Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/12/2023 at 14:43, ஏராளன் said:

காசாவில் பெருமளவு ஆண்களை கைதுசெய்து ஆடைகளை களைந்து தடுத்துவைத்திருக்கும் இஸ்ரேலிய படையினர் - வெளியானது அதிர்ச்சி புகைப்படம்

Published By: RAJEEBAN     08 DEC, 2023 | 01:09 PM

image
 

இஸ்ரேலிய படையினர் காசாவில் பெருமளவு ஆண்களை கைதுசெய்து தடுத்துவைத்திருப்பதை காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலிய படையினர் பெருமளவு ஆண்களை கைதுசெய்து முழங்காலில் அமர்த்தியிருப்பதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில்  வாகனமொன்றில் ஏற்றப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர்.

இந்த சம்பவம் எப்போது இடம்பெற்றது என்ற விபரங்கள் வெளியாகவில்லை, எனினும் அந்த படத்தில் உள்ள சிலரை குடும்பத்தவர்கள் நண்பர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

isreal_arrests1.jpg

அந்த படத்தில் காணப்படுபவர்களில் அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் எந்த அமைப்புடனும் தொடர்பில்லாதவர்கள் என   உறவினர்கள் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா மத்திய தரை மனித உரிமை கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்ட ஒருவரின் படத்தை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதுடன் இஸ்ரேலிய இராணுவத்தினர் பலரை கைது செய்து துஸ்பிரயோகம் செய்தனர் என பதிவிட்டுள்ளார்.

இட்பெயர்ந்த மக்களிற்கு எதிராக இஸ்ரேலிய படையினர் கண்மூடித்தனமான கைதுகளில் ஈடுபட்டுள்ளனர், மருத்துவர்கள் கல்விமான்கள் பத்திரிiயாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த கேள்விகளுக்கு இஸ்ரேலிய இராணுவம் பதிலளிக்கவில்லை என சிஎன்என் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/171253

'காஸாவின் கடும் குளிரில் அரைநிர்வாணமாக்கி சித்ரவதை செய்தனர்' - ஒரு பாலத்தீன குடிமகனின் வாக்குமூலம்

இஸ்ரேல், பாலத்தீனம், இஸ்ரேல்-பாலத்தீனர்கள், போர்க் குற்றங்கள், மனித உரிமை
படக்குறிப்பு,

இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஈதர் ஷைல்பி, ஷிரீன் யூசுப்
  • பதவி, பிபிசி நிருபர், அரபு சேவை
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

22 வயதான பாலத்தீனர் ஒருவர் கடந்த வியாழனன்று பிபிசியிடம், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் (IDF) வடக்கு காஸாவில் தான் சிறைப்பிடிக்கப்பட்டதையும், அதன் பிறகு அவருக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

அவருடன் சேர்த்து காஸா பகுதியைச் சேர்ந்த பலரை இஸ்ரேலிய இராணுவம் கைது செய்தது. இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை பிபிசி உறுதி செய்தது. அதில் உள்ளாடை மட்டுமே அணிந்த பல ஆண்கள் தரையில் முட்டிபோட்டவாறு இருப்பதைக் காண முடிகிறது. அருகே நிற்கும் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் அவர்களது துணிகளை அப்புறப்படுத்துவதைக் காண முடிகிறது.

காஸா பகுதிக்கு வடக்கே உள்ள பெய்ட் லஹியாவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

"அவர்கள் எங்களை சாலையில் அமர வைத்தனர்," என்று ஒரு இளைஞர் தொலைபேசியில் பிபிசியிடம் கூறினார். பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மற்றும் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து அவர், "சுமார் மூன்று மணி நேரம் அங்கேயே அமர்ந்திருந்தோம். லாரிகள் வந்த பின்னர் எங்கள் கைகளையும் கண்களையும் கட்டினர். பின்னர் வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம்," என்று விவரித்தார்.

அந்த வீடியோவில், ஏராளமான ஆண்கள் சாலையோரம் வரிசையாக அமர்ந்திருப்பதைக் காணலாம். காலணிகளைக் கழற்றச் சொன்னதாகத் தெரிகிறது. அவர்களது காலணிகள் எங்கும் சிதறிக் கிடக்கின்றன.

அந்த வீடியோவில் இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் கவச வாகனங்கள் அவர்களைச் சுற்றி இருப்பதையும், இராணுவ வீரர்கள் அந்த ஆண்களைக் கண்காணித்துக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது.

 

இஸ்ரேலிய இராணுவத்தால் கேட்கப்பட்ட கேள்விகள்

இச்சம்பவம் தொடர்பான மற்றுமொரு வீடியோவில் இவர்கள் இராணுவ ட்ரக் வண்டிகளில் எங்கோ அழைத்துச் செல்லப்படுவதைக் காணமுடிகிறது.

இவர்களை இஸ்ரேல் ராணுவத்திடம் சரணடைந்த ஹமாஸ் தீவிரவாதிகளாக இஸ்ரேல் ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன.

ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், தான் மிகவும் மோசமான முறையில் விசாரிக்கப்பட்டதாக அந்த இளைஞர் கூறினார். பாலத்தீன கிளர்ச்சிக் குழுவான ஹமாஸ் உடனான அவரது தொடர்பு குறித்து கேட்கப்பட்டது.

மற்றொரு புகைப்படம் (பிபிசி அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை) அவர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மண்டியிட்டு இருப்பதைக் காட்டுகிறது. இவர்கள் ஒரு மணல்மேடு அருகே அமர்ந்திருப்பதாகத் தெரிகிறது.

‘வெறும் காலில் உடைந்த கண்ணாடிமேல் நடக்க வைத்தனர்’

இஸ்ரேல், பாலத்தீனம், இஸ்ரேல்-பாலத்தீனர்கள், போர்க் குற்றங்கள், மனித உரிமை

பட மூலாதாரம்,MOHAMMED LUBBAD

இந்த 22 வயது இளைஞரின் புகைப்படமே போதுமான ஆதாரமாக இருக்கிறது. சம்பவம் நடந்த இடம் குறித்து பிபிசியிடம் அவர் கூறியதும் சரியாக ஒத்துப் போகிறது. தானும், தன் தந்தையும், ஐந்து உறவினர்களும் அழைத்துச் செல்லப்பட்ட இடம் மணல் மேடுகளால் நிறைந்திருந்தது என்று அவர் கூறியிருந்தார்.

தான் அங்கு கிட்டத்தட்ட முழு நிர்வாணமாக விடப்பட்டதாகவும், இருப்பினும் இரவில் போர்த்துவதற்கு ஒரு போர்வை வழங்கப்பட்டது எனவும் அவர் கூறுகிறார்.

கேள்விகளுக்கு பதில் அளித்த பின் ஒரு புதிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

அவர் கூறுகையில், “எனது தந்தை மற்றும் எனது உறவினர் தவிர அனைவரும் விடுவிக்கப்பட்டோம். எனது தந்தை ஐக்கிய நாடுகளின் நிவாரண நிறுவனமான UNRWA உடன் பணிபுரிகிறார். எதற்காக அவரை அழைத்துச் சென்றார்கள் என்று எனக்கு புரியவில்லை," என்றார்.

அவர் தொடர்ந்து, "கற்கள் மற்றும் உடைந்த கண்ணாடிகள் சிதறிக் கிடந்த இருள் நிறைந்த சாலையில் வெறுங்காலுடன் நடந்தோம்," என்கிறார்.

 

சிறைபிடிக்கப்பட்ட 400 பேர்

இஸ்ரேல், பாலத்தீனம், இஸ்ரேல்-பாலத்தீனர்கள், போர்க் குற்றங்கள், மனித உரிமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாலத்தீன குடிமகனான முகமது லுபாத் பெல்ஜியத்தில் வசித்து வருகிறார்.

அவர், 10 குடும்ப உறுப்பினர்களுடன் கைது செய்யப்பட்ட தனது சகோதரர் இப்ராஹிமைப் பற்றி சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஒரு புகைப்படத்தில், கைது செய்யப்பட்டவர்கள் மத்தியில் அமர்ந்திருந்த அண்ணன் இப்ராஹிமின் முகத்தை வட்டமிட்டு, 'இவர் என் சகோதரர்' என்று எழுதியுள்ளார். அந்த படத்தில், அவரது சகோதரர் தனது பெயர் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்துள்ளார்.

பின்னர் இது குறித்து பிபிசியிடம் பேச முகமது ஒப்புக்கொண்டார்.

"என் அண்ணன் இப்ராஹிமை கைது செய்து அழைத்துச் செல்வதற்கு முன், வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் இரண்டு மணி நேரம் பேசினேன். என் சகோதரர் ஒரு கணினிப் பொறியாளர்," என்று அவர் கூறினார்.

இப்ராஹிமுக்கு இரண்டு மகள்கள் இருப்பதாக அவர் பிபிசியிடம் கூறினார்.

தங்கள் வீடு மற்றும் பெய்ட் லஹியா கிராமம் முழுவதும் இஸ்ரேலிய இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக சகோதரர் தன்னிடம் கூறியதை முகமது நினைவு கூறுகிறார்.

அவர் தொடர்ந்து கூறியது "இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு நான் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவைப் பார்த்தேன். அதில் என் சகோதரனை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டேன், மேலும் சில அண்டை வீட்டுக்கார்களையும் அந்த வீடியோவில் பார்த்தேன்."

இரண்டு உறவினர்களைத் தவிர அவரது மற்ற உறவினர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் 35 வயதான அஹ்மத் லுபாத், ஆசிரியர் வேலை பார்க்கும் அவர் நான்கு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். மனித உரிமை ஆர்வலரும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமான அய்மன் லுபாத் என்ற உறவினரும் இதில் உள்ளார்.

தனது குடும்பம் மிகவும் சாதாரணமானது என்றும் இராணுவத்துடன் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறுகிறார் முகமது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் உறவினர் பிபிசியிடம் கூறுகையில், இஸ்ரேல் மொத்தம் 400 பேரை சிறை பிடித்தது, அதில் 250 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.

 

இஸ்ரேல் ராணுவத்தின் பதில் என்ன?

இஸ்ரேல், பாலத்தீனம், இஸ்ரேல்-பாலத்தீனர்கள், போர்க் குற்றங்கள், மனித உரிமை

பட மூலாதாரம்,அல்-அரேபி அல்-ஜதீத்

படக்குறிப்பு,

பாலத்தீன பத்திரிகையாளர் தியா அல்-கஹ்லூத்

வீடியோவைப் பற்றி கேட்டபோது, இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம், பிடித்து வைக்கப்பட்ட அனைவரும் இராணுவத்தில் சேரும் வயதுடையவர்கள் என்றும், மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட பகுதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டவர்கள் இவர்கள் என்றும் கூறினார்.

வடக்கு காஸாவில் தரைவழித் தாக்குதல்களை நடத்துவதற்கு முன், காஸாவின் சமவெளியில் இருந்து தெற்கே செல்லுமாறு இங்குள்ள மக்களை இஸ்ரேல் கேட்டுக் கொண்டது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் புகைப்படம் மற்றும் வீடியோ பற்றி நேரடியாகக் கருத்து தெரிவிக்காமல், "இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் வீரர்கள் மற்றும் ஷின் பெட் அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளை பிடித்து வைத்து விசாரித்தனர்," என வியாழனன்று கூறினார் இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி.

அவர் தொடர்ந்து கூறியது, "இவர்களில் பலர் 24 மணித்தியாலங்களுக்குள் எமது படைகளிடம் சரணடைந்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் அவர்களிடம் இருந்து பெறப்படும் புலனாய்வுத் தகவல்கள் யுத்தத்தைத் தொடரப் பயன்படுத்தப்படும்."

இஸ்ரேலிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் எலோன் லெவி வெள்ளிக்கிழமை பிபிசியிடம், வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா மற்றும் ஷெஜாயாவில் மக்கள் சிறை பிடிக்கப்பட்டதாகக் கூறினார். இந்த இரண்டு இடங்களும் "ஹமாஸின் கோட்டைகளாகவும் அவர்களின் முக்கிய சந்திப்பு பகுதிகளாகவும் கருதப்படுகின்றன," என்றார்.

இவர்களில் யார் ஹமாஸ் பயங்கரவாதிகள், யார் பொது மக்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றார்.

 

'இஸ்ரேலிய இராணுவத்தின் அட்டூழியத்திற்கு இந்த படங்களே சாட்சி"

இங்கிலாந்திற்கான பாலத்தீன தூதர் தனது சமூக ஊடகப் பதிவில், "ஐ.நா. முகாம்களில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட சாதாரண குடிமக்களை இஸ்ரேலிய இராணுவம் நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியதை அறிவிக்கும் படங்கள் இவை," என்று கூறினார்.

"இந்த படங்கள் மனிதகுல வரலாற்றில் மிக மோசமான நினைவுகளுக்கு சாட்சியாக இருக்கும்," என்று தூதர் ஹுஸாம் ஸோம்லாட் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் பாலத்தீன ஊடகவியலாளரான தியா அல் கஹ்லூத்தும் அடங்குவார். அவர் அல்-அரபி அல்-ஜாதித் என்ற அரபு செய்தித்தாளின் காஸா பணியகத் தலைவர் ஆவார். இதை அந்த செய்தித்தாள் வியாழக்கிழமை அன்று உறுதிப்படுத்தியது.

தியா அல் கஹ்லூத்தின் உறவினர், முகமது அல்-கஹ்லூத், காஸாவில் பிபிசியில் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராகப் பணிபுரிகிறார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 24 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

"அவர்களில் 12 பேரை நான் வைரலான வீடியோக்கள் மற்றும் படங்களிலிருந்து அடையாளம் கண்டுக் கொண்டேன்," என்கிறார் 27 வயதான முகமது.

அதில் ஏழு நபர்கள் மட்டுமே வெள்ளிக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டதாக அவர் கூறுகிறார்.

"விடுதலை செய்யப்பட்டவர்கள் காஸாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான எல்லைக்கு அருகில் விடுவிக்கப்பட்டனர். எனக்குத் தெரிந்தவரை, ஜிகிம் அருகே உள்ள எல்லையில் இஸ்ரேலிய இராணுவத்தால் விடுவிக்கப்பட்டனர்," என்கிறார் முகமது.

அவரது உறவினர்கள் வீட்டிற்கு செல்ல ஆறு கிலோமீட்டர்கள் நடக்க வேண்டியிருந்தது என முகமது கூறுகிறார்.

ஒரு அரபு மொழி செய்தி இணையதளம் (நியூ அரப் என்ற ஆங்கில மொழி இணையதளம் அதற்கு உள்ளது) அல்-கஹ்லூத்தின் கைது மிகவும் அவமானகரமானது என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

"பாலத்தீன பிராந்தியத்தில் நடக்கும் பத்திரிகையாளர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை சர்வதேச சமூகம், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைகளுக்காகப் பணியாற்றும் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் ஏஜென்சிகள் கண்டிக்க வேண்டுமென நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அந்த செய்தித்தாள் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தியா அல்-கஹ்லூத்தை கைது செய்ததாக கூறப்படும் ஐடிஎஃப்-யிடம் இது குறித்து பிபிசி கேள்வி எழுப்பியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cjkp31447vlo

  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசாவில் ஹமாசின் அதிரடி தாக்குதல் - பத்து இஸ்ரேலிய படையினர் பலி

14 DEC, 2023 | 10:49 AM
image
 

காசாவில் இடம்பெற்ற தாக்குதலில் பத்து இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் அதிகாரி தரத்தை சேர்நு;த ஒருவர் உட்பட பத்துபேர் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசாவின் வடபகுதியில் உள்ள செஜெய்யாவில் இ;ந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கட்டிடமொன்றில் ஹமாஸ் மீது தாக்குதலை மேற்கொண்ட படையினரை  காப்பாற்ற முயன்ற  படையினரே தாக்குதலிற்குள்ளாகியுள்ளனர்.

காசாவை இஸ்ரேலிய படையினரால் ஒருபோதும் அடக்கமுடியாது என்பதை இந்த தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/171679

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹமாஸின் சுரங்கத்திற்குள் கடல்நீரை பாய்ச்சும் இஸ்ரேல் படையினர்

காசாவில் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் படையினர் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கத்திற்குள் கடல்நீரை செலுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ஹமாஸ் அமைப்பினர் இரகசிய சுரங்கத்திற்குள் பிணைக்கைதிகளை மறைத்து வைத்திருக்கலாம்.ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கலாம் என இஸ்ரேல் இராணுவம் நம்புகிறது.

 

சுரங்கத்திற்குள் கடல் நீரை செலுத்தும் பணி

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கத்திற்குள் கடல் நீரை செலுத்தும் பணியை இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டு வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஹமாஸின் சுரங்கத்திற்குள் கடல்நீரை பாய்ச்சும் இஸ்ரேல் படையினர் | Israeli Soldiers Pouring Seawater Ihamas Mine

அமெரிக்க அதிகாரிகளின் ஆலோசனை

இந்த நடவடிக்கை சுரங்கங்களை அழிக்க பயன்படும் என சில அமெரிக்க அதிகாரிகள் கூறியதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் இராணுவம் இது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

ஹமாஸின் சுரங்கத்திற்குள் கடல்நீரை பாய்ச்சும் இஸ்ரேல் படையினர் | Israeli Soldiers Pouring Seawater Ihamas Mine

https://ibctamil.com/article/israeli-soldiers-pouring-seawater-ihamas-mine-1702483980

Posted

 

காசாவில் ஹமாசின் அதிரடி தாக்குதல் - பத்து இஸ்ரேலிய படையினர் பலி

 
image
 

காசாவில் இடம்பெற்ற தாக்குதலில் பத்து இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் அதிகாரி தரத்தை சேர்நு;த ஒருவர் உட்பட பத்துபேர் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசாவின் வடபகுதியில் உள்ள செஜெய்யாவில் இ;ந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கட்டிடமொன்றில் ஹமாஸ் மீது தாக்குதலை மேற்கொண்ட படையினரை  காப்பாற்ற முயன்ற  படையினரே தாக்குதலிற்குள்ளாகியுள்ளனர்.

காசாவை இஸ்ரேலிய படையினரால் ஒருபோதும் அடக்கமுடியாது என்பதை இந்த தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/171679

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

யூகே யிற்கான இஸ்ரேல் தூதர் - “இரு நாடுகள் கொள்கை” இனி சரிவராது என்ற தொனியில் பேட்டி கொடுத்துள்ளார் (இதுவே இப்போதைய இஸ்ரேலிய அரசின் நீண்ட கால நோக்கு).

இதை சுனக் மறுதலித்துள்ளார்.

தீவிரவாத இஸ்ரேலிய குடியேறிகளுக்கு பிரிட்டன் வர தடை என கமரன் அறிவித்தார்.

https://www.bbc.co.uk/news/live/world-middle-east-67709805

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted

‘வெற்றியை நோக்கி இறுதிவரை நாங்கள் செல்வோம்’ – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

3-50.jpg

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7-ந்தேதி போர் வெடித்தது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த தற்காலிக போர் நிறுத்தம் கடந்த 1-ந்தேதி முடிவுக்கு வந்தது.

இதையடுத்து காசாவை இஸ்ரேல் மீண்டும் முழு வேகத்துடன் தாக்கத் தொடங்கியது. இதனால் இஸ்ரேல்-ஹமாஸ் போர் மீண்டும் உக்கிரமடைந்துள்ளது. இதனால் அங்கு உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் போர் காரணமாக காசாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகவும், சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் குறித்து பேசியபோது, “காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் படையினர் மீதான தாக்குதலில், பாலஸ்தீன மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இதேநிலை தொடர்ந்து நீடித்தால் இஸ்ரேல் மிக கடினமான நிலையை சந்திக்க நேரிடும். இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வெற்றியை நோக்கி இறுதிவரை நாங்கள் செல்வோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் இறுதி வரை போரை தொடர்வோம். இதற்கு மேல் எந்த கேள்வியும் இல்லை. மிகுந்த வலியுடனும், சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியிலும் இதை நான் கூறுகிறேன். எங்களை எதுவும் தடுத்து நிறுத்தாது. வெற்றியை நோக்கி இறுதிவரை நாங்கள் செல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

https://akkinikkunchu.com/?p=263248

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பசி, தாகம், அவமானம்; காசாவில் பாலஸ்தீனியர்களை கைதுசெய்யும் இஸ்ரேலின் நடவடிக்கையால் பெரும் அச்சம்

Published By: RAJEEBAN    15 DEC, 2023 | 12:53 PM

image

apnews

இஸ்ரேலிய படையினர் காசாவை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களை சுற்றிவளைத்து அவர்களை குடும்பத்தவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி  அரைநிர்வாணப்படுத்தி கடற்கரையோரத்தில் உள்ள தடுப்பு முகாமிற்கு எடுத்து சென்றனர் அங்கு அவர்களை கடும் குளிரில் கடும் தாகத்துடன் தடுத்துவைத்திருந்தனர் என மனித உரிமை அமைப்புகளும் உறவினர்களும் விடுதலையானவர்களும் தெரிவித்துள்ளனர்.

பெய்ட் லகியா ஜபாலியா அகதிமுகாம் மற்றும் காசாவின் புறநகர் பகுதிகளில் கைதுசெய்யப்பட்ட பாலஸ்தீனியர்கள் கைகள் கட்டப்பட்டு கண்கள் மூடப்பட்ட நிலையில் டிரக்குகளில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

சிலர் தாங்கள் அடையாளம் தெரியாத முகாம்களிற்கு கொண்டு செல்லப்பட்டு நிர்வாணமாக கடும்குளிரில் கடும் தாகத்தின் மத்தியில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

எங்களை கால்நடைகளை போல நடத்தினார்கள் கைகளில் இலக்கங்களை கூட எழுதினார்கள் என பெய்ட் லகியாவில் டிசம்பர் ஏழாம் திகதி கைதுசெய்யப்பட்ட 30 வயது கணிணி பொறியியலாளர் இப்ராஹிம் லுபாட் தெரிவித்துள்ளார்.

அவர்களின் வெறுப்பை எங்களால் உணரமுடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

isreal_army2.jpg

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை மேற்கொண்டு பத்து வாரங்களின் பின்னர்மக்கள் வெளியேற்றப்பட்ட காசாவின் வடபகுதியை தனது இறுக்கமான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து ஹமாஸ் குறித்த புலனாய்வு தகவல்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலின் தந்திரோபாயங்களில் சுற்றிவளைப்புகள் முக்கியமானவையாக மாறியுள்ளன என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தந்திரோபாயம் எங்களிற்கு ஏற்கனவே பயனளித்துள்ளது என இஸ்ரேலிய பிரதமரின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் யாக்கோவ் அமிர்டிரோர் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் அவமதிக்கப்படுவது குறித்த கேள்விக்கு இஸ்ரேலிய இராணுவம் சர்வதேச நடைமுறைகளின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டவர்கள் நடத்தப்படுகின்றனர் போதியளவு உணவையும் குடிநீரையும் அவர்களிற்கு வழங்குகின்றோம் என தெரிவித்துள்ளது.

காசாவின் ஹமாஸ் வலுவாக உள்ள இரண்டு பகுதிகளில் சுற்றிவளைப்புகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவபேச்சாளர் கைதுசெய்யப்பட்டவர்களிடம் வெடிகுண்டுகள் இல்லை என்பதை உறுதி செய்யவதற்காக அவர்கள் நிர்வாணமாக்கப்பட்டார்கள் என குறிப்பிட்டுள்ளது.

அவர்களை விசாரணை செய்த பின்னர் மீண்டும் ஆடைகளை அணியுமாறு கேட்டுக்கொண்டோம் என குறிப்பிட்டுள்ள  இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் ஹமாசுடன் தொடர்புள்ளவர்கள் என கருதப்படுபவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் பல ஹமாஸ் உறுப்பினர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏனையவர்களை விடுதலை செய்து தென்பகுதிக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் எனவும்  இஸ்ரேலின் இராணுவ பேச்சாளர் ரியர் அட்மிரல் டானியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

கைகள் கட்டப்பட்ட நபர்கள் தலையை குனி;ந்தபடிவீதிகளில் முழங்காலில் அமர்ந்திருப்பதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து கடும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன.

இந்த படங்கள் கடும் வேதனையை  ஏற்படுத்தியுள்ளன இது குறித்து மேலதிக விபரங்களை கோரியுள்ளோம் என அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மத்தியுமில்லர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனியர்களை பொறுத்தவரைஇது  ஒரு மோசமான அவமானமாக காணப்படுகின்றது - சுற்றிவளைக்கப்பட்டவர்களில் 12 வயது சிறுவர்கள் முதல் 70வயது இளைஞர்கள் வரை காணப்படுகின்றனர்இ இவர்களில் பலர் யுத்தத்தி;ற்கு முன்னர் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என கைதுசெய்யப்பட்ட 15 பேரின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

isreal_army1.jpg

தென்பகுதிக்கு தப்பிச்செல்வதற்கு  என்னிடம் பணம் இருக்கவில்லை என்பதே நான் செய்த குற்றம் பெய்ட் லகியாவில் 45 வேலைவாய்ப்பற்றநீரிழிவு நோயாளி ஒருவர் தெரிவித்தார்.

டிசம்பர் 8 ம் திகதி அவரை கைதுசெய்த இஸ்ரேலிய படையினர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் விடுதலை செய்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/171763

Posted

3 பணயகைதிகளின் உடலங்களை இஸ்ரேல் எடுத்துள்ளது.

Posted

இஸ்ரேல் தவறுதலாக 3 பணய கைதிகளை கொன்றதாக சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலிய படையினரின் தவறுதலான தாக்குதல் - மூன்று பணயக்கைதிகள் பலி

Published By: RAJEEBAN    16 DEC, 2023 | 09:52 AM

image
 

காசாவில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் போது ஹமாசிடம் பணயக் கைதிகளாகயிருந்த மூவரை தவறுதலாக சுட்டுக்கொன்றுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

யொட்டாம் ஹைம், சமெர் தலக்கா, அலோன் சர்மிஸ் என்ற மூன்று பணயக்கைதிகளையே தவறுதலாக சுட்டுக்கொன்றுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

காசாவின் வடபகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்ட இஸ்ரேலிய படையினரால் இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலையையும் மனவேதனையையும் வெளியிட்டுள்ள இஸ்ரேல் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட மூவரின் உடல்களையும் இஸ்ரேலிற்கு கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/171802

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல் தாக்குதலில் அல்ஜசீரா ஊடகவியலாளர் படுகாயம்: அம்புலன்ஸை தடுத்து நிறுத்தியதால் 5 மணிநேரத்தின் பின் ஊடகவியலாளர் உயிரிழப்பு

Published By: RAJEEBAN    16 DEC, 2023 | 01:48 PM

image

காசாவில் இடம்பெயர்ந்த மக்களிற்கான  பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில்  அல்ஜசீராவின் புகைப்படப்பிடிப்பாளர் கொல்லப்பட்டுள்ளார். காசாவிற்கான அல்ஜசீராவின் தலைவர் காயமடைந்துள்ளார்.

samer2.jpg

கான்யூனிசின் தென்பகுதியில் உள்ள பர்ஹானா பாடசாலை தாக்குதலிற்குள்ளானதை தொடர்ந்து அதனை பார்வையிடுவதற்காக அல் ஜசீராவின் செய்தியாளர் வல்தஹ்தூஹ் புகைப்படப்பிடிப்பாளர் சாமர் அபு டோக்காவுடன் அந்த பாடசாலைக்கு சென்றுள்ளார், அவ்வேளை இஸ்ரேலின் ஆளில்லா விமானம் மீண்டும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேல் பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தவர்களையும் இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொள்கின்றது என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. சாமெர் காயங்களிற்குள்ளான பின்னர் ஐந்து மணித்தியாலங்கள் குருதி பெருக்கிற்குள்ளாகி உயிரிழந்தார் என தெரிவித்துள்ள அல்ஜசீரா இஸ்ரேலிய படையினர் அம்புலன்ஸ்களையும் மருத்துவ பணியாளர்களையும் தடுத்து நிறுத்தினர் எனவும் குற்றம்சாட்டியுள்ளது.

samer.png

காயமடைந்த பத்திரிகையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவர் இஸ்ரேலின் தாக்குதலில் தனது குடும்பம் முழுவதையும் இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/171827

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலிய பணயக் கைதிகளையே தவறுதலாக கொன்ற ராணுவம் - கொந்தளிக்கும் மக்கள்

பிரதமரைச் சூழ்ந்துகொண்ட மக்கள்

பட மூலாதாரம்,HOSTAGE AND MISSING FAMILIES FORUM

படக்குறிப்பு,

இஸ்ரேல் ராணுவம் தவறுதலாக மேற்கொண்ட தாக்குதலில் சொந்த மக்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் தனது தாக்குதல் நடவடிக்கையின் போது தவறுதலாக மூன்று பணயக் கைதிகளை 'அச்சுறுத்தல்' எனக் கருதி கொன்றுவிட்டதாகக் கூறுகிறது.

உயிரிழந்தவர்களில் 28 வயதான யோதம் கைம், 22 வயதான சமர் தலால்கா மற்றும் 26 வயதான அலோன் ஷம்ரிஸ் ஆகியோர் அடங்குவர். ராணுவம் வருத்தம் தெரிவித்ததுடன், காஸாவின் வடக்கே ஷேஜாயாவில் மூவரும் இறந்ததாக அறிவித்தது.

அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக் குழு, 200க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாகப் பிடித்து மீண்டும் காஸாவுக்கு கொண்டு சென்றது.

கடந்த சில நாட்களில் ஹமாஸ் பல டஜன் பணயக் கைதிகளை விடுவித்தாலும், அந்தக் குழுவிடம் இன்னும் 100க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சொந்த நாட்டவர்களே உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ராணுவம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

"காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து, பணயக் கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வருவதே எங்கள் தேசியப் பணி" என்றும் ராணுவம் கூறியுள்ளது.

 

தெருவில் இறங்கிய மக்கள்

பிரதமரைச் சூழ்ந்துகொண்ட மக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இஸ்ரேல் ராணுவத்தின் தவறான தாக்குதலைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கொலைச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு, அந்நகரில் உள்ள ராணுவ தளத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.

எஞ்சியுள்ள பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஆயுதக் குழுவுடன் அரசு சமரசம் செய்துகொள்ள வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி மற்றும் சுவரொட்டிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுவரொட்டிகளில் “அவர்களை வீட்டிற்கு அழைத்து வாருங்கள்” மற்றும் “இப்போது பணயக் கைதிகள் பரிமாற்ற நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுங்கள்,” என்று எழுதப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் உடல்கள் இஸ்ரேலை அடைந்துள்ளன. அங்கு உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

உடல்களை அடையாளம் காணும் பணிகள்

பிரதமரைச் சூழ்ந்துகொண்ட மக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ராணுவத் தாக்குதலில் உயிரிழந்த 3 பேரின் உடல்களுக்கும் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன.

தற்போது உயிரிழந்த யோதம் கயீம் என்பவரை அக்டோபர் 7ஆம் தேதி, கிப்புட்ஸ் கஃப்ர் அஸாவில் இருந்து ஹமாஸ் குழுவினர் கடத்திச் சென்றனர். யோதம் ஒரு இசைக்கலைஞர் என்பதுடன், அவர் விலங்குகளை நேசிப்பவராகவும் இருந்தார். அவருக்கு இத்தாலிய உணவுதான் மிகவும் பிடித்த உணவு என்றும் தெரியவந்துள்ளது.

ஹமாஸ் இஸ்ரேலை தாக்கிய நாளில், யோதம் கயீம் தனது குடும்பத்தினரை அழைத்து, தங்களது வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததாகக் கூறினார். இதற்கிடையில், யோதம் கயீம் காற்றோட்டமாக இருப்பதற்காகத் தனது வீட்டின் ஜன்னலை திறந்தபோது, ஹமாஸ் குழுவினர் அவரைக் கடத்திச் சென்றனர்.

மகன் இறப்பதற்கு முன் பிபிசி செய்தியிடம் பேசிய அவரது தாயார், தாக்குதல் நடந்த அன்று அவர் வீட்டில் பதுங்கியிருந்தபோது அவருடன் பேசியதாகத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் இறந்த இரண்டாவது நபர், 26 வயதான அலோன் ஷம்ரிஸ், அக்டோபர் 7ஆம் தேதி காஃப்ர் அஸபவில் இருந்தார்.

இதுதவிர, 22 வயதான சமீர் தலால்கா, கிப்புட்ஸ் நிர் அம் என்ற இடத்தில் இருந்து ஹமாஸால் கடத்தப்பட்டார். மோட்டார் சைக்கிள் ஆர்வலரான சமீர், கிராமப்புறங்களுக்குச் செல்வதையும் தனது நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதையும் அதிகம் விரும்புவராக இருந்திருக்கிறார்.

அவர் ஹுரா நகரில் வசித்து வந்த நிலையில் கிப்புட்ஸில் ஒரு கோழிப் பண்ணையில் வேலை செய்து வந்தார். இவர் அக்டோபர் 7ஆம் தேதி காலையில் வழக்கம் போல் வேலைக்குச் சென்றிருக்கிறார்.

ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, சமீர் தலால்கா தனது சகோதரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு துப்பாக்கி தோட்டாவால் காயம் ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.

தாக்குதல் நடந்த அன்று காலை உள்ளூர் நேரப்படி 7 மணியளவில் தனது மகனுடனான தொடர்பை இழந்ததாக அவரது தந்தை உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். சமீர் தலால்கா காஸாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட படம் டெலிகிராமில் பகிரப்பட்டது.

 
பிரதமரைச் சூழ்ந்துகொண்ட மக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ராணுவத் தாக்குதலில் சொந்த மக்கள் 3 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வேதனை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு என்ன சொன்னார்?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த மரணங்களை 'தாங்க முடியாத சோகம்' என்று வர்ணித்துள்ளார்.

"இந்தக் கடினமான வேளையில்கூட, நமது காயங்களைக் குணப்படுத்துவோம், பாடங்களைக் கற்றுக்கொள்வோம்.

மேலும் எங்கள் நாட்டுப் பணயக் கைதிகள் அனைவரையும் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம்," என்று அவர் கூறியுள்ளார்.

 

அமெரிக்கா என்ன சொன்னது?

பிரதமரைச் சூழ்ந்துகொண்ட மக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவத்திற்கு அமெரிக்க தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, இஸ்ரேலிய ராணுவத்தின் இந்தக் கொலைகள் ஒரு பெரிய தவறு என்றும், இந்த நடவடிக்கை எப்படி நடந்தது என்பது குறித்த முழுமையான தகவல்கள் அமெரிக்காவிடம் இல்லை என்றும் கூறினார்.

சமீபத்தில், காஸாவில் நடந்து வரும் தாக்குதல்கள் தொடர்பாக இஸ்ரேல் மீது அமெரிக்கா மிகக் கண்டிப்புடன் இருந்தது. காஸாவில் நடந்து வரும் கண்மூடித்தனமான குண்டுவெடிப்பால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருவதாக டிசம்பர் 13ஆம் தேதியே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார்.

2024ஆம் ஆண்டிற்கான நிதி திரட்டுவது தொடர்பான நிகழ்வில் பைடன் பேசுகையில், ”இஸ்ரேலின் பாதுகாப்பு அமெரிக்காவை சார்ந்து இருக்கலாம், ஆனால் தற்போது அது அமெரிக்காவைவிட ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பா மற்றும் உலகின் பெரும்பாலான நாடுகளைச் சார்ந்துள்ளது. ஆனால் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களின் காரணமாக இஸ்ரேல் அந்த ஆதரவை இழக்கும் நிலை உள்ளது,” என்றார்.

இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல் தொடர்பாக பைடனுக்கு அமெரிக்காவில் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. பைடனின் ஜனநாயகக் கட்சிக்குள் இருந்தும் இந்த அழுத்தம் வெளிப்படுகிறது.

பைடனின் அறிக்கை அமெரிக்க நிர்வாகத்தின் அறிக்கைகளைப் போன்றது. இதில் இஸ்ரேல் போரின்போது மனித உயிர்களைக் காப்பாற்றுவது பற்றியும் பேசப்பட்டிருந்தது. மூத்த அமெரிக்க அதிகாரிகளும் இஸ்ரேலின் ராணுவ நிலைப்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதற்கு ஒரு நாள் முன்னதாக, காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 153 நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாகவும், 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இது தவிர, 23 நாடுகள் வாக்களிக்காமல் இருந்தன.

 

ராணுவ நடமுறைகள் குறித்து எழும் கேள்விகள்

பிரதமரைச் சூழ்ந்துகொண்ட மக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ராணுவத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

காஸாவில் ஹமாஸ் குழுவினர் நிர்வகிக்கும் சுகாதார அமைச்சகம் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 18,800 பேர் உயிரிழந்துள்ளனர்.

அக்டோபர் 7 அன்று, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர் என்பதுடன் ஹமாஸ் 240 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றது.

ஹமாஸின் ஆக்கிரமிப்பில் இருந்து பணயக் கைதிகளை விடுவிக்க பயன்படுத்தப்படும் ராணுவ நடவடிக்கைகள் குறித்தும் மக்கள் கேள்விகளை எழுப்புகின்றனர். ஹமாஸால் சமீபத்தில் விடுவிக்கப்பட்டவர்களில் ஹான் அவிக்டோரியும் ஒருவர்.

"பணயக் கைதிகளை ராணுவத்தின் மூலம் மீட்க முடியும் என்று மக்கள் கூறுவதை நாங்கள் அடிக்கடி கேட்கிறோம். ஆனால் அவர்களை பாதுகாப்பாக திரும்ப கொண்டு வர எந்த ராணுவ நடைமுறையும் பின்பற்றப்படவில்லை," என்று அவர் கூறினார்.

அவர் தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் எழுதியபோது, இஸ்ரேல் தனது மக்கள் பாதுகாப்பாக திரும்புவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c9x2ddj67n4o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காஸா: வெள்ளைத் துணி ஏந்திய பணயக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்றது ஏன்?

பிரதமரைச் சூழ்ந்துகொண்ட மக்கள்

பட மூலாதாரம்,HOSTAGE AND MISSING FAMILIES FORUM

படக்குறிப்பு,

இஸ்ரேல் ராணுவம் தவறுதலாக மேற்கொண்ட தாக்குதலில் சொந்த மக்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

16 டிசம்பர் 2023
புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் தனது தாக்குதல் நடவடிக்கையின் போது தவறுதலாக மூன்று பணயக் கைதிகளை 'அச்சுறுத்தல்' எனக் கருதி கொன்றுவிட்டதாகக் கூறுகிறது.

உயிரிழந்தவர்களில் 28 வயதான யோதம் கைம், 22 வயதான சமர் தலால்கா மற்றும் 26 வயதான அலோன் ஷம்ரிஸ் ஆகியோர் அடங்குவர். ராணுவம் வருத்தம் தெரிவித்ததுடன், காஸாவின் வடக்கே ஷேஜாயாவில் மூவரும் இறந்ததாக அறிவித்தது.

கொல்லப்பட்ட மூன்று பணயக் கைதிகளை தங்களது கையில் வெள்ளைத் துணியை வைத்திருந்ததாகக் கூறுகிறார் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி. இது ராணுவ விதிமீறல் என்பதால், இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக் குழு, 200க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாகப் பிடித்து மீண்டும் காஸாவுக்கு கொண்டு சென்றது.

கடந்த சில நாட்களில் ஹமாஸ் பல டஜன் பணயக் கைதிகளை விடுவித்தாலும், அந்தக் குழுவிடம் இன்னும் 100க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சொந்த நாட்டவர்களே உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ராணுவம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

"காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து, பணயக் கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வருவதே எங்கள் தேசியப் பணி" என்றும் ராணுவம் கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c9x2ddj67n4o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசாவில் இஸ்ரேலிய படையினர் சினைப்பர் தாக்குதல் கிறிஸ்தவ தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த இரண்டுபெண்கள் பலி

Published By: RAJEEBAN    17 DEC, 2023 | 11:58 AM

image
 

காசாவில் சனிக்கிழமை இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட சினைப்பர் தாக்குதலில் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் தஞ்சமடைந்திருந்த தாயும் மகளும்  கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்குகரை காசா இஸ்ரேல் ஜோர்தானில் கிறிஸ்தவ தேவலாயங்களை மேற்பார்வை செய்யும்  Latin Patriarchate of Jerusalem, என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

யுத்தம் ஆரம்பித்த பின்னர் காசாவில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்கள்இந்த தேவாலயத்திற்குள் தஞ்சமடைந்துள்ளனர் என  Latin Patriarchate of Jerusalem, தெரிவித்துள்ளது.

தேவாலயத்தின் கன்னியாஸ்திரிகள் பிரிவில் நடமாடிக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் சினைப்பர் தாக்குதலிற்குள்ளாகினர், காயமடைந்த ஒருவரை தூக்கி சென்றவர் கொல்லப்பட்டார் என Latin Patriarchate of Jerusalem  தெரிவித்துள்ளது.

ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

எந்த முன்னெச்சரிக்கையும் முன்னறிவித்தலும் இன்றி இந்த தாக்குதல் இடம்பெற்றது எந்த அத்துமீறல்களும் இடம்பெறாத தேவாலயவளாகத்திற்குள் அவர்கள் சுடப்பட்டனர் எனவும் Latin Patriarchate of Jerusalemதெரிவித்துள்ளது.

54 மாற்றுத்திறனாளிகள் தங்கியிருந்த அன்னை தெரேசாவின் சகோதரிகள் என்ற கன்னியாஸ்திரிகள் மடமும் இஸ்ரேல் இராணுவத்தின் டாங்கிகளின் தாக்குதலிற்குள்ளாகியுள்ளது, இதன் போது அந்த கட்டிடத்திற்கு மின்சாரத்தை வழங்குவதற்கான ஒரேயொரு வழிமுறையாக காணப்பட்ட மின்பிறப்பாக்கி சேதமடைந்துள்ளது எனவும் Latin Patriarchate of Jerusalem தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/171876

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல் போரால் அமெரிக்காவுக்கு பெரிய தலையிடியாக இருக்கிறது.

ஆரம்பத்தில் ஆதரித்தார்கள்.

இப்போது முழியைப் பிரட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சம்மதம் தெரிவிக்கும் இஸ்ரேல், எகிப்து செல்லும் ஹமாஸ் தலைவர்: காசாவில் மீண்டும் போர் நிறுத்தம்?

ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற இஸ்ரேல் பிணைக்கைதிகளை மீட்பதற்காக காசாவில் 7 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதில் 90க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் இருந்து பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டனர். போர் நிறுத்தத்துக்கு பிறகு இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் 129 பிணைக்கைதிகள் உள்ள நிலையில் காசாவில் மீண்டும் போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் நடந்து வருகிறது.

காசாவில் இருந்து மேலும் கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக 2 ஆவது மனிதாபிமான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்தார்.

இந்த நிலையில் போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே இன்று எகிப்துக்கு செல்கிறார்.

இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்கா முட்டுக்கட்டை போடுவதால் நிறைவேற முடியாத நிலையில் இருந்து வருகிறது.

https://thinakkural.lk/article/285375

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/12/2023 at 13:47, ஏராளன் said:

அமெரிக்கா முட்டுக்கட்டை போடுவதால் நிறைவேற முடியாத நிலையில் இருந்து வருகிறது.

அமெரிக்காவினது மனிதஉரிமைக் காவலர் வேடம் கிழிந்து தொங்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசாவின் அல்மக்காசி அகதி முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் ; 70க்கும் மேற்பட்டோர் பலி

Published By: DIGITAL DESK 3   25 DEC, 2023 | 11:59 AM

image
 

காசாவின் அல்மக்காசி அகதி முகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 70க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கிறிஸ்மஸ் தினத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட பகுதியில் பெருமளவு மக்கள் வசிப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

காயமடைந்த பலர் அருகில் உள்ள அல் அக்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முகத்தில் இரத்தத்துடன் காயங்களுடன் சிறுவர்கள் காணப்படும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

மூன்று வீடுகளிற்கு மேல் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகளவு மக்கள் வசித்த குடியிருப்பு பகுதி அழிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது மகளையும் பேரப்பிள்ளையும் இழந்துள்ளதாக தெரிவித்துள்ள ஒருவர் தாங்கள் காசாவிலிருந்து தப்பிவெளியேறியவர்கள் என தெரிவித்துள்ளார்.

அவர்கள் அழிக்கப்பட்ட கட்டிடமொன்றின் மூன்றாம் மாடியில் வசித்தனர் கட்டிடம் முற்றாக இடிந்து விழுந்ததில் அவர்கள் அனைவரும் எனது பேரப்பிள்ளைகள் மகள் கணவர் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அனைவரும் இலக்குவைக்கப்படுகின்றோம் பொதுமக்கள் அனைவரும் இலக்குவைக்கப்படுகின்றனர் பாதுகாப்பான இடம் இல்லை எங்களை காசாவிலிருந்து வெளியேற சொன்னார்கள் நாங்கள் மத்திய காசாவிற்கு வந்து உயிரிழக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/172437

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மத்திய காசா மீது பயங்கர தாக்குதல்: 60 இற்கு மேற்பட்டோர் உயிரிழப்பு

காசா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது வடக்கு, தெற்கு, மத்தியப் பகுதி என காசாவின் அனைத்து பகுதியிலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் இராணுவம் சொல்கிறது.

தற்போது இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக நேருக்கு நேர் தரைவழியில் சண்டையிட்டு வருவதால் இராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. இதுவரை 154 இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

கடந்த வாரத்தில் மட்டும் 15 வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது. தெய்ர் அல்-பலாஹ் பகுதியில் உள்ள மகாஜி அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக காசா சுகாதார அமைச்சின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் குறைந்தது 60-க்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் 15 வீரர்களை இழந்ததையடுத்து, மிகவும் அதிகப்படியான விலை என இஸ்ரேல் இராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. கிறிஸ்மஸ் தினத்திற்கு முந்தைய நாள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேற்கு கரையில் உள்ள பெத்லகேம் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இன்றி களையிழந்து காணப்படுகிறது. இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு எகிப்து தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன், 240 பேர் பிணைக்கைதிகளை பிடித்துச் சென்றனர். தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசாவின் தெற்கு பகுதியை குறிவைத்து கண்மூடித்தனமாக வகையில் தாக்குதல் நடத்தியது. தற்போது காசா முழுவதும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 20,400 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

https://thinakkural.lk/article/285880

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசாவின் எகிப்து எல்லையை கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்: போர் பல மாதங்களுக்கு நீடிக்கும் வாய்ப்பு

ரபாவில் அடைக்கலம் பெறும் மக்களுக்கு இடமில்லை

damithJanuary 1, 2024
07-1-2.jpg

காசாவில் தொடர்ந்து உக்கிர மோதல் நீடிக்கும் நிலையில் எகிப்துடனான காசா எல்லையை மீட்பதாக குறிப்பிட்டிருக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தப் போர் பல மாதங்கள் நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் போர் உச்சத்தை தொட்டிருப்பதாக கடந்த சனிக்கிழமை (30) செய்தியாளர்களிடம் கூறிய நெதன்யாகு, எகிப்துடனான காசாவின் எல்லையை ஒட்டிச் செல்லும் இடை வலயப் பகுதி இஸ்ரேலின் கைகளில் இருக்க வேண்டும் என்றார்.

‘அந்தப் பகுதி மூடப்பட வேண்டும். நாம் எதிர்பார்க்கும் இராணுவமயமற்ற நிலையை எட்டுவதற்கு அதைத் தவிர வேறு வழி இல்லை’ என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் விரிவாக எதுவும் குறிப்பிடாதபோதும், இது 2005 ஆம் ஆண்டு காசாவில் இருந்து இஸ்ரேல் வாபஸ் பெற்றதை மாற்றும் ஒரு செயலாக அமைவதோடு அது காசா பகுதியை முழுமையாக கட்டுப்படுத்தும் முயற்சியாக இருக்கும்.

காசாவில் இஸ்ரேலிய தரைப்படை தனது தாக்குதல்களை புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தி வரும் நிலையில் இந்தப் போர் பல மாதங்கள் நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருக்கும் பாடசாலை ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று (31) நடத்திய பீரங்கி தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.

இஸ்ரேலிய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை கான் யூனிஸ் மற்றும் ரபா பகுதிகளின் பல இடங்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அது தெற்கு காசாவில் அண்மைய நாட்களில் தனது படை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்திய மற்றும் தெற்கு காசாவின் அல் புரைஜ், நுஸைரத், மகாசி மற்றும் கான் யூனிஸ் பகுதிகளை இலக்கு வைத்து கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் மத்திய காசாவில் உள்ள அகதி முகாம்களில் இஸ்ரேல் சனிக்கிழமை இரவு முழுவதும் நடத்திய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 25 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

மேலும் தெற்காக எகிப்தை ஒட்டிய எல்லை நகரான ரபாவில் பெரும் எண்ணிக்கையான மக்கள் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து பாதுகாப்புப் பெற அடைக்கலம் பெற்றபோதும் அங்கும் பலஸ்தீன போராளிகளுடன் மோதல் நீடித்து வருகிறது.

‘இந்தப் போர் போதும்! நாம் முற்றிலும் களைப்படைந்துவிட்டோம்’ என்று கான் யூனிஸில் உள்ள தனது விட்டில் இருந்து தப்பி வந்து ரபாவில் அடைக்கலம் பெற்றிருக்கும் 49 வயது அபூ கத்தர் தெரிவித்தார்.

‘இந்த குளிரான காலநிலைக்கு இடையே நாம் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து வருகிறோம். குண்டுகள் இரவு, பகல் பாராது எம்மீது விழுகின்றன’ என்றும் அவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவத்திடம் கூறினார்.

இஸ்ரேலின் வான் தாக்குதல் ஒன்றில் ஹமாஸ் ஆயுதப் பிரிவின் மூத்த உறுப்பினர் ஒருவரான அப்தல் பத்தா மாலி கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. மேற்குக் கரையைச் சேர்ந்த அவர் 2011 கைதிகள் பரிமாற்றத்தின்போது காசாவுக்கு வெளியேற்றப்பட்டிருந்தார். மறுபுறம் காசாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது. இதில் காயமடைந்த 431 இஸ்ரேலிய இராணுவத்தினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 44 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை அடுத்து ஆரம்பமான இந்தப் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 21,672 ஆக அதிகரித்துள்ளது. இதில் மேலும் 56,165 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ரபாவில் குவியும் மக்கள்

காசாவின் குறுகிய நிலப்பகுதியின் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அனைவரும் போல் தமது விடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் இடம்பெயர்ந்த பெரும்பாலான மக்கள் பூங்காக்களின் திறந்த பகுதிகளில் தங்கி இருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிவாரண அமைப்பின் ஜூலியட் டூமா தெரிவித்துள்ளார். எகிப்துடனான எல்லைப் பகுதியாக உள்ள ரபாவுக்கு கடந்த சில நாட்களில் குறைந்தது 100,000 பேர் தப்பி வந்திருப்பதாக ஐ.நாவின் மனிதாபிமான அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. எனினும் ஐ.நாவால் மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளையே இவர்களுக்கு வழங்க முடியுமாக உள்ளது என்று டூபா குறிப்பிட்டுள்ளார். எனினும் காசாவின் மனிதாபிமான தேவைகள் பாரிய அளவில் அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

உதவிகள் செல்வதை கட்டுப்படுத்தவில்லை என்று இஸ்ரேல் கூறியபோதும் அதன் உக்கிர தாக்குதல்கள் உதவி விநியோகத்திற்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரபாவில் இருந்து பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு பேசிய ஐ.நா நிவாரண அமைப்பின் காசா பணிப்பாளர் டொம் வைட், இந்த நகரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அடைக்கலம் பெற்றிருப்பதாக தெரிவத்தார். பாடசாலைகள் மற்றும் மாநகர சபை வசதிகள் என்று ரபாவில் உள்ள அனைத்து இடங்களிலும் அளவுக்கு அதிகமான மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் நிலையில் அங்கு மேலும் மக்கள் அடைக்கலம் பெறுவதற்கான இடம் தீர்ந்துவிட்டதாக டொம் வைட் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது திறந்த வெளியில் உறங்கி வருவதாக டூமா வழங்கிய கூற்றை பிரதிபலிப்பதாக இது உள்ளது. தெற்கு மற்றும் மத்திய காசாவில் உக்கிரமடைந்திருக்கும் தாக்குதல்கள் காரணமாகவே ரபா பகுதியை நோக்கி மக்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் காசாவில் இடம்பெயர்ந்துள்ள மக்களிடையே தொற்று நோய்கள் பரவும் அச்சுறுத்தல் பற்றி உலக சுகாதார அமைப்பு மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளது.

காசாவில் கடந்த ஒக்டோபர் நடுப்பகுதியில் இருந்து டிசம்பர் நடுப்பகுதி வரையான காலத்தில் நோய் பரவல் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்டர் டெட்ரொஸ் அதனொம் கெப்ரியேசுஸ் குறிப்பிட்டுள்ளார். காசா பகுதியில் உள்ள முகாம்களில் சுமார் 136,400 வயிற்றுப்போக்கு, 55,400 சொறி மற்றும் சிராங்கு மற்றும் 126 மூளைக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிராந்திய பதற்றம்

இந்தப் போர் பிராந்தியத்தில் பரவும் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக லெபனான், ஈராக், சிரியா மற்றும் யெமனில் உள்ள ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்கள் இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டாளியான அமெரிக்காவை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

சிரியாவில் இஸ்ரேல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் வான் தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சிரியாவின் அல் பொகாமால் பகுதி மீது நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்களே கொல்லப்பட்டிருப்பதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட அந்த மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

முன்னதாக சிரியாவின் அலெப்போ நகரை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 

https://www.thinakaran.lk/2024/01/01/world/33228/காசாவின்-எகிப்து-எல்லையை/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லெபனானில் கொல்லப்பட்ட ஹமாஸின் முக்கியத் தலைவர்

இஸ்ரேல், ஹமாஸ், காஸா, பாலத்தீனம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

சலே-அல்-அரூரி

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹமாஸ் குழுவிவின் தலைவர்களில் ஒருவரான சலே-அல்-அரூரி ஒரு ‘துல்லியத் தாக்குதல்’ மூலம் கொல்லப்பட்டிருப்பதாக லெபனான் நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

லெபனானின் தலைநகரான பெய்ரூட்டின் தெற்கிலிருக்கும் ஹமாஸ் அலுவலகத்தின் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அரூரி கொல்லப்பட்டதாக லெபனானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் இச்சம்பவத்தைக் கண்டித்திருக்கிறது. அதே சமயம் ஹமாஸின் கூட்டாளியான ஹிஸ்புல்லா இது லெபனானின் இறையாண்மை மீதான தாக்குதல் என்று கூறியிருக்கிறது.

ஆனால், இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியதாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இது லெபனான் மீதான தாக்குதல் அல்ல என்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேலை எதிர்ப்பவர்கள் அரூரியின் மரணத்திற்கு இஸ்ரேல் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.

இதற்கிடையில், லெபனானின் பிரதமர், இஸ்ரேல் ‘லெபனானை... மோதலுக்கு இழுக்க’ முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

என்ன நடந்தது இச்சம்பவத்தில்?

 

யார் இந்த அரூரி?

ஹமாஸின் துணை அரசியல் தலைவரான அரூரி, தெற்கு பெய்ரூட்டில் நடத்தப்பட்ட ஒரு ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக லெபனான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவரோடு ஹமாஸின் இரண்டு இராணுவத் தளபதிகள் மற்றும் நான்கு உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அரூரி ஹமாஸின் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படைப்பிரிவில் முக்கிய நபராகவும், ஹமாஸ் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் நெருங்கிய கூட்டாளியாகவும் இருந்தவர். அவர் லெபனானில் ஹமாஸ் குழுவிற்கும் ஹிஸ்புல்லாவிற்கும் இடையே ஒரு இணைப்பாக செயல்பட்டார்.

57 வயதான அரூரி, கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, நடக்கும் போரில் கொல்லப்பட்ட ஹமாஸின் மிக மூத்த தலைவர் ஆவார்.

இஸ்ரேலிய ஊடக அறிக்கைகளின்படி, மேற்குக் கரையில் ஹமாஸின் ராணுவப் பிரிவின் உண்மையான தலைவராக அரூரி கருதப்பட்டார், அங்கு தாக்குதல்களை மேற்பார்வையிட்டார்.

2014-இல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கடத்திச் சென்று கொன்றதில் அவர் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. மேலும் பிற தாக்குதல்களுக்காக இஸ்ரேலிய சிறைகளில் தண்டனை அனுபவித்தவர் என்று தகவல்கள் கூறுகின்றன.

இரான் மற்றும் ஹெஸ்புலாவுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய ஹமாஸ் அதிகாரிகளில் அவரும் ஒருவர் என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் கூறுகிறது.

 
இஸ்ரேல், ஹமாஸ், காஸா, பாலத்தீனம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் கட்டடத்தைச் சுற்றி தீயணைப்புப் படையினரும் துணை மருத்துவப் பணியாளர்களும் திரண்டிருக்கும் காட்சி

என்ன நடந்தது?

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு நிருபர், பெய்ரூட்டின் தாஹியே பகுதியில் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் இருந்தார். அங்கு ஒரு உயரமான கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் ஒரு பெரிய துளை இருப்பதைக் கண்டார். மேலும் அக்கட்டடத்தைச் சுற்றி தீயணைப்புப் படையினரும் துணை மருத்துவப் பணியாளர்களும் திரண்டிருப்பதைக் கண்டார்.

சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ காட்சிகள், ஒரு கார் தீப்பிடித்து எரிவதையும், பரபரப்பான குடியிருப்புப் பகுதியான அப்பகுதியில் உள்ள கட்டிடங்களுக்கு பெருமளவு சேதம் ஏற்பட்டிருப்பதையும் காட்டுகின்றன.

தாஹியே ஹெஸ்புலாவின் கோட்டையாக அறியப்படுகிறது.

ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவரான ஹனியே, இந்தத் தாக்குதல் "கோழைத்தனமான... பயங்கரவாதச் செயல், லெபனானின் இறையாண்மையை மீறுவது," என்று கூறினார்.

அரூரியின் மரணத்தைப் பற்றிக் கருத்து தெரிவித்த ஹெஸ்புலா, "லெபனான், அதன் மக்கள், அதன் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் அரசியல் மீதான கடுமையான தாக்குதல்" என்று கூறியிருக்கிறது.

மேலும் இந்தத் தாக்குதல் "போரின் போது நடந்த ஒரு ஆபத்தான சம்பவம்... மேலும் ஹெஸ்புலாவில் உள்ள நாங்கள் இதற்குக் கண்டிப்பாக பதிலடி தரப்படும் உறுதிப்படுத்துகிறோம்,” என்று கூறியது.

ஹமாஸ், ஹெஸ்புலா ஆகிய இரு குழுக்களின் முக்கிய ஆதரவாளரான இரான், அரூரியின் கொலை ‘மற்றுமொரு எதிர்ப்பலையைத் தூண்டும்’ என்று கூறியிருக்கிறது.

 

இஸ்ரேலின் நிலைப்பாடு என்ன?

இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர் மார்க் ரெகேவ் இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது என்று தெளிவாக உறுதிப்படுத்தவில்லை.

இது இஸ்ரேலிய அரசின் பொதுவான நிலைப்பாடு தான். ஆனால் அமெரிக்க தொலைக்காட்சி ஊடகமான MSNBC-யிடம் பேசிய அவர், “இத்தாக்குதலை யார் செய்திருந்தாலும், அது லெபனான் அரசின் மீதான தாக்குதல் அல்ல என்பதை தெளிவாகப் புரிகிறது. இது பயங்கரவாத அமைப்பான ஹெஸ்புலா மீது கூட நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. இதைச் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் ஹமாஸ் தலைமைக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்திருக்கிறார்கள். இதைச் செய்தவர்களுக்கு ஹமாஸ் மீது பகை உள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது," என்றார்.

காஸா போருக்குப் பிந்தைய திட்டம் குறித்து விவாதிக்க செவ்வாய் (ஜனவரி 2) மாலை திட்டமிடப்பட்டிருந்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

ஹமாஸ் தலைவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை அகற்றுவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னர் தெரிவித்திருந்தார்.

அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 240 பேரை பணயக்கைதிகளாக காஸாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக ஹமாஸை அழிக்கும் நோக்கத்துடன் இஸ்ரேல் ராணுவ தாக்குதலை நடத்தியது.

காஸாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 22,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் - பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் - கொல்லப்பட்டுள்ளனர்.

காஸா போரின் போது ஹெஸ்புலா இஸ்ரேல் மீது ஏராளமான ராக்கெட்டுகளை ஏவியது மற்றும் இஸ்ரேலிய படைகளுடன் பல மோதல்களையும் நடத்தியது.

https://www.bbc.com/tamil/articles/c4ny5je4y8eo

Posted

காசா மக்களை கொங்கோவுக்கு அனுப்ப அந்த அரசுடன் இஸ்ரேல் பேசுவதாக ஒரு செய்தி சொல்கிறது.
cmr.fm

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, nunavilan said:

காசா மக்களை கொங்கோவுக்கு அனுப்ப அந்த அரசுடன் இஸ்ரேல் பேசுவதாக ஒரு செய்தி சொல்கிறது.
cmr.fm

இதற்குப் பெயர் ethnic cleansing 

இதுதான் இஸ்ரேலின் உண்மையான நோக்கம். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹமாஸ் குழுவிவின் தலைவர்களில் ஒருவரான சாலே-அல்-அரோரி ஒரு ‘துல்லியத் தாக்குதல்’ மூலம் கொல்லப்பட்டிருப்பதாக லெபனான் நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லெபனானின் தலைநகரான பெய்ரூட்டின் தெற்கிலிருக்கும் ஹமாஸ் அலுவலகத்தின் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அரோரி கொல்லப்பட்டதாக லெபனானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் இச்சம்பவத்தைக் கண்டித்திருக்கிறது. அதே சமயம் ஹமாஸின் கூட்டாளியான ஹெஸ்புல்லா இது லெபனானின் இறையாண்மை மீதான தாக்குதல் என்று கூறியிருக்கிறது. இந்த தாக்குதலை தான் நடத்தியதாக இஸ்ரேல் பொறுப்பேற்கவும் இல்லை; அதே நேரத்தில் மறுக்கவும் இல்லை. இது ஹமாஸ் தலைமை மீதான துல்லியத் தாக்குதல் என இச்சம்பவத்தை இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

 

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் நடுவப்பணியகம் கிளிநொச்சி       தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகள் 2002-ம் ஆண்டு முதல் கட்டப்பட்டன. இதன் மருத்துவப் போராளிகள் "சிறப்பு மருத்துவப் போராளிகள்" எனப்பட்டார்.    
    • சிறிலங்கா வன்வளைப்பு தமிழீழ ஆட்புலத்தில் புலிகள் மேற்கொண்ட முதலாவது நடமாடும் மருத்துவ சேவை 1/10/2004     தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் சிறப்பு மருத்துவ போராளிகளால் மேற்கொள்ளப்பட்டது.  வைத்தியர் எழுமதி கரிகாலன் தலைமையில் 15 வைத்தியர்கள் காலை பூந்தோட்டத்தில் உள்ள அகதிகள் முகாமிலும் பின்னர் வவுனியா மகாரம்பைக்குளத்திலும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சேவைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.    
    • லெப். கேணல் கௌசல்யன் நடமாடும் மருத்துவ சேவையின் (KMMS) சிறப்பு மருத்துவப் போராளிகளால் சேவை வழங்கப்படுகிறது 12/06/2005   பாலமோட்டை, கோவில்குஞ்சுக்குளம், மாதர்பணிக்கர் மகிழங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் பயிலும் சுமார் 450 மாணவர்கள் முதல் நாள் வைத்திய நிலையத்திற்கு வருகை தந்தனர்.      
    • இது இலங்கையை விட வாழுவதற்கு இந்தியா பொதுவாகவே திறம் என்ற அடிப்படையில் அல்ல. இப்போதும் இலங்கையில் இருக்கும் தமிழரை - இந்திய குடியுரிமை வேண்டுமா, ஆனால் இலங்கை குடியுரிமையை துறக்க வேண்டும் என கேட்டால் - மிக பெரும்பான்மை இல்லை என்றே சொல்லும் என நினைக்கிறேன். இவர்கள் இந்திய குடியுரிமை கோருவது…அங்கே செட்டில் ஆகி விட்டனர். பிள்ளைகள் பிறந்து அங்கே படிக்கிறனர். சுருக்கமாக இவர்கள் இந்தியர்களாக மாறி விட்டார்கள் என்பதால். பலருக்கு சட்டம் அனுமதிக்காக வீடுகளும் உண்டு (முகாமில் இருப்போருக்கு அல்ல). இந்த கோரிக்கை மிக நியாயமானது. ஆனால் இதைவைத்து பொதுப்படையாக இலங்கையை விட வாழ இந்திய தகுந்த இடம் என சொல்லமுடியாது.
    • இந்த திரிக்கும் நீங்கள் எழுதிக் கொண்டு இருப்பதற்கும் என்ன சம்பந்தம்?? சிலதுகளுக்கு எப்படி போட்டு அடித்தாலும் நன்றி நன்றி என்று சிரித்தபடிதான் திரியுங்கள். அதுக்கு கொஞ்சம் சூடு சுரணை வேண்டும்.  இதற்கு மேலும் எழுதி மீண்டும் எச்சரிக்கை வாங்க விரும்பவில்லை. டொட். 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.