Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகர் ஷாஜி: தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவி ஆதித்யா-எல்1 திட்ட இயக்குநரானது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நிகர் ஷாஜி

பட மூலாதாரம்,PTI

 
படக்குறிப்பு,

விண்கலம் வெற்றிகரமாக தனது இலக்குப்பாதையில் பயணிப்பதாக நிகர் ஷாஜி கூறியதும், அரங்கில் இருந்த விஞ்ஞானிகள் ஆரவாரமாகக் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரபாகர் தமிழரசு
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 செப்டெம்பர் 2023, 13:04 GMT
    புதுப்பிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வரலாற்றில் முதல் முறையாக சூரியனை ஆய்வு செய்ய ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ஆதித்யா-எல்1 விண்கலம் ஏவப்பட்டது. விண்கலம் ஏவப்பட்ட சிறிது நேரத்தில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அவருக்கு அடுத்ததாக, ஆதித்யா-எல்1 திட்டத்தின் இயக்குநரான நிகர் ஷாஜி மேடையேறினார். தமிழ் நாட்டின் தென்காசி மாவட்டம் செங்காேட்டையை பூர்வீகமாகக் கொண்ட அவர் மேடையேறி, ஆதித்யா-எல்1 வெற்றிகரமாக ஏவப்பட்டதன் மூலம் திட்டக்குழுவின் கனவு நிறைவேறியுள்ளது, என்றார்.

விண்கலம் வெற்றிகரமாக தனது இலக்குப்பாதையில் பயணிப்பதாக அவர் கூறியதும், அரங்கில் இருந்த விஞ்ஞானிகள் ஆரவாரமாகக் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.

“விண்கலம் தனது 125 நாள் பயணத்தை தொடங்கியுள்ளது. விண்கலம் இலக்கை அடையும்போது, இந்திய விண்வெளித்துறையின் மிகப்பெரிய பொக்கிஷமாக ஆதித்யா-எல்1 இருக்கும்,” என்றார். அரங்கம் மீண்டும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.

 

அரசுப் பள்ளியில் படித்த நிகர் ஷாஜி

அரசுப்பள்ளி
 
படக்குறிப்பு,

எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும், தேசிய அறிவியல் மையத்தின் கல்வி உதவித்தொகையின் மூலமாக படித்துள்ளார் நிகர் ஷாஜி

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட நிகர் ஷாஜி, 1987 ஆம் ஆண்டு முதல் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார்.

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் செங்கோட்டையில் உள்ள திரு இராமமந்திரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த நிகர் ஷாஜி குறித்து அவரின் சகோதரர் ஷேக் சலீம் பிபிசியிடம் பேசினார்.

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும், மருத்துவப் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தும் அறிவியல் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாகவே அவர் பொறியியல் படிப்பை தேர்வு செய்ததாகக் கூறினார் சலீம்.

நிகர் ஷாஜி பள்ளியில் படிக்கும்போது இருந்தே அவருக்கு அறிவியலில் ஆர்வம் அதிகம். அவர் எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும், தேசிய அறிவியல் மையத்தின் கல்வி உதவித்தொகையின் மூலமாகத்தான் படித்தார்,” என்றார் சலீம்.

அரசுப்பள்ளியில் நிதி உதவி பெற்று படித்தது குறித்து பேசினார் சலீம். அந்தக்காலத்தில் அரசுப் பள்ளியில் தமிழ் வழிக்கல்வி இருந்தாலும், அதே பள்ளி வளாகத்தில் ஆங்கில வழிக்கல்வியும் இருந்ததாகக் கூறும் அவர், அதற்கு ரூ 15 கட்டணம் செலுத்த வேண்டும் என்றார்.

எங்கள் தந்தை 1940-களிலேயே கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தார். ஆனால், அவர் தான் படித்த படிப்பு சார்ந்த பணியில் அதிகம் நாட்டம் செலுத்தாமல், விவசாயத்தில் இறங்கினார். அதில் சில புதிய முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால், எதுவும் கைகூடவில்லை. அதனால், குடும்பத்தின் பொருளாதார சூழல் என்பது வரவுக்கும் செலவுக்குமே சரியாக இருந்தது எனக் கூறலாம்,” என்றார்.

 

மருத்துவர் படிப்பு விடுத்து பொறியியலை தேர்வு செய்த நிகர் ஷாஜி

நிகர் ஷாஜி
 
படக்குறிப்பு,

1986 ஆம் ஆண்டு பொறியியல் பட்டம் படித்து முடித்த உடன், அந்த ஆண்டே செய்தித்தாளில் இஸ்ரோ வெளியிட்டிருந்த விளம்பரத்தை பார்த்து, நிகர் ஷாஜி அதற்கு விண்ணப்பித்துள்ளார்

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தும் தனது சொந்த ஆர்வத்தின் காரணமாக திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் இளங்கலை பொறியியலில் மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் படித்துள்ளார் நிகர் ஷாஜி.

1986 ஆம் ஆண்டு பொறியியல் பட்டம் படித்து முடித்த உடன், அந்த ஆண்டே செய்தித்தாளில் இஸ்ரோ வெளியிட்டிருந்த விளம்பரத்தை பார்த்து, நிகர் ஷாஜி அதற்கு விண்ணப்பித்ததாகக் கூறுகிறார் சலீம்.

“அப்போதெல்லாம் அடிக்கடி பொறியாளர்கள் வேண்டி இஸ்ரோ சார்பில் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வரும். அவர் ஜூன், ஜூலை மாதம் தனது பொறியியல் படிப்பை முடித்தார்.

முடித்ததுமே, ஆகஸ்ட் மாதம் ஆட்கள் தேவை என விளம்பரத்தை பார்த்து, விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பித்த 83 பேரில், ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களின் நிகர் ஷாஜி தான் முதலிடம்,” என்றார் சலீம்.

முதலில் ஸ்ரீஹரிகோட்டாவில் பணியாற்றிய நிகர் ஷாஜி, மூன்று மாதங்களுக்கு பின்னர் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆரம்ப காலத்தில் செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் பணியில் இருந்த நிகர் ஷாஜி, பின் செயற்கைக்கோள் தயாரிப்பு பணியில் இருந்துள்ளார்.

 

ஆதித்யா-எல்1 திட்டத்திற்காக நாசாவில் பயிற்சி

நிகர் ஷாஜி
 
படக்குறிப்பு,

பூமி நோக்கி பொருத்தப்பட்டிருக்கும் கருவிகள் குறித்து தெரிந்துகொள்ள ஒரு மாதத்திற்கு குறைவான நாட்கள் நிகர் ஷாஜி நாசாவில் பயிற்சி பெற்றுள்ளார்

நிகர் ஷாஜி, ஆதித்யா- எல்1 திட்டம் மட்டுமின்றி, இதற்கு முந்தைய சந்திரயான் திட்டங்களிலும் பணியாற்றியுள்ளார். மூன்று தசாப்தத்திற்கும் மேலான நிகர் ஷாஜியின் இந்தப் பயணத்தில், அவர் விண்வெளி ஆராய்ச்சி சார்ந்து அமெரிக்கா, ஸ்காட்லேண்ட் உள்ளிட்ட நாடுகளுக்கு பயிற்சிக்காக சென்று பணியாற்றியுள்ளார்.

தற்போது விண்ணில் ஏவப்பட்டுள்ள ஆதித்யா-எல்1 திட்டத்திற்காக சமீபத்தில் அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தில் பயிற்சி பெற்றுள்ளார்,” என்றார் சலீம்.

குறிப்பாக, விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஏழு கருவிகளில், சூரியனைத் தவிர, அவற்றில் இருந்து வரும் துகள்கள் உள்ளிட்டவையை ஆய்வு செய்வதற்காக பூமி நோக்கி பொருத்தப்பட்டிருக்கும் கருவிகள் குறித்து தெரிந்துகொள்ள ஒரு மாதத்திற்கு குறைவான நாட்கள் நிகர் ஷாஜி அங்கு பயிற்சி பெற்றதாகப் பகிர்ந்துகொண்டார் சலீம்.

 

“அரசு செலவில் படித்துள்ளோம், சமூகத்திற்காக பணியாற்ற வேண்டும்”

நிகர் ஷாஜி
 
படக்குறிப்பு,

முழுக்க முழுக்க அரசுச் செலவில் படித்து வந்துள்ளதால், சமூகத்திற்காகத்தான் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் நிகர் ஷாஜியின் சகோதரர் சலீம்.

1987 ஆம் ஆண்டு இஸ்ரோவில் பணியில் சேர்ந்த பிறகு, 2000 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக, நிகர் ஷாஜியுடன் இருந்தவர்கள் சிலர் தகவல் தொழில்நுட்பத்திற்கு மாறியதாகக் கூறிய சலீம், நிகர் ஷாஜியும் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு மாற நினைத்ததாகக் கூறினார்.

ஊதிய கமிஷன்(Pay Commission) வருவதற்கு முன்பெல்லாம் இஸ்ரோவில் குறைந்த அளவே சம்பளம் இருந்ததாகக் கூறும் சலீம், அந்தக் காலக்கட்டத்தில் இஸ்ரோவை ஒப்பிடும்போது, அப்போது வளரத் தொடங்கிய தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு அதிக சம்பளம் கிடைத்ததாகக் கூறினார்.

அதனால், பணி மாறலாமா என்று ஒரு சிந்தனையில் இருந்தார் என் தங்கை. ஆனால், முழுக்க முழுக்க அரசுச் செலவில் படித்து வந்துள்ள நாம், சமூகத்திற்காகத்தான் பணியாற்ற வேண்டும் என நான் தான் இஸ்ரோவிலேயே பணியைத் தொடரச் சொன்னேன். நான் உட்பட என் சகோரிகள் வரை அனைவரும் அரசுப்பள்ளியிலும் கல்லூரியிலும் மாநில பாடத்திட்டத்தில் தான் படித்தோம்,” என்றார் அவர்.

தற்போது பெங்களூரில் தனது 85 வயதான தாயுடன் வசித்து வரும் நிகர் ஷாஜி, கடந்த ஓராண்டுக்கு முன்பாகவே சிறந்த விஞ்ஞானியாக பதவி உயர்வு பெற்றார். சுமார் எட்டு ஆண்டுகளாக ஆதித்யா-எல்1 திட்டத்தில் பணியாற்றி வரும் நிகர் ஷாஜியின் கணவர் வளைகுடா நாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். ஷாஜியின் மகன் நெதர்லேண்டில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

 

நிலாவிலும் தமிழர் சூரியனிலும் தமிழர்

வீரமுத்துவேல்
 
படக்குறிப்பு,

சந்திரயானின் திட்டங்களுக்கு தமிழர்கள் திட்ட இயக்குநர்களாக இருந்த நிலையில், தற்போது ஆதித்யா-எல்1 திட்டத்திற்கும் தமிழ் நாட்டைச் சேர்ந்த நிகர் ஷாஜி திட்ட இயக்குநராக உள்ளார்.

சந்திரயான் 1 திட்டத்தில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான் 2 திட்டத்தில் விஞ்ஞானி வனிதா, சந்திராயன் 3 திட்டத்தில் விஞ்ஞானி வீரமுத்துவேல் என்று சந்திராயன் திட்டங்களில் தமிழர்கள் திட்ட இயக்குநர்களாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது, ஆதித்யா-எல்1 திட்ட இயக்குநராகவும் தமிழ் நாட்டைச் சேர்ந்த நிகர் ஷாஜி பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

நிகர் ஷாஜிக்கு திமுக எம்.பி கனிமொழி கருணாநிதியும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

“நம் நாட்டின் விண்வெளித் துறைசார் பயணத்தில், பெரியதொரு மைல் கல்லாக இருக்கும் ஆய்வுத் திட்டத்தைத் திறம்பட வழிநடத்திவரும் அவரது பணிகள் வெற்றி பெற வாழ்த்துகள்,” என எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் கனிமொழி.

https://www.bbc.com/tamil/articles/cg3zyqw656zo

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

 அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த நிகர் ஷாஜி

👍 தமிழ் நாட்டரசின் கல்வி கொள்கைக்கு கிடைத்த பல வெற்றிகளில் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2023 at 12:49, ஏராளன் said:

சந்திரயான் 1 திட்டத்தில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான் 2 திட்டத்தில் விஞ்ஞானி வனிதா, சந்திராயன் 3 திட்டத்தில் விஞ்ஞானி வீரமுத்துவேல் என்று சந்திராயன் திட்டங்களில் தமிழர்கள் திட்ட இயக்குநர்களாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது, ஆதித்யா-எல்1 திட்ட இயக்குநராகவும் தமிழ் நாட்டைச் சேர்ந்த நிகர் ஷாஜி பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

விஞ்ஞானத்தில் மேலும் உச்சத்தை தொட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

விஞ்ஞானத்தில் மேலும் உச்சத்தை தொட வேண்டும்.

ஒருக்கா கோரசாக சொல்லுங்கோ…

திராவிடத்தால் வீழ்ந்தோம்…😂

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

ஒருக்கா கோரசாக சொல்லுங்கோ…

திராவிடத்தால் வீழ்ந்தோம்…😂

இது  ஆட்டுக்குள் மாட்டை விடுவது.🙃🙃

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

இது  ஆட்டுக்குள் மாட்டை விடுவது.🙃🙃

இல்லை. 

மேலே நீங்கள் சாதனை தமிழர்கள் என புளகாங்கிதம் அடைந்த அனைவரும் திராவிட கொள்கை தமிழ்நாட்டில் வேரூன்றி,  அது தமிழ் நாட்டின் கல்வி கொள்கையிலும் பிரதிபலித்த காலத்தில் கல்வி கற்றவர்கள்.

இவர்கள் மட்டும் அல்ல, இன்னும் பற்பல துறைகளில் “கல்வி சிறந்த தமிழ்நாடு” என்ற பாரதியின் கூற்றை, சுதந்திர இந்தியாவில் மறுக்க முடியாத உண்மை என நிறுவியுள்ளர் தமிழ் நாட்டினர்.

இது மந்திரத்தால் விளைந்ததோ, தற்செயல் விபத்தாக அமைந்ததோ அல்ல. வளப்பகிர்வு, சமச்சீர் கல்வி, சத்துணவு, லேப்டாப் உட்பட்ட இங்கே பலர் எள்ளி நகையாடும் பல நலத்திட்டங்களின் கூட்டிணைந்த பலாபலனே இது.

இதில் காமராஜர் என்ற காங்கிரசாரின் மிக கணிசமான பங்கு தவிர, மிகுதி அனைத்தும் 1960 களில் இல் இருந்து ஆட்சியில் இருக்கும் திராவிட கொள்கையை பின்பற்றும் ஆட்சியாளர்களையே சாரும்.

ஆகவேதான் சொல்கிறேன் - மீண்டும் ஒருதரம் - உரக்க சொல்லுங்கள்.

திராவிடத்தால் வீழ்ந்தோம்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

இல்லை. 

மேலே நீங்கள் சாதனை தமிழர்கள் என புளகாங்கிதம் அடைந்த அனைவரும் திராவிட கொள்கை தமிழ்நாட்டில் வேரூன்றி,  அது தமிழ் நாட்டின் கல்வி கொள்கையிலும் பிரதிபலித்த காலத்தில் கல்வி கற்றவர்கள்.

இவர்கள் மட்டும் அல்ல, இன்னும் பற்பல துறைகளில் “கல்வி சிறந்த தமிழ்நாடு” என்ற பாரதியின் கூற்றை, சுதந்திர இந்தியாவில் மறுக்க முடியாத உண்மை என நிறுவியுள்ளர் தமிழ் நாட்டினர்.

இது மந்திரத்தால் விளைந்ததோ, தற்செயல் விபத்தாக அமைந்ததோ அல்ல. வளப்பகிர்வு, சமச்சீர் கல்வி, சத்துணவு, லேப்டாப் உட்பட்ட இங்கே பலர் எள்ளி நகையாடும் பல நலத்திட்டங்களின் கூட்டிணைந்த பலாபலனே இது.

இதில் காமராஜர் என்ற காங்கிரசாரின் மிக கணிசமான பங்கு தவிர, மிகுதி அனைத்தும் 1960 களில் இல் இருந்து ஆட்சியில் இருக்கும் திராவிட கொள்கையை பின்பற்றும் ஆட்சியாளர்களையே சாரும்.

ஆகவேதான் சொல்கிறேன் - மீண்டும் ஒருதரம் - உரக்க சொல்லுங்கள்.

திராவிடத்தால் வீழ்ந்தோம்.

எப்போ தொடக்கம் திமுகவின் பேச்சாளர் ஆனீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

எப்போ தொடக்கம் திமுகவின் பேச்சாளர் ஆனீர்கள்?

உங்கள் சகாக்களின் கூற்றுப்படி - எப்போ திமுக 200 ரூபாய் கொடுக்கத் தொடங்கியதோ அப்போதிருந்து 🤣.

விளக்கம்

மேலே தனியே திமுகவின் கொள்கைகையை, நலத்திட்டங்களை மட்டும் சொல்லவில்லை.

திராவிட கொள்கையுடைய கட்சி ஆட்சியின் கல்வி கொள்கை என்றால் அதில் சமபங்கு எம்ஜிஆர், ஜெ வுக்கும் உண்டு.

அதே போல் திட்டங்கள் பற்றி சொல்லும் போது எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தையும் அடக்கியே உள்ளேன்.

உண்மை என்னவெனில் - அரச, தனியார் கல்வி எதுவாகினும் சுந்தர் பிச்சை முதல் இந்த விஞ்ஞானிகள் வரை - திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின் கல்விதுறைக்குள்ளால் வந்தவர்களே.

இதுவும் 60 களுக்கு பின் அநேக துறைகளில் தமிழ் நாட்டின் அபரிமித வளர்ச்சியும், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது எத்தகைய வெற்று கூச்சல் என்பதை காட்டி நிற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உங்கள் சகாக்களின் கூற்றுப்படி - எப்போ திமுக 200 ரூபாய் கொடுக்கத் தொடங்கியதோ அப்போதிருந்து 🤣.

விளக்கம்

மேலே தனியே திமுகவின் கொள்கைகையை, நலத்திட்டங்களை மட்டும் சொல்லவில்லை.

திராவிட கொள்கையுடைய கட்சி ஆட்சியின் கல்வி கொள்கை என்றால் அதில் சமபங்கு எம்ஜிஆர், ஜெ வுக்கும் உண்டு.

அதே போல் திட்டங்கள் பற்றி சொல்லும் போது எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தையும் அடக்கியே உள்ளேன்.

உண்மை என்னவெனில் - அரச, தனியார் கல்வி எதுவாகினும் சுந்தர் பிச்சை முதல் இந்த விஞ்ஞானிகள் வரை - திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின் கல்விதுறைக்குள்ளால் வந்தவர்களே.

இதுவும் 60 களுக்கு பின் அநேக துறைகளில் தமிழ் நாட்டின் அபரிமித வளர்ச்சியும், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது எத்தகைய வெற்று கூச்சல் என்பதை காட்டி நிற்கிறது.

ஆகவே நீங்கள் சினைப்பர் வைத்து சுட்ட போராட்டக்காரர்களுக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே திராவிட கொள்கைக்குள் அடங்குமல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

ஆகவே நீங்கள் சினைப்பர் வைத்து சுட்ட போராட்டக்காரர்களுக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே திராவிட கொள்கைக்குள் அடங்குமல்லவா?

திராவிட கொள்கையில் எங்கே, எந்த புத்தகத்தில் மக்கள் போராட்டத்தை சினைப்பர் வைத்து அடக்கலாம் என எழுதப்பட்டுள்ளது?

மக்களை சினைப்பாரால் சுட்டு அடக்கியது, ஊழல் இன்னும் பலது கொள்கையின் வழு அல்ல, அதை நடைமுறைபடுத்திய மனிதர்களின் வழு.

திராவிட கொள்கைக்கு ஆட்சியாளர் உட்பட்டு நடந்தால் நல்லதும் (கல்வி), உட்படாமல் நடந்தால் அல்லதும் (அடக்குமுறை, ஊழல்) விளைவாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் மட்டுமல்ல, இஸ்லாமியத் தமிழர் என்பதையும் ஊன்றிச் சொல்ல வேண்டும்!

உத்தரப் பிரதேசத்தில், முகநூலில் ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஒரு இளம் இஸ்லாமிய மாணவியின் வீட்டை, இஸ்ரேலிய பாணியில் புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கிய மாநிலப் பாரம்பரியத்தோடு, தமிழ் நாட்டின் திராவிட பாரம்பரியத்தை ஒப்பிட்டுப் பார்க்க வைக்கும் ஒரு உதாரணம் இது!

On 3/9/2023 at 07:45, goshan_che said:

👍 தமிழ் நாட்டரசின் கல்வி கொள்கைக்கு கிடைத்த பல வெற்றிகளில் ஒன்று.

இந்த செய்தியை பிபிசி தமிழில் வாசித்தவுடன் எனக்கு மனதில் தோன்றியதும் இதுதான். திராவிடக் கட்சிகளின் சமூக நீதி மற்றும் இந்தியாவில் உள்ள இட ஒதுக்கீடு ஆகியவற்றால் விளைந்த நன்மைகளில் ஒன்று. 

 திராவிட அரசியல் இல்லையென்றால், தன்னால் இன்றுள்ள நிலைக்கு ஏற்றவாறு படித்து இருக்க முடியாது என்று ராஜவன்னியன் ஒரு முறை எழுதியிருந்தார் என்று நினைக்கின்றேன்.

கருணாநிதியின் கபட உண்ணாவிரதம் தான் திராவிடக் கொள்கை என்று இருப்பவர்களை கடந்து போக வேண்டியது தான். 

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளியில் படிக்கும்போதே அறிவியலில் அதிகம் ஆர்வம் கொண்டவராக மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தும் அறிவியல் மீதிருந்த ஆர்வத்தினால்  பொறியியல் படித்த ஒரு  விஞ்ஞானி நிகர் ஷாஜியை உருவாக்கியுள்ளது திராவிடம்.
மதஅடிபடைவாத ஹிஜாப்பை பெண்களிடம் திணிப்பதற்கான தனது கனவை நிறைவேற்ற போராடும் மதவெறி பிடித்த  மாணவியை தான் உத்தரப் பிரதேசம் உருவாக்கியுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி கொடுத்த வெற்றி.. நாகாலாந்து தமிழ் அரசு அதிகாரியின் பதிவு செம டிரெண்டிங்..!

Prasanna VenkateshPublished: Saturday, September 9, 2023, 18:47 [IST]

ட்விட்டரில் பி நெல்லையப்பன் அவர்கள் இன்று ஒரு தகரக் கூரையுடன் காணப்படும் வீடு, அன்று தென்னை மரம் கீற்றுக் கொண்டு இருந்தது.. இந்த வீட்டில் தான் 30 வயது வரை எனது பெற்றோர் மற்றும் உடன் பிறந்த 4 பேர் உடன் வாழ்ந்தோம். தற்போது அரசுப் பணியுடன் பெரிய வீட்டில் வசித்து வருவதாகத் தெரிவித்தார்.

யார் இந்தப் பி நெல்லையப்பன்..? தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டு இருந்தாலும், தற்போது நாகாலாந்து முதல்வரின் சிறப்புப் பணியில் இருக்கும் அதிகாரியாக உள்ளார். மேலும் அம்மாநில பள்ளிக் கல்வித் துறையின் துணைத் தலைவராக உள்ளார்.

நெல்லையப்பன் தான் தங்கியிருந்த பூர்வீக வீட்டின் புகைப்படத்தையும், தற்போது தான் தங்கியிருக்கும் வீட்டின் புகைப்படத்தைப் பதிவிட்டு கல்வியும், விடாமுயற்சியும் ஒருவருக்கு என்ன செய்யும் என்பதைக் காட்டியுள்ளார்.

பி நெல்லையப்பன் அவர்களுடைய பதிவு கடந்த 3 நாட்களில் சுமார் 6.5 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இவருடைய பதவிக்கு நிமி வாஷி என்ற ஆராய்ச்சியாளர் எந்தச் செல்வமும் இல்லாத நிலையில், கல்வி என்பது சுதந்திரத்திற்கான உண்மையான வழி எனக் கமெண்ட் செய்தார்.

நிமி வாஷி-யின் டிவிட்டுக்குப் பதில் அளித்த பி நெல்லையப்பன் அவர்கள் சரியாகச் சொன்னீர்கள் மேடம். நான் ஆசிரியராக இருந்தபோது, கல்வி மற்றும் கல்வி சார்ந்த விஷயங்களில் தாழ்த்தப்பட்ட பிரிவுகள் சேர்ந்த குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொண்டு, கடினமாக உழைக்க வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்தினேன் எனக் கூறியுள்ளார்.

பொருளாதாரம், சமுகம், செல்வம் அனைத்தையும் கல்வியும், கடின உழைப்பும் வைத்து எவராலும் வெற்றி அடைய முடியும் என்பதைப் படம் போட்டுக் காட்டியுள்ளார் பி நெல்லையப்பன் அவர்கள்.

எனது மகன் டாக்டர் ஹிருஷிகேஷ் தனது முதல் மாத ஹவுஸ் சர்ஜன் உதவித்தொகை மூலம் பரிசளித்த ஆடைகளுடன் ஓணம் கொண்டாடப்பட்டது. இன்று அவரால் எங்களுடன் சேர்ந்து ஓணம் பண்டிகையைக் கொண்ட முடியவில்லை எனவும் அந்தப் பதிவில் தெரிவித்தார்.

https://tamil.goodreturns.in/news/nagaland-tamil-bureaucrat-shared-mantra-for-success-one-room-house-to-bungalow-036963.html?_gl=1*1eu8ms6*_ga*MjA0NjgxMTU0My4xNjkwODQ4MjU5*_ga_09Y63T23W1*MTY5NDI3NjYzNi4xMTguMC4xNjk0Mjc2NjM2LjAuMC4w&story=5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.