Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்குள் - பேராசிரியர் பத்மநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அதன் பொருள் என்ன? 

ஜேசுபிரானின் போதனைகளை பின்பற்றும் சீடர் (disciple) ஆக்கி.

அதாவது கிறைஸ்ட் +இயன் = கிறிஸ்டியன் ஆக்கி.

அதாவது நல்வழிப்படுத்தி.

அதாவது மதம் மாற்றி. 

1 hour ago, satan said:

அந்தக்கட்டளைகள் என்ன? இல்லை; அவற்றை வடிவாக அறிந்தால், ஞானஸ்நானம் பெறலாமே என்று கேட்டேன்.

என்னை பார்த்த என்ன போதகர் மாதிரியா தெரியுது🤣.

கட்டளைகள் என்றால் யேசுபிரானின் போதனைகள். பிரசங்கங்கள்.  ஆபிரகாம் தொட்டு வந்த மூதாதைகளின் வழிகாட்டல்கள்.

பிகு

நான் ஒன்றும் மதமாற்றத்தை அடியோடு வெறுப்பவன் அல்ல.

கட்டாய மத மாற்றம் வேறு, கவர்சி மூலம் மதம் மாற்றுவது வேறு.

எனக்கு உவப்பில்லை எனிலும் கவர்சி மூலம் மதம் மாற்றுவது ஒவ்வொருவரினதும் மத சுதந்திரம் என்பதை ஏற்பவன். 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

யேசுபிரானின் போதனைகள். பிரசங்கங்கள்.

அதுதான் என்னவென்று கேக்கிறேன். இப்படி பொத்தாம் பொதுவாய் சொன்னா எப்படி? கொஞ்சம் விளக்கமாய் கூறுங்களேன்!

23 minutes ago, goshan_che said:

கட்டாய மத மாற்றம் வேறு, கவர்சி மூலம் மதம் மாற்றுவது வேறு.

எப்படி கவர்ச்சி காட்டி மாற்றுவது? கட்டாயம், கவர்ச்சி இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அடித்து வற்புறுத்தி மாற்றுவது? அலங்காரம் பண்ணி கேளிக்கைகள் மூலம்?

24 minutes ago, goshan_che said:

அதாவது கிறைஸ்ட் +இயன் = கிறிஸ்டியன் ஆக்கி.

எப்படி கிறிஸ்தவன் ஆக்குவது? கிறிஸ்தவர்கள் மட்டுமா  நல்வழியில் நடக்கிறார்கள்? அல்லது  நல்வழியில் நடப்பவனெல்லாம் கிறிஸ்தவனா?   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கட்டாய மத மாற்றம் வேறு, கவர்சி மூலம் மதம் மாற்றுவது வேறு.

இவைகளின் வழியாக செய்யப்படும் மதமாற்றம் நிலைத்து நிற்குமா? கவர்ச்சி மாறியவுடன் அவர்கள் தங்கள் பழைய மதத்துக்கே சென்றுவிட்டால்; மதம் மாற்றுபவர்களுக்கு என்ன லாபம்? நீங்கள் சொன்னது போல் அப்போதும்  அவர்களுக்கு ஆண்டவரின் போனஸ் கிடைக்குமா? கட்டாய மதமாற்றம், கவர்ச்சி மூலம். இதை எங்காவது சொல்லியிருக்கிறதா வேதாகமத்தில்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

அதுதான் என்னவென்று கேக்கிறேன். இப்படி பொத்தாம் பொதுவாய் சொன்னா எப்படி? கொஞ்சம் விளக்கமாய் கூறுங்களேன்!

அதுதான் கூறி விட்டேனே நான் போதகர் அல்ல.

 கிறிஸ்தவர்களுக்கு, ஏனையோரையும் நல்வழியாகிய கிறிஸ்து வழிக்கு திரும்பும் படி செய்யுங்கள் என அவர்கள் மதம் சொல்கிறது. இதுவே அவர்கள் மதம் மாற்ற விழைவதின் அடிப்படை என்றேன்.

ஆதாரம் கேட்டீர்கள். பைபிளில் ஜேசுபிரானார் நேரடியாக கூறிய வார்த்தைகள் என சொல்லப்படுவதில் இருந்து ஆதாரம் காட்டி உள்ளேன்.

அதை மறுக்கமுடியாது போனவிடன், ஏதோ Sunday School நடத்தும் போதகரிடம் கேட்பது போல் என்னை ஜேசுபிரானின் போதனைகளை பற்றி கட்டுரை எழுதுமாறு கேட்டால்?

இந்த தேடலை நீங்கள் ஒரு தேவாலயத்தில் சென்று செய்ய வேண்டும். கருத்து களத்தில் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

எப்படி கவர்ச்சி காட்டி மாற்றுவது? கட்டாயம், கவர்ச்சி இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அடித்து வற்புறுத்தி மாற்றுவது? அலங்காரம் பண்ணி கேளிக்கைகள் மூலம்?

கவர்ச்சி பலவகைப்படும்.

தமது மதத்தின் போதனைகளை பற்றி எடுத்து சொல்லி, அதன் மேன்மையை விளக்கி கவர்சியை உண்டு பண்ணலாம்.

இப்போ இருக்கும் மதத்தில் இருக்கும் தீமை, முரண்பாடுகளை எடுத்து சொல்லி கவர்சியை உண்டு பண்ணலாம்.

கல்வி, தொழில் வாய்ப்பு அதிகரிக்கும், ஆட்சியாளர் அனுக்கிரகம் கிடைக்கும் இதை எடுத்து சொல்லி கவர்சியை உண்டு பண்ணலாம்.

பிள்ளையை இழந்து தாங்கொணா துயரில் இருக்கும் பெற்றாருக்கு, அந்த துயரை எதிர்கொள்ள ஒரு ஊன்றுகோலாக மதத்தை முன்நிறுத்தி  கவர்சியை உண்டு பண்ணலாம்.

அதே போல் கட்டாய மதமாற்றமும் பலவகை படும். யசிதிகளுக்கு ஐ எஸ் செய்வது போல் மதம் மாறாவிட்டால் கொல்வது ஒரு முறை.

ஒரு நாட்டை ஆக்கிரமித்து, ஏனைய மத ஸ்தலங்களை இடித்து, அந்த இடத்தில் எமது ஸ்தலங்களை கட்டி, அந்த மதத்தை தடை செய்து, அந்த மதத்தை பின் பற்றுவோர் வாழமுடியாத சூழலை ஏற்படுத்துவதும் கட்டாய மதமாற்றமே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

அதுதான் கூறி விட்டேனே நான் போதகர் அல்ல.

 கிறிஸ்தவர்களுக்கு, ஏனையோரையும் நல்வழியாகிய கிறிஸ்து வழிக்கு திரும்பும் படி செய்யுங்கள் என அவர்கள் மதம் சொல்கிறது. இதுவே அவர்கள் மதம் மாற்ற விழைவதின் அடிப்படை என்றேன்.

ஆதாரம் கேட்டீர்கள். பைபிளில் ஜேசுபிரானார் நேரடியாக கூறிய வார்த்தைகள் என சொல்லப்படுவதில் இருந்து ஆதாரம் காட்டி உள்ளேன்.

அதை மறுக்கமுடியாது போனவிடன், ஏதோ Sunday School நடத்தும் போதகரிடம் கேட்பது போல் என்னை ஜேசுபிரானின் போதனைகளை பற்றி கட்டுரை எழுதுமாறு கேட்டால்?

இந்த தேடலை நீங்கள் ஒரு தேவாலயத்தில் சென்று செய்ய வேண்டும். கருத்து களத்தில் அல்ல.

கடைசில சர்ச் ஒன்றும் கோவில் ஒன்றும் கட்டணும் போல திரியுல  இப்படித்தான் நாம இழுபட்டு  கிடக்கிறம்

பிரச்சினைக்குரிய தீர்வை காணாம இன்னொரு பிரச்சினையை கொண்டு வந்து சொருகுவது 

பிள்ளைகளூக்கு விருப்பமான பாடத்தை பிள்ளையை படிக்க விடுவதில்லை பெற்றோருக்காக பிள்ளை படிக்க வெளிக்கிட பல்கலைக்கழகத்திற்கும் ,கல்லூரிக்கு செல்வதற்குமான ரிசல்ட் கிடைக்காமையால் பிள்ளை அலைய வேண்டிய பிற தேவைகளுக்கு அடிமையாக வேண்டியது 

விருப்பமான பாடங்கள் தற்போது இணைப்பாடங்களை அதிகமாக சேர்த்திருக்கிறது ஆனால் படிக்காமல் இஞ்சினியர் , வைத்தியர் என்ற கனவுக்குள் பிள்ளையை இறக்கி விடுவது இன்று வரைக்கும் பல்கலைக்கழகத்தில் இறந்த பிள்ளைகளின் எண்ணீக்கையை வைத்துப்பார்த்தால் தெரியும் , புரியும் இரு நாட்களுக்கு முன்னர் பட்டம்பெற்ற மாணவி உயிரிழந்தார் தந்தைக்கும் தாய்க்கும் உள்ள பிரச்சினையால் இது எத்தனை பேருக்கு தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

எப்படி கிறிஸ்தவன் ஆக்குவது? கிறிஸ்தவர்கள் மட்டுமா  நல்வழியில் நடக்கிறார்கள்? அல்லது  நல்வழியில் நடப்பவனெல்லாம் கிறிஸ்தவனா?   

1. கிறிஸ்தவ போதனைகளை ஏற்று கொண்டு, ஞானஸ்தானம் முதலிய சம்பிரதாயங்களை கைக்கொண்டு, சிலர் பெயரையும் மாற்றி கொண்டு கிறிஸ்தவர் ஆகுவார்கள் (போதனையின் பலனாக அல்லது தாமாக தேடி அறிந்து).

இலங்கையில் இருந்து வரும் பத்திரிகைகளில் சிறு விளம்பர பகுதியில்…அடிக்கடி இப்படி மாறியோர் கொடுக்கும் சட்ட அறிவிப்பு வரும்.

2. இல்லை, நல்வழியில் நடக்க எந்த மதமும் தேவை இல்லை.  சரி, பிழை உணர்த்தும் தார்மீக திசைகாட்டி பழுதுபடாமல் இருந்தால் போதும்.  ஆனால் ஒவ்வொரு மதத்தினரும், தத்தம் வழி மட்டுமே நல்வழி என நம்புகிறார்கள். நம்பவைக்கப்படுகிறார்கள். அதை பரப்பி ஏனையோரையும் இருக்கும் ஒரே நல்வழிக்கு திருப்பி விட எத்தனிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

இவைகளின் வழியாக செய்யப்படும் மதமாற்றம் நிலைத்து நிற்குமா?

இது நீங்கள் “கவர்சி” என்பதை மேலோட்டமாக விளங்கி கொள்வதால் வரும் குழப்பம். கவர்சி என்பதை நான் மேலே சொல்லி உள்ள பரந்த கோணத்தில் விளங்கி கொண்டால் - ஆம் நிலைத்து நிற்கும். 

ஜேசு பிரானின் முதல் 12 சீடர்கள் கூட அவரின் மகத்தான போதனைகளால் கவரப்பட்டே கிறிஸ்தவர் ஆகினர். 

3 hours ago, satan said:

கவர்ச்சி மாறியவுடன் அவர்கள் தங்கள் பழைய மதத்துக்கே சென்றுவிட்டால்; மதம் மாற்றுபவர்களுக்கு என்ன லாபம்? நீங்கள் சொன்னது போல் அப்போதும்  அவர்களுக்கு ஆண்டவரின் போனஸ் கிடைக்குமா? 

கிடைக்கும். மேலே சொன்ன வேதாகம வார்த்தைகளை மீள ஒருதரம் வாசிக்கவும். அதில் “என் சீடர் ஆக்குங்கள்” என்பது மட்டுமே சொல்லபட்டுள்ளது.

ஒரு நல்ல கிறிஸ்தவன் நற்செய்தியை பரப்ப முயன்றாலே போதும். அதன் பலாபலன் எப்படி இருந்தாலும், அது பொருட்டில்லை. தனது இறை ஊழியத்தை, அதாவது நற்செய்தியை அடுத்தவருக்கும் பரப்புவதை, இதய சுத்தியுடன் செய்வது மட்டுமே அவனிடம் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே போனஸ் கரண்டீட்.

3 hours ago, satan said:

கட்டாய மதமாற்றம், கவர்ச்சி மூலம். இதை எங்காவது சொல்லியிருக்கிறதா வேதாகமத்தில்?

நான் அறிய எப்படி மதம் மாற்றுவது என்ற practical instructions எதுவும் வேதாகமத்தில் இருப்பதாக தெரியவில்லை.

வேதாகமம் சீடராக்குங்கள் என்ற செய்தியை/உத்தரவை மட்டுமே கொடுக்கிறது.

அதை எப்படி நடைமுறைபடுத்துவது என்பது - அவரவர் முடிவுக்கு விடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

கருணயாளர் ஜேசு பிரான், கட்டாயப்படுத்தி என் வழிக்கு மாற்றுங்கள் என சொல்லி இருக்க வாய்ப்பில்லை. ஆனால் கிறிஸ்தவத்கை நிறுவனமயப்படுத்திய போலுக்கு பின்னான காலத்தில் - கட்டாயமும் ஒரு வழியாக கைக்கொள்ளப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கடைசில சர்ச் ஒன்றும் கோவில் ஒன்றும் கட்டணும் போல திரியுல  இப்படித்தான் நாம இழுபட்டு  கிடக்கிறம்

பிரச்சினைக்குரிய தீர்வை காணாம இன்னொரு பிரச்சினையை கொண்டு வந்து சொருகுவது 

பிள்ளைகளூக்கு விருப்பமான பாடத்தை பிள்ளையை படிக்க விடுவதில்லை பெற்றோருக்காக பிள்ளை படிக்க வெளிக்கிட பல்கலைக்கழகத்திற்கும் ,கல்லூரிக்கு செல்வதற்குமான ரிசல்ட் கிடைக்காமையால் பிள்ளை அலைய வேண்டிய பிற தேவைகளுக்கு அடிமையாக வேண்டியது 

விருப்பமான பாடங்கள் தற்போது இணைப்பாடங்களை அதிகமாக சேர்த்திருக்கிறது ஆனால் படிக்காமல் இஞ்சினியர் , வைத்தியர் என்ற கனவுக்குள் பிள்ளையை இறக்கி விடுவது இன்று வரைக்கும் பல்கலைக்கழகத்தில் இறந்த பிள்ளைகளின் எண்ணீக்கையை வைத்துப்பார்த்தால் தெரியும் , புரியும் இரு நாட்களுக்கு முன்னர் பட்டம்பெற்ற மாணவி உயிரிழந்தார் தந்தைக்கும் தாய்க்கும் உள்ள பிரச்சினையால் இது எத்தனை பேருக்கு தெரியும் 

உண்மைதான்.

திருகோணமலையில் தமிழர் பெருந்தொகையில் முஸ்லிம் ஆக மதம் மாற்றப்பட்டனர் என்பது உண்மையா என ஒருவர் கேட்க….

இல்லை…நான் அறிய “வழமையாக நடக்கும்” மதமாற்றம்தான் அங்கும் என எழுதினேன். எந்த மதத்தையும் சுட்டாமல்.

ஆனால் @satan க்கு அது எங்கோ சுட்டு விட்டது. 

விளக்கம் கோரி, விளக்கத்துக்கு விளக்கம் கோரி திரி நீள்கிறது.

திரிக்கு சம்பந்தம் இல்லா விடினும், தேவையான ஒரு விடயத்தை, சற்று ஆழமாக, கண்ணியமாக இருவரும் உரையாடியுள்ளோம் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேராசிரியர் பத்திரிக்கை யாளர்களை கூட்டி திருகோணமலையில் பெருந்தொகையான தமிழர்கள் முஸ்லீம்களாக மாறிவிட்டார்கள் என்று இல்லாததை சொல்லி ஏத்திவிடுவது தவறு.

கோஷான் சேயின் மத விளக்கங்கள் அவசியமானவை.

51 minutes ago, goshan_che said:

நல்வழியில் நடக்க எந்த மதமும் தேவை இல்லை.  சரி, பிழை உணர்த்தும் தார்மீக திசைகாட்டி பழுதுபடாமல் இருந்தால் போதும்.  

👌

ஆன்மிகம் வழிந்தோடும் இந்தியா இலங்கை பாக்கிஸ்தானில் தான் 99.9 வீதம் நல்வழியில் நடப்போர்,நல்லவர்கள் வாழ்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

கருணயாளர் ஜேசு பிரான், கட்டாயப்படுத்தி என் வழிக்கு மாற்றுங்கள் என சொல்லி இருக்க வாய்ப்பில்லை.

அப்போ..... கட்டாய, கவர்ச்சி மதமாற்றம் பற்றி எங்குமே வேதாகமத்தில் சொல்லியிருக்கவில்லை.

21 hours ago, goshan_che said:

தமது மதத்தின் போதனைகளை பற்றி எடுத்து சொல்லி, அதன் மேன்மையை விளக்கி கவர்சியை உண்டு பண்ணலாம்.

இப்போ இருக்கும் மதத்தில் இருக்கும் தீமை, முரண்பாடுகளை எடுத்து சொல்லி கவர்சியை உண்டு பண்ணலாம்.

தெளிவு படுத்தல், விளக்குதல், அறிவூட்டல்,  என்று கொள்ளலாமா? 

இதற்கு ஆசைப்பட்டுத்தான் அந்தமான் தீவில் போய் அம்படி வாங்கி இறந்தார் ஒரு பாதிரியார்.

அந்தமானுக்கெல்லாம் போக வேண்டாம், உயிர்த்த ஞாயிறு அன்று ஆலயத்தில் வழிபாடு செலுத்தியதை தவிர யாதொரு குற்றமுமறியா கொலை செய்யப்பட்ட மக்களும், மன்னாரில் மதத்தை தழுவிய குற்றத்திற்காக கொலை செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் அடங்கும்!

அவ்ர் தன் சீடரை அனுப்பிய போது கூறியவை,  "புறப்பட்டு போங்கள், ஓநாய்களிடையேஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன், பணப்பையோ, வேறு பையோ, மிதியடிகளோ எதுவும் எடுத்துச் செல்ல வேண்டாம். வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்தவேண்டாம், நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும் இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக என முதலில் கூறுங்கள், அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால் நீங்கள் வாழ்த்திக்கூறிய அமைதி அவரிடம் தங்கும், இல்லையேல் அது உங்களிடமே திரும்பிவிடும். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால், உங்களுக்கு பரிமாறுவதை உண்ணுங்கள், அங்கு உடல் நலம் குன்றியோரை குணமாக்கி இறையாட்சி அவர்களை நெருங்கி வந்து விட்டது எனச் சொல்லுங்கள்.........." என்றார். 

"தம் சிலுவையை சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது."

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

அப்போ..... கட்டாய, கவர்ச்சி மதமாற்றம் பற்றி எங்குமே வேதாகமத்தில் சொல்லியிருக்கவில்லை.

நான் வேதாகமத்தில் இப்படி சொல்லி இருப்பதாக எங்கும் சொல்லவில்லை.

நான் சொல்லாத ஒன்றை, சொல்லபடவில்லை என ஏன் நீங்கள் நிறுவுகிறீர்கள் என்பது அந்த கர்த்தருக்கே வெளிச்சம்.

ஆனால் மேலே “கட்டாய மதமாற்றம்” என நான் வரைவிலக்கணப்படுத்தி உள்ள வகையில் - வேற்று மதத்தவர் கிறிஸ்தவராக மாற்றப்பட்டனர் என்பதற்கு எமது நாட்டிலேயே வரலாற்று ஆதாரம் உண்டு.

அதே போல் நான் “கவர்சி மதமாற்றம்” என வரைவிலக்கணபடுத்திய வகையில் - இன்றும் கிறிஸ்தவத்துக்கு மாற்றும் நடவடிக்கைகள் எமது நாட்டிலும், வெளிநாட்டிலும் தொடர்கிறன.

  • கருத்துக்கள உறவுகள்

வேதாகமம்.

எனது சீடராக்குங்கள் =நல்வழி படுத்துங்கள் = கிறிஸ்தவராக்குங்கள் = மதம்மாற்றுங்கள் என சொன்னது.

ஆனால் எப்படி அதை செய்வது என்ற செய்முறை விளக்கத்தை கொடுக்கவில்லை.

செய்முறையை - மதம் மாற்றுபவர்களின் முடிவுக்கு விட்டு விட்டது. அவர்கள் தமக்கு தருணத்துக்கு தோதான கட்டாய அல்லது கவர்ச்சி முறைகளை கை கொண்டனர்.

போர்த்துகீசரின் கையில் இலங்கையின் அதிகாரம் இருந்த போது கட்டாயமுறையையும், பெளத்தர் கையில் இருக்கும் போது கவர்சியையும் கைக்கொள்கிறனர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

அந்தமானுக்கெல்லாம் போக வேண்டாம், உயிர்த்த ஞாயிறு அன்று ஆலயத்தில் வழிபாடு செலுத்தியதை தவிர யாதொரு குற்றமுமறியா கொலை செய்யப்பட்ட மக்களும், மன்னாரில் மதத்தை தழுவிய குற்றத்திற்காக கொலை செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் அடங்கும்!

இல்லை 👆🏼 இவர்கள் கிறிஸ்தவ மதத்தை தழுவியமைக்காக கொல்லப்பட்ட அப்பாவிகள்.

அந்தமான் பாதிரியார் அப்படி அல்ல. அவரை பழங்குடிகள் அவர் கிறிஸ்தவர் என்பதால் கொல்லவில்லை.

மாறாக வெளியுலக தொடர்பில்லாமல், அப்படி தொடர்பு ஏற்படுத்த முயல்வோரை கொல்லும், கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையா என்றே தெரியாத இந்த மனிதர்களை கிறிஸ்து வழிக்கு திருப்பி விடவேண்டும் என்ற ஊழிய-உந்தல் மேலிட்டதால் இவர் அவர்களை நெருங்கி அம்படி வாங்கி இறந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

அவ்ர் தன் சீடரை அனுப்பிய போது கூறியவை,  "புறப்பட்டு போங்கள், ஓநாய்களிடையேஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன், பணப்பையோ, வேறு பையோ, மிதியடிகளோ எதுவும் எடுத்துச் செல்ல வேண்டாம். வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்தவேண்டாம், நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும் இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக என முதலில் கூறுங்கள், அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால் நீங்கள் வாழ்த்திக்கூறிய அமைதி அவரிடம் தங்கும், இல்லையேல் அது உங்களிடமே திரும்பிவிடும். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால், உங்களுக்கு பரிமாறுவதை உண்ணுங்கள், அங்கு உடல் நலம் குன்றியோரை குணமாக்கி இறையாட்சி அவர்களை நெருங்கி வந்து விட்டது எனச் சொல்லுங்கள்.........." என்றார். 

"தம் சிலுவையை சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது."

இப்படி யேசுபிரான் கூறியது,  அவரின் சமகாலத்தில், கிறிஸ்தவம் ஒரு ஒடுக்கப்பட்ட மதமாக, புனிதபூமி பேகன் நம்பிக்கையுடைய ரோமர்களின் ஆட்சியின் கீழ் இருந்த காலத்தில்.

அந்த காலத்தில் அவர் தனது சீடர்களுக்கு கொடுத்த தற்காத்து கொண்டே, கிறிஸ்தவ நற் செய்தியை பரப்புவது எப்படி என சொல்லியதுதான் இது.

ஆனால் யேசுபிரானுக்கு பின், புனிதர் போல் கிறிஸ்தவதத்தை நிறுவன மயப்படுத்தி, அது பின்னாளில் ரோம, கிரேக்க ஆட்சி மதமாகி, நிறுவன தலைமையகம் வத்திகான் என்றாகி, சர்வ ஐரோப்பிய அரச, ஆட்சி மையங்களும் பாப்பரசரின் ஆசியின் கீழ் வந்து - அதன் மூலம் உலகின் பல பகுதிகளுக்கும் வத்திகானின் ஆளுமை பரவிய போது - இப்படி “பயந்து பயந்து” கிறீஸ்தவ நற்செய்தியை பரப்ப வேண்டிய தேவை கிறிஸ்தவ போதகருக்கு இருக்கவில்லை.

அப்படி அவர்கள் “பயந்து பயந்து” பரப்பவில்லை என்பது வரலாறு.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

தெளிவு படுத்தல், விளக்குதல், அறிவூட்டல்,  என்று கொள்ளலாமா? 

நிச்சயமாக.

ஏன் கிறிஸ்தவம் நல் வழி என்ற தெளிவுபடுத்தல்.

நீங்கள் இப்போ இருக்கும் மதம் ஏன் நல் வழி இல்லை என்ற விளக்குதல்.

ஏன் கிறிஸ்தவம் மட்டுமே உண்மையான இறை வழி என்ற அறிவூட்டல்.

இவற்றுக்கான பொதுப்பதம் = மதமாற்றம்.

பொது வெளியில் மதம் புகுந்தால் பிரச்சனைகளையே உருவாக்கும் என்பதற்கு இன்னொரு உதாரணம். அரசியல் கல்வி மற்றும் ஏனைய பொதுக் கட்டுமானங்களிலிருந்து மதம் ஒதுக்கப்படும் வரை இலங்கைக்கு விமோசனம் கிடையாது. இலங்கை மட்டுமல்ல உலகின் எல்லா நடுகளுக்கும் இது பொருந்தும். பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் போன்று மத அடையாளங்களையோ கருத்துக்களையோ பொது வெளியில் தடை செய்யப்பட வேண்டும். தனியார் கத்தோலிக்க பாடசலைகளில்கூட மதக் கல்வியையும் பிரார்த்தனைகளையும் மதத்தை ஏற்காதவர்களுக்கு இடையூறாக இல்லாமல் ஒதுக்கியே வைத்துள்ளனர்.

அவரவர் தங்கள் மதங்களைப் பாதுகாப்பதுதான் முக்கிய கருமமாகக் கருதும்வரை வேறு எதிலும் முன்னேற்றம் ஏற்படாது. 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, இணையவன் said:

சிறப்பான உண்மை 👍
 
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, இணையவன் said:

தனியார் கத்தோலிக்க பாடசலைகளில்கூட மதக் கல்வியையும் பிரார்த்தனைகளையும் மதத்தை ஏற்காதவர்களுக்கு இடையூறாக இல்லாமல் ஒதுக்கியே வைத்துள்ளனர்.

என் மதத்தை நான் உயர்வாக, புனிதமாக ஏற்றுக்கொண்டால் மற்றைய மதங்களுக்கும் மதிப்பு கொடுக்க தோன்றும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. அல்லாமல் அவர்களும் தங்கள் பிராத்தனைகளை  தங்கள் முறையில்   மேற்கொள்ள இடம் வகுத்தும் கொடுத்துள்ளனர்.   

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2023 at 16:36, goshan_che said:

நான் சொல்லாத ஒன்றை, சொல்லபடவில்லை என ஏன் நீங்கள் நிறுவுகிறீர்கள்

நானும் நீங்களுந்தான் இங்கு கருத்து பரிமாறினாலும், இதை வாசிப்பவர்களுக்கும் தெளிவு பிறக்கும் என்பதற்காகவே நிட்சயப்படுத்திக்கொண்டேன்.

வேதத்தை (மறை) போதித்தமைக்காக,  தழுவிய வேதத்தை மறுதலிக்க மறுத்தமைக்காக, வேதத்துக்காக, அந்த மறையை சார்ந்தவர்களுக்கு உதவியதற்காக, வழிபாடு செலுத்தியமைக்காக கொலை செய்யப்படுபவர்கள் (மறைசாட்சிகள்) வேதசாட்சிகள் என அழைக்கப்படுவதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

நானும் நீங்களுந்தான் இங்கு கருத்து பரிமாறினாலும், இதை வாசிப்பவர்களுக்கும் தெளிவு பிறக்கும் என்பதற்காகவே நிட்சயப்படுத்திக்கொண்டேன்.

வேதத்தை (மறை) போதித்தமைக்காக,  தழுவிய வேதத்தை மறுதலிக்க மறுத்தமைக்காக, வேதத்துக்காக, அந்த மறையை சார்ந்தவர்களுக்கு உதவியதற்காக, வழிபாடு செலுத்தியமைக்காக கொலை செய்யப்படுபவர்கள் (மறைசாட்சிகள்) வேதசாட்சிகள் என அழைக்கப்படுவதுண்டு.

விடயத்தை மேலும் விளங்கபடுத்த எடுத்த முனைப்பு என்பதை ஏற்று கொள்கிறேன். 

விளக்கியமைக்கு நன்றியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.