாடுகளில் வாக்னர் ஆயிரக்கணக்கான போராளிகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. அங்கு அது இலாபகரமான வணிக நலன்களைக் கொண்டுள்ளது, ஆனால் ரஷ்யாவின் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துகிறது.

குழுவின் போராளிகள் பலர் ஆப்பிரிக்க நாடுகளில் பரவலாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நைஜரின் பலவீனத்தை பயன்படுத்தும் வாக்னர் கூலிப்படையினர் - ஆண்டனி பிளிங்கன் | Niger Wagner Advantage Instability Antony Blinken

இருந்தபோதிலும், நைஜர் இராணுவம் வாக்னரிடம் உதவி கேட்டுள்ளது, ஏனெனில் நாடு இராணுவத் தலையீட்டின் சாத்தியத்தை எதிர்கொள்கிறது.

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள திரு பாஸூம், ஆப்பிரிக்காவில் வாக்னரின் செல்வாக்கு குறித்தும் தனது கவலைகளை தெரிவித்துள்ளார். 

https://tamilwin.com/article/niger-wagner-advantage-instability-antony-blinken-1691520567

  • கருத்துக்கள உறவுகள்

நைஜர் ஜனாதிபதி பதவி கவிழ்ப்பின் பின்னணியில்...

07 AUG, 2023 | 06:55 PM
image

லத்தீப் பாரூக்

மேற்கு ஆபிரிக்காவில் உப சஹாரா கண்டத்தில் உள்ள முஸ்லிம் நாடான நைஜர் நாட்டின் ஜனாதிபதி மொஹமட் பஸோம், கடந்த ஜூலை 26 புதன்கிழமை அவரது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் பதவியில் இருந்து கவிழ்க்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து 28ஆம் திகதி ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் தலைவர் ஜெனரல் அப்துர் ரஹ்மான் இட்சியானி தன்னை நைஜர் நாட்டின் புதிய தலைவராகப் பிரகடனம் செய்துள்ளார். பாதுகாப்பின்மை, பொருளாதார கஷ்டங்கள் ஊழல் என்பன காரணமாகவே தான் அதிகாரத்தை கைப்பற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இப்போது இந்தப் புதிய தலைவர் எந்த அணியை சார்ந்து நிற்பார் என்பதே மேற்குலக நாடுகளின் கவலையாக மாறி உள்ளது.

சதிப்புரட்சி பற்றிய அறிவிப்பை தொடர்ந்து நைஜரின் தேசிய தொலைக்காட்சியில் மக்களுக்கு உரை நிகழ்த்திய ஜனாதிபதி மொஹமட் பாஸொம் மிகவும் கஷ்டப்பட்டு வென்றெடுக்கப்பட்ட சுதந்திரமும் ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி பஸோம், இஸ்லாமிய ஆயுதபாணிகளுக்கு எதிரான மேற்குலக போராட்டத்தில் முக்கியமானதோர் ஆதரவாளராக இருந்தவர். இவருக்கு தனது முழுமையான ஆதரவு உள்ளதாக அமெரிக்கா அறிவித்த சிறிது நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம், நைஜர் நாட்டுடனான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் அனைத்தையும் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை பிரதானி ஜோஸப் பொரல் அமெரிக்கா மற்றும் பிரான்ஸுடன் இணைந்து நைஜரின் சதிப்புரட்சித் தலைவர்களை நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.

நைஜரை முன்னர் தனது காலணித்துவத்தின் கீழ் வைத்திருந்த பிரான்ஸ், தனது பிராந்திய இராணுவத் தலைமையகத்தை அங்கு வைத்துள்ளது. மாலி நாட்டில் இருந்து பலவந்தமாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்ட பின்பே பிரான்ஸ் தனது பிராந்திய இராணுவ தலைமையகத்தை நைஜருக்கு மாற்றியது. தற்போது சகல விதமான அபிவிருத்தி உதவிகள் மற்றும் வரவு செலவுத் திட்ட ஆதரவுகள் என்பனவற்றை நிறுத்திக் கொள்வதாக பிரான்ஸும் அறிவித்துள்ளது.

இதனிடையே நைஜர் இராணுவம் இன்னும் 15 தினங்களுக்குள் தனது முகாம்களுக்குத் திரும்பி விட வேண்டும் என்று ஆபிரிக்க ஒன்றியமும் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் ஜனாதிபதி பஸோமை தடுத்து வைத்திருப்பவர்கள் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

நைஜரில் பொதிந்துள்ள மிகப் பெரிய அளவிலான யுரேனியம் படிவுகளை சூறையாடுவதற்காக ரஷ்யாவால் அரங்கேற்றப்பட்ட ஒரு சதித் திட்டம் போலவே இது காணப்படுகின்றது. 

ஆபிரிக்க கண்டம் தொடர்பான பிரபல ஆய்வாளரும் டிரகன்பிளய் என்ற பாதுகாப்பு மற்றும் அரசியல் இடர் ஆலோசனை சபையின் நிபுணருமான பிளேவியன் போம்கார்ட்னர் என்பவர் தெரிவித்துள்ள கருத்தில், ஒரு வேளை ஜனாதிபதி மொஹமட் பஸோம் தனது பதவியை இராஜினாமா செய்தால் ரஷ்யாவின் வாக்னர் குழு கூலிப்படையினர் தமது விரிவாக்கத்தை வேண்டி நிற்கும் நாடுகளின் வரிசையில் நைஜர் மிகவும் உயர்ந்த இடத்தை அடையக்கூடும். ஏற்கனவே இந்தக் குழுவின் பார்வை நைஜர் பக்கம் திரும்பி இருந்தது. இதற்கு முக்கிய காரணம் ரஷ்யாவுக்கு மிகவும் வேண்டப்படும் யுரேனியம் மிக அதிகளவில் அங்கு படிந்துள்ளமையாகும். 

ஆனால், தனக்கிருந்த பிரான்ஸ் மற்றும் மேலைத்தேய ஆதரவு காரணமாக ஜனாதிபதி பஸோம் இதற்கு தடையாக இருந்தார் என்று பிளேவியன் போம்கார்ட்னர் தெரிவித்துள்ளார்.

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தனது ஆபிரிக்க பிராந்தியத்தின் காலணித்துவ பிரதேசங்களில் ஒன்றாக நைஜரை பிரான்ஸ் இணைத்திருந்தது. இந்தப் பிரதேசம் பல்வேறு ராஜ்ஜியங்கள் மற்றும் பழங்குடி கோத்திரங்களுக்கு இடையே மோதல்கள் இடம்பெற்று வந்த ஒரு பிரதேசமாகும். 1960ல் நைஜர் முதல் தடவையாக பிரான்ஸிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது.

நைஜரின் சதிப் புரட்சியை ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்.

'சஹாரா பிராந்தியத்தின் தென் பகுதி முழுவதும் மிகவும் பிரச்சினைக்குரிய பிரதேசமாக மாறி உள்ளதை நாம் காண முடிகின்றது. அங்குள்ள சனத் தொகையை பாதிக்கும் மோசமான நிகழ்வுகள் பல இடம்பெறுகின்றன. 

ஆபிரிக்க கண்டத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள மக்கள் தொகையைப் பாதித்து சமாதானத்துக்கும் ஸ்திரப்பாட்டுக்கும் ஆபத்தான நிலைமைகள் உருவாகின்றன' என்று ஐ.நா. செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. மனிதாபிமானச் செயற்பாடுகளும் நைஜரில் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா பேச்சாளர் ஸ்டீபனி டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

நிலத்தால் சூழப்பட்ட நைஜர் வடமேற்கில் அல்ஜீரியாவையும், வடகிழக்கில் லிபியாவையும், கிழக்கில் சாட் நாட்டையும், தெற்கில் நைஜீரியா மற்றும் பெனின் ஆகிய நாடுகளையும், மேற்கில் புர்கினோ பார்ஸோ மற்றும் மாலி ஆகிய நாடுகளையும்; எல்லைகளாகக் கொண்டுள்ளது. இது உலகில் மிகப் பெரிய அளவிலான யுரேனியப் படிவுகளைக் கொண்டுள்ள போதிலும் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். 

வாழ்வாதாரப் பயிர்கள், கால்நடைகள், மூலப் பொருள்களின் ஏற்றுமதி என்பனவற்றை மையப்படுத்திய ஒரு பொருளாதார முறையே இங்கு காணப்படுகின்றது. மேலும் உலகில் அதிகளவு கடன் சுமையைக் கொண்ட ஒரு ஏழை நாடாகவும் நைஜர் காணப்படுகின்றது.

இங்கு வாழும் மக்களுள் 98 வீதமானவர்கள் முஸ்லிம்கள்.சுதந்திரத்துக்குப் பிந்திய நைஜரின் வரலாற்றில் பெரும் பகுதி இரா ணுவ ஆட்சியின் கீழேயே கழிந்துள்ளது. பிரான்ஸி டமிருந்து சுதந்திரம் அடைந்து 33 வருடங்களின் பின் 1993 இல் அங்கு முதல் தடவையாக சுதந்திரமானதும் வெளிப் படையானதுமான தேர்தல் இடம்பெற்றது.

இராணுவ ஆட்சி, சதிப் புரட்சிகள், அரசியல் ஸ்திரமின்மை மற்றும் கிளர்ச்சிகள் என்பனவற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நைஜரில் 2011இல் தான் சிவிலியன் ஆட்சி முறையாக ஸ்தாபிக்கப்பட்டது. இப்பொழுது அந்த நாடு ஓரளவு ஜனாதிபதி அதிகாரம் கொண்ட குடியரசாக உள்ளது. ஜனாதிபதிதான் அந்த நாட்டின் தலைவர். பிரதமர் தலைமையிலான அரசாங்கம் ஒன்று அங்கு உள்ளது.

ஆனால் இந்த நாடு அடிக்கடி ஏற்படும் வரட்சி, கிளர்ச்சிகள், அரச எதிர்ப்பு பேராட்டங்கள், மக்களின் இடப்பெயர்வுகள், பரவலாகக் காணப்படும் வறுமை என்பன காரணமாக அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ள ஒரு பலவீனமான நாடாகவே காணப்படுகின்றது.

கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள இராணுவ அதிகாரிகள் தமது இராணுவ நிலைகளுக்குத் திரும்பி விட வேண்டும் என நைஜரின் வெளியுறவு அமைச்சர் ஹஸோமி மஸோதோ கேட்டுள்ளார்.

இதனிடையே அல்ஜீரியாவில் இருந்து வெளியாகும் செய்திப் பத்திரிகை ஒன்று நைஜர் சதிப் புரட்சியில் ஐக்கிய அரபு அமீரகம் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. 

அல்ஜீரியாவில் இருந்து வெளியாகும் பிரெஞ்சு மொழி பத்திரிகையான Le Soir d'Algerie என்ற பத்திரிகையில் நைஜர் ஜனாதிபதி மொஹமட் பஸோமுக்கு எதிரான சதிப் புரட்சியின் பின்னணியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பங்கு இருக்கலாம் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

'இப்போது சகலரின் பார்வையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நைஜர் நாட்டு தூதுவரின் பக்கம் திரும்பி உள்ளது. அவர்தான் முன்னர் இராணுவத்தின் பிரதான அதிகாரியாக இருந்தவர். பஸோம் அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்கி இருந்தார். 

அவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பது எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

அபுதாபியில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் அவருக்கு தேவையான ஆதரவை வழங்கி இருந்தால் நைஜர் நாட்டின் அதிகார மேசையைப் புரட்டி மாற்றிப் போடும் துணிச்சல் ஏற்படுவது இயல்பு' என்று அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

'அல்ஜீரியாவுக்கு எதிராக அமீரகம் பாதகமான செயல்களைப் புரிந்துள்ளது. இதில் மொரோக்கோ நாட்டுக்கு அமீரகம் வழங்கியுள்ள புலனாய்வுப் பொறிமுறை மிகவும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அல்ஜீரியாவின் செயற்பாடுகளை அந்த நாடு கண்கானிக்க முடியும். இவ்வாறான நெருக்குதல்களைப் பிரயோகித்து ஆபிரிக்காவின் மக்ரேப் பிராந்தியம் எனப்படும் இந்தப் பிராந்திய நாடுகளை இஸ்ரேலுடன் இயல்பு நிலையை ஏற்படுத்த வலியுறுத்தும் வகையில் அவற்றை நசுக்கி பலவீனப்படுத்துவதே அமீரகத்தின் திட்டம்'. இவ்வாறு குறிப்பிட்டுள்ள அல்ஜீரிய பத்திரிகையின் கட்டுரையில் அபுதாபி 'குழப்பங்களின் தலைநகர்' என வர்ணிக்கப்பட்டுள்ளது.

அல்ஜீரிய வெளியுறவு அமைச்சு இந்த சதி முயற்சியை வன்மையாகக் கண்டித்துள்ளது. நாட்டின் அரசியல்சாசனத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள ஏற்றுக் கொள்ள முடியாத தாக்குதல் எனவும், இந்தப் புரட்சி சட்டத்தின் ஆட்சிக்கு தேவைப்படும் விழுமியங்களை மிகவும் பாரதூரமான விதத்தில் மீறும் வகையிலும் அமைந்துள்ளது எனவும் அந்தக் கண்டனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/161830

  • கருத்துக்கள உறவுகள்

நைஜரின் முன்னாள் ஜனாதிபதி தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் - உணவு குடிநீர் முடிவடையும் நிலையில்

Published By: RAJEEBAN

10 AUG, 2023 | 12:00 PM
image
 

நைஜரின் முன்னாள் ஜனாதிபதி மிக மோசமான நிலையில் வாழ்கின்றார் அவரிடமுள்ள உணவு முடிவடையும் நிலையில் உள்ளது என அவரது கட்சி தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்கா அது குறித்து கவலை வெளியிட்டுள்ளது.

26ம் திகதி  இராணுவ சதிப்புரட்சியை தொடர்ந்து ஜனாதிபதி முகமட் பசூமும் அவரது குடும்பத்தினரும் ஜனாதிபதி மாளிகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் அவர் பொதுமக்கள் முன்னிலையில்  காணப்படவில்லை, அதேவேளை அவர் பதவியை இராஜினாமா செய்ய மறுத்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதிகுடும்பம் மின்சாரம் இல்லாத நிலையில் வாழ்வதாகவும் அரிசியும் டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள் மாத்திரம் எஞ்சியிருப்பதாகவும் ஜனாதிபதியின் கட்சி தெரிவித்துள்ளது.

எனினும் அவர் சிறந்த உடல்நிலையில் காணப்படுகின்றார் என அவரது ஆலோசகர்  தெரிவித்துள்ளார்

ஜனாதிபதியின் குடும்பத்தினருக்கான குடிநீரும் குறைவடைகின்றது என அவரின் கட்சி தெரிவித்துள்ளது..

இதனை தொடர்ந்து ஜனாதிபதியின் நிலை குறித்து  அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

நைஜரின் ஜனாதிபதியின் பாதுகாப்பும் உடல்நிலையும் மிகமுக்கியமான விடயங்கள் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/162032

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2023 at 02:51, ஏராளன் said:

நிலத்தால் சூழப்பட்ட நைஜர் வடமேற்கில் அல்ஜீரியாவையும், வடகிழக்கில் லிபியாவையும், கிழக்கில் சாட் நாட்டையும், தெற்கில் நைஜீரியா மற்றும் பெனின் ஆகிய நாடுகளையும், மேற்கில் புர்கினோ பார்ஸோ மற்றும் மாலி ஆகிய நாடுகளையும்; எல்லைகளாகக் கொண்டுள்ளது. இது உலகில் மிகப் பெரிய அளவிலான யுரேனியப் படிவுகளைக் கொண்டுள்ள போதிலும் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். 

 

Niger produced 2020 tU in 2022, just over 4% of world uranium output. Current production is from the open-pit operations of SOMAÏR (Société des Mines de l'Aïr), near the town of Arlit. SOMAÏR is 63.4% owned by French company Orano and 36.66% owned by Sopamin (Société du Patrimoine des Mines du Niger).

நைஜர் 2022 இல் 2020 tU ஐ உற்பத்தி செய்தது, இது உலக யுரேனியம் உற்பத்தியில் 4% மட்டுமே. தற்போதைய உற்பத்தி ஆர்லிட் நகருக்கு அருகில் உள்ள SOMAÏR (Société des Mines de l'Aïr) இன் திறந்த-குழி செயல்பாடுகளில் இருந்து வருகிறது. SOMAÏR 63.4% பிரெஞ்சு நிறுவனமான ஒரானோவுக்குச் சொந்தமானது மற்றும் 36.66% சோபாமினுக்குச் சொந்தமானது (Société du Patrimoine des Mines du Niger).

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுப்படைகள் இறங்கினால் ஜனாதிபதியை போட்டுத்தள்ளுவோம் என நைஜர் தளபதிகள் அமெரிகாவுக்கு அறிவித்துள்ளனராம்.

இதற்கு பெயர்தான்

#புட்டின் டச்🤣

On 8/8/2023 at 13:17, nunavilan said:

ஆயுத வியாபாரிகளுக்கு வேலை வந்து விட்டது. 
இன்னொரு யூக்ரேனை ஆபிரிக்காவில் மேற்கு உருவாக்கி விடும்.
வறுமையில் வாடும் நைஜர் மக்களின் நிலை இன்னும் கவலைக்கு இடமாகப் போகிறது.
பிரான்சின் கனிம பங்கு பிரிப்பு  தொடருமா?

ஓம். நைஜரில் வாக்னரை கொண்டு, இருந்த அரசை இராணுவ சதி புரட்சி மூலம் கவிழ்த்து - ஸ்திரமற்ற தன்மை, பிராந்திய முறுகலுக்கு வழி சமைத்து - அதன் மூலம் ஆயுத வியாபாரிகளுக்கு ஒரு நல்ல சந்தையை திறந்து விட்டுள்ளது ராஸ்யா.

பிரான்சின் கொள்ளை அடிக்கும் கோட்டா முடிந்து விட்டதாம். 

இனி ரஸ்யாவின் கொள்ளை அடிக்கும் காலமாம்🤣.

#வெள்ளைக்காரன், கொள்ளைகாரன்

  • கருத்துக்கள உறவுகள்

நைஜரில் இறங்க போவதாக, அதற்கு படைகளை தயார் நிலைக்கு எடுப்பதாக, மேற்கு ஆபிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு ECOWAS அறிவிப்பு. நைஜீரியாவும் இறங்குகிறதாம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நைஜரில் இறங்க போவதாக, அதற்கு படைகளை தயார் நிலைக்கு எடுப்பதாக, மேற்கு ஆபிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு ECOWAS அறிவிப்பு. நைஜீரியாவும் இறங்குகிறதாம்.

 

 

நைஜீரியா அரசு பின்னடிப்பது தெரியாமல் எந்த செய்தி ஊடகத்தை ஐயா பார்க்கிறீர்கள்? ஓ பீ.பீ.சியா??

41 minutes ago, goshan_che said:

வெளிநாட்டுப்படைகள் இறங்கினால் ஜனாதிபதியை போட்டுத்தள்ளுவோம் என நைஜர் தளபதிகள் அமெரிகாவுக்கு அறிவித்துள்ளனராம்.

இதற்கு பெயர்தான்

#புட்டின் டச்🤣

#காகத்துக்கு கனவிலையும்#

  • கருத்துக்கள உறவுகள்

 

பக்கத்து வீட்டு நண்பி என்ன சொல்கிறார்

 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, nunavilan said:

நைஜீரியா அரசு பின்னடிப்பது தெரியாமல் எந்த செய்தி ஊடகத்தை ஐயா பார்க்கிறீர்கள்? ஓ பீ.பீ.சியா??

ECOWAS அறிவித்ததை நான் இணைத்த வீடியோவில் பார்தீர்கள்தானே?

பிகு

ஓபீபீசி என்றால் என்ன புது ஊடகமா? இல்லை மட்டு வேலை காலியாய் இருந்தா அப்பிளை பண்ணலாம் என யோசிக்கிறேன். இப்ப சும்மாதான் இருக்கிறன்.

 

31 minutes ago, nunavilan said:

#காகத்துக்கு கனவிலையும்#

அண்டங்காக்காயை சொன்னா, சாதா காக்கவுக்கு ஏன் கோவம் வருகுது ?

பிகு

திரியில் கடைசி கருத்துக்கு மேலே உள்ள என் சகல கருத்துக்களும் விடயதானம் பற்றியே இருந்தது - எந்த கருத்தாளரையும் தனிப்பட்டு சீண்டி அல்ல.

ஆனால் யாழ் நிலைக்க வேண்டும் என்ற முயற்சியை பலகீனமாக கருதி சீண்டல் நடப்பின், பதில் அதே வகையிலே வரும். 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளையடித்த மேற்கு நாடுகளை விரட்டியடித்தை அழகிய பேர்கினா  வாசோ(Burkina Faso) , நைஜரின் அயல் நாடு.

 

8 minutes ago, goshan_che said:

அண்டங்காக்காயை சொன்னா, சாதா காக்கவுக்கு ஏன் கோவம் வருகுது ?

அரிசிக்காகத்தின் அவியலாய் இருக்குமோ?? :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு (கொ)வெள்ளைகாரனை , இன்னொரு (கொ)வெள்ளைகாரனால் பிரதியிடும் அழகிய நாடுகள் ஆபிரிக்காவில் உண்டு🤣 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஒரு (கொ)வெள்ளைகாரனை , இன்னொரு (கொ)வெள்ளைகாரனால் பிரதியிடும் அழகிய நாடுகள் ஆபிரிக்காவில் உண்டு🤣 

உதாரணத்துக்கு அமெரிக்கா, பிரான்ஸ் என எடுக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

உதாரணத்துக்கு அமெரிக்கா, பிரான்ஸ் என எடுக்கலாமா?

காகத்துக்கு…..🤣

பிகு

1. எடுக்கலாம். கூடவே ரஸ்யாவையும்

2. கொள்ளை எடுப்பவன் அளவுக்கு, கொள்ளை பொருளை அனுபவிப்பவர்களும் - கொள்ளையர்களே.

 

கொள்ளை அடிக்கும் நாட்டில் அழையா விருந்தாளிகளாக வந்திருந்து, கொள்ளை அடித்த பணத்தை அனுபவிப்பவர்களுக்கு, கொள்ளையை விமர்சிக்கும் தார்மீக உரிமை இருப்பதாக நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

காகத்துக்கு…..🤣

பிகு

1. எடுக்கலாம். கூடவே ரஸ்யாவையும்

2. கொள்ளை எடுப்பவன் அளவுக்கு, கொள்ளை பொருளை அனுபவிப்பவர்களும் - கொள்ளையர்களே.

 

கொள்ளை அடிக்கும் நாட்டில் அழையா விருந்தாளிகளாக வந்திருந்து, கொள்ளை அடித்த பணத்தை அனுபவிப்பவர்களுக்கு, கொள்ளையை விமர்சிக்கும் தார்மீக உரிமை இருப்பதாக நான் நினைக்கவில்லை.

உங்களுக்கு சுதந்திரம் தந்து விட்டோம் என்று விட்டு தொடர்ந்து 50 வருடங்களுக்கு மேலாக  யூரேனியம் போன்ரவற்றை எடுத்து பிரான்சை ஒளியேற்றி ஆபிரிக்காவை (நைஜரை) இருட்டில் விடுபவர்களை எப்படி அழைக்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

நைஜீரிய அதிபர் கூறியதாக, நைஜீரிய ஊடகம் வெளியிட்ட செய்தி.

Niger: If we don’t do it, no one will – Tinubu declares as ECOWAS orders standby force

Ifreke InyangAugust 10, 2023

 

Tinubu.jpeg

President Bola Tinubu of Nigeria has said the Economic Community of West African States (ECOWAS) is committed to ensuring democracy returns to Niger Republic.

Tinubu stated this while delivering his closing remarks at the second ECOWAS extraordinary summit held in Abuja on Thursday.

Top on the agenda was the political impasse in the land-locked country, after the military junta defied the ECOWAS deadline to reinstate President Mohamed Bazoum.

After the deliberations, the bloc resolved to deploy standby military troops to restore constitutional order in Niger.

“We have exhibited great membership, dedication and patriotism and have recognised the danger facing our dear neighbour, Niger,” Tinubu, who is the ECOWAS chairperson, said.

“All is not lost yet. The outcome of this summit is a testament to the power of collaboration and unity. We have reaffirmed our commitment to the people of Niger and the progress of the entire ECOWAS community.

“We will continue with that. And you know I’ll see from the communique of this extraordinary summit that no option is taken off the table, including the use of force as a last resort.

“If we don’t do it, no one else will do it for us. We remain steadfast in our commitment to supporting Niger in the journey towards peaceful democratic stability in the country.”

Tinubu noted that the move will “undoubtedly have challenges” but expressed hope that the unity of the bloc will help to “navigate these obstacles and chart a path towards lasting peace and prosperity for Nigerians and ECOWAS”.

 

https://dailypost.ng/2023/08/10/niger-if-we-dont-do-it-no-one-will-tinubu-declares-as-ecowas-orders-standby-force/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.