Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: RAJEEBAN

19 SEP, 2023 | 10:53 AM
image
 
இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அவுஸ்திரேலியா அமெரிக்க பிரிட்டன் ஆகிய நாடுகளிடையேயான அவுகஸ் aukus  உடன்படிக்கையை இராணுவகூட்டணி என வர்ணித்துள்ளதுடன் அது தேவையற்றது இதனால் எதிர்விளைவுகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இது மூலோபாய தவறு அவர்கள் தவறிழைத்துள்ளனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அந்த கூட்டணி ஒரேயொரு நாட்டை மாத்திரம் இலக்காக கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்கின் சர்வதேச அமைதிக்கான கார்னகி என்டோவ்மன்டின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2021 இல் உருவாக்கப்பட்ட அவுக்கஸ் அமைப்பினை அதன் உறுப்பு நாடுகள் அணுவாயுத நீர் மூழ்கி தொடர்பான தகவல் தொழில்நுட்பங்களை பரிமாறுவதற்கான -செயற்கை நுண்ணறிவு குவான்டம் தொழில்நுட்பம்  கடலுக்கடியிலான  தொழில்நுட்பங்களை பரிமாறுவதற்கான  பாதுகாப்புகூட்டு என தெரிவித்துள்ளன.

இதேவேளை ஆசியபசுபிக் என தெரிவிக்கப்படுவதை சிரித்தபடி நிராகரித்துள்ள ரணில் விக்கிரமசிங்க அதனை செயற்கையான கட்டமைப்பு என தெரிவித்துள்ளார்.

எவருக்கும் இந்தோ பசுபிக் என்றால் என்னவென தெரியாது. சிலருக்கு இந்தோ பசுபிக் இந்தியாவின் மேற்கு பக்கத்தில் முடிவடைகின்றது எனவும் குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க சிலர் இதனை ஆபிரிக்கா என்கின்றனர், சிலர் தென் பசுபிக் என்கின்றனர், சிலர் மேற்கு பசுபிக் என்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

சீன அமெரிக்க மோதல் மேற்கு பசுபிக்கில் உருவானது தற்போது அது இந்து சமுத்திரத்திற்கும் தெற்கு பசுபிக்கிற்கும் பரவியுள்ளது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஏன் இதற்குள் இழுபடுகின்றோம் இதனை புரிந்துகொள்வது கடினமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க தனது நீண்டகால அரசியல் வரலாற்றில் பல புவிசார் அரசியல் கூட்டமைப்புகள் மாறியுள்ளதை பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்ட மோதல் இடம்பெறுகின்றது -அது ஆசியாவில் இடம்பெறுகின்றது. இது சீனா எதிர் அமெரிக்கா மோதல் ஆசியாவில் தங்கள் செல்வாக்கை எவ்வாறு பிரித்துக்கொள்வது என்பது குறித்து அவர்கள் மோதுகின்றனர் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் நேட்டோவின் விஸ்தரிப்பிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க இந்து சமுத்திரத்தை பொறுத்தவரை நாங்கள் இராணுவ நடவடிக்கைகள் எவற்றையும் விரும்பவில்லை பிராந்தியத்தில் பல நாடுகள்  நேட்டோவை தங்கள் அருகில் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரம் எவ்வாறு செயற்படுகின்றது என்பது குறித்து மேற்குலகிற்கு எதுவும் தெரியாது எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/164905

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்ரேலியாவில் பூர்வீக குடிகளை அடுத்து அவுஸ்ரேலியாவில் குடியேறிய பிரித்தானிய பின் புலம் கொண்டவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் நிலவியிருந்தமையால் பிரித்தானியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு நேசமான உறவு நிலை எப்போதும் நீடித்தே வந்திருந்தது.

கடந்த கால உலக போர்களில் பிரித்தானியாவிற்கு ஆதரவாக அவுஸ்ரேலியா களமிறங்கியிருந்துள்ளது அதே போல் அமெரிக்காவிற்கும் ஆதரவாக இருந்துள்ளது.

இரண்டாம் உலக போரின்போது அவுஸ்ரேலியா அமெரிக்க உதவியினை கோரிய போது அமெரிக்கா அதற்கு உதவியிருந்தது.

இடையில் 1970 காலப்பகுதியில் அவுஸ்ரேலிய பிரதமராக இருந்த விட்லம், அமெரிக்க படைகளின் வியட்நாமில் நிகழ்த்திய ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு தனது எதிர்ப்பினை தெரிவித்ததுடன், இங்கிலாந்து அரச குடும்ப அதிகாரத்திற்க்கீழ் தனது இறமையினை அவுஸ்ரேலியா இழந்திருப்பதுடன் வளங்கள் சுரண்ட படுவதாக கருதி எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கினார், அவர் அவுஸ்ரேலியாவினை ஒரு அணிசேரா நாடாக்க முயன்றார் ஆனால் அவரினை இங்கிலாந்து அமெரிக்க உளவுத்துறையினர் ஆளுனரின் உதவியுடன் பதவியிறக்கி விட்டதாக கூறப்படுகிறது.

https://www.theguardian.com/commentisfree/2014/oct/23/gough-whitlam-1975-coup-ended-australian-independence

இந்த நிகழ்வு அவுஸ்ரேலிய அரசியல்வாதிகளை அமெரிக்க, பிரித்தானியாவினை தவிர்க்க முடியாத சூழ்நிலையினை உருவாக்கி விட்டுள்ளது,

இதனால் அவுஸ்ரேலியா பொருளாதார  ரீதியாக பாதிப்படைந்துள்ளதுடன், இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் புதிய பதற்ற நிலையினை உருவாக்குவதற்கும் அவுஸ்ரேலியா காரணமாகியுள்ளது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, vasee said:

விற்லம் தான் Medicare ஐ உருவாக்கி இன்று நாங்கள் எல்லாம் பயன் பெறுவதற்கு காரணமாக இருந்தவர். அவரின் அரசை dismissal பண்ணியது ஒரு controversy ( 1974 dismissal )

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரணிலாருக்கு நினைப்புப் பெரிசே தவிர.. இதில சொல்ல வேறு ஒன்றுமில்லை. வாங்கிறதே அவங்களட்ட பிச்சை.. இதில..... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@Nathamuni இந்த ரணிலைத்தான், இந்தியா விரும்பாமல் அமேரிக்கா இறக்கிய மேற்கின் செல்லப்பிள்ளை என்றீர்களா?

அல்லது இது ரணிலின் “வாலி” இரணையா🤣.

நீங்கள் இப்படி சொல்லி 24 மணி கூட ஆகவில்லை, மேற்கின் தெரிவு, மேற்கின் செல்லபிள்ளை, மேற்கின் முகத்திலேயே உச்சா போகிறது 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/9/2023 at 01:41, nedukkalapoovan said:

ரணிலாருக்கு நினைப்புப் பெரிசே தவிர.. இதில சொல்ல வேறு ஒன்றுமில்லை. வாங்கிறதே அவங்களட்ட பிச்சை.. இதில..... 

இல்லை இல்லை. இப்போது சீனாதான்  அவர்களுக்கு பிச்சைபோடுது. எனவே சீனாவின் சொல்படிதான் நடக்க வேண்டும். இல்லாவிட்ட்தால் வெளி நாட்டு கடன் தொடர்பில் பெரிய பிரச்சினை உருவாக்கி விடும். ஐயா மஹா தந்திரவாதி. ஆனாலும், இப்படி எல்லாம் பேச போகிறேன் என்று அந்த ஐயாமாருக்கும் முன்னரே அறிவித்து விடடார். இதெல்லாம் ராஜதந்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/9/2023 at 05:09, ragaa said:

விற்லம் தான் Medicare ஐ உருவாக்கி இன்று நாங்கள் எல்லாம் பயன் பெறுவதற்கு காரணமாக இருந்தவர். அவரின் அரசை dismissal பண்ணியது ஒரு controversy ( 1974 dismissal )

இந்த தகவல் எனக்கு தெரிந்திருக்கவில்லை, அறியந்தந்தமைக்கு நன்றி, முதன் முதலாக அவுஸ்ரேலியாவில் கடனட்டையினை அறிமுகப்படுத்தியவர் என கூறப்படுகிறது, அதற்கு முன்னர் அவுஸ்ரேலியாவில் டைனர்ஸ் கிளப், அமெரிக்கன் எக்பிரஸ் என்பனவே புழக்கத்தில் உள்ளதாக கூறுக்கிறார்கள்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.