Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் மூலை முடுக்கெல்லாம் கோயில்கள், வடகிழக்கில் விகாரைகள் கூடாதா? தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும் இனவாதம் செய்கின்றன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

04-Today.jpg

 

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் சிங்களவர்களுக்காகப் பௌத்த விகாரைகள் இருப்பதில் என்ன பிரச்சினை? வடக்கு - கிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கக்கூடாது என்று எந்தச் சட்டத்தில் உள்ளது?" என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார்.
 
'திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 238 சிங்களவர்களுக்கு 23 பௌத்த விகாரைகள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன.
 
10 சிங்களவர்களின் வழிபாட்டுக்காகத் தலா ஒரு விகாரை வீதம் அமைக்கப்படவுள்ளது. குச்சவெளி பகுதியில் இந்தப் புதிய விகாரைகளை அமைக்கும் திட்டத்துக்கான அனுமதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது' - என்று கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
 
இது தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
"தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகள் இருக்கக்கூடாது - புதிதாக நிர்மாணிக்கப்படக் கூடாது என்று யார் சொன்னது?
 
அப்படியாயின் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்களா? வடக்கு - கிழக்கில் மாத்திரம் தமிழர்களுக்கு இந்து ஆலயங்கள் அமைக்கப்படவில்லை.
 
நாட்டின் 25 மாவட்டங்களிலும் தமிழர்களுக்காக இந்து ஆலயங்கள் உள்ளன. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் இந்து ஆலயங்கள் பெருமளவில் உள்ளன.
 
உதாரணத்துக்குக் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் எத்தனை இந்து ஆலயங்கள் உள்ளன? அங்கு மூலைமுடுக்கெல்லாம் பெரிய, சிறிய இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
இதற்கு எதிராகச் சிங்கள பௌத்தர்கள் போர்க்கொடி தூக்கினார்களா? பல இடங்களில் இந்து ஆலயங்களுக்குச் சென்று சிங்கள பௌத்தர்கள் கூட வழிபடுகின்றார்கள்.
 
எனவே, தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும் இனவாதத்தை - மதவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.
 
இன்று நாட்டு மக்களுக்கிடையில் இனவாத, மதவாதப் பிரச்சினைகள் இல்லை. தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும்தான் இப்படியான பிரச்சினைகளைத் தூண்டி விடுகின்றன என தெரிவித்துள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள அவ்வளவு சைவகோவில்களையும் சத்தியமாக அரசு தான் கட்டிக் கொடுத்தது!!

  • கருத்துக்கள உறவுகள்

இனவெறியராள மகிந்த காலத்து பிரதமர், ரத்தினசீறி மகன் தான் இவர்.

ராஜபக்சகளின் தீவிர அடிவருடி. ரணில் தன்னை அசைக்க ஏலாது என்று நிணைக்கும் அமைச்சர்களில் ஒருவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கச்சாய் எண்ட இடத்தில சிங்களச்சனம். இல்லை. அங்கை ஏன் விகாரை?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

இனவெறியராள மகிந்த காலத்து பிரதமர், ரத்தினசீறி மகன் தான் இவர்.

ராஜபக்சகளின் தீவிர அடிவருடி. ரணில் தன்னை அசைக்க ஏலாது என்று நிணைக்கும் அமைச்சர்களில் ஒருவர்.

10 பேருக்கு ஒரு பவுத்த விகாரை. இதனால் ஏதாவது பிரயோசனம் இருக்குதா என்றால் பூச்சியம்தான் விடை. ஒருவனை நல்வழி படுத்துவதட்க்கு என்று அமைத்தால் நல்லதுதான். ஆனால் இவை எல்லாம் தீய நோக்கத்துடன் அமைக்கப்படுவதால் அழிவுதான் மிஞ்சப்போகின்றது. ஒரு அமைச்சரே மொக்கு தனமாக பேசும்போது அப்பாவி மக்கள் எம்மாத்திரம். ஐயோ ஐயோ.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் பத்து தமிழனுக்கு ஒரு இராணுவம், பத்து சிங்களவனுக்கு ஒரு விகாரை, கட்டுவது முகாம் அமைப்பது தனியார் காணிகளில் அடாத்தாக அரச செலவில். வழிபாட்டுத்தலங்கள் வழிபடுவதற்கேயன்றி அதிகாரம் செலுத்துவதற்கல்ல. இந்தமாதிரியான நிஞாயம் கதைக்க போக்கிரிகள் போதும் இன்று நாட்டின் அமைச்சர்கள் யார்? இப்படியான மோட்டு விளக்கம் கொடுத்து கொழுத்திவிட்டு காத்திருக்கிறார்கள் குளிர்காய. கேள்வி கேட்டவர்களுக்கும் அவர் விளக்கம் விளங்கியிருக்குமோ என்பது சந்தேகமே. இது ஒரு பிழையான செயலான படியாலே கேள்வி, விளக்கம் கேட்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

கச்சாய் எண்ட இடத்தில சிங்களச்சனம். இல்லை. அங்கை ஏன் விகாரை?

என்ன கச்சாய் இல் விகாரைய?   எவ்விடத்தில். ?  அப்ப இனி சிங்களவரை குடியேற்றப்போகிறான்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kandiah57 said:

என்ன கச்சாய் இல் விகாரைய?   எவ்விடத்தில். ?  அப்ப இனி சிங்களவரை குடியேற்றப்போகிறான்கள்.   

 

8 hours ago, குமாரசாமி said:

கச்சாய் எண்ட இடத்தில சிங்களச்சனம். இல்லை. அங்கை ஏன் விகாரை?

ஓவ்வொரு பிரதேச செயலகம் ஊடாக காணி பற்றிய விபரங்களை திரட்டுகிறார்கள் அங்கே அரச காணியாக இருப்பது புத்தரை குடி வைக்க இடம் கேட் கிறார்கள்  நம்மவர்கள் விற்பனை செய்கிறார்கள் நான் கூட நல்ல விலைக்கு வந்தால் எனது வீடு வளவையும் விற்க உள்ளேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 

ஓவ்வொரு பிரதேச செயலகம் ஊடாக காணி பற்றிய விபரங்களை திரட்டுகிறார்கள் அங்கே அரச காணியாக இருப்பது புத்தரை குடி வைக்க இடம் கேட் கிறார்கள்  நம்மவர்கள் விற்பனை செய்கிறார்கள் நான் கூட நல்ல விலைக்கு வந்தால் எனது வீடு வளவையும் விற்க உள்ளேன்.  

கவலையான விடயம். இதனை தடுத்து நிறுந்த முடியாது   ஏனென்றால் அரசாங்கம் திட்டமிடப்பட்ட முறையில் செய்கிறது   உங்கள் வீட்டை விற்றுவிட்டு  எங்கே இருக்க போகிறீர்கள்??  இலங்கைக்கு வந்தால்  உங்கள் வீட்டிலே தங்கலாம் என்று நினைத்திருந்தேன்   🤣🤣🤣 கற்பனை ஆகி விட்டது   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kandiah57 said:

என்ன கச்சாய் இல் விகாரைய?   எவ்விடத்தில். ?  அப்ப இனி சிங்களவரை குடியேற்றப்போகிறான்கள்.   

 

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

 

ஓவ்வொரு பிரதேச செயலகம் ஊடாக காணி பற்றிய விபரங்களை திரட்டுகிறார்கள் அங்கே அரச காணியாக இருப்பது புத்தரை குடி வைக்க இடம் கேட் கிறார்கள்  நம்மவர்கள் விற்பனை செய்கிறார்கள் நான் கூட நல்ல விலைக்கு வந்தால் எனது வீடு வளவையும் விற்க உள்ளேன்.  

எப்படி இருந்த திருகோணமலை இன்று.......??????

எம்மவர்கள் ஒவ்வொரு கல்லாய் நகர்த்துவோம் என ஆகாயத்தை பார்க்க...... சிங்களம் கல்லு மலை மலையாக நகர்த்துகின்றது.:grinning_face_with_sweat:

உரை இன் படமாக இருக்கக்கூடும்

வரைபடம் மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

கச்சாய் எண்ட இடத்தில சிங்களச்சனம். இல்லை. அங்கை ஏன் விகாரை?

கொடிகாமத்தையா சொல்கிறீர்கள்? விகாரை கட்டுவதற்கு அங்கு சிங்களச்சனம் தேவையில்லை. விகாரை முதலில் மக்கள் பிறகு. பொறுத்திருந்து பாருங்கள் யாரவர்கள் என்று. மக்களுக்காகவோ, வழிபாடுகளுக்காகவோ அமைக்கப்படும் விகாரைகளல்ல இவை. காணி பிடிப்பதற்கும், அதிகார மமதையை காட்டுவதற்கும், எம்மை கையாலாகாதவர்கள் என்பதை மெய்ப்பிப்பதற்கும் இவைகள் சான்றுகள். அறிவிலிகளின் சாதனை!  

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2023 at 17:56, தனிக்காட்டு ராஜா said:

ஓவ்வொரு பிரதேச செயலகம் ஊடாக காணி பற்றிய விபரங்களை திரட்டுகிறார்கள் அங்கே அரச காணியாக இருப்பது புத்தரை குடி வைக்க இடம் கேட் கிறார்கள்

ஏன் அந்த அரச காணிகளை, காணிகளற்ற வறிய மக்களுக்கு பகிர்ந்தளிக்க அந்தந்த பிரதேச செயலகங்களால் முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2023 at 06:19, satan said:

ஏன் அந்த அரச காணிகளை, காணிகளற்ற வறிய மக்களுக்கு பகிர்ந்தளிக்க அந்தந்த பிரதேச செயலகங்களால் முடியாதா?

அனுமதி அரசு கொடுக்காது ஆனால் அவர்கள் என்ன செய்தாலும் கண்டு கொள்ளாது அதை நீங்கள் கண்டு கொள்ளவில்லையா இலங்கையில் நடக்கும் சம்பவங்களை பார்த்து??

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அனுமதி அரசு கொடுக்காது ஆனால் அவர்கள் என்ன செய்தாலும் கண்டு கொள்ளாது அதை நீங்கள் கண்டு கொள்ளவில்லையா இலங்கையில் நடக்கும் சம்பவங்களை பார்த்து??

நம் அரசியற் தலைவர்கள் சட்ட நடவடிக்கை எடுத்து தடுக்க முயற்சிக்கலாம்,  அந்த பிரதேசத்தை சேர்ந்த மக்கள் காணியில்லாமல் தவிக்கும்போது, அரசுக்கு எதற்கு காணி? மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது  அரசின் கடமை. அந்ததந்த பிரதேசத்தில் உள்ள காணிகள் அந்த பிரதேச மக்களுக்கேயுரியது. அவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.  காணி சீர்திருத்தச் சட்டத்தை ஆராய்ந்தால் இதற்கு சரியான பதில் கிடைக்குமென நினைக்கின்றேன். சிங்கள மக்களை வடக்கில் குடியேற்றுகிறது, தேவைக்கதிகமான விகாரைகளை தனிப்பட்ட மக்களின் காணிகளிலேயே நிறுவுகிறது. இந்த அடாவடிகளை சர்வதேசத்துக்கு இடை விடாமல் அறிவிக்க வேண்டும், இல்லையேல் ஒரு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களாக சிங்கள மக்களே கருத்தப்படக்கூடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.