Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாஸ் எடுத்தும் fail - T. கோபிசங்கர்

Featured Replies

பாஸ் எடுத்தும் fail 

“மச்சான் பெருங்கண்டம் சோதினை முடிஞ்சுது நாங்கள் வீட்டை போறம், நீ என்ன மாதிரி ” எண்டு ஒண்டாப் படிக்கிற ஹொஸ்டல் காரங்கள் கேக்க, “நானும் போறதுக்கு அலுவல் பாக்கிறன்” எண்டு போட்டு வெளிக்கிட்டன். 

95 இல இடம்பெயர்ந்து போய் திரும்பி வந்தாப் பிறகு வீட்டுக்காரர் எல்லாரும் கொழும்பு போக நான் மட்டும் தனிச்சு நிண்டு , விட்ட கம்பஸ் படிப்பைப் தொடந்தன். இனிச் சோதினை முடிஞ்சு தான் கொழும்புக்குப் போறதெண்ட முடிவோட இருக்க( படிக்க) ரெண்டு வருசம் ஓடீட்டுது. 

தனிநாடு கேட்டுச் சண்டை பிடிக்கேக்க தராம பிறகு இருந்த இடத்தையும் பிடிச்சிட்டு எல்லாத்தடையும் விதிக்க நாங்களும் தனிய ஒரு நாடாய் வாழ்ந்த காலம் அது. ஆனாலும் எங்களை எந்தத்தடையும் பாதிக்கேல்லை கொழும்புக்குப் போற பாதைத்தடையைத் தவிர. 

சரி ரெண்டாவது வருசச் சோதினை முடிஞ்சிது தானே போவம் எண்டால் எப்பிடிப் போறது எண்டு பிரச்சினை வந்துது , ஏனெண்டால் அடையாள அட்டை யாழ்ப்பாணம். வெளி மாவட்டம் எண்டால் மட்டும் முன்னுரிமை கிடைக்கும் எண்ட நிலமையால. 

இயக்கத்தின்டை “ காம்ப்“ , தமிழீழக் காவல்துறை எண்டு இருந்த காலத்தில இருந்து மூண்டாம் நாலாம் குறுக்குத் தெருவுக்கு நாங்களா விரும்பிப் போறேல்லை. ஆனாலும் இடம்பெயரந்து போய் திரும்பி வந்தாப்பிறகு அவடம் யாழப்பாணத்தின்டை முக்கியமான இடமாய் மாறிச்சுது. OLR church ஐ மட்டும் விட்டிட்டு நாலும் ,மூண்டும் சந்திக்கிற சந்தீல இருந்த ஆலமரத்தடீல இருந்து ஆசுபத்திரி்வீதி வரை எண்டு முழு இடத்தையும் ஆக்கிரமிச்சு பெரிய காம்ப் ஒண்டு இருந்திச்சுது. 

சரி பாஸ்( clearance ) எடுத்து வீட்டை போற அலுவலைப் பாப்பம் எண்டு போட்டு வெளிக்கிட்டு வந்து சைக்கிளை ஆலமரத்தடீல விட்டிட்டு போனா குறுக்கும் மறுக்குமா மரத்தை நட்டுத் தடியைக் கட்டி தடை ஒண்டு இருந்திச்சுது. அதுகளுக்கால குனிஞ்சும் ஏறிக் குதிச்சும் உள்ள போனா நிறைய லைனில சனம் நிண்டிச்சுது. அங்க போன இடத்தில Government servant, கலியாண வீடு ,செத்தவீடு , cancer க்கு மருந்துக்கு ,வெளிநாட்டுக் போறம் எண்டு கன சனம் பிரிஞ்சு மூண்டு நாலு வரிசையில நிண்டிச்சுது. எங்க சனம் குறைவா நிக்கிது எண்டு பாத்திட்டு அங்க ஓடிப் போய் நிக்க அந்தக் கியூ கொஞ்சம் கெதியா முன்னுக்குப் போகத் தொடங்கிச்சுது. என்னடா அதிஸ்டம் அடிக்குது எண்டு யோசிக்க , மற்றப் பக்கம் நிண்ட சனம் சத்தம் போடத்தொடங்க, சத்தத்தைக் கேட்டு எல்லாரையும் கலைச்சுக் கொண்டு போய் ஒரே கியூவில அதுகும் எங்களை கடைசீல கொண்டே விட்டான் ஒரு சீருடையான் எங்கடை ஒத்து(ழையா)மையை ரசிச்சபடி. 

ஊர் ரெண்டு பட சீருடைக்காரன் பெரியாளானான். நூறு இருநூறு எண்டு போட்டவன் ( குடுத்தவன்) எல்லாம் ஏணீல ஏறி டக்கெண்டு முன்னால போக நாங்கள் முன்னுக்குப் போகாமல் அதே இடத்தில இருந்து இன்னும் பின்னுக்கு வந்தன் பாம்பால சறுக்கின மாதிரி அவனால இல்லை எங்கடை சனத்தால. 

ஒருமாதிரி ரோட்டில இருந்த தடைதாண்டும் ஓட்டத்தில வெண்டு உள்ள போய்ப் பாத்தா வாடகை இல்லாமல் வசதியாக் கிடைச்ச வீடு தான் அவங்கடை office. அங்க Form வாங்க ஒண்டு , அதைக் குடுக்க ஒண்டு , கிடைக்காத்துக்கு அப்பீலுக்கு ஒண்டு, சிபாரிசுக் கடிதத்தோட ஒண்டு எண்டு ஒவ்வொரு அறைக்கு வெளியில யன்னலுக்கால கை, மூக்கு, வாய் எண்டு நீட்டக்கூடியதை நீட்டிக் கொண்டு சனங்கள் நிரம்பி இருந்திச்சுது. 

ஒரு மாதிரி Form ஐ வாங்கிக் கொண்டு வீட்டை போய்ப் பாத்தா கனக்க விபரம் கேட்டிருந்திச்சுது. கேட்டைதை எல்லாம் நிரப்பினா அதோட கன கடிதங்களும் இணைக்கச் சொல்லிக் கேட்டருந்திச்சுது. GSஐ தேடிப் பிடிச்சு , அவரிட்டைப் போய் இன்னாரின்டை இன்னார் எண்டு விளக்கம் சொல்லி கடிதம் வாங்கீட்டுப் போனா சொன்னாங்கள் ஏரியா ஆமிக்காம்பில கடிதம் வாங்கு எண்டு. அதை வாங்கப் போனா ஐஞ்சாறு நாள் அலைய விட்டிட்டு, OIC வெளீல போட்டார், கப்டன் காம்புக்குப் போட்டார், மற்றவர் லீவில போட்டார் எண்டு அலைக்கழிச்சுத்தான் உள்ள விட்டாங்கள் . உள்ள போய் campக்குள்ள wait பண்ணேக்க பாத்தால் தான் தெரிஞ்சுது எங்கடை வீட்டுக் கதிரை, மணிக்கூடு , அண்ணா வாசிச்ச மிருதங்கம் அதோட அக்கம் பக்கம் வீடுகளில காணமல் போனது எல்லாம் அங்கதான் இருக்குது எண்டு. இங்க இருக்கிறவரிட்டை கடிதம் மட்டும் பத்தாது எண்டு ஊரெழுவில போய் இன்னொரு clearance எடுக்கோணும் எண்டாங்கள். Respected Sir, Your highness எண்டு தெரிஞ்ச எல்லாத்தையும் போட்டுக் கடிதம் எழுதி கையெழுத்து வாங்கிக்கொண்டு வந்தன். File ஒண்டைத் தூக்கிக்கொண்டு திரிஞ்சு எல்லாரிட்டேம் recommendation கடிதம் வாங்கிக் கொண்டு போய் formஐக் குடுக்கவே பத்து நாள் செண்டிச்சுது. 

இந்தக் கெடுபிடியால தேவை இருந்தும் அலைஞ்சு திரியேலாத சனம் போறதையே மறந்திச்சுது, அலைஞ்சு திரிஞ்சும் கிடைக்காத்தால கலியாணம் சில cancel ஆகிச்சுது, லீவு முடிஞ்சு போகேலாத்தால சிலருக்கு வேலை போச்சுது, கொழும்புக்குப் போகக் கிடைக்காமல் கோம்பையன் மணலில cancer treatment சிலதும் முடிஞ்சுது. 

ஆனால் வெளிநாடு போறவங்களுக்கு மட்டும் கொழும்புக்கே போகாமல் போற route ஐ agencyக்காரன் கண்டு பிடிச்சான். 

ஒரு மாதிரி எல்லாத் தடையையும் தாண்டிப் போய் form குடுக்க கியூவில நிண்டா, திருப்பியும் snake and the ladder தான். 

அப்ப கொழும்புக்கு இடைக்கிடை flightம் ஓடினது “ Heli tours “ எண்டு. பாதுகாப்பு படையோட சேந்து தான் போகவேணும். வானத்தில போன ஒரு flight கடலுக்கு land ஆக ஆருக்கு ஆர் பாதுகாப்பு எண்டு கேள்வி வந்திச்சுது. அது மட்டுமில்லை , அதுக்கும் பதிஞ்சிட்டுப் பாத்துக்கொண்டு இருக்கோணும், அதோட காசும் எக்கச்செக்கம். எங்களுக்கு கொழும்பு போக ஒரே வழி கப்பல் தான் . மாகோ , கோமாரி , லங்காமுடித எண்டு கன கப்பல் (Cargo ) ஓடினது. சாமங்களோட சேத்து ஆக்களையும் ஏத்தி ஓடின கப்பல் தான் இதுகள். இரெண்டாயிரத்துக்குப் பிறகு தான் city of Trinco எண்ட மகேஸ்வரன்டை கப்பலை ஓடத் தொடங்கினது ஆக்களுக்கு எண்டு. 

சோதினை செய்திட்டு results கூட பாக்கப் போகாத நான் Formஐக் குடுத்தாப் பிறகு pass list இல பேர் வந்திட்டா எண்டு ஒவ்வொரு நாளாப் போய்ப் பாத்தாப் பேர் இருக்காது. 

நித்தம் போனாலும் சலிக்காத முற்றம் இந்தப் பாஸ் ( clearance ) எடுக்கிற இடம் தான் . 

இயக்கத்திட்டை pass எடுக்கப் போய் இவன், அவன் எண்டு பெடியளை கதைச்ச எங்கடை சனம், ஆர் என்ன Rank , என்ன வயசு எண்டு பாக்காம எல்லா ஆமிக்காரனுக்கும் சேர் போட்டுக் கூப்பிட்டுக் கெஞ்சிக் கொண்டு நிண்டிச்சிது. 

Campus லீவு ஒரு மாதம் எண்டு கொழும்புக்கு வீட்டை போக வெளி்க்கிட்டிட்டுப் பாத்துக்கொண்டிருக்க கைச்செலவுக்காசு, சாப்பிடுற சாப்பாடு அளவு , இருக்கிற லீவு நாள் எல்லாம் குறைஞ்சு கொண்டு வந்திச்சுது. அடுத்த கப்பலுக்கு பேர் list இல இருக்கு எண்டு ஆரோ சொல்ல வந்த சந்தோசம் A/ L results வர மருத்துவ பீடம் கிடைக்கும் எண்டு சொல்லேக்க கூட வரேல்லை. 

ஓடிப் போய்ப் பேரைப் பாத்திட்டு “எப்ப வாறது” எண்டு கேக்க “விடிய காலமை வாங்கோ” எண்டு சொன்னாங்கள். சென்றல் பள்ளிக்கூடம், சென்ஜோன்ஸ் பள்ளிக்கூடம் , கைவிட்டருந்த ரெயில்வே ஸ்டேஷன் , சிங்கள மகாவித்தியாலம் எண்டு இடத்தை அடிக்கடி மாத்திக் கொண்டிருப்பாங்கள் ஆக்களை ஏத்திக் கொண்டு போறதுக்கு. இந்த முறை 

“விடியக் காலமை சென்றல் கொலிஜுக்கு வாங்கோ “எண்டு சொல்லி அனுப்பினாங்கள். அடுத்த நாள் வீட்டை போற ஆவலில விடிய எழும்பப் பிந்தினா விட்டிட்டுப் போயிடுவாங்கள் எண்டு இரவு நித்திரை கொள்ளாம இருந்து விடியப் போய் நிண்டன் திருப்பியும் ஒரு கியூவில. ஆளை bag ஐ எல்லாம் துளாவி ஒண்டும் இல்லை எண்டு confirm பண்ணிப் போட்டு உள்ள கொண்டே இருத்தி விட்டாங்கள் . 

காலமை ஐஞ்சு மணிக்கு ஊரடங்குச் சட்டம் முடிய முதலே வெளிக்கிட்டுப் போனது சாப்பிடாம. பசியெடுக்க மத்தியானம் வரை தண்ணியைக் குடிச்சிக் குடிச்சு இருக்க அடக்கேலாம அடி வயிறு குத்த ஆரும் பாத்தாலும் பரவாயில்லை எண்டு மூலைக்க ஒதுங்க வேண்டியதாப் போச்சுது. நேரம் போக பசி தொடங்கினாலும் நாளைக்கு வீட்டை போய் நல்லாச் சாப்பிடலாம் எண்ட நப்பாசையில முதல் நாளே வாங்கின தேசிய பிஸ்கட்டான “லெமன் பவ்வை” ஆரும் கேட்டாலும் எண்ட பயத்தில ஒழிச்சு வைச்சுச் சாப்பிட்டன். 

ஒருமாதிரிப் பின்னேரம் நாலு மணிக்கு பஸ் ஒண்டில அடைச்சு ஏத்தினாங்கள் எல்லாரையும். வழக்கம் போல foot board பக்கம் போக துவக்கோட நிண்டவன் நிமிந்து பாக்க உள்ள போய் நசுங்கிக் கொண்டு நிண்டன் . பின்சீட்டில பாக், பூட்டேலாத யன்னல், ஆணி மட்டும் களராமல் எல்லாமே ஆடிக்கொண்டிருக்கிற பஸ் போற ரோட்டெல்லாம் புழுதியைக் கிளப்பிக் கொண்டு போச்சுது. வெய்யிலுக்க என்டை வேர்வையோட பக்கத்தில நிண்டவங்கள் எல்லார்டையும் வேர்வையும் சேந்து, அதோட ரோட்டிப் புழுதியும் படிஞ்சு மூக்கை அடைக்க, உடம்பு மூச்சு விட இன்னொரு மூக்கைத் தேடிச்சுது. 

பலாலி ரோட்டால போய் உரும்பிராய் தாண்டிப் போன பஸ் ரோட்டை விட்டிறங்கிக் காட்டுக்கால போறமாதிரி இருந்திச்சுது. ஏறிக் குதிச்சுக் குலுக்கிக் எல்லாம் போய் கடைசீல இறக்கினது ஒரு “ஆரம்ப பாடசாலை” எண்டு நெக்கிறன். கதிரை மேசையில இருந்து கக்கூசு வரை எல்லாம் குட்டியாய் இருந்திச்சுது. சீமெந்து factory உந்தப்பக்கம் தான் எண்டு ஆரோ சொல்லத்தான் நிக்கிற இடம் காங்கேசன்துறை எண்டு விளங்கிச்சுது. 

இறங்கிக் கொஞ்ச நேரத்தில “இண்டைக்கு கப்பல் போகாதாம் காத்துக் கூடவாம் , கடல் கொந்தழிப்பாம் ,நிண்டு பாக்கிற எண்டால் பாக்கலாம் இல்லாட்டி திரும்பிக் கொண்டே விடீனமாம் “ எண்ட செய்தி பயணத்தை இன்னும் தூரமாக்கியது. சரி நாளைக்குப் போகலாம் தானே எண்டு போட்டு இரவு எல்லாரும் நிண்டம் . அடுத்த நாள் காலமை ஆக்கள் எல்லாம் அல்லகோலப்பட செய்தி வந்திச்சுது, “முல்லைத்தீவு கடலில கப்பல் மூழ்கடிப்பாம்” எண்டு. அப்ப தான் விளங்கிச்சுது எங்களை இங்க வைச்சுக்கொண்டு வேற கப்பலை அனுப்பத்தான் இந்தக் கொந்தழிப்புக் கதை எண்டு. கடைசீல pass எடுத்தும் fail ஆன மாதிரி அனுமதி கிடைச்சும் போகேலாமல் திருப்பி யாழப்பாணம் வந்து அடுத்த கப்பலுக்குப் பதிய புது form வாங்க கியூவில போய் நிண்டன் எல்லாத்திக்கும் ஒரு வழி பிறக்காதா எண்ட ஏக்கத்தோட. 

Dr. T. கோபிசங்கர்

யாழப்பாணம்

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப பாரு கோபி சங்கர தூக்கிண்டு வாறதே வேலையாப்போச்சு இந்த மனுசனுக்கு.. 🤦🏻🤣

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

எப்ப பாரு கோபி சங்கர தூக்கிண்டு வாறதே வேலையாப்போச்சு இந்த மனுசனுக்கு.. 🤦🏻🤣

நான் நினைக்கிறேன் கோபி இவரின் பள்ளித்தோழர். கோபி பரியோவான் கல்லூரி மாணவனாவார் என்று நினைக்கிறேன்.

மேலும்.. கோபியின் இந்த நிதர்சனம்.. வழமையாக புலி எதிர்ப்பாளர்களின் வரிகளில் வராததை சொல்கிறது. அதாவது..ஊரில் ஒரு காலத்தில்.. புலிப் பாஸ் நடைமுறை மட்டும் தான் இருந்தது போலவும்.... புலி மட்டும் தான் மக்களை கேடயமாக பாவிச்சது என்பது போலவும்.. கதை அளப்பவர்கள் மத்தியில்.. ரிவிரெச இராணுவ நடவடிக்கையின் பின் சிங்களப் படை ஆக்கிரமிப்புக்குள் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் பட்ட அவதிகளில் சிலதை அப்படியே கோபி இக்கதையில் சொல்லி உள்ளார். 

அதேபோல் யாழில் வீடுகளை உடைத்தும் சூறையாடியும் சிங்கள இராணுவம் தனக்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொண்டதும்.. தென்பகுதிக்கு ஏற்றி வியாபாரம் செய்ததும் நிதர்சன உண்மைகளாகும். எத்தனையோ தலைமுறையாக சேர்த்த தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்ட காலமது. கோபி அதை பதிய மறக்கவில்லை.

கோபியின் இந்த ஆக்கம் மறைக்கப்பட்ட சிங்கள ஆக்கிரமிப்புக் கொடுமைகளின் சில பக்கங்களை வெளிக்காட்டிச் செல்கிறது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2023 at 15:55, nedukkalapoovan said:

அதேபோல் யாழில் வீடுகளை உடைத்தும் சூறையாடியும் சிங்கள இராணுவம் தனக்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொண்டதும்.. தென்பகுதிக்கு ஏற்றி வியாபாரம் செய்ததும் நிதர்சன உண்மைகளாகும். எத்தனையோ தலைமுறையாக சேர்த்த தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்ட காலமது. கோபி அதை பதிய மறக்கவில்லை.

 

ம்..ஒக்ரோபர் மாதம்.

யாழ்ப்பாணத்தில் "எழிலகம்" விற்பனைக் கூடத்தில் வைத்து விற்கப் பட்ட வீட்டு அழகு சாதன பொருட்கள் யாருடையவை என்ற கரிசனையையும் கொஞ்சம் வெளிக்காட்டுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

ம்..ஒக்ரோபர் மாதம்.

யாழ்ப்பாணத்தில் "எழிலகம்" விற்பனைக் கூடத்தில் வைத்து விற்கப் பட்ட வீட்டு அழகு சாதன பொருட்கள் யாருடையவை என்ற கரிசனையையும் கொஞ்சம் வெளிக்காட்டுங்கள்.

கல்முனை.. அம்பாறை.. ஏறாவூர்.. சம்பாந்துறை.. செங்கலடி.. மன்னார்.. மூதூர்.. சம்பூர்.. நிலாவெளி.. கிண்ணியா.. உட்பட பல தமிழர் சொத்துக்கள்... புத்தளத்தில்.. கொழும்பு.. பெட்டாவில்.. விற்பனைக்கு இட்டது குறித்தும்.. தாங்கள் சம கருசணை காட்டினால்.. என்ன குறைந்தா போயிடும். 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nedukkalapoovan said:

கல்முனை.. அம்பாறை.. ஏறாவூர்.. சம்பாந்துறை.. செங்கலடி.. மன்னார்.. மூதூர்.. சம்பூர்.. நிலாவெளி.. கிண்ணியா.. உட்பட பல தமிழர் சொத்துக்கள்... புத்தளத்தில்.. கொழும்பு.. பெட்டாவில்.. விற்பனைக்கு இட்டது குறித்தும்.. தாங்கள் சம கருசணை காட்டினால்.. என்ன குறைந்தா போயிடும். 

அப்ப ஏன் முஸ்லிம்களை "பாதுகாப்பாக, போய் பின்னர் வாருங்கள் என்று அனுப்பி வைத்தோம்!" என்று அம்புலிமாமாக் கதை எழுதுகிறீர்கள்😂?

நேரடியாக, "கிழக்கில் தமிழருக்குச் செய்தமைக்கு பழியாக வடக்கில் அவர்களை நீக்கி அவர்கள் சொத்துக்களை ஆட்டையப் போட்டோம்!" என்று சொல்ல வேண்டியது தானே?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு கோபிசங்கருடைய அனுபவங்கள்........!  😂

நன்றி நிழலி ......!  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அப்ப ஏன் முஸ்லிம்களை "பாதுகாப்பாக, போய் பின்னர் வாருங்கள் என்று அனுப்பி வைத்தோம்!" என்று அம்புலிமாமாக் கதை எழுதுகிறீர்கள்😂?

நேரடியாக, "கிழக்கில் தமிழருக்குச் செய்தமைக்கு பழியாக வடக்கில் அவர்களை நீக்கி அவர்கள் சொத்துக்களை ஆட்டையப் போட்டோம்!" என்று சொல்ல வேண்டியது தானே?

பழிவாங்கும் நோக்கமென்பது முஸ்லிம்கள் மத்தியில் இருக்கலாம்.. ஆனால் தமிழ் மக்களிடம் இருக்கவில்லை. 

பாதுகாப்புக்கான.. பாதுகாப்பான தற்காலிக வெளியேற்றம் என்பது.. யாருக்கும் எந்த பெளதீகப் பாதிப்பும் இன்றி வெளியேறக் கேட்டதோடு.. தகுந்த பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. மேலும் பொறுமதி மிக்க பணம்.. நகைகள் கொண்டு செல்லவும் கேட்கப்பட்டது. 

ஆனால்.. கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் இஸ்லாமிய அடிப்படைவாத ஜிகாத் பயங்கரவாதிகளும்.. ஊர்காவல் படையும் செய்தது திட்டமிட்ட இன அழிப்பு... சூறையாடல்.. கொள்ளை.. கொலை.. பாலியல் வன்புணர்வு.. நிலபறிப்பு.. சொத்துப் பறிப்பு. மொசாட்டின் ஆலோசனையின் பெயரில்..  சிங்கள பெளத்த பேரினவாதத்தின் தூண்டுதலில்.. அதற்குத் துணையாக செய்யப்பட்ட ஒன்று. 

உங்களுக்கு இந்த வேறுபாடு தெரியவில்லை என்றால்.. என்ன செய்வது.

இப்பவும் சனம் ஊரில மாட்டைக் காணம் ஆட்டைக் காணம் என்று பதறி அடிச்சிட்டுத்தான் இருக்குது. ஆனாலும் சகித்துக் கொண்டிருக்குது. போதைவஸ்து வரும் வழியும் பரவும் வழியும்.. தமிழ் சனத்துக்குத் தெரியும்.இந்த சகிப்புத் தன்மை தமிழரிடம் தான்.. சொறீலங்கா முஸ்லிம்களிடம் அருகிவிட்டது. 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.