Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் மீதான பாலியல் புகாரில் போலீசார் சம்மன் - நாம் தமிழர் கட்சியினர் கூறுவது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பாலியல் புகார்: விசாரணைக்கு நேரில் ஆஜராக சீமானுக்கு போலீசார் அனுப்பிய சம்மன்! நாம் தமிழர் கட்சியினர் விளக்கம் என்ன?

பட மூலாதாரம்,NAAM TAMILAR

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ச. பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 49 நிமிடங்களுக்கு முன்னர்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொண்டதாகவும், தானும் சீமானும் கணவன்-மனைவியாக வாழ்ந்ததாகவும், தனது அனுமதி இல்லாமலேயே சீமான் தனக்கு 7 முறை கருச்சிதைவு செய்ததாகவும், நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் சென்னை காவல்துறையினரிடம் புகார் கொடுத்திருந்தார்.

தற்போது இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ள சென்னையைச் சேர்ந்த நடிகை விஜயலட்சுமி, ‘‘சீமான் என்னை திருமணம் செய்து ஏமாற்றியதுடன், என் அனுமதியின்றி கருவைக் கலைத்துள்ளார்,’’ எனக் கூறி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, 2011இல் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை, ஆரம்பம் முதலே சீமான் மறுத்து வருகிறார். அவ்வப்போது இந்த விவகாரம் செய்திகளில் வெளியாகி அரசியல் களத்தில் பேசுபொருளாவதும், பிறகு அமைதியாவதும் கடந்த பத்தாண்டுகளாக நடந்து வருகிறது.

இப்படியான நிலையில் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தார்.

போலீஸார் சம்மன்
 
படக்குறிப்பு,

விசாரணைக்கு நேரில் ஆஜராக சீமானுக்கு சென்னை வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

நான் சினிமாவில் நடித்து சேர்த்து வைத்திருந்த 60 லட்சம் ரூபாய் பணம், 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளைப் பெற்றுக்கொண்டார். எனக்குத் தெரியாமல் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நான் அளித்த புகாரின் பேரில், 2011இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார்.

சீமான் மீதும், என்னை மிரட்டும் மதுரை செல்வம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என விஜயலட்சுமி தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

விஜயலட்சுமியின் புகாரின் பேரில் சீமான் மீது போலீஸார், பாலியல் வல்லுறவு, மோசடி, மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த விவகாரம் அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

சீமான், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்

போலீசார் விஜயலட்சுமியை நேரில் வரவழைத்து, 8 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தி, ஆதாரங்களைப் பெற்று, திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். செப்டம்பர் 1ஆம் தேதி சீமான் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க ஊட்டி வந்திருந்தார்.

அப்போது, ‘விஜயலட்சுமி கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் சீமான் எந்த நேரத்திலும் ஊட்டியில் வைத்து கைது செய்யப்படலாம்,’ என்ற தகவல் பரவியது. ஆனால், சம்மன் கொடுப்பது, கைது செய்வது என எதுவும் அப்போது நடக்கவில்லை.

ஊட்டியில் நிருபர்களிடம் பேசிய சீமான், ‘‘விஜயலட்சுமி விவகாரத்தில் நான் மெளனமாக இருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் வெடித்துச் சிதறினால் யாரும் தாங்க மாட்டீர்கள்.

பெரிய லட்சியங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் என்னை அவதூறு செய்கிறார்கள். என்னை எதிர்கொள்ள முடியாதவர்கள் விஜயலட்சுமியை வைத்து அரசியல் செய்கிறார்கள். இது எனக்கு எதிரான அரசியல் கட்சிகளின் சதி,’’ என காட்டமாகப் பேசியிருந்தார்.

மேலும், விஜயலட்சுமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், விஜயலட்சுமி மற்றும் அவருக்கு ஆதரவாக வந்த தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி ஆகியோர் மீது, நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் அவதூறு வழக்குகள் பதிவு செய்ததுடன், ‘விஜயலட்சுமி பணம் பறிப்பதற்காக சீமான் மீது புகார் கொடுத்துள்ளார்,’ எனக் கூறி, சமூக ஊடகங்களில் வீடியோக்களையும் பதிவேற்றினர்.

போலீஸார் சம்மன்
 
படக்குறிப்பு,

சீமான் மீது விஜயலட்சுமி கொடுத்த புகார் பொய்யானது என்று நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு சம்மன்

விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், செப்டம்பர் 7ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் செப்டம்பர் 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு, ‘விஜயலட்சுமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. வழக்கு தொடர்பான விசாரணையைச் செய்ய வேண்டியுள்ளது.

செப்டம்பர் 9ஆம் தேதி காலை, 10:30 மணிக்குள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும்,’ என எழுதப்பட்ட சம்மன் ஒன்றை, பாலவாக்கம் சக்திமூர்த்தி அம்மன் நகரில் உள்ள சீமானிடம் வளசரவாக்கம் போலீஸார் நேரில் வழங்கியுள்ளனர்.

சம்மன் வழங்கியது பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், சீமான் இதுவரை காவல் நிலையத்தில் ஆஜராகவும் இல்லை, இது தொடர்பாக அவர் பொதுவெளியில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

சீமானுக்கு வழங்கப்பட்ட சம்மன் தொடர்பாகக் கேள்வி எழுப்பியபோது, பிபிசி தமிழுக்கு நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் விளக்கமளித்தார்.

அண்ணன் சீமான் மீது விஜயலட்சுமி கொடுத்த புகார் பொய்யானது. இதை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம். சிவகங்கையில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளதால், சீமான் சிவகங்கை செல்கிறார். வரும், 12ஆம் தேதி ஆஜராக போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளோம்,” என்றார் இடும்பாவனம் கார்த்திக்.

https://www.bbc.com/tamil/articles/c0v5rv9vjnjo

  • Replies 82
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நடிகை விஜயலட்சுமி வழக்கில் சம்மன்: செப்.12-ல் விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்

1121055.jpg

சென்னை: நடிகை விஜயலட்சுமி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கூறி போலீஸார் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், வரும் 12-ம் தேதி சீமான் விசாரணைக்கு ஆஜராகிறார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், சமரசம் ஏற்பட்டு, அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 28-ம் தேதி, சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், விஜயலட்சுமி திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் கடந்த 1-ம் தேதி ஆஜரானார்.

பின்னர், அன்று இரவு கோயம்பேடு காவல் துணை ஆணையர் உமையாள் தலைமையிலான போலீஸார், விஜயலட்சுமியிடம் மதுரவாயல் காவல் நிலையத்தில் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், சீமான் கட்சியினரும் விஜயலட்சுமி மீது புகார்களை அளித்து வந்தனர்.

விஜயலட்சுமி 7 முறை கட்டாயக் கருகலைப்பு செய்ததாக புகார் தெரிவித்திருந்த நிலையில், அதன் உண்மைத் தன்மையை அறிய, கடந்த 7-ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு 2 மணி நேரம் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், சீமானிடம் விசாரணை நடத்த செப். 9-ம் தேதி ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பி இருந்தனர்.ஆனால், கட்சிப் பணிகளுக்காக வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால், செப்.12-ம் தேதி காலை 10 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராவதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1121055-summons-on-actress-vijayalakshmi-case-seeman-will-appear-for-hearing-on-september-12th.html

டிஸ்கி:

ஆளும் திமுகவிடம் டீல் போட்டு விட்ட தெனாவெட்டில் - 9ம் திகதி வருமாறு பொலிஸ் அழைக்க, எனக்கு கட்சி மீட்டிங் இருக்கு - 12ம் திகதி வாறேன் என சொல்லியுள்ளார் அண்ணன்.

இதை ஒரு அரசியல் பலம் இல்லாதவர் செய்திருந்தால் - பிடித்து பேஸ்டை பிதுக்கி இருக்கும் பொலிஸ். இப்போ கை கட்டி வேடிக்கை பார்க்கிறது.

இந்த வழக்கு சுயாதீனமாக விசாரிக்கப்பட திமுக விடாது என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது (இதையேதான் முன்னர் விஜைலச்சுமி புகார் கொடுத்த போது அதிமுகவும் செய்தது).

12 minutes ago, goshan_che said:

போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், சமரசம் ஏற்பட்டு, அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

இந்தத் தடவையும் சீமான் தன்னைப் பல ஆண்டுகளாக அவமானப்படுத்தி வரும் விஜயலட்சுமியுடன் எந்த ஒரு சமரசத்துக்கும் போகாமல் வழக்கில் எதிர்த்து வெல்ல வேண்டும். அத்துடன் விஜயலட்சுமியால் ஏற்பட்ட களங்கத்தைப் போக்குவதற்காக அவர்மீது மானநட்ட வழக்குத் தொடர்ந்து எதிர்காலத்தில் பிரச்சனை வராமல் தடுக்க வேண்டும். 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

உண்மை.

போனமுறை போல், ஆட்சியில் உள்ள கட்சிக்கு ஆதரவாக தன் நிலைப்பாட்டை மாற்றி அதன் மூலம் விஜயலட்சுமியை மிரட்டி வழக்கை வாபஸ் வாங்க வைத்தார் என்ற இழிசொல்லுக்கு இடம் கொடாமல் - வழக்கை பூரண நீதி விசாரணைக்கு உட்படுத்துமாறு சீமான் கோர வேண்டும்.

மீறி வாபஸ் வாங்கினால் - விஜலட்சுமி மீது ஆயிரம் கோடி மானநஸ்ட வழக்கு தொடுக்க வேண்டும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

இந்த கட்டுரை பிபிசி தமிழின் இன்னொரு கேவலமான கட்டுரை என்றே சொல்ல வேண்டும்.

சீமான் என்ற மனிதர் மீது குற்றம் சாட்டப்பட்டால் அவரை, அல்லது அவர் நியமித்த ஒருவரை தனிபட்ட முறையில் பேட்டி காண்பதுதான் முறை.

நா த க என்பது ஒரு அரசியல் கட்சி. விஜைலச்சுமி ஜிவானாம்ச விவகாரம் அதன் கொள்கை முடிவா என்ன?

இதில் ஏன் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார்கள்? பேட்டி எடுக்கிறார்கள்?

அதுவும் தம்பி இடும்பாவனம் கார்த்திக் - சீமான் அண்ணன் சில்மிசத்தில் ஈடுபட்டதாக சொல்ல பட்ட நாட்களில் குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் சாப்பிடும் வயதில் இருந்தார்🤣. அவரை போய் என்னத்தை கேட்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இணையவன் said:

இந்தத் தடவையும் சீமான் தன்னைப் பல ஆண்டுகளாக அவமானப்படுத்தி வரும் விஜயலட்சுமியுடன் எந்த ஒரு சமரசத்துக்கும் போகாமல் வழக்கில் எதிர்த்து வெல்ல வேண்டும். அத்துடன் விஜயலட்சுமியால் ஏற்பட்ட களங்கத்தைப் போக்குவதற்காக அவர்மீது மானநட்ட வழக்குத் தொடர்ந்து எதிர்காலத்தில் பிரச்சனை வராமல் தடுக்க வேண்டும். 😎

இது ஒரு நடுநிலை பார்வை:

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

இது ஒரு நடுநிலை பார்வை:

யாரு நம்ம சங்கி கஸ்தூரியா🤣 🤣 🤣

நிச்சயம் நடுநிலைப்பார்வையாத்தான் இருக்கும்.

பிகு

ஆனா கஸ்தூரிக்கு தம்பிகள் சில வருடங்கள் முன்பு நடத்திய “பட்டமளிப்பை” மன்னித்து, இப்படியாக சீமானுக்கு ஆதரவாக பேசும் கஸ்தூரியின் நல்ல குணம் பாராட்டுக்குரியது.

“எதிரிகளை வெல்ல ஆயிரம் வழிகளுண்டு, முதல் வழி மன்னிப்பு”.

  • கருத்துக்கள உறவுகள்

வீரலச்சுமிக்கும் விஜயலச்சுமிக்கும் இடையான மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

வீரலச்சுமி சீமான் மீது இன்னுமொரு பகீர் பாலியல் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

https://m.facebook.com/profile.php/?id=100050304498811&name=xhp_nt__fb__action__open_user

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

வீரலச்சுமிக்கும் விஜயலச்சுமிக்கும் இடையான மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

வீரலச்சுமி சீமான் மீது இன்னுமொரு பகீர் பாலியல் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

https://m.facebook.com/profile.php/?id=100050304498811&name=xhp_nt__fb__action__open_user

12 இலட்சம் பேச்சு!

இப்ப டிமாண்ட் ஒரு கோடி! 

வீரலட்சுமிக்கு தனியா கொடுத்திரனுமாம். அந்த கண்டிசணில் தான் மீள்ளிணைவு.

கூப்பிட்டவர்கள் போதுமடா சாமி என்று தலய பிச்சுகிறார்களாம்.

இடைல, திமுக தன்னை சீமான் எதிர் அரசியலுக்கு பயன்படுத்த கூடாது என்று ஒரு வீடியோ ஓடுது.

ஆக காசு தான் குறி.

இதுல டீம்கா எமகாதகர்கள் என்றாலும் பெங்களூரு லட்சுமீ, மகா அலேட் பேர்வழி. 

கைல காசு, வாயில தோசை ரைப்.

நம்மாளுக்கும் போலீசீல ஆளுங்க இருப்பாங்க தானே. என்ன ஒடீட்டு இருக்கு என்று புல் அப்டேட்டு.

ஆக.... உன்னிப்பாக அவதானிப்போம்!!

🥸

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

விஜய லச்சுமி கேஸ் போல இன்னும் பலது வரும் போல இருக்கு - வீரலச்சுமி சொல்றத பார்த்தா. ..

அண்ணன் தொண்டை நரம்பு வெடிக்க கதறி சேர்த்த அத்தனை காசையும் இதிலயே கரைச்சுடுவார் போல இருக்கே?

large.IMG_3833.jpeg.87b2fc5bfb3db3ff2e7905e9074601ad.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரசியல் கட்சி தலைவர் மீது இன்னொரு கணிசமான profile உள்ள நபர் இப்படி பொதுவெளியில் பாரிய குற்றச்சாட்டை இதுவரை செய்ததில்லை.

பொய்யாக இருக்கும் பட்சத்தில் இது மிக பெரிய மானநஸ்ட முயற்சி.

யூடியூப்பில் சின்ன பையன்களை வைத்து வண்டில ஏறுங்க…. கு….குதிரையில் ஏறுங்க என காமெடி பண்ணாமல் ….சீமான் இதற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லை என்றால் …. ஏன் என்ற கேள்வி எழும்.

13 minutes ago, goshan_che said:

large.IMG_3833.jpeg.87b2fc5bfb3db3ff2e7905e9074601ad.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

ஒரு அரசியல் கட்சி தலைவர் மீது இன்னொரு கணிசமான profile உள்ள நபர் இப்படி பொதுவெளியில் பாரிய குற்றச்சாட்டை இதுவரை செய்ததில்லை.

பொய்யாக இருக்கும் பட்சத்தில் இது மிக பெரிய மானநஸ்ட முயற்சி.

யூடியூப்பில் சின்ன பையன்களை வைத்து வண்டில ஏறுங்க…. கு….குதிரையில் ஏறுங்க என காமெடி பண்ணாமல் ….சீமான் இதற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லை என்றால் …. ஏன் என்ற கேள்வி எழும்.

இதென்ன கதை? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

அண்ணன் தொண்டை நரம்பு வெடிக்க கதறி சேர்த்த அத்தனை காசையும் இதிலயே கரைச்சுடுவார் போல இருக்கே?

அவரது அருமை உலகத் தமிழர்கள் இன்னும் அதிகமாக அள்ளித் தருவார்கள்.

தமிழச்சி கி. வீரலட்சுமி, “இளைஞர்களுக்கு மூல செலவை…” என்று எழுதியிருக்கிறாரே கவனித்தீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

இதென்ன கதை? 🤔

அட நம்ம தூசண துரைமுருகன்🤣.

மீண்டும் சொல்கிறேன் - வீரலச்சுமி செய்திருப்பது மாபெரும் மானபங்கம்.

கவுண்டர் பாணியில் சொல்வதானால் - மானம்-மாரியாத்தா, சூடு-சூலாயுதம் இருக்கும் ஆள் என்றால் சீமான் அவர் மீது மான நஸ்ட வழக்கு போட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, இணையவன் said:

இந்தத் தடவையும் சீமான் தன்னைப் பல ஆண்டுகளாக அவமானப்படுத்தி வரும் விஜயலட்சுமியுடன் எந்த ஒரு சமரசத்துக்கும் போகாமல் வழக்கில் எதிர்த்து வெல்ல வேண்டும்.

12 வருடத்துக்கு ஒரு முறை மலர்வதுதான் குறிஞ்சி மலர்.  பொறுமை அவசியம்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kavi arunasalam said:

அவரது அருமை உலகத் தமிழர்கள் இன்னும் அதிகமாக அள்ளித் தருவார்கள்.

தமிழச்சி கி. வீரலட்சுமி, “இளைஞர்களுக்கு மூல செலவை…” என்று எழுதியிருக்கிறாரே கவனித்தீர்களா?

அந்த தமிழச்சியின் இயற்பெயர் ஆனந்தி நாயுடு என்கிறார்கள்.

இது பழைய பதிவு என்று நிணைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

கவுண்டர் பாணியில் சொல்வதானால் - மானம்-மாரியாத்தா, சூடு-சூலாயுதம் இருக்கும் ஆள் என்றால் சீமான் அவர் மீது மான நஸ்ட வழக்கு போட வேண்டும்.

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிடுறாங்க தலைவா

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kavi arunasalam said:

அவரது அருமை உலகத் தமிழர்கள் இன்னும் அதிகமாக அள்ளித் தருவார்கள்.

தமிழச்சி கி. வீரலட்சுமி, “இளைஞர்களுக்கு மூல செலவை…” என்று எழுதியிருக்கிறாரே கவனித்தீர்களா?

ஓம் கவனித்தேன்.  யாழில் வயது வித்தியாசம் இல்லாமல் இப்படி சுத்தமாக கழுவி பளபளப்பாக துலங்கும் மூளைகளோடு வருடகணக்கில் மாரடித்த எனக்கு இந்த உண்மை புரிகிறது.

ஆனால் சீமான் பற்றி இப்போ வீரலக்குமி சொல்வது மிக பெரிய குற்றச்சாட்டு. 

இவர் யாரோ முகமறியா முக நூல் கணக்கு அல்ல.

இதில் உண்மை பொய் எது என்பதை - கழுவபட்ட தம்பிகள் வெளியிடும் வீடியோவை வைத்து முடிவு செய்ய முடியாது.

இதை சீமான் எப்படி எதிர்கொள்கிறார் என்பதில் இருந்து அவரை பற்றி உய்தறியலாம்.

வீரலக்சுமி மீது கட்சி சார்பாக அன்றி தானே சீமான் வழக்கு போட்டால் - வழக்கு முடிவை வைத்து தீர்மானிக்கலாம் - வீரலக்சுமி சொல்வது பொய்யா, மெய்யா என.

வழக்கே போடாமல் தட்டி கழித்தால் - ஏதோ உண்மை இருப்பதாக கருதலாம்.

7 minutes ago, Nathamuni said:

அந்த தமிழச்சியின் இயற்பெயர் ஆனந்தி நாயுடு என்கிறார்கள்.

இது பழைய பதிவு என்று நிணைக்கிறேன்.

சீமானை பற்றி புகார் கூறினால் - முருகனையே முருகப்பா ரெட்டியார் என தம்பிகள் கூறுவார்கள்🤣.

ஏன் இந்த யாழ்களத்தில் கொஞ்சம் வயசான தம்பி என்னையே தெலுங்கர் என கூறியுள்ளார்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

வீரலக்சுமி மீது கட்சி சார்பாக அன்றி தானே சீமான் வழக்கு போட்டால் - வழக்கு முடிவை வைத்து தீர்மானிக்கலாம் - வீரலக்சுமி சொல்வது பொய்யா, மெய்யா என.

வாய்ப்பில்லை ராஜா.

“பலர் அவதூறு செய்வார்கள் எல்லோர் மேலேயும் வழக்குப் போட முடியுமா?” என்று சீமான் கேட்டு விட்டு தன் வேலையைப் பார்க்கப்  போய் விடுவார். ஈழப் பெண்ணொருத்திக்கு வாழ்வு கொடுக்கப் போகிறேன் என்று கொஞ்ச காலமாக சொல்லித் திரிந்தாரே, அதைப் பற்றி இப்பொழுது யாரும் பெரிதாக கதைப்பதில்லை. அது போலத்தான் இதுவும். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kavi arunasalam said:

ஈழப் பெண்ணொருத்திக்கு வாழ்வு கொடுக்கப் போகிறேன் என்று கொஞ்ச காலமாக சொல்லித் திரிந்தாரே, அதைப் பற்றி இப்பொழுது யாரும் பெரிதாக கதைப்பதில்லை. அது போலத்தான் இதுவும். 

அது ஆர்வக்கோளாறில் ஒரு விருப்பமாக சொன்னார். சரி, அவரா இமிக்கிரேசன் ஓபீஸ் வைத்து விசா வழங்கிறார்?

அப்படி  சொல்லியிருந்தாலும், நம்மூர் பெட்டயள், கலியாணம் எண்டால் இந்தியாவுக்கு போவினமா, மேற்கே போகும் பிளேன் ஏறுவினமா? 

கழுவின மீனில, நழுவின மீன்கள் எல்லோ!!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

ஈழப் பெண்ணொருத்திக்கு வாழ்வு கொடுக்கப் போகிறேன் என்று கொஞ்ச காலமாக சொல்லித் திரிந்தாரே, அதைப் பற்றி இப்பொழுது யாரும் பெரிதாக கதைப்பதில்லை. அது போலத்தான் இதுவும். 

ஈழத்தமிழர்களுக்கு நன்றாக புலுடா விட்டு ஏமாற்றலாம் என்று அவர் நம்பினார் அது சரியாகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஈழத்தமிழர்களுக்கு நன்றாக புலுடா விட்டு ஏமாற்றலாம் என்று அவர் நம்பினார் அது சரியாகிவிட்டது.

நீங்கள் நம்பினீர்களோ?

அல்லது

பொம்பிள ரெடியா வைச்சிரிந்தனியளோ எண்டு யாரும் கேக்கப் போகினமே! 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

அது ஆர்வக்கோளாறில் ஒரு விருப்பமாக சொன்னார். சரி, அவரா இமிக்கிரேசன் ஓபீஸ் வைத்து விசா வழங்கிறார்?

அப்படி  சொல்லியிருந்தாலும், நம்மூர் பெட்டயள், கலியாணம் எண்டால் இந்தியாவுக்கு போவினமா, மேற்கே போகும் பிளேன் ஏறுவினமா? 

கழுவின மீனில, நழுவின மீன்கள் எல்லோ!!

தமிழ்நாட்டு அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழ்  பெட்டையளை செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு பிடிக்காதா?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வாலி said:

தமிழ்நாட்டு அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழ்  பெட்டையளை செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு பிடிக்காதா?

ஏனப்பா, இங்க இருக்கற எங்கட மாப்பிளமார் அங்க பொம்பிள எடுத்த ஒரு கேசாவது? 🥹

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.