Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

13வது திருத்தம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் நெகிழ்ச்சிதன்மையை வெளிப்படுத்தவேண்டும்

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%13வது திருத்தம் தொடர்பில்  தமிழ் அரசியல் தலைவர்கள் நெகிழ்ச்சி தன்மையை வெளிப்படுத்தவேண்டும் எனஇந்தியாவிற்கான இலங்கை தூதுவர்  மிலிந்த மொராகொட வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழ் சிறுபான்மையினத்தவர்களுக்கு சமஉரிமையை வழங்க முயலும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த சர்ச்சைக்குரிய விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மிலிந்தமொராகொட ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் தற்போது இது தொடர்பில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் தமிழ் தலைவர்கள் நெகிழ்ச்சி தன்மையை வெளிப்படுத்தவேண்டும் என தெரிவித்தார் என இந்திய ஊடகம்  தெரிவித்துள்ளது.

தீர்வொன்றை காண்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தனது நாட்டின் தலைவர்களை கடந்த சில மாதங்களாக சந்தித்து வருகின்றார் இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் கருத்தொருமைப்பாட்டினை பெற முயல்கின்றார் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்தில் இது சவாலான விடயம் என தெரிவித்துள்ள மிலிந்த மொராகொட வெவ்வேறு குழுக்கள் வெவ்வேறு கருத்தினை கொண்டிருப்பது வழமை  கருத்தியல் மட்டத்தில் எல்லாம் மிக அதிகம் என குறிப்பி;ட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கிழக்கு மற்றும் வடக்குகிழக்கின் அபிவிருத்தி குறித்தும் பேசுகின்றார் என தெரிவித்துள்ள மிலிந்தமொரகொட திருகோணமலையை பார்த்தீர்கள் என்றால் அது கிழக்கிற்கு முக்கிய அபிவிருத்தியாக அமையப்போகின்றது எண்ணெய் குழாய்கள் அவர்களுக்கு உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.13வது திருத்தம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் நெகிழ்ச்சிதன்மையை வெளிப்படுத்தவேண்டும் – குறியீடு (kuriyeedu.com)

Posted

13 ஒரு உப்பு சப்பற்றது. அதற்கே நெகிழ்வு தன்மையாம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nunavilan said:

13 ஒரு உப்பு சப்பற்றது. அதற்கே நெகிழ்வு தன்மையாம்.

தரமாட்டோம், நீங்களாகவே விட்டுக்கொடுங்கள் என்கிறார்.

3 hours ago, nochchi said:

வெவ்வேறு குழுக்கள் வெவ்வேறு கருத்தினை கொண்டிருப்பது வழமை  கருத்தியல் மட்டத்தில் எல்லாம் மிக அதிகம் என குறிப்பி;ட்டுள்ளார்.

மற்றவர்களின் கருத்தை விடுங்கள், தீர்வு பற்றி முப்பத்தாறு வருடங்களாக உங்கள் கருத்து என்ன? அதைச்சொல்லுங்கள் முதலில்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, nochchi said:

13வது திருத்தம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் நெகிழ்ச்சிதன்மையை வெளிப்படுத்தவேண்டும்

மக்கா மக்கா

இது சிங்கள தலைவர்களிடமிருந்து வரோணும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, nunavilan said:

13 ஒரு உப்பு சப்பற்றது. அதற்கே நெகிழ்வு தன்மையாம்.

 

6 hours ago, satan said:

தரமாட்டோம், நீங்களாகவே விட்டுக்கொடுங்கள் என்கிறார்.

மற்றவர்களின் கருத்தை விடுங்கள், தீர்வு பற்றி முப்பத்தாறு வருடங்களாக உங்கள் கருத்து என்ன? அதைச்சொல்லுங்கள் முதலில்.  

கடைசிப் பேச்சுவார்த்தைக் காலத்திலிருந்து தொடர்ச்சியாக இயங்கிவரும் சிங்கள (அரசியல்வாதியல்ல) இராஜதந்திரி. இந்தியாவில் நின்றவாறு ஒன்றுமேயில்லாத 13ஐக்கூடத் தரமாட்டோம் என்பதைத் தமிழ்த் தலைமைகளுக்கு இதைவிடத் தெளிவாகச் சொல்லமுடியாது. தமிழ்த் தலைமைகள் ஒன்றுதிரண்டு ஓரணியாவதும் மக்களை வீதிக்கிறக்கிப் போராடுவதூடாக மட்டுமே இவர்களது குள்ளநரித்தனத்தை வெளிப்படுத்த முடியும். தமிழர்களை அசையவிடாது இராணுவச் சுற்றிவளைப்பில் வைத்திருந்தவாறு நிலப்பறிப்பு,கோவில் ஆக்கிரமிப்பு எனத் தொடரமுடிகிறதெனில் அதற்கான காத்திரமான செயல்நடவடிக்கையை அரசியல்வாதிகள் வீச்சோடு செய்யாமையே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, nochchi said:

தமிழ்த் தலைமைகள் ஒன்றுதிரண்டு ஓரணியாவதும் மக்களை வீதிக்கிறக்கிப் போராடுவதூடாக மட்டுமே

சிங்களம் செய்த இரத்தக்களரிகளை வாய்மூடிப்பாத்தவர்கள், தாங்களே உசுப்பிவிட்டு, அதை தடுக்க வெளிக்கிட்டவர்களை, ஆதரிக்கவில்லை என அறிக்கை விட்டவர்கள், அதன்பின்னும் ஒன்றுசேர மறுபவர்கள், சிங்களத்துக்கு காலஅவகாசம் கொடுக்கிறார்கள் இருப்பதையும் முடிப்பபதற்கு. இவர்களா போராடபோகிறார்கள்? இந்தியாவுக்கு கடிதம் அனுப்பி காத்திருந்தவர்களுக்கு இந்தியாவிலேயே வைத்து தக்க பதில் கொடுத்திருக்கிறார்கள். இந்தியாவும் எதுவும் மறுத்து பேசியதாக இல்லை. ரணிலும் தடையில்லாமல் இந்தியாவுக்கு போய் வந்துவிட்டார். தங்களது கையாலாகாத்தனத்தை இந்தியாவை வைத்து பூச்சாண்டி காட்டுவது, இந்தியா ஏதோதமிழருக்கு நல்லது செய்தமாதிரி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீனாவை அடிக்கடி இலங்கைக்கு வரவழைப்பது இந்தியா தமிழர் பிரச்சனை பற்றி கதைக்கவேண்டும் என்று தம்மை பேய்க்காட்டுவதை நிறுத்த வேண்டும் என்பற்காகவே. நம்மை பலிகொடுத்து சீனாவின் வருகையை தடுக்க இந்தியா முயலும். பயம் காட்டி சாதிப்பவனை எவ்விதத்திலும் கட்டுப்டுத்த முடியாது. இந்ததியா எதுவேண்டுமானாலும் செய்யட்டும், தமிழர் நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும். இவர்களிடம் இருந்து நமக்கு விடிவு வருமா? நாமே நம்வேலையை பாப்போமா என்று? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐயா இன்னும் ஓரிரு மாதங்களில் இலங்கை திரும்ப இருக்கிறார். இங்கு வந்த பின்னர் எதாவது பிழைப்பு நடத்த வேண்டும். எனவே இப்படியாக அரசுக்கும், சிங்கள மக்களுக்கும் ஜால்றா போட வேண்டிய நிலைமை. மற்றப்படி இவருக்கும் இந்த இன பிரச்சினைக்கும் இவர் கூறியதட்கும்  சம்பந்தம் இல்லை. 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.