Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

@Maruthankerny

சமணர் மட்டும் அல்ல, ஆசிரியன்ஸ், இன்னும் பல பண்டைய இன, மத கூட்டங்கள் இப்படி நாடற்றவராக துரத்தப்பட்டு, அல்லது ஆக்கிரமிப்பு கூட்டத்தால் உள்வாங்கப்பட்டு அடையாளம் அழிந்தே போய் விட்டன.

2000 ஆண்டுகளா உலகின் அத்தனை மூலைக்கு விரட்டப்பட்டாலும், தனது அடையாளத்தை, நாடு திரும்பும் ஓர்மத்தை, மண் மீட்கும் இலட்சியத்தை, நாட்டை மீட்கும் வேட்கையை அழிந்து விடாது காப்பாற்றி தக்க தருணத்தில் சாதித்கும் காட்டியதுதான் யூத இனத்தின் கூட்டு பிரக்ஞை.

நான் இன்னொரு இடத்தில் எழுதினேன். மனிதரில் கூர்ப்பு இன்னும் நடக்கிறது. 

மனிதரில் கூர்ப்பு இப்போ கூட்டு பிரக்ஞை விருத்தியாகவே நிகழ்கிறது.

யூதர்கள் இஸ்ரேலை மீள அமைத்தது அசாதாரண கூட்டு பிரக்ஞையின் வெளிப்பாடு.

இங்கே யூதரோடு நாம் சேர்ந்து ஒரு மீம்ஸ் போடலாம் என சொன்னாலே கல்லால் அடியாத குறை.

 

4 minutes ago, Maruthankerny said:

ஈரான் சிரியா பெண்கள் 50-60 களிலேயே கல்விகளில் பெரும் சாதனை படைத்தவர்கள் 

ஏன் என்றால் 30,40,50 களில் அங்கே அடிப்படைவாதிகள் கோலோச்சவில்லை.

Edited by goshan_che

  • Replies 1.5k
  • Views 157.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

எனது அறிவிற்காக கேட்கிறேன்(அப்பதானே எல்லாம் தெரிஞ்ச ஆள் மாரி இன்னொருக்கா அடிச்சு விடலாம்🤣).

புலிகள் செய்த எந்த தாக்குதலை இங்கே குறிப்பிடுகிறீர்கள்?

சமணர் இன்னும் டயஸ்போராவாக இருந்தால் - அவர்கள் ஒரு குழுவாக தமிழ் நாடு திரும்பி, பலமான நாடுகளின் உதவியுடன் அங்கே ஒரு சமண நாட்டை நிறுவிவிட்டால் ——

அதன் பின் அங்கே சமண, சமணர் அல்லாத இரு நாடுகள் அமைவதே நியாயமான தீர்வு.

அப்போ மதவாதம் ரொம்ப முக்கியம் !
அதற்க்காக மனிதத்தை புதைத்துவிடலாம் 

இப்போ தமிழ் நாட்டில் இருப்பவன் இந்து சைவன் ஆனது பிறப்பால் ஆனது 
யாரும் வரலாறு படித்து மதத்தை தெரிவு செய்வதில்லை 

அந்த மண்ணில் ஆண்டாண்டு  காலமாக வாழும் ஒரு மனிதகுலத்தை 
3000-4000 ஆண்டு குதர்க்கம் பேசி கொல்ல முடியும் என்றால் 

நியாயத்தின் படி மனிதர்கள் தற்கொலை செய்துகொண்டு 
உலகை மிருகங்களிடமும் இயற்கையிடமும் கையளிக்க வேண்டும் 

5 minutes ago, goshan_che said:

@Maruthankerny

ஏன் என்றால் 30,40,50 களில் அங்கே அடிப்படைவாதிகள் கோலோச்சவில்லை.

அடிப்படை வாதம் யார் உருவாக்கினார்கள் என்பதுதான் இங்கு சிந்தனைக்கு உரியது 

நீங்கள் சீமானின் திரியில் எழுத்துவத்துக்கு இப்போ நேர் எதிராக எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

அப்போ மதவாதம் ரொம்ப முக்கியம் !
அதற்க்காக மனிதத்தை புதைத்துவிடலாம் 

இப்போ தமிழ் நாட்டில் இருப்பவன் இந்து சைவன் ஆனது பிறப்பால் ஆனது 
யாரும் வரலாறு படித்து மதத்தை தெரிவு செய்வதில்லை 

அந்த மண்ணில் ஆண்டாண்டு  காலமாக வாழும் ஒரு மனிதகுலத்தை 
3000-4000 ஆண்டு குதர்க்கம் பேசி கொல்ல முடியும் என்றால் 

நியாயத்தின் படி மனிதர்கள் தற்கொலை செய்துகொண்டு 
உலகை மிருகங்களிடமும் இயற்கையிடமும் கையளிக்க வேண்டும் 

இல்லை இது மதவாதம் இல்லை.

வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்து  நான் என் இனம், என் மதம் நாடாகி வாழ்ந்த மண்ணில் இருந்து என்னை ரோமர்களும், தொடந்து வந்த பல இஸ்லாமிய பேரரசுகளும் துரத்தி விட்டார்கள். 

ஆனால் என் மக்கள் ஒரு தொகை இன்னும் அங்கே வாழ்கிறார்கள். என் கோவில்கள், புதைகுழிகள், தொன்மங்கள், புதைபொருட்கள் எல்லாம் அங்கேயே உள்ளன.

அதில் உலகம் எங்கும் உள்ள என் மக்களை அழைத்துப்போய் என் புத்திசாலித்தனத்தால் ஒரு நாட்டை நான் மீள எழுபியுள்ளேன்.

அந்த நாட்டை தக்கவைக்க நான் பலத்கை பாவிப்பேன்.

👆🏼 இதுவரைக்கும் இஸ்ரேல் கேட்பது நியாயம்.

பலஸ்தீனருக்கு கொஞ்ச நிலமும் இல்லை என ஒடுக்குவதும், வதைப்பதும் நியாயமில்லை.

கிழக்கு ஜெருசலேத்தை அபகரிப்பது, 1967 எல்லைக்கு மேல் குடியேற்றத்தை விரிவாக்குவது அநியாயம்.

அதேபோல் இஸ்ரேலை வழித்தொழிப்பதே நோக்கம் என பலஸ்தீனியர் ஆர்பரிப்பதும் நியாயம் இல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் தமிழர்கள் நாங்கள்தான் ஆளுவோம் நீங்கள் வந்து வாழுங்கள் என்கிறார் 

நீங்கள் வாழவே இடமில்லை அடித்து விரட்டுவோம் என்கிறீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

சீமான் தமிழர்கள் நாங்கள்தான் ஆளுவோம் நீங்கள் வந்து வாழுங்கள் என்கிறார் 

நீங்கள் வாழவே இடமில்லை அடித்து விரட்டுவோம் என்கிறீர்கள் 

இல்லையே. இஸ்ரேலில் உள்ள 2.1 மில்லியன் அராபிய இஸ்ரேலியருக்கு, யூத இஸ்ரேலியர் போலவே உரிமைகள் உள்ளது.

தமிழ் நாட்டை போல ஒரு மாநிலத்தின் உள்ளே அல்ல.

இஸ்ரேலை போல ஐ நா அந்தஸ்து உடைய ஒரு சமமான பலஸ்தீனம் 1967 எல்லை அடிப்படையில் கிழக்கு ஜெருசலேம் தலைநகராக அமையவேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

ரஸ்யாவினதும் நிலைப்பாடும் இதுவே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுகளுக்கு என்ன நடந்தது ?

 

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

புலிகள் செய்த எந்த தாக்குதலை இங்கே குறிப்பிடுகிறீர்கள்?

அதுதான் அனுராதபுர தாக்குதல் என்று எழுதியுள்ளேனே??
அதைவிட புலேந்தியம்மானின் கிழக்கில் நடந்த தாக்குதல்!!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Eppothum Thamizhan said:

அதுதான் அனுராதபுர தாக்குதல் என்று எழுதியுள்ளேனே??
அதைவிட புலேந்தியம்மானின் கிழக்கில் நடந்த தாக்குதல்!!

அனுராதபுரத்தில் தாக்குதல் நடந்த இடம் தேதியை தந்துதவ முடியுமா?

பிகு

தனிப்பட்டு, திருமலை புலேந்தியம்மானின் தலைமையிலான தாக்குதல், காத்தான்குடி படுகொலை, அரந்தலாவ ….இவற்றை நான் கண்டித்து யாழில் எழுதி ஏச்சும் வாங்கியுள்ளேன்)

In the grand scheme of things, இவை தமிழர் தரப்புக்கு நன்மையை விட மிக மோசமான பின் விளைவையே கொடுத்தது. ஹமாசுக்கும் அதுவே நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற திரிகளில் எழுதுவதை தவிர்த்து வருகிறேன்

காரணம் எம் இனத்தின் மீதான தாக்குதல்களும் அதற்கு மாற்றான எம் இனத்தின் தாக்குதல்களும் இடம் மாறி விடும். நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அனுராதபுரத்தில் தாக்குதல் நடந்த இடம் தேதியை தந்துதவ முடியுமா?

புத்த பிக்குகள் உட்பட 146 பேர் கொல்லப்பட்டது ஞாபகம் இல்லையா? May 14, 1985!!

1 minute ago, விசுகு said:

இது போன்ற திரிகளில் எழுதுவதை தவிர்த்து வருகிறேன்

காரணம் எம் இனத்தின் மீதான தாக்குதல்களும் அதற்கு மாற்றான எம் இனத்தின் தாக்குதல்களும் இடம் மாறி விடும். நன்றி 

அதே!! ஆனால் சிலரின் அலப்பறை தாங்க முடியவில்லை!!!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

புத்த பிக்குகள் உட்பட 146 பேர் கொல்லப்பட்டது ஞாபகம் இல்லையா? May 14, 1985!!

ம்ம்ம்….அதை ஆரம்பத்தில் ஈரோஸ் உரிமை கோரியது, பின்னர் மறுத்தது. பின்னர் ஈரோஸ், புளொட், இலங்கை அரசு எல்லாரும் சேர்ந்து அதை புலிகள்தான் செய்தது என்றாகள்.

புலிகள் வழமை போல் மெளனம். ஆனால் ஏனைய சம்பவங்கள் போல் இதில் இன்ன அணிகள் சம்பந்தபட்டன என்ற விபரங்கள் கூட நான் அறியவில்லை.

இதை எந்தளவு தூரம் புலிகளின் தலையில் கட்டலாம் என்பதில் எனக்கு சந்தேகமே. அதுதான் திகதியை கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.theguardian.com/world/2023/oct/09/no-evidence-yet-of-iran-link-to-hamas-attack-says-israeli-military
 

இதுவரைக்கும் ஹமாசின் தாக்குதலை திட்டமிட, வழிநடத்த ஈரான் உதவியது என்ற ஆதாரம் எதுவும் தம்மிடம் இல்லை என இஸ்ரேல் தெரிவிப்பு.

சண்டை, இஸ்ரேல், ஹமாஸ், ஹிஸ்புல்லா வுடன் மட்டுப்பட்டால் நல்லது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலில் ஒரே இடத்தில் 260 பேர் கொன்று குவிப்பு - இசை நிகழ்ச்சியில் நடந்தது என்ன?

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரான்செஸ்கா ஜில்லட்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 9 அக்டோபர் 2023, 14:38 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த சில வாரங்களாகவே, யூதர்களின் பண்டிகையான சுக்கோட் உடன் இணைந்து தெற்கு இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடைபெறும் சூப்பர்நோவா இசை நிகழ்ச்சிக்காக பல இசைப் பிரியர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

"ஒரே குடும்பமாக ஒன்று சேர நேரம் வந்துவிட்டது," என்று இந்த நிகழ்ச்சியில் அமைப்பாளர்கள் தங்கள் சமூக ஊடகங்களில் எழுதியிருந்தனர்.

அடுத்த சில மணிநேரங்களில் அந்த சமூக ஊடக பக்கம் முழுவதுமாக, தங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் நபர்களின் பதிவுகளால் நிரம்பின.

தெற்கு இஸ்ரேலின் பாலைவனப் பகுதியில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியின் போது, பாலத்தீன பகுதியிலிருந்து வந்த ஆயுதக்குழு, கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து 260க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டதாக மீட்பு நிறுவனமான ஸாகா தெரிவித்துள்ளது.

 
காணொளிக் குறிப்பு,

Partygoers run as gunshots heard in Israel

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"எதோ ஒரு தவறு நடந்ததற்கான அறிகுறியாக விடியற்காலையில் சைரன் ஒலி கேட்டது. அதைத்தொடர்ந்து ராக்கெட்டுகள் தொடர்ச்சியாக ஏவப்பட்டன. ராக்கெடுகளையடுத்து நாங்கள் இருந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது," என தாக்குதலின் போது நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ஓர்டெல் தெரிவித்தார்.

"மின்சாரத்தை அவர்கள் துண்டித்தனர், எங்கிருந்தோ வந்த ஆயுதக்குழு திடீரென எல்லா திசைகளில் இருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்," என்று அவர் இஸ்ரேலின் சேனல் 12 தொலைக்காட்சியிடம் கூறினார்.

"ராணுவ சீருடையணிந்த 50 பயங்கரவாதிகள் வேன்களில் வந்தனர்," என்று அவர் கூறினார்.

மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற முயற்சி செய்தனர். மணல் பரப்பில் விரைவாக ஓடிச்சென்று கார்களில் ஏறி தப்பிக்க முயற்சி செய்த போது, ஜீப்களில் வந்த ஆயுதக்குழுவினர், கார்களை நோக்கி சுட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

நெகேவ் பாலைவனத்தில் நிகழ்ச்சி நடந்த மைதானம் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அங்கு விழா மேடை, உணவு உண்ணும் இடம், பார், ஓய்வு எடுக்கும் இடம் என்று அங்கு அமைக்கப்பட்டிருந்தது.

இந்த இடம் காசாவிலிருந்து வெகுதொலைவில் அமைந்திருக்கவில்லை. அதனால் இருள் சூழ்ந்த பிறகு வேலிகளை தாண்டி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் வந்துள்ளனர். அங்கிருந்த பல கிராமங்கள், நகரங்களில் ஊடுருவி பலரை பணயக்கைதிகளாக பிடித்தனர்.

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ஆடம் பரேல் ஹாரெட்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், அப்பகுதியில் ராக்கெட் வெடிக்கும் வாய்ப்பு இருப்பதை அனைவரும் அறிந்திருந்தனர். ஆனால் துப்பாக்கிச் சூடு நடந்தது அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

மற்றவர்களை போலவே தானும் காரில் ஏறி தப்பிக்க முயற்சி செய்ததாகவும், அப்போது துப்பாக்கி ஏந்தியவர்கள் தன்னை நோக்கி சுட்டதாக அவர் தெரிவித்தார்.

“பலரும் தாக்குதலுக்கு உள்ளாகினர். நான் அங்கு ஒளிந்து கொண்டேன். மற்றவர்கள் வேறு எங்கோ ஓடிவிட்டனர்,” என்று அவர் கூறினார்.

“என் காரை நான் ஓட்டிச்சென்றபோது எனது வாகனத்தை அவர்கள் இடித்தனர். அப்போது வேறு ஒரு காரில் சென்ற இளைஞன் என்னையும் வருமாறு அழைத்தான். அவனுடைய காரில் நான் ஏறினே. ஆனால் ஆயுதக்குழுவினர் அவனை துப்பாக்கி முனையில் சுட்டுக்கொன்றனர். நானும் இறந்தது போல நடித்தேன். கடைசியாக இஸ்ரேல் ராணுவம் வந்து என்னை மீட்டனர்,“ என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் எஸ்தர் போரோச்சோவ் கூறினார்.

"என்னால் என் கால்களை அசைக்க முடியவில்லை. புதரில் இருந்த என்னை ராணுவ வீரர்கள் வந்து மீட்டர்," என்று அவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

பல இசை நிகழ்ச்சிகளுக்கு சென்ற ஓர்டெல் போன்றவர்கள், அருகிலிருந்த புதர்களிலும், பழத்தோட்டங்களிலும் ராணுவம் வந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையுடன் பல மணிநேரமாக ஒளிந்திருந்தனர்.

"நான் என்னுடைய தொலைபேசியை மியூட் மோடில் வைத்தேன், பின்னர் ஒரு ஆரஞ்சு தோட்டம் வழியாக ஊர்ந்து சென்றேன். எனக்கு மேலே பயங்கரமாக ராக்கெட் மற்றும் துப்பாக்கிச் சூடு நடந்தது."

கிலி யோஸ்கோவிச், ஒரு பழத்தோட்டத்தில் எப்படி மறைந்திருந்தார் என்பதை பிபிசியிடம் விவரித்தார்.

"அவர்கள் ஒவ்வொரு மரமாகச் சென்று ஒழிந்திருந்தவர்களை சுட்டுக் கொண்டிருந்தார்கள். சுற்றிலும் மக்கள் இறப்பதை நான் பார்த்தேன். நான் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தேன். நான் அழவும் இல்லை."

இறுதியில், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, இஸ்ரேல் வீரர்களின் குரலைக் கேட்ட பிறகு அவர்களை நோக்கி சென்றதாக கிலி கூறினார்.

இஸ்ரேல் பாலஸ்தீன்

பட மூலாதாரம்,SUPERNOVA MUSIC FESTIVAL

காணொளிக் குறிப்பு,

Destroyed cars line road near festival in chilling video

இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவசர சிகிச்சை மருத்துவரான யானிவ் அவரது அனுபவங்களை கன் நியூஸ் ஊடகத்திடம் தெரிவித்திருந்தார்.

"இது ஒரு படுகொலை. என் வாழ்நாளில் இது போன்ற எதையும் நான் பார்த்ததில்லை. இது ஒரு திட்டமிட்ட தாக்குதல். அவசரகால வழிகளில் பொதுமக்கள் வெளியேறும் போது வாயிலில் காத்திருந்த எதிரிகள், அவர்களை கடத்திச் சென்றனர்."

இசை நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த ஜேக் மார்லோவ் (26), மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஷானி லூக் ஆகியோர் இசை நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து காணாமல் போயுள்ளனர்.

ஷானி கடத்தப்பட்டுள்ளதாக அவரது தாயார் நம்புகிறார். அதேபோல 25 வயதான நோவா அர்கமணியும் கடத்தப்பட்டுள்ளதாக அவரது நண்பர்களும், குடும்பத்தினரும் கூறுகின்றனர்.

“8.30 மணிக்கு நோவாவிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி கடைசியாக வந்தது. அதற்கு பிறகு அவர் சிறைபிடிக்கப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அவளுடைய காதலனுடன் நோவா இருந்தபோது அவள் கடத்தி செல்லப்பட்டாள், “ என நோவாவின் நண்பரான அமிட் பிபிசியிடம் தெரிவித்தார்.

தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 600 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வரும் நிலையில், காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

https://www.bbc.com/tamil/articles/cje9l52245vo

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, விசுகு said:

இது போன்ற திரிகளில் எழுதுவதை தவிர்த்து வருகிறேன்

காரணம் எம் இனத்தின் மீதான தாக்குதல்களும் அதற்கு மாற்றான எம் இனத்தின் தாக்குதல்களும் இடம் மாறி விடும். நன்றி 

ஒருவர் ஹமாஸ் நேற்று செய்ததை - நியாயப்படுத்தும் முகமாம- ஏன் புலிகள் கூடத்தான் பொதுமக்களை திட்டமிட்டு தாக்கினார்கள் என்று எழுதினால் அதை கண்டும் காணாமல் போக வேண்டும் என்கிறீர்களா?

 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

அனுராதபுரத்தில் தாக்குதல் நடந்த இடம் தேதியை தந்துதவ முடியுமா?

 

மே மாதம் 14 ஆம் திகதி 1985 ஆம் ஆண்டு பஸ் வண்டியொன்றில் அனுரதபுர நகருக்குள் நுளைந்த புலிகள் பஸ் நிலையத்தில் நின்றிருந்த சிங்கள மக்கள் மீது கண்மூடித்தனமாகச் சுட்டதில் பல பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கொலைசெய்யப்பட்டனர். பின்னர் மகாபோதி பௌத்த விகாரைக்குள் நுளைந்த புலிகள் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த சிங்கள மக்களைச் சுட்டுக்கொன்றனர். பின்னதாக அனுராதபுரம் பூங்க்கா ஒன்றிற்குச் சென்றவர்கள் அங்கும் சிங்களவர்களைச் சுட்டுக்கொன்றனர். இலங்கையில் சிங்கள மக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதலாக இது கருதப்படுகின்றது. தமிழீழத்தின் பெயரால் 146 அப்பாவி மனிதர்கள் கொல்லப்பட்டனர்.

https://inioru.com/ஈழப்-போராட்டமும்-இனவாதிக/

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

மே மாதம் 14 ஆம் திகதி 1985 ஆம் ஆண்டு பஸ் வண்டியொன்றில் அனுரதபுர நகருக்குள் நுளைந்த புலிகள் பஸ் நிலையத்தில் நின்றிருந்த சிங்கள மக்கள் மீது கண்மூடித்தனமாகச் சுட்டதில் பல பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கொலைசெய்யப்பட்டனர். பின்னர் மகாபோதி பௌத்த விகாரைக்குள் நுளைந்த புலிகள் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த சிங்கள மக்களைச் சுட்டுக்கொன்றனர். பின்னதாக அனுராதபுரம் பூங்க்கா ஒன்றிற்குச் சென்றவர்கள் அங்கும் சிங்களவர்களைச் சுட்டுக்கொன்றனர். இலங்கையில் சிங்கள மக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதலாக இது கருதப்படுகின்றது. தமிழீழத்தின் பெயரால் 146 அப்பாவி மனிதர்கள் கொல்லப்பட்டனர்.

https://inioru.com/ஈழப்-போராட்டமும்-இனவாதிக/

எனக்கு கொஞ்சம் நியாபக மறதியாக இருக்கிறது.

இனியொரு - புலிகள் மீது அபாண்டம் சொல்லும் புளட் உறுப்பினர் எழுதும் தளம் என இதே யாழில் முன்னர் குறை பட்டது நீங்கள்தானா? அல்லது மீசாலையானா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பதில் நடவடிக்கை மூலம் மத்திய கிழக்கை மாற்றப்போகின்றோம் - இஸ்ரேலிய பிரதமர்

Published By: RAJEEBAN

09 OCT, 2023 | 09:26 PM
image
 

மத்திய கிழக்கை மாற்றப்போகின்றோம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

ஹமாசின் தாக்குதலிற்கான இஸ்ரேலின் பதில்நடவடிக்கை மத்தியகிழக்கை மாற்றும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் மிகமோசமான பயங்கரமான அனுபவங்களை எதிர்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/166509

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

எனக்கு கொஞ்சம் நியாபக மறதியாக இருக்கிறது.

இனியொரு - புலிகள் மீது அபாண்டம் சொல்லும் புளட் உறுப்பினர் எழுதும் தளம் என இதே யாழில் முன்னர் குறை பட்டது நீங்கள்தானா? அல்லது மீசாலையானா?

உண்மை சம்பவத்தை யார் சொன்னால் என்ன?

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

உண்மை சம்பவத்தை யார் சொன்னால் என்ன?

 

சம்பவம் உண்மை. 

புலிகள்தான் செய்தார்கள் என்பதை காட்ட, புலிகளின் எதிரிகள் சொல்வது தவிர்ந்த ஆதாரம் வேறு எதும் உள்ளதா?

பிகு

ஒரு காலத்தின் சுய விமர்சனம் இந்த இனத்துக்கு தேவை என்று கூறி, புலிகளின் தவறுகளை விமர்சித்த என்னை குரல்வளையில் கடித்து வைத்த நீங்களும் , எப்போவும் - கேவலம் ஹமாசை நியாயப்படுத்த, புலிகள்தான் செய்தார்களா? என சந்தேகிக்கப்படும் படுகொலைகளை கூட அவர்கள் தலையில் கட்டி விடப்பார்கிறீர்கள்.

ஓடி…ஓடி…ஆதாரம் ஒட்டுகிறீர்கள்.

விந்தை மனிதர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Eppothum Thamizhan said:

அதே!! ஆனால் சிலரின் அலப்பறை தாங்க முடியவில்லை!!!

 

ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு தாம் வரலாறை கரைச்சு குடித்தது போலவும், நேரே நின்று பார்ர்தது போலவும் எழுதுவது யாழ் கருத்துக்களத்துக்கு  புதிய விடயம் அல்ல. 

தமிழீழ விடுதலை புலிகள் செய்த பயங்கரவாதங்களை முன்னாள் புலனாய்வு உறுப்பினர்களிடம் கேட்டால் சொல்வார்கள். தலை சுற்றும். 

மனிதநேயம் இல்லாத இடத்தில் சுதந்திரம், சுக வாழ்வு எப்படி சாத்தியம்?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

ஒருவர் ஹமாஸ் நேற்று செய்ததை - நியாயப்படுத்தும் முகமாம- ஏன் புலிகள் கூடத்தான் பொதுமக்களை திட்டமிட்டு தாக்கினார்கள் என்று எழுதினால் அதை கண்டும் காணாமல் போக வேண்டும் என்கிறீர்களா?

இதற்கு மட்டும் பதில் சொல்கிறேன் சகோ

கரந்தடித்தாக்குதல்களை புலிகள் செய்துவிட்டு நகர்ந்தபோது அதற்கு தமிழ் மக்கள் பழிவாங்குப்பட்டபோது அதற்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நானும் இருந்திருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு பதில் சொல்வது மிக மிக கடினம். 

எனவே ஹமாஸ் செய்வதை மறுத்தால் நீங்கள் செய்யலாம் அவர்கள் செய்யக்கூடாதா என்றும் ஹமாஸ் செய்வதை ஆதரித்தால் வரலாற்று பாடங்களை கற்றுக்கொள்ளவில்லையா என்றும் இடம் மாறி விடும்??

 

எனவே எதையும் கிளற விரும்பவில்லை 🙏

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

இதற்கு மட்டும் பதில் சொல்கிறேன் சகோ

கரந்தடித்தாக்குதல்களை புலிகள் செய்துவிட்டு நகர்ந்தபோது அதற்கு தமிழ் மக்கள் பழிவாங்குப்பட்டபோது அதற்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நானும் இருந்திருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு பதில் சொல்வது மிக மிக கடினம். 

எனவே ஹமாஸ் செய்வதை மறுத்தால் நீங்கள் செய்யலாம் அவர்கள் செய்யக்கூடாதா என்றும் ஹமாஸ் செய்வதை ஆதரித்தால் வரலாற்று பாடங்களை கற்றுக்கொள்ளவில்லையா என்றும் இடம் மாறி விடும்??

 

எனவே எதையும் கிளற விரும்பவில்லை 🙏

இதனால்தான் இந்த திரியில் 6 பக்கமாக புலிகள் என்ற வார்த்தையை கூட பாவிக்காமல் எல்லாருமே உரையாடினோம் என நம்புகிறேன்.

7 ம் பக்கத்தில் அவர்களை தேவையில்லாமல் இழுத்து வந்தவர்தான் இதற்கு பொறுப்பு.

 

20 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

தமிழீழ விடுதலை புலிகள் செய்த பயங்கரவாதங்களை முன்னாள் புலனாய்வு உறுப்பினர்களிடம் கேட்டால் சொல்வார்கள். தலை சுற்றும். 

ஆமாம் இவர் புலிகளின் புலனாய்வு பிரிவோடு நிண்டு கதைச்சு, கரைச்சு குடிச்சுட்டு, கண்ணாலும் கண்டு தலை சுற்றிய படியே எழுதுகிறார்.

படித்ததை எழுதுவதை கேலி செய்துவிட்டு, அடுத்த பந்தியில் கேட்டதை நடந்தது போல் எழுதிறதெல்லாம் வேற லெவல்.

—————

@நன்னிச் சோழன்

சில நாட்களுக்கு முன்பே காஸாவில் இருந்து தாக்குதல் நடக்க போகவதாக எகிப்து நெதென்யாகுவை எச்சரித்ததாம்.

உங்கள் சந்தேகம் மேலும் வலுக்கிறது.

https://x.com/ShaykhSulaiman/status/1711403086642630868?s=20

  • கருத்துக்கள உறவுகள்

@Maruthankerny

அந்த பெண்ணினை இம்சித்தவர்களில் ஒருவனின் பெயர், விபரத்தை ஜேர்மன் ஆட்கள் சிலர் கூகிள் துணை கொண்டு கண்டு பிடித்துள்ளார்களாம்.

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.