Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, குமாரசாமி said:

துவக்கும் தோட்டாவும் புதிய நோய்களையும் கண்டு பிடிப்பது மேலைத்தேய வியாபாரம்.....

தொழில்  நுட்பம் எனக்கு இப்போது விளங்கிவிட்ட்து. அப்ப இதை படிக்கத்தான் நம்மட மடையர்கள் கோடி கணக்கில் கொட்டி கொட்டி மேட்கு நாடுகளுக்கு போகிறார்களோ? அது சரி. 

  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Cruso said:

தொழில்  நுட்பம் எனக்கு இப்போது விளங்கிவிட்ட்து. அப்ப இதை படிக்கத்தான் நம்மட மடையர்கள் கோடி கணக்கில் கொட்டி கொட்டி மேட்கு நாடுகளுக்கு போகிறார்களோ? அது சரி. 

இன்றைய காலகட்டத்திற்கு எது தேவையோ அதை பின் பற்ற வேண்டும். அதற்காக நம் கலை கலாச்சாரம்,அறிவியல்களை தாழ்த்த முடியாது. கூடாது.

நம் நாட்டிற்கு வெள்ளைகாரன் வந்ததினால் தான் நாம் முகச்சவரம் செய்ய பழகிக்கொண்டோம் என புலம்பிவிட்டு......இன்று நாம் தாடிக்கும் மீசைக்கும் ஸ்பெசல் எண்ணை வாங்கி தடவிக்கொண்டு திரிகின்றோம்.

  • Like 2
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெயமோகனின் குறிப்பில் இருந்து..

இன்றைய போர் என்பது ஒரு தீவிரவாத அமைப்பும் ஒரு பொறுக்கிதேசமும் தங்கள் மக்களையே பலியாக்கி, மாறிமாறி மக்களைக் கொன்று ஆடும் வெறியாட்டம்.

*

இதில் மிகக்கீழ்த்தரமானது அவரவர் அரசியல், சாதி, மதச்சார்புக்கு ஏற்ப ஒரு பக்க நிலைபாடு எடுத்து களமாடுவதுதான். ஹமாஸை ‘மாவீரர்கள்’ ‘போராளிகள்’ ‘தியாகிகள்’ என புகழ்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் சிலவற்றை வாசித்தேன். பாலஸ்தீன மக்களின் உயிர்வதையை தன் மதவெறியரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தும் ஒருவரின் உளநிலை என்ன? இந்த வகை கட்டுரைகள் உடனடியாக பல்லாயிரம்பேரை மறுதரப்பு நோக்கி கொண்டுசெல்பவை.

மறுபக்கம், மொத்த பாலஸ்தீன தேசியக்கோரிக்கையையே மதத்தீவிரவாதமாகப் பார்க்கும் பார்வை.  அது இந்தியாவுக்கு எதிரானது என்னும் பார்வை. அதிலிருந்து எழும் குரோதங்கள். இஸ்லாமிய எதிர்ப்பரசியலையே இஸ்ரேலிய ஆதரவாக ஆக்கிக்கொள்ளும் மனச்சிக்கல்.

இரு சாராருக்குமே மக்கள் பெரிதல்ல. அவர்களுக்கு போர் என்பது கிரிக்கெட் போல ஒரு விளையாட்டு. அன்றாடச் சலிப்பை நீக்கும் ஒரு சுவாரசியம். தன் தரப்பு ஜெயிக்கவேண்டும், அவ்வளவுதான்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும் - தீபாவளி நிகழ்வில் கமலா ஹாரிஸ்

11 NOV, 2023 | 01:11 PM
image

இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதாக இந்த தீபாவளி அமையட்டும். பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும் என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் உள்ள தனது அரசு இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். 

கமலா ஹாரிஸ் விடுத்த அழைப்பின் பேரில் 300 க்கும் அதிகமான விருந்தினர்கள் இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர்.

அப்போது பேசிய கமலா ஹாரிஸ், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெறும் சூழலில், உலகம் எதிர்கொண்டிருக்கும் இருண்ட மற்றும் கடினமான நிலைக்கு ஒளி ஏற்படுத்தும் வகையில் தீபங்களின் பண்டிகையான தீபாவளியைக் கொண்டாடுவது முக்கியம்.

இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதாக இந்த தீபாவளி அமையட்டும். பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும். அதே நேரம், இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ள எடுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா ஆதரிக்கும் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/169044

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, Cruso said:

 மன்னித்து கொள்ளுங்கள். ஈரானிடம் அணு குண்டு இருந்திருந்தால் இஸ்ரேல் மீது நிச்சயமாக போட்டிருப்பார்கள்.

நீங்கள் சரியாக கணித்தீர்கள் எண்டால் எந்த ஒரு நாடும் மேட்கு நாடுகளிடம் இருந்துதான் தொழில் நுட்பத்தை கற்றார்களே அன்றி அவர்களாகவே எதுவும் கண்டுபிடிக்கவில்லை. மேற்கத்திய நாட்டினர் தங்கள் நாட்டிட்குள்தான் கேட்கிறார்கள் வேறு எங்கும் போவதில்லை. ஆனால் மற்ற நாட்டினால் எல்லோரும் மேட்கு நாட்டில் கற்றவர்கள்தான். இப்போது கிழக்கு ஐரோப்பிய , சீன போன்ற நாடுகளிலும் கேட்கிறார்கள்.

 ஈரான் நாட்டினர் அறிவாளிகள்தான். ஆனால் ஞானம் இல்லாதவர்கள். அது பயங்கரவாதத்துக்கு மட்டுமே பயன்படும். அங்கு ஒரு நல்ல நோக்கமும் கிடையாது. 

சும்மா த‌மாஸ் ப‌ண்ண வேண்டாம் பெரிய‌வ‌ரே
அணுகுண்டு ஈரானிட‌ம் இருந்தாலும் அதை அவ‌ர்க‌ள் இஸ்ரேல் மேல் போட‌ மாட்டினம்
இஸ்ரேல‌ அழிக்குவில் அவ‌ர்க‌ளிட‌ம் ப‌ல‌ குண்டுக‌ள் இருக்கு
கிஸ்புள்ளா அமைப்பிட‌ம் ப‌ல‌ வ‌கையான‌ குண்டுக‌ள் இருக்கு
ஹ‌மாஸ் இஸ்ரேல் பிர‌ச்ச‌னை கைமீறி போனால் அவ‌ர்க‌ளும் இஸ்ரேல் வாழ் நாளில் ம‌ற‌க்க‌ முடியாத‌ அள‌விற்க்கு ந‌ல்ல‌ அடி கொடுப்பார்க‌ள்

ஹ‌மாஸ் போராளிக‌ள் இஸ்ரேனின் டாங்கிக‌ளை அடிச்சு நொருக்கும் காணொளிக‌ள் பார்க்க‌ வில்லையா

ஹாமாஸ்சின்ட‌ இந்த‌ அடிக்கே இஸ்ரேல் திண்டாடுது

அதிக‌ தொழிநுட்ப்ப‌ ஆயுத‌த்தை வைத்து இருக்கும் கிஸ்புள்ளா அடிக்க‌ தொட‌ங்கினா
இஸ்ரேனின் த‌லை ந‌க‌ர‌ம் ரெல் அவி மெது மெதுவாய் த‌ர‌ம‌ட்ட‌ம் ஆகிடும்

ர‌ஸ்சியா கொடுத்த‌ ஆயுத‌ம் சில‌ ஹிஸ்புள்ளாவின் கைக்கு வ‌ந்து விட்ட‌தாம்............இஸ்ரேல் போரை நிப்பாட்டினால் அழிவை குறைக்க‌லாம் இந்த‌ போர் நீடித்தால் அழிவு எப்ப‌டி இருக்கும் என்று அந்த‌ ஆண்ட‌வ‌ருக்கு தான் தெரியும்

நெத்த‌னியா உல‌க‌ ம‌க்க‌ள் வெறுக்கும் ந‌ப‌ர் ஆகி விட்டார்............உல‌க‌ ம‌ட்ட‌த்தில் இஸ்ரேலுக்கு கெட்ட‌ பெய‌ர் உருவாகிட்டு............அமெரிக்க‌ன்ட‌ ட‌வுள் கேம்மையும் ம‌க்க‌ள் தெரிந்து கொண்டு விட்டார்க‌ள்

அமெரிக்க‌ன்ட‌ நாட்டான்மை வேலைய‌ இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் யாரும் செவி ம‌டுத்து கேட்க்க‌ போவ‌து கிடையாது...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/11/2023 at 17:06, பையன்26 said:

அமெரிக்க‌ன்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தை இஸ்ரேலுக்கு அணுகுண்டு அமெரிக்கா தான் கொடுத்த‌து என்று ப‌ல‌ வ‌ருட‌த்துகு முத‌லே வெளிப்ப‌டையாய் ப‌ல‌ருக்கு தெரிந்த‌ ஒன்று...............

அணுகுண்டு இருந்த‌ ப‌டியால் தானே அணுகுண்டு ப‌ற்றி இஸ்ரேல் அமைச்ச‌ர் ஒருவ‌ர் வார்த்தைய‌ வெளியில் விட்ட‌வ‌ர்🙈

பெரும்பாலான மேலைத்தேய நாடுகளின் பார்வையில், தம்மைத் தவிர யாரிடமும் அணுகுண்டு இருக்கக்கூடாது என்பதே. ஆனால் கைமீறிவிட்டது. தற்போது அதனை அனைத்துலக அணு ஆயுதப் பரவல் தடுப்பு அமைப்பின் ஊடாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனாலும் அச்சத்தின்பாற்பட்டு முஸ்லிம் நாடுகள் அணு ஆயுதரீதியில் முழுமையடைவதை அவை எதிர்க்கின்றன. அப்படி அவர்கள் அச்சப்படக் கரணியமாக அமெரிக்காவினது நடவடிக்கையும்  உள்ளது. இதிலே மேற்கினது சுரண்டலாதிக்கம் ஓயும்வரை போர்கள் ஓயாது. 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nochchi said:

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி நொச்சி ஜ‌யா
உக்கிரேன் பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு ர‌ஸ்சியாவுக்கு அதிக‌ ரோன் கொடுத்த‌து ஈரான்
இத‌ற்கு பிற‌க்கு இரு நாடுக‌ளும் ஆயுத‌ரீதியாக‌ சில‌ ஒப்ப‌ந்த‌ம் போட்ட‌தாக‌ சில‌ உண்மை த‌க‌வ‌ல்க‌ள் வ‌ந்த‌து அதில் அணுகுண்டு ப‌ற்றியும் பேச‌ப் ப‌ட்ட‌து.............ஈரான் 2010ம் ஆண்டு அணுகுண்டு செய்ய தொட‌ங்க‌ அமெரிக்கா ப‌ல‌ த‌டைக‌ளை போட்டு அதை த‌டுத்து நிறுத்திய‌து..............ஆனால் ஈரான் அத‌ற்கு பிற‌க்கு ர‌க‌சிய‌மாய் செய்து இருக்க‌ கூடும்.............ர‌ஸ்சியா மீதான‌ ஒப்ப‌ந்த‌த்தில் கூட‌ அணுஆயுத‌ம் ப‌ற்றி எல்லாம் பேச‌ம் ப‌ட்ட‌து

எல்லாம் ஆண்ட‌வ‌ருக்கு தான் வெளிச்ச‌ம் 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, பையன்26 said:

எல்லாம் ஆதிக்க சக்திகளுக்கே வெளிச்சம்.

இங்கே அணுகுண்டின்  அழிவைக் கண்ட நாடு யப்பான். அணுகுண்டைப் போட்டநாடு அமெரிக்கா. ஆனால், அந்தப் பெரும் அழிவின் பின்னும் அணுகுண்டின் மீதான பாசத்தை வல்லாண்மை மிகு நாடுகள் கைவிடவில்லை. அமெரிக்காவை யாரும் தண்டிக்கவும் இல்லை.  உலகை அழிக்கும் வல்லமையோடு இன்றும் இந்த நாடுகள் சர்வசாதாரணமாக மனிதஉரிமை மண்ணாங்கட்டி என்று பேசியவாறு மனித குலத்தை அழிக்க வல்ல அணு ஆயுதங்களோடு நடமாடுகின்றன.  இன்றைய நாளில் 9 நாடுகள் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளதாக இணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஸ்யா 1458தயார்நிலையிலும் 3039பயன்படுத்தக்கூடிய நிலையிலும்,அமெரிக்கா 1389தயார்நிலையிலும் 2361பயன்படுத்தக்கூடிய நிலையிலும்;, சீனா350, பிரான்ஸ்290,பிரித்தானியா225,பாகிஸ்தான்165,இந்தியா156,இஸ்ரவேல்90, வட கொரியா 40 - 50 பயன்படுத்தக்கூடிய நிலையிலும் வைத்திருக்கின்றன. மறைநிலையாக எத்தனை நாடுகள் வைத்திருக்கின்றவோ தெரியாது. 

                                        இந்த உலகிடம் மனிதாபிமானத் எதிர்பார்த்தல் சாத்தியமுள்ளதா? உலக நாடுகள் தத்தமது நாட்டின் பட்டினியைப் போக்குவதற்குச் செலவழிப்பதைவிட பலநூறுமடங்கு ஆயுத தளபாடங்களுக்குச் செலவழிக்கின்றன. இந்த உலகம் இயற்கையாக அழிகிறதோ இல்லையோ மனிதர்களால் அழிக்கப்படுவதற்கான எல்லாம் தயார்நிலையில் உள்ளதாகவே தென்படுகிறது. இதில் யாரிடம் அணுகுண்டு இருக்கவேண்டுமென யார் தீர்மானிப்பது? இந்த வல்லாண்மை நாடுகளால் அணு ஆயுதக்களைவைச் செய்யும் தற்துணிவுள்ளதா? பயணத்தின்போது சுண்டிவிடத்தயாரானநிலையில் பெட்டிகளோடு திரிகிறார்கள். இவர்களை இந்த உலகு ஏதோ காப்பர்கள் போல நோக்கியவாறு அழிகிறது.
நன்றி.   
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 30/10/2023 at 14:45, குமாரசாமி said:

இருந்தாலும் வெளிநாடுகளில் வசிக்கும் பலஸ்தீன ஆதரவாளர்கள் அல்லாகு அக்பர் என கோசமிட்டு பொதுவுடமைகளை அழிப்பதை எற்க முடியாது. இது அந்தந்த நாட்டு மக்களையும்  மாற்றி சிந்திக்க வைத்துள்ளது. அடைக்கலம் கொடுத்தவர்களை அழிக்க நினைக்க கூடாது.

அடைக்கலம் கொடுத்தவர்களது நோக்கத்தை இஸ்லாமியர்கள் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்களால் மதக்கடமைகளைக் கடந்து வரமுடியாது. இதற்கு ஒரேவழி அரச மற்றும் பொதுமக்களின் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்போரை அவர்களது நாட்டுக்கே அனுப்பிவைப்பது நல்லது. அவர்கள் தமது நாட்டில் போய் தமது கடமையை செய்ய வேண்டியதே.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, nochchi said:

எல்லாம் ஆதிக்க சக்திகளுக்கே வெளிச்சம்.

இங்கே அணுகுண்டின்  அழிவைக் கண்ட நாடு யப்பான். அணுகுண்டைப் போட்டநாடு அமெரிக்கா. ஆனால், அந்தப் பெரும் அழிவின் பின்னும் அணுகுண்டின் மீதான பாசத்தை வல்லாண்மை மிகு நாடுகள் கைவிடவில்லை. அமெரிக்காவை யாரும் தண்டிக்கவும் இல்லை.  உலகை அழிக்கும் வல்லமையோடு இன்றும் இந்த நாடுகள் சர்வசாதாரணமாக மனிதஉரிமை மண்ணாங்கட்டி என்று பேசியவாறு மனித குலத்தை அழிக்க வல்ல அணு ஆயுதங்களோடு நடமாடுகின்றன.  இன்றைய நாளில் 9 நாடுகள் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளதாக இணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஸ்யா 1458தயார்நிலையிலும் 3039பயன்படுத்தக்கூடிய நிலையிலும்,அமெரிக்கா 1389தயார்நிலையிலும் 2361பயன்படுத்தக்கூடிய நிலையிலும்;, சீனா350, பிரான்ஸ்290,பிரித்தானியா225,பாகிஸ்தான்165,இந்தியா156,இஸ்ரவேல்90, வட கொரியா 40 - 50 பயன்படுத்தக்கூடிய நிலையிலும் வைத்திருக்கின்றன. மறைநிலையாக எத்தனை நாடுகள் வைத்திருக்கின்றவோ தெரியாது. 

                                        இந்த உலகிடம் மனிதாபிமானத் எதிர்பார்த்தல் சாத்தியமுள்ளதா? உலக நாடுகள் தத்தமது நாட்டின் பட்டினியைப் போக்குவதற்குச் செலவழிப்பதைவிட பலநூறுமடங்கு ஆயுத தளபாடங்களுக்குச் செலவழிக்கின்றன. இந்த உலகம் இயற்கையாக அழிகிறதோ இல்லையோ மனிதர்களால் அழிக்கப்படுவதற்கான எல்லாம் தயார்நிலையில் உள்ளதாகவே தென்படுகிறது. இதில் யாரிடம் அணுகுண்டு இருக்கவேண்டுமென யார் தீர்மானிப்பது? இந்த வல்லாண்மை நாடுகளால் அணு ஆயுதக்களைவைச் செய்யும் தற்துணிவுள்ளதா? பயணத்தின்போது சுண்டிவிடத்தயாரானநிலையில் பெட்டிகளோடு திரிகிறார்கள். இவர்களை இந்த உலகு ஏதோ காப்பர்கள் போல நோக்கியவாறு அழிகிறது.
நன்றி.   
 
இந்த‌ ஹாமாஸ் பிர‌ச்ச‌னைக்கு பின்னாள் நின்று இஸ்ரேல‌ இய‌க்குவ‌து அமெரிக்கா

ப‌ல‌ ட‌ன் ஆயுத‌த்தை இன்றும் இஸ்ரேலுக்கு அனுப்பி அவைச்சு இருக்கு எல்லாம் உல‌கில் த‌டை செய்ய‌ ப‌ட்ட‌ குண்டுக‌ளாய் தான் இருக்க‌ முடியும்..............இந்த‌ உல‌க‌ம் அழிய‌ போவ‌து அமெரிக்காவால் தான்...........சும்மா ஒரு விம்ப‌ம் தான் இஸ்ரேலின் உள‌வுத்துறை அடிக்க‌ யாரும் இல்லை

இஸ்ரேல் தொழிநுட்ப‌த்தில் வ‌ள‌ந்த‌ நாடு ஜ‌டோம்மை மீறி இஸ்ரேலுக்குள் குண்டுக‌ள் விழாது.........கிஸ்புள்ளா ஏவிய‌ ஏவுக‌ளைக‌ள் எத்த‌னை இஸ்ரேலுக்குள் விழுத்து வெடிச்சு இருக்கு...........ஜ‌நா பார்வையிட‌க் கூட‌ த‌டை இஸ்ரேலில்...........ஜ‌நா பார்வையிட்டால் உண்மை உல‌கிற்க்கு தெரிய‌ வ‌ந்து விடும்..............ஹிட்ட‌ல‌ர் அந்த‌ கால‌த்தில் இவ‌ர்க‌ளை விட்டு வைச்ச‌து த‌ப்பு ஒட்டுமொத்த‌மாய் தேடி தேடி அழிச்சு இருக்க‌னும்

க‌ள்ள‌ யூத‌ர் அடைக்க‌லம் கொடுத்த‌ நாட்டை சொந்த‌ம் கொண்டாடுது.............

அமெரிக்க‌ன் இல்லை என்றால் இவ‌ர்க‌ளால் ஹமாஸ் மீதான‌ போரை ச‌மாளிக்க‌ முடியாது..............அழிய‌ட்டும் இஸ்ரேல்............இப்ப‌ ந‌ட‌க்கும் அநீதிய‌ பார்த்த‌ சிறுவ‌ர்க‌ள் பின்னால்க‌ளில் இஸ்ரேல் அர‌சுக்கு எதிரா ஆயுத‌த்தை கையில் எடுக்குங்க‌ள்............

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, பையன்26 said:

இந்த‌ ஹாமாஸ் பிர‌ச்ச‌னைக்கு பின்னாள் நின்று இஸ்ரேல‌ இய‌க்குவ‌து அமெரிக்கா

ப.வி.அமைப்பைப் பலவீனப்படுத்த ஒரு கத்தியாகப் பயன்படுத்த முனைய அது வளர்ந்து பெரும் வாளாக நிற்பதாகப் பல ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். உலகறிந்த உண்மைதானே. பின்லாடனை வளர்த்தார்கள் கொன்றார்கள். தமக்குப்படியாத கடாபியை மக்களை வைத்துக் கொன்றார்கள். சதாமை கொன்றார்கள். சதாமுக்கு மரண தண்டனை சரியென்றால் நெத்தனயாகுவுக்கு என்ன தண்டனை கொடுப்பார்கள். எனவே இது ஒரு திருகுதாள உலகு. இதில் நாம் எமத இனத்துக்காகச் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும். 
நன்றி.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹிட்ட‌ல‌ர் அந்த‌ கால‌த்தில் இவ‌ர்க‌ளை விட்டு வைச்ச‌து த‌ப்பு ஒட்டுமொத்த‌மாய் தேடி தேடி அழிச்சு இருக்க‌னும்

க‌ள்ள‌ யூத‌ர் அடைக்க‌லம் கொடுத்த‌ நாட்டை சொந்த‌ம் கொண்டாடுது...]

மேலே உள்ள நாஸிய கருத்து  ஹிட்லரும் அவரது நாஸிகளும் இனங்களின் மீது கொலைவெறி கொண்டவர்கள், சீமானும் அதே மாதிரியானவரே என்று சொல்லபடுவது உண்மையாகிறது.   யூத‌ர்கள் மீதான இந்த கொலைவெறி கருத்து  சீமானால் ஈழதமிழர்களுக்கு பாடம் சொல்லிகொடுக்கபட்டதே.

  • Like 1
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஹிட்ட‌ல‌ர் அந்த‌ கால‌த்தில் இவ‌ர்க‌ளை விட்டு வைச்ச‌து த‌ப்பு ஒட்டுமொத்த‌மாய் தேடி தேடி அழிச்சு இருக்க‌னும்

க‌ள்ள‌ யூத‌ர் அடைக்க‌லம் கொடுத்த‌ நாட்டை சொந்த‌ம் கொண்டாடுது...]

மேலே உள்ள நாஸிய கருத்து  ஹிட்லரும் அவரது நாஸிகளும் இனங்களின் மீது கொலைவெறி கொண்டவர்கள், சீமானும் அதே மாதிரியானவரே என்று சொல்லபடுவது உண்மையாகிறது.   யூத‌ர்கள் மீதான இந்த கொலைவெறி கருத்து  சீமானால் ஈழதமிழர்களுக்கு பாடம் சொல்லிகொடுக்கபட்டதே.

சீமானின் அர‌சிய‌லை நானோ நீங்க‌ளோ தீர்மானிக்க‌ முடியாது

ஆன‌ ப‌டியால் இந்த‌ திரிக்குள் இருந்து முக்க‌ வேண்டாம்.............வ‌ட‌ நாட்டான் த‌மிழ‌க‌ காவ‌ல்துறைக்கு கை வைக்கும் நிலைக்கு வ‌ந்து விட்டான்.............

சீமானை ஆட்சியில் உக்கார‌ வைப்ப‌தா வேண்டாம‌ என்ப‌தை த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் முடிவு ப‌ண்ணுவின‌ம்

நாம் இந்த‌ திரியில் விவாதிப்ப‌து ப‌ல‌ஸ்தின‌ பிர‌ச்ச‌னை ப‌ற்றி ஆட்டுக்கை மாட்டை தொட‌ர்ந்து க‌ல‌ந்து அடிக்கிற‌து தானே உங்க‌ள் வேலை அதை திற‌ம் ப‌ட‌ செய்யிறீங்க‌ள்🙈................

ச‌த்திய‌மாய் என‌க்கு உங்க‌ளுட‌ன் க‌ருத்தாட‌ல் செய்ய‌ துப்ப‌ர‌வாய் பிடிக்காது😜..........என‌து க‌ருத்துக்கு ப‌தில் அளித்து இருந்தீங்க‌ள் அத‌ற்காக‌ ப‌தில் அளிக்கிறேன்.........பின் குறிப்பு சீமான் முன்னொடுக்கும் அர‌சிய‌ல் பிடித்த‌ ப‌டியால் தான் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் அண்ண‌ன் சீமான் பின்னால் போகின‌ம்...........உங்க‌ளை என்னை விட‌ அறிவான‌ பிள்ளைக‌ள் ப‌ல‌ ஆயிர‌ க‌ண‌க்கில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கின‌ம்.............

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்.............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல் ஹமாஸ் போர் - காசாவின் தென்பகுதியில் வீதிகளில் சடலங்களும் இஸ்ரேலிய டாங்கிகளும் - தப்பியோடும் மக்கள் தெரிவிப்பு

Published By: RAJEEBAN    12 NOV, 2023 | 11:19 AM

image
 
காசாவின் வடபகுதியில் இடம்பெறும் கடும் மோதல்களில் இருந்து தப்பியோடும் மக்கள் வீதிகளில் இஸ்ரேலிய டாங்கிகளையும் அழுகிய நிலையில் சடலங்களையும் காண்பதாக தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களை குறிப்பிட்ட நேரங்களில் சலால் அல் டின் வீதியை பயன்படுத்துமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது.

சமூக ஊடகங்களில் இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் துண்டுபிரசுங்கள் மூலமும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

தப்பியோடும் மக்களின் பயணம் எவ்வாறானதாக காணப்படுகின்றது.

அவர்களின் பயணிக்கும் பகுதிகளில் இருந்து வெளியான வீடியோக்களை பிபிசி ஆராய்ந்துள்ளது.நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களை செவிமடுத்துள்ளது.தெளிவான விபரங்களை பெறுவதற்காக செய்மதி படங்களை ஆராய்ந்துவருகின்றது.

மோதல்கள் ஆரம்பிப்பதற்கு முன்னர் காசாவில்  ஒரு மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் வசித்தனர்.

ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் இஸ்ரேல் காசாவின் மீது கடுமையான குண்டுவீச்சினை மேற்கொண்டுள்ளது.

பொதுமக்களை சலால் அல் டினான் வீதியை பயன்படுத்துமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது.

காசாவின் தென்பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்தாலும் அவர்கள் அங்கும் குண்டுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த புதன் கிழமை அகமட் ஜெயாடா தனது இடம்பெயர்வு குறித்து பிபிசியின் உள்ளுர் பத்திரிகையாளருக்கு கருத்து தெரிவித்தார்.

வடபகுதியில் உள்ள அல் நசாரிலிருந்து அவர் வெளியேறியுள்ளார்.

gaza_fleeing3.jpg

தனது கைக்குழந்தையுடன் பயணித்துக்கொண்டிருந்த அவர் நாங்கள் மிகவும் களைப்படைந்துள்ளோம்  என்ன செய்வது எங்கு போவது என தெரியவில்லை யாரிடம் போவது எங்களை காப்பாற்றுங்கள் என யாரிடம் தெரிவிப்பது என கேள்வி எழுப்பியுள்ளார்.

காசாவின் வடபகுதியில் உள்ள அல்ஜெய்டவுனிலிருந்து மஹ்மூட் கஜாவி தப்பி வெளியேறியுள்ளார்

தொடர்ச்சியான குண்டுவீச்சுக்களே இதற்கு காரணம்.

மதியம் தனது வீட்டிலிருந்து வெளியேறிய அவர் ஐந்து மணித்தியாலங்களாக நடந்துகொண்டிருக்கின்றார் - எங்கு போவது என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிட்டார்.

வீதியோரங்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.

பெரும்பாலானவர்கள் நடந்தே செல்கின்றனர் இஸ்ரேலிய இராணுவம் அவர்களை வாகனங்களை காசா நகரத்தின் தென்பகுதியின் எல்லையில் விட்டுவிட்டுச்செல்லுமாறு பணித்துள்ளது என ஐநா தெரிவித்துள்ளது.

செல்லும் வழியில் நான் பல சடலங்களை பார்த்தேன் வீதியின் கிழக்கு பகுதியில் இஸ்ரேலிய டாங்கிகளையும் பொதுமக்களையும் காணமுடிகின்றது ( நெட்சாரிமிற்கு அருகில்) அவர்கள் எங்களை நோக்கி வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நான் உடல்களை உடல்பாகங்களை பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

டெலிகிராமில் வெளியாகியுள்ள மற்றுமொரு வீடியோவில் பெண்ணொருவர் வீதியில் உடல்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

நான் நெட்ஜாரிம் சந்தியில் எனது மகனை தேடினேன் தென்பகுதி நோக்கி செல்லும்போது வீதியில் ஏனையவர்களின் உடல்களிற்கு மத்தியில் அவரின் உடலை பார்த்தேன்  என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

நான் இஸ்ரேலிய டாங்கிகளை கண்டேன் அவற்றை நான் கவனத்தில் கொள்ளவில்லை திரும்பிபார்த்தபோது எனது மகனின் உடலை பார்த்தேன் அவரது கையடக்க தொலைபேசி உடல்களை வைத்து அவற்றை அடையாளம் கண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

gaza_fleeing4.png

குறிப்பிட் பெண் முதல்நாள் அல்அக்சா மருத்துவமனைக்கு சென்று தனது மகனை தேடினார் அவர் தனது மகன் இறந்துவிட்டதாக பதிவு செய்தார் அன்றே அவரது மகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது என உள்ளுர் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் சலா அல் டின் வீதிகளில் உடல்கள் காணப்படும் வீடியோக்கள் எவற்றையும் பார்க்கவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/169098

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காஸாவில் இஸ்ரேல் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது? அதன்மூலம் என்ன சாதித்தது?

காஸாவில் இஸ்ரேல் ராணுவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜொனாதன் பீல்
  • பதவி, பாதுகாப்பு செய்தியாளர், பிபிசி நியூஸ்
  • 35 நிமிடங்களுக்கு முன்னர்

காஸாவில் இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதலை ஆரம்பித்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகி விட்டது. தரை வழித் தாக்குதலை ஆரம்பித்தும் இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன.

அக்டோபர் 7ஆம் தேதி முதன்முதலில் காஸாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது நடத்திய கொடூரமான தாக்குதலில் இருந்துதான் இதெல்லாம் தொடங்கியது. அந்த தாக்குதலில் மட்டும் 1,400க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் இலக்கானது ஆரம்பம் முதலே தெளிவாக உள்ளது. ஹமாஸ் இயக்கத்தை ராணுவம் மற்றும் அரசியல் ரீதியாக துடைத்தெறிவதுதான் அதன் நோக்கம்.

இந்நிலையில், காஸாவுக்குள் புகுந்த இஸ்ரேல் ராணுவம் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளது? தனது இலக்கை அடைவதில் இஸ்ரேல் எவ்வளவு தூரம் வந்திருக்கிறது மற்றும் அதனால் இந்த இலக்கை அடைய முடியுமா?

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இஸ்ரேலை பொறுத்தவரை, இந்த தாக்குதல் நடவடிக்கை அவ்வளவு எளிதில்லை என்றும் இது நீண்ட நாட்களுக்கு நீடிக்க கூடியது என்றும் மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டிருக்கிறது.

பிபிசியுடன் பேசிய மூத்த இஸ்ரேல் ராணுவ அதிகாரி, தற்போதைய நிலையை குத்துச்சண்டை போட்டியோடு ஒப்பிட்டு விளக்கியுள்ளார். 15 சுற்று போட்டியில் தாங்கள் இப்போது 4ம் சுற்றில் இருப்பதாக அவர் கூறுகிறார்.

இஸ்ரேலை சேர்ந்த யாராலுமே இந்த போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று சொல்ல முடியவில்லை. சிலர் மேற்கத்திய ஆதரவு இராக் ராணுவம் மற்றும் ஐ.எஸ். இயக்கத்திற்கு இடையே நடைபெற்ற சண்டையை மேற்கோள் காட்டுகின்றனர். அதன்படி, 2017ம் ஆண்டு ஐ.எஸ்.ஸிடமிருந்து மொசூலை மீண்டும் கைப்பற்ற இராக் ராணுவத்திற்கு 9 மாதங்கள் தேவைப்பட்டதை உதாரணமாக கூறுகின்றனர்.

அதே சமயம், சர்வதேச அளவில் சண்டை நிறுத்தம் அல்லது போர் நிறுத்தம் செய்யக்கோரி அழுத்தம் அதிகரித்து வருவதால் நீண்ட காலத்திற்கு இஸ்ரேலாலும் இந்த சண்டையை நடத்த முடியாது.

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காஸாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம்

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் அக்டோபர் 7ஆம் தேதியில் இருந்து நடத்திய தாக்குதல்களில் இதுவரை குறைந்தபட்சம் 11,078 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

தரைவழித் தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் அக்டோபர் 27ஆம் தேதி முதல் தீவிரப்படுத்தியுள்ளது. அதே நாளில் காஸாவிற்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் வடக்குப் பகுதியில் சண்டையிட்டு வருகிறது. காஸாவின் வடக்குப் பகுதியில் மக்கள் அதிகம் வாழும் கடற்கரையை ஒட்டிய பகுதியை இஸ்ரேல் ராணுவம் இரண்டாகப் பிரித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் முன்னேறியபோது அங்கிருந்த மக்களை தெற்குப் பகுதியை நோக்கிச் செல்ல கூறியிருந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் வடக்கு காஸாவை சுற்றி வளைத்தபோது அனைத்து மக்களும் தெற்குப் பகுதிக்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.

காஸா நகரப் பகுதியில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை அமைந்திருக்கக்கூடிய பகுதியில் இஸ்ரேல் ராணுவம் முன்னேறி ஹமாஸ் ஆயுதக்குழுவினரோடு சண்டையிட்டு வருகின்றனர். அல் ஷிஃபா மருத்துவமனை காஸாவின் வடக்குப் பகுதி கடலோரத்தில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையைச் சுற்றி இஸ்ரேலும் ஹமாஸும் சண்டையிட்டு வருகின்றனர்.

காஸாவிலேயே பெரிய மருத்துவமனையை தாக்கிய இஸ்ரேல்

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம்,REUTERS

காஸாவிலேயே பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபாவில் இருக்கும் குழந்தைகள் மற்றும் நோயாளிகள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அல் ஷிஃபா மருத்துவமனையில் இருக்கும் 37 குழந்தைகள் உட்பட 100 நோயாளிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் உலக சுகாதார மையம் கூறுகையில், இந்த மருத்துவமனையோடு தங்களுக்கு இருந்த அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அல் ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 100மீட்டர் தூரத்தில் இஸ்ரேலின் ராணுவ டாங்கிகள் ஹமாஸ் மீது தாக்குதலில் ஈடுபட்டிருந்ததாக அல் ஷிஃபா மருத்துவமனையில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அல் ஷிஃபா மருத்துவமனையில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் இரண்டு பேர் குழந்தைகள் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழுவால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் கூறுகையில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் அல் ஷிஃபா மருத்துவமனையின் பிரசவ அறைகள் இருக்கும் பகுதி உட்பட பல பகுதிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் அல் ஷிஃபா மருத்துவமனை மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து உலக அளவில் இஸ்ரேல் மீது அழுத்தம் அதிகமாகியுள்ளன.

காஸா தாக்குதல்

இரண்டு பக்கமும் பேரிழப்பு

இதுவரை பதினான்காயிரத்திற்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி அதில் ஹமாஸின் மூத்த தளபதிகள் உட்பட டஜன் கணக்கான இலக்குகளை வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது இஸ்ரேல். ராணுவ நிபுணர் மற்றும் ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான யாகோவ் காட்ஸ், இஸ்ரேல் இதுவரை இருபத்தி மூன்றாயிரத்திற்கும் அதிகமான குண்டுகளை வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இராக் மொசூலில் நடைபெற்ற போரின் கடைசி நேரத்தில் கூட மேற்கு நாடுகளின் கூட்டணி படைகள் ஐஎஸ் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஒரே வாரத்தில் 500 குண்டுகளை வீசியது குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் அளித்துள்ள தகவலின்படி, போர் தொடங்கியதில் இருந்து இதுவரை காஸாவில் 10,800 மக்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 4,400 குழந்தைகளும் அடங்குவார்கள்.

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் வெற்றிகரமாக காஸாவை தெற்கு மற்றும் வடக்கு என பிரித்து விட்டதாகவும், காஸா நகரம் முழுவதையும் அதன் படை சுற்றிவளைத்துள்ளதாகவும் கூறி வருகிறது.

தற்போது அவர்கள் நகரத்தின் மையப்பகுதி வரை வலுவாக ஊடுருவியுள்ளதாக கூறுகின்றனர். ஆனாலும் கூட இன்னும் காஸா முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக அவர்களால் அறிவிக்க முடியவில்லை.

அதே சமயம் மறுபுறம், இஸ்ரேல் ராணுவம் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளதாகவோ அல்லது காஸாவுக்குள் தீவிரமாக ஊடுருவியுள்ளதாகவோ தெரியவில்லை என ஹமாஸ் மறுத்துள்ளது.

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம்,SAID KHATIB/AFP

இஸ்ரேல் ராணுவம் ஹமாஸை தனிமைப்படுத்தும் இலக்கோடுதான் தனது தரைவழி தாக்குதலை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஹமாஸ் இயக்கத்திற்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

போர் தொடங்கியபோது ஹமாஸ் இயக்கத்தில் 30 முதல் 40 ஆயிரம் வரை வீரர்கள் இருக்கலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் 10 சதவீதம் அல்லது 4,000 வீரர்கள் தற்போது வரை கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இது போன்ற கணக்கீடுகளை சரிபார்ப்பது சாத்தியமற்றது.

இருப்பினும், ஏற்கனவே காஸா மீது இஸ்ரேலின் கடுமையான குண்டு வீச்சு தாக்குதலினால் ஹமாஸின் போர்த்திறன் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மறுபுறம் இஸ்ரேலிய ராணுவமோ குறைந்த இழப்புகளையே பெற்றுள்ளதாக தெரிகிறது. தரைவழி தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 34 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளது இஸ்ரேல்.

பெரும் இழப்புகளை தவிர்ப்பதற்காகவே இஸ்ரேல் ராணுவம் தனது தரைவழி நடவடிக்கைகளை மிக கவனமாக கையாள்வதாக இஸ்ரேல் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு நிபுணர் யோசி குபர்வாசர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்னும் எவ்வளவு ஹமாஸ் இயக்கத்தினர் வடக்கு காஸாவில் இருக்கிறார்கள் அல்லது எவ்வளவு வீரர்கள் சுரங்கங்களில் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது தெற்கு நோக்கி எவ்வளவு பேர் சென்றிருக்கலாம் என்று சரியாக தெரியாத சூழலே நிலவுகிறது.

காஸாவின் சுரங்கங்கள் இன்னமும் இஸ்ரேலுக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகின்றன. சண்டையின் போது சுரங்கங்களில் மாட்டி கொள்ளாமல் இருப்பதற்காக இஸ்ரேல் படைகள் தாங்கள் கண்டறியும் சுரங்கங்களை வெடி வைத்து தகர்த்தெறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நகரங்களில் போர் புரிவதில் சவால்கள்

உளவுத்துறை மற்றும் ராணுவம் ஆகியவற்றின் திறன் அடிப்படையில் இஸ்ரேலின் முன்னிலை தெளிவாக உள்ளது. இதனால், காஸாவின் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் நெட்வொர்க் அனைத்தையும் முடக்க முடியும்.

இஸ்ரேலின் அதிநவீன விமானப்படை அதன் போர் விமானங்கள் மற்றும் டிரோன்கள் மூலம் தரையில் என்ன நடக்கிறது என்பதை துல்லியமாக கண்காணிக்கும் திறன் கொண்டவை. ஆனால், அவற்றால் பூமிக்கு அடியில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க முடியாது.

இன்னமும் கூட தினமும் 100 புதிய தாக்குதல் இலக்குகளை கண்டறிவதாக மூத்த இஸ்ரேலிய பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போர் எவ்வளவு தூரம் இழுத்து கொண்டே போகிறதோ, அதே போல் இந்த பட்டியலும் குறையாமல் சென்று கொண்டே இருக்கிறது. ஆனால், எவ்வளவு காலத்திற்கு இந்த போர் தொடரும் வரை , எதிரிகளை கண்டறிந்து வீழ்த்துவதற்கு அதிகம் தரைப்படையினரையே நம்பியிருக்கும் சூழல் உள்ளது.

இஸ்ரேலிய படைகள் நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்ற போதும், நகர்ப்புறங்களில் போர் புரிவது அவர்களுக்கு சிக்கலானதாக இருக்கலாம். இஸ்ரேல் இது வரை தரைப்பகுதியில் குறைவான அளவிலேயே போர் நடத்தியுள்ளது. இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்ட பல காணொளிகளிலும் கூட அதன் தரைவழி சண்டைகள் பெரும்பான்மையாக அதன் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை சார்ந்து இருப்பதையே காட்டுகின்றன.

மதிப்பீடுகளின் அடிப்படையில் , தற்போதைய நிலவரப்படி காஸா பகுதிக்குள் 30 ஆயிரம் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் இருக்கலாம். ஆனால் இது அதன் ஒட்டுமொத்த ராணுவமான 1.60 லட்சம் செயல் வீரர்கள் மற்றும் 3.60 லட்சம் ரிசர்வ் வீரர்களில் ஒரு சிறு பகுதிதான்.

ராணுவ நிபுணரான ஜஸ்டின் கிரம்ப் பேசுகையில், இங்கே கேள்வி என்னவென்றால் காஸாவில் உள்ள ஒட்டுமொத்த கட்டிடங்கள் மற்றும் சுரங்கங்களை மொத்தமாக அழித்தொழிக்க எத்தனை தரைப்படை வீரர்களை இஸ்ரேல் நிலைநிறுத்தப்போகிறது?

இதற்கு பதிலாக, அது ஹமாஸின் வலுவான தளங்களை குறிவைக்கும் முடிவை எடுக்கலாம். இஸ்ரேல் மிக சிறிய அளவிலான சண்டையிடுதலை தவிர்க்க விரும்புவதாக அவர் நம்புகிறார். இது கண்டிப்பாக பெரும் இழப்பை ஏற்படுத்தும். மேலும், 200க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம்,REUTERS

போருக்குப் பின் என்ன நடக்கும்?

கேள்வி என்னவென்றால் ஹமாஸை மொத்தமாக அழித்தொழிக்கும் இஸ்ரேலின் இலக்கு சாத்தியப்படுமா? இஸ்ரேலின் மூத்த அதிகாரிகள் கூட வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்களை நம்பும் எந்த ஒரு சிந்தனையையும் மொத்தமாக அழிப்பது சாத்தியமில்லாதது என்றே நம்புகின்றனர்.

ஹமாஸின் பல மூத்த தலைவர்கள் காஸாவுக்கு வெளியே வெவ்வேறு நாடுகளில் தான் வாழ்ந்து வருகின்றனர். காட்ஸை பொறுத்தவரை, இந்த போரில் ஹமாஸ் இயக்கத்தினர் சிலர் பிழைத்திருந்தால் கூட, அவர்கள் “நாங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறோம் , நாங்கள் வென்று விட்டோம்” என்று கூறலாம்.

அதனால்தான், அக்டோபர் 7 சம்பவம் போன்று மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய ஹமாஸை மொத்தமாக அழிப்பதை விட, அவர்களுக்கு தண்டனை வழங்குவதில் இஸ்ரேலின் கவனம் இருக்க வேண்டும் என்று நம்புகிறார் கிரம்ப்.

போருக்கு பின்னால் என்ன நடக்கும் என்பதை கூறுமாறு இஸ்ரேல் மீது அமெரிக்காவின் அழுத்தமும் அதிகரித்து வருகிறது.

நிபுணர்களின் கருத்துப்படி, போருக்கு பிந்தைய திட்டமில்லாமல் தொடங்கப்பட்ட பல போர்கள் வெற்றியில் முடிந்ததில்லை. ஆனால், இஸ்ரேல் ராணுவ முகாமில் இந்த திட்டமிடலை மட்டும் சுத்தமாக காண முடியவில்லை.

https://www.bbc.com/tamil/articles/cx01q8p5jnwo

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, பையன்26 said:

ச‌த்திய‌மாய் என‌க்கு உங்க‌ளுட‌ன் க‌ருத்தாட‌ல் செய்ய‌ துப்ப‌ர‌வாய் பிடிக்காது

என‌க்கு உங்க‌ளுட‌ன் க‌தைக்க பிடிக்கும் என்றா நினைத்தீர்கள்? எனக்கும் அதே மாதிரி தான். அதனால் தான் உங்கள் நாஸிய கருத்தை நேரடியாக quote selection செய்யாமல் கொப்பி பண்ணி போட்டு இந்த நாஸிய கருத்து எங்கே இருந்து பெற்று மூளை சலவை செய்யபட்டது என்பதையும் குறிப்பிட்டேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, விளங்க நினைப்பவன் said:

என‌க்கு உங்க‌ளுட‌ன் க‌தைக்க பிடிக்கும் என்றா நினைத்தீர்கள்? எனக்கும் அதே மாதிரி தான். அதனால் தான் உங்கள் நாஸிய கருத்தை நேரடியாக quote selection செய்யாமல் கொப்பி பண்ணி போட்டு இந்த நாஸிய கருத்து எங்கே இருந்து பெற்று மூளை சலவை செய்யபட்டது என்பதையும் குறிப்பிட்டேன்.

நான் எழுதின‌தை கொப்பி ப‌ண்ணி அதே திரியில் நீங்க‌ள் ப‌தில் அளித்த‌தால் தான் உங்க‌ளுக்கு எழுத‌ வேண்டி வ‌ந்த‌து............தேவை இல்லாம‌ அண்ண‌ன் சீமானை இழுக்கும் போதே தெரியும் உங்க‌ட‌ நோக்க‌ம் என்ன‌ என்று.............உக்கிரேன் கோமாளி செல‌ன்சிக்கு ஜிங் சாங் அடிச்சு முடிஞ்சுது...............இப்போது ப‌ல‌ஸ்தீன‌ பிர‌ச்ச‌னைக்குள் வ‌ந்து சீமானின் பெய‌ரை தேவை இல்லாம‌ இழுக்கிறீங்க‌ள் அதுக்காக‌ தான் என் ப‌தில்😁..............

நீங்க‌ள் ஒரு சார்வாய் எழுதும் க‌ருத்துக்கை நான் மூக்கை நுழைப்ப‌து கிடையாது அது உங்க‌ட‌ த‌னிப்ப‌ட‌ சுத‌ந்திர‌ம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

என‌க்கு உங்க‌ளுட‌ன் க‌தைக்க பிடிக்கும் என்றா நினைத்தீர்கள்? எனக்கும் அதே மாதிரி தான். அதனால் தான் உங்கள் நாஸிய கருத்தை நேரடியாக quote selection செய்யாமல் கொப்பி பண்ணி போட்டு இந்த நாஸிய கருத்து எங்கே இருந்து பெற்று மூளை சலவை செய்யபட்டது என்பதையும் குறிப்பிட்டேன்.

நாஷிகளின்  அடிப்படை கொள்கை என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புகின்றேன். இல்லை என நீங்கள் பதிலளித்தால் அதற்கும் நான் பதில் சொல்ல தயாரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/11/2023 at 03:06, nochchi said:

 இதில் நாம் எமத இனத்துக்காகச் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும். 
நன்றி.

வாளை எடுத்தவன் வாளால் மடிவான்.

நாம் பலஸ்தீன மக்களுக்காக போராடும்போது எமது இனத்துக்கு விடிவு  வரும். எமது போராட்டத்துக்கு அவர்கள் எப்படி எல்லாம் ஆதரவு அளித்தார்கள் என்று உங்களுக்கு  தெரியும்தானே. முஸ்லிம்களின் ஆதரவு எப்போதும் எமக்கு உண்டு. 

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, ஏராளன் said:

காஸாவில் இஸ்ரேல் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது? அதன்மூலம் என்ன சாதித்தது?

காஸாவில் இஸ்ரேல் ராணுவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜொனாதன் பீல்
  • பதவி, பாதுகாப்பு செய்தியாளர், பிபிசி நியூஸ்
  • 35 நிமிடங்களுக்கு முன்னர்

காஸாவில் இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதலை ஆரம்பித்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகி விட்டது. தரை வழித் தாக்குதலை ஆரம்பித்தும் இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன.

அக்டோபர் 7ஆம் தேதி முதன்முதலில் காஸாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது நடத்திய கொடூரமான தாக்குதலில் இருந்துதான் இதெல்லாம் தொடங்கியது. அந்த தாக்குதலில் மட்டும் 1,400க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் இலக்கானது ஆரம்பம் முதலே தெளிவாக உள்ளது. ஹமாஸ் இயக்கத்தை ராணுவம் மற்றும் அரசியல் ரீதியாக துடைத்தெறிவதுதான் அதன் நோக்கம்.

இந்நிலையில், காஸாவுக்குள் புகுந்த இஸ்ரேல் ராணுவம் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளது? தனது இலக்கை அடைவதில் இஸ்ரேல் எவ்வளவு தூரம் வந்திருக்கிறது மற்றும் அதனால் இந்த இலக்கை அடைய முடியுமா?

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இஸ்ரேலை பொறுத்தவரை, இந்த தாக்குதல் நடவடிக்கை அவ்வளவு எளிதில்லை என்றும் இது நீண்ட நாட்களுக்கு நீடிக்க கூடியது என்றும் மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டிருக்கிறது.

பிபிசியுடன் பேசிய மூத்த இஸ்ரேல் ராணுவ அதிகாரி, தற்போதைய நிலையை குத்துச்சண்டை போட்டியோடு ஒப்பிட்டு விளக்கியுள்ளார். 15 சுற்று போட்டியில் தாங்கள் இப்போது 4ம் சுற்றில் இருப்பதாக அவர் கூறுகிறார்.

இஸ்ரேலை சேர்ந்த யாராலுமே இந்த போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று சொல்ல முடியவில்லை. சிலர் மேற்கத்திய ஆதரவு இராக் ராணுவம் மற்றும் ஐ.எஸ். இயக்கத்திற்கு இடையே நடைபெற்ற சண்டையை மேற்கோள் காட்டுகின்றனர். அதன்படி, 2017ம் ஆண்டு ஐ.எஸ்.ஸிடமிருந்து மொசூலை மீண்டும் கைப்பற்ற இராக் ராணுவத்திற்கு 9 மாதங்கள் தேவைப்பட்டதை உதாரணமாக கூறுகின்றனர்.

அதே சமயம், சர்வதேச அளவில் சண்டை நிறுத்தம் அல்லது போர் நிறுத்தம் செய்யக்கோரி அழுத்தம் அதிகரித்து வருவதால் நீண்ட காலத்திற்கு இஸ்ரேலாலும் இந்த சண்டையை நடத்த முடியாது.

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காஸாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம்

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் அக்டோபர் 7ஆம் தேதியில் இருந்து நடத்திய தாக்குதல்களில் இதுவரை குறைந்தபட்சம் 11,078 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

தரைவழித் தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் அக்டோபர் 27ஆம் தேதி முதல் தீவிரப்படுத்தியுள்ளது. அதே நாளில் காஸாவிற்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் வடக்குப் பகுதியில் சண்டையிட்டு வருகிறது. காஸாவின் வடக்குப் பகுதியில் மக்கள் அதிகம் வாழும் கடற்கரையை ஒட்டிய பகுதியை இஸ்ரேல் ராணுவம் இரண்டாகப் பிரித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் முன்னேறியபோது அங்கிருந்த மக்களை தெற்குப் பகுதியை நோக்கிச் செல்ல கூறியிருந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் வடக்கு காஸாவை சுற்றி வளைத்தபோது அனைத்து மக்களும் தெற்குப் பகுதிக்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.

காஸா நகரப் பகுதியில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை அமைந்திருக்கக்கூடிய பகுதியில் இஸ்ரேல் ராணுவம் முன்னேறி ஹமாஸ் ஆயுதக்குழுவினரோடு சண்டையிட்டு வருகின்றனர். அல் ஷிஃபா மருத்துவமனை காஸாவின் வடக்குப் பகுதி கடலோரத்தில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையைச் சுற்றி இஸ்ரேலும் ஹமாஸும் சண்டையிட்டு வருகின்றனர்.

காஸாவிலேயே பெரிய மருத்துவமனையை தாக்கிய இஸ்ரேல்

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம்,REUTERS

காஸாவிலேயே பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபாவில் இருக்கும் குழந்தைகள் மற்றும் நோயாளிகள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அல் ஷிஃபா மருத்துவமனையில் இருக்கும் 37 குழந்தைகள் உட்பட 100 நோயாளிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் உலக சுகாதார மையம் கூறுகையில், இந்த மருத்துவமனையோடு தங்களுக்கு இருந்த அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அல் ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 100மீட்டர் தூரத்தில் இஸ்ரேலின் ராணுவ டாங்கிகள் ஹமாஸ் மீது தாக்குதலில் ஈடுபட்டிருந்ததாக அல் ஷிஃபா மருத்துவமனையில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அல் ஷிஃபா மருத்துவமனையில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் இரண்டு பேர் குழந்தைகள் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழுவால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் கூறுகையில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் அல் ஷிஃபா மருத்துவமனையின் பிரசவ அறைகள் இருக்கும் பகுதி உட்பட பல பகுதிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் அல் ஷிஃபா மருத்துவமனை மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து உலக அளவில் இஸ்ரேல் மீது அழுத்தம் அதிகமாகியுள்ளன.

காஸா தாக்குதல்

இரண்டு பக்கமும் பேரிழப்பு

இதுவரை பதினான்காயிரத்திற்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி அதில் ஹமாஸின் மூத்த தளபதிகள் உட்பட டஜன் கணக்கான இலக்குகளை வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது இஸ்ரேல். ராணுவ நிபுணர் மற்றும் ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான யாகோவ் காட்ஸ், இஸ்ரேல் இதுவரை இருபத்தி மூன்றாயிரத்திற்கும் அதிகமான குண்டுகளை வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இராக் மொசூலில் நடைபெற்ற போரின் கடைசி நேரத்தில் கூட மேற்கு நாடுகளின் கூட்டணி படைகள் ஐஎஸ் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஒரே வாரத்தில் 500 குண்டுகளை வீசியது குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் அளித்துள்ள தகவலின்படி, போர் தொடங்கியதில் இருந்து இதுவரை காஸாவில் 10,800 மக்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 4,400 குழந்தைகளும் அடங்குவார்கள்.

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் வெற்றிகரமாக காஸாவை தெற்கு மற்றும் வடக்கு என பிரித்து விட்டதாகவும், காஸா நகரம் முழுவதையும் அதன் படை சுற்றிவளைத்துள்ளதாகவும் கூறி வருகிறது.

தற்போது அவர்கள் நகரத்தின் மையப்பகுதி வரை வலுவாக ஊடுருவியுள்ளதாக கூறுகின்றனர். ஆனாலும் கூட இன்னும் காஸா முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக அவர்களால் அறிவிக்க முடியவில்லை.

அதே சமயம் மறுபுறம், இஸ்ரேல் ராணுவம் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளதாகவோ அல்லது காஸாவுக்குள் தீவிரமாக ஊடுருவியுள்ளதாகவோ தெரியவில்லை என ஹமாஸ் மறுத்துள்ளது.

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம்,SAID KHATIB/AFP

இஸ்ரேல் ராணுவம் ஹமாஸை தனிமைப்படுத்தும் இலக்கோடுதான் தனது தரைவழி தாக்குதலை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஹமாஸ் இயக்கத்திற்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

போர் தொடங்கியபோது ஹமாஸ் இயக்கத்தில் 30 முதல் 40 ஆயிரம் வரை வீரர்கள் இருக்கலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் 10 சதவீதம் அல்லது 4,000 வீரர்கள் தற்போது வரை கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இது போன்ற கணக்கீடுகளை சரிபார்ப்பது சாத்தியமற்றது.

இருப்பினும், ஏற்கனவே காஸா மீது இஸ்ரேலின் கடுமையான குண்டு வீச்சு தாக்குதலினால் ஹமாஸின் போர்த்திறன் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மறுபுறம் இஸ்ரேலிய ராணுவமோ குறைந்த இழப்புகளையே பெற்றுள்ளதாக தெரிகிறது. தரைவழி தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 34 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளது இஸ்ரேல்.

பெரும் இழப்புகளை தவிர்ப்பதற்காகவே இஸ்ரேல் ராணுவம் தனது தரைவழி நடவடிக்கைகளை மிக கவனமாக கையாள்வதாக இஸ்ரேல் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு நிபுணர் யோசி குபர்வாசர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்னும் எவ்வளவு ஹமாஸ் இயக்கத்தினர் வடக்கு காஸாவில் இருக்கிறார்கள் அல்லது எவ்வளவு வீரர்கள் சுரங்கங்களில் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது தெற்கு நோக்கி எவ்வளவு பேர் சென்றிருக்கலாம் என்று சரியாக தெரியாத சூழலே நிலவுகிறது.

காஸாவின் சுரங்கங்கள் இன்னமும் இஸ்ரேலுக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகின்றன. சண்டையின் போது சுரங்கங்களில் மாட்டி கொள்ளாமல் இருப்பதற்காக இஸ்ரேல் படைகள் தாங்கள் கண்டறியும் சுரங்கங்களை வெடி வைத்து தகர்த்தெறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நகரங்களில் போர் புரிவதில் சவால்கள்

உளவுத்துறை மற்றும் ராணுவம் ஆகியவற்றின் திறன் அடிப்படையில் இஸ்ரேலின் முன்னிலை தெளிவாக உள்ளது. இதனால், காஸாவின் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் நெட்வொர்க் அனைத்தையும் முடக்க முடியும்.

இஸ்ரேலின் அதிநவீன விமானப்படை அதன் போர் விமானங்கள் மற்றும் டிரோன்கள் மூலம் தரையில் என்ன நடக்கிறது என்பதை துல்லியமாக கண்காணிக்கும் திறன் கொண்டவை. ஆனால், அவற்றால் பூமிக்கு அடியில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க முடியாது.

இன்னமும் கூட தினமும் 100 புதிய தாக்குதல் இலக்குகளை கண்டறிவதாக மூத்த இஸ்ரேலிய பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போர் எவ்வளவு தூரம் இழுத்து கொண்டே போகிறதோ, அதே போல் இந்த பட்டியலும் குறையாமல் சென்று கொண்டே இருக்கிறது. ஆனால், எவ்வளவு காலத்திற்கு இந்த போர் தொடரும் வரை , எதிரிகளை கண்டறிந்து வீழ்த்துவதற்கு அதிகம் தரைப்படையினரையே நம்பியிருக்கும் சூழல் உள்ளது.

இஸ்ரேலிய படைகள் நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்ற போதும், நகர்ப்புறங்களில் போர் புரிவது அவர்களுக்கு சிக்கலானதாக இருக்கலாம். இஸ்ரேல் இது வரை தரைப்பகுதியில் குறைவான அளவிலேயே போர் நடத்தியுள்ளது. இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்ட பல காணொளிகளிலும் கூட அதன் தரைவழி சண்டைகள் பெரும்பான்மையாக அதன் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை சார்ந்து இருப்பதையே காட்டுகின்றன.

மதிப்பீடுகளின் அடிப்படையில் , தற்போதைய நிலவரப்படி காஸா பகுதிக்குள் 30 ஆயிரம் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் இருக்கலாம். ஆனால் இது அதன் ஒட்டுமொத்த ராணுவமான 1.60 லட்சம் செயல் வீரர்கள் மற்றும் 3.60 லட்சம் ரிசர்வ் வீரர்களில் ஒரு சிறு பகுதிதான்.

ராணுவ நிபுணரான ஜஸ்டின் கிரம்ப் பேசுகையில், இங்கே கேள்வி என்னவென்றால் காஸாவில் உள்ள ஒட்டுமொத்த கட்டிடங்கள் மற்றும் சுரங்கங்களை மொத்தமாக அழித்தொழிக்க எத்தனை தரைப்படை வீரர்களை இஸ்ரேல் நிலைநிறுத்தப்போகிறது?

இதற்கு பதிலாக, அது ஹமாஸின் வலுவான தளங்களை குறிவைக்கும் முடிவை எடுக்கலாம். இஸ்ரேல் மிக சிறிய அளவிலான சண்டையிடுதலை தவிர்க்க விரும்புவதாக அவர் நம்புகிறார். இது கண்டிப்பாக பெரும் இழப்பை ஏற்படுத்தும். மேலும், 200க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம்,REUTERS

போருக்குப் பின் என்ன நடக்கும்?

கேள்வி என்னவென்றால் ஹமாஸை மொத்தமாக அழித்தொழிக்கும் இஸ்ரேலின் இலக்கு சாத்தியப்படுமா? இஸ்ரேலின் மூத்த அதிகாரிகள் கூட வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்களை நம்பும் எந்த ஒரு சிந்தனையையும் மொத்தமாக அழிப்பது சாத்தியமில்லாதது என்றே நம்புகின்றனர்.

ஹமாஸின் பல மூத்த தலைவர்கள் காஸாவுக்கு வெளியே வெவ்வேறு நாடுகளில் தான் வாழ்ந்து வருகின்றனர். காட்ஸை பொறுத்தவரை, இந்த போரில் ஹமாஸ் இயக்கத்தினர் சிலர் பிழைத்திருந்தால் கூட, அவர்கள் “நாங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறோம் , நாங்கள் வென்று விட்டோம்” என்று கூறலாம்.

அதனால்தான், அக்டோபர் 7 சம்பவம் போன்று மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய ஹமாஸை மொத்தமாக அழிப்பதை விட, அவர்களுக்கு தண்டனை வழங்குவதில் இஸ்ரேலின் கவனம் இருக்க வேண்டும் என்று நம்புகிறார் கிரம்ப்.

போருக்கு பின்னால் என்ன நடக்கும் என்பதை கூறுமாறு இஸ்ரேல் மீது அமெரிக்காவின் அழுத்தமும் அதிகரித்து வருகிறது.

நிபுணர்களின் கருத்துப்படி, போருக்கு பிந்தைய திட்டமில்லாமல் தொடங்கப்பட்ட பல போர்கள் வெற்றியில் முடிந்ததில்லை. ஆனால், இஸ்ரேல் ராணுவ முகாமில் இந்த திட்டமிடலை மட்டும் சுத்தமாக காண முடியவில்லை.

https://www.bbc.com/tamil/articles/cx01q8p5jnwo

இது ஒன்றும் ஹமாஸுடன் மட்டும் நடக்கும் யுத்தம் இல்லை. ஈரானிய படைகள், ஹவுத்தி  பயங்கரவாதிகள் போன்ற எல்லா அமைப்புகளும் காணப்படுகின்றது. அதனால்தான் இரான் மிக தீவிரமாக யுத்த நிறுத்தம் வேண்டும் என்று போராடுகின்றது.

 எகிப்து மூலமாக ஆயுதங்கள் இறக்கப்பட்டுள்ளதுடன் இப்போதும் வந்துகொண்டுதான் இருக்கிறது. அதாவது எல்லாம் சுரங்க பாதையூடாகவே நடக்கின்றன. இஸ்ரேல் ராணுவத்துக்கு இது எல்லாம் தெரியாமல் இல்லை. அதனாலதான் அங்குள்ள வைத்தியசாலைகளையும் மற்றையமைத்து அவர்களுடன் போராட வேண்டி உள்ளது. எல்லா வைத்தியசாலைகள் , ஆம்புலன்ஸ் எல்லாமே அவர்கள் கட்டுபாட்டில்தான்.

இப்போது இது முடிவடையாவிடடாலும் பயங்கரவாதிகளை அளிக்கும் வரைக்கும் இஸ்ரேல் ஓயாது. இருந்தாலும் இஸ்ரேவேல் அதட்கு ஒரு விலை கொடுக்கத்தான் வேண்டும். அவர்கள் செய்த ஒரே தவறு காஸாவை பாலஸ்தீனர்களிடம் கொடுத்தது. அந்த தவறை மீண்டும் செய்ய மாடடார்கள் என்று நம்பலாம். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலுக்கு சவாலாக இருக்கும் ஹமாஸின் ரகசிய சுரங்கப் பாதைகள்

ரகசிய சுரங்கப் பாதைகள்
13 நவம்பர் 2023, 02:23 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்

ஹமாஸ் ஆயுதக்குழு கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஏராளமான ராக்கெட்டுகளை ஏவியது. இதைத்தொடர்ந்து, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது.

ஹமாஸ் குழுவை முற்றிலுமாக அழிக்க நினைக்கும் இஸ்ரேலுக்கு சவாலாக விளங்குவது, அக்குழுவினர் பூமிக்கடியில் அமைத்துள்ள ரகசிய சுரங்கப் பாதைகள்தான்.

இஸ்ரேலை தாக்க ஹமாஸ் பல்வேறு ரகசிய சுரங்கப் பாதைகளை அமைத்துள்ளது. ஹமாஸ் குழுவினர் தங்குவதற்காகவும் அவர்கள் சென்றுவரும் பாதையாக பயன்படுத்தவும் அக்குழுவினரால் ஏராளமான ரகசிய சுரங்கப் பாதைகள் பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ளன.

தங்கள் திட்டங்களை வகுக்கவும் இந்த சுரங்கப் பாதைகளை ஹமாஸ் பயன்படுத்தி வருகிறது. எல்லை தாண்டிய இந்த சுரங்கங்கள் வழியாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலை அடைய முடியும். சுரங்கங்களை பயன்படுத்தி பல்வேறு தாக்குதல்களையும் ஹமாஸ் நிகழ்த்தியுள்ளது.

ஹமாஸை பூமியிலிருந்து அழித்தொழிக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறுகிறது. அதற்கு முதலில் இந்த ரகசிய சுரங்கப் பாதைகளை இஸ்ரேல் அழிக்க வேண்டும். ஆனால், ஹமாஸின் சுரங்கப் பாதைகளை முற்றிலுமாக அழிப்பது அவ்வளவு சாத்தியமில்லை என்பது அதன் வலுவான கட்டமைப்பிலிருந்து தெரிகிறது.

காஸா சுரங்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காஸாவில் உள்ள ஹமாஸ் சுரங்கப் பாதை எப்படி இருக்கும்?

காஸாவில் உள்ள ஹமாஸ் சுரங்கப் பாதைகள் சுமார் 80 மீட்டர் வரை ஆழம் கொண்டவை. பூமிக்கடியில் 20 மீட்டர் உயரத்தில் தடுப்பரணும் அமைக்கப்பட்டுள்ளது. சுற்று வேலி அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கத்தில் ஆயுதங்களை மறைத்து வைக்க, திட்டங்களை வகுக்க, பணயக் கைதிகளை வைக்க பயன்படுத்தப்படும் அறைகள் உள்ளன. மேலும், சுரங்கப் பாதைகளின் கட்டமைப்பை வலுப்படுத்த கான்கிரீட்டால் ஆன மேற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதைகள் சுமார் 1.8 மீட்டர் உயரம் கொண்டவை.

காஸா சுரங்கப் பாதை

அதேபோன்று, பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் பயன்படுத்திய சுரங்கப் பாதையைக் காண பிபிசியின் குவென்டின் சோமர்வில்லேவுக்கு 2015 இல் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.

கண்கள் கட்டப்பட்ட நிலையில் ரகசிய இடத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த சுரங்கம் மேற்பரப்பிலிருந்து 30 மீட்டர் ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. குடியிருப்பு கட்டடங்களுக்கு உள்ளே அவற்றின் நுழைவுவாயில்கள் இருப்பது பொதுமக்களை வான்வழி தாக்குதல் ஆபத்தில் ஆழ்த்துகிறது.

ஹமாஸால் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளும் இந்த சுரங்கத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இஸ்ரேல் ராணுவத்தின் குற்றச்சாட்டு

காஸாவிற்கு உதவியாக வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான டாலர்களை இந்த சுரங்கங்களை அமைக்க ஹமாஸ் அமைப்பு மக்களிடமிருந்து பெற்றதாக இஸ்ரேலிய ராணுவம் குற்றம்சாட்டுகிறது. முந்தைய போர்களில் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டுவதற்காகக் கொடுக்கப்பட்டப் பல்லாயிரக்கணக்கான டன் சிமெண்டை பயன்படுத்தி இந்தச் சுரங்கங்கள் கட்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டுகிறது.

’காஸா மெட்ரோ’

காஸாவில் உள்ள சுரங்க கட்டமைப்பை 2021ஆம் ஆண்டு வான்வழி தாக்குதல் மூலம் அழித்ததாக இஸ்ரேல் கூறியது. அந்த சுரங்கப் பாதையை`காஸா மெட்ரோ` என இஸ்ரேல் கூறுகிறது. ஏனென்றால், அந்த சுரங்கம் 41 கி.மீ. நீளமும் 10 கி.மீ. அகலமும் கொண்ட ஒரு பகுதியின் அடியில் பரந்திருப்பதாக நம்பப்படுகிறது.

கடந்த 2021ம் ஆண்டு நடந்த மோதலைத் தொடர்ந்து இந்த சுரங்கத்தில் 100 கி.மீக்கும் அதிகமான சுரங்க அறைகள் வான்வழித் தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கூறின. ஆனால், தங்களின் சுரங்கம் 500 கி.மீ. வரை நீளம் கொண்டதாகவும் அதில் 5 சதவீதம் மட்டுமே தாக்கப்பட்டதாகவும் ஹமாஸ் பதிலுக்குக் கூறியிருந்தது.

ஹமாஸ் சுரங்கம்

ஹமாஸ் சுரங்கப் பாதைகளை இஸ்ரேலால் அழிக்க முடியுமா?

ஹமாஸ் சுரங்கப் பாதைகள் கண்டறியப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவற்றின் நுழைவுவாயில்கள் வீடுகள், மசூதிகள், பள்ளிகள் மற்றும் பிற பொதுக் கட்டடங்களுக்கு அடியில் அமைந்திருக்கின்றன.

"சுரங்கப்பாதைகள் பண்டைய காலங்களில் இருந்தே போர்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை முற்றிலுமாகத் தடுக்க வழி இல்லை," என்கிறார், இஸ்ரேலின் ரெய்க்மன் பல்கலைக்கழகத்தில் நிலத்தடிப் போர்முறைகள் குறித்த வல்லுநராக இருக்கும் டாஃப்னே ரீஷ்மண்ட்-பராக்..

மேலும் பேசிய ரீஷ்மண்ட்-பராக், இந்த சுரங்கப் பாதைகளை முற்றிலும் அழிப்பது சாத்தியப்படாது என்கிறார்.

“சில பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற மாட்டார்கள். சில சுரங்கங்கள் எங்கிருக்கின்றன என்பதே தெரியாது. மேலும் சில பகுதிகளை அழிப்பது மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்” என்கிறார் அவர்.

இவற்றை அழிப்பது, இஸ்ரேல் ராணுவம், பணயக் கைதிகள், பாலத்தீன மக்கள் ஆகிய முத்தரப்பிலும் பல மரணங்களை ஏற்படுத்தும் என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/cv2zej0g2y2o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

mosques.jpg?resize=700,375&ssl=1

60 க்கும் அதிகமான பள்ளிவாசல்கள் குண்டுவீசி அழிப்பு.

முற்றுகையிடப்பட்ட காசா நகரின் சப்ரா பகுதியில் உள்ள அல்-சலாம் பள்ளிவாசலில் இஸ்ரேலிய விமானம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனோடு கடந்த மாதம் 7 ஆம் திகதி முதல் இஸ்ரேலிய படைகளால் அழிக்கப்பட்ட மொத்த பள்ளிவாசல்களின் எண்ணிக்கை 60 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

வழிபாட்டுத் தலங்கள் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் ஒரு கலாச்சாரச் சொத்தாகப் பாதுகாப்பதற்குத் தகுதி பெறுகின்றன.

https://athavannews.com/2023/1358424

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெண் மருத்துவப் போராளிகள் முதன்மை மருத்துவ நிலையொன்றில் கடமையில் ஈடுபட்டுள்ளனர் நான்காம் ஈழப்போர்        
    • அறுவைப் பண்டுவம் ஒன்றின் பின்னர் படைய மருத்துவர்  பிரியவதனா, படைய மருத்துவர் மலரவன், ?? 1/4/2008      
    • நாங்களும் தான் ஒரு நூறு வருடங்கள் முன் வரையும் ஒரு பழங்குடியாகவே இருந்தோம். மூட நம்பிக்கைகளை இறுக்கமாகவே பின்பற்றிக் கொண்டிருந்தோம். பகுத்தறிவு என்று ஒன்று பரவலாக வந்தது பாரதியின் பிறப்பின் பின்  தானே.............. சமூகத்தில் எதையும் நேர் கொண்ட பார்வையுடன் கேள்வி கேட்கலாம் என்ற துணிவை அவர் கொடுத்த பின் தான் சிலர் கேட்கத் துணிந்தனர். அங்கிருந்து தான் இங்கு வந்து நிற்கின்றோம். இதுவே தான் உலகெங்கும் நியதி. ஐரோப்பியர்கள் சில நூற்றாண்டுகள் முன்னரேயே சிந்திக்கத் தொடங்கினர். மத்திய கிழக்கு மக்கள் அந்த வகையில் சிறிது பின்தங்கிவிட்டனர். ஆனால் அதற்காக இன்றைய ஒன்றுக்கு ஒன்று மிகவும் நெருக்கமாக தொடர்புபட்ட நவீன உலகில் ஒரு பிரதேசத்தையோ அல்லது ஒரு குழுவையோ இப்படியான மனிதர்களுக்கு அடிப்படைச் சுதந்திரங்கள் இல்லாத ஒரு கொடிய அடக்குமுறையில் ஆட்சி செய்வதை சகமனிதர்கள் பார்த்துக் கொண்டு வீணே இருக்கமுடியாது. இன்றைய நெருக்கமான தொடர்புகளால் விளைவுகள் எங்கும் பரவுகின்றது. அடிப்படைவாதங்கள் மட்டும் பரவவில்லை, அதன் பெயரில் நடக்கும் மனிதகுலத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் பரவுகின்றன. உதாரணமாக, எங்கிருந்து போதைப் பொருட்கள் வருகின்றன............ சிரியாவில் கூட அது தான் அசாத்தின் கடைசி வருமானமாக இருந்தது. எல்லை நாடுகள் அசாத்தை கைவிட இதுவும் ஒரு காரணம். அடிப்படைவாதம், நம்பிக்கைகள் என்ற போர்வையில் சிலர் தங்களின் ஏகபோக வாழ்க்கைகளுக்காக எந்த எல்லைவரையும் போகின்றனர். இவற்றை எந்த வகைகளில் என்றாலும் நீக்க முடியுமா என்று தான் பார்க்கவேண்டும். 'அவர்கள் அப்படித்தான்.................' என்று அப்படியே விட்டுவிட முடியாது.           
    • தலைவர் தனது பதவிவிலகலை மீளப்பெற்றதால் தலைவரில்லையென்பது  பொருத்தமா?
    • இணையர்     படைய மருத்துவர் மலரவன், படைய மருத்துவர்  பிரியவதனா     ??? கிளிநொச்சி   2001-ம் ஆண்டு தியாக தீபம் திலீபன் மருத்துவமனை கட்டமைக்கப்பட்டது.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.