Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

4/21 தாக்குதல்கள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: செனல்-4 அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

4/21 தாக்குதல்கள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: செனல்-4 அறிவிப்பு

UK Channel-4 News, 'Sri Lanka's East Bombings - Dispatches' என்ற தலைப்பில் நாளை (5) ஒளிபரப்பப்படும்   நிகழ்ச்சியில் 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளை வெளியிடுவதாக செனல்-4 தாக்குதலுக்கு  'உடந்தையாக உள்ள அதிகாரிகளின் மீதும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

"2019 ஆம் ஆண்டு இலங்கையின் கொடிய ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் புதிய வெளிப்பாடுகள், அரசாங்கத்தில் உள்ள அதிகாரிகளின் உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்," என்று அது கூறியது.

கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிடப்போவதாக செனல்-4 அறிவித்துள்ள நிலையில், கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையானிள் முன்னாள் பேச்சாளரே இதில் முக்கிய பாத்திரம் வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் - அனுப்புதல்கள்" என்ற தலைப்பில் நாளை (05.09.2023) ஒளிபரப்பப்படவுள்ள இந்த நிகழ்ச்சியில், 'அரசாங்கத்திற்குள் உள்ள அதிகாரிகளே, தாக்குதல்களுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 தற்போது புகலிடம் கோரி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வசிக்கும் பிள்ளையானின் முன்னாள் பேச்சாளர் ஆசாத் மௌலானவே இந்த காணொளியின் முதன்மையான ஆதாரமாக இருப்பதாக தகவலறிந்த தரப்புகள் தெரிவித்தன.

இந்த காணொளியை ஓகஸ்ட் 15 ஆம் திகதி ஒளிபரப்ப சனல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் செனல்-4 க்கு, இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் (SIS) தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி தனது சட்டத்தரணிகள் மூலம் வழங்கிய தெளிவுபடுத்தலைத் தொடர்ந்து, அன்றைய தினம் காணொளி ஒளிபரப்பை நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவங்கள் தொடர்பில், ஆசாத் மௌலானா, தனது பெயரைப் பயன்படுத்தியுள்ள காலத்தில், தாம் இலங்கையில் கடமையாற்றவில்லை என்பதை,மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி, உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் செனல்-4 க்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலியின் பதிலைத் தொடர்ந்து, செனல்-4 காணொளியின் தலைப்பை மாற்றி நாளைய தினம் அதனை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே செனல் 4 இலங்கையின் கொலைக்களம் என்ற தலைப்பில் ஓர் ஆவணப்பட காணொளியை ஒளிபரப்பியது. இது இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதி வாரங்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் காணொளியாக வெளியாகியிறுந்தமை குறிப்பிடத்தக்கது.
 

 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/4-21-தாக்குதல்கள்-பற்றி-அதிர்ச்சியூட்டும்-தகவல்கள்-செனல்-4-அறிவிப்பு/150-323760

  • Replies 50
  • Views 4.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு ராஜபக்ஷ குடும்பத்துக்கு விசுவாசமான அதிகாரிகள் உடந்தை : செனல் - 4 தகவல்!

04 SEP, 2023 | 11:30 AM
image
 

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு ராஜபக்ஷ குடும்பத்துக்கு  விசுவாசமான இலங்கை அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்தின் செனல் - 4 இல் நாளை (05) ஒளிபரப்பப்படவுள்ள  நேர்காணல் ஒன்றில்  இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜபக்ஷர்களை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்துவதற்காக இராணுவ உளவுத்துறை அதிகாரியான சுரேஷ் சாலி மற்றும் இஸ்லாமிய அரசுடன் இணைந்த நபர்களுடன் ஒரு சதித்திட்டம் தீட்டுவதற்காக 2018 இல் ஒரு சந்திப்பு இடம்பெற்றதாகவும் அந்த நேர்காணலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு இடம்பெற்றுதுடன் சுரேஷ் சாலி என்னிடம் வந்து ராஜபக்ஷக்களுக்குத் தேவை இலங்கையில் பாதுகாப்பற்ற சூழல் அப்போது தான் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாவதற்கு ஒரே வழி” எனக் கூறியதாக  ஹன்சீர் ஆசாத் மௌலானா கூறுகிறார்.

"தாக்குதல் திட்டம்  என்பது ஓரிரு நாட்களில் செய்யப்பட்ட திட்டம் அல்ல, இது இரண்டு, மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளது."

உயிர்த்த  ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு மாதங்களுக்குப் பின்னர் பாதுகாப்பை மீட்டெடுப்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியைப் பிடித்தபோது சுரேஷ் சாலி இராணுவப் புலனாய்வுத் தலைவராக பதவி உயர்வு பெற்றார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/163797

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய வீடியோவை வௌியிடப்போகம் Channel 4

முக்கிய வீடியோவை வௌியிடப்போகும் Channel 4

 

2018ஆம் ஆண்டு இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கும் ஏப்ரல் 21 தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்திப்பைக் குறிப்பிட்டு இந்த நிகழ்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் ‘த டைம்ஸ்’ நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானியாவின் Channel 4 இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்ததாக பல சர்ச்சைக்குரிய வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி இலங்கையில் பிரபலமடைந்தது.

யுத்தம் முடிவடைந்த பின்னர், "இலங்கையின் கொலைக்களம்" (Sri Lanka's Killing Fields) என்ற சர்ச்சைக்குரிய வீடியோவில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் பல சந்தர்ப்பங்களில் அப்போதைய அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக நிராகரிக்கப்பட்டன.

ஆனால் இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியவர்களை மேற்கோள்காட்டி இத்தகைய குற்றச்சாட்டுகள் அடங்கிய வீடியோக்கலை Channel 4 தொடர்ச்சியாக ஒளிபரப்பியது.

மீண்டும் நாளை இலங்கை தொடர்பான மற்றுமொரு சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பப் போவதாக அறிவித்துக்கொண்டு களம் இறங்குகிறது பிரித்தானியாவின் Channel 4.

தற்போது நாட்டை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி வரும் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் குழுவின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய ஒருவரே இது தொடர்பான தகவல்களைத் தெரிவித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

அதிகார மாற்றத்திற்கு தகுந்தாற்போல் நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த சந்திப்பை ஏற்பாடு செய்ததாக குறிப்பிடப்படும் நபர் அதில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://tamil.adaderana.lk/news.php?nid=177199

  • கருத்துக்கள உறவுகள்

நாசமா போவார் அழிந்து போகட்டும் 😡

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் : திடுக்கிடும் தகவல்கள் இன்று வெளியாகுமென சனல் - 4 செய்திச்சேவை அறிவிப்பு

Published By: VISHNU

05 SEP, 2023 | 07:17 AM
image
 

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் தொடர்பான திடுக்கிடும் தகவல்களை 'இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் - வெளிப்படுத்தல்கள் (டிஸ்பச்சஸ்)' என்ற மகுடத்திலான ஆவணப்படத்தின் மூலம் செவ்வாய்க்கிழமை (5) வெளியிடவிருப்பதாக சனல்-4 செய்திச்சேவை அறிவித்துள்ளது. 

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பிரிட்டனைத் தளமாகக்கொண்டியங்கிவரும் சனல் - 4 செய்திச்சேவையினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட ஆவணப்படம் பல்வேறு அதிர்வுகளைத் தோற்றுவித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் செவ்வாய்க்கிழமை (5) வெளியிடப்படவுள்ள உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான ஆவணப்படத்தில், இத்தாக்குதல்களுடன் அரசாங்கத்தின் உயரதிகாரிகள் தொடர்புபட்டிருந்தமை குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகவுள்ளதாக 'லண்டன் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

 இந்த ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல்வேறு முக்கிய தகவல்கள் தற்போது புகலிடம்கோரி ஜெனிவா, சுவிஸ்லாந்தில் வசித்துவருபவரும் பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் பேச்சாளருமான அஸாட் மௌலானா என்பவரால் வழங்கப்பட்டிருப்பதாக லண்டன் டைம்ஸின் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த ஆவணப்படத்தை கடந்த ஓகட்ஸ் மாதம் 15 ஆம் திகதி வெளியிடுவதற்கு சனல்-4 செய்திச்சேவை திட்டமிட்டிருந்ததாகவும், இருப்பினும் அரச புலனாய்வு சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவினால் அவரது சட்டத்தரணிகள் ஊடாக வழங்கப்பட்ட விளக்கமளிப்பைத் தொடர்ந்து அக்காணொளி அன்றைய தினம் வெளியிடப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதுமாத்திரமன்றி குறித்த காணொளியில் தனது பெயரைப் பயன்படுத்தி அஸாட் மௌலானாவினால் குறிப்பிடப்படும் சம்பவ தினத்தன்று தான் இலங்கையில் பணியில் இருக்கவில்லை என்பதை உரிய ஆவணங்கள் மூலம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே உறுதிப்படுத்தியிருப்பதாகவும் லண்டன் டைம்ஸின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிட்ட ஆவணப்படம் செவ்வாய்க்கிழமை (5) லண்டன் நேரப்படி இரவு 11.05 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை ஒளிபரப்பப்படவிருப்பதாக சனல்-4 செய்திச்சேவை அறிவித்துள்ளது. 

 

காணொளிக்கு

 

https://twitter.com/C4Dispatches/status/1698727589756707165?s=20

https://www.virakesari.lk/article/163837

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி சம்பவத்தை மெளலானா  2021ல் தன்னிடம் தெரிவித்தாக அவுஸ்திரேலியாவில் தற்போது வசிக்கும் ஈஸ்வரன் இரட்ணம் தெரிவித்துள்ளார். Cmr.fm

  • கருத்துக்கள உறவுகள்

காக்கா, மடை மாத்திறார் எண்ட போகிறார்களோ மகிந்தா அண்ட் கம்பெனி?

பார்ப்போம், நாளைக்கு

இங்கு எனக்கு இந்த காணொளி வேலை செய்யுது இல்லை. சனல் 4 இலும் அதன் இணைப்பைக் காணவில்லை. எவரிடமாவது சரியான இணைப்பு இருந்தால், இங்கு பகிரவும்.

 நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Edited by குமாரசாமி
சுய தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சனல் 4 விவரணப் படம் வெளியிடப்படவில்லை என்று உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேனல்4 ஒரு ஆவணப்பட முன்னோட்டத்தை வெளியிட்டது
"ராஜபக்ஷ அதிகாரத்துக்காக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்தினார்"

முரளி கூறுகையில், 2009ல் பயங்கரவாதம் முடிவுக்கு வந்தது.
இப்போது இன்னொரு பயங்கரவாதம் வந்துவிட்டது (முஸ்லிம்கள்)
இதற்கு முடிவு கட்ட ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் முரளிதரரா? என்ற கேள்வி எழுகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka bombings: were 269 people killed for political power? - Dispatches exclusive

 

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக Channel 4 வெளியிட்டுள்ள ஆதாரங்கள் 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தகுண்டுத்தாக்குதலின் பின்னால், ஒரு முஸ்லீம் கிறிஸ்தவ கலவரத்தை உருவாக்கி அதிலே இந்த குண்டுத்தாக்குதலை மூடிமறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. கிறிஸ்தவர்கள் காத்த பொறுமை அதற்கு இடம் அளிக்கவில்லை, ஆகவே தாங்கள் ஒரு வலிந்த தாக்குதலை ஏற்படுத்தி முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழித்து, அவர்களை பேச விடாமல் அடக்கினர். மனித உயிர்களை கொன்று அவற்றின்மேல் அரசியலமைத்தவர் நெடுங்காலம் அதை அனுபவிக்கவில்லை, மாறாக அவரை தெரிந்தெடுத்தவர்களே அரச கதிரையிலிருந்து இழுத்து விழுத்தினர். அப்பாவி மக்கள் காரணமின்றி சிந்திய குருதி வீண் போகவில்லை. காதோடு காதாக பேசிய ரகசியம், இப்போ உலகெல்லாம் கசிந்தது எப்படி? அன்று அவர்கள் மௌனமாக வடித்த கண்ணீருக்கு கிடைத்த வெற்றி! 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

 

முரளி கூறுகையில், 2009ல் பயங்கரவாதம் முடிவுக்கு வந்தது.
இப்போது இன்னொரு பயங்கரவாதம் வந்துவிட்டது (முஸ்லிம்கள்)
இதற்கு முடிவு கட்ட ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் முரளிதரரா? என்ற கேள்வி எழுகிறது.

 

இவன் பணத்துக்காக எதுவும் செய்வான். தமிழ் தெரிந்த, தமிழ் பேச முடியாமல் திரியும் சிங்களவன். 

  • கருத்துக்கள உறவுகள்

சஹ்ரானுடன் பிள்ளையானுக்கு தொடர்பு : பிள்ளையானை உடன் விசாரணை செய்யுங்கள் - நளின் பண்டார

Published By: VISHNU

05 SEP, 2023 | 09:48 PM
image
 

 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என நாங்கள் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டது உண்மையாகியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சஹ்ரானுக்கும், இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புண்டு. ஆகவே இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனை முறையாக விசாரணை செய்ய வேண்டும்.

ராஜபக்ஷர்களின் ஆதரவுடன் ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தில் நீதி கிடைக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) இடம்பெற்ற ஆயுர்வேதம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே  செனல் -04 காணொளி வெளியீடு குறித்து கலக்கமடைந்து பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.இவ்விடயத்தை நாங்கள் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிடுகிறோம். எமது அணியில் இருந்து இந்த விடயங்களை குறிப்பிட்ட மனுஷ நாணயக்கார,ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் இன்று ஆளும் தரப்பு பக்கம் சென்றுள்ளார்கள்.

அன்ஷிப் அசாத் மௌலானா என்ற நபர் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் இருந்து அவருடன் நெருக்கமாக செயற்பட்டுள்ளார். இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் நிதி விவகாரங்களை இவரே முகாமைத்துவம் செய்துள்ளார். 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறையில் இருந்து சஹ்ரான் உட்பட அவரது தரப்பினரும் சிறையில் இருந்த சந்திரகாந்தன் ஒரு அணியாக ஒன்றிணைந்துள்ளார்கள். பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலேவுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளார்.பிள்ளையான் சலே ஊடாக  சஹ்ரான் உட்பட அவரது குழுவினர் வனாத்தவில்லு பகுதியில் சந்தித்துள்ளார்கள்.இது பாரதூரமானதொரு விடயமாகும்.பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடுவதை போன்று  இதை அலட்சியப்படுத்த முடியாது.

சிறையில் இருந்தவாறு பிள்ளையான் புலனாய்வு பிரிவின் பிரதான சுரேஷ் சலே ஊடாக தன்னை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்துக்கு வலியுறுத்துகிறார்.ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் ஆட்சியை கைப்பற்றுவதை நோக்காக கொண்டுள்ளது என்பதை ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டோம்.ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் ,புலனாய்வு பிரிதானி சுரேஷ் சலே தொடர்பில் நாங்கள் குறிப்பிட்ட விடயம் உண்மையாகியுள்ளது.

செனல் -04 வெளியிட்ட காணொளியை விமர்சிப்பதை விடுத்து இராஜாங்க அமைச்சர் பிள்ளையான்,சுரேஷ் சலே ஆகியோரை விசாரணை செய்ய வேண்டும்.அன்ஷிப் அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்து வர வேண்டும்.இதனை விடுத்து ஆளும் தரப்பினர் செனல் -04 நிறுவனத்தையும்,ஜெனிவா விவகாரத்தையும் விமர்சிக்கிறார்கள்.

உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே அன்ஷிப் அசாத் மௌலானா 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.புலனாய்வு  பிரிவின் பிரதம பொறுப்பதிகாரி சலே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பான தகவல்களை கர்தினாலுக்கும் பெயர் குறிப்பிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியதாக கேட்டு அன்ஷிப் அசாத் மௌலானாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.ஆகவே இவ்விடயத்தை அரசாங்கம் கவனத்திற் கொள்ளாமல் இருக்க முடியாது.

அதிகாரத்துக்காக ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்று சர்வதேச மட்டத்தில் குறிப்பிடப்படுகின்ற நிலையில் ராஜபக்ஷர்களுடன் இணைந்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ள முடியாது.ராஜபக்ஷர்களுக்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படமாட்டார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கை கொள்ள முடியாது. 

 ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து முஸ்லிம் -சிங்கள மக்கள் முரண்பட்டார்கள்.பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் பாரிய நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டார்கள்.முஸ்லிம் மக்கள் சமூகத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்டார்கள் ஆகவே இவர்களுக்கு சர்வதேச விசாரணையுடன் நீதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/163897

  • கருத்துக்கள உறவுகள்

சுரேஷ் சலே குற்றச்சாட்டை நிராகரித்தார் - செனல் 4

 

பிரித்தானியாவின் செனல் 4 இன்று (05) ஒளிபரப்பவுள்ள இந்நாட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சர்ச்சைக்குரிய ஆவணப்பட நிகழ்ச்சியின் ட்ரெய்லர் வௌியிடப்பட்டுள்ளது.

இதன் முழு காணொளி இங்கிலாந்து நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு ஔிபரப்பப்படவுள்ளது.

குறித்த ஆவணப்பட நிகழ்ச்சி தொடர்பில் விசேட பாராளுமன்ற குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் சிரேஷ்ட அதிகாரியான சுரேஷ் சலேவுக்கும் ஈஸ்டர் தாக்குதலின் குண்டுதாரிகளுக்கும் இடையில் 2018ஆம் ஆண்டு சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் தி டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பிள்ளையான் குழுவின் ஊடகப் பேச்சாளராக இருந்த அசாத் மௌலானாவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த ஆதாரம் அமைந்துள்ளது.

இன்று வெளியான ட்ரெய்லரில், தொலைதூரப் பண்ணையில் அப்போதைய இராணுவப் புலனாய்வுப்பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேவுக்கும் தவ்ஹீத் ஜமாத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே சந்திப்பை ஏற்பாடு செய்ததாக அசாத் மௌலானா கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தை ஒழுங்கமைக்குமாறு இராஜாங்க அமைச்சர் சிவனேஷ்துரை சந்திரகாந்தன் தன்னிடம் கேட்டதாக அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னர் சைனி மௌலவியை சந்திக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் அசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர், ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சஹ்ரானின் சகோதரர் என்பதை பின்னர் தான் கண்டுபிடித்ததாக அசாத் மௌலானா கூறினார்.

கூட்டத்தின் முடிவில் சுரேஷ் சலே தன்னிடம் வந்து ராஜபக்சக்கள் நாட்டில் பாதுகாப்பின்மையை உருவாக்க விரும்புவதாகவும் அதன் மூலம் தான் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வர முடியும் என்றும் அசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவோ அல்லது சிவனேஷ்துரை சந்திரகாந்தனோ பதிலளிக்கவில்லை என்றும் சுரேஷ் சலே இது தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் என்றும் செனல் 4  கூறுகிறது.

சஹ்ரான் உள்ளிட்ட குழுவுடன் சந்திப்பு நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் தான் மலேசியாவில் இருந்ததாகவும், ஈஸ்டர் தாக்குதல் நடந்தபோது இந்தியாவில் தங்கியிருந்ததாகவும் சலே கூறியதாக செனல் 4 தெரிவித்துள்ளது.
 

https://tamil.adaderana.lk/news.php?nid=177258

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

இந்தகுண்டுத்தாக்குதலின் பின்னால், ஒரு முஸ்லீம் கிறிஸ்தவ கலவரத்தை உருவாக்கி அதிலே இந்த குண்டுத்தாக்குதலை மூடிமறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. கிறிஸ்தவர்கள் காத்த பொறுமை அதற்கு இடம் அளிக்கவில்லை, ஆகவே தாங்கள் ஒரு வலிந்த தாக்குதலை ஏற்படுத்தி முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழித்து, அவர்களை பேச விடாமல் அடக்கினர். மனித உயிர்களை கொன்று அவற்றின்மேல் அரசியலமைத்தவர் நெடுங்காலம் அதை அனுபவிக்கவில்லை, மாறாக அவரை தெரிந்தெடுத்தவர்களே அரச கதிரையிலிருந்து இழுத்து விழுத்தினர். அப்பாவி மக்கள் காரணமின்றி சிந்திய குருதி வீண் போகவில்லை. காதோடு காதாக பேசிய ரகசியம், இப்போ உலகெல்லாம் கசிந்தது எப்படி? அன்று அவர்கள் மௌனமாக வடித்த கண்ணீருக்கு கிடைத்த வெற்றி! 

அப்பாவி மக்கள்தான் 14 வருடங்களுக்கு முன்பும் சிந்திய குருதிக்கும் கண்ணீருக்கும் இன்னமும் விடிவு கிடைக்கவில்லை…கடவுள்மாரும் பாராபட்சம் பார்க்கிறார்களோ?

தங்களுக்கு தேவையான பொழுது  இந்த மாதிரி காணெளிகளை வெளியே விடுவது.. பின் ஒன்றுமே நடவாதது போல அவர்களுக்கே அதிகாரங்களைக் கொடுப்பது. இப்படியான விடயங்கள் எத்தனை நடந்துள்ளது. அவ்வளவுதான். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Channel 4 Documentary Easter Sunday Sri Lanka

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி தன்னுடைய பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றச்சாட்டு

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.jpg

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி தன்னுடைய பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

உயித்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத தாக்குதல் சம்பவமாகும்.

குறித்த குண்டுத்தாக்குதலை ஐஎஸ் அமைப்பினரே மேற்கொண்டனர் என அதன் தலைவர் தெரிவித்திருந்தார். ஐ எஸ் அமைப்பின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலும் அவர்கள் உரிமை கோரியிருந்தனர். தற்கொலை குண்டுத்தாக்குதல் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பிலும் எந்த நோக்கத்திற்காக செய்யப்பட்டது என்பது தொடர்பிலும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் ஹன்சீர் அஷாட் மௌலானா வெளிநாட்டில் தஞ்சம் கோருவதற்காக இதனை மறுபக்கம் திருப்புவதற்கு முயற்சிப்பதாக தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மதத்திற்காக மரணிப்போம் என சத்தியபிரமாணம் செய்த சிலர் சிறையிலும் வெளியிலும் இருக்கின்றார்கள். அவர்களை மரணிப்பதற்கு ஊக்குவித்த சில மதநிறுவனங்களும், அரசியல் சக்திகள், மற்றும் சர்வதேச சக்திகள் காணப்படுகின்றன. இதனை காப்பாற்றுவதற்கான ஹன்சீர் அஷாட் மௌலானா மேற்கொண்டுள்ள பலத்த முயற்சியே செனல் 4 நிறுவனத்திற்கான சாட்சியமளிப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் மீண்டும் ஒரு அச்சுறுத்தலான சூழலை உருவாக்க முயற்சிக்கின்றார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆண்டுவரையிலான காலப்பகுதியில் நான் சிறைச்சாலையிலிருந்தேன். அவ்வாறு சிறைச்சாலையிலிருக்கும் போது எவ்வாறு இவ்வாறானதொரு குற்றத்தை இழைக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும் ஹன்சீர் அஷாட் மௌலானா போன்றவர்கள் தங்கள் வாழ்விற்காக காட்டிக்கொடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற சந்தர்ப்பங்களில் சில தமிழ் அரசியல்வாதிகள் அதில் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/272002

  • கருத்துக்கள உறவுகள்

செனல் 4 யுத்த வைராக்கியத்துடன் செயற்படுகிறது - நாமல் ராஜபக்ஷ

06 SEP, 2023 | 04:55 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

செனல் 4 யுத்த வைராக்கியத்துடன் செயற்படுகிறது. கொள்கைக்கு அப்பாற்பட்டு, சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை எமக்கில்லை. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் விசாரணைகள் அரசியலுக்காக பயன்படுத்தப்படும்  வரை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் கிடைப்பது சாத்தியமற்றது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (06) இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்காகவே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்ற தவறானதொரு நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். நாங்கள் கொள்கை அடிப்படையில் செயற்படுகிறோமே தவிர சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடவில்லை.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை பொதுஜன பெரமுன தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது.

பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது. குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தற்கொலை குண்டுதாரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார மேடையில் கலந்துகொண்டார்.

பிரதான குண்டுதாரி ஒருவரின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராகவும் இருந்தார். அவ்வாறாயின் இவர்கள் அனைவரும் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றிக்காக ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்று குறிப்பிட வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 720 பேருக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு 70 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மட்டத்துக்கு அப்பாற்பட்டு அமெரிக்காவிலும் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குண்டுத்தாக்குல் சம்பவம் மற்றும் விசாரணைகள் தற்போது தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது. ஆகவே அரசியல் நோக்கத்துக்காக இவ்விடயம் பயன்படுத்திக்கொள்ளப்படும் வரை குண்டுத்தாக்குதலின் உண்மை சூத்திரதாரியை கண்டுபிடிப்பதும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைப்பதும் சாத்தியமற்றது என்றார்.

https://www.virakesari.lk/article/163960

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Cruso said:

இவன் பணத்துக்காக எதுவும் செய்வான். தமிழ் தெரிந்த, தமிழ் பேச முடியாமல் திரியும் சிங்களவன். 

இவன் ஆரம்பித்த கம்பனி பாக்டரி, தமிழ்நாட்டுக்குப் பயந்து பெங்களூரில் அமைந்துள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி தன்னுடைய பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஆமா.... நாட்டிலே எத்தனையோ அரசியல் வாதிகள் இருக்க, தங்கள் பெயரை மட்டும் பயன்படுத்த காரணம் என்ன? அவ்வளவு புகழ் வாய்ந்த பெயரோ, பதவியோ தாங்கள் வகிப்பது? நாட்டுக்காக போராடிய எத்தனையோ போராளிகள் இன்னும் சிறைகளிலும் அச்சுறுத்தலிலும் கண்காணிப்பிலும் இருக்கும்போது, தங்களுக்கு மட்டும் இராஜாங்க அமைச்சர் பதவி எப்படி கிடைத்தது? அதற்கு தங்களுக்குள்ள தகுதியென்ன? ஒரு பியோனை நியமிக்க அதிகாரமற்ற முதலமைச்சர் பதவி என்று புலம்பியவரை எதற்காக இலக்கு வைத்து குற்றம் சாட்டப்படுகிறது? அப்படி எதனை இவர் சாதித்தார்? சிங்களம் தன்னை பாதுகாக்கவும் தனது திட்டங்களை நிறைவேற்றவும் தான் சிக்கிக்கொள்ளும்போது இவர்களை பலியிடவும் இவர்களுக்கு பதவி அந்தஸ்த்து மரியாதையை கொடுத்து காப்பாற்றுகிறது, சமயம் வரும்போது தான் மாட்டிக்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும்போது விபத்து ஒன்று போதும், இவர்களை இல்லாமல் செய்வதற்கு அதனாலேயே கூட இருந்து செயலாற்றிய பலர் தங்களுக்கு எதிராக சூழ்நிலை  திரும்பும்போது நாட்டை விட்டு  தப்பிவிடுகின்றனர்.

8 hours ago, ஏராளன் said:

குறித்த குண்டுத்தாக்குதலை ஐஎஸ் அமைப்பினரே மேற்கொண்டனர் என அதன் தலைவர் தெரிவித்திருந்தார். ஐ எஸ் அமைப்பின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலும் அவர்கள் உரிமை கோரியிருந்தனர். தற்கொலை குண்டுத்தாக்குதல் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பிலும் எந்த நோக்கத்திற்காக செய்யப்பட்டது என்பது தொடர்பிலும் அறிவிக்கப்பட்டிருந்தது

அதை யாரும் மறுக்கவில்லையே, இவர் விளக்கம் கொடுப்பதற்கு தேவையில்லையே. அறிவிலிகள் கொடுக்கும் விளக்கம் தங்களையே காட்டிக்கொடுத்து விடும். ஐ .எஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதற்கு காரணம் ஒன்று இருக்கத்தேவையில்லை. அவர்கள் எந்த நோக்கமும் அற்றவர்கள், கொலை ஒன்றே அவர்களை இலட்சியம். ஐ. எஸ் அமைப்பினருக்கும் இலங்கை தமிழ் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் என்ன பிரச்சனை இருந்தது குண்டுத்தாக்குதல் நடத்துமளவிற்கு? அல்லது சுற்றுலா விடுதியில் தங்கியிருந்தவர்களுக்கும் ஐ. எஸ் அமைப்பினருக்கும் இடையில் என்ன தகராறு இருந்தது? அவர்கள் யார்? அவர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? இவ்வளவு விளக்கம் கொடுப்பவர் அதையும் விளக்க வேண்டும்!

9 hours ago, ஏராளன் said:

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆண்டுவரையிலான காலப்பகுதியில் நான் சிறைச்சாலையிலிருந்தேன். அவ்வாறு சிறைச்சாலையிலிருக்கும் போது எவ்வாறு இவ்வாறானதொரு குற்றத்தை இழைக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.

சிறைச்சாலையில் இருந்தவாறே தேர்தலில் போட்டியிட்டு வெல்லமுடியுமென்றால் ஏன் கொலை செய்ய முடியாது? மலேசியாவில் இருந்த ஒருவர், சிங்கப்பூரில் இருந்த ஒருவர், சிறையில் இருந்த ஒருவர் தீட்டிய திட்டத்தை நடைமுறைப்படுத்த இன்னும் பலர் இருக்கின்றனர். தாங்கள் ஏன் சிறையில் இருந்தீர்கள் என்பதையும் விளங்கப்படுத்த வேண்டும்.

9 hours ago, ஏராளன் said:

மேலும் ஹன்சீர் அஷாட் மௌலானா போன்றவர்கள் தங்கள் வாழ்விற்காக காட்டிக்கொடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற சந்தர்ப்பங்களில்

உயிரை காப்பாற்றுவதற்காக என்று சொல்வதே பொருத்தமாகும்.  சரியான வார்த்தைப்பிரயோகம் .

9 hours ago, ஏராளன் said:

2019ஆம் ஆண்டுக்கு முன்னர் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது.

உள்ளூர் ஆட்சித்தேர்தலும் பாராளுமன்றத் தேர்தலும் ஒன்றா பொடி மாத்தையா? அப்போ எதற்கு பாராளுமன்றத் தேர்தல்? அதோடு ஆட்சியை நடத்தியிருக்கலாமே? அப்படி அமோக வெற்றி பெற்றவர்கள் தப்பியோட காரணமென்ன? அதெப்படி இந்தக்குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் ஒரே பல்லவியை போடமுடியும்? அப்போ..... ஒரே குறிக்கோளுடன் ஒருமித்து செயற்பட்டிருக்கிறீர்கள், அதனாலேயே வேறு மாதிரி சிந்திக்கவோ விளங்கப்படுத்தவோ முடியவில்லை. கருத்து, செயல் ஒற்றுமை எங்கேயோ உதைக்கிறதே?

9 hours ago, ஏராளன் said:

குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தற்கொலை குண்டுதாரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார மேடையில் கலந்துகொண்டார்.

மைத்திரியும் தங்கள் தந்தையாரும் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றியிருக்கின்றனரே இந்த தாக்குதலின்பின் ஆட்சி மாற்றத்தின் பின், அதெப்படி? சிங்கள இனவாதிகள் எந்தக்கட்சியில் இருந்தாலும் அவர்களின் தமிழின அழிப்பு கொள்கை ஒன்றுதானே.

9 hours ago, ஏராளன் said:

பிரதான குண்டுதாரி ஒருவரின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராகவும் இருந்தார்.

வாப்பா இருக்கும் கட்சியில் மகனும் இருக்க வேண்டும் என்று கட்டாயம் எதுவுமில்லையே. தாக்குதலை  நடத்தியவர்கள் ஐ. எஸ் தீவிரவாதிகள் என அந்த இயக்கமும் நீங்களும் அறிவித்தீர்களல்லவா? பிறகு ஏன் இப்படி குழப்புகிறீர்கள்? அவர்கள்  மக்கள் விடுதலை முன்னணியை தாக்கியதாக யாரும் கூறவில்லையே?

 

9 hours ago, ஏராளன் said:

ஆகவே அரசியல் நோக்கத்துக்காக இவ்விடயம் பயன்படுத்திக்கொள்ளப்படும் வரை குண்டுத்தாக்குதலின் உண்மை சூத்திரதாரியை கண்டுபிடிப்பதும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைப்பதும் சாத்தியமற்றது என்றார்.

தாக்குதல் நடந்து இத்தனை காலம் கடந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிஞாயம் வழங்கப்படாதது ஏன்? அது யாரின் தவறு? குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாது என்பதே நிஜம் என்பது நாட்டு மக்கள் நன்கறிவர். காலம் எத்தனை விசித்திரமானது! ஆட்சியை இழந்தவர் கதிரையில், ஆட்சியை தக்க வைக்க பாதிக்கப்பட்ட மக்கள், பகடைக்காய்களாக பாவிக்கப்பட்ட மக்கள், உங்களுக்காக வாதாடிய மக்கள் உங்களை தண்டிக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். இனி நீங்கள் செய்தவற்றுக்கு அனுபவிக்க தயாராகுங்கள். எங்கள் தாய் தந்தையர் குழந்தைகள் தெருவிலே உறவுகளை தேடியலைகிறார்கள், இழந்து தவிக்கிறார்கள் அவர்களுக்கு காலம் பதில் சொல்லவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் இன்று ஆளும் தரப்பு பக்கம் சென்றுள்ளார்கள்.

பல அரசியல்வாதிகள் பலர் இந்தத்தாக்குதல் பற்றி ஏற்கெனவே அறிந்திருந்தனர். ஹரின் பெர்னாண்டோ அந்தச்சமயத்தில் தனது தந்தையை பார்க்க வைத்தியசாலைக்கு சென்றபோது தன்னை உயிர்த்த ஞாயிறு திருப்பலிக்கு போகவேண்டாம் என்று தந்தையார் தடுத்ததாக கூறியிருந்தார். அதற்கு இந்த மல்கம், அதை தனக்கு அறிவித்திருந்தால் தான் இந்த அசம்பாவிதத்தை தடுத்திருப்பேன் என்று கூறியிருந்த்தார். எது எப்படியோ உண்மை தெரிந்தும் அதை மறைத்து இத்தனைபேர் பலியாக காரணமாயிருந்த எல்லோருமே குற்றவாளிகள், அவர்களது மனச்சாட்சி அவர்களை தண்டிக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.