Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பதிலளித்த அனைவருக்கும் நன்றிகள்.

நன்னி

இன்னுமொரு வேண்டுகோள்  இராணுவ பதவிநிலைகளை ( உ+ம் லெப்டினன்ட்,கப்டன் போன்ற) புலிகள் எப்படி பேணினார்களோ அப்படியே பதிவிடுங்கள் எந்த மாற்றமும் இல்லாமல்

நன்றி 

  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போராட சென்று மரணம் அடைந்தவர்கள் மாவீரர்களே .

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, Justin said:

 

இதில் நன்றி சொல்லும் அளவுக்கு ஒன்றுமில்லை, நந்தன், விசுகு, என்றாலும் உங்கள் அன்புக்கு நன்றிகள்!🙏

இது போன்ற இறுக்கமான மரபு, சொற்கள் ஆகியவற்றைக் கொண்டு வாழ்க்கை/உயிர்த் தியாகம் செய்தோரை வரையறை செய்வது "தேவையில்லாத ஆணி" என்பதால் தான் பல உறவுகள் எதுவும் எழுதாமல் கடந்து போகிறார்களென நினைக்கிறேன். 

இதற்குள் இதனை எழுதுவது பொருத்தமானது அல்ல என்றபோதிலும்

உங்களின் கருத்துக்கு ஏன் இத்தனை வரவேற்பு?? அல்லது உற்சாகம்??

நான் நினைக்கிறேன் நீங்கள் மாவீரர்கள் அல்லது போராளிகளுக்கு எதிரானவர் என்ற மாயை இங்கே வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதா??

அதுவும் புடுங்கப்படவேண்டிய ஆணிதான். 

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விசுகு said:

நான் நினைக்கிறேன் நீங்கள் மாவீரர்கள் அல்லது போராளிகளுக்கு எதிரானவர் என்ற மாயை இங்கே வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதா??

 

இருக்கலாம் விசுகர், சிலர் வேண்டுமென்றும், இன்னும் சிலர் அறியாமலும் இத்தகைய மாயையை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், நான் அந்த மாயையை  மறுத்து எதுவும் சொல்ல  முயல்வது கூட இல்லை. காரணம், நீங்கள், ரஞ்சித், நந்தன் உட்பட்ட பல உறவுகளுக்கு அது மாயை என்பது தெரிந்திருக்கிறது. எனவே, எனக்கு மேலதிகமாக விளக்க எதுவுமில்லை!

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/8/2023 at 17:53, Justin said:

இவ்விடயத்தில் என் கருத்துக்கு எவ்வளவு பெறுமானம் இருக்கிறதோ தெரியாது😂

இருந்தாலும்: மேலே நுணா சொல்லியிருப்பதே சரியானது. தலைமையை நிராகரித்தோ, தப்பியோடும் எண்ணத்திலோ வெள்ளைக் கொடி ஏந்தியோர் சரணடையவில்லை. அந்த சரணடைதல் யுத்தத்தின் ஒரு பகுதியாக நிகழ்ந்தது. சரணடைந்த பின்னர், உடனடியாகவோ அல்லது 7 வருடங்கள் கழித்தோ எதிரி கொலை செய்திருந்தால், நிச்சயமாக அவர்கள் மாவீரர்கள் கௌரவத்திற்குரியோரே!

புலிகள் அமைப்பு 2009 இற்கு முன்னர் பின்பற்றிய மரபை (convention), இந்த விடயத்தில் நாம் இன்றும் பின்பற்றினால் பாதகமான பின்விளைவுகள் ஏற்படுமென நினைக்கிறேன். உதாரணமாக, 10 வருடம் போராடிய ஒரு போராளி சரணடைந்து , கொலையாகாமல் தப்பி வாழ்ந்தால், அவரது 10 வருட வாழ்க்கைத் தியாகத்தை உதாசீனம் செய்ய முடியுமா? இல்லையல்லவா? இப்படி உயிரோடு மீண்ட சரணடைந்த போராளிகள், முன்னாள் போராளிகள் என்றால், சரணடைந்து எதிரியால் கொல்லப் பட்டோர் மாவீரர்களே. இது மிகவும் எளிய தர்க்க முடிவு, இதற்கு ஏன் புதுச் சொல் தேடி தலை முடியைப் பிய்த்துக் கொள்ள வேண்டும்?  


சிறப்பு, யஸ்ரினவர்களுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/8/2023 at 09:02, நந்தன் said:

பதிலளித்த அனைவருக்கும் நன்றிகள்.

நன்னி

இன்னுமொரு வேண்டுகோள்  இராணுவ பதவிநிலைகளை ( உ+ம் லெப்டினன்ட்,கப்டன் போன்ற) புலிகள் எப்படி பேணினார்களோ அப்படியே பதிவிடுங்கள் எந்த மாற்றமும் இல்லாமல்

நன்றி 

மாவீர்ரர், என்ற அடையாளம் கொடுப்பது எளிது, ஆனால் ராணுவ அந்தஸத்து கொடுப்பது அவ்வளவு எளிதல்ல என்பது என்கருத்து. தரைப்பீடம், ராணுவ அந்தஸத்து கொடுக்கும் போது, போராளிகளின் போர் தந்திரோபாயம், போர் அனுபவங்கள், வெற்றிகளை கொண்டே கணித்திருப்பார்கள். அந்த விடயங்கள் முற்றிலுமில்லாமல் அந்தஸத்து கொடுக்கும் பொழுது பல சிக்கல்கள் வரலாம்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.