Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இங்கிலாந்து உள்துறை மந்திரி பொறுப்பில் இருந்து சுவெல்லா பிரேவர்மென் நீக்கம்- ரிஷி சுனக் அதிரடி 

spacer.png

பதவி நீக்கம் செய்யப்பட்ட சுவெல்லா பிரேவர்மென் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.

லண்டன்,

இங்கிலாந்தில் கடந்த வாரம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை போலீசார் கையாண்ட விதம் குறித்து உள்துறை மந்திரி சுவெல்லா பிரேவர்மென் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியது. பலரும் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில், இங்கிலாந்து அமைச்சரவையில் இருந்து சுவெல்லா பிரேவர்மெனை பதவி நீக்கம் செய்து ரிஷி சுனக் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பதவி நீக்கம் செய்யப்பட்ட சுவெல்லா பிரேவர்மென், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.சுவெல்லா பிரேவர்மென் கடந்த 2022 அக்டோபர் மாதம் முதல் இங்கிலாந்து உள்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார்.


https://www.dailythanthi.com/News/World/rishi-sunak-sacks-uk-interior-minister-suella-braverman-1082638

 

பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சராகிறார் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன்

பிரித்தானியாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர்டேவிட் கமரூன் நியமிக்கப்பட்டுள்ளார்.

டேவிட் கமரூன் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை பிரித்தானியாவின் பிரதமராக பணியாற்றிய நிலையில் பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தனது பிரதமர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.

வழக்கத்துக்கு மாறானது

தற்போது பிரித்தானியாவின் பிரதமராகவுள்ள ரிஷி சுனக் தனது உயர்மட்ட குழுவை மாற்றியமைத்துள்ள நிலையில் 57 வயதான டேவிட் கமரூன் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சராகிறார் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் | Former Uk Pm David Cameron As Foreign Secretary

இந்த நியமனம் வழக்கத்துக்கு மாறானது என்றும் பிரித்தானிய வரலாற்றிலேயே முன்னாள் பிரதமர்ஒருவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுவது இதுவே முதல் தடவை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டேன்

"பிரித்தானியாவின் பிரதமர் ரிஷி சுனக் என்னிடம் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்கும் படி கேட்டுக்கொண்டார், அந்த கோரிக்கையினை நான் மிகவும் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டேன்,

The Prime Minister has asked me to serve as his Foreign Secretary and I have gladly accepted.

We are facing a daunting set of international challenges, including the war in Ukraine and the crisis in the Middle East. At this time of profound global change, it has rarely been more…

— David Cameron (@David_Cameron) November 13, 2023

ஏனென்றால், இப்போது பிரித்தானியா பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது ரஷ்யா உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளின் செயற்பாடுகளால் ஏற்படும் நெருக்கடிகள் என பல்வேறு பிரச்சினைகளால் பிரித்தானியாவும் பாதிக்கப்படுகிறது,

இவ்வாறான ஒரு நெருக்கடியான நிலையில் நான் நாட்டுக்காக இந்த பொறுப்பினை ஏற்றுக்கொண்டேன், நான் 6 வருடங்கள் பிரதமராக பணியாற்றி இருக்கிறேன் எனது அனுபவங்களின் வாயிலாக நிச்சயம் என் பணிகளை சிறப்பாக ஆற்றுவேன்" என தனது வெளியுறவுத்துறை அமைச்சு பதவி தொடர்பாக டேவிட் கமரூன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

https://ibctamil.com/article/former-uk-pm-david-cameron-as-foreign-secretary-1699873510

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரிட்டனின் புதிய வெளிவிவகார அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் நியமனம் - ரிசி சுனாக் அதிரடி தீர்மானம்

Published By: RAJEEBAN13 NOV, 2023 | 04:59 PM

image

பிரிட்டனின் புதிய வெளிவிவகார அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட்கமரூன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ள ரிசி சுனாக் உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மனை பதவியிலிருந்து நீக்கி ஜேம்ஸ் கிலெவெர்லியை அந்த பகுதிக்கு நியமித்துள்ளார்.

2016வரை பிரித்தானிய பிரதமராக பதவி வகித்த டேவிட் கமரூன் புதிய பதவியை ஏற்பதற்காக அவருக்கு பிரபுக்கள் சபையில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/169215

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சராகிறார் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன்

பிரித்தானியாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர்டேவிட் கமரூன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அரசியல் மாதிரி இருக்கே?
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கை அரசியல் மாதிரி இருக்கே?
 

அப்படிதான்.

ஆனால் இரண்டு ஆசிய முகங்களால் மத்திய கிழக்கு பிரச்சணையை சமாளிக்க முடியாது.

சுலேலா தனது அனுபவமே இல்லாத நிலையை காட்டியதால், ரிசிக்கும் வேற வழி இல்லை.

அநேகமாக அமேரிக்க வேண்டுதல் பின்னால் இருக்கும்.

கமரனும், இலங்கை அங்கை இங்கை எண்டு திரிஞ்சு காசு உழைக்கப் பார்த்தார்.

போரீஸ் ராஜினாமா செய்து போய்விட்டதால் இவர் வாறார். அடுத்த தேர்தலில் ஆசிய ரிசி வெள்ளை மக்கள் வாக்குகளை பெறமாட்டார். ஆகவே கட்சி இவரை இறக்குது.

அடுத்த தேர்தலுக்கு முன் கட்சி தலவராகி பிரதமர் வேட்பாளராவார்.

அதேவேளை எங்கண்ட தமிழ் கன்சர்வேட்டிக் கட்சியினர் தூசு தட்டிக் கொண்டு கிளம்புகினம்.

லேபர் தான் வெல்லுமெண்டு, தமிழ் லேபர் நிக்க, இவையள் ஒரு தெம்போட புன்சிரிப்பை உதிர்கிறார்கள். ஏனெண்டால், மகிந்தாவுக்கு எதிராக இவர் காட்டிய மிடுக்கு.

முதல் முதலாக பொங்கல் வாழ்த்து வைத்தவர், யாழ்ப்பாணம் போய் வந்தவர் எண்டு அவயளுக்கு சொல்ல விசயம் இருக்கிறதும் உண்மைதான்.

அதேவேளை மத்திய கிழக்கு பிரச்சணைக்கு இப்படி heavyweight தேவை தான்.

https://www.bbc.co.uk/news/live/uk-politics-67370421

 

Edited by Nathamuni
  • Like 2
Posted
17 hours ago, Nathamuni said:

அப்படிதான்.

ஆனால் இரண்டு ஆசிய முகங்களால் மத்திய கிழக்கு பிரச்சணையை சமாளிக்க முடியாது.

சுலேலா தனது அனுபவமே இல்லாத நிலையை காட்டியதால், ரிசிக்கும் வேற வழி இல்லை.

அநேகமாக அமேரிக்க வேண்டுதல் பின்னால் இருக்கும்.

கமரனும், இலங்கை அங்கை இங்கை எண்டு திரிஞ்சு காசு உழைக்கப் பார்த்தார்.

போரீஸ் ராஜினாமா செய்து போய்விட்டதால் இவர் வாறார். அடுத்த தேர்தலில் ஆசிய ரிசி வெள்ளை மக்கள் வாக்குகளை பெறமாட்டார். ஆகவே கட்சி இவரை இறக்குது.

அடுத்த தேர்தலுக்கு முன் கட்சி தலவராகி பிரதமர் வேட்பாளராவார்.

அதேவேளை எங்கண்ட தமிழ் கன்சர்வேட்டிக் கட்சியினர் தூசு தட்டிக் கொண்டு கிளம்புகினம்.

லேபர் தான் வெல்லுமெண்டு, தமிழ் லேபர் நிக்க, இவையள் ஒரு தெம்போட புன்சிரிப்பை உதிர்கிறார்கள். ஏனெண்டால், மகிந்தாவுக்கு எதிராக இவர் காட்டிய மிடுக்கு.

முதல் முதலாக பொங்கல் வாழ்த்து வைத்தவர், யாழ்ப்பாணம் போய் வந்தவர் எண்டு அவயளுக்கு சொல்ல விசயம் இருக்கிறதும் உண்மைதான்.

அதேவேளை மத்திய கிழக்கு பிரச்சணைக்கு இப்படி heavyweight தேவை தான்.

https://www.bbc.co.uk/news/live/uk-politics-67370421

 

இலங்கை அரசோடு  வியாபாரம் செய்பவரும் இவர் தானே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கை அரசியல் மாதிரி இருக்கே?
 

பிரதமர் இந்திய வம்சாவளியாக இருக்கும்போது அரசியல் மட்டும் எப்படி தப்பிப் பிழைக்க முடியும்? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, nunavilan said:

இலங்கை அரசோடு  வியாபாரம் செய்பவரும் இவர் தானே?

அதெல்லாம் கண்டுகொள்ளக் கூடாது. 😜

மகிந்தவுடன் அல்ல. மேற்கு விரும்பும் ரணிலுடன் என்பது முக்கியமானது. 

இவருக்கு, எங்களது வாக்குகள் தேவை கண்டியளே....லண்டனில நாங்கள் ஸ்ட்ரோங்.

போன உள்ளூர் தேர்தலில், பல சகாப்தங்களாக, லேபர் வென்று கொண்டிருந்த, நான் வாழும் காரோ மாநகர சபையை கன்செர்வேட்டிவ் பிடித்தது. 

ரிஷி தலைவராக இருந்தால், அடுத்த தேர்தலில் லேபர் வெல்லும் என்ற நிலையில், இவர் வந்தால், போட்டி இருக்கும். அப்போது எங்களது வாக்குகளுக்கு போட்டி இருக்கும். சில வாக்குறுதிகளை தர வேண்டி இருக்கும்.

Edited by Nathamuni
  • Thanks 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படியா…மாண்பு மிகு அனுர.. என்பது வரை எழுதப்பட்டது. அண்ணை அண்டைக்கு லீவு போல.
    • ஏன் இதுவரை இப்படியானவற்றிகு சாணக்கியன் போராடவில்லையா? யார் போராடினாலும் தடுத்து நிறுத்த ஒரு தமிழ் எம்பியால் முடியாது. தடுத்து நிறுத்த கூடிய இயலுமை ஆட்சியாளரிடம்தான் உண்டு. அனுர அரசு நீங்கள் சொல்வது போல் இனவாதமற்ற அரசு எனில் வந்தவுடனேயே இப்படி தமிழ் இடங்களில் பெளத்த சின்னங்களை நிறுவுவதை தடுத்திருக்க வேண்டும். செய்தார்களா? இல்லை. ஆகவே அனுரவும் அவர் அரசும் கூட முன்னையோர் போல் இனவாதிகளே என்பது தெளிவாகிறது. இதை மறைக்க, அனுர அனுதாபியான நீங்கள் சாணக்ஸ் மீது கையை காட்டுகிறீர்கள்.
    • ஓம்…அது பாருங்கோ…உங்களுக்கும் எனக்கும் கதியால் சண்டை…. அதுதான்…உங்களோடு பொருதுகிறேன்….🤣 என்னை பொறுத்தமட்டில் அனுரவை யாழில் தூக்கி பிடிப்பதில் முதன்மையானவர் நீங்கள். அந்த அரசியலினை விமர்சிக்கும் போது நீங்கள் collateral damage. அதுக்காககதானா யாழில் கிடந்து முக்குகிறீர்கள்.
    • சைக்கிள் கட்சியில் இப்படியான பொது சபை கூட்டங்கள் நடை பெறுகின்றனவா? தலைவர் தெரிவு நடை பெறுமா?  ஏன் கேட்கிறேன்  என்றால் தமிழரசு கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து  இங்கு அதிக அக்கறையுடன் பேசுபவர்கள் பேசுபவர்கள் சைக்கிள் கட்சியின் வாரிசு அரசியலை வரிந்து  கட்டிக்கொண்டு ஆதரிக்கும் அக்கட்சியின் ஆதரவாளர்கள்.    இது தனது வீட்டுக்குள் நடக்கும் கூத்துகளை விடுத்து  அடுத்தவன் வீட்டுக்குள்  என்ன நடக்கிறது என்று வேலிக்குள்ளால் விடுப்பு பார்ககும் கலாச்சாரம் தானே. 😂   இலங்கையில் மூன்று தலைமுறை குடும்ப கட்சியின்  தீவிர ஆதரவாளராக இருந்து கொண்டு தமிழ் நாட்டில் வாரிசு அரசியல் என்று பேசும் போலிகள் தான் இந்த தீவிர வரட்டு  தமிழ் தேசியம் பேசும் ஆசாமிகள்.   
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.