Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொந்தங்களும் சோகங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாமா! மாமா! ஆரும் இல்லையோ வீட்டில...... ஓம் ஓம் நிற்கிறம் என்ன தம்பி? மாமா இல்லையா மாமி? இல்ல அவரு தோட்டத்துப்பக்கம் போயிருக்காரு ஓ அப்படியா வந்தால் சொல்லுங்க மகளுக்கு சாமத்திய கல்யாணம் வச்சிருக்கன் எல்லோரும் குடும்பத்தோட கட்டாயணம் வரணூம் வரச்சொல்லி சொல்லுங்க சரி அவரு வந்தால் சொல்லுறன் ம் உள்ள வாங்க வந்து தேத்தண்ணி குடிச்சிட்டு போங்க இல்ல மாமி ஆயிரம் வேலை கிடக்கு நான் வந்து போனத சொல்லுங்க மாமாகிட்ட சரி சொல்லுறன் தம்பி

இஞ்சாருங்கோ உங்க மருமகன் இப்பதான் வந்து போகிறார் யாரு ? மதிமோகனா? ஓமோம் அவர்தான் என்னவாம் இஞ்சால பக்கம் காத்து அடிச்சிரிக்கி அவங்க எல்லோரும் நாட்டுக்கு வந்திருக்காங்களாம் பிள்ளைக்கு சாமத்திய வீடு செய்ய ஓ!!! அதுவா செய்தி ம் என்ன மாதிரி உங்க வீட்டுப்பக்கத்தால பல வருசம் கழிச்சி இப்பதான் கண் தெரிஞ்சிருக்கு போல என மனைவி மெதுவாக குத்திக்காட்டினாள். ம் பின்ன உன்ன கல்யாணம் கட்டவேணாம் என்று எல்லோரும் சொல்ல கல்யாணம் கட்டினத்துக்கு தண்டனைதான் அது . என்ற அம்மாவுக்கு உன்ற அம்மாவை பிடிக்காது ஆனால் உன்னை எனக்கு பிடிச்சி போக அம்மா சொல்லியும் அத கேட்காம உனக்கு மாப்பிள்ளை பார்த்தவுடன் நீ என்னத்தான் கல்யாணம் கட்டவேணும் என்ற ஆசையில் ஓடிவர இருவரும் வீட்ட விட்டு ஓடி கல்யாணம் பண்ணுனம் பாரு அதுதான் எல்லோருக்கும் பிரச்சினை . ம்கும் அப்ப ஓடிப்போனவங்க ஒருத்தரும் கல்யாணமும் கட்டல பிள்ளையும் பெறல அவங்கள சேர்த்தும் எடுக்கல உங்க குடும்பம மட்டும் தான் புதுனமாக குடும்பம் என்றாள் மனிசி.

மனிசி: சரி இப்ப சாமாத்திய கல்யாணத்துக்கு போறதா இல்லையா?? என்ன சத்தத்த காணல இல்ல போகணும்தான் போகாமலும் இருக்க முடியாது இத்தன வருசம் கழிச்சி கூப்பிட்டு இருக்காங்கள் ஆனால் நீ உடுப்பு எடுக்கணும் என்று சொல்லுவா அந்த பிள்ளைக்கும் கைல ஏதாவது கொடுக்கணும் அதத்தான் யோசிக்கிறன். இப்ப உள்ள விலைவாசிக்கு உனக்கும் 3 பொம்புள பிள்ளைகளுக்கும்  உடுப்பு எடுக்க 50000 ற்கு மேல வேணுமே எங்க போறது? 
சரி போய் வங்கில மீதி இருக்கிற காச எடுத்து வாரன் என வெளிக்கிடுகிறேன் எனக்கு காலில் ஏதோ முள் பட்டு கனநேரமாக தைத்துக்கொண்டே இருந்தது வங்கிக்கு கணக்கை சரிபார்த்தா 40000 மட்டுமே இருந்த்து அவ்வளவையும் எடுத்துக்கொண்டு மனிசிட்ட கொடுக்க அவளும் பிள்ளைகளும் கடைக்கு செல்கிறார்கள் அப்போது உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகி விட்ட செய்தி வரவே மூத்த‌ பிள்ளையின்ற பெறுபேறைப்பார்க்க  தொலைபேசியை எடுத்து நம்பரைப்பார்த்து அடிக்க மகளூக்கு மூன்று பாடங்களிலும் சித்தி பெற்று அவளுக்கு வைத்தியத்துறையில் அனுமதி கிடைத்திருந்தது சந்தோசத்தில் திக்குமுக்காட மனிசியும் பிள்ளைகளும் வரவே செய்தியை சொல்ல அந்த சந்தோசத்தில் மிதக்குறோம். அக்கா வைத்திய‌ர் ஆகிட்டா நீங்களும் அக்கா போல படிச்சு வைத்தியர் ஆகணும் நானும் சொல்ல அவர்களும் சந்தோசத்தில் தலையசைக்கிறார்கள்.

மனிசி உடுப்புக்களை சரிபார்க்கிறாள் இதுகளுக்கு வந்திருக்குமே அறுபது எழுபதினாயிரம் என நான் சொல்ல மகளோ அப்பா அம்மாவும் 25000 ரூபா காசோடதான் வந்தாவு என சொல்ல இனி சோத்துக்கு என்ன செய்யப்போற என பார்ப்போம் என நானும் புலம்ப இந்தாங்கோ புது வேட்டி சட்டை பதிலுக்கு நான் கேட்டனாக்கும் நீங்க கேட்காட்டியும் அவ்வளவு சனம் வரும் பழைய வேட்டியோடையோ? நிற்கிறது என அவள் கேட்டுவிட்டு  வாங்கி வந்த உடுப்புக்களை வீட்டிலும்  சட்டைக்கு மேலால போட்டு அழகு பார்த்தாள் ( இந்த பொம்புளைகளுக்கு இதுதான் வேலை என மனசு சொல்லிக்கொள்கிறது) 

அடுத்த நாள் காலை சாமத்திய வீட்டுக்கு செல்ல மகள் வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்பட்டது என் சட்டை கொலரை மெதுவாக தூக்கி என் கழுத்தை மெதுவாக நிமிர செய்திருந்தாள் என் குடும்பத்திற்கும் மரியாதை தரும்படி . நானும் பிள்ளைகளும் அந்த ஹோட்டல் அறைக்கு செல்கிறோம் மிக பிரமிப்பாக இருந்தது வாழ் நாளில் இப்படி ஆடம்பரமான அறைக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். சிவப்பு கம்பள வரவேற்பில் நாங்கள் செல்ல வட்ட மேசையில் உறவுகள் நிறைந்திருந்தார்கள் எதிரே என் அம்மையாரும் என்னை நிமிர்ந்து பார்த்து குனிந்து விட ஒரு மூலை மேசையை நான் தேடி அமர்கிறேன். அப்போது என் பிள்ளை வைத்தியத்துறைக்கு தெரிவான கதை வட்ட மேசை முழுவதும் பேசப்படும் செய்தி காதில் கேட்கிறது .

பாட்டு சத்தம் பலமாக இருக்க பலர் பாடினார்கள் ஆனால் பாட்டு ஒரு பக்கம் போக இசை வேற ஒரு பக்கம் போனது கேட்டதற்கு டி , ஜே என்றார்கள் எனக்கோ அவங்களை ஏறி மிதிக்கணும் போல இருந்தது மாமா வாங்கோ என மதிமோகன் அழைக்க யூஸ் எடுத்த நீங்களா? இல்ல மருமகன் தம்பி இவ்வளவு பேருக்கும் யூஸ் கொடுங்கள் என சொல்ல அவன் பிழிந்து கொண்டு வருகிறான். 

அப்போ பாட்டு நிற்க மகளை பல்லக்கில் நாலு பொடியங்கள்  சுமந்துவர பிள்ளை வந்து இறங்குறாள் அவளை மேடைக்கு அழைத்து செல்ல பல பெண் பிள்ளைகள் பாட்டுக்கு நடனமாடி கூட்டிச்செல்கிறார்கள் என் பிள்ளைகளோ அதை இமைமூடாமல் பார்க்கிறார்கள். நேரம் செல்ல சாப்பாட்டு மேசைக்கு செல்ல வகை வகையாக சாப்பாடு ஆடு ,கோழி, மீன், மரக்கறி என பல விதமான சாப்பாடுகள் நிறைந்து வழிந்திருந்தது ஆனால் நம்ம சனத்துக்குதான் அதை எப்படி எடுக்க வேண்டும் சாப்பிட வேண்டும் என்று இப்பவரைக்கும் தெரியவில்லை அளவுக்கு மீறி சாப்பாட்டை எடுத்து வந்து குப்பை வாளியை நிறைத்து இருந்தார்கள். 

அதைப்பார்த்த எனக்கு வார்த்தைகள் வரவில்லை எத்தனையோ ஆயிரம் பேர் இந்த உணவு இல்லாமல் பரிதவிக்கிறார்கள் இங்கு ஆனால் இங்கு வீணாகுதே என நினைத்து வேதனை அடைந்தேன்.
நிகழ்வுகள் மெதுவாக நிறைவேற மருமகனிடம் கேட்டேன் எவ்வளவு மருமகன் மொத்த செலவு என கேட்க அவனோ ஒரு ஒண்டரை கோடி செலவு மாமா என்றான்.. ஓ அப்படியா கொஞ்சம் அதிகம்தானே என நான் சொல்ல இதெல்லாம் சின்ன காசு மாமா என்றான் மகள் கம்பஸ் என்ற பண்ணி இருக்குறா டொக்டருக்கு  ஓ அப்படியா சந்தோசம் ஏதும் உதவிகள் தேவைகள் என்றால் கோல் எடுங்க மாமா என்றான் .அவன் பிள்ளைக்கு ஏதாவது செய்யலாம் என போனால் ஒரு கிப்டும் வாங்க வேண்டாம் என சொன்னதால எதுவும் கொடுக்க முடியல அன்றைய இரவு முளுக்க மனிசிக்கும் பிள்ளைகளுக்கும் அதே கதைதான்.

மாத முடிவில் மதிமோகனுக்கு வெளிநாட்டில் அழைக்கிறேன் அப்போது அவன் கொடுத்த போண் நம்பர் வேலை செய்யவில்லை மகளுக்கு கொழும்பில் தங்கி படிக்க‌ வீடு பார்க்க பணம் தேவைப்பட...... மனைவியோ இருந்த வளையல்களை கொடுக்க அடகு வைத்து பணத்தை கொடுத்து விட்டு தூங்குகிறேன் அடுத்த நாள் அதிகாலை மனைவியை எழுப்ப அவள் எழும்பவில்லை மூத்த மகள் எழும்பி வந்து தேத்தண்ணி குடித்து போங்கள் என சொல்லி தேத்தண்ணி ஊற்றி வந்தாள். மகள் நீங்க படிச்சது போல உன்ற தங்கச்சிகளையும் நன்றாக படிக்க வச்சி விடு அப்பதான் சொந்தக்காரன் கூட நம்மளை  மதிப்பான் என சொல்லி தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச‌ செல்கிறேன் நான் மகளோ மற்ற மகள்களை எழுப்புகிறாள் படிப்பதற்கு. 

தோட்டத்தில் நான் விசிறிய எண்ணெய் மயக்கத்தில் இறந்து கிடந்த பாம்பின் எலும்புகளே என் காலில் குத்தி தைத்திருக்கிறது.  என்பது அப்போதுதான் எனக்கே தெரிய வந்தது ஆனால் ஒன்றூம் செய்யவில்லை என்பது பெரிய ஆறுதலாக இருந்தது .

வேலிக்கு வைக்கும் முள்ளே காலுக்கு தைக்கும்  யாவும் கற்பனை 

முற்றும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல் நல்லதொரு சமூகக்கதை.
நன்றி ராசன்.👍🏼

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அப்போ பாட்டு நிற்க மகளை பல்லக்கில் நாலு பொடியங்கள்  சுமந்துவர

இண்டைக்கு நானும் பல்லக்கு தூக்கி ஆரவாரம் செய்த சந்தோச கொண்டாத்தை பாத்துட்டு வர அடுத்த பல்லக்கு சம்பவம்...... உந்த பல்லக்கு விசயத்தை கதைச்சால் என்னை வெட்டிப்போடுவாங்கள் வேண்டாம்.:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ராஜா இப்பவெல்லாம் நெஞ்சைத் தொடுவது போல உங்கள் கதைகள் வருகிறது.

எழுதுங்கள் வாசிக்க ஆவலாக உள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் இப்ப யார் கூட செலவளிக்கிறது என்றதில போட்டி தான்!
ஆனால் அடிப்படைத் தேவைகளுக்கு செலவளிக்க முடியாது அல்லாடுபவர்களுக்கு உதவிகள் குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மாமா! மாமா! ஆரும் இல்லையோ வீட்டில...... ஓம் ஓம் நிற்கிறம் என்ன தம்பி? மாமா இல்லையா மாமி? இல்ல அவரு தோட்டத்துப்பக்கம் போயிருக்காரு ஓ அப்படியா வந்தால் சொல்லுங்க மகளுக்கு சாமத்திய கல்யாணம் வச்சிருக்கன் எல்லோரும் குடும்பத்தோட கட்டாயணம் வரணூம் வரச்சொல்லி சொல்லுங்க சரி அவரு வந்தால் சொல்லுறன் ம் உள்ள வாங்க வந்து தேத்தண்ணி குடிச்சிட்டு போங்க இல்ல மாமி ஆயிரம் வேலை கிடக்கு நான் வந்து போனத சொல்லுங்க மாமாகிட்ட சரி சொல்லுறன் தம்பி

இஞ்சாருங்கோ உங்க மருமகன் இப்பதான் வந்து போகிறார் யாரு ? மதிமோகனா? ஓமோம் அவர்தான் என்னவாம் இஞ்சால பக்கம் காத்து அடிச்சிரிக்கி அவங்க எல்லோரும் நாட்டுக்கு வந்திருக்காங்களாம் பிள்ளைக்கு சாமத்திய வீடு செய்ய ஓ!!! அதுவா செய்தி ம் என்ன மாதிரி உங்க வீட்டுப்பக்கத்தால பல வருசம் கழிச்சி இப்பதான் கண் தெரிஞ்சிருக்கு போல என மனைவி மெதுவாக குத்திக்காட்டினாள். ம் பின்ன உன்ன கல்யாணம் கட்டவேணாம் என்று எல்லோரும் சொல்ல கல்யாணம் கட்டினத்துக்கு தண்டனைதான் அது . என்ற அம்மாவுக்கு உன்ற அம்மாவை பிடிக்காது ஆனால் உன்னை எனக்கு பிடிச்சி போக அம்மா சொல்லியும் அத கேட்காம உனக்கு மாப்பிள்ளை பார்த்தவுடன் நீ என்னத்தான் கல்யாணம் கட்டவேணும் என்ற ஆசையில் ஓடிவர இருவரும் வீட்ட விட்டு ஓடி கல்யாணம் பண்ணுனம் பாரு அதுதான் எல்லோருக்கும் பிரச்சினை . ம்கும் அப்ப ஓடிப்போனவங்க ஒருத்தரும் கல்யாணமும் கட்டல பிள்ளையும் பெறல அவங்கள சேர்த்தும் எடுக்கல உங்க குடும்பம மட்டும் தான் புதுனமாக குடும்பம் என்றாள் மனிசி.

நீங்கள் உரையாடல் வரும் பகுதிகளை அதற்கேற்றவாறு எழுதினால  வாசிக்க இலகுவாக இருக்கும். 

சிந்திக்க வைக்கும் கதை. நன்றி. 

7 hours ago, ஏராளன் said:

ஓம் இப்ப யார் கூட செலவளிக்கிறது என்றதில போட்டி தான்!
ஆனால் அடிப்படைத் தேவைகளுக்கு செலவளிக்க முடியாது அல்லாடுபவர்களுக்கு உதவிகள் குறைவு.

நாங்கள் எங்களுக்காக வாழ்வதில்லை, சமூகம் என்ன நினைக்குமோ என்ற பயத்தில் சமூகத்திற்காகத்தான் வாழ்கிறோமோ  என நான் நினைப்பதுண்டு. 

உற்றார் உறவினர என்ன சொல்வார்களோ என்று தொடங்கி அடுக்கடுக்காக அதற்கு ஏற்ற வகையில் காரணங்களைக் கூறி தங்களை நியாயப்படுத்திக் கொள்வார்கள். அதனைக் கேட்டு எனக்குள் சிரித்துக்கொள்வதுண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

நாங்கள் எங்களுக்காக வாழ்வதில்லை, சமூகம் என்ன நினைக்குமோ என்ற பயத்தில் சமூகத்திற்காகத்தான் வாழ்கிறோமோ  என நான் நினைப்பதுண்டு. 

உற்றார் உறவினர என்ன சொல்வார்களோ என்று தொடங்கி அடுக்கடுக்காக அதற்கு ஏற்ற வகையில் காரணங்களைக் கூறி தங்களை நியாயப்படுத்திக் கொள்வார்கள். அதனைக் கேட்டு எனக்குள் சிரித்துக்கொள்வதுண்டு. 

உண்மை தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல் நல்லதொரு சமூகக்கதை.
நன்றி ராசன்.👍🏼

இண்டைக்கு நானும் பல்லக்கு தூக்கி ஆரவாரம் செய்த சந்தோச கொண்டாத்தை பாத்துட்டு வர அடுத்த பல்லக்கு சம்பவம்...... உந்த பல்லக்கு விசயத்தை கதைச்சால் என்னை வெட்டிப்போடுவாங்கள் வேண்டாம்.:rolling_on_the_floor_laughing:

ம் நன்றி அண்ண ஊர் முழுக்க புதிய புதிய கொண்டாட்டங்களையும் களியாட்டங்களை கொண்டாந்து இறக்குறார்கள் அதைப்பார்த்த பிள்ளைகளுக்கு இங்கிருக்க விருப்பமும் இல்லை எல்லாம் வெளிநாடு நாட்டம் பிடிக்கிறது 

இது யாருக்குமான கருத்து அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் 

11 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன ராஜா இப்பவெல்லாம் நெஞ்சைத் தொடுவது போல உங்கள் கதைகள் வருகிறது.

எழுதுங்கள் வாசிக்க ஆவலாக உள்ளோம்.

நன்றி அண்ணை மெனக்கெட்டு வாசிக் கிறீர்களே அதுவே மிகப்பெரிய விசயம்  அனுபவம் படுவதை கதையாக்கி விடுவது என் வழமை 
ஒரு மாமன் வந்து போனான்  அவனுக்கு எழுதினது  17 வருடங்கள் கழித்து 

10 hours ago, ஏராளன் said:

ஓம் இப்ப யார் கூட செலவளிக்கிறது என்றதில போட்டி தான்!
ஆனால் அடிப்படைத் தேவைகளுக்கு செலவளிக்க முடியாது அல்லாடுபவர்களுக்கு உதவிகள் குறைவு.

ம்  நடக்கும் உண்மை  

2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் உரையாடல் வரும் பகுதிகளை அதற்கேற்றவாறு எழுதினால  வாசிக்க இலகுவாக இருக்கும். 

சிந்திக்க வைக்கும் கதை. நன்றி. 

ம் அப்படித்தான் எழுத நினைத்தன் நேரம் வேற ஆகிவிட்டதால் எழுதி முடிய அப்படியே போஸ்ட் பண்ணிவிட்டேன்  மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் தனி......இப்போதுதான் பார்த்தேன்.......உங்களின் அனுபவங்கள் கதைகளாக வருகின்றன......அத்தனையும் முத்துக்களாக இருக்கின்றது.......இதற்கெல்லாம் யாழுக்குத்தான்  முதற்கண் நன்றி சொல்ல வேண்டும்.......!   👍

Edited by suvy
சிறு திருத்தம்.......!

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் வாழ்த்துக்கள் தனி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

சூப்பர் தனி......இப்போதுதான் பார்த்தேன்.......உங்களின் அனுபவங்கள் கதைகளாக வருகின்றன......அத்தனையும் முத்துக்களாக இருக்கின்றது.......இதற்கெல்லாம் யாழுக்குத்தான்  முதற்கண் நன்றி சொல்ல வேண்டும்.......!   👍

யாழுக்கு கடன் பட்டவனாக யாழ் இயங்காமல் போய்விடக்கூடாது என்பதற்க்காக பள்ளி நேரங்களில் கூட எழுதியது  உங்களுக்கும்  என்னை தூண்டியது நீங்களும் ஒருவர் 

2 hours ago, Sabesh said:

மீண்டும் வாழ்த்துக்கள் தனி

நன்றி  அண்ண  மிக்க நன்றி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.